September 13, 2008

ரஜினியும் நானும்... ஹா ஹா ஹா

ஒரு சுவாரஸ்யமான தொடர் மின்னஞ்சல் தொகுப்பு இது.. ஜூனியர் விகடனில் வந்த கடிதமொன்றை நான் என் தம்பிக்கும்,நண்பர்களுக்கும் அனுப்ப, என் தம்பி தன் நண்பர்களுக்கு அனுப்ப ஆந்த நண்பர்களில் ஒருவர் எனக்கு காட்டமான மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருந்தார். அவருக்கு நான் ஒரு பதில் அனுப்பி இருந்தேன். அந்த மூன்றையுமே கீழே தருகிறேன்.. பதில் எதுவும் வந்தாலும் அதையும் தருவேன்.. எவ்ளோ பண்ணிட்டோம் இதைப் பண்ண மாட்டோமா?ஜூவியில் வந்த கடிதம்.

சூப்பர் ஸ்டாருக்கு சுளீர்...'நீங்க நல்லாத்தான் நடிக்கிறீங்க!'

இதுநாள் வரை எங்களால் மதிக்கப்படுபவராக இருந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு...

உங்களை எங்களுள் ஒருவராக, தமிழராகத்தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால், பல நேரங் களில் 'நான் அப்படி இல்லை' என்று நிரூபித்தீர்கள். 'பாபா' பட வெளியீட்டின்போது பா.ம.க-வினர் உங்களுக்கு ஆட்டம் காட்டியபோது,
'தேர்தல் வரட் டும்...' என்று முதலில் சவால் விட்டுவிட்டு பிறகு சத்யநாராயணா மூலம் சமரச அறிக்கை வெளியிட்டு பிரச்னையை அப்படியே மூடினீர்கள்.

இன்று வரையில் ஏதாவது ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்திருக்கிறீர்களா? முதலில் ஜெய லலிதாவை வசைபாடினீர்கள். பிறகு, அவரை 
'தைரியலட்சுமி' என்று ஸ்துதி செய்தீர்கள்.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் எடுப்பார் கைப்பிள்ளையாகவே இருக்கப் போகிறீர்கள்? பிறர் ஏற்றிவிடும் உசுப்புகளுக்கெல்லாம் எத்தனை காலம் ரணகளப்படப் போகிறீர்கள்? உங்கள் படங்களில் நீங்கள் சித்திரிக்கப்படுவதைப்போல் நீங்கள் உங்களை உண்மையிலேயே சூப்பர் மேன் என்று நினைத்துக்கொள்கிறீர்களா?

நீங்கள் வாய்ஸ் கொடுப்பது ஆரம்பத்தில் சீரியஸாகவே இருந்தது. ஆனால், போகப் போக 
வடிவேலு ஜோக்கையே ஓவர்டேக் செய்து விட்டது. அடிப்படை அரசியலறிவு குறித்த தெளிவான பார்வை இல்லாத நீங்கள், போகிற போக்கில் அரசியல் விமர்சனங்களை அள்ளி வீசுவது காமெடியின் உச்சம். ஓட்டுப்போட்டு விட்டு வாக்குச்சாவடி வாசலிலேயே 'இன்ன கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டேன்' என்று கடந்த தேர்தலில் நீங்கள் வெளிப்படையாகச் சொன்னது ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் விரோதமானது என்று உங்களுக்குத் தெரியுமோ... தெரியாதோ? ஆனால், அதுகுறித்து இதுவரை நீங்கள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதுதான் உங்கள் அரசியல் ஞானமோ?

சினிமாவில் 'ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா' என்று பில்ட் அப்களைக் கொடுக்க வேண்டியது... தமிழன் கொடுத்த தங்கக் காசுகளைக் கர்நாடகத்தில் முதலீடு செய்வதாக குக்கிராமத்த்து டீக்கடை வரை செய்தியாகிக் கிடக்கிறது. நிஜ வாழ்க்கையிலும்கூட நீங்க நன்றாகத்தான் நடிக்கிறீர்கள், சார்!

தேசிய கட்சிகளைச் சேர்ந்த அரசியல் வாதிகளைப் போல தண்ணீர்ப் பிரச்னை வரும்போதெல்லாம் உங்களுக்குச் சிக்கல் தான். தமிழகமா, கர்நாடகமா என்று தத்தளித்துப் போய்விடுகிறீர்கள். அந்த மாதிரி இக்கட்டான நேரத்திலெல்லாம் உங்களுக்குப் பக்கபலமாக நின்றவர்கள் நாங்கள் தான்.

ஆனால், 'குசேலன்' படத்துக்காக கர்நாடக மக்கள்கிட்ட நீங்க வருத்தம் தெரிவிச்சு, நீங்கள் அடகு வைத்திருப்பது உங்கள் தன்மானத்தையும் தமிழ் மக்களின் மானத்தையும்! உங்களால் ஆதாயப்படுபவர்கள் வேண்டுமானால் அதை ஆதரிக்கலாம். உங்கள் தலை உருட்டப்படும்போது எல்லாம் கடைக்கோடி தமிழன்கிட்ட இருந்து, 'எங்க தலைவனை ஏண்டா இம்சை பண்றீங்க'ன்னு ஓங்கி ஒலிக்கிற குரல், இந்தப் பிரச்னையில எங்கேயும் கேட்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒகேனக்கல் பிரச்னையில் நீங்கள், 'பொதுவா இருக்குற தண்ணீரை கொடுக்க முடியாதுன்னா, அவங்களை உதைக்கவேணாமா?' என்று உணர்ச்சி வசப்பட்டீர்கள். உடனே, தமிழகமே உங்களை தூக்கிப் பிடித்தது.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் தொடர்பாக நடத்தப்பட்ட உண்ணாவிரதம் முடிந்த சில நாட்களில், 'கர்நாடகத்தில் 'குசேலன்' படத்தை வெளியிடத் தடை போடப்போவதாக மிரட் டல்கள் வருகிறதே' என்று கேள்வி எழுந்தபோது,
''உலகம் முழுக்க வெளியாகிற என் படம் கர்நாடகத்தில் வெளியாகாவிட்டாலும், எனக்குக் கவலை இல்லை'' என்று நீங்கள் சொன்னபோது, 'நிஜமான தமிழன் நீங்கதான்' என புல்லரித்துப் போய்விட்டோம்.

ஆனால், கன்னட இனவெறி அமைப்புகளும், கன்னட திரையுலகமும் சில தினங்களுக்கு முன்பு 'குசேலனை திரையிட அனுமதிக்க மாட்டோம்... மீறி திரையிட்டால், தியேட்டர்களைக் கொளுத்துவோம்' என கொக்கரித்ததும் கன்னட திரையுலகினருக்கு ஒரு அவசரக் கடிதம் எழுதி உங்கள் பேச்சுக்கு வருத்தப்படுவதாக 
ஒரு ஸீன் போட்டீர்கள். கன்னடத் திரையுலகம் உங்களை மன்னிக்கத் தயாராக இருந்தாலும், கன்னட வெறியர்கள் விடுவதாக இல்லை; கலாட்டாக்களில் இறங்கி தங்கள் வன்முகத்தைக் காட்டினர்.

உடனே நீங்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னை யில் நடந்த 'குசேலன்' படக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விழாவில்,
''கன்னட மக்கள் அனைவரையும் குறிப்பிடும்படி 'அவங் களை உதைக்க வேணாமா' என நான் பேசியிருக்கக்கூடாது.வன்முறையில் ஈடுபடுபவர்களை உதைக்கணும் என்று பேசியிருக்கவேண்டும். கர்நாடக மக்களி டம் பாடம் கற்றுக்கொண்டேன்... இனி எச்சரிக்கையாகப் பேசுவேன்''னு தலை குனிஞ்சு பேசியதை எந்தவகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

'நடிகனை நடிகனா மட்டும் பார்க்க வேண்டியதுதானே'னு உங்களுக்கு ஜால்ரா போடுறவங்களெல்லாம் கேட் கலாம். நாங்கள், உங்களை நடிகராக மட்டும் பார்க்கவில்லை. எங்களில் ஒருவராகத்தான் பார்த்தோம். அதனால்தான்,
எம்.ஜி.ஆருக்கு அடுத்த படியாக எங்கள் இதய சிம்மாசனத்தில் உங்களை உட்கார வைத்தோம். ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்த கதையாகத் தமிழர்களின் மொத்தத் தன்மானத்தையும் கன்னடர்களிடம் அடகு வைத்திருக்கிறீர்கள்.

எத்தனையோ சினிமாக்காரர்களை இன, மொழி வேறுபாடு பார்க்காமல்தான் தமிழகத்தில் ஆதரிக்கிறோம். அவர்களின் படத்தை ஓட வைக்கிறோம். ஆனாலும், எங்களுக்குக் கிடைத்த வரம் என்றுதான் உங்களை நினைத்தோம். உங்கள் பட ரிலீஸ்தான் எங்களுக்குப் பொங்கல், தீபாவளி! உங்கள் வார்த்தைகள்தான் எங்களுக்கு வழிகாட்டி. அதனால்தான் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்... எங்களையெல்லாம் ஆளவேண்டும் என்று நினைத்தோம். ஏனோ, கடைசிவரைக்கும் கமுக்கமாக இருந்துவிட்டீர்கள். அப்போதும் நாங்கள் உங்கள் பக்கமே இருந்தோம். ஆனால்,
உங்கள் படம் லாபகரமாக ஓடவேண்டும் என்பதற்காக எங்கள் தன்மானத்தையே விட்டுக்கொடுக்கிற அளவுக்கு நீங்கள் எப்போது இறங்கி வந்தீர்களோ அப்போதே தெரிந்துவிட்டது, நீங்கள் எவ்வளவு பெரிய பிசினஸ் பேர்வழி என்று! இத்தனை நாள் எங்கள் மண்ணில் ஒரு வியாபாரியாகத்தான் வாழ்ந்தீர்களா? 'என்னை நம்பிப் படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றுதான் வருத்தம் தெரிவித்தேன்' என்று நீங்கள் சொல்வதை நம்ப இனியும் நாங்கள் இளித்தவாயர்கள் அல்ல. கன்னடத்தில் 'குசேலன்' ஓடாவிட்டால் எவ்வளவு நஷ்டமாகும் என்று எங்களிடம் சொல்லியிருக்கலாம். உண்டியல் குலுக்கியாவது உங்கள் மடியில் கொண்டுவந்து கொட்டியிருப்போம். உங்ககிட்டதான் பண வசதியே இல்லாமப் போச்சு! சம்பாதித்த அவ்வளவு பணத்தையும் நதிநீர்த் திட்டத்துக்கு ஒரு கோடி ஒதுக்கியது(?) மாதிரி தமிழக நலனுக்காக செலவு பண்ணியே அழித்துவிட்டீர்கள்!

'குசேலன்' படத் தயாரிப்பாளர்கள் நஷ்டப்பட்டுவிடுவார் கள் என்று கன்னட மக்களிடம் கருணைக் கோரிக்கை வைத்தீர்களே... 'தலைவர் படம் பிய்ச்சுக்கிட்டுப் போகும்' என்று நம்பி, பல லட்சங்களை முதலீடாப் போட்டு ரசிகர் மன்ற ஷோ எடுத்து நடத்திய அத்தனை மாவட்ட ரசிகர்களும் கையைச் சுட்டுக்கொண்டு தவிப்பது உங்களுக்குத் தெரியுமா? பட ரிலீஸன்று கொடி பிடிக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும்தான் நாங்கள் உங்களுக்குத் தேவை. மற்றபடி, நாங்கள் கையைச் சுட்டுக்கொண்டால் என்ன... தலையை வெட்டிக்கொண்டால் என்ன?


நீங்கள் கர்நாடக மக்களிடம் வருத்தம் தெரிவித்ததற்கு நாங்கள் ஏன் அவமானப்படுகிறோம் என்றால், இப்போதும் உங்களைப் பச்சைத் தமிழனாக நினைப்பதால்தான். இல்லை என்றால் 'ஒரு கன்னடத்து ஆள் கன்னடத்து மக்கள்கிட்ட மன்னிப்புக் கேட்டதில் என்ன ஆச்சர்யம்' என்று நினைத்துக்கொண்டு எங்கள் வேலைகளில் மூழ்கியிருப்போமே...! அப்ப... நீங்க தமிழகம்தான் எனக்கு எல்லாமே என்று சொல்றதெல்லாம் 'குசேலன்' படத்துல வர்ற மாதிரி கெஸ்ட் ரோல்தானா?


- இப்படிக்கு
நேற்று வரை உங்கள் ரசிகனாக
இருந்த தமிழன்.

( நன்றி: ஜூவி )
---------------------------------------------

அச்சு என்ற நபர் (நண்பர்) அனுப்பிய மின்னஞ்சல்

நீங்கள் எல்லம் திறமான ஆட் க்களோ???
ஒருநாள் ஒரு வனொலியிலையும், மற்றநாள் என்னொரு வானொலியிலும் மாறிமாறி குரல் கொடுப்பவர்கள்.
நாம் நீதியாக நியாயமாக நடக்கவேண்டும் என்று இல்லை. ஆனால் ஒருவனைக் குறை கூறும் போது அந்த தவறை அதற்கு முன்னரும் சரி பின்னரும் சரி நாம் விடக்கூடாது.
தவிர திரப்படங்களில் வரும் காட்சியமைப்பயும் கருத்துகளையும் ஒப்பிட்டு கதைபதானால் அது அனைத்து நடிகருக்கும் பொருந்தும்.


பி.கு.:- எழுத்துப் பிழைகள் நிறைய இருந்தாலும் எந்தத் திருத்தத்தையும் செய்யாமல் அப்படியே இங்கே தருகிறேன்..
----------------------------------------------------

எனது பதில் மின்னஞ்சல்

சகோதரா அச்சு, நீங்கள் ரஜினிக்கு வக்காலத்து வாங்கிறதா இருக்கலாம்.. ஆனால் அந்தக் கடிதம் என்னால் எழுதப்பட்டது இல்லை. அது முதலாவது. இரண்டாவது, நீங்கள் பாடசாலைகள் மாறிப் படிக்கலாம்,டியுஷன் கிளாஸ் மாறிப் படிக்கலாம், பணிபுரியும் வங்கிகள்,அலுவலகங்களை மாற்றிக் கொள்ளலாம்,ரசனைகளை)நடிக்க,நடிகையர்,பாடகர்கள்,விளையாட்டு வீரர்கள்) மாற்றிக் கொள்ளலாம் என்றால் நாங்கள் மட்டும் என் பணிபுரியும் வானொலி நிலையங்களை மாற்றிக் கொள்ள முடியாது?

நாங்கள் பணி புரிந்தவர்களே தவிர,உரிமையாளர்கள் அல்ல,அரசாங்கத்தின் ஓரங்கமாகிப் போய்விட்ட இடத்தில் நாங்கள் தொடர்ந்தும் வேலை செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை. அதுசரி தமிழனுக்காகக் குரல் கொடுத்த பின் தன் படம் ஓடவேண்டும் என பாய்ந்து மன்னிப்புக் கேட்ட ஒருவரைப் பற்றி எதோ ஒரு சஞ்சிகை எழுதினால் நீங்கள் என் துள்ளிக் குதிக்கிறீர்கள்? அச்சு, நீங்கள் மட்டும் திறமோ? இப்போ எனது முறை உங்களைக் கேட்க.. கேள்வி கேட்க முதல் எல்லா விஷயங்களயும் ஆராய்ந்த பின் கேளுங்கள்.. மாற்றம் ஒன்று தான் இந்த உலகில் மாறாத ஒன்று!

லோஷன் 

10 comments:

Anonymous said...

அரசாங்கத்தின் ஓரங்கமாகிப் போய்விட்ட இடத்தில் நாங்கள் தொடர்ந்தும் வேலை செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை.//

அண்ணர் உண்மை பொய் தெரியா.. ஆனா வெற்றி வீணையென்று கதையடிபடுகிறது. அது நெருப்பில்லாத புகையாயிருக்க வேணும் எண்டதுதான் என் அவா..

Anonymous said...

சுவாரஸ்யமான பதிவு.

தென்னிந்திய நடிகர்களின் பம்மாத்துக்களில் தங்கள் சுயங்களை மறந்துபோய், மூளைச் சலவைசெய்யப்பட்டவர்கள் ஏராளமானோர் இலங்கையிலும் இருக்கிறார்கள்.

தமிழரின் போராட்டங்களுக்காகவும் அவர்களது உரிமைகளுக்காகவும் போராடி தங்கள் உயிரைத் தியாகம் செய்துகொண்டிருக்கும் வீரர்கள் மேல் வைக்கவேண்டிய அபிமானத்தையும் மரியாதையையும் இந்தப் பத்தாம்பசலிச் சுயநல அரிதார நடிகர்கள்மேல் வைக்கும் இந்தக் கூட்டத்துக்கு எந்தவொருகாலத்திலும் உய்வு இருக்கப்போவதில்லை.

இவர்கள் தங்கள் நெஞ்சிலும் (நானே தணிக்கை செய்துகொள்கிறேன்)_ஞ்சிலும் பச்சை குத்திவைத்துக்கொண்டிருக்கும் அரிதாரிகளில் யாராவது எமது மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்களா?

விஜயகாந்த் மட்டுமே அன்றிலிருந்து இன்றுவரை அவ்வப்போதாவது தன்ஆதரவை எமக்குத் தெரிவித்துவருகிறார். அவர் நேரடியாகத் தெரிவிக்கும் ஆதரவைவிட மறைமுகமாக எமது போராட்டத்துக்கு ஆற்றிவரும் பணியும் உண்டு!

இந்த ரஜினி, கமல், விஜய், அஜித் எல்லாம் என்ன செய்தார்கள் எமது மக்களுக்கு? எமது தமிழை வியாபார உத்தியாக்கி வெளிநாட்டிலிருக்கும் இலங்கைத் தமிழரை வைத்துப் பணம் சம்பாதித்து தங்கள் குடும்பங்களின் சொத்துக்களை கோடி கோடியாக குவித்துவருகிறார்கள்.

வன்னியில் ஒருவேளை உணவுக்குக்கூட வழியின்றித் தவிக்கும் சிறு குழந்தைகளுக்கு ஒருவாய் உணவு கொடுக்க முன்வருவார்களா இந்த அரிதாரிகள்?

லோஷன், உங்களது வெற்றி வானொலியின் நிகழ்ச்சிகளை அவதானித்துவருகிறேன். எந்தவொரு சினிமா நடிகரையும் தலையில் தூக்கிவைத்து ஆடாமலிருந்துவருகிறீர்கள். நல்லவிடயம். இதனையே தொடர்ந்தும் கடைப்பிடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சினிமாவைக் கொண்டாடுவது, இயக்குநரின் படைப்பை மதிப்பது, இசையைப் பிரபலப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் அரிதாரம் பூசும் திரைப் போலிகளை வானில் தெரியும் நட்சத்திரங்களாய்த் தலையில் வைத்துக்கொண்டாடுவதை ஒரு காலத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஆனாலும் என்ன செய்ய? நாளைக்கே நமது பிள்ளைகளுக்கு நமீதா, ஸ்ரேயா என்றெல்லாம் நாமும் பேர்வைத்தாலும் ஆச்சரியப்படமுடியாது. ஏனெனில் இந்தச் சினிமா அரிதாரிகளின் வீச்சு அந்த அளவுக்கு இருக்கிறது.

இவர்களைப் பற்றி நாள்முழுவதும் பேசிக்கொண்டிருப்பவர்கள் ஒரு நிமிடமாவது வன்னியில் நம் இரத்த உறவுகள் படும் துயரைப்பற்றியும் சிந்தித்தால் நல்லது.

- அனபாயன்
--

Jude said...

you were correct!!!
by the way this is Valluvan.. (Not the legendery poet.. this is living legend.. lol..)
by the i've to say I'm one of your fan. :)

note : i wanted type in tamil but but i couldn't, coz no fonts.. :(

ARV Loshan said...

அன்பின் கோவிந்து..
வீணை? சான்சே இல்லை.அவ்வளவு பணம் அங்கு இருக்க வாய்ப்பிருந்தால் என் இன்னும் இதய வீணையிலே மினக்கெட வேணும்? தமிழ் மீது சத்தியம் செய்யக் கூட நான் தயார். எமது வெற்றியின் உரிமை நிறுவனமான Voice of Asia networks ltd. ஏற்கெனவே சியத என்ற பெயரில் ஒரு சிங்கள மொழி வானொலியையும் Real Radio என்ற பெயரில் ஆங்கில மொழி வானொலியையும் நடாத்தி வருகின்றனர்.
எனவே எந்த சந்தேகமும் வேண்டாம்.இது யாரின் முகமூடி அணிந்த வானொலியும் அல்ல. எமதே எமதானது. உரிமையாளர் ஒரு சகோதர மொழி பேசும் வர்த்தகர்.

ARV Loshan said...

நன்றி அனபாயன்,
உங்கள் தமிழ் நடை அருமை. நீங்கள் சொன்ன பல விடயங்களுடன் நான் ஒத்துப் போகிறேன்.


//லோஷன், உங்களது வெற்றி வானொலியின் நிகழ்ச்சிகளை அவதானித்துவருகிறேன். எந்தவொரு சினிமா நடிகரையும் தலையில் தூக்கிவைத்து ஆடாமலிருந்துவருகிறீர்கள். நல்லவிடயம். இதனையே தொடர்ந்தும் கடைப்பிடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.//

நிச்சயமாக.. எதோ ஒரு விதத்தில் நாம் எமது வெற்றி FM ஐ வித்தியாசப் படுத்திக் காட்ட விழைகிறோம் (வியாபார நோக்கு இருந்தாலும் கூட) அதில் சினிமாவை எமது வாழ்க்கை ஆக்காமல் இருப்பதும் ஓன்று .

M.Rishan Shareef said...

லோஷன், வலையுலகில் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி.
அந்தப் பதில் கடிதத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கத் தேவையில்லை என நினைக்கிறேன் நண்பரே !

வந்தியத்தேவன் said...

ரஜனிகாந்த் பற்றியோ குசேலன் பற்றியோ இதுவரை நான் எழுதாதற்க்குக் காரணம் கும்பலாக வந்து கும்மி அடித்துப்போடுவார்கள் என்ற பயம்தான். என்ன காரணம் என்பது என் வலைவாசகர்களுக்குத் தெரியும்.

தோல்வியடைந்த குசேலனுக்கு ஒரு வானொலியும் அதன் சில அறிவிப்பாளர்களும் திரும்ப திரும்ப படம் வெற்றி என்கிறார்களே அதன் நோக்கம் என்ன? இங்கேயும் என்வலப் கலாச்சாரம் இருக்கின்றதா?

இன்னொரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்க்கு வேலை மாறுவது ஒன்றும் தப்பில்லை. எத்தனை அரசியல்வாதிகள் கட்சி மாறியிருக்கிறார்கள். நீங்கள் மீடியாவில் இருப்பதால் பலருக்கு வேலை மாறியது தெரியவருகின்றது. ஆனால் ஏனைய துறைகளில் இருப்பவர்களும் இதே வகைதான் என்பதைச் சிலர் புரிந்துகொள்கிறார்கள் இல்லை. உதாரணமாக கணணித் துறையைப் பொறுத்தவரை கொள்கைதான் பாவிக்கிறார்கள். யாராவது ஒரு கணணி பொறியியளாளனையோ அல்லது ஏனைய கணணி சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இருப்பவரோ இதுவரை ஒரே இடத்தில் இருந்ததாக சரித்திரம் இல்லை.

Vathees Varunan said...

இவ்வளவு பிரைச்சனைகளுக்கும் காரணம் குசேலன் அடைந்த தோல்வியும்,ரஜினி கர்நாடகதில் அடித்த பல்ட்டியுமே!!

குசேலனை பற்றி இணையக் குழுவில் சுவாரசியமான தகவல்கள் கிடைத்தது.அவற்றை இங்கே பகிரலாம் என நினைக்கின்றேன்.(சுட்டுத்தான் போடுகின்றேன்)

மத்த படங்கள் தோல்வி அடைவதும் ரஜினி படங்கள் தோல்வி அடைவதும் ஒன்றல்ல. பாபா 7 கோடி செலவில் எடுக்கப்பட்டு 60 கோடிக்கு விற்கப்பட்டது(ரஜினி தான் தயாரிப்பாளர்.அதனால் அவர் சம்பளம் கணக்கில் இல்லை).40 கோடி வசூல் செய்தது.20 கோடியை ரஜினி வினியோகஸ்தர்களுக்கு திருப்பி கொடுத்தார். பாபா வரும்வரை தமிழில் அதிகவசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்ற படம்
படையப்பா.தோல்விப்படம் என கூறப்படும் பாபா வந்து அந்த ரெகார்டை முறியடித்தது.அடுத்து அந்த ரெகார்டை முறியடித்தது சந்திரமுகி.அதன்பின் சிவாஜி.
குசேலனும் அதேபோல் தான்.ரஜினி அதை 60 கோடிக்கு மேல் விற்கவேண்டாம் என
சொல்லியும் பாலசந்தர் அதை பிரமிட் சாய்மிரவுக்கு அதிகவிலைக்கு விற்று அவர்கள் அந்த காசை வெளிநாட்டில் எடுத்தும்விட்டனர்.உளநாட்டு வினியோகிஸ்தர்களுக்கு நஷ்டம். அதற்கு பதில் சரோஜா என்ற படத்தை இலவசமாக கொடுத்து சரிக்கட்டியது
சாய்மிரா.ரஜினி 10% சம்பளத்தை திருப்ப கொடுத்தார்.2 கோடி.பாலசந்தர் 10% லாபத்தை திரும்ப கொடுத்தார்.

மற்ற நடிகர்கள் படம் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பையும் போட்டியையும் ஏற்படுத்தவில்லை.
"குசேலன்" ரஜனி Guest Role ல் நடித்திருந்தாலும் அது ரஜனி படம் என்று நம்ப வைக்கப்பட்டது. ஆகவே சுமார் ஆறரை கோடியில் தயாரிக்கப் பட்ட படம் 65கோடிக்கு விற்பனையானதாகச் சொல்லுகிறார்கள். இதில் ரஜனிக்கு மட்டும் 25 கோடி. மூன்று தயாரிப்பளர்களுக்கும் தலா 12
கோடி என்று சொல்லப் படுகிறது.

முழுக்க, முழுக்க ரஜனி படம் என்று சொன்னது வேண்டுமானால் தயாரிப்பு
தரப்பு தவறாக இருக்கலாம். ஆனால் 'சிவாஜி' அனுபவத்துக்குப் பிறகும் கண்ணை மூடிக் கொண்டு கிணற்ரில் வீழ்ந்தது வாங்கியவர்களின் தப்பே தப்புதான். பாடம் படிப்பார்கள் என்றுநினைக்கிறீர்கள்......ஊஹூம்....!!!!!

!!மேலே உள்ளவை நான் சுட்டவை.!!
ஏதோ என்னால் முடிந்தது!!
மற்றப்படி ஒன்றுமில்லை.

Unknown said...

அந்த ஆக்கத்தை முன்னரும் ஓரிடத்தில் வாசித்தேன்.
அந்த ஆக்கத்தை மீள் பிரசுரம் செய்தமை பாராட்டுக்குரியது.

Anonymous said...

i dnt know y u ppl r wasting soo much of time in writting these stupid things,

CAn think about some productivity...

small advice

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner