FIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்

ARV Loshan
15
மின்னஞ்சல் விவகாரம் என்றவுடன் மிக ஆர்வத்தோடு கண்ணில் வெறியோடு, நாக்கில் ஊறும் நீரோடு நீங்கள் ஓடி வந்திருந்தால் ஐந்து செக்கன் நின்று நிதானியுங்கள்... 


விளையாட்டுப் பதிவுகளை எப்போது நான் இட்டாலும் அதில் சில எதிர்வுகூறல்களை ஆர்வத்துடன் அல்லது ஆர்வக் கோளாறுடன் சொல்லி சில நேரம் அது சரியாக அமைவதும் பல நேரம் நான் மூக்குடைபடுவதும் லோஷனின் பதிவுலக வாழ்க்கையில் ரொம்ப சகஜமே.. 


அதிலும் இந்த வருட Twenty 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோற்ற நேரம் என் மூக்கு உடைந்தது இன்று வரை ஆறவில்லை. ;)
ஆனாலும் அதற்காக நான் சலிப்பதில்லை..
நாம யாரு..
விக்கிரமாதித்தன் வம்சம் (ஐய்யோ கலைஞரின் பேரன் படம் இல்லிங்கோ...) 


FIFA உலகக் கிண்ணத்தையும் நான் விட்ட பாடில்லை.. எனது ஆங்கில கால்பந்து பதிவிலே இதுவரை 60 போட்டிகளுக்கு கூறிய ஆரூடங்களில் 41 நடந்துள்ளது என்பது என்னைப் பொறுத்தவரை பெரு வெற்றியே.


இதிலே எனது மிகக் சிறந்த எதிர்வு கூறலாக எல்லோரும் எதிர்பார்த்த பிரேசில் காலிறுதியில் நெதர்லாந்திடம் தோற்கும் என நான் அடித்து சொன்னதை சொல்லலாம்.


ஆனாலும் எல்லா ஆசிய நாடுகளும் வெளியேறிவிட்டன.
நான் ரசிக்கின்ற போர்த்துக்கல் எனது விருப்பத்துக்குரிய இன்னொரு அணியான ஸ்பெய்னினாலேயே வெளியே அனுப்பப்பட்டது.
இறுதியாக சனிக்கிழமை நான் மிகுந்த விருப்பம் கொண்டுள்ள ஆர்ஜென்டீனாவும் போயே போச்சு..




ஆர்ஜென்டீனா போனதை நினைத்து மனசு மிக வெம்பி,மெஸ்ஸி,மரடோனா எல்லோரையும் மனசுள் வசை பாடிக்கொண்டு அன்றைய பதிவை அவசரமாகத் தட்டச்சிக் கொண்டிருந்தால் ஒரு மின்னஞ்சல்..


கடுப்புடன் வாசிக்க ஆரம்பித்தால் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது..


மின்னஞ்சலை அனுப்பி இருந்தவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பதிவர்/மருத்துவர் தம்பி பாலவாசகன் ..
என் ராசி மீது அப்படியொரு நம்பிக்கையா?
நான் ஒரு ராசியில்லா ராஜா.. :)




Sent at 10:26 PM (GMT+05:30). Current time there: 5:03 PM. ✆
to arvloshan@gmail.com
date Sat, Jul 3, 2010 at 10:26 PM
subject ஐயோ..!ஐயோ..!
mailed-by gmail.com
signed-by gmail.com


ஐயோ லோசன் அண்ணா... !!!

தயவு செய்து உடனடியா அருகாமையிலுள்ள ஒரு சாத்திரியை நாடி உங்கள் சாதக பொருத்தங்களை கணித்துப்பார்க்கவும் இல்லை எனில் நீங்கள் ஆதரவு வழங்கும் அணிகள் பாவம் அண்ணா நான் இந்த கடவுள கத்திரிக்காய் சாத்திரம் ... குறிப்பு கோதாரி ஒண்டையும் நம்புறதில்லை ஆனால் இப்போ முதல் தடவையா பீல் பண்ணுறன் யோய்ச்சு பாருங்கோ t20 இறுதிப்போட்டி யில தொடங்கினது ஆசியாக்கிண்ணம் நட்வஸ்டு இப்போ ஆசன்டீனா என்று பாவமண்ணா..!! அவங்கள் உங்களுக்கு வியாழனோ சனியோ தெரியாது ஏதோ தப்பான பெட்டில சஞ்சரிக்குது ...
எனக்கு சத்தியமா இது ஏதோ சீரீயசான விசயமாத்தான படுகுது ... 
ஆனா நீங்க இந்த மெயில சீரீயசா எடுக்காதீங்கோ முடிஞ்சா சிரிச்சுப்போட்டு தொடர்ந்து இலங்கைக்கும் ஆஸிக்கும் உங்கள் மகத்தான ஆதரவை வழங்குங்கோ... புரிஞ்சுதா !!


Balavasakan [] பாலவாசகன்




சிரித்துக்கொண்டே பதிவைப் பாதியில் விட்டுவிட்டு பதில் மடலை அனுப்பினேன்..


Sent at 11:33 PM (GMT+06:00). Current time there: 5:33 PM. ✆
to Bala Vasakan <######@gmail.com>
date Sat, Jul 3, 2010 at 11:33 PM
subject Re: ஐயோ..!ஐயோ..!
mailed-by gmail.com




அன்பு டாக்குத்தர் பாலா..


அதெல்லாம் சரி இன்று ஆஸ்திரேலியா வென்றதையும், நேற்று நெதர்லாந்து வென்றதையும்  பற்றி என்ன நினைக்கிறீங்கள்?
அதேபோல இன்றிரவு வெல்லும் எனது இரண்டாவது ஆதரவு அணி ஸ்பெய்ன், ஜெர்மனியைப் பழி வாங்கும். ;)


விட மாட்டேன்..
இப்படிக்கு
விக்கிரமாதித்தன்  
LOSHAN
http://arvloshan.com/






சொன்னது மாதிரியே ஸ்பெய்ன் வென்றது.. ஆனால் பாலவாசகன் சொன்னது போல என் ராசியோ என்னவோ மிக சிரமப்பட்டு இழுத்தடித்து ஒரு கோலால் தான் வெற்றி கிடைத்தது.


போட்டி முடிந்ததும் அதிகாலையிலேயே இந்த விக்கிரமாதித்தனுக்கு வேதாளத்திடமிருந்து (மன்னிச்சுக்கோங்க பாலா) மறு மடல்...




sender-time Sent at 2:33 AM (GMT+05:30). Current time there: 5:07 PM. ✆
to Loshan ARV
date Sun, Jul 4, 2010 at 2:33 AM
subject Re: ஐயோ..!ஐயோ..!
mailed-by gmail.com
signed-by gmail.com
hide details Jul 4 (2 days ago)


ஓகோ..!

என்ன இருந்தாலும் உங்கள் முதன்மையான ஆதரவு ஆர்ஜன்டீனா தானே ஆகவே அதற்குத்தான் உங்கள் ராசிபலன் வேலை செய்தது !!
ஐயோ...ஐயோ... அப்ப இப்ப நாங்க இரண்டு பேரும் ஒரே கட்சில வந்திட்டம் ஏனெண்டால் எனது அபிமான அணி ஸ்பெயின் வித் டேவிட் வில்லா தான் சேர்மனியை சந்திக்க போகுது ஆனா நீங்க ஸ்பெயினுக்கு சப்போர்ட் பண்ணப்போறீங்க எண்டு நினைக்கிறப்ப  பயமாக்கிடக்குது அண்ணா !! சேர்மனிக்காரன் அறிஞ்சா சந்தோசப்படுவாங்கள் !!

இப்படிக்கு
வேதாளம் 
பாலவாசகன் 
-- 
Balavasakan [] பாலவாசகன்


http://balavasakan.blogspot.com






என்ன கொடுமை லோஷா இது.. 
உன் ராசி உலகப் புகழ் பெறுதே.. தற்செயலாக மரடோனாவுக்கோ, ஜெர்மனி,ஸ்பெய்ன் நாடுகளின் வீரர்களுக்கோ தமிழ் தெரிந்து, நம்ம பதிவுகளை வாசித்தால் என் நிலைமை என்னாவது???
தங்கள் எதிரணிகளுக்கு ஆதரவு வழங்குமாறும், தாங்கள் தோற்கிற மாதிரி ஊகித்து பதிவு போடுமாறு கேட்டு தொல்லை பண்ண மாட்டாங்க?


Loshan ARV
sender-time Sent at 8:01 AM (GMT+06:00). Current time there: 5:39 PM. ✆
to Bala Vasakan <######@gmail.com>
date Sun, Jul 4, 2010 at 8:01 AM
subject Re: ஐயோ..!ஐயோ..!
mailed-by gmail.com
hide details Jul 4 (2 days ago)


இப்படி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சு தான் நாங்கள் ஒன்றோடு நிற்பாட்டாமல் இன்னொன்றையும் தயாரா ஆதரவுக்கு வச்சுக் கொள்றது.. ;)


இலங்கை, ஆஸ்திரேலிய - கிரிக்கெட்டில்..
ஆர்ஜென்டீனா,ஆசிய அணிகள், ஸ்பெய்ன்,நெதர்லாந்து,போர்த்துக்கல் - கால்பந்தில்..


பரவாயில்லை.. நானும் நீங்களும் ஒரே கட்சில வந்தாலும் இப்ப உங்க புண்ணியமும் சேரப் போகுது தானே.. ;)


பி.கு ௦= நல்ல சாத்திரியார் ஒருவரை சஜெஸ்ட் செய்து அனுப்பவும் ;)


மீண்டும் மீண்டும் விக்கிரமாதித்தன்
LOSHAN
http://arvloshan.com/






நாளைக்கு 
நெதர்லாந்து vs உருகுவே..
நாளை மறுதினம்
ஜெர்மனி vs ஸ்பெய்ன்..


நெதர்லாந்து-ஸ்பெய்ன் இறுதிப் போட்டி பார்க்கத்தான் ஆசை..
ஆனால் நான் இப்படி சொன்னா பாலா போன்ற நம் நண்பர்கள் நிச்சயமா உருகுவே ஜெர்மனி தான் வரும் என்று சொல்வார்கள்..


நெதர்லாந்து முதலாவது அரையிறுதியில் வெல்வது நிச்சயம்.
ஆனால் ஜெர்மனியின் அதிரடி வேகமும், அசத்தல் வியூகமும் ஸ்பெய்ன் என்ற என் சிங்கத்தை சாய்க்கும் போல கவலையாய் இருக்கு,,
பார்க்கலாம் வியா என்ற வேங்கை எம்மிடம் இருக்கே..
விக்கிரமாதித்தன் ஓய மாட்டான்.. ;)


(இல்லை திருந்த மாட்டான் என்று யாரோ சிலர் முணுமுணுப்பது கேட்கிறது) 


*பாலவாசகனின் அனுமதியுடனேயே அவரது மின்னஞ்சல்களும் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வேதாளம் என்று விழித்ததனால் பாலா கோபப்பட மாட்டார் எனத் தெரியும். அதனால் அவர் படத்தையும் நான் பயன்படுத்தவில்லை.

வேதாளம் படங்கள் தேடியபோது கிடைத்த ஒரு வித்தியாசமான வேதாளம்..

Post a Comment

15Comments

Please Select Embedded Mode To show the Comment System.*