February 17, 2009

நந்தா,பிதாமகன்,நான் கடவுள்... லோஷன்??

காதலர் தினம் எல்லாம் கடந்து சென்ற பிறகு வருகிற என் பதிவு..
கொஞ்சம் காதல் பற்றி எழுதினால் என்ன என்று நினைத்தேன்..

நேற்றைய என் பதிவைப் பார்த்தவர்கள் ஏதோ என்னை பாலாவின் கதாநாயகர்களில் ஒருவன் என்று (சேது தவிர) யோசித்து விடுவார்களோஎன்று நினைத்துத் தான் இந்தப் பதிவு என்று யாரும் நினைத்து விடவேண்டாம்..;) (ஒரு முன் ஜாக்கிரதை டிஸ்கி தாங்க)

நந்தா,பிதாமகன்,நான் கடவுள்... லோஷன்??
(நான் கடவுள் பார்த்திட்டேன்.. விமர்சனம் போல ஒன்று எழுத ஆரம்பித்தும் விட்டேன்.. அந்தப் பாதிப்புத் தான்..)

2002இல் நான் எழுதிய (வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்காக) 'நீ' என்ற கவிதை தான் இது.. (கொஞ்சம் கவிதை சாயல் இருப்பதாக நண்பர்கள்/கவிதை எழுதுவோர் ஏற்றுக் கொண்டார்கள்)

இந்த நீ யார் என்று சொல்லி இப்போ கேட்கப் படாது.. அப்போது யார் அந்த நீ என்று எனக்கே தெரியாது..

ஆனால் இத்தனை எழுதும் போது இருந்த அந்த romantic feeling தனி தான்..

இதனால் தான் நண்பர்களோடு பேசும்போது அடிக்கடி நான் சொல்வது,
"காதல் சொல்லி காதலிப்பதை விட,காதல் தரும் உணர்வுகளை தனிமையில் அனுபவிப்பது அற்புதமானது"


நீ...நீ...
ஒற்றைச் சொல்லில் உரிமையெடுத்து
உயிரனைத்தையும் ஒன்றுபடுத்தி
ஒருமையில் - தனிமையளித்தும்
தன்மையை அழித்தும்
தன்மையாக ஒலிக்கும் -
முன்னிலையாக உள்ள
படர்க்கைச் சொல் இது!

நீயெல்லாம் - நானாக
நானென்பது நீயென்ன
நீயும் நானும் - நீயானோம்!
நானும் நீயும் - நானானோம்!
நீயின்றி – நானும்
நானின்றி நீயும் - தீயானோம்!

நீ – நீண்டு ஒலிக்கையில்
அளவற்ற அன்பு!
குறுகிச் சிறுக்கையில்
சுருக்கமான தெளிவு!

ஆங்கில YOUவில் இல்லாத
அழகு – அன்பின் அடர்த்தி
தமிழின் 'நீ'யில் உண்டு
தமிழின் 'நீ' மெல்லினம்!
எனவே மென்மையுண்டு!
தனிச் சொல்லாதலால் - மேன்மையுமுண்டு!

நீங்களில் 'கள்' இருக்கலாம்
ஆனால் மயக்கம் இல்லை
ஆம்!
அன்பின் மயக்கம் இல்லை!
நீயில் உரிமையுண்டு
உணர்ச்சியும் உண்டு!

நீரின் குளிர்மை!
தீயின் வெம்மை!
நீரோட்டத்தின் வேகம்!
தீராத மோகம்!
அத்தனையும் சேர்ந்த அற்புதக் கலவை நீ!

புரிந்து கொள்ள முடியாத புதிர் நீ!
கனவு போலக் கலைவாய்
காற்றுப் போலவும் நீ
சிலநேரம் வீசியடிக்கும் கோபப்புயல்
சிலநேரம் இன்பம் தரும் தென்றல்
அடிக்கடி மாறும் காலநிலை போல்
புhந்து கொள்ள முடியாத புதிர்ப்புதையல் நீ!

யாரோ நீ என்று தேடுவதிலே கழியும்
என் சந்தோஷக் கணங்கள்..
கண்டு விட்டால் கலைந்துவிடுமோ
இல்லை காதலால்
நீயும் நானும்
நாமுமாகி
நீ என்பதே நானாகுமோ??

நானெல்லாம் நீயான பின்
தனியாக 'நீ' ஏது?

21 comments:

SurveySan said...

//விமர்சனம் போல ஒன்று எழுத ஆரம்பித்ததும் விட்டேன்.. //

ஆரம்பித்ததும் = ஆரம்பித்தும் ?

waiting :)

Anonymous said...

காதல் தரும் உணர்வுகளை தனிமையில் அனுபவிப்பது அற்புதமானது

ஐயோ நீங்க முரளி மாதிரியா? மைக் புடிச்சி பாடும் நடிகர்

நீயெல்லாம் - நானாக
நானென்பது நீயென்ன
நீயும் நானும் - நீயானோம்!
நானும் நீயும் - நானானோம்!
நீயின்றி – நானும்
நானின்றி நீயும் - தீயானோம்!

எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு ...


நீ...
ஒற்றைச் சொல்லில் உரிமையெடுத்து
உயிரனைத்தையும் ஒன்றுபடுத்தி
ஒருமையில் - தனிமையளித்தும்
தன்மையை அழித்தும்
தன்மையாக ஒலிக்கும் -
முன்னிலையாக உள்ள
படர்க்கைச் சொல் இது!

புடிச்சிருக்கு

Wow said...

ஆங்கில YOUவில் இல்லாத
அழகு – அன்பின் அடர்த்தி
தமிழின் 'நீ'யில் உண்டு
தமிழின் 'நீ' மெல்லினம்!
எனவே மென்மையுண்டு!
தனிச் சொல்லாதலால் - மேன்மையுமுண்டு!

நீங்களில் 'கள்' இருக்கலாம்
ஆனால் மயக்கம் இல்லை
ஆம்!
அன்பின் மயக்கம் இல்லை!
நீயில் உரிமையுண்டு
உணர்ச்சியும் உண்டு!

இது திருமணத்திற்கு முன்பு எழுதியது தானே லோசன்?

லோசன் அப்புறம் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்...

Mathu said...

WOW...So good!
நீ என்பதை மட்டும் வச்சே இத்தனை வரிகளா? நல்லா இருக்கு :)

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

SASee said...

கொஞ்சம் இறுக வைத்த
உங்கள் வார்த்தைகள்
என்னைக் கொஞ்சம்
உருக வைத்தது...!//ஒற்றைச் சொல்லில் உரிமையெடுத்து
உயிரனைத்தையும் ஒன்றுபடுத்தி
ஒருமையில் - தனிமையளித்தும்
தன்மையை அழித்தும்
தன்மையாக ஒலிக்கும் -
முன்னிலையாக உள்ள
படர்க்கைச் சொல் இது!//

SASee said...

அண்ணா ஒரு விசயத்தை கேட்க மறந்திட்டேன்..


//இந்த நீ யார் என்று சொல்லி இப்போ கேட்கப் படாது..//


இது OK

But

//அப்போது யார் அந்த நீ என்று எனக்கே தெரியாது..//


இப்படி பொய் சொல்லக்கூடாது.

Subankan said...

//LOSHAN said...

ரொம்பத் தான் பீலிங் எண்டு விளங்குது.. தம்பி.. வேணாம் சொல்லீட்டன்.. கிளுகிளுப்புக்கு ஆசைப்பட்டு குழிக்குள்ள விழுந்திராதேயும். ;)
//

இது நீங்கள் எனக்கு இட்ட பின்னூட்டம். இப்ப நீங்களும் .......
இத தானே நானும் செய்தனான். இன்னும் கொஞ்சம் கேவலமா !!!

kuma36 said...

அண்ணா ஒரு இசையமைப்பாளரும், ஒரு பாடகரும் கண்டால் நிச்சயம் ஒரு அழகான பாடலாய் வெளிவரும்.

Unknown said...

Excellent blog. Also,
நீங்களில் 'கள்' இருக்கலாம்
ஆனால் மயக்கம் இல்லை ----
Nice lines....

சி தயாளன் said...

ஆங்....:-))

Anonymous said...

இந்த நீ யார் என்று சொல்லி இப்போ கேட்கப் படாது.. அப்போது யார் அந்த நீ என்று எனக்கே தெரியாது..

Nampuram..........

தர்ஷன் said...

அன்பின் லோஷன் அவர்களுக்கு,
நீங்கள் சக்திFM இல் இருந்த காலத்திலிருந்தே நான் உங்கள் ரசிகன். வெறும் குரல் வளம் மட்டும் ஊடகத் துறைக்கு போதும் என்ற நிலையிலுருக்கும் மற்றவரைப் போல் அல்லாது மிகுந்த தேடல் கொண்டவர் என்பதை அவ்வப்போது வெளிப்படுத்தியுள்ளீர்கள். சக்தியின் முத்துக்கள் பத்து கேட்டு உங்கள் ரசிகனானவன் அழைத்து வந்த அறிவிப்பாளர், வேகமாய் நீங்கள் பகிரும் விளையாட்டு செய்திகளும் அதற்கான உங்கள் கமெண்ட்ஸ் என பலதையும் ரசித்தேன்.
பௌர்ணமி நாட்களில் நீங்கள் வழங்கிய விவாதங்கள்(மக்ரூபோடு இணைந்து) போல வேறெவரும் செய்ததாய் தெரியவில்லை.
தங்கள் வலைப்பூவை நீண்ட நாட்களாக படித்தாலும் தற்போதே பின்னூட்டமிட தோன்றியது. அவையடக்கத்தால் கவிதையின் சாயலுடையதாக நீங்கள் கூறினும் இது உண்மையில் ஒரு அழகான கவிதை.

Mathu said...

I read it again..and couldn't help saying this again..."wow" ..really!
Whatta lines! Rommmmmmmmba nalla irukku....Hats off :)(I am a bit jealous of the poet in u as well ;) in a healthy way only :)

Sinthu said...

"நானெல்லாம் நீயான பின்
தனியாக 'நீ' ஏது?"
You (sorry, with respect) are correct anna...........
thanks for your post.........
I was interested when I read it...

Unknown said...

its rally nice i like this words nan ealam niyna pin thaniyaha niyeathu...wow excellent...superb...

Unknown said...

its rally nice i like this words nan ealam niyna pin thaniyaha niyeathu...wow excellent...superb...

Unknown said...

its rally nice i like this words nan ealam niyna pin thaniyaha niyeathu...wow excellent...superb...

தமிழ் மதுரம் said...

நீங்களில் 'கள்' இருக்கலாம்
ஆனால் மயக்கம் இல்லை
ஆம்!
அன்பின் மயக்கம் இல்லை!
நீயில் உரிமையுண்டு
உணர்ச்சியும் உண்டு!//

யதார்த்தம் நிரம்பிய கற்பனையா?? அல்லது அனுபவ வெளிப்பாடா கவிதை?? எழுதியவருக்குத் தான் தெரியும்??? சுருங்கக் கூறின் சிறந்த சொல்லாடலும் நயமும் நிறைந்த கவிதை. அதார் அந்த நீ???

Anonymous said...

"அதார் அந்த நீ???"

"இந்த நீ யார் என்று சொல்லி இப்போ கேட்கப் படாது"

"அப்போது யார் அந்த நீ என்று எனக்கே தெரியாது"


:))) கவிதை சுப்பர் அண்ணா

Anonymous said...

//நந்தா,பிதாமகன்,நான் கடவுள்... லோஷன்??//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner