நேற்று இந்தப் பதிவை இடுவதற்கு நான் தயாராக இருந்தபோதும், நேற்றைய நாளின் காலைப் பொழுதில் நிகழ்ந்த துயர சம்பவம் காரணமாக இதைப் போட வேண்டாம் என்று விட்டு விட்டேன்.. இன்னமும் மன அமைதி இல்லாத போதும், ஒரு சின்ன நம்பிக்கை இப்போது எழுந்திருப்பதால், இந்திய - நியூ சீலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி ஆரம்பிக்க ஒரு மணி நேரம் இருக்கும் நேரத்தில் இந்த கிரிக்கெட் பதிவு...
6 மணித்தியால நேர வித்தியாசத்தில் இருவேறு இடங்களில் இரு வேறு வடிவக் கிரிக்கெட்டுக்கள் பலவேறு சுவாரஸ்யங்களை நேற்றுமுன்தினம் வழங்கியிருந்தன.
பாகிஸ்தானின் சூடுகிளப்பும் கராச்சியில் கொட்டாவியும் குறட்டையும் தந்த ஒரு மகா போர் டெஸ்ட் போட்டியின் இறுதிநாள்.!
மறுபக்கம் எலும்பு நடுங்கும் குளிர் சூழ்ந்த நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சேர்ச்சில் இந்திய அணியின் இருமாத கால கிரிக்கெட் சுற்றுலாவின் முதலாவது போட்டி நாள்! ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பும் விறுவிறுப்பும் தந்த Twenty 20 போட்டி!
எனினும் இரண்டு போட்டிகளுக்கும் இருக்கும் ஒரு மிகப் பெரிய ஒற்றுமை சாதனைகள்! குறிப்பாக ஓட்ட சாதனைகள்.
கராச்சியில் இலங்கை அணியின் முதலிருநாள் சாதனைகளுக்கு மேலாக பாகிஸ்தானிய அணி பட்டைகிளப்ப புதிய King Khan என்று ரசிகர்களால் ஒரு சில நாட்களிலேயே அழைக்கப்படுமளவுக்கு எழுச்சி பெற்றுள்ள பாகிஸ்தானின் புதிய தலைவர் யூனிஸ்கான் தனக்கான புதிய மைல் கற்களைப் பதிந்துள்ளார்.
இருநாட்களுக்கு முன்னர் கராச்சி மைதானத்தில் இலங்கை பெற்ற அதிகூடிய மொத்த ஓட்ட சாதனைகளையை பாகிஸ்தான் தன் வசப்படுத்தியது.
யூனிஸ்கான் பெற்ற முச்சதம்.
அவரது முதலாவது
பாகிஸ்தானில் வீரரொருவர் பெற்ற மூன்றாவது -
சர்வதேசத்தில் 23வது
டெஸ்ட் அணித்தலைவராக வீரர் ஒருவர் பெற்ற 6வது
யூனிஸ்கான் தனது 5000 டெஸ்ட் ஓட்டங்களையும் பூர்த்திசெய்தார். (6வது பாகிஸ்தானிய வீரர்)
மறுபக்கம்
பாகிஸ்தானில் 6 விக்கட் இழப்புக்கு 765
பாகிஸ்தானின் அதிகூடிய டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கை.
பாகிஸ்தான் மண்ணில் பெறப்பட்ட மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கை.
இலங்கை அணிக்கெதிராகப் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எணணிக்கை - இதுவரை இலங்கை அணிக்கெதிராக எந்தவொரு அணியுமே 700 ஓட்டங்களை பெற்றதில்லை.
18 விக்கெட்டுக்கள் மாத்திரமே வீழ்ந்த இந்தப்போட்டியின் மைதானத்தில் பராமரிப்பாளர் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.(இரு அணி வீரர்களாலுமே)
இன்னும் சிறிது நேரம் அக்மலைத் துடுப்பெடுத்தாட யூனி;ஸ்கான் அனுமதித்திருந்தால் அந்தப்போட்டியின் 4வது 200க்கு மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கை பெறப்பட்டிருக்கும்.
நான்கு துடுப்பாட்ட வீரர்கள் 150க்கு மேல் ஓட்டங்கள் பெற்ற முதல் தடவை இது!
இரு அணிகளுக்கும் துடுப்பாட்ட பயிற்சி வழங்கி துடுப்பாட்ட சராசரிகள் சாதனைகளை உயர்த்திவிட்டு முடிவை மட்டும் அனாதையாக்கிவிட்டு கராச்சி டெஸ்ட் போட்டி நிறைவு பெற்றுவிட இரு அணியினரும் ரசிகர்களும் அடுத்த லாகூர் டெஸ்ட் போட்டிக்காகக் காத்திருக்கின்றார்கள்!
இலங்கையின் மகேல ஜெயவர்த்தனாவின் தலைமையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் அவர் வெற்றியுடன் விடைபெற வேண்டுமென இலங்கை ரசிகர்கள்
சரிவிலிருந்தும் மிகப் பெரிய வீழ்ச்சியொன்றிலிருந்தும் மெள்ள மெள்ள எழுந்துவரும் பாகிஸ்தானிய அணி உத்வேகம் பெற வெற்றியொன்றை எதிர்பார்த்து பாகிஸ்தானிய ரசிகர்கள்.
அனால் ஆடுகளம் என்ன விதமான பலனை எடுத்து வைத்திருக்கிறதோ?
மற்றுமொரு கராச்சி ஆடுகளம் தான் லாகூரிலும் என்றால் பிரயன் லாரா ஆண்டவரிடம் தனது உலக சாதனையைக் காப்பாற்றுமாறு மன்றாட ஆரம்பிப்பது நிச்சயம்!
மறுபக்கம் கிரைஸ்ட் சேர்ச்சில் இரு அணி வீரர்களும் சேர்ந்து 24 சிக்ஸர்களை விளாசித் தள்ளியிருந்தனர்.
இது Twenty 20 போட்டியொன்றுக்கான சாதனை! இந்திய வீரர்களில் சேவாக் 6ஆண்டுகளின் பின் நியூசிலாந்து மண்ணில் தான் எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளையுமே ஆறு ஓட்டங்களாக விரட்டியடித்தார். ஆனால் அவர் நிலைத்தது பத்து பந்துக்கள் மாத்திரமே!
இந்திய அணியின் அதிரடிவீரர்கள் மொத்தம் 13 சிக்கஸர்கள் அடித்தபோதும் (உலக சாதனையை விட ஒன்று குறைவு) நின்று நிலைக்காமல் ஆட்டமிழந்ததால் நியூசிலாந்திடம் தோற்றுப் போயினர்.
ஆறு – பின் ஆட்டமிழத்தல் இது தான் இந்திய வீரர்கள் எல்லோரதும் வாக நேற்று முன்தினம் இருந்தது.
தலைவர் தோனி சொன்னார் "அதிகமாக ஆசைப்பட்டோம்;அவசரப்பட்டடோம்;ஆட்டத்தில் கோட்டை விட்டோம்"

புதிய கடும் நீல சீருடை ராசியில்லையோ?
ஆறு ஓட்டங்கள் மழையாய்க் குவிந்த போட்டியில் ஏழேயேழு 2 ஓட்டங்கள்.
நியூசிலாந்தின் சிறிய மைதானங்களின் கைங்கரியங்கள் இவை!
உலக T-20 சம்பியன்களான இந்தியா நியூசிலாந்திடம் மட்டும் இரு தடவைகள் இலகுவாக சுருண்டு விட்டார்கள். உலகக் கிண்ணத்திலும் இந்தியா கிண்ணத்தை வெல்லமுதல்,இந்தியாவை வென்ற ஓரே அணி நியூசிலாந்து மட்டும்தான்!
இன்று பார்க்கலாம் - இந்தியா தனது வலிமையைக் காட்டுகிறதா என்று!
ஆனால் முக்கியமான விடயம்
இந்தியாவுக்கு சவாலான விடயங்கள்
நியூசிலாந்தின் அளம் அதிரடி துடுப்பாட்ட வீரர்கள்
பல நுணுக்கங்கள் வைத்துள்ள ஸ்விங் பந்துவீச்சாளர்கள்
யுவராஜ் தோனியைக் குறிவைத்தள்ள வெட்டோரி
இவற்றில்
இப்போது – 20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள்
பெற்றவர்கள் நியூசிலாந்தின் பிரெண்டன் மக்கலம்
அதிக விக்கட்டுக்களை வீழ்த்தியவர்கள் இருவரில் ஒருவர்
நியூசிலாந்து அணித்தலைவர் வெட்டோரி
இந்த நெருக்கடிகளோடு
எலும்பு நடுக்கும் குளிரும்
பந்தை நினைத்தபடி ஊகிக்க முடியாத கபடத்தனமான காற்றும் இந்தியாவுக்கு இத்தொடர் முழுவிலும் சவாலே!
6 comments:
//மறுபக்கம் எலும்பு நடுங்கும் குளிர் சூழ்ந்த நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சேர்ச்சில் //
இப்ப நியூசிலாந்தில சம்மர்.
ஜனா
ஆனால் தோனியும், அங்கிருந்து வரும் தகவல்களும் chilling cold and windy என்று சொல்கின்றார்களே.. ;)
நாம் இருக்கும் இடங்களை விட அங்கே குளிர் தானே..
17 degrees
//இரு அணிகளுக்கும் துடுப்பாட்ட பயிற்சி வழங்கி துடுப்பாட்ட சராசரிகள் சாதனைகளை உயர்த்திவிட்டு முடிவை மட்டும் அனாதையாக்கி//
யதார்த்தமான வசன நடை. வாழ்த்துக்கள் அண்ணா
நிறைய எழுத்துப்பிழைகள் சரி பார்க்கவும்
வெறும் ஊடகவியலாளர் என்பதற்காக கைது செய்யபடுவது விசாரனைக்குட்படுத்துவது எல்லாம் பிழை என்று சொல்ல முடியாது. இலங்கையின் இறைமையும் தேசிய பாதுகாப்பும் அதி முக்கிய விஷயங்கள். குற்றமற்றவர் எனின் விடுதலை செய்யபடுவார்.. உங்களை போல.. இதை எல்லாம் அரசியல் ஆக்க வேண்டாம்.. சிங்கள ஊடக வியலாளர் சந்திக்காததையா தமிழ் ஊடகவியலாளர் சந்திக்கின்றனர்.. இந்தியாவில் என்றால் இவ்வாறு பயங்கர வாதிகளுஉகு ஆதரவானவர் எனின் சட்டம் தன் கவனிப்பை செய்யும்.. இலங்கை அந்த வகையில் அதி உச்ச சுதந்திரத்தை வழங்குகின்றது..
புதிய கடும் நீல சீருடை ராசியில்லையோ?
hihihi
Post a Comment