எங்கள் அலுவலகத்தில் ஏற்பட்ட ஒரு மின்தடை/கோளாறுகள் இதற்கான காரணம்! ஆனால் எங்கே அந்தக் கோளாறு அதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் நம் பொறியியலாளர்கள் தவித்தார்களே அதை விட கொடுமையான நகைச்சுவை எங்கேயுமே பார்க்க முடியாது!
காலையில் அலுவலகம் வந்தபோது எல்லா இடங்களிலும் வயர்களும்,toolsம் இறைந்து கிடந்தன. செய்வதறியாது பதற்றத்தோடும், பரபரப்போடும் பொறியியலாளர்கள் , விடிகாலை வந்தும் சஹர் விசேட நிகழ்ச்சி செய்யாமல் சலிப்போடு ஹிஷாம், 6.30 செய்தி ஒலிக்குமோ என்ற சந்தேகத்தோடு செய்தி – பாரதி! இணையத்தளப் பாவனை இல்லாத ஏக்கத்தோடு பலர் ! (நானும் தான் .. என் வலைப்பூவுக்கு வருகை எத்தனை என்று பார்க்கமுடியாதே, விளையாட்டு,புதிய விஷயங்கள் எங்கே எடுப்பது என்ற எரிச்சல் வேறு)
முதல்நாளும் 6 தடவைகள் ஒலிபரப்பு இடையிடையே தடுமாறிய கோபத்தில் இருந்த எனக்கு நேற்றோடு வெறுத்துப்போனது. மென்பொருள் பிரச்சினை கணினிக்கு ஒய்வு வேண்டும் என்று இத்துப்போன பல்வேறு காரணங்கள!
இந்த எல்லா ரோதனைகளோடு ஆரம்பித்த நாள், என் நீண்டகால நண்பனின் திருமணத்திற்கு சென்று ஐந்து நட்சத்திர விடுதியில் நடந்த திருமணத்தில் நின்று கொண்டே சாப்பிடும் நிலைக்கும் - பின் கை கழுவ நீர் தேடி அலையும் நிலைக்கு மாற்றியது!
அதனினும் நுவரஎலிய சென்று வந்தபின் தொற்றிக் கொண்ட தடிமன் நேற்று முழுவதும் போட்டு வாட்டியது வேறு கொடுமை!
எல்லா ரோதனைகளும் சேர்ந்து நேற்று இரவு எழுதிய சாப வரிகளே இவை!
நாசமாப் போங்க..... 25.09.2008
விடியல் காலையிலேயே 3மணிக்கு ஒலிபரப்புத் தடையேற்படுத்தி 3மணித்தியாலமாய்
வயர் தேடி – பவர் தேடி பாழாய்ப் போன சாபங்களை எனக்கும் என் குழுவினருக்கும்
வாங்கித்தந்த MCR பொறியியலாளர்கள் - நாசமாப் போங்க..
மனசுக்கு பிடித்த நல்ல பாடல்களைத் தெரிவு செய்தும் நாளைச் சலிக்க செய்தவர்கள் நாசமாப் போகட்டும்!
A/C இல்லாமல் அவியச் செய்து கம்பியூட்டர், இணையத்தளம் செயலற்றுப் போகச் செய்த
கையாலாதவர்கள் நாசமாப் போகட்டும்!
வெற்றி கேட்கவில்லை என என் விடிகாலைத் தூக்கம் கலைத்த நலன்விரும்பிகளே,நண்பர்களே
நாசமாப் போங்க.. (கோவிக்காதீங்க)
தொலைபேசி,SMSஇல் துக்கம் விசாரித்து சூரியன் போலே வெற்றிக்கு தடையா என்று
கேள்வி கேட்டுக் குடைந்த நேயர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் நாம் விழிக்கக் காரணமாக
இருந்த MCR மடையர்களே நாசமாப் போங்க!
தூக்கம் தொலைத்த கவலையுடன் இரு நாட்களில் நிகழ்ச்சிகளை நிம்மதியாகச் செய்யவிடாது
கொத்திக் குதறிய மென்பொருளோ கணனியோ அதனைத் தயாரித்தவர்களே நாசமாப் போங்க..
இணைய இணைப்பின்றி செயலிழந்த நிலையிலும் மொழிபெயர்ப்பு வேலை தந்த மெயில்
கிடைத்ததா எனத் துளைத்தெடுத்த AD AGENCY பெண்ணே நாசமாகப் போ!
மூக்கை அரித்து முழுநாளும் வேதனை தந்த தடிமன் முதலில் வந்த
மூக்குடையவனே நாசமாகப் போ!
தூக்கக் கலக்கமும் சேர்ந்து வண்டி ஒட்டும் போது அழைப்பெடுத்துத்
தொடராகத் தொல்லை தந்த HSBC CREDIT CARD விற்கும் யமகிங்கரா நாசமாப்போ!
எங்களை உன் திருமணத்தக்கு அழைத்து ஐந்து நட்சத்திர விடுதியில்
பார்க்கிங் கிடைக்காமல் 50ருபாய்க்கு வீதியில் வாகனம் நிறுத்தச் செய்தவனே நீயும் தான்...
200 பேருக்கு மண்டபம் ஒதுக்கி 400பேருக்கு அழைப்புக் கொடுத்து எம்மை
நின்று கொண்டே சாப்பிடச் செய்தவனே நாசமாப் போ!
கைகழுவ FINGER BOWL கேட்டபோது தவிக்கவிட்டவனே (WAITER)
நீயும் தான் நாசமாப் போ!