February 11, 2009

பதவி விலகுகிறார் மகேல..


எதிர்வரும் பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் இலங்கை அணியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணித் தலைமைப் பதவியில் இருந்து விலகப் போவதாக இலங்கை அணியின் தலைவர் மகேல ஜெயவர்த்தன அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்கெதிராக இலங்கை மண்ணிலேயே படுமோசமாக ஒரு நாள் தொடரைத் தோற்ற பிறகு, நேற்று இடம்பெற்ற போட்டியில் மகேல விளையாடவில்லை.

இன்று தனது முடிவை அறிவிக்க முதல் தேர்வாளர்கள்,ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடிய பிறகே இந்த முடிவை அறிவித்துள்ளார் மகேல.

2011 உலகக் கிண்ணப்போட்டியில் இலங்கைக்குத் தலைமை தாங்குபவருக்கு தகுந்த கால எல்லையில் அணியைத் தயார் படுத்தும் விதத்திலேயே தான் இப்போதே விலகி,வழிவிடுவதாக மகேல தெரிவித்துள்ளார்.

நீண்ட காலம் இது பற்றி யோசித்தே இம்முடிவை எடுத்ததாக மகேல கூறியுள்ளார்.

மூன்று வருடங்களாக இலங்கை அணியினை வழிநடத்திய மகேல, அவரது கண்ணியமான நடத்தைகளுக்காகவும்,சிறப்பான,புத்தி சாதுரியமான அனுகுமுறைகளுக்காகவும் சர்வதேச ரீதியிலும் பாராட்டப்பட்டவர்.

இலங்கை அணிக்குத் தலைமை தாங்கியவர்களில் டெஸ்ட்,ஒருநாள் போட்டிகள் இரண்டிலுமே தலை சிறந்த வெற்றி சதவீதம் மகேலவுக்கே இருக்கிறது.

26 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்குத் தலைமை தாங்கி 15 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பெற்றுள்ளார்.
  94 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்குத் தலைமை தாங்கி 54 வெற்றிகள்;35 தோல்விகள் 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலை சிறந்த ஒரு நாள் தலைவர் விருதையும் வென்றேடுத்தவர்.

           ICC விருதோடு மகேல - அது ஒரு காலம்

தலைமைப் பொறுப்பேற்ற பிறகு எத்தனயோ வீரர்கள் தங்கள் துடுப்பாட்டத்தில் கவனம் குறைந்து கோட்டை விடுவதுண்டு.மகேல அதிலும் சறுக்காமல் சிறப்பாக மிளிர்ந்தவர்.

ஒரே ஒரு தொடரின் முடிவை வைத்து ஒரு நல்ல,சிந்திக்கக்கூடிய தலைவரான மகேல இந்த முடிவை எடுத்தது என்னைப் பொறுத்தவரையில் அனாவசியம் என்றே கருதுகிறேன்.அவரைப் பற்றி எல்லோருமே நல்ல அபிப்பிராயம் வைத்துள்ளனர்.அணியைக் கட்டுக் கோப்போடும், ஒழுக்கத்தோடும்,வெற்றியை நோக்கிய முனைப்போடும் இதுவரைகாலமும் வழி நடத்தி வந்தவர் மகேல. 

எனினும் அவரது அண்மைக்கால துடுப்பாட்ட சறுக்கல்கள் , அதுபற்றி எழுந்த கடும் விமர்சனங்கள் அவரது மனதைப் பாதித்திருக்கக் கூடும். 

இந்திய அணியின் டிராவிடைப் பல விஷயங்களில் ஒத்திருக்கும் மகேல இந்த விஷயத்திலும் அவரைப் போலவே முடிவெடுத்திருப்பது தான் ஆச்சரியம். 

 அண்மைக் கால சொதப்பல்கள் அவரையும்,அணியையும் பாதித்ததே மகேல ஜெயவர்த்தனவின் இந்த திடீர் முடிவுக்குக் காரணம் என்று தெரிகிறது.

அடுத்து இன்னொரு சிறப்பான,கண்ணியமான வீரர் குமார் சங்ககாரவிற்கு தலைமைப் பதவி செல்லும் என ஊகிக்கலாம். மகேல தொடர்ந்தும் நல்ல ஒரு துடுப்பாட்ட வீரராக தனது பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்க்கலாம்.அதற்கு முன்னர் அவரது தலைமைப் பதவியில் இறுதித் தொடரான பாகிஸ்தான் தொடரில் இலங்கை அணி பிரகாசித்து மகேலவுக்கு மகிழ்ச்சியான பிரியாவிடை கொடுக்குமா என்பதே கேள்வி.. மகேலவும் ஓட்டங்கள் குவிக்கவேண்டும் என்பதே இலங்கை ரசிகர்களின் எதிர்பார்ப்பும்.

தகவல் அறிந்தவுடன், கஞ்சிபாய் என்னோடு தொடர்பு ஏற்படுத்தி தோனியிடமும்,இந்திய அணியிடமும் கேட்க சொன்னார் "இப்ப சந்தோசமா?"
 

19 comments:

Anonymous said...

என்ன கொடும சார்?
SHOCKING NEWS!
மஹேல விலகினாலும் சங்ககார சரியாக செய்வார்.. வேறு ஒரு இள வீரரை தலைவராக தெரிவுசெய்ய கூடும்.. தென்னாபிரிக்க அணி போல்.. அது டில்ஷான் இல்லை.. மஹ்ரூப் ஆக இருக்க முடியுமா?

Anonymous said...

Your comment has been saved and will be visible after blog owner approval.

கடைசியில நீங்களுமா. இலங்கை ஊடக சுதந்திரம் போயே போச்சு.. இததான் சொல்றது BRAIN WASH . லோஷன் என்று இருந்த ஒரு நியாயமான மனிதனும் காயடிக்க பட்டுவிட்டானா?

Anonymous said...

Hi

உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்குநன்றி.

உங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Anonymous said...

லோஷன் என்ற நியாயமான மனிதன்

Mathu said...

மகேல பதவி விலகுகிறாரா?? Oh No....I am very disappointed :(( People are going to miss him!

Anonymous said...

shocking news
எல்லாருமா சேர்ந்து கடைசியில் இந்த முடிவுக்கு கொண்டு வந்து விட்டுட்டாங்க இப்போ கொஞ்ச காலம் சரியாக விளையாடலும் மகேல ஜெயவர்த்தன நல்ல ஓர் தலைவன் இவரின் கிழ் ஓர் கட்டுப்பாட்டுடன் இருந்தது இலங்கை அணி

Prapa said...

எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தாலும் அடியேன் எதிர்பார்த்தேன் ஏனென்றால் "என்ன நேர்மையான மனுசன்யா அவரு ". தொடர்ந்து விளையாடுவாரா தெரியல்ல ? இப்ப அவங்களுக்கு சந்தோசமாத்தான் இருக்கும் போல !!!!!!!!! சங்ககார சரியான தெரிவாக இருக்கும் லோஸ். ( வாக்கெடுப்புக்கு விடலாமே !).

Anonymous said...

ஹா ஹா ........

இப்ப விளையாட்டில இது எல்லாம் சகஜம்

Gajen said...

அண்டேக்கு semi final ல நியுசீலாந்தை தோய்த்து எடுத்து final மட்டும் கொண்டு போய் சேர்த்த போதும், சிறந்த ஒரு நாள் தலைவர் என்ற விருதைப் பெற்றபோதும் ஆஹா ஓஹோ என்று போற்றியவர்கள் இன்று தங்கள் மோட்டுத் தனமான கதைகளினால் மகேலவை பதவி விலக நிர்ப்பந்தித்துள்ளனர்..இங்க கூட எனது flatmates, மஹேல கையில் கிடைத்தால் கும்மு கும்மென்று கும்முற லெவலில இருக்கினம்..நாங்களும் படிப்படியாக இந்திய ரசிகர்களை போல react பண்ண தொடங்குவது கவலையாக உள்ளது..கிரிக்கெட் சபை (அர்ஜுன என்று வாசிக்கவும்) உருவாக்கிய முறுகல் நிலை, மாலிங்க-அர்ஜுனவுக்கிடையான கருத்து வேறுபாட்டால் மாலிங்கவை இழந்தமை, அர்ஜுன தன்னிச்சையாக ஏற்பாடு செய்து பின் ரத்து செய்யப்பட இங்கிலாந்து tour இனால் ஏற்பட்ட கசப்பு. இதெல்லாம் மறந்தாச்சோ? சொல்லப் போனா, அந்த எரும மாடு தான் இப்பத்தைய நிலைக்கு பொறுப்புக் கூற வேணும்.மஹேல தன் துடுப்பாட்டத்தால் பதிலடி கொடுத்திருக்க வேண்டும்..ஆரம்ப, நடுத்தர வரிசைல எவனுமே சப்போர்ட் பண்ணாம எப்பிடியா matches win பண்றது?

Anonymous said...

பார்க்க http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=40300

kuma36 said...

மகேல கொஞம் அவசரப்படாமல் ஒரு ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் அணிக்கு தலைவராகவே வந்திருக்கலாம்.பாவம் சங்காவிற்க்கு என்ன நிலமை நடக்க போகுதோ!!! ஆனால் டில்ஷான் மட்டும் தலைவராக வர கூடாது. ஒரு தலைவருக்கான எந்த பண்புகளுமே அவருகிட்ட இல்ல என்பதை T20 போட்டியில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

Anonymous said...

ha ha

shaan said...

அணித்தலைவரை மாற்றுவதற்க்கு முதல் அணியில் உள்ள மற்றவீரர்களுக்கு கிரிக்கெட்டை ஒழுங்காக விளையாட கற்றுக்கொடுக்கவேண்டும். இது நடந்தால்தான் இலங்கை அணிக்கு நன்மை பயக்கும். சும்மா தலைவரை மாற்றுவதால் எல்லாம் ஒரு பிரயோசனமும் இல்லை...

கார்த்தி said...

மகேல சிறந்த தலைவர்.
2003 உலகக்கிண்ண போட்டிகளின் போது தன்னுடைய Formஐ இழந்து தவித்த வேதனையை அவருக்கு தற்போதைய தோல்விகள் கொடுத்திருக்கலாம்.
அவர் விலகினாலும் அவரது இடத்தை சரியான ஒரு ஆள் நிரப்புவார் என்பது கேள்விக்குறியே

Anonymous said...

correct decision in right time

Nantharupan said...

நிச்சயமாக mahela இன் இடத்தை sangaஆல் நிரப்பமுடியுமோ தெரியாது. sachin மாதிரி sanga உம் அணித்தலைவர் ஆன பின் சோதப்பாவிட்டால் சரி.விட்டால் வேறு ஒருவரும் இல்லை.மற்ற ஒருத்தருக்கும் அணியில் இடமே கேள்விக்குறி.!!!!!!

இது எல்லாம் கட்டுப்பாட்டுசபை செய்த்த தவற்றால் வந்த வினை.
ஏதோ நூற்றுக்கணக்கில் வீரர்கள் சந்தர்ப்பத்துக்கு காத்து இருக்கிற மாதிரி.!!!!!
என்ன ஆனால் எம்க்கென்ன நம்ம தலை போட்டிக்கு ஒரு அடித்தாலே எமக்கு போதும்.

Nantharupan said...

நிச்சயமாக mahela இன் இடத்தை sangaஆல் நிரப்பமுடியுமோ தெரியாது. sachin மாதிரி sanga உம் அணித்தலைவர் ஆன பின் சோதப்பாவிட்டால் சரி.விட்டால் வேறு ஒருவரும் இல்லை.மற்ற ஒருத்தருக்கும் அணியில் இடமே கேள்விக்குறி.!!!!!!

இது எல்லாம் கட்டுப்பாட்டுசபை செய்த்த தவற்றால் வந்த வினை.
ஏதோ நூற்றுக்கணக்கில் வீரர்கள் சந்தர்ப்பத்துக்கு காத்து இருக்கிற மாதிரி.!!!!!
என்ன ஆனால் எம்க்கென்ன நம்ம தலை போட்டிக்கு ஒரு அடித்தாலே எமக்கு போதும்.

Anonymous said...

மகேல சமீபகாலமாக ஒழுங்காக விளையாடாததற்கான காரணம் Golden Key Credit Card Company இல் பெருமளவு அவரது பணத்தை இழந்ததாலாம்...

வேத்தியன் said...

ஒரு வகையில நல்லது தான்...
பேசாம சாமர கப்புகெதரவையே தலைவரா போடலாம்..
முதல்ல சொதப்பினாலும் பிறகு அணி நல்ல போகும்...
கிரேம் ஸ்மித் செய்யல???

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner