இலங்கையின் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளரும்,'சுடரொளி'பத்திரிகையின் பொது முகாமையாளராகவும்,ஆசிரியராகவும் இருந்து துணிச்சலாக செய்திகள்,கட்டுரைகள் தந்து கொண்டிருந்தவருமான வித்தியாதரன் கடத்தப் பட்டுள்ளார் என்ற செய்தி தான் அது. கொழும்பு,கல்கிஸ்ஸையில் மரணவீடொன்றுக்கு சென்று திரும்பும் வேளையில் இவரை வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதோர் பலவந்தமாக,பலர் பார்க்கும் வேளையில் கடத்தி சென்றுள்ளதாக நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலத்திலும் துணிச்சலாகவும்,உண்மையாகவும் பல சம்பவங்களையும்,நாட்டு நடப்புக்களையும் ஆசிரியத் தலையங்கமாகவும்,கட்டுரைகளாகவும் எழுதி வந்தவர் 'வித்தி' எனப்படும் வித்தியாதரன் என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழ் ஊடகத் துறைக்கு மற்றுமொரு பகிரங்க மிரட்டல்..
வித்தி பத்திரமாக திரும்ப பிரார்த்திப்பதைத் தவிர வேறொன்றும் எங்களால் செய்ய முடியாத நிலை.
பின்னர் கிடைத்த செய்தியின் படி காவல்துறைப் பேச்சாளர் அவர் கடத்தப்படவில்லை எனவும்,கைது செய்யப்பட்டார் எனவும், தாங்கள் வித்தியாதரனைக் கைது செய்தது விசாரணைக்காகத் தான் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதே கருத்தை ஊடகத்துறை அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போதும் அவர் விடுதலை செய்யப்படவில்லை என்றும் விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் பல்வேறு செய்தி ஊடகங்களும் தெரிவிக்கின்றன.