சேவாக்கை அறைய இருந்த சச்சின்!

ARV Loshan
14

சர்வதேச கிரிக்கெட்டுக்குள் சச்சின் நுழைந்து 20 வருடங்கள் பூர்த்தியானது ஒரு கிரிக்கெட் திருவிழாவாகவே உலகம் முழுவதும் கொண்டாடியுள்ளது.

சச்சின் என்ற நான்கெழுத்துத் தமிழ்ப்பெயரையோ, Sachin என்ற ஆறெழுத்துப் பெயரையோ இந்த சில வாரங்களிலாவது எழுதாத, சொல்லாத ரசிகர்களோ, வீரர்களோ இல்லை எனலாம்.

அப்படியொரு சச்சின் நினைவுப் பகிரல் பேட்டியில் இந்திய அதிரடித் துடுப்பாட்ட வீரர் சேவாக் அளித்துள்ள சுவாரஸ்ய வாக்கு மூலம் தான் இது.

2004ம் ஆண்டு முல்டான் டெஸ்ட் போட்டி – சேவாக் வெளுத்து விலாசிக்கொண்டிருக்கிறார்; மறுமுனையில் சச்சின்.

முதல் நூறு ஓட்டங்களுக்குள்ளே பல சிக்ஸர்களை வெளுத்து அதிரடியாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் சேவாக்கிடம் வருகிறார் சச்சின்.

2003ல் மெல்பேர்னில் வைத்து சேவாக் 195 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இந்தியா நல்ல நிலையிலிருந்து படுமோசமாகத் தோற்றதை ஞாபகப்படுத்தி – அப்போது ஆட்டமிழந்ததை ஞாபகப்படுத்தி, அப்போது ஆட்டமிழந்ததைப் போல பொறுப்பற்ற விதத்தில் ஆட்டமிழக்க வேண்டாம் என அறிவுரை சொல்கிறார் சச்சின்.

அத்துடன் சேவாக்கிடம் கொஞ்சம் அதட்டலாகவே 'நீ சிக்ஸர் இனி அடிச்சா அறைவேன்' என்றிருக்கிறார். குழம்பிப்போன சேவாக் ஏன் என்று கேட்க. 'நீ சிக்ஸர் அடிக்கப்போய் ஆட்டமிழந்தால் ஆட்டத்தில் இந்தியா வைத்துள்ள பிடிமானம் இல்லாமல் போய்விடும்' என்று பதில் வருகிறது.

தான் இறுதிவரை துடுப்பெடுத்தாட வேண்டும் என்று புரிந்துகொண்ட சேவாக் சச்சின் சொன்னது போலவே தான் 295 ஓட்டங்கள் எடுக்கும் வரை ஒரு சிக்ஸரும் அடிக்கவில்லை. 295 ஓட்டங்களைப் பெற்ற பின்னர், இந்தியா 500ஐக் கடந்திருந்த நிலையில் சச்சினிடம் தான் இனி சிக்ஸர் அடிக்கப்போவதாக சிரித்துக்கொண்டே சொன்னாராம் சேவாக்.

சச்சினின் இந்த அறிவுரைதான் தன்னை மிகப்பெரிய ஓட்டப்பெறுமதிகளைக் குவிக்க வைத்தது என்கிறார் சேவாக்.

சச்சினுக்குள்ளும் ஒரு ஹர்பஜன் இருந்திருக்கிறார்...

ஆனால் கொடுமை – சச்சின் இதுவரை ஒருமுறை தானும் முச்சதம் அடித்ததில்லை. (முதல்தரப் போட்டிகளிலும் கூட)

Post a Comment

14Comments

Please Select Embedded Mode To show the Comment System.*