ரொம்ப நாளா படங்களோட,கலகலப்பான பதிவொன்றும் போடவில்லை என்று யோசித்தேன். இன்று சீரியஸா எழுதுவதற்கும் விஷயம் எதுவும் இல்லை.. ரொம்ப சீரியசான ஒரு பதிவு (மிக மிக நீளமாக வந்து உங்கள் அநேகம் பேரின் பொறுமையையும் சோதித்திருக்கும்) தந்த பின்னர் இன்று ஞாயிறு கொஞ்சம் இலேசான ஒரு பதிவைத் தரலாம் என்று எண்ணினேன்.. கமல் ஸ்டைலில்.. (ஒரு சீரியஸ் படம்,ரசனையில் உயர்ந்தோருக்கு.. அடுத்தது சிரிக்கக் கூடிய ஒரு ஜாலியான படம்,எல்லோருக்காகவும்..) இதோ உலக நாயகன் (இவரும் தானுங்கோ) ஒபாமா இப்போது சூப்பர் ஹீரோவாக...
Obama the super hero !
ஒபாமாவின் அதீத புகழை முதலிட்டு இலாபமீட்ட அமெரிக்காவின் பொம்மை தயாரிப்பு நிறுவனமொன்றின் ஐடியா தான் இந்த ஒபாமா சூப்பர் ஹீரோ பொம்மை.. குழந்தைகள் மத்தியில் மட்டுமன்றி இளைஞர்கள் மத்தியிலும் இந்த பொம்மைகளுக்கு பயங்கர வரவேற்பு. ஒபாமாவும் தனது கணக்கில் சில்லறை சேர்த்தாரோ தெரியல.. ;)