
ஞாயிறு இரவு ரஹ்மானுக்கு மற்றுமொரு விருது! British Academy of Film and Television Arts என்று அழைக்கப்படும் BAFTA விருதும் ரஹ்மான் வசம்! கோல்டன் குளோப், BAFTA என்று அடுத்தடுத்து இரு சர்வதேச விருதுகளைத் தொடாந்து ஒஸ்கர் (OSCAR) மூலமாக ஹட்ரிக் சாதனையைக் குறிவைத்துள்ளார் ரஹ்மான்.
தமிழராகிய அனைவருக்குமே மிகப் பெரிய பெருமையைத் தருகின்ற விடயம் இது! (இலங்கையில் இருந்து எழுதும்போது தமிழ்பேசும் மக்களுக்கு என்று சொல்லவேண்டியுள்ளது!!!)
இந்த இளவயது இசை அறிவுஜீவிக்கு (GENIUS) வழங்கப்படவேண்டிய கௌரவம் பரிசு என்பது அனைவருமே ற்றுக்கொள்ளும் ஒரு விஷயமே!
எனினும் இந்த சர்வதேச விருதுகள் ரஹ்மானுக்கு கிடைக்கக் காரணம் இந்தியாவைப் பற்றி எழுந்த ஹொலிவூட் திரைப்படம் 'SLUMDOG MILLIONAIRE' தான்!
அந்தத் திரைப்படம் பற்றி இந்தியாவினுள்ளேயே பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும் கூட A.R.ரஹ்மானின் இசை உலகளாவிய ரீதியில் இந்தியாவினதும் தமிழரினதும் தனித்துவத்தைக் காட்டுகிறது என்பதில் எம் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது!
அதுபோல் ரஹ்மானுக்கு இந்த விருதுகள் கிடைத்ததில் இணைந்துகொண்ட ஒருவர் இலங்கையில் தனது வேர்களைக் கொண்ட மாதங்கி அருள்பிரகாசம் (M.I.A)என்பதும் எங்களுக்குப் பெருமை தருகிற விஷயமே..
மாதங்கி பற்றி கிம்ஷா அழகாக தனது பதிவில் எழுதியிருக்கிறார்..
தனது பாடல்கள் மூலமாக முடிந்தளவு எம் ஈழ மக்கள் சோகத்தை உலகம் முழுக்கக் கொண்டு போய் சேர்ப்பவர் இவர்.. தனது சொந்த தமிழ் அடையாளங்கள் தெரியுமளவுக்கு,பிறந்த ஊரின் வேர்கள் அறுந்துள்ளமையாலேயே தனது பெயரினை Missing In Action என்று பொருள் படும் விதத்தில் MIAஎன்று வைத்துள்ளார்..
மாயா வெறுமனே பாடகியாக மட்டுமல்லாமல்,ஒரு ஓவியராகவும்,படப்பிடிப்பாளராகவும்,Fashion designerஆகவும் கூட தேர்ச்சியும் புகழும் பெற்றவர்..
இவரது தந்தையார் ஈழப் போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர் ஈரோஸ் ( Eelam Revolutionary Organisation of Students (EROS))என்ற இயக்கத்தின் நிறுவுனர்களில் ஒருவர்.. அருள்ப்ரகாசம்/அருளர் எல்லாராலும் அறியப்பட்டவர்.. தந்தையின் இரத்தம் இல்லையா? வேரை வெளிநாட்டில் விட்டாலும், விளைநிலத்தை மறக்காமல் தனது பாடல்கள மூலமாக உணர்வுகளை உலகெங்கும் ஊற்றிக் கொண்டிருக்கிறார்.
இவரது முதல் இசைத் தொகுப்பே தந்தையாரின் பெயரில் தான் (அருளர்)2005ஆம் ஆண்டு வெளியானது..அடுத்த இசைத் தொகுப்புக்கு தாயாரின் பெயரான 'கலா' வை வைத்தார்.
வாழ்க்கையில் யாழ் மண்ணில் பிறந்த இந்த மங்கை அண்மைக் காலம் வரை நிலையான இடம் இன்றி ஓடிக் கொண்டே இருந்திருக்கிறார்..
இவ்வளவுக்கும் நாம் பெருமை அடையக் கூடிய இன்னொரு விடயம், ஆங்கிலத்தில் புலமை பெற்று ஆங்கில சூழலில் வாழும் மாயா தமிழில் சரளமாகப் பேச,பாட,வாசிக்க,எழுதக் கூடியவராம்.. (ரஹ்மான்,உங்கள் இசையில் இவரது குரலை எப்போது தமிழ் பாடல் ஒன்றில் கேட்கலாம்??)
மாயா மாதங்கி அருள்பிரகாசம் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள்..
தனது ஆளுமையைப் பயன்படுத்தி தன் இனம்,சமூகத்துக்கு நல்லது செய்யும் யாரும் போற்றுதலுக்கும்,மரியாதைக்கும் உரியவர்களே..
மாயாவும் அந்த வகையில் எங்கள் எல்லோரும் பெருமதிப்பைப் பெறுகிறார்..

மாயாவின் இசை உலகெங்கிலும் அங்கீகரிக்கப் பட்டது எமது குரல்கள் எதிர்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது.அண்மையில் கிராம்மி இசை விழாவிலும் மாயா அருள்பிரகாசம் பாடி இருந்தார்.
மூலமாக மாயாவை மீண்டும் உலகம் திரும்பிப் பார்க்கவைத்த ரஹ்மானுக்கு எம் நன்றிகள்..
ஒஸ்கார் விருதையும் ரஹ்மான் வெல்ல வேண்டும்.. இதன் மூலம் எங்களுக்கும்,மாதங்கிக்கும் மேலும் புகழும்,பெருமையும்,எங்கள் குரல்களுக்கு தனியான அங்கீகாரமும் கிட்டும் என்று எதிர்பார்ப்போம்..
விருதுகள் பற்றியும், ரஹ்மான் மீதான என் ரசனை பற்றியும் நாளை ஒரு பதிவிட எண்ணியுள்ளேன்.நேரமும்,மனதும் கை கொடுத்தால்..
26 comments:
i was wondering 4 a long time y u didnt pt a post abt M.I.A so far...
Check out these links out 4 more info abt M.I.A n ARR working together...
http://nymag.com/daily/entertainment/2008/11/ar_rahman_on_slumdogs_sound.html
and
http://en.wikipedia.org/wiki/Slumdog_Millionaire_(soundtrack)
Sanjay...
vaazththukaL rahmaanukku
தனது தாயகத்தை பற்றி வியாபார நோக்கங்களும் நெருக்குதல்களும் இல்லாத தமிழ் பெண்கள் ஒரு பெரிய டி ஷர்ட் மட்டும் போடுவாங்க போல.. அவ இலங்கையில் இருந்திருந்தால் இது எல்லாம் சாத்தியமா.. நீங்களே நைடீ போட்டு வீதியில் போகும் பெண்களை கிண்டல் அடித்து பதிவிட்டவர் இல்லையா.. அவ விருப்பம் இல்லாமலா வெளிநாட்டுல இருக்கா
இதே லோஷன் தான் புதிய ஆத்திசூடி பாடலுக்கு எதிராக விடியல் நிகழ்த்தியவர்.. எப்படி mia ரசிக்க முடிகிறது..
//(இலங்கையில் இருந்து எழுதும்போது தமிழ்பேசும் மக்களுக்கு என்று சொல்லவேண்டியுள்ளது!!!)//
:)))
LOSHAN said...
அருமையான பதிவு.. மாயாவின் பாடல் வரிகள் போலவே உங்கள் எழுத்து நடையிலும் உருக்கம்.. மாயாவின் தந்தையார் எங்கள் தந்தையாரின் ஆரம்பகால நண்பர்.. :)
February 8, 2009 2:58 PM
supperb bro
எந்த வழியிலாவது தமிழருக்கு என்ன நல்லது நடந்தாலும் சில நாதாரிகளுக்கு பிடிக்காது அது சரி இல்லை இது சரி இல்லை என நொட்டை சொல்லிக்கொணு தானும் செய்யாது செய்யிறவனையும் செய்ய விடாதுகள்.
நிச்சயம் ரகுமான் ஓஸ்கார் மட்டுமல்ல மேலும் பல சிகரங்கள் தொடுவார்
மாயா கிராமி விருதை தவற விட்டாலும்..அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கின்றது..
இருவருக்கும் என் வாழ்த்துகள்..
http://www.youtube.com/watch?v=BkTOsOUbDko&feature=related
இது மாயாவின் நடன அசைவுகளுடனான ஒரு பாடல். மிக அழகாக இருக்கின்றது.
குறிப்பு: திரையின் பின்கள காட்சிகளை கவனிக்கவும். காட்சி தொகுப்பாளர் ஏதோ சொல்ல வருகிறார் போல் தெரிகிறது.
விருதுகள் பற்றியும், ரஹ்மான் மீதான என் ரசனை பற்றியும் நாளை ஒரு பதிவிட எண்ணியுள்ளேன்.நேரமும்,மனதும் கை கொடுத்தால்..
loshan anna plz do it soon.
ரஹ்மானின் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மெல்லிசை மன்னர் பாடிய “விடைகொடு எங்கள் தாயே” எம் இலங்கை தமிழ் சோதரருக்கு சமர்ப்பிக்க தகுதி பெற்றது.
ரஹ்மான் Oscar வெல்வது உறுதியே.
என் பதிவை பார்க்க, இந்த உரலை இடியுங்கள்: http://www.sathyamurthy.com/2009/02/09/chinna-chinna-aasai-to-bafta/
வீதியில் போகும் எங்கள் தழிழ் பெண்களை கிண்டல் அடித்து பதிவிட்ட நீங்கள் போயும்,போயும் இந்த கேடுகெட்ட,கேவலமான,மாயாவுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களா?!!
Congrats to all who received the Awards, with special wishes to A R Rahman and M.I.A.
திறமைக்கு கிடைத்த விருதுகள் இவை. இருவருக்கும் வாழ்த்துக்கள் :)
வாழ்த்துக்கள் ரஹ்மான், M.I.A, ரேசுல் பூக்குட்டி.
Loshan, why are you accepting idiotic and vulgar comments from some shameless and nameless fools?
MIA s a wonderful singer and selfless soul. These anonymous fools are degrading her.
Your article is excellent.Keep up your good work.
Niranjani
M.I.A Best wishes from me,I am sure
you will get the oscar for o'shaya
with A.R . your interview with
tavid smileys was excellent, keep it up,
I was waiting for a good time to write about her. :)
tx for ur links.
நன்றி சஞ்சய்..
கார்க்கி :)
Anonymous said...
தனது தாயகத்தை பற்றி வியாபார நோக்கங்களும் நெருக்குதல்களும் இல்லாத தமிழ் பெண்கள் ஒரு பெரிய டி ஷர்ட் மட்டும் போடுவாங்க போல.//
அங்கங்கள் மறைப்பதே முக்கியமே அன்றி ஆடைகள் எப்படி என்பது முக்கியமல்ல.. உங்கள் பார்வை எப்படி என்று நான் அறியேன்..
//இலங்கையில் இருந்திருந்தால் இது எல்லாம் சாத்தியமா..//
இலங்கையில் சில பெண்கள் அணியும் ஆடைகள் இதை விட மோசம் என்று உங்களுக்குத் தெரியாதா?
// நீங்களே நைடீ போட்டு வீதியில் போகும் பெண்களை கிண்டல் அடித்து பதிவிட்டவர் இல்லையா.. //
கவனித்துப் பாருங்கள் வீதியில் - நைட்டி .. வித்தியாசம் இருக்கு தானே?
//இதே லோஷன் தான் புதிய ஆத்திசூடி பாடலுக்கு எதிராக விடியல் நிகழ்த்தியவர்.. எப்படி mia ரசிக்க முடிகிறது..//
M.I.Aவின் உடையவை ஆங்கிலப் பாடல்கள்.. தமிழை ஆங்கிலத்தோடு அவர் கலக்கிக் கொலை செய்யவில்லை.புதிய ஆத்திசூடி, ஔவையார் பாடல்களை ஆங்கிலம் கலந்து சின்னாபின்னப் படுத்தியது.. வித்தியாசம் புரியுதா?
Paheerathan
:)
Anonymous :)
Anonymous said...
எந்த வழியிலாவது தமிழருக்கு என்ன நல்லது நடந்தாலும் சில நாதாரிகளுக்கு பிடிக்காது அது சரி இல்லை இது சரி இல்லை என நொட்டை சொல்லிக்கொணு தானும் செய்யாது செய்யிறவனையும் செய்ய விடாதுகள்.//
அது தான் எங்கள் ஈனத் தமிழ் சாதியின் பாவம்..எமக்குள்ளேயே ஒற்றுமை,புரிந்துணர்வு kidaiyaathu.
’டொன்’ லீ said...
நிச்சயம் ரகுமான் ஓஸ்கார் மட்டுமல்ல மேலும் பல சிகரங்கள் தொடுவார்
மாயா கிராமி விருதை தவற விட்டாலும்..அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கின்றது..
இருவருக்கும் என் வாழ்த்துகள்..//
:)
ஈழச்சோழன் said...
http://www.youtube.com/watch?v=BkTOsOUbDko&feature=related
இது மாயாவின் நடன அசைவுகளுடனான ஒரு பாடல். மிக அழகாக இருக்கின்றது.குறிப்பு: திரையின் பின்கள காட்சிகளை கவனிக்கவும். காட்சி தொகுப்பாளர் ஏதோ சொல்ல வருகிறார் போல் தெரிகிறது.//
அதனால் தான் M.I.Aவின் பல பாடல்கள் (எல்லாமே என்று நண்பர்கள் சொன்னார்கள்) இலங்கையில் தடை செய்யப் பட்டுள்ளனவாம். சிலருக்கு இது புரிவதில்லை..
prasath2605 - ;)
Sam said...
ரஹ்மானின் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மெல்லிசை மன்னர் பாடிய “விடைகொடு எங்கள் தாயே” எம் இலங்கை தமிழ் சோதரருக்கு சமர்ப்பிக்க தகுதி பெற்றது.//
அஆமாம்.. அது பற்றி முன்பே ஒரு பதிவில் எழுதி இருந்தேன்..
ரஹ்மான் Oscar வெல்வது உறுதியே.//
இந்த இரண்டு விருதுகளையும் வென்றால் ஒஸ்கார் நிச்சயம் கிடைக்கும் என்று விஷயம் அறிந்தோர் சொல்கிறார்கள்.. பார்ப்போம்..
//இந்த உரலை இடியுங்கள்//
புதுசா இருக்கே. ;)
உங்கள் பதிவு நான் நேற்றே பார்த்தேன்.. உங்கள் பார்வை வித்தியாசம்..:)
இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் தமிழ் பேசும் மக்கள் தான்.. நீங்கள் சில இந்திய ஊடகங்களை மட்டும் கவனிக்கிறீர்கள் என்று தெரிகிறது. எல்லாவற்றையும் கவனியுங்கள்..இந்தியாவில் மட்டும் என்ன சமதுவமாகவா இருக்கிறார்கள்?
Impressed by your informative blog about M I A and ARR working together.
//இலங்கையில் இருந்து எழுதும்போது தமிழ்பேசும் மக்களுக்கு என்று சொல்லவேண்டியுள்ளது!!!//
உண்மை தான் அண்ணா..மிகவும் கவலையான விஷயம்..என்ன செய்ய..
ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்!!
ஈழத்தமிழரின் பிரச்சினையை உலகுக்கு எடுத்துச்சொல்ல இன்னொரு குரல் இருக்கே என்டு பெருமப்படுவீங்களா??அத விட்டுப் போட்டு..சும்மா வாய்க்கு வந்த மாறி...ச்சீ..சிங்களவன் தான் அந்த பெட்டைய கர்ப்பிணி என்டும் பாக்காம தாறு மாறா திட்டுறான் என்டா..நாங்களுமா?ஒரு தமிழச்சி, அதுவும் ஒரு கொக்குவில் பெட்ட Grammy Awards மட்டும் போய் இருக்கென்டா பெருமையா இல்லையா?
இந்த பதிவில் நல்ல புதிய தகவல்கள் கிடைத்துள்ளது நன்றி
இந்தியாவைப் பற்றி ஒருவன் கேவலமாக படம் எடுத்து, அதற்கு ஒரு இந்தியன் துனைபோவது உங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசமா இருக்கு.
என்ன செய்வது, இந்தியனுக்கு குறிப்பாக இந்திய தமிழனுக்கு யார் நல்லவன் யார் கெட்டவன் எனறே தெரியாமல் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவயப்படுபவனாக மட்டுமே இன்னும் இருக்கிறான்.
அன்புள்ள வலை நண்பர்களே,
இலங்கையிலே நடக்கும் இனப்படுகொலைக்கு நாம் ஏதாவது செய்ய முடியாத என்று நினைகிரீர்கள, அதற்காக முத்துகுமாரை போல் உயிர் தியாகம் எல்லாம் செய்ய வேண்டாம். http://www.megaupload.com/?d=LCVNYAT9 இந்த slideshow- வை download செய்து உங்கள் நண்பர்களுக்கு குறிப்பாக உங்கள் வடஇந்தியா அல்லது வெளிநாட்டில் உள்ள பிற நாட்டு நண்பர்களுக்கு அதிலும் குறிப்பாக lobbying power -இல் உள்ள நண்பர்களுக்கு இமெயில் அனுபவும். நான் எனது UN மற்றும் பல பன்னாட்டு அமைப்புகளில் வேலை செய்யும் பல நண்பர்களுக்கு அனுபினேன் அது அவர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஏனென்றால் LTTE என்பது எந்த ஒரு குறிகொள்ளும் இல்லாத தீவிரவாத அமைப்பு என்றே நம்பவைக்கப்பட்டுள்ளது. ஆகவே பன்னாட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக அவசியம். Nithy Toronto
ரஹ்மானுக்கு சிறந்த இசைத் தொகுப்புக்கான Bafta விருது கிடைத்ததுன்னு கேள்விப்பட்டேன்...
வாழ்த்துகள்...
"
Anonymous said...
இந்தியாவைப் பற்றி ஒருவன் கேவலமாக படம் எடுத்து, அதற்கு ஒரு இந்தியன் துனைபோவது உங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசமா இருக்கு."
this is the truth that the film reflect the real situation of the slum people........
so you cannot say this words. Not only India but also all over the world especially in the developing countries......
"Anonymous said...
வீதியில் போகும் எங்கள் தழிழ் பெண்களை கிண்டல் அடித்து பதிவிட்ட நீங்கள் போயும்,போயும் இந்த கேடுகெட்ட,கேவலமான,மாயாவுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களா?!!"
அனானி............. அவர்களே ( மரியாதை கொடுப்பது தமிழர் பண்பு அது தான்) ஆள் பாதி ஆடை பாதி என்று தமிழில் தானே பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். உதாரணமாக ஒரு பெண்கள் பாடசாலையை எடுத்துக் கொண்டால், ஒரு நாடக நிகழ்ச்சியில் ஒரு பெண் பிள்ளை சரம் கூடக் கட்ட வேண்டி வரலாம். இந்த நேரத்தில் நான் பொண்ணு நான் போடமாட்டேன் என்றோ இல்லை சேலை கட்டியோ நடிக்க முடியாது அந்த மாதிரி மாதங்கி அவர்களும் அப்படித் தான்.... சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற மாதிரி மாறப் பழகி இருக்க வேண்டும். மனதில் மரியாதை இருந்தாலும் நாட்டுப் பற்று இருந்தாலும் போதுமே தவிர ஆடைகளை வைத்து சீ சீ.................. யோசிக்கத் தெரியாதவராக இருக்கிறீர்கள்...
மனதைப் பாருங்கள்.....
Post a Comment