உலகக் கிண்ணம் எப்படியும் ஸ்பெய்ன் அல்லது நெதர்லாந்து இரண்டில் ஒரு அணிக்கு செல்லப் போகிறது. அந்த அழகான,பெருமை மிக்க கிண்ணத்துக்கான மோதல் நாளை..
அந்தக் கிண்ணம் தவிரவும் முக்கியமான ஆறு விருதுகள் இருக்கின்றன..
அவை பற்றி பார்க்கலாம்..
தங்கப் பாதணி - Golden Boot
இது அதிக கோல் அடிப்பவருக்கு கிடைக்கும்..
இப்போதைய நிலவரம்
World Cup Top Goal Scorers - After Semi Finals
இன்றைய,நாளையே போட்டிகளில் இது மாறலாம்..
இரண்டுபேருக்கும் பகிரப்படலாம்..
தங்கப்பந்து - Golden Ball
தொடரின் மிகச் சிறந்த வீரருக்கு வழங்கப்படுவது.
இறுதிப் போட்டியின் பின்னர் இது வழங்கப்படும்.
இதற்கு பத்து வீரர்களின் பெயர்களை இறுதிப் பரிசீலனைக்கு அறிவித்துள்ளது.
Sneijder and Villa vying for Golden Ball
ஸ்பெய்னின் வியாவுக்கு கூடுதல் வாய்ப்புக்கள் இருந்தாலும் இறுதிப் போட்டியில் ஸ்னய்டர் தனது அணியை வெல்ல வைக்கும் பட்சத்தில் வியாவை முந்தலாம்..
வழமை போல பந்தயக்காரர்கள் இந்தத் தங்கப் பந்தை வெல்ல வாய்ப்புள்ளவர்களுக்கும் பந்தயம் கணிக்கிறார்கள்.
Favourite For The Golden Ball
தங்கக் கையுறை - Golden Gloves
இது சிறந்த கோல் காப்பாளருக்கு வழங்கப்படுவது..
இது ரஷ்யாவின் (முனைய சோவியத் யூனியன்)முன்னாள் கோல் காப்பாளரான யஷினின் பெயரால் வழங்கப்படுகிறது.
இம்முறை இவ் விருதை வெல்ல அதிக வாய்ப்புள்ளவராக ஸ்பெய்ன் அணியின் தலைவரும் கோல் காப்பாளருமான ஐகர் காசியாஸ் கருதப்படுகிறார்.
சிறந்த இளம் வீரருக்கான விருது
ஜேர்மனிய வீரர் முல்லருக்கு கொடுத்தல் வாய்ப்புக்கள் இம்முறை உள்ளன.
இவருடன் மெக்சிகோ அணியின் சன்டோஸ், கானா அணியின் அன்றே அயேவ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
நேர்த்தியாக, விதிகளுக்கமைய விளையாடும் அணிக்கான விருது -
FIFA Fair Play award
இது மஞ்சள்,சிவப்பு அட்டைகள் குறைவாகப் பெற்ற, foulகள் குறைவாக அடித்த அணிக்கு வழங்கப்படுவதுண்டு
சிலவேளை நேர்த்தியாக விளையாடும் அணியே சம்பியனாவதால் அந்த அணிக்கே போய்ச்சேரும்.
இம்முறை யாருக்கோ?
ரசிகர்களை மகிழ்வித்த,பார்த்து ரசிக்கக் கூடிய அணிக்கான விருது -
FIFA Award for the Most Entertaining Team
அழகான ஆட்டத் திறன்களால், கோல் குவிப்புக்களால் ரசிகர்களை இம்முறை எந்த அணி கவர்ந்துள்ளது என நினைக்கிறீர்கள்?
சரி உருகுவே - ஜெர்மனி அணிகள் ஆட ஆரம்பித்து விட்டன..
நான் இன்றைய முன்னைய பதிவில் சொன்னது போல ஜெர்மனி அணியின் பெரும் தலைகள் காயம்+காய்ச்சல் காரணமாக அணியில் இல்லை.
க்லோசே இடைவேளைக்குப் பின்னும் வராவிட்டால் பிரேசிலின் ரொனால்டோவின் சாதனை அடுத்த உலகக் கிண்ணம் வரையாவது நிலைத்திருக்கும்.
அனுபவமின்மையால் ஜெர்மனியின் இளம் அணியை விட உருகுவே கொஞ்சம் பலமானதாக இன்றைய போட்டியில் தெரிகிறது.
நான் போட்டியை ரசிக்கப் போகிறேன்.
நீங்களும் இதை வாசித்துவிட்டு விருதுகள் யார் யாருக்குப் போகும் என்று ஊகித்து,யோசித்துக் கொண்டே போட்டியை ரசியுங்கள்..
இதுக்கும் ஆரூடம் கேட்க ஒக்டோபஸ், ஒட்டகம்,ஒநாய்னு தேடிப் போனீங்க.. ம்ஹூம்.. போகமாட்டீங்க..
அதுக்குன்னு சில பேர் இருக்காங்க..
பதிவேற்றும் நேரம் 18வது நிமிடத்தில் தோமஸ் முல்லேர் ஜெர்மனிக்கு முதல் கொலைப் பெற்றுக் கொடுத்துள்ளார்..
இவ் உலகக் கிண்ணத்தில் அவரது ஐந்தாவது கோல்..
தங்கப் பாதணிப் போட்டியில் டேவிட் வியாவையும், வெஸ்லி ஸ்னய்டரையும் சமப்படுத்திவிட்டார்.