February 05, 2009

நெஞ்சு நோவுது-வானொலி வறுவல்கள் 5

சூரியன் எப் எம்இல் நான் பணியாற்றிய போது நடந்த இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம்!

இந்தக் குறிப்பிட்ட அறிவிப்பாளர் சூரியனின் பகுதிநேரமாகப் பணியாற்றி வந்தவர். இப்போது வெளிநாடொன்றில் இருக்கிறார். அடிக்கடி கூட்டமாக நாம் சேர்ந்து இவரைக் கலாய்த்து கும்மியடிப்போம். அந்த வேளையில் எதுவும் சொல்லாவிட்டாலும் பின்னர் தனியாக வந்து என்னிடம் ஏன் எல்லாரும் இப்பிடி என்னையே குறிவைக்கிறீங்கள்? 'நெஞ்சு நோவுது' என்று சீரியஸாகப் புலம்புவார் அதுவுமே கொமடியாக இருக்கும்!

இவரது பணி நேரமும் நள்ளிரவு முதல் காலை 6மணிவரை நேரமே!வாரத்தில் ஒருநாள் மட்டுமே வேலை இவருக்கு! எனினும் பற்றித் தெரிந்தால் 12மணிக்கு நிகழ்ச்சி செய்யும் நண்பர் இவருக்கு 6மணிவரை என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும் என்று மீள ஞாபகப்படுத்திவிட்டுத் தான் போவார். அப்படியிருந்தும் அடிக்கடி வெற்றிகரமாக சொதப்புவார் நம்ம ஹீரோ!

அதிலும் இவர் அடிக்கடி சொதப்புவது அதிகாலை 5.45அளவில் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பி வந்த
அருணோதயம் என்ற பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் தான்..

பாடல்கள் தேடிப் பிடித்து இவர் ஒலிபரப்பினாலும், விஷ்ணு கோவில் ஐயரின் குரலில் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பி வந்த இன்றைய தினம் என்ற அன்றைய நாளின் சிறப்புகளை சொல்கிற பகுதியைத் தான் அடிக்கடி தின்று தள்ளி விடுவார்.

ஒன்றில் ஒலிபரப்ப மறந்துவிடுவார்;இல்லையேல்,திகதி மாறி ஒலிபரப்பி விடுவார். இதற்காக அடிக்கடி என்னிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்.

புதன்கிழமையாக இருக்கும்;ஆனால் செவ்வாய்க்கிழமை பற்றி ஐயர் சொல்லிக் கொண்டிருப்பார்.

இதே போல ஒரு நாள் இவர் வழமைபோல சனிக்கிழமை அதிகாலை நிகழ்ச்சி செய்துகொண்டிருந்தார்..இன்றைய தினம் பகுதி ஆரம்பிக்கிறது..

"வணக்கம்.இன்று வெள்ளிக்கிழமை........" என்று ஐயர் சொல்லிக் கொண்டு போக,நம்ம ஹீரோ இடையில் குறுக்கிட்டு,"ஐயா,இன்று சனிக்கிழமை..நீங்கள் தவறாக வெள்ளி என்கிறீர்கள்" என்று சமாளித்தார்..

எல்லாவற்றிலும் பெரிய நகைச்சுவை,ஐயர் அந்தப் பகுதியை முடிக்கும்போதும்,இன்று வெள்ளிக் கிழமை என்று முடிக்க, "என்னைய்யா மறுபடி பிழை விடுறீங்களே"என்று நம்மவர் திருத்தியது தான்..

இந்த சம்பவத்துக்குப் பிறகு சனிக்கிழமைகளில் மட்டும் ஐயர் நேரடியாகவே தொலைபேசியில் 'இன்றையதினம்' சொல்ல ஆரம்பித்தது வேறுகதை.

32 comments:

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

Gajen said...

கிகிகி...பாவம் அந்த மனுஷன்..

Anonymous said...

வறுவல்கள் பிறர் மனதை புண்படுத்த கூடும்.. பிறர் விட்ட பிழைகளை விடுத்து உங்கள் அனுபவங்களை பகிருங்கள்..

சக்(ங்)கடத்தார் said...

தம்பி ராசா! நீரும் சும்மா ஆளில்லை.. அவனவன்ரை கதையளைக் கொண்டு வந்து போட்டுத் தாக்குறீர். ம்..வயிறு வலிக்குது.,.சிரிச்சு. அப்ப எப்ப மோனை உம்மடை கதையள் வெளியை வரும்??

Anonymous said...

கிழக்கு இனுவில் அம்மன் கோவில் ஐயருடன் நீங்கள் சேர்ந்து செய்த திருகுதாளங்களை விட இது குறைவுதான்...
இப்ப நான் யார் என்று தெரியுதா?

Anonymous said...

தவறை சுற்றிக் காட்டுங்கள்
குத்திக் காட்டாதீர்கள்
வணக்குத்துக்குரிய லோஷன் அவர்களே...
உங்கள் லட்சனத்தையும் எழுத ஒருவர் வரலாம் என்பது உங்கள் மனதில் இருக்கட்டும்...

தெரியும்தானே ஐந்தாம் மாடி ஆறாம் மாடி லீலைகள் வெளிவந்த ப்ளொக்
உண்மை....

Anonymous said...

தவறை சுற்றிக் காட்டுங்கள்
குத்திக் காட்டாதீர்கள்
வணக்குத்துக்குரிய லோஷன் அவர்களே...
உங்கள் லட்சனத்தையும் எழுத ஒருவர் வரலாம் என்பது உங்கள் மனதில் இருக்கட்டும்...

தெரியும்தானே ஐந்தாம் மாடி ஆறாம் மாடி லீலைகள் வெளிவந்த ப்ளொக்
உண்மை....

Anonymous said...

There is nothing has loshan written bad about them...this is a joke, and moreover, something that has happened. So take it easy all anonymous'. :)

Anonymous said...

குறிப்பிடப்பட்ட நண்பருக்கே இதை இப்போது வாசிக்கும் போது சிரிப்பாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அவ்வாறிருக்கும் போது வாசிக்கும் அன்பர்கள் இதையேன் ஒரு பாரதூரமான வி்டயமாக கருதவேண்டும்.

பெயர் மற்றும் நடைபெற்ற கால இடைவெளி என்பன இங்கு குறிப்பிடபடாததால் குறிப்பிட்ட நபரை ஏற்கனவே தெரிந்தவர்கள் தவிர எவராலுமே ஊகிக்க முடியாது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
குறிப்பிட்ட நபர் தற்போது ஏற்கனவே கிண்டல் பண்ணியவர்களை விட ஒலிபரப்பு துறையில் சிறந்த நிலையில் இருக்கலாம் அல்லது இன்னொருவருக்கு அதேதுறையில் பயிற்சி அளித்தக்கொண்டு பயிற்சி பெறுபவரிடம் தான் வாங்கிய கடனை எல்லாம் கொடுத்து முடித்திருக்கலாம். யார் கண்டார்.

அவன் அவன் கொலை செய்து போட்டு சால்வையை போட்டுக்கொண்டு திரியுறானுகள். அவன்களை கேட்க வக்கில்லை வந்திட்டானுகள் இங்க புத்தி சொல்ல..

சி தயாளன் said...

நல்ல கூத்து..:-)

Gajen said...

ஐயா சாமி..பகிடிய பகிடியா எடுத்துப்போட்டு போங்களேன்..ஏன் இந்த வெட்டு குத்து?

Anonymous said...

ஓஹோ இவ்வளவு நடந்திருக்கா? இன்னும் இருக்கும் ... வெற்றி fm ல நடக்கிறதுகளையும் கொஞ்சம் ரகசியமாக சொல்லுங்க சார் !!!!!!!!!!

Sinthu said...

கண்டுபிடிச்சாச்சு.. ஆனால் சொல்ல மாட்டேன்..

Anonymous said...

ஈழச்சோழன்க்கு கொஞ்சம் நட் லூஸ் போல.. ஈழம் கிடைகாட்டி சேது ஆகிடுவார் போல.. இதுலேயே தெரியுது உங்களுக்கே பயம் வந்துட்டுது.. ஈழம் கிடைக்கும் எண்டு நம்பிக்கை இல்லை என்று.. அவன் அவன் கொலை செய்து போட்டு தேசிய தலைவர் எண்டு வாழும்போது சால்வைக்கு என்ன குறை.. மண்டையன் குழு தலைவரும் செய்யாததா.. அது அத அந்தந்த தலைப்புல சொல்லுங்க..
தமிழ் மக்களின் விருப்பத்தை மீறி சால்வை வெற்றிபெற உதவியது தலைவர் தானுங்கோ.. தலைவர் சொன்னவர் சால்வை நல்ல மனுஷன் எண்டு யதார்த்தமானவர் எண்டு தன்ற வருஷத்துக்கு ஒரு தடவை வாசிக்கற பேச்சுல.. சோழனுக்கு வரலாறு தெரியாது போல
வரலாறு தெரியனும்.. இல்லாட்டி ஒரு மூணு வருஷத்துக்கு முந்தி நடந்ததாயினும்..

தமிழ் மதுரம் said...

லோசன் உங்க என்ன நடக்குது??

Anonymous said...

ஐயோ அண்ணா என்ன topic serious அக போகுது

துஷா said...

Sinthu said...
"கண்டுபிடிச்சாச்சு.. ஆனால் சொல்ல மாட்டேன்.."

நாமளும் help பண்ணினம் இல்ல அதையும் சொல்லுங்க சிந்து

Anonymous said...

உங்கடையாள் யதார்த்தமானவர் என்று
"//தலைவர் சொன்னவர் சால்வை நல்ல மனுஷன் எண்டு யதார்த்தமானவர் எண்டு தன்ற வருஷத்துக்கு ஒரு தடவை வாசிக்கற பேச்சுல..//"


அவ்வாறு அரசியல் உலகில் நம்ப்பப்படுகிறார் என்று சொல்லப்பட்டதே தவிர நம்புகிறோம் என்று ஒருக்காலும் சொல்லப்படவில்லை அன்பரே.

நண்பரே!
தாங்கள் வரலாற்றை தெரிந்திருப்பதிலும் சரியாக தெரிந்த வைத்திருத்தல்தான் சிறந்தது என்பது எனது தாழ்மையான கருத்து.

நண்பர் கூறியது போல ஈழம் பற்றிய பயம் தற்போது எமக்கு இருக்கத்தான் செய்கிறது ஆனால் அது கிடைக்காது என்பதில் அல்ல இன்னும் ஒரு சில நாட்கள் கூட எடுக்குமா என்பதில் தான்...வரலாறு எமக்கும் வழிகாட்டி தான். அதனால் தான் நாம் இன்னும் நம்பிக்கையுடன்.

ers said...

எனினும் பற்றித் தெரிந்தால் 12மணிக்கு நிகழ்ச்சி செய்யும் நண்பர் இவருக்கு 6மணிவரை என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும் என்று மீள ஞாபகப்படுத்திவிட்டுத் தான் போவார். அப்படியிருந்தும் அடிக்கடி வெற்றிகரமாக சொதப்புவார் நம்ம ஹீரோ!

இதிலும் வருத்து எடுத்து விட்டீர்கள். அந்த நபர் ஐயோ பாவம் லோசன்.

குப்பன்.யாஹூ said...

all radio programmes are now software based. so there is no scope for sodhappal etc.

r u relay with surayn Fm ( i mean KAL Radio Ltd or south asia Fm, which station).

அக்னி பார்வை said...

///வணக்குத்துக்குரிய லோஷன் அவர்களே...
உங்கள் லட்சனத்தையும் எழுத ஒருவர் வரலாம் என்பது உங்கள் மனதில் இருக்கட்டும்...

///

லோஷன் பேசம சரண்டர் ஆகி உங்களை பத்தி நீங்களே எழுதிவிடுங்கள்..அப்புறம் யாரவது எக்கு தப்ப எழுதி விட போகிறார்கள்

மற்ற படி இந்த பதிவு :))))))

kuma36 said...

ஐ யாருக்குமே கேக்களையே அப்படினு நினைத்து சொல்லிருப்பாரு அண்ணா என்ன செய்ய நீங்க கேட்பிங்க என்று மறந்திருபாரு. 12 மணியிலிருந்து தூங்காம தூக்கதில பேசிருபாரோ!!!!

ARV Loshan said...

தியாகி said...
கிகிகி...பாவம் அந்த மனுஷன்..//
யாரை சொன்னீங்க? ஐயரையா? நண்பரையா? ;")

இர்ஷாத்,
//வறுவல்கள் பிறர் மனதை புண்படுத்த கூடும்.. பிறர் விட்ட பிழைகளை விடுத்து உங்கள் அனுபவங்களை பகிருங்கள்..//
உங்களுக்கு என்னைப் பற்றி ஓரளவு நன்றாகவே தெரியும்.. யார் மனதையும் புண் படுத்துபவன் அல்ல நான்..இதில் நான் குறிப்பிடும் அநேகமானவர்கள் எனக்குக் கீழ் பணியாற்றியவர்கள்;நான் அறிமுகப் படுத்தியவர்கள்;என் நண்பர்கள்.அதனால் தான் நான் துணிந்து அவர்கள் பற்றி எழுதி இருக்கிறேன்.
நான் சறுக்கிய இடங்கள் பற்றியும் எழுதினேனே.. படிக்கவில்லை??

அண்ணை சக்கட/சங்கடத்தார்,
//தம்பி ராசா! நீரும் சும்மா ஆளில்லை.. அவனவன்ரை கதையளைக் கொண்டு வந்து போட்டுத் தாக்குறீர். ம்..வயிறு வலிக்குது.,.சிரிச்சு. அப்ப எப்ப மோனை உம்மடை கதையள் வெளியை வரும்??/
நன்றி அண்ணே..உங்களை சிரிக்க வைக்கத் தானே எழுதிறேன்..எண்டை கதையளும் தானே இவை.. என்னைப் பற்றியும் எழுதிறன் தானே..
நான் ஒரு திறந்த புத்தகம் அண்ணை..வார நேரம் வரும்.

அனானி,
//கிழக்கு இனுவில் அம்மன் கோவில் ஐயருடன் நீங்கள் சேர்ந்து செய்த திருகுதாளங்களை விட இது குறைவுதான்...//
அண்ணை கிழக்கு அம்மன் கோவில் ஐயர் யாரென்றும் எனக்குத் தெரியாது.. திருகு தாளங்கள் விடுறது என் தொழிலும் அல்ல..
//இப்ப நான் யார் என்று தெரியுதா?//
ஆனால் உங்களை யாரெண்டு நல்லாவே தெரியும்.ஏன் அனானியா,பெயர் இல்லாம வந்து பின்னூட்டம் இப்படிப் போடுறீங்கள் எண்டும் தெரியும்.
உங்கள் திருகுதாளங்கள் எனக்கும் தெரியும்.;)
உண்மையானவராக இருந்தால் பெயருடனே வந்திருக்கலாமே..

கதிர்/அனானி,
//உங்கள் லட்சனத்தையும் எழுத ஒருவர் வரலாம் என்பது உங்கள் மனதில் இருக்கட்டும்...//
மடியில் கனமில்லை என்பதால் பயமில்லை..என்னைப் பற்றி யாராவது தப்பாக எழுதிவிடுவார்களோ என்று பயம் இருந்தால் இப்படிப் பதிவிடவோ அல்லது அதற்கும் ஒருபடி மேலே போய் மட்டுறுத்தல் கட்டுப்பாடு இல்லாமல் விட்டிருக்கவும் மாட்டேன்..

//தவறை சுற்றிக் காட்டுங்கள்
குத்திக் காட்டாதீர்கள்//
அத்துடன் அது சுற்றி இல்லை.. சுட்டி.. இப்போதும் நான் குத்திக் காட்டவில்லை.. சுட்டியே காட்டியுள்ளேன்..

//தெரியும்தானே ஐந்தாம் மாடி ஆறாம் மாடி லீலைகள் வெளிவந்த ப்ளொக்
உண்மை....//
நண்பரே,அந்த நாராயணன் யார் என்றும் தெரியும்.நீங்கள் யாரென்றும் தெரியும்.உண்மைகள் சிலருக்குத் தான் சுடும். என் போன்ற உண்மையாகவே இருப்பவர்களுக்கு அவை குத்தாது;குடையாது..
அந்த 'உண்மை' பற்றியும் வெகு விரைவில் எழுதுவேன்.. சந்தோஷமா? :)

//வணக்குத்துக்குரிய லோஷன் அவர்களே...//
ரொம்ப வே மகிழ்ச்சி..

விமர்சனங்கள் கண்டு பயப்படுபவன் பொது வாழ்க்கைக்கோ,படைப்புத் துறைக்கோ வரக்கூடாது. - என் கருத்து

ARV Loshan said...

Thanx Mathu, U got it.. Let them write whatever they think. ;)

சகோதரா ஈழச் சோழா,
ஒவ்வொருவர் புரிதலும் ஒவ்வொரு ரகம்! அன்னவர் கருத்திலிருந்து அன்னவர் பற்றியும் அறியலாம்;அவரவர் என் மேல் வைத்துள்ள அக்கறை பற்றியும் அறியலாம்.. ;)
அதனால் விட்டுவிடுவோம்..

டொன்லீ, எந்தக் கூத்தை சொன்னீங்க? ;)

தியாகி,
//
ஐயா சாமி..பகிடிய பகிடியா எடுத்துப்போட்டு போங்களேன்..ஏன் இந்த வெட்டு குத்து?//
:) நம்மவர்கலாயிற்றே.. விடுவாங்களா? பாசக்காரப் பயலுவ..;)

பிரபா,
//ஓஹோ இவ்வளவு நடந்திருக்கா?//
இதை விட இன்னும் நிறைய.. சொல்லக் கூடியவை பற்றி மட்டுமே சொல்லுறேன்.
// வெற்றி fm ல நடக்கிறதுகளையும் கொஞ்சம் ரகசியமாக சொல்லுங்க சார் !!!!!!!!!!//
ரகசியமா என்ன. பரகசியமாகவே.. ஆனால் இன்னும் வெற்றி நடையின் ஒரு வருடமே முடியலையே.. ;)

Anonymous said...

Your Program "Vidyal" makes me remember your Sakthi FM time, Have you seen "Kalakal Kathasamy". Manusan ippavum kanadavila Kalkairar, vanumenda "Kanada Kanthasami" endu payara mathalam.

Mano

Anonymous said...

Why dont you do it as Bullet Anna's blog. His statement for controlling the comments
//எல்லாப்பின்னூட்டலாளருக்கும் தனிதனி கவனம் வெலுத்துவேண்டுமென்று நினைக்கிறவன் நான். ஆதலால அனானிய வந்து அசிங்கம் செய்யுறாக்கள அனுமதிக்க முடியாதுதானே. திட்டுறதை நேர திட்டுங்கவன். ஏன் மறைஞ்சு நிண்டு திட்டவேணும்? அடிக்கடி வாங்க கோவம் வந்தா திட்டுங்க. நோ புறொப்ளம்.//

Anonymous said...

மரியாதைக்குரிய அண்ணா.. இந்த பதிவு வாசித்ததும் பட்டுன்னு மனசுல வந்தத சொல்லிட்டேன்.. புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.. அதேவேளை எனது பின்னூட்டதிற்கு பிறகு இவ்வளவு விஷயங்கள் நடக்கும் என்றும் நான் நினைக்கவில்லை.. மீண்டும் மன்னிக்க..

ARV Loshan said...

சிந்து, கண்டுபிடிச்சாலும் சொல்லாதீங்க.. ;)

அனானி, வானொலி அரசியல் என்று தனியாக ஒன்று உண்டு.. அதிலே இருந்து நாங்க தப்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்குள் வங்குரோத்து அரசியல் வேறு பேச வேணுமா? பெயரை சொல்லிக் கருத்தை சொல்லலாமே..


கமல்,
//லோசன் உங்க என்ன நடக்குது??//
என்னவெல்லாமோ நடக்குது.. ;)

துஷா,
//ஐயோ அண்ணா என்ன topic serious அக போகுது//
இதெல்லாம் சகஜமப்பா..;)

துஷா,
//நாமளும் help பண்ணினம் இல்ல அதையும் சொல்லுங்க சிந்து//
இங்கே கூட கூட்டணியா?

ஈழச்சோழன், ஏனையா சால்வையும்,சரித்திரமும்? விட்டுருவமே.. ;)
tamil cinema said...
//இதிலும் வருத்து எடுத்து விட்டீர்கள். அந்த நபர் ஐயோ பாவம் லோசன்.//
இதை விடவெல்லாம் வறுத்து எடுத்தமே.. ;)

குப்பன்_யாஹூ said...
//all radio programmes are now software based. so there is no scope for sodhappal etc.//
குப்பன், இல்லை நண்பரே.. இலங்கையில் கூடியவரை நேரடியாக,மனித இயக்கத்திலேயே வானொலிகள் இயங்குகின்றன
//r u relay with surayn Fm ( i mean KAL Radio Ltd or south asia Fm, which station).//.
இல்லை குப்பன், எம்முடைய வெற்றி www.vettri.lkஇல் இயங்குகிறது.


அக்னி பார்வை said...
//லோஷன் பேசம சரண்டர் ஆகி உங்களை பத்தி நீங்களே எழுதிவிடுங்கள்..அப்புறம் யாரவது எக்கு தப்ப எழுதி விட போகிறார்கள்//
எவ்வளவு பார்த்திட்டம்.. இதுக்கெல்லாம்.. ;)
என்னைப் பற்றியும் தானே எழுதி இருக்கிறேன்.

கலை,
//
கலை - இராகலை said...
ஐ யாருக்குமே கேக்களையே அப்படினு நினைத்து சொல்லிருப்பாரு அண்ணா என்ன செய்ய நீங்க கேட்பிங்க என்று மறந்திருபாரு. 12 மணியிலிருந்து தூங்காம தூக்கதில பேசிருபாரோ!!!!//
ஆமாம்.. தூக்கக் கலக்கம் உண்டு தான்.. ஆனால் ஒலிபரப்பாளர்கள் என்றால் ஒரு பொறுப்புணர்ச்சியும்,தக்க கடமையுணர்ச்சியும் வேண்டாமோ?

மனோ, //Your Program "Vidyal" makes me remember your Sakthi FM time,//
நன்றி,ஏதோ கொஞ்சம் முடியுமானவரை நன்றாகவும்,பிரயோசனமாகவும் செய்ய முயற்சிக்கிறேன்.

//Have you seen "Kalakal Kathasamy". Manusan ippavum kanadavila Kalkairar, vanumenda "Kanada Kanthasami" endu payara mathalam.//
ஆமாமா.. தொடர்புகள் இன்னமும் உண்டு.. அவர் இங்கே கொஞ்ச நாள் வந்து கலக்கிட்டு தான் போனார். give my regards.

Triumph said...
//Why dont you do it as Bullet Anna's blog. His statement for controlling the comments.....//
இல்லை.. இப்போதைக்கு அவசியமில்லை.. எல்லோரும் நாகரிகமானவர்கள் என்றே நான் என்னைப் போலவே பிறரை நினைக்கிறேன்.. கொஞ்ச நாள் விட்டு,பிறகு பார்க்கலாம்..


இர்ஷாத் said...
//மரியாதைக்குரிய அண்ணா.. இந்த பதிவு வாசித்ததும் பட்டுன்னு மனசுல வந்தத சொல்லிட்டேன்.. புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.. அதேவேளை எனது பின்னூட்டதிற்கு பிறகு இவ்வளவு விஷயங்கள் நடக்கும் என்றும் நான் நினைக்கவில்லை.. மீண்டும் மன்னிக்க..//
இல்லை இர்ஷாத், எந்த ஒரு மனவருத்தமும் இல்லை.. நீங்க ஆரம்பிக்கவிட்டாலும் எப்படியும் எனது நலன் விரும்பிகள் தொடங்கி இருப்பார்கள்.. ;)
என்ன கொடும சார் இது.. ;)

Anonymous said...

எந்த போண்டா வாயன் லோசன் அண்ணாவை திட்டுறது?? பெயர் சொல்லிட்டு வாங்கடா பே மா நீ!

Keddavan said...

எவ்வளவு திட்டினாலும் தாங்கிட்டு இருக்கிங்களே...ரொம்ப நல்லவரண்ணா நீங்கள்...

ப. அருள்நேசன் said...

லோஷன்
நீங்கள் எழுதிய பல பதிவுகளைப் பார்த்தேன், வெறும் வறுவல்களுக்கிடையில் காத்திரமான சமூக எழுச்சி சார்ந்த இன்னும் .....,அதே தமிழ் உணர்வையும் காணமுடிந்தது,
வாழ்த்துக்கள் உங்கள் எல்லாவிதமான முயற்சிகளுக்கும்.

அன்புடன்
ப. அருள்நேசன்

Prapa said...

நாங்க எதையும் நேருக்கு நேர் நின்று பார்துடுவொமில்ல...... என பிரதர் ! அவங்க சும்மா ஜுஜுபி ...... நாங்கெல்லாம் இருக்கிறோம் நீங்க சும்மா கலக்குங்க லோஸ்......

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner