September 25, 2008

கருணாநிதி மூஞ்சியில் கரி...

இந்த மினிக் கருத்துக் கணிப்பில் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்!

கருத்துக் கணிப்பின் முடிவைப் பொறுத்தவரை தமிழர் தேசிய இயக்கத்தலைவர் நெடுமாறன் தான் எந்தவித ஆதாயமும் நாடாமல் இலங்கைத் தமிழர் மேல் உண்மையான அக்கறை கொண்டவர் எனப் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.மிகப் பெரும்பான்மையானோர் என்று சொல்வதே பொருத்தம் -- 75 சதவீதமானோர் ) அவர்தான் மிக நீண்ட காலமாக தேர்தல் ஆதாயங்கள்,அரசியல் ஆதாயங்கள் எதுவுமின்றிஇ பலதடவைகள் சிறைசென்றும் , பொடாவுக்கும் தடாவுக்கும் பயப்படாமல் நெடும் போராட்டம் நடாத்தி வருகிறார்.
                                                                    பழ.நெடுமாறன்
12 சதவீதமானோர் இவர்கள் யாருமே உண்மையாக இலங்கைத் தமிழர் மேல் அக்கறை கொண்டவர்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். ஓருவிதத்தில் தமிழக அரசியல்வாதிகள் மீது கொண்ட அதிருப்தியே இதற்கான காரணம் என நம்புகிறேன்.

தமிழக அரசியல்வாதிகள் மனசுத்தியோடு நினைத்திருந்தால் எப்போதோ இலங்கைத்தமிழரின் பிரச்சனைக்கு சுமுகதீர்வு (எம் ஜீ ஆர் உயிரோடிருந்தால் இன்று தமிழீழம் மலர்ந்திருக்கும் என நம்புவோர் நம்மில் ஏராளம்) கண்டிருக்கலாம் என்பது உண்மையே.

அடுத்த இடம் தமிழகப் புலி என்றே அழைக்கப்படும் (பல தமிழக இதழ்களால் அழுகை மன்னன் என்று கேலி செய்யப்படும்) மதிமுக தலைவர் வைகோவுக்கு. நீண்டகால விடுதலைப்புலிகளின் அனுதாபி; இலங்கைத் தமிழர் மீது உண்மைப் பற்றுக் கொண்டவர் ; தமிழீழத்துக்கு ஆதரவாய் பேசி பொடா தடைச்சிறையிலடைக்கப்பட்டவர் என்று ஈழத்தமிழர்கள் இவர் மேல் நல்லெண்ணம் கொண்டிருந்தாலும்இ அடிக்கடி கூட்டணி மாறுவதும்; அரசியல் ஸ்டன்ட் அடிக்கிறாரோ என்று இவர் மேல் சந்தேகம் இருப்பதனாலுமே 3ம் இடத்திலுள்ளார்.

தமிழீழக் கோரிக்கைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் ஆதரவானவர்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ,விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாளவன் மற்றும் தேசிய முற்பேர்க்கு திராவிடர் கழக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் ஆகியோர்.

தொடர்ச்சியாக ஈழத்தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருபவர்கள்; தீவிர விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர் எனக் கருதப்படும் ஜெயலலிதாவுடன் இருந்தபோதும் கூடத் தம் கொள்கையில் மாறாது நின்றார்கள் ராமதாஸூம் திருமாளவனும்.

விஜயகாந்த் நடிகராக இருநதபோதே (அரசியல் ஆசைகள் துளிர்விடாதபோது என்று நம்புவோமாக) நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈழத்தமிழருக்கு உதவிகள் புரிந்தவர், தன்மகனுக்கு விஜயபிரபாகரன் என்று பெயரிட்டவர். இப்போது வடிவேலுடன் மோதிக் கொண்டிருந்தாலும் தமிழக வலைப்பதிவாளருக்கும் இதழ்களுக்கும் மெல்லும் அவலானாலும் , ஈழத்தமிழரிடமும் இவருக்குக் கணிசமான ஆதரவுண்டு.

தமிழக முதல்வர் கலைஞர் மு கருணாநிதி -
உலக வாழ் தமிழரின் தனிப்பெருந்தலைவர் என அழைக்கப்படுபவர்; ஈழத்தமிழருக்காகத் தானும் கவலைப்படுவதாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சொல்லி வருபவர்;;; 1988இல் இந்திய அமைதி காக்கும் படை (அது புரிந்ததென்னவோ அட்டூழியம் தான்) இந்தியா திரும்பியபோது தமிழ்மக்களுக்குப் புரிந்த அநீதிகளுக்காக தமிழக முதலமைச்சராக இருந்தபோதும் வரவேற்கச் செல்லாதவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர் (எதிராகச் செயற்படவில்லை) என்று காரணம் காட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டவர்; தமிழ்ச்செல்வன் மறைந்த போது அஞ்சலிக்கவிதை எழுதி (கவிதை எழுதுவதே அவரது பிரதான தொழில் என வலையுலக வட்டாரங்கள் கூறுகின்றன)பரபரப்பு ஏற்படுத்தியவர்.

எனினும் மத்திய அமைச்சுக்களை கேட்டு வாங்கும் அதிகாரம், காங்கிரசின் தமிழகத் தலைமையை மாற்றும் அதிகாரங்கள் உடைய அவருக்கு இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசைத் தூண்ட முடியாதா என்ற கேள்வி நான் உட்பட்ட அனைவருக்குமே உண்டு! (கருணாநிதியின் தி.மு.க வின் ஆதரவு விலக்கப்பட்டால் மன்மோகன் சிங்கின் ஆட்சி கவிழும் என்பதும் அனைவருக்கும் தெரியும்)


இலங்கைத் தமிழர் மீது உண்மையான அக்கறையும் அன்பும் கொண்டிருப்பவர் யார்?

பழ.நெடுமாறன்
  232 (75%)
 
கலைஞர்.மு.கருணாநிதி
  3 (0%)
டாக்டர்.ராமதாஸ்
  7 (2%)
 
வைகோ
  15 (4%)
 
தொல்.திருமாவளவன்
  7 (2%)
 
விஜயகாந்த்
  4 (1%)
 
இவர்கள் யாருமே இல்லை
  39 (12%)
 

Votes so far: 307 
Poll closed 

எனினும் நேற்று காலை வெற்றி எப்.எம்மில் விடியல் நிகழ்ச்சியில் இதே கருத்துக்கணிப்பை எமது நேயர்களுக்கு வழங்கியபோது கிட்டத்தட்ட இதே மாதிரியான முடிவுகளே கிடைத்திருந்தன. நெடுமாறன் ஐயா என்று அன்போடு அழைத்து அவருக்கு பெரும்பான்மையானோர் தமது வாக்கை அளித்தனர்.எனினும் தொல்.திருமாவளவன் மூன்றாமிடத்தையும் விஜயகாந்த் நான்காமிடத்தையும் பெற்றிருப்பது அவர்கள் கொண்டிருக்கும் செல்வாக்கையும் முன்பு இலங்கைத் தமிழர் மத்தியில் விருப்பத்துக்குரியவராக இருந்த வை.கோ இப்போது செல்வாக்கு இழந்து வருவதையும் காட்டுகிறது.இன்னுமொரு குறிப்பிடத்தக்க விஷயம் காலஞ்சென்ற எம்.ஜீ.ஆருக்கு இன்னும் இருக்கும் மதிப்பு. அவர் உயிருடன் இருக்கும்போது ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு அளித்த ஆதரவை மக்கள் மறக்கவில்லை.வெற்றியின் விடியலில் நேயர்கள் தந்த முடிவு

பழ.நெடுமாறன்
48
யாருமில்லை
41
தொல்.திருமாவளவன்
25
விஜயகாந்த்
20
வை.கோ
15
MGR
14
விஜய.T.ராஜேந்தர்
12
மருத்துவர் ராமதாஸ்
9
கருணாநிதி
2

தவிர திராவிடர் தழகத் தலைவர் கி.வீரமணி, இயக்குநர் சீமான், சுப.வீரபாண்டியன் போன்றோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டன.

இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை இந்தப் பட்டியலில் சேர்த்ததே தவறு என்று வலைப்பதிவிலும் வானொலியிலும் பல பேர் என்னுடன் சண்டைக்கே வந்துவிட்டார்கள். அவர்களில் ஒருவர் எனக்கு அனுப்பிய மடல் கீழே.


  அன்புள்ள லோசன் அண்ணாவுக்கு,

உங்கள் கருத்துக்களை தாங்கி வருகின்ற இன்னொரு வடிவத்தினை தந்ததற்கு நன்றி. உங்கள் வலைப்பூக்களை முகர்ந்து கொண்டிருக்கின்றேன். நீங்கள் ஒரு ஒலிபரப்புத்துறையைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் - அதுவும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையிலும், ஊடக சுதந்திரத்தின் அடிப்படையிலும் எங்கும் பேசப்படுகின்ற இறைமையுள்ள இலங்கைத் திருநாட்டில் ஏதோவொரு வகையில், ஊடகங்களுடன் பிண்ணிப்பிணைந்து விட்ட உங்களிடமிருந்து இச்சமூகம் நிறைய எதிர்பார்க்கின்றது. நிறைவேற்றுவீர்களென நம்புகின்றேன்.

உங்கள் வலைப்பூவில் சில நாட்களாக நான் கண்ணுற்ற ஒரு விடயத்தை முன்னிட்டு என்னுடைய கருத்துக்களை இங்கு தெரியப்படுத்துகின்றேன். (இதனைத் தெரியப்படுத்தி பின்னூட்டமிட அங்கு பொருத்தமான தலைப்பு இல்லாததினால்). அது வேறொன்றுமல்ல. நீங்கள் உங்கள் வாசகர்களிடமிருந்து பெறுகின்ற ஒருவித கருத்துக்கணிப்பு "இலங்கைத் தமிழர் மீது உண்மையான அக்கறையும் அன்பும் கொண்டிருப்பவர் யார்?" என்பது தான்.

அண்ணா... கோழி ஒரு பறவையினம் தான். அதற்காக அதனை பருந்துடன் ஒப்பிட்டு பறக்க முடியுமா எனக் கேட்பது எவ்வளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள் தனம் அங்கு மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியை பட்டியலிட்டு இருப்பது. 

கருணாநிதியை பட்டியலிட உங்கள் முன் இப்போது இருக்கின்ற காரணங்கள் எவையென அறிய ஆவலாயுள்ளேன்...

நினைத்தால் எவ்வளவோ நடத்தி முடிக்கலாம் எனும் நிலையிருக்கின்ற போதும் - தனது உயிர், மூச்சு, பேச்சு என எந்தத்தமிழை அடுக்கு மொழி பேசி உணர்ச்சி நரம்புகளை சுண்டிவிட்டாரோ, அந்தத்தமிழை 'உண்மையாகச்' சுவாசிப்பவர்கள் அந்தக் காரணத்துக்காக கொன்றொழிக்கப்படும் போது, ஏதோவொரு வகையில் இந்தக் கொலைக்கும் உடந்தையாக இருப்பவர்தான் கலைஞர் என்பது நீங்கள் அறியாததா? 

சொந்த மக்களை - தன்னை பதவிக்கதிரையில் அமர்த்தியதற்காக அவர்களுக்கு இலவச தொலைக்காட்சி வழங்கி உபசரித்த மக்களின் உயிர்களையே காக்க வக்கற்று கடிதப்பிச்சை நடத்தும் கருணாநிதி அவர்கள் எப்படி ஈழத்தமிழர்களின் மேல் கரிசனை கொள்ளப்போகின்றார்?

இதனை வாசிக்கும் போது உங்களின் நெஞ்சத்தின் எங்கோ ஓர் மூலையில் ஒரு வருடல்... அது ராஜீவ் கந்தியை ஞாபகம் செய்து, 'நாங்கள் எல்லாம் திறமா?' எனக்கேட்டு விட்டுச் செல்கின்றதல்லவா? நிச்சயமாக... இல்லையென்று சொல்லவில்லை. நடந்திருக்கலாம்! இலங்கைக்கு வந்த இந்தியப்படைகள் இந்தியா திரும்பிய போது, "தமிழ்ப் பெண்களின் கற்புக்களை சூறையாடியவர்களை வரவேற்கமாட்டேன்" என வரவேற்க மறுத்தவர் கலைஞர் என எங்கோ வாசித்த ஞாபகம். அப்படியாயின், அதற்கு எழுதிய தீர்ப்பை ஏனோ ஏற்க மறுக்கிறார்? அதை விட்டுவிடுங்கள். ஜீவனோபாயம் தேடி கடலேறும் சொந்த மக்களை பிணமாக கரைக்கு அனுப்பி வைப்பவனின் பாசறையில் பயிற்சி வழங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு முண்டுகொண்டிருப்பதும்... ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு கொலைக்காக இதுவரை காலமும் சிறைவாசம் கொண்டுள்ள நளினியை விடுதலை செய்ய வேண்டாம் என மனுத்தாக்கல் செய்ததும் இந்தக் கலைஞரின் அரசுதான்...

ஈழத்தில் - யாழ்ப்பாணத்திற்கான அனைத்து பாதைகளும் மூடப்பட்ட நிலயில், தவிக்கும் உறவுகளுக்காக உணவும், மருந்துப் பொருட்களூம் சேகரித்து அனுப்ப தயாரான நெடுமாறன் ஐயா அவர்களுக்கு எதிராக முட்டுக்கட்டைபோட்டு அவரை சிறைக்குள் தள்ளியது ஜெயலலிதாவல்ல... இந்தக் கருணநிதி அவர்கள்தான்... 

அகவை அதிகமானால் 'அறளை' அதிகமாகும் என்கின்றார்கள்... அதனை உலகத்தமிழர்களின் தலைவன்(?) மேல் காண்கின்ற துர்ப்பாக்கியம்... அவருக்கு இப்போதைய சிந்தனையெல்லாம் குடும்ப அரசியல்... தி.மு.க.வின் எதிர்காலம்... இவைகளேயன்றி வேறெதுவுமல்ல...

நீங்கள் இங்கு வரிசைப்படுத்தியுள்ள பெயர்களில் அரசியல் கற்றுக்குட்டி விஜயகாந்த் அவர்கள் எவ்வளவு பொருத்தமானவர் எனக்கேட்டாலும்... விடை சூன்யமாகவே தெரிகிறது.

அண்ணா... இறுதியாக... ஊடகவியலாளர்களின் நெளிவு சுழிவுகளை தெரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கில்லை... அவர்கள் தூண்டில் போட்டு மீன் பிடிப்பவர்கள்... இங்கு கருணாநிதி அவர்களின் பெயரை என்னத்திற்காக இட்டீர்கள் எனும் உண்மை நோக்கம் நான் அறியேன்... ஆனாலும், இன்றைய நிலையில் முற்றிலும் இதற்கு பொருத்தமற்ற ஒருவர் தான் கலைஞர்...வேண்டுமென்றால் இப்படியொரு கருத்துக்கணிப்பு இட்டுப்பாருங்கள்...

உலகத்தமிழனின் உண்மைத்தலைவன் கருணாநிதி
1. ஆம்
2. இல்லை


அன்புடன், 
ஆதிரை


எவ்வளவு தூரம் ஈழத்தமிழரிடம் கருணாநிதி தனது செல்வாக்கினை இழந்துள்ளார் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.
                         
இனியாவது திருந்துவாரா? ஈழத் தமிழ் மக்களுக்காக வருந்துவாரா?

இல்லைத் தொடர்ந்தும் உளியின் ஓசை,கவியரங்கம், வாரிசுகளுக்கு அரசு கட்டிலைக் கொடுப்பது பற்றி மட்டுமே சிந்தித்தவாறு இறக்கும் வரை முடி துறக்காது இருக்கப் போகிறாரா?


34 comments:

மாயா said...

கருத்துக்கணிப்புக்கு நன்றி !!!

அத்திரி said...

நெடுமாறன் முதலிடம் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவரைத்தவிர மற்றவரெல்லாம் ஆதரித்தார்கள் என்றால் அதில் ஏதாவது உள்நோக்கம் இருக்கும். கலைஞரை சேர்த்ததே தவறு. கடைசி கால கட்டத்தில் உள்ள அவருக்கு இதை விட வாரிசுகளுக்கு எப்படி பங்கு பிரிப்பது என்ற கவலை தான் அதிகம். தமிழ்நாட்டு மக்களை பற்றியே கவலைப்படாத அவருக்கு ஈழத்த்மிழர்களைப் பற்றிய ஞாபகம் இருக்குமா? என்பதே சந்தேகம்.

ஜோ/Joe said...

ஒன்ணுமே இல்லாதவன் என்ன வேணும்னாலும் சொல்லலாம் . இதே நெடுமாறன் ,வைகோ முதல்வரா இருந்தாலும் ஒன்றும் பெரிதாக பண்ணி விட முடியாது .வெளிய இருந்து என்ன வேணும்னாலும் உணர்ச்சிகரமா பேசலாம் .

எல்லோருக்கும் தமிழீழ போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது .ஆனால் புலிகள் ராஜதந்திரமின்றி செய்த ராஜீவ் கொலை என்னும் நிகழ்வு அதிகார பூர்வமாக புலிகளுக்கு ஆதரவு தருவதை கட்டிப்போட எதிரிகளுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது.

வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் என்ன இருக்கிறது இழப்பதற்கு .ராஜீவ் காந்தி படுகொலையினால் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் பாதிகப்பட்ட ஒரே இயக்கம் திமுக தான் .

கலைஞர் ஆட்சிக்கு வந்தாலே புலிகளுக்கும் புலி ஆதரவாளர்களுக்கும் குளிர் விட்டு போகும் என்று ஒரு பக்கம் குற்றச்சாட்டு .இன்னொரு பக்கம் கருணாநிதி மூஞ்சியில் கரி பூசி ஆனந்தமடையும் கூட்டம் .

நல்லாயிருக்கு :((

தமிழ் நாடன் said...

இந்திய அரசியலிலேயே கேவல ஓட்டு வங்கி அரசியல் செய்வதில் முதலில் நிற்பவர் கருணாநிதி. தமிழ், தமிழர் போன்ற வார்த்தைகளையும் அவர் ஓட்டு வாங்குதற்கு தவிர வேறு எதற்கும் பயன்படுத்தியதில்லை.எந்த தமிழ்ர் பிரச்சினை ஆனாலும் அதில் தனக்கு வரும் ஆதாயத்தை மட்டுமே பார்ப்பவர் அவர். அவர் உலகத்தமிழர்களின் தலைவர் என்று அவரின் துதி பாடிகள் கூவலாம். ஆனால் உண்மையான எந்த தமிழனும் அதை ஏற்கமாட்டான்.இவர்கள் எல்லாம் மனது வைத்திருந்தால் தமிழீழம் என்றோ மலர்ந்திருக்கும். இது கலைஞருக்கு மட்டுமல்ல அனைத்து தமிழக அரசியல் வேடதாரிகளுக்கும் பொருந்தும்.இவர்கள் எல்லாம் தமிழீழ மக்களுக்காக வடிக்கும் நீலீக்கண்ணீரைக் கண்டால் வயிறு பற்றி எரிகிறது. இரங்கல் கவிதைகள் தமிழனை வாழ வைக்காது. உண்மையான தமிழ் உணர்வும் அதற்கான அர்ப்பணிப்புமே அவனை வாழவைக்கும். இவர்கள் எவரிடமுமே அது இல்லை. இவர்கள் போடும் கூப்பாடுகளை தமிழர்களே நம்பாதீர்கள்.இதில் நான் திரு நெடுமாறனை ஆதரிக்கிறேன்.

Paheerathan said...

ஹ்ம்ம் ரா..ஜ..த..ந்..தி...ர..ம் இல்லாமல் .....ஹா ஹா ஹா ஒரே நகைச்சுவைதான் போங்கள்

பேசாமல் ஏதாவது சஞ்சிகையில் ராஜீவ் காந்தியை திட்டி கவிதை எழுதியிருக்கலாம் புலிகள் ராஜதந்திரமாக

ஆதிரை said...

அன்பின் நண்பர் ஜோ / Joe...

எனது கருத்துக்களை இங்கு இடுவதற்கு முன்னர் உங்களுடைய கருத்துக்கள் சிலவற்றுக்கான விளக்கக்கேள்விகளை உங்கள் முன் வைக்க விளைகின்றேன். பதில் தருவீர்களென உளமார நம்புகின்றேன்.

//ஒன்ணுமே இல்லாதவன் என்ன வேணும்னாலும் சொல்லலாம் . இதே நெடுமாறன் ,வைகோ முதல்வரா இருந்தாலும் ஒன்றும் பெரிதாக பண்ணி விட முடியாது .வெளிய இருந்து என்ன வேணும்னாலும் உணர்ச்சிகரமா பேசலாம்.//

எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்ததை ஏன் மறந்தீர்கள்? ஈழச்சொந்தங்ளை தூக்கி நிறுத்தி நடை பழக்கிவிட்டவர் அவர்தானே! இப்போதைய முதல்வரால் ஏன் முடியாது?

அப்போதைய காலகட்டம் வேறு... இப்போது ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றம் விடுதலைப்புலிகளின் மீது சுமத்தப்பட்ட நிலையில், எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தால் கூட ஈழத்தமிழர் நலன் சார்ந்த விடயங்களில் ஒருவித நழுவல்ப்போக்கையே காட்டுவார் என நீங்கள் வாதம் செய்தால் ஆச்சரியமில்லை. ஆனால், உண்மை என்ன? சொந்த மீனவ மக்கள் குருவிகளைப் போன்று சுட்டுப் பொசுக்கப்படும் போது, அதுவும் அவர்களைச் சுட்ட ஆயுதங்கள் 'Made in India' ஆக இருக்கும்போது முதல்வர் ஆசனத்தில் நெடுமாறன் ஐயாவோ அல்லது வைகோ அவர்களோ இருந்திருப்பின் கடிதப்பிச்சை அரசியல் தான் நடத்துவார்கள் என உங்களால் கூறமுடியுமா?

//புலிகள் ராஜதந்திரமின்றி செய்த ராஜீவ் கொலை என்னும் நிகழ்வு அதிகார பூர்வமாக புலிகளுக்கு ஆதரவு தருவதை கட்டிப்போட எதிரிகளுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது.//

இந்திய அரசு ஈழத்தில் விடுதலைப்புலிகளின் முதுகில் குத்திய சம்பவங்களின் (அரசியல் துறைப்போராளி திலீபனின் ஈகம், தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் போன்றோரின் இழப்பு) தொடர்ச்சியாக, தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அராஜகங்களின் தொடர்ச்சியாக இதை நோக்க சில இராஜதந்திர மூளைகள் பின்னிற்கும் காரணம் என்ன?

விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் படுகொலை செய்யப்பட்டபோது கவிதை இயற்றி கண்ணீரஞ்சலி செலுத்திய முதல்வர் அவர்கள் யாழ்ப்பாண மக்களுக்காக சேகரித்த உணவுப்பொருட்களை அனுப்பி வைக்க தடை ஏற்படுத்தியதன் நோக்கம் என்ன?

//கலைஞர் ஆட்சிக்கு வந்தாலே புலிகளுக்கும் புலி ஆதரவாளர்களுக்கும் குளிர் விட்டு போகும் //

நண்பரே... உலகத்தின் மூலை முடுக்கெங்கும் இருக்கும் புலனாய்வு மூளையெல்லாம் புலிகளைப்பற்றிய தகவல்களைத் தேடிக்கொண்டிருக்க, அவர்களுக்கு குளிர் எடுக்கும் காலம் உங்களுக்குத் தெர்ந்த மர்மம் என்னவோ?

அது இருக்கட்டும். புலிகளை நிறுத்தி தமிழக அரசியலும் கருணாநிதியும் செய்கின்ற குள்ள அரசியல் தங்களுக்குத் தெரியாததல்ல... தமிழக கடற்பரப்பில் மீனவர்கள் கடதப்பட்டதாகவும், பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் அரங்கேறிய நாடகத்தை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்களென நம்புகின்றேன்.


நண்பரே... ஏற்பதற்கு கசப்பாக இருந்தாலும் ஒன்றே ஒன்று மட்டும் உண்மை. அதாவது, தற்போதைய மத்திய அரசிற்கு எவ்விதத்திலும் நெருக்குதல் கொடுக்கக் கூடாது என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார். சொந்த மக்கள் சுடப்பட்டாலும், சொந்த இனம் கேட்பாரின்றி தனித்து நின்று போராடி மடிந்தாலும் தன்னுடைய சுய தேவைகளின் பொருட்டு - வாரிசு அரசியலுக்கு மெருகூட்டும் பொருட்டு காய்களை நகர்த்துகின்றார்.

தமிழக மாநில அரசு இப்படியென்றால் மத்திய அரசு என்ன செய்கின்றது? அது தமிழகத்தமிழர்களை தூசிக்கும் மதிப்பதில்லை எனும் கடினமான உண்மையினை இங்கு பகிரங்கமாக என்னால் கூறமுடியும். தன்னைத் தூக்கி இமாலய உச்சியில் வைக்கும் வல்லமை இருந்தும் ஒரு சிலரின் சொந்த நலன்களுக்காக தமிழகத்தமிழினம் சரிகின்றது.

ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடுவது மிகப் பொருத்தமானது என எண்ணுகின்றேன். இந்தியா சொந்தம் கொண்டாடிய கச்சதீவு பின்னர் எப்படி இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. (1974ம் ஆண்டு தமிழகத்தில் கலைஞர் ஆட்சி நிலவிய போதே இதுவும் நிகழ்ந்தது) ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட இந்தியா சம்பந்தமான தீர்மானம் ஒன்றுக்கு இலங்கையின் வாக்கினைப்பெற்று பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சரிக்கட்டுவதற்காக தமிழகத்தமிழர்களின் கச்சதீவு இலங்கைச் சிங்களப் பெரும்பான்மை அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டது.

இன்று இந்தியாவிற்கு என்ன நடக்கின்றது?

எல்லைக்கோட்டினை சீனா உள்நோக்கி வளைத்து வரைகின்றது... பாகிஸ்தான் பயங்கரவாதத்தை விதைத்து விரைகின்றது... இலங்கை தனது ஆயுத தேவைகளுக்காக இவ்விரு நாடுகளையும் தேடிப்பறக்கின்றது... இம்முத்தரப்புக் கூட்டணி்யின் நடுவிலிருந்து விழி பிதுங்கினால் 'வல்லரசு' எனும் நாமம் இந்தியாவுக்கு எத்தனை நாளுக்கு? எனவே, 1974ம் ஆண்டு தமிழக மீனவர்களின் கச்சதீவை வழங்கியது போன்று, இன்று தமிழக மீனவர்களின் உயிர்களைப் பலி கொடுத்து இலங்கையுடன் உறவு கொள்கிறது இந்தியா.
இதை மறுக்க முடியுமா?
கர்நாடகத்தில் மதக்கலவரம் முளை விட்டுள்ள போது, அம்மாநில அரசு அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லையென நெருக்குதல் வழங்கும் மத்திய அரசினால் தமிழக மீனவர்களின் உயிர்களைக் காப்பாற கிஞ்சித்தும் முடியவில்லை.

இன்னும் ஒன்றைக் கூறிவைக்கலாம் என எண்ணுகின்றேன். இலங்கையில் தமிழீழம் கொடுக்கப்பட்டால் அந்தப் பிரிவினை இந்தியாவுக்கும் பரவிவிடும் என அஞ்சும் இந்தியா தன்னையறியாமலே அதற்கு கால்கோள்விழா நடாத்திக்கொண்டிருப்பது நன்றாகவே தெரிகின்றது.

"போர் புரிந்து எங்களுக்கும் பல நாட்கள் ஆகிறது? சரி என்று சொல்லுங்கள், எங்கள் வீரம் என்னவென்று நாங்கள் காட்டுகிறோம், முனை மழுங்கிய எங்கள் வாட்களை, சரியாகக் கூர் தீட்ட யாரும் கற்றுக் கொடுக்கத் தேவை இல்லை எம் இனத்திற்கு!!!" இது உங்களுடைய வலைப்பதிவின் பின்னூட்டமொன்றிலிருந்து கத்தரித்த பகுதி.

"எதிரிக்கு எதிரி நண்பன்" இந்த சித்தாந்தத்தை தமிழகம் பிரயோகம் செய்தால்... அங்கேயும் நவம்பர் 26இல் ஒருவன் பிறப்பெடுத்தால்.......??? தயவு செய்து அப்போது ஈழத்தமிழர்களை நோக்கி உங்கள் சுட்டுவிரல்களைக் குற்றம் சுமத்தி நீட்டாதீர்கள்... இப்போதே வரலாற்றை எழுதி வையுங்கள்...

கொழுவி said...

அட..போங்கய்யா
ஈழத்தை ஊறுகாய் போல தொட்டுக் கொள்கின்றனர் எல்லோரும்.
சாப்பாடு முடிந்ததும் தள்ளி வைத்து விடுகின்றனர்.

அழுதாலும் தன் பிள்ளையை அவளே பெற வேண்டும். இதுதான் ஈழத்தமிழரின் இன்றைய நிலை.

பெத்தாலும் நாங்கதான். செத்தாலும் நாங்கதான்.

ARV Loshan said...

நான் கருத்துக் கணிப்பை நடத்திவிட்டு, கருத்துக்களை மேம்போக்காக சொல்லிவிட்டு உங்கள் கருத்துகளுக்கு இடம் விட்டுக் காத்திருந்தேன்.. (மனதில் பல எண்ணக் கருத்துக்கள் இருந்த போதும்.. )

எனினும் ஜோ ,ஆதிரையின் சில கருத்துக்களைப் பார்த்த பிறகு சில சொல்லத் தோன்றியது..
தமிழக அரசியல்வாதிகளில் நான் மிகமதிப்பு வைத்திருப்பவர் கலைஞர்.. அவரது தமிழ்ப்புலமை,தமிழ்ப்பற்று (தமிழர் மீதானது அல்ல),அரசியல் சாணக்கியம்,எத்தனை இழப்புக்களையும் தாங்கும் இரும்பு உறுதி ஆகியன தான் காரணங்கள்.

ஆனால் பதவிக்கு வரும் நேரங்களெல்லாம் அவர் தன் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள நடந்துகொள்கிற விதங்கள் எனக்கு வெறுப்பையே தோற்றுவிக்கின்றன.. (ஜெயலலிதா ஒரு சிங்களப் பேரினவாதி போல நடந்து கொள்வது மிகப்பெரிய கொடுமை)
ஆதிரை சொன்னது போலவும்,மேலே நான் குறிப்பிட்டது போலவும் எல்லாவற்றையும் சாதிக்கும் அதிகாரம் இருந்தும்,ஈழ மக்களுக்கும்,தன்னுடைய சொந்த மீனவர்களுக்கும் குரல் கொடுக்கக் கூடத் தயங்குகிறார் ஏன்? மன்மோகன் சிங்கிற்கு எந்த விதத்திலும் சிக்கல் கொடுக்காமல் ஆட்சியை நகர்த்தி விட்டு,தன் மகனுக்கு ஆட்சியை மாற்றிக் கொடுக்கவா?

//விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் படுகொலை செய்யப்பட்டபோது கவிதை இயற்றி கண்ணீரஞ்சலி செலுத்திய முதல்வர் அவர்கள் யாழ்ப்பாண மக்களுக்காக சேகரித்த உணவுப்பொருட்களை அனுப்பி வைக்க தடை ஏற்படுத்தியதன் நோக்கம் என்ன?//

கவிதை மட்டும் எழுதினால் எம்மக்கள் கண்ணீர் துடைபடுமா? புலிகள் மீது தான் தடையும் வெறுப்பும் என்றால்,அப்பாவி மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? ஈழத் தமிழ் மக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியபோதும்,அரசு தடைகள் கொண்டுவந்த போதும் கண்டித்து ஒரு வார்த்தையாவது உதிர்த்தாரா?
கலைஞர் நினைத்திருந்தால் மன்மோகன் அரசிடம் வாதாடி இலங்கை அரசின் மீது எவ்வளவோ அழுத்தங்களைப் பிரயோகித்திருக்கலாம்..

சரி,இப்போது ஜெயலலிதா ஈழத் தமிழருக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவான நிலை எடுத்திருக்கிராராமே..இதன் பிறகு கலைஞரின் நிலை எப்படி என்று பார்போம்.. (ஜெயலலிதாவின் இந்த திடீர் அறிக்கை கூட,தமிழக மக்கள்,ஊடகங்கள்,சக கட்சிகள் கொடுத்த அழுத்தமும் தேர்தல் கால ஸ்டண்ட் என்றுமே நான் கருதுகிறேன் )

களப்பிரர் - jp said...

வன்மையாக கண்டிக்கிறேன். தலைவருக்கு இலங்கை தமிழர் தமிழக தமிழர் என்ற வேறு பாடெல்லாம் கிடையாதுப்பா !!! செத்தவன் மீனவனா இருந்தா என்ன , ஈழவனா இருந்தா என்ன ?? சினிமா காரான இல்லாதவரைக்கும் ஒரு பிரச்சனை இல்ல!!

ஜோ/Joe said...

//அப்போதைய காலகட்டம் வேறு... இப்போது ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றம் விடுதலைப்புலிகளின் மீது சுமத்தப்பட்ட நிலையில், எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தால் கூட ஈழத்தமிழர் நலன் சார்ந்த விடயங்களில் ஒருவித நழுவல்ப்போக்கையே காட்டுவார் என நீங்கள் வாதம் செய்தால் ஆச்சரியமில்லை. //

ஒரு ஆச்சரியமும் இல்லை ..எம்.ஜி.ஆர் நழுவல் போக்கை கடை பிடிப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை .எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தான் விடுதலைப் புலிகள் தன்னை மட்டும் தான் அண்டியிருக்க வேண்டும் என நினைத்தவர் ..திமுக சார்பில் நிதி திரட்டி விடுதலைப் புலிகளுக்கு அளித்த போது அதை வாங்கக்கூடாது என விடுதலைப் புலிகளை தடுத்தவர் எம்.ஜி.ஆர் .

தமிழக நலன்களை விட மத்திய அரசுக்கு ஜால்ரா போடுவதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் யாரும் இதுவரை இருந்ததில்லை .மாநில கட்சிகள் தடை செய்யப்படும் என இந்திரா காலத்தில் பூச்சாண்டி காட்டப்பட்ட போது அலறியடித்துக்கொண்டு அ.தி.மு.க -வை அனைத்திந்திய அ.து.மு.க என பெயர் மாற்றியவர் எம்.ஜி.ஆர்.

அப்போது இந்திராவே புலிகளை ஆதரித்தார் .எனவே இவரும் ஆதரித்தார் .ராஜீவ் மரணத்துக்குப்பின் எம்.ஜி.ஆர் முழு பல்டி அடித்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை .

ஜோ/Joe said...

இப்போ என்னங்க்க .தன்மான சிங்கங்கள் வைக்கோவும் , நெடுமாறனும் சேர்ந்து புரட்சித் தலைவி ஆட்சி கொண்டு வந்த்திடுவாங்க ..அப்புறம் ஈழத்தமிழருக்கு வெளங்கிடும் நல்லா ..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்கள் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள முரண்பாடுகளின் மொத்த உருவமே, தற்போது அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள். எல்லைக்கோடு வைத்திருக்கிறார்கள்

திரு பழ நெடுமாறன் அய்யா(நான் பள்ளி மாணவனாக இருக்கும் பொது, எங்கள் ஊரில் எம் ஈழத்தமிழரைப் பற்றி பேசும் போது உணர்ச்சி வசப்பட்டு மயங்கி விழுந்தார்) மற்றும் திரு வைகோ(தமிழனுக்காக அனைத்துலக சமூகத்திடம் வாதம் செய்யும் உணர்வு ஏன் மற்ற அரசியல் வாதிகளுக்கு வரவில்லை. வைகோ செய்தார், செய்கிறார்) அவர்களின் மீதும் என்றும் மதிப்பு வைத்திருக்கிறோம்.

இது பற்றிய எனது பதிவுகள் உங்கள் பார்வைக்கு.

http://jothibharathi.blogspot.com/2008/08/blog-post.html

http://jothibharathi.blogspot.com/2008/01/blog-post_04.html

http://jothibharathi.blogspot.com/2008/02/blog-post_10.html

http://jothibharathi.blogspot.com/2008/02/blog-post_16.html

http://jothibharathi.blogspot.com/2007/12/blog-post_20.html

Anonymous said...

முத்தமிழ் காவலர் மீது சேறு பூசுவது போல் கருத்தெழுதுறது எந்த விதத்திலும் நல்ல இல்ல, அன்றும் சரி இன்றும் சரி ஈழத்து பிரச்சனையை வைத்து அரசியல் நடத்துவது சாதராண விசயமய்யா. இன்னைக்கு அம்மா உண்ணாவிரதத்துக்கு ஆதரவு காப்டன் ஆதரவு அபடீன்னு செய்தி வருதே இது ஈழத்தமிழர் மீது உள்ள அக்கறையா இல்லே ஓட்டு மேல உள்ள அக்கறயா? இன்னைக்கு கலைஞர் ஆதரிச்சா நாளைக்கு அம்மா அத வச்சு குதியோ குதின்ன குதிப்பா, அம்மா ஆதரிச்சா ஓட்டுக்காக கபடத்தனம் பண்ணுறான்னு கழகம் அறிக்கவிடும், இதெல்லாம் ஒன்னும் புது விசயமில்லயே! ராமர் பாலம், மலேசிய தமிழர் பிரச்சனை, காவிரி பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, இதெல்லாம் அரசியல் விழையாட்டில் துரும்புச் சீட்டுகள், மாத்தி மாத்தி போட வேண்டியது தான்.

Anonymous said...

அகதிகளே இருக்க இடம் கொடுத்தால் வீட்டையே முழுங்கும் ஆட்களான நீங்கள் கலைஞரை தாறுமாறாக பேசுவது ஒன்றும் வியப்பில்லை.

சுரேஷ் ஜீவானந்தம் said...

// எல்லோருக்கும் தமிழீழ போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது .ஆனால் புலிகள் ராஜதந்திரமின்றி செய்த ராஜீவ் கொலை என்னும் நிகழ்வு அதிகார பூர்வமாக புலிகளுக்கு ஆதரவு தருவதை கட்டிப்போட எதிரிகளுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது.//
ஆனால், இலங்கைப் பிரச்சினையில் ஐ.நா. சபை ஓட்டெடுப்பின் மூலம் சுதந்திரம் பற்றிய மக்களின் கருத்தை அறிந்து மக்கள் விரும்பினால் தமிழீழத்தை ஐ.நா. அங்கீகரிக்க வேண்டும் என்று கூறுவதற்கு என்ன வந்தது?
இலங்கைக்கு உதவினால் ஆதரவை விலக்கிக் கொள்ளுவோம் என்று கூறுவதற்கு என்ன வந்தது?
எல்லோரும் சந்தர்ப்ப வாத அரசியல்வாதிகளின் பார்வையினூடாக அவர்கள் பக்கத்து நியாயத்தைக் கூறுகிறீர்களே அன்றி மக்களாகப் பேசமாட்டேன் என்கிறீர்கள் :)

Anonymous said...

முத்துவேல் கருணாநிதி என்ற நடிகரும் அவரது கூட்டமும்...

அண்மைக்காலமாக தமிழ்நாட்டு அரசியலில் பெரியளவிலான மாற்றங்களோ, குழப்பங்களோ இல்லையென்று தவித்து வந்தவர்களுக்கு கிடைத்ததே இலங்கைப் பிரச்சினை எனும் பொம்மை.
வைகோ, ராமதாஸ்,நெடுமாறன், விஜயகாந் போன்றோர் தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக ஆரம்பித்த விளையாட்டு இன்று தமிழக முதலமைச்சரை கூட ஆட்டிப் பார்த்து இருக்கிறது.
அனைத்துக் கட்சி கூட்டங்கள், ராஜினாமா கடிதங்கள், எச்சரிக்கைகள், போராட்டங்கள் என்று தமிழக அரசியல் சூடு பிடித்திருக்கிறது.

இன்று வன்னி மக்கள் உணவில்லாமல் போரின் பிடியில் சிக்கியிருப்பதால் போரை நிறுத்தச்சொல்லி தீர்மானம் போடும் கருணாநிதியி்ன் கருணைக் கண்களுக்கு 2000 ஆம் ஆண்டு புலிகள் யாழ்ப்பாணத்தை நோக்கி தாக்குதல் நடத்திய போது தென்மராட்சி மக்கள் பாதிக்கப்படுகிறார்களே என்பது கண்ணுக்கு தெரியவில்லையா? அந்த மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று புலிகளுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் போட்டாரா?
தலைநகரில் பொதுமக்கள் பேருந்துகளில் குண்டுகள் வெடித்து மக்கள் பாதிக்கப்பட்ட போது அந்த மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று புலிகளுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் போட்டாரா?
இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் மீது அதிகளவான அழுத்தங்களை பிரயோகித்த பொழுது அந்த மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று அரசாங்கத்துக்கு எதிராக கண்டனத் தீர்மானம் போட்டாரா?

விடுதலைப் புலிகள் சிறிது பலத்துடன் இருக்கிறார்கள் என்ற போதெல்லாம் வன்னி மீதான படையெடுப்பை பற்றி வாய் திறக்காமல் இருந்த தமிழக கட்சிகள் தற்போது விடுதலைப் புலிகள் பலமிழந்து நிற்கும் போது படை நடவடிக்கை மக்களைப் பாதிக்கிறது என கூச்சலிடுவது சந்தேகத்தைக் கிளறுகிறதே?

வன்னியில் மக்கள் உணவின்றி, உறையுளின்றி கஷ்ரப் படுகிறார்கள். அது உண்மை, யதார்த்தம்...
ஆனால் அங்குள்ள மக்களை அரசாங்கம் வவுனியாவிற்கு வர அழைத்த பின்னரும் பெருமளவில் மக்கள் வவுனியா வராமல் தடுத்துக் கொண்டு இருப்பவர்கள் யார் என்பதைப் பற்றி தமிழக கட்சிகளோ, கொழும்பு தினசரிகளோ கதைக்காதது ஏன்?
அங்குள்ள மக்கள் எமது உறவுகள்...
அவர்கள பாதிக்கப்படக் கூடாது என்பது எமது பிரார்த்தனை... ஆனால் எங்கள் உறவுகளை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.
எங்கள் உறவுகளின் கண்ணீரில் உங்கள் அரசியல் ஊத்தைகளை கழுவ நினைக்காதீர்...

தேர்தல் ஒன்றிற்காக தமிழக கட்சிகள் நடாத்தும் நாடகங்களை பெரிதாக காட்டி தமது விற்பனையை அதிகரித்துக் கொள்ளப் பார்க்கின்றன தினசரிகள். அண்மையில் விமல் வீரவன்ச கூறியது தான் ஞாபகம் வருகிறது. 'இலங்கை என்பது சுயாதீன நாடு. இலங்கை என்பது இந்தியாவின் ஒரு பகுதியல்ல என்பதை தமிழக அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.'

இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்தை மீறுவதாக அதற்கு கண்டனம் தெரிவிக்கும் கருணாநிதி அவர்களைப் பற்றி பெரிதாக சொல்ல வேண்டியதில்லை.
கருணாநிதி அவர்களின் திரைப்பட வசனங்களை இரசித்த அளவிற்கு அவரது அரசியல் இருக்கவில்லை.
கச்ச தீவை இலங்கைக்கு இந்திய அரசு வழங்கிய போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி அப்போது அதைப் பற்றி ஒன்றும் கதைக்காமல் தமிழகத்தில் அண்மையில் கச்சதீவை வைத்து அரசியல் தொடங்கிய போது கச்ச தீவை இலங்கையிடமிருந்து வாங்க வேண்டும் என கூச்சலிட்டவர் தானே இவர்.
தமிழ்ச்செல்வனுக்காக இரங்கற் பா எழுதிவிட்டு பின்னர் அதற்கு எதிர்ப்புக் கிளம்ப 'தமிழன் என்பதற்காக எழுதினேன்' என்று சப்பைக் கட்டு கட்டியவர் தானே இவர்?

இலங்கையில் தமிழர்கள் யாவரும் மன நிம்மதியுடன் வாழுவதாக நான் கூற வரவில்லை. எங்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை பூசாரியிடம் கொண்டு செல்வதை விட சாமியிடமே நேரடியாக கொண்டு செல்வதே சிறந்தது.
இன்று எங்களுக்கு இருக்கும் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கும், தமிழன் என்றாலே ஏற்படும் சந்தேகப் பார்வைக்கும் யார் காரணம்?

இவற்றிற்கெல்லாம் பதில் கூற கருணாநிதியால் முடியுமா?
தி.மு.க என்றாலே கருணாநிதி குடும்பம் என்றளவுக்கு இவரது மகன்மார்களும், மகளும், சொந்தங்களும் மட்டுமே என்றளவுக்கு குடும்ப அரசியலை வளர்க்கும் இவர் ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்.
தனது மகன் அழகிரி மதுரையில் செய்பவையெல்லாம் இவருக்கு ஜனநாயகமாக தெரிகின்றனவோ?
முதலில் உங்கட வீட்டு குப்பய கூட்டுங்கப்பா... தெருக் குப்பய பற்றி அதுக்கப் பிறகு கவலப் படலாம்.

(நான் அரசாங்க ஆதரவாளனோ அல்லது தமிழ் தெரிந்த சிங்கள இனத்தவரோ அல்ல. நான் அமைதியை விரும்பும் தமிழன்.)

Anonymous said...

லோஷன் அய்யா,

நீங்கள் ஆறு கோடி தமிழர்களின் இனமானத் தலைவரோடு பழ நெடுமாறன் போன்ற வெத்து வேட்டுக்களை ஒப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது.கருணாநிதியை விடுங்க.அவரோட மஞ்ச துண்டை, ராமேஸ்வரத்துல தூக்கிப் போட்டாக் கூட, கட்டுமரம் மாறி மிதக்கும்.அனைத்து தமிழ் ஜீவராசிகளும் நோவாவோட ஆர்க் போல அதில் ஏறி இலங்ககை சென்று ஈழம் என்ன, இலங்கையையே ஒட்டு மொத்தமாக கைப்பற்றி சாதனை செய்ய முடியும்.நெடுமாறனின் நாத்தம் பிடித்த மூஞ்சியும்,துண்டும் கட்டுமரமாக முடியுமா?நெடுமாறனாம்,நெடுமாறன்.அது ஒரு பஞ்ச பட்டினி கேஸ்.காலணாவுக்கு உதவாது.

பாலா

Anonymous said...

கலைஞரை கடவுள் என்று சொல்வோரைப் பார்க்கும் போது சிரிப்புத் தான் வரும்லே..எல்லாம் அரசியலாப் போச்சுப்பா..போங்க போங்க வேலையப் பாருங்க..

மருது

Anonymous said...

கேள்விகள்

1) தன்னையே கொல்ல திட்டமிட்ட பிரபாகரனையும் மன்னித்து, ஈழத்தில் அவனால் கஷ்டப்படும் தமிழ் மக்கள் மீது கூட இலங்கை ராணுவம் கொலைகளை செய்துவிடக்கூடாது என்று இவ்வளவு முயற்சி எடுக்கும் கலைஞர் பாராட்டுக்குரியவர்தானே?

2) கிழக்கிலங்கையில் இலங்கை ராணுவம் வெற்றிகொண்டபோது இவ்வளவு கூப்பாடு போடாத வெளிநாட்டு வாழ் ஈழத்து தமிழர்களும், இந்தியாவில் இவ்வளவு பிரச்னைகளை தூண்டிவிடும் ஈழத்து தமிழர்களும், வடக்கில் ராணுவம் பிரபாகரனையே நெருங்குவதாலேயே இவ்வளவு கூப்பாடு போடுகிறார்கள். ஆகையால், அடிப்படையில் யாழ்ப்பாணத்து மேலாதிக்கத்துக்காகத்தான் கூப்பாடு போடுகிறார்கள் என்று கூறலாமா?

3) சிங்கள பிரேமதாசா கொடுத்த பணத்துக்காக மற்ற இயக்கங்களில் இருந்த தமிழர்களை கொன்றொழித்த பிரபாகரன் துரோகியாகாமல் மற்ற இயக்கங்களில் இருந்தவர்கள் துரோகியானது எப்படி?

4) நேற்றுவரை இந்தியத் தமிழர்களை கடுமையாக திட்டி வந்த ஒரு சில ஈழத்தவர்கள் (எல்லோரும் அல்ல) இன்று இந்தியாவின் ஆதரவு வேண்டி வாய் மூடி நிற்பதன் மர்மம் என்ன? வன்னியில் உண்மையிலேயே நிலைமை மோசம் என்பதாலா?

Anonymous said...

I welcome and endorse Mr.ஜோ

Anonymous said...

உங்களின் சொந்த நாட்டின் பிரச்சனையை தீர்க்க வக்கில்லாமல் அடுத்த நாட்டு தலைவர்களை விமர்சிக்கும் உங்களில் அறியாமையை எண்ணி சிரிக்கிறேன்.

உங்களின் ஆணவம் குறையவே குறையாதா? அன்று நாங்களும் சிங்களாவர்களும் சகோதரர்கள் என்று பிரமேதாசா கையில் ஆயுதம் வாங்கி எங்களின் ரானுவத்தை பின்னால் இருந்து சண்டை போட்டீர்கள்.

எங்கள் இந்திய மக்களின் பணத்தை உங்களுக்காக தேர்தல் பாதுகாப்பு என்று செலவழித்தபோது புலிகளே பாதுகாப்பு என்று ஓடினீர்கள்

என் சகோதர இஸ்லாமிய மக்களை யாழ்பாணத்தை விட்டு அடித்து திரத்தியது நீங்களே. எங்கள் இஸ்லாமியர்களை குழுவாக வைத்து சுட்டு கொன்றதும் நீங்களே

என்று வரை உலகம் எங்கும் ஓடி கொண்டே இருக்கிறீர்கள்

இத்தனை கரிகளை முகத்தில் வைத்து கொண்டு எந்த நினைப்பில் எங்களிடம் ஆதரவு கேட்கிறீர்கள்?

Anonymous said...

ஜோ என்ற கிருத்துவ வெறியனே , கிருத்துவர்களை யாழ்பாணத்தை விட்டு அடித்து கொலை செய்து கொள்ளை அடித்து துரத்தினால் நீ இந்த கேடு கெட்ட கும்பலுக்கு ஆதரவு தெரிவிப்பாயா??

இஸ்லாமியர் என்பவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

Anonymous said...

வன்னிக்கு உணவு செல்லவில்லை என்று காட்டுக் கத்தல் போடுபவர்கள் நேற்று யாழ்ப்பாணத்துக்கு உணவு கொண்டு சென்ற கப்பல் தாக்கப்பட்டதற்கு என்ன சொல்வார்கள்?

ARV Loshan said...

தமிழன். ,
அந்தக் கப்பலில் வன்னி மக்களுக்கான உணவுகள் தான் இருந்தன என்பது உறுதியாகத் தெரியுமா? இல்லை எனக்கிருக்கும் சந்தேகத்தைக் கேட்டேன்.. கப்பலைப் பற்றி அரசு அப்படி சொன்னாலும் அது supplying ship என்று சொல்லப்படுதே.. http://puthinam.com/full.php?2e1VoA00aKcYU2edKA4e3bce6DX4d4D1e2cc24mI3d42YOA2a03oMV3e

ARV Loshan said...

அன்புக்குரிய அநானி,முப்ததார் ..

உங்களை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை..நான் அப்பாவி மக்களுக்காக எழுத நீங்கள் இன்னமும் பழைய விஷயங்கள்,விடுதலைப் புலிகளைப் பற்றியே பேசுகிறீர்கள்.. திரைகளுக்குக்குள் மறைந்து பின்னூட்டமிடும் நீங்கள் உங்களுக்கு வசதியாக சில விஷயங்களை மறந்து,மறைத்து விடுகிறீர்கள்..
இல் வட பகுதிகளில் நடந்த கொடுமைகள் பற்றியும், வட பகுதிப் பள்ளிவாசால்களில் ஆயுதம் கண்டுபிடித்த செய்திகளும்,காட்டிக் கொடுப்புகளும் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று யாராவது கேட்டால் உங்கள் பதில்????

வட பகுதி முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டது உண்மையில் ஒரு கசப்பான,கறை படிந்த நிகழ்வு தான்.. வண்ணியில் நடந்த ஊகடவியலாளர் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் தலைவரிடம் ஒரு ஊடகவியலாளநாக நான் கேட்ட முதல் கேள்வியே அவர்களை மீள அழைப்பது பற்றித் தான் என்பதை ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.

இன்னொன்று கிழக்கு இலங்கையை இராணுவம் கைப்பற்றிய போது உயிரிழப்புகள் பெரிதாக ஏற்படவில்லை என்பதுடன், இடம் பெயர்ந்து இன்னல் உற்றோருக்கு உதவ அப்போதும் அனைவரும் குரல் கொடுத்தாலும் இப்போது தான் அவை இந்தியாவின் காதுகளுக்கு விழுகின்றன.காரணம் அப்போது கலைஞர் மௌனமாகவே இருந்தார்.

சகோதரப் படுகொலைகள் பற்றிப் உரக்கப் பேசும் பலரும் இப்போது எங்கெங்கே இருக்கிறார்கள்,என்னவாக இருக்கிறார்கள் என்று கொஞ்சம் விழித்துப் பாருங்கள்..

உங்களைப் போல விளங்காத பலரும் இருக்கும் வரை இன்னும் எங்கள் முகத்தில் நீங்கள் சொன்னது போல கரி பூசப்படும் என்கிறான் என்னுடைய நண்பன். அது தமிழனின் தலை விதியாம்..

Anonymous said...

விடுதலைப்புலிகளின் சார்பு இணையத்தளத்தை நீங்கள் உசாத்துணையாகக் காட்டுவது எந்த வகையில் நியாயம்?
யாழ் மக்கள் நேற்று ஹர்த்தால் அனுஷ்டித்தார்களே?
இப்போதைய நிலையில் யாழ்ப்பாணத்துக்கு ஆயுதங்களை அனுப்புமளவிற்கு யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் இல்லையே?
வன்னிக் களத்திற்கு ஆயுதங்கள் அதிகப்படியாக தேவைப்படுகையில் யாழ்ப்பாணத்துக்கு ஆயுதங்கள் அனுப்புமளவிற்கு என்ன அவசரம்?
இதோ இந்த செய்தியை வாசியுங்கள்.
http://www.defence.lk/tamil/tm.asp?fname=20081022_01
நீங்கள் எவ்வளவு காலம் யாழ்ப்பாணத்தில் இருந்தீர்கள்?
நான் ஏறத்தாழ 20 வருடங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தேன்...
ஹர்த்தாலன்று பாடசாலை, அலுவலகம் செல்வோர் மீது தாக்குதல் நடத்துவது, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் சென்ற வயது முதிர்ந்தவர்கள் கூட தாக்குதலுக்கு உள்ளானது உங்களுக்குத் தெரியுமா?
அனுபவித்தவனுக்குத் தானய்யா கொடுமைகள் தெரியும்.

Anonymous said...

I too welcome and endorse Mr.ஜோ.

ஒருவர் இழபதற்கு ஒன்றும் இல்லாதபோது என்னவேண்டுமானாலும் செயலாம்.
உங்கள் கருத்துக்கணிப்பில் (KK, MGR and JJ) இவர்களில் யார் அதிகம் செய்தவர்கள் என்று இருந்தால்தான் சரி.

இப்போது யானையையும் பூனையையும் ஒப்பிட்டு, பூனை வெற்றி என்று சொல்கிறீர்கள்

இறக்குவானை நிர்ஷன் said...

லோஷன்,
எதனையும் மறைத்து யாருக்காகவும் கட்டுப்பட்டுப் பயந்து பதிவிடவில்லை என்பதை பல பதிவுகளில் காணலாம்.
ஆனால் மனதில் வெளிப்படைத் தன்மை இல்லாததால் தான் அனானிகளாக தவறான பின்னூட்டம் தருகிறார்கள்.

அடிப்படையை அறியாதவர்கள் தான், நாம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மட்டும் கதைக்கிறோம் எனக் கூறுகிறார்கள். அது தவறு.

பாதிக்கப்படும் மக்களுக்காகத் தான் லோஷன் எழுதுகிறார் என்பதை உணருங்கள். அவ்வாறு தமது சமூகம் மொழி கலாசாரங்களுக்கு சேவை செய்யாத எவரும் ஊடகவியலாளர் அல்ல.

//என் சகோதர இஸ்லாமிய மக்களை யாழ்பாணத்தை விட்டு அடித்து திரத்தியது நீங்களே. எங்கள் இஸ்லாமியர்களை குழுவாக வைத்து சுட்டு கொன்றதும் நீங்களே
//

இங்கு "நீங்கள்" என யாரை சுட்டுகிறீர்கள். தமிழன் என்றால் புலிதான் என அடக்கி ஒடுக்க முற்படும் அரசுக்கும் இவ்வாறு இனத்துவேசம் பேசித்திரிபவர்களுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

சில விடயங்களை தமிழன் என்ற உணர்வோடும் மக்கள் என்ற குடையினின்றும் பேச முற்படும்போது அவசியமற்ற, சற்றேனும் பொருத்தமற்ற விடயங்களைக் கூறி பின்னூட்டங்களை திசை திருப்ப வேண்டாம்.

ARV Loshan said...

சகோதரா தமிழன்.. நான் யாழ்ப்பாணத்தில் இருந்த காலம் குறைவு.. ஒத்துக் கொள்கிறேன்.. அப்படிப் பார்த்தால் கொழும்பில் நானும் வெள்ளை வான்கள் மற்றும் இதர அனுபவங்கள் பட்டவன்;யாழ் மண்ணிலும் 87-90 கால கட்டத்தில் வாழ்ந்தவன்.எனவே எல்லா விஷயமும் தெரியும்.பிழைகள் எல்லா பக்கமும் உண்டு.. நான் யாருடைய வக்காலத்தும் அல்ல..நீங்கள் காட்டி இருக்கும் இணையத் தளம் எந்த சார்பு? வேடிக்கையாக இல்லை?

அநானி, நீங்கள் சொல்ல வருவது MGRஐ விட கலைஞர் இலங்கைத் தமிழருக்கு அதிகம் செய்துள்ளார் என்ற? நகைச்சுவை தான் போங்கள்.. அந்த அம்மாவை நாங்கள் சீண்டவும் மாட்டோம்..
இருப்பவர் என்று நீங்கள் கலைஞரை சொல்வது சொத்தை வைத்தா? யானையா பூனையா என்று தீர்மானிதவர்கள் பார்வையிட்டவர்களே,.. நீங்கள்,ஜோ போன்றோர் நினைத்திருந்தால் கலைஞரை ஜெயிக்க வைத்திருக்கலாம்.. ;)

காலம் சொல்லுமா ஐயா.. 28ஆம் திகதி வரை பொறுப்போம்..

ARV Loshan said...

உங்களுக்குப் புரியுது நிர்ஷன்.. ஊடகவியலாளரின் கடமை மக்களுக்காகப் பேசுவதே..அநானிகள் பேசட்டும்! மன உணர்வுகளைக் கொட்டட்டும்;ஆனால் மக்கள் பற்றியும் உணரட்டும்.

Anonymous said...

அதைத்தான் நானும் சொன்னேன்...
நீங்கள் புலிச்சார்பு இணையத்தளத்தை காட்டிய படியால் தான் நான் அரசாங்க சார்பு இணையத்தை காட்டினேன்...

Guna said...

Nam thamizhan enkira unarvai thamilaghathil elaya thalaimuraiyidam erpanduthiyavar Kalaizhar. Avar vidithalai puligaluku vthavavilai enkira kuruthi nan erkkiran. karanam vidithalai puligal MGR dam adakam pughundu karananidhi purakanithanar. Antha puraganitha avamanthiyum mannithu avaikaluku utahvikal seythar. avar thamizhu saitha sathani miga meruthu. avaridam sila kuragal ulladhu, athai nan marukavillai (kudumba arasiyal). Aninum entha 80 vathilum thamizhu evar saiyum sayalai nam purakaninka mudiyathu. ellangai thamizha vidiyal varum, unaku thol kuduka varukirom, eninum engal thalaivarai kurai kurathe. Vizhvathu namaga erupinum vazhvathu tamilaga erukattum.

Jeyapalan said...

கலைஞரைப் பலர் பல விதமாக விமர்சிக்கிறார்கள். அவரது அடி மனத்தில் இருக்கும் ஈழத் தமிழர் மீதான அனுதாபம் பல சந்தர்ப்பங்களில் பல வடிவங்களில் வெளி வந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆட்சியிலிருப்பவருக்கும் அதைத் தக்க வைக்க வேண்டிய சுயநலத்தால் பல விபரங்கள் மழுங்கடிப் படுவதையும் மறுக்க முடியாது. அவர் என்ன நினைத்தாலும் செய்ய முடியாதவாறு பெரும் பல தடைகள் இருப்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம். அதனால் அவரை விட்டு விடுங்கள்

கிருது said...

Why you killed our leader rajiv Ghandhi? Dont say it was before.. How you are expecting support from India after killed our beloved leader. We include Karunanithi, all are support when you are in right way when you are path was gone to wrong way, we don't ike nd we hate you after killed Rajiv..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner