ICC விருதுகள் 2008

ARV Loshan
0

நேற்று துபையில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த விருதுகள் வழங்கப்பட்டன. நான் ஏற்கெனவே நான் என்னுடைய ஊகங்களையும் ஆசைகளையும் தெரிவித்திருந்தேன்.. (நான் ஆசைப்பட்டு என்ன ? தீர்மானிப்பவர்கள் துபாயில இல்லையா இருந்தாங்க..) அதில் பெருமளவு ஊகங்கள் சரியாகவே அமைந்திருந்தன என்று நான் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். எனினும் பிரதானமான இரு விருதுகளும் நான் எதிர்பார்த்ததற்கு மாறாகவே அமைந்திருந்தன.

வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்ட முதுகெலும்பு ஷிவ்னரின் சந்தர்போல் தெரிவானார். மகேலவைத் தான் நான் எதிர்பார்த்தேன்.. எனினும் அவர் ஒருநாள் போட்டிகளில் பெரிதாக சாதிக்காதது சந்தர்போலுக்கு சாதகமாக அமைந்தது. ஏனையோரோடு ஒப்பிடும் போது குறைந்தளவிலான போட்டிகளிலேயே விளையாடிய சந்தர்போல் நல்ல சராசரியுடன் ஓட்டங்களைக் குவித்திருந்தார். அத்துடன் டெஸ்டிலும் ஒருநாளிலும் அவரது தரப்படுத்தல்களும் சிறப்பானதே.. (டெஸ்ட் முதலாமிடம், ஒருநாள் ஆறாமிடம்). இன்னுமொரு காரணம் ஸ்டேன்(Dale Steyn)க்கு சிறந்த டெஸ்ட் வீருக்கான (இந்த விருது தான் சந்தர்போலுக்கு கிடைக்கும் என நான் ஊகித்தேன்) விருது கிடைத்ததனால் சந்தர்போலுக்கு உயரிய விருதைக் கொடுக்கவே வேண்டியிருந்தது.
டேல் ஸ்டேன் இந்த விருதைப் பெற்றுக் கொள்ள அவரது அதிவேகப் பந்து வீச்சு மூலம் தென்னாபிரிக்க அணி பெற்ற நியூசிலந்து,இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தொடர் வெற்றிகளே காரணம் என்று சொல்லலாம். சோர்ந்து கிடந்த தென்னாபிரிக்க அணியின் வேகப் பந்து வீச்சுப் பகுதியினைத் தனியொரு நபராக நின்று தூக்கியவர் இவர். எனவே மகேல அடுத்தமுறை பார்க்கலாம் என்று விட்டு விட வேண்டியது தான்.



ஆனாலும் இலங்கை அணிக்கு நான் எதிர்வு கூறியது போலவே அஜந் மென்டிசும், அணி ஒழுக்கமும் இரு விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளன. நடுவர்கள் எந்த முறைப்பாடும் செய்யாத அணி என்ற பெருமையுடன் இலங்கை அணி தொடர்ச்சியான இரண்டாவது முறை இந்த விருதைப் பெற்றிருப்பதானது, இலங்கை அணிக்கு நிச்சயம் பெருமையானதே.

தோனியின் விருதும் நான் உட்பட பல பெரும் எதிர்பார்த்ததே.. மனுஷன் அறிமுகம் ஆன நாளில இருந்து அதிர்ஷ்ட தேவதை தலையில இருந்து நடனம் ஆடுறா.யுவராஜ் முதல் தடவையாக வழங்கப்பட்ட Twenty-20 விருதைத் தனதாக்கினார். இது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றே. ( சிக்ஸர் ஒரு ஓவரில் என்றால் சும்மாவா?)
அடுத்து ஐந்தாவது தடவையாக விருது வென்றிருக்கிறார் நடுவர் சைமன் தௌபில் (வேற யாரையும் நல்ல நடுவர்களா நம்ம தலைவர்கள் கருத மாட்டாங்களாம் ). ஐந்தாவது தொடர்ச்சியான விருது என்பது இன்னொரு முக்கிய விடயத்தையும் எமக்கு உணர்த்துகிறது.
அவரது தீர்ப்புகள் ஏனைய நடுவர்களுடன் ஒப்பிடும்போது வழுக்கள் குறைவானதாகவும் மற்றயவர்களை விட வயது குறைவான நடுவராக (37) காணப்படுவதால் வீரர்களோடு நல்ல அணுகுமுறைகளையும் தௌபில் கொண்டிருக்கிறார் என்பதே அது.


சிறந்த வீராங்கனையாக இங்கிலாந்து அணியின் தலைவி சாலட் எட்வர்ட்ஸ் ( Charlotte Edwards) தெரிவானார். அண்மைக்கால இங்கிலாந்து அணியின் வெற்றியில் அவரது பங்கு பெரியது. டெஸ்ட் அந்தஸ்து பெறாத அணிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வீரராக நெதர்லாந்தின் டென் டோச்செட் (Ryan ten Doeshcate) தெரிவானார்.(நான் எதிர்வு கூறியதன் படியே .. இவரை இவரது கடும் முயற்சிகளுக்காக எனக்கு ஓரளவு பிடிக்கும்.இங்கிலாந்தின் எஸ்செக்ஸ் பிராந்திய அணிக்காகவும் கலக்கி வருகிறார்)

வழமையாக விருதுகளை அள்ளி எடுக்கின்ற ஆஸ்திரேலியா அணிக்கு இம்முறை நடுவருக்கான விருது மாத்திரமே.. (வீழ்ச்சி ஆரம்பமோ?) பொண்டிங்சர்வதேச அணியின் தலைவர் என்பது மட்டுமே சின்ன ஆறுதல்...


ஏனைய விபரங்கள் இதோ.. நன்றி cricinfo

Cricketer of the Year - Shivnarine Chanderpaul

Test Player of the Year - Dale Steyn

ODI Player of the Year - Mahendra Singh Dhoni

Twenty20 International Performance of the Year Award - Yuvraj Singh

Emerging Player of the Year - Ajantha Mendis

Associate Player of the Year - Ryan ten Doeschate

Women's Cricketer of the Year award - Charlotte Edwards

Umpire of the Year - Simon Taufel

Spirit of Cricket Award - Sri lanka


ICC Test Team of the Year Graeme Smith (SA, capt), Virender Sehwag (Ind), Mahela Jayawardena (SL), Shivnarine Chanderpaul (WI), Kevin Pietersen (Eng), Jacques Kallis (SA), Kumar Sangakkara (SL, wk), Brett Lee (Aus), Ryan Sidebottom (Eng), Dale Steyn (SA), Muttiah Muralitharan (SL). 12th man: Stuart Clark (Aus).

ICC ODI Team of the Year Hershelle Gibbs (SA), Sachin Tendulkar (Ind), Ricky Ponting (Aus, capt), Younis Khan (Pak), Andrew Symonds (Aus), Mahendra Singh Dhoni (Ind, wk), Farveez Maharoof (SL), Daniel Vettori (NZ), Brett Lee (Aus), Mitchell Johnson (Aus), Nathan Bracken (Aus). 12th man: Salman Butt (Pak)


Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*