
நேற்று கொழும்பு அமெரிக்க நிலையத்தில் இடம்பெற்ற ஓவியக்கண்காட்சி ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் சிங்கள நண்பரொருவரின் ஓவியக்கண்காட்சி அது. சிரேஷ்ட முகாமைத்துவத்திலுள்ளவன் என்பதனால் வந்திருந்த அதிதிகளுடன் என்னையும் விளக்கேற்றவும் புகைப்படம் பிடிக்கவும் அழைத்தார்கள்.
பிரதம அதிதியாக வந்திருந்தார் ஒரு அமைச்சர். எனக்கும் கைலாகு கொடுத்து சிரித்துப் பேசிவிட்டுப் போன பிறகுதான் அவர் யாரென்றே ஞாபகம் வந்தது.....
கடந்த வருடம் இதே நவம்பரில் கிட்டத்தட்ட இதே நாட்களில் (சரியாக நவம்பர் 18ம் திகதி) ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் என்னைத் தற்கொலை போராளியுடன் சம்பந்தமுடையவன் என்று அறிவித்த அதே ஊடகத்துறை அமைச்சரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன.
அன்று குற்றவாளி - இன்று அமைச்சருடனேயே சேர்த்து ஒரு அதிதி!
காலம் எப்படியெல்லாம் மாறுகிறது.
......................
மறக்க முடியாத நவம்பர் மாதத்தின் ஒருவார வடுக்கள் கொஞ்சம் மறைந்துபோய், நான் முன்பு போல் சகஜமானாலும், சந்தோஷமாகவே இருந்தாலும் இப்போதும் அந்த நாட்களை நினைக்கும்போது உள்ளேயுள்ள அப்பாவிகள் பலரின் முகங்கள், அவர்களில் சிலரின் அவலக்கதைகள் நிழலாடுகின்றன.
எனக்கான குரல்கள் ஒலித்தன! அவர்களுக்கு யார் உள்ளார்கள்?
பாவம் அந்தக் காலத்தின் கைதிகள் என்று பரிதாபப்படுவதைத்தவிர வேறு வழியில்லை!
22 comments:
அவர்களுக்கு யார் உள்ளார்கள்?
பாவம் அந்தக் காலத்தின் கைதிகள்
//பாவம் அந்தக் காலத்தின் கைதிகள் என்று பரிதாபப்படுவதைத்தவிர வேறு வழியில்லை!//
:(((
////காலம் எப்படியெல்லாம் மாறுகிறது. ///
???????
காணாமல் போய்விட்ட எங்களின் உறவுகள் உள்ளுக்குள் அங்கு இருக்கிறர்களா இல்லையா என்று தெரியாத நாமும் காலத்தினால் சபிக்கப்பட்டவர்களே..... ..........உங்களுக்கு மட்டுமல்ல நவம்பர் மாதம் தமிழர்கள் யாவர்க்கும் மறக்க முடியாத மாதமே
//எனக்கான குரல்கள் ஒலித்தன! அவர்களுக்கு யார் உள்ளார்கள்?
பாவம் அந்தக் காலத்தின் கைதிகள் என்று பரிதாபப்படுவதைத்தவிர வேறு வழியில்லை!//
ம்ம்ம் உண்மைதான்...
//பாவம் அந்தக் காலத்தின் கைதிகள் என்று பரிதாபப்படுவதைத்தவிர வேறு வழியில்லை!
உண்மையாகவே வேறு வழி இல்லையா?
ம்...! சென்றவருடம் இந்த காலத்தில் தான் நான் உங்கட தளத்தில முதலாவது பின்னூட்டம் இட்டனான். "மீண்டும் வந்து விட்டேன்" என்று ஒரு பதிவு இட்டதாக ஒரு ஞாபகம்.
அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா..
அன்று உங்களை கைது செஞ்ஞண்டு நினச்சன்,இனி றேடியோ கேக்கிறல்ல எண்டு
எனக்கெண்டா அந்த அமைச்சர் இதை யோசிச்சிருப்பார் எண்டு தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்கு இது எல்லாம் சகஜம்.
:D
:(
//எனக்கான குரல்கள் ஒலித்தன! அவர்களுக்கு யார் உள்ளார்கள்?
பாவம் அந்தக் காலத்தின் கைதிகள் என்று பரிதாபப்படுவதைத்தவிர வேறு வழியில்லை!//
எப்போதும் போல இப்போதும் நம்புவோம் சீக்கிரமே அனைத்துக்கும் விடிவு வருமென
அன்று குற்றவாளி - இன்று அமைச்சருடனேயே சேர்த்து
ஒரு அதிதி!
ஞாயிறு ஜனாதிபதி சொன்னது ஞாபகம் வருகிறது. நேற்றைய தேசாபிமானி...
நாடாளாவிய ரீதியில் சிறையில்வாடும் அப்பாவிகளை விடுவிக்க குரல்கள் வெளிவரவேண்டும். ஊடகங்கள் முயற்சி செய்யவேண்டுமல்லவா?
அரசியலில் இதெல்லாம் சகஜம்.... ஆனால் நம்மைப்போன்றவர்களே பாவம்.........
//எனக்கும் கைலாகு கொடுத்து சிரித்துப் பேசிவிட்டுப் போன பிறகுதான் அவர் யாரென்றே ஞாபகம் வந்தது.....
கடந்த வருடம் இதே நவம்பரில் கிட்டத்தட்ட இதே நாட்களில் (சரியாக நவம்பர் 18ம் திகதி) ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் என்னைத் தற்கொலை போராளியுடன் சம்பந்தமுடையவன் என்று அறிவித்த அதே ஊடகத்துறை அமைச்சரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன//
என்ன லோஷன் அண்ணா இலங்கையின் அரசியல் தெரியாமலா நீங்கள் இருக்கிறிர்கள். இன்று எதிரி நாளை நண்பன். மறுநாள் எதிரி இதெல்லாம் சகஜமப்பா....
//அவர்களுக்கு யார் உள்ளார்கள்?
பாவம் அந்தக் காலத்தின் கைதிகள்//
அடிக்கடி எனக்கு ஞாபகம் வரும் பாடல்...
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே. இருட்டினில் நீதி மறையட்டுமே... தன்னாலே வெளிவரும் தயங்காதே.. ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... பார்ப்போமே...
மறக்க முடியாத நினைவுகள் அவை. நாங்கள் ரொம்பவே உங்களை நினைத்து கவலைபட்ட நாட்கள் அவை, இனி பதிவுலகம் பக்கமே போக கூடாதென்று நினைத்திருந்தேன்...
நீங்கள் மீண்டு வந்து நலமாய் உள்ளேன் என பதிவிட்ட பின்புதான் எங்களுக்கு நிம்மதி...
பதிவுலக நண்பர்களே...
அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
அதற்காக இப்படி நல்லது செய்பவர்களையும் கண்டிப்பது எந்த வகையில் நியாயம்?
:(
ithu thaan inraya ulakam anna.........
ithu thaan anna inraya ulakam...............
//கடந்த வருடம் இதே நவம்பரில் கிட்டத்தட்ட இதே நாட்களில் (சரியாக நவம்பர் 18ம் திகதி) ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் என்னைத் தற்கொலை போராளியுடன் சம்பந்தமுடையவன் என்று அறிவித்த அதே ஊடகத்துறை அமைச்சரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன. //
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்? :(
எழுத்துக்களில் வலி புரிகிறது...
அவர்கள் உணரும் வலிகளை யார் புரிந்து கொள்வார்களோ..?
எல்லோரையும் போல் காலத்தின் மீதும் விதியின் மீதும் பலி போட்டு விட்டு கை காலாகதவராகாத இளிச்சவாயர்களாய் இருந்து விடுவோம்.... இல்லாவிட்டால் :-o
Post a Comment