September 18, 2008

சிங்களப் பூச்சி....

இன்று காலை எனது விடியல் நிகழ்ச்சியில் கொஞ்சம் சின்ன சின்ன மருத்துவ,உபயோகமான தகவல்கள் கொடுக்கலாம்னு (எதோ நம்மளால முடிஞ்சதை நேயர்களுக்கு செய்யலாமேன்னு தான்) ஆரம்பிச்சேன். வழமையான கடிகள்,கன்ஜிபாய் நகைச்சுவைகள், இத்யாதிகளோடு தான்.

இணையத்தில் உலா வந்தபோது கிடைத்த ஒரு சில கரப்பொத்தான் தகவல்களையும் சேர்த்துக் கொண்டேன்.
கரபொத்தான் (கரப்பான் பூச்சி) ஆஸ்த்மா நோய் பரவ முக்கியமான காரணங்களில் ஒன்றாம்.

இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் நம்ம நேயர் ஒருவர் சொன்னார் இலங்கையின் மலையகப் பகுதிகளில் கரப்பானை "சிங்களப் பூச்சி (அல்லது வண்டு)" என்று அழைக்கின்றார்களாம்.
காரணங்கள் பலர் பலவிதமாக சொன்னார்கள். தொல்லை கொடுப்பதால், குறைவாக இருந்து பல்கிப் பெருகி வீட்டையே நாசமாக்குவதால்,

இன்னுமொன்று தலை இல்லாமல் கரப்பான் எட்டு நாட்கள் உயிர் வாழுமாம்.(பழைய சிங்களப் பழமொழி ஞாபகம் தானே.. சிங்களவன் மோடையன் தமிழன் யோடயன் - பலசாலி)

ஆனால் இந்தக் காலத்தில எல்லாமே அவங்க தானே என்று கேட்பதும் புரிகிறது..என்ன செய்ய .. கல் தோன்றி மண் தோன்று முன் தோன்றினாலும், கரப்பான் எங்களுக்கு முன் தோன்றியதாம்...

தலையில்லாமல் வாழ முடியுமாக இருந்தால், இளைய தளபதியின் ரசிகர்களின் செல்லப் பிராணியாக கரப்பான் தான் இருக்கும் என்று இன்று காலையில் நான் விடியல் நிகழ்ச்சியில் பிரகடனம் (!) செய்திருந்தேன்...

4 comments:

M.Rishan Shareef said...

//இன்னுமொன்று தலை இல்லாமல் கரப்பான் எட்டு நாட்கள் உயிர் வாழுமாம்.//

இல்லை லோஷன்.யாராவது தவறாகச் சொல்லியிருக்கக் கூடும். தலையில்லாமல் வாழாது. ஆனால் உணவில்லாமல் வாழும். அதன் இரத்தம் வெள்ளை நிறம். அத்தோடு அதனைத் தலைகீழாகப் புரட்டிவிட்டால் தானாகத் திரும்பத் தெரியாது.

ARV Loshan said...

அப்படியா? நானும் வேறெங்கோ படித்த ஞாபகம் இந்தத் தலையில்லாமல் வாழ்வது குறித்து. யாராவது உணமையைக் கண்டுபிடித்துத் தருவார்களா பார்க்கலாம்..(அட்லீஸ்ட் கரப்பானிடம் கேட்டாவது..)

Anonymous said...

தலையில்லாமல் வாழ்வது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் உயிர் இல்லாமல் வாழ முடியாது என்று தெரியும்.

Mohamed Faaique said...

தலையில்லாமல் வாழும் ஆனால் கொஞ்ச நாட்களில் பசியால் இறந்து விடும் என்று படித்து இருக்கிறேன்...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner