ICC AWARDS 2008 விருதுகள் யாருக்கு?

ARV Loshan
3
இன்று இரவு துபாயில் நடைபெறவுள்ள விருதுகள் வழங்கும் விழாவில் யார் யாருக்கு என்னென்ன விருதுகள் கிடைக்கும் என்று என் பார்வை....
August 9, 2007 - August 12, 2008 வரையான காலப் பகுதியிலே ஒவ்வொரு வீரர்களும் காட்டிய திறமையின் அடிப்படையிலேயே இந்த விருதுகள் வழங்கப் பட இருக்கின்றன. ஏராளமான வீரர்களின் பெயர்கள் முதலில் பரிந்துரைக்கப்பட்டு அதன் பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறும்பட்டியல் (short list) அறிவிக்கப் பட்டது.

Nominations for the LG ICC Awards 2008

Cricketer of the Year: Shivnarine Chanderpaul, Dale Steyn, Mahela Jayawardene, Graeme Smith

Test Player of the Year: Shivnarine Chanderpaul, Dale Steyn, Mahela Jayawardene, Jacques Kallis

ODI Player of the Year: Nathan Bracken, Mahendra Singh Dhoni, Sachin Tendulkar, Mohammad Yousuf

Emerging Player of the Year: Stuart Broad, Ajantha Mendis, Ishant Sharma, Morne Morkel

Associate Player of the Year: Ryan ten Doeschate, Alex Obanda, Niall O'Brien, Thomas Odoyo

Twenty20 International Performance of the Year: Chris Gayle, Mahendra Singh Dhoni, Brett Lee, Yuvraj Singh

Women's Player of the Year: Lisa Sthalekar, Charlotte Edwards, Claire Taylor, Nicola Browne

Spirit of Cricket: Bangladesh, Sri Lanka, New Zealand, West Indies

Umpire of the Year: Simon Taufel, Mark Benson, Aleem Dar, Steve Davis, Rudi Koertzen


இந்தக் குறும் பட்டியலில் இருந்து யார் யாருக்கு விருதுகள் கிடைக்கும் என்பது பற்றி என் பார்வை.. சிறந்த நடுவர்.. (நிச்சயமாக ஒரு இந்தியருக்கோ இலங்கையருக்கோ கிடைக்கவே மாட்டாது ஹீ ஹீ ) முறை வென்றாலும் இம்முறை அலீம் டாருக்கு வழங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.. காரணம் அறிவிக்கப் பட்டிருப்போரில் இவர் தான் குறைந்தளவு தவறுகளைத் தான் வழங்கிய தீர்ப்புகளில் செய்திருக்கிறார் என்று போட்டிகளை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களுக்குத் தெரியும். இரு முறை சிறந்த நடுவராகத் தெரிவு செய்யப்பட்ட சைமன் தௌபில் கூட இந்தக் குறித்த ஆண்டு காலப் பகுதியில் ஏராளமான சிறு சிறு தவறுகளை விட்டிருந்தார். இன்றும் தௌபில் சிறந்த நடுவராகத் தெரிவானால் அவருக்கு இது தொடர்ச்சியான ஐந்தாவது ஆண்டு விருதாக இருக்கும்.(ஏம்பா வேற நல்ல நடுவர்களே இந்த உலகத்தில இல்லையா?ஆனா மனுஷன் பொதுவா நல்ல தீர்ப்புகளா தான் கொடுத்துகிட்டிருக்கு ) சிறந்த நடுவரைத் தெரிவு செய்வதற்காக சர்வதேச கிரிக்கெட் அணியின் தலைவர்களும் போட்டித் தீர்ப்பாளர்களும் வாக்களிப்பர். (மவனே இவ்வளவு நாளும் செய்த வேலைகளுக்கு பழி வாங்குகிரோம்னு தலைவர்கள் பார்த்திட்டு இருப்பாங்க)

இந்த விருது குறித்த ஆண்டு காலப் பகுதியில் ஒரு அணியானது கிரிக்கெட் சம்பந்தமாகக் காட்டிய ஒழுக்க நடைமுறைகள், விதியின் படி ஒழுகியது, கிரிக்கெட்டில் சர்ச்சைகள் இல்லாமல் விளையாடியது, பெற்ற முன்னேற்றம் என்ற அடிப்படைகளில் வழங்கப்படும். (இந்த நல்ல குணங்கள் எல்லாம் பெருமளவில் குவிந்து காணப்பட்டதனால் தான் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இந்தக் குறும் பட்டியலில் இல்லை ) இந்தக் குறிப்பிட்ட காலப் பகுதியில் மேற்கண்ட அளவுகோல்களை வைத்துப் பார்த்தால் இலங்கை அணிக்கு இவ் விருதைக் கொடுக்கலாம் என்று கருதுகிறேன். கடந்த ஆண்டிலும் இவ் விருதை இலங்கை அணியே வென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த விருதினை வாக்களித்து தெரிவு செய்வது கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள், உயரிய குழுவின் நடுவர்கள், போட்டி தீர்ப்பாளர்கள் ஆகியோரே.

பெண்கள் கிரிக்கெட் பக்கம் பெரிதாக எட்டிப் பார்க்காதவன் நான்.. (அது சரி டென்னிஸ் மாதிரியா டிரஸ் போட்டு விளையாடுறாங்கன்னு யாரோ கேக்கிறது விளங்குது ) எனவே எனக்குத் தெரிந்த அளவில் லிசா ச்தலேகர் என்ற ஆஸ்திரேலியா அணியின் உப தலைவிக்கு கிடைக்கலாம் என்று நம்புகிறேன்.(இவர் பிறந்தது இந்தியாவில் ) பெண்களில் யார சிறந்த வீராங்கனை எனத் தெரிவு செய்யும் பொறுப்பை ௧௬ பேர் அடங்கிய ( பெண்கள் கிரிக்கெட்டில் நிபுணத்துவம் வாய்ந்த ) குழுவிடம் ICC கொடுத்திருக்கிறது.

யுவராஜ் உலகக் கிண்ணப் போட்டியில் Stuart Broadடை அடுத்தடுத்து ஆறு சிக்ஸர்களாக அடி பின்னியதன் மூலம் முதல் தடவையாக வழங்கப்பட இருக்கின்ற விருதை தனதாக்கிக் கொள்வார் என்று நம்புகிறேன். (மற்றவங்களை எல்லாம் சும்மா பெயருக்காகப் போட்டிருப்பாங்களோ?) கெய்ல் பெற்ற முதலாவது சர்வதேச T 20 சதம் விருதுக்குரியது என்று நான் நம்பவில்லை.

டெஸ்ட் அந்தஸ்து பெறாத அணிகளின் வீரர்களுக்குரிய சிறந்த வீரராக இம்முறையும் தோமஸ் ஒடோயோ (கென்யா) , டென் டோச்செட் (நெதர்லாந்து) ஆகியோருக்கிடையில் கடும்போட்டி நிலவும் என்று நான் கருதுகிறேன். இருவருமே தங்கள் தங்கள் அணிக்காக பல சிறப்பான பெறுபேறுகளைக் காட்டி இருக்கின்றனர். (அயர்லாந்து அணியின் வீரர் குசாக்கையும் இதில் சேர்த்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்)

சிறந்த வளர்ந்து வரும் வீருக்குரிய விருதுக்கு இம்முறை நிச்சயம் கடும் போட்டி இருக்கிறது. தென் ஆபிரிக்கரான மொர்கேல்லை விட்டு விடுவோம்.மற்ற மூவரோடும் ஒப்பிடும் பொது இவர் பெரிதாக எதுவும் செய்யவில்லை. இங்கிலாந்தின் பிரோட் தன்னை சகலதுறை வீரராகவே சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். அண்மைக் காலமாக நிரந்தர இடம்பிடித்துக்கொண்ட இவர் பல வெற்றிகளுக்கும் வழி கோலிஇருக்கிறார். இஷாந்த் ஷர்மாவும் ஒரு புது உத்வேகத்தை இந்திய அணிக்கு வழங்கியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் அவர் காட்டிய திறமைகளும், தொடர்ந்து இலங்கைக்கு எதிராகவும் காட்டிய சிறப்பான பெறுபேறுகளும் முக்கியமானவை. எனினும் என்னைப் பொறுத்தவரை விளையாட ஆரம்பித்த ஒரு சில மாதங்களிலேயே பரபரப்பையும் ,தனித்து நின்று இலங்கை அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய ஆளுமையையையும் காட்டி இந்திய அணியின் ஜாம்பவான்களையும் கதிகலங்க வைத்த அஜந்த மென்டிசுக்கே என்னுடைய வாக்கு.. (வேணும்னா சச்சின்,டிராவிட்,கங்குலி,லக்ஸ்மன் இடம் கேளுங்க )

சிறந்த ஒரு நாள் சர்வதேச வீரராக இந்தியாவின் ஒரு நாள் சர்வதேசத் தலைவரான தோனியே தெரிவாவார் என நான் நினைக்கிறேன். பிராக்கென் ஆஸ்திரேலியே அணிக்காக சிறப்பாக பந்து வீசி இருந்தாலும் கூட, அணித் தலைவராகவும் சிறப்பாகப் பனி புரிந்திருக்கும் டோனி மிகப் பொருத்தமானவர் என்பது எனது கருத்து.. (அது சரி சச்சின் எப்பிடி இங்கே வந்தாருங்கன்னா? ஓ .... அவர் அண்மைக்காலமாக விளையாடாவிட்டாலும் கூட டோனி,யுவராஜுக்குப் பிறகு இந்தக் குறிப்பிட்ட காலத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர் அவர் தான்..
Overall figures
MS Dhoni443981491109*48.09182381.78111010720investigate this query
Yuvraj Singh42413135312135.60156186.6719312135investigate this query
SR Tendulkar292911310117*46.78156083.9711021755investigate this query
G Gambhir36365130011341.93154584.143811357
)```````````````````````````````````````````

சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்றாலும் தோல்விகளையே சந்தித்துக் கொண்டிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஓட்ட இயந்திரம் சந்தர்போளுக்கு விருது வழங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன். ஆனாலும் இந்தக் கால கட்டத்தில் மகேலவும் சிறப்பாகவே விளையாடி இருந்திருக்கிறார். (கிடைத்த டெஸ்ட் வாய்ப்புக்கள் குறைவே) தென் ஆப்பிரிக்காவின் வேகப்புயல் ஸ்டைனும் தன் அணிக்காக மிகச் சிறப்பாகவே பந்து வீசி உள்ளார். (ஆனா பாவம்பா சந்தர்போளுக்கு குடுப்பமே.. முன்னை நாள் கிரிக்கட்டின் அசகாய சூரர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்)


இறுதியாக இந்த வருடத்தின் சிறந்த வீரராக மகேள தெரிவு செய்யப் படவேண்டும் என நான் விரும்புகிறேன். காரணம் ஆளுமை, நாகரிகம்,பண்பு,திறமை என்று எல்லாமே இணைந்த ஒரு தலைவராக இவ்வாண்டு பிரகாசித்த ஒருவர் இவர். ஓட்டங்களையும் சிறப்பாகக் குவித்திருக்கிறார்.மற்றயவர்கள் யாருமே தொடர்ந்து இந்த ஆண்டு பிரகாசித்தவர்கள் என்று சொல்ல முடியாது.

கடைசியாக நான் குறிப்பிட்ட ஆறு விருதுகளுக்குரியவர்களையும்குறும் பட்டியலிட்டவர்கள் முன்னாள் பிரபலங்கள்.. மேற்கிந்திய அணியின் முன்னால் தலைவர் கிளைவ் லோயிட்,ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைவர் கிரேக் சப்பேல் ,தென் ஆபிரிக்க முன்னாள் சகலதுறை நட்சத்திரம் ஷோன் பொலொக், முன்னால் இலங்கை நட்சத்திரம் சித்தத் வெட்டிமுனி,மற்றும் வங்கதேசத்தின் முன்னைய துடுப்பாட்ட வீரரான அதர் அலி கான் ஆகியோரே அவர்கள். இவர்களே இந்த ஆண்டின் சிறந்த நட்சத்திரங்களை உள்ளடக்கிய சர்வதேச டெஸ்ட், ஒருநாள் அணிகளையும் தெரிந்தெடுக்கப் போகிறார்கள். இந்த அணியில் இடம் பெறுவதே விருது கிடைப்பது போல ஒரு உயர் கௌரவம்.
எனினும் இறுதி விருதுக்குரியவர்களை தெரிவு செய்யப் போவது 25 பேர் அடங்கிய ஒரு உயர் குழு. இந்த 25 பேருக்குள்ளே முன்னாள் பிரபல வீரர்கள்,ஊடகத் துறையில் நன்மதிப்புப் பெற்ற ஊடகவியலாளர்கள்,உயர் குழுவிலிருந்து (ELITE PANEL) ஒரு நடுவர் மற்றும் ஒரு போட்டி தீர்ப்பாளர் ஆகியோர் அடங்கியிருப்பர்.

கடந்த ஆண்டின் வெற்றியாளர்கள்

Cricketer of the Year: Ricky Ponting - Australia

Test Player of the Year: Mohammad Yousuf - Pakistan

Emerging Player of the Year: Shaun Tait - Australia

Captain of the Year: Ricky Ponting - Australia

One-day Player of the Year: Matthew Hayden - Australia

Women’s Cricketer of the Year: Jhulan Goswami - India

Umpire of the Year: Simon Taufel - Australia

Spirit of Cricket Award: Sri Lanka










Post a Comment

3Comments

Please Select Embedded Mode To show the Comment System.*