September 24, 2008

எங்களையும் கொஞ்சம் கவனியுங்க


அண்மைக்காலக் கிரிக்கெட் வீரர்களில் குறைவாக மதிப்பிடப்பட்ட , புகழ் வெளிச்சம் பெரிதாகப் படாத பதினோரு வீரர்கள்..இவர்கள் எல்லோருமே தத்தம் அணிகளுக்காக அபாரமாக விளையாடியுள்ளார்கள்.எனினும் நட்சத்திர அந்தஸ்து ஏனோ கிடைக்காமல் போயுள்ளது..உங்களில் பலபேரின் அபிமான வீரர்களாகவும் இவர்களில் சிலராவது இருக்கக் கூடும்.

ANDY FLOWER - ZIMBABWE
ஜிம்பாப்வே 90களில் முக்கியமான அணிகளில் ஒன்றாக வளர்வதற்குக் காரணமாக இருந்த மிகப்பெரிய தூண்..நவீன கால விக்கெட் காப்பாளர்களில் 50இற்கு மேற்பட்ட சராசரியும் 160இற்கு மேற்ப்பட்ட பிடிகளையும் டெஸ்ட் போட்டிகளில் எடுத்ததோடு,ஒரு நாள் போட்டிகளிலும் ஜிம்பாப்வே பெற்ற பல வெற்றிகளில் இவரது பங்கு முக்கியமானது.நிறவெறி ஜிம்பாப்வே அரசை எதிர்த்து கிரிக்கெட்டில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடிபுகுந்த இவர்,எஸ்செக்ஸ் பிராந்திய அணிக்காகப் பிரகாசித்து இப்போது இங்கிலாந்தின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக இருக்கிறார்.


CARL HOOPER - WEST INDIES
அழகான,கண்கவர் துடுப்பாட்டப் பிரயோகங்களை உள்ளடக்கிய வீரர்.ரொம்பவும் பொறுமையான அணுகுமுறை,பொறுப்பான களத் தடுப்பு(குறிப்பாக ஸ்லிப் ஸ்தானத்தில் ),ஆர்ப்பாட்டமில்லாத சுழல் பந்து வீச்சு.. இவை அனைத்தும் கலந்த கலவை தான் கார்ல் ஹூபெர். பல அதிரடி வீரர்களின் வருகையும்,பிரையன் லாராவும் இவரது புகழை அமுக்கி விட்டன.


DAMIEN MARTYN - AUSTRALIA
ஆஸ்திரேலியா அணியில் நிறைந்திருந்த அதிரடித் துடுப்பாட்ட வீரர்களுக்கு மத்தியில்,அழகான துடுப்பாட்டப் பிரயோகங்களுக்குப் பெயர்போன வீரர் மார்டின். அதேவேளை தேவையான நேரங்களில் அதிரடியாக,வேகமாக ஆடவும் தெரிந்தவர்.ஆஸ்திரேலியா அணியில் இரண்டு முறை போராடி இடம்பிடித்த இவர், ஒரு புதிய பரிமாணத்தை அணிக்குள் கொண்டுவந்தார். ஓய்வு பெற்ற பின் தான் இவர் குவித்த ஓட்டங்களின் அருமை புரிந்தது.

NEIL FAIRBROTHER - ENGLAND
இங்கிலாந்து அணியின் மைகேல் பெவானாக ஒரு காலகட்டத்தில் கலக்கியவர்.இங்கிலாந்தின் புதிரான,யாருக்குமே புரியாத தெரிவு முறைகள் மூலமாக தனது பெரும்பாலான இளமையை இருட்டுக்குள் தொலைத்தவர்.ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் ஒரு ஆட்டத்தைக் கட்டமைப்பது முதல் முடித்து வைப்பது வரை கை தேர்ந்தவர்.

MARK BOUCHER - SOUTH AFRICA
தென் ஆபிரிக்க அணியின் அண்மைக்கால இணைப்புப் பாலம். மத்திய வரிசையில் ஓட்டங்களைக் குவித்து அணியைக் காப்பாற்றுவதும்,விக்கெட் காப்பாளராக சிறப்பாக செயற்பட்டு எதிரணிகளுக்கு சிரமங்களைக் கொடுப்பதிலும் இவருக்கு நிகர் இவரே.உலகின் தலைசிறந்த விக்கெட் காப்பாளர்களில் ஒருவராக இருந்தபோதும் எப்போதுமே,சங்ககார,டோனி,கில்கிறிஸ்ட் போன்றோரால் பின்தள்ளப்பட்டே வந்துள்ளார்.


BRAD HOGG - AUSTRALIA
மிகச் சிறந்த ஒரு நாள் சுழல் பந்துவீச்சாளராகக் கலக்கியும் கூட,டெஸ்ட் அணியில் நீண்ட காலம் இடம்பிடிக்க முடியாமல் போன துர்அதிர்ஷ்டசாலி. Shane Warneஇன் நீண்ட டெஸ்ட் பயணம் Brad Hoggஐ ஒரு டெஸ்ட் பந்துவீச்சாளராக மிளிர விடவில்லை.


JAVGAL SRINATH - INDIA
இந்தியாவின் நீண்ட கால சேவையாளர்.கபிலுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்த 'வேகப்'பந்து வீச்சாளர்.கஷ்டமான உபகண்ட ஆடுகளங்களிலும் சிறப்பாகப் பந்து வீசியவர்.

DANIEL VETTORI - NEW ZEALAND
டீன் ஏஜ் வயது வீரராக அணிக்குள் பிரவேசித்த வெட்டோரி, இளவயதில் அணியின் தலைவராகவும் உயர்ந்துள்ளார். பண்பான வீரராகவும்,நல்ல சுழல் பந்துவீச்சாளராகவும் மிளிர்ந்து வரும் இவர் இன்னமும் முன்னணி வீரர்களில் ஒருவராக தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை.


BRIAN MCMILLAN - SOUTH AFRICA
தென் ஆபிரிக்காவின் தலைசிறந்த சகல துறை வீரர்.நுணுக்கமான வேகப்பந்து வீச்சாளர்,அதிரடித் துடுப்பாட்ட வீரர்,அட்டகாசமான ,நம்பகமான களத்தடுப்பாளர்.பிடிகளை அபாரமாகப் பிடிப்பதால் இவரை bucket என்று செல்லமாக சக வீரர்கள் அழைப்பராம். ரொம்பவும் அமைதியானவர் என்பதாலோ என்னவோ பெரிதாகப் புகழ் அடையவில்லை.


SHIVNARINE CHANDERPAUL - WEST INDIES
உலகின் நம்பகமான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான இவர்,மிக நீண்ட காலம் லாராவின் நிழலில் இருந்து இப்போது தனது வயதுக்குப் பின் தான் தனித்து மிளிர ஆரம்பித்துள்ளார். அண்மையில் கிடைத்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை விருது இவருக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.


JACQUES KALLIS - SOUTH AFRICA
உலகின் மிகச் சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவராக இருந்தும்,பத்தாயிரம் டெஸ்ட் ஓட்டங்களை அண்மித்தும் கூட இன்னமும் உலகின் முதல் தர வீரராக இவரை பொதுவாக ஏற்றுக்கொள்வதில்லை.தனது அணியின் தலைமைப் பதவி வாய்ப்பையும் இழந்துள்ள கலிஸ் ,சக வீரர்களாலும் சுயநலவாதி என அண்மைக்காலங்களில் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

5 comments:

யூர்கன் க்ருகியர் said...

நம் நாட்டு ராபின் சிங் -ஐ உங்கள் பட்டியலில் சேர்த்திருக்கலாம்.
திறமையான "பீல்டர்" பாலிடிக்ஸ் காரணமாக வெளியேறியவர்.

ARV Loshan said...

ம்ம்ம்ம் ஆனால் டெஸ்ட் போட்டி ஒன்றே ஒன்றில் மாத்திரம் தான் அவர் விளையாடியுள்ளார்.அடுத்த பதினொருவர் வரிசையில் அவர் வரலாம்.. ;)

யோ வொய்ஸ் (யோகா) said...

CRICKET NEXT என்ற வெப் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம், LOSHAN இது சம்பந்தமாக உங்கள் எண்ணங்களை நாங்கள் எதிர் பார்க்கிறோம், உதாரணமாக எங்கள் நாட்டில் உள்ள இவ்வாறான வீரர்களை தெரிவியுங்கள்... Ruwan Kalpage, Asanka Gurusinghe, Kumara Dharmasena போன்றோர்கள் செய்த சேவைகள் வெளியே தெரிய வில்லை இது சம்பந்தமாக உங்கள் எண்ணங்களை தெரிவியுங்கள்

வந்தியத்தேவன் said...

வணக்கம் லோஷன்
இவர்கள் அனைவரும் எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள். கலீஸ் அன்டி பிளவர் ஸ்ரீ நாத் சந்தர்போல் மிகவும் பிடித்தவர்கள்.

இன்று விடியலில் நீங்கள் நடத்திய வாக்கு எடுப்பு முடிவுகளைப் பற்றி ஒரு பதிவுபோடுங்கள் அலுவலகத்தில் அவசரமான ஒரு புராஜக்ட் மீட்டிங் காரணமாக என்னால் முடிவுகளைக் கேட்கமுடியவில்லை.

Unknown said...

எனக்கு மக்மில்லனை மிகவும் பிடிக்கும். 1996 உலகக் கோப்பையில் சில கஷ்டமான பிடிகளை வாழைப்பழம் தின்பது போல் பிடித்துவிட்டு பந்தை மேலே எறிவார். ஒரு காலத்தில் அதே பாணியில் நான் catch பிடித்ததும் உண்டு... (அதுக்காக நானும் bucketம் ஒன்றல்ல). அற்புதமான ஒரு சகல துறை ஆட்டக்காரர்.. தென்னாபிரிக்க அரசுகளின் நிற வெறியும் இவரது புகழ் குறைவாக இருக்க ஒரு காரணம்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner