வெற்றி FM இப்போது இணையத்தில்... www.vettri.lk

ARV Loshan
6


எங்கள் வெற்றி ஆரம்பித்து ஏழு மாதங்களே ஆகின்ற இந்த கால கட்டத்தில் வெற்றியை இணையத்தில் ஏற்றி சர்வதேச நேயர்களும் கேட்க வைக்க வேண்டும் என்ற எங்கள் முயற்சி கை கூடி இருக்கிறது..இணையத்தில் நாங்கள் உத்தியோகபூர்வமாக ஏற்ற முதலே சில நண்பர்கள் சர்வதேச நேயர்கள் பலரை எங்களுக்குப் பெற்று தந்திருந்தார்கள்.. 
எனினும் என்ன காரணமோ அந்த இணையத்தளம் செயலற்று போய்விட கொஞ்ச நாளாக நாம் எமது மேலிடத்தை தொடர்ந்து நச்சரித்து இணையத்தில் ஏற்றி விட்டோம்..  
இன்று காலையில் எனது நிகழ்ச்சியிலே அமெரிக்க நேயர் ஒருவர், ஆஸ்திரேலிய நேயர் ஒருவர் , மற்றும் இந்தியாவின் காஞ்சிபுரத்தை சேர்ந்த நேயர் ஆகியோரின் தொடர்புகள் கிடைத்தன.. நீண்ட காலம் விட்டுப் போய் இருந்த எனது வெளி நாட்டு நண்பர்கள் மற்றும் நேயர்களோடு தொடர்பு இப்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சி தான்..

என்னுடைய குரலை என்னுடைய வெளி நாட்டில் வாழும் உறவினர்களும் நண்பர்களும் கேட்பார்கள் என்ற மகிழ்ச்சியும் உள்ளது..  


சர்வதேசத்தில் எங்கள் நிகழ்ச்சிகளுக்கு தனி அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்..எனது வெற்றி குழுவினரின் தேடலும் கடும் முயற்சியும் நிச்சயமாக வெளிநாட்டு அன்பர்தளுக்கும் பிடிக்கும்..  


எம் நாட்டில் இருக்கின்ற பலமும்,அனுபவமும் வாய்ந்த வானொலிகளுடன் போட்டி போட்டு தனியான இடம் பிடிக்க முடிந்திருக்கிறது என்றால் இதுவும் எம்மால் முடியுமே.. அது மட்டுமன்றி எங்கள் செய்திகள் பக்கம் சாராமலும் பெரிதாக பயப்படாமலும் இருப்பது எமக்கு கூடுதல் பலம் என்றே நம்புகிறேன்..


Post a Comment

6Comments

Please Select Embedded Mode To show the Comment System.*