உலக கிரிக்கெட் ரசிகர்கள்,வீரர்கள்,விமர்சகர்களின் கண்கள் அனைத்தும் காலிப் பக்கமே நாளைமுதல் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு இருக்கப் போகின்றன.
முரளியை இந்த நேரத்தில் பேட்டிக்காக தொடர்புகொண்டு குழப்புவது உசிதமற்றது என்பதனால் அவரது அன்பான தாயாரை வெற்றி FM வானொலி மூலமாக இப்போது தொடர்புகொண்டோம்.
அவர் முரளி பற்றி,முரளியின் ஓய்வு முடிவு பற்றி சொன்ன கருத்துக்கள் விளையாட்டு நிகழ்ச்சியான அவதாரத்தினூடாக இன்று இரவு 7.05க்கு உங்கள் வெற்றி FM வானொலியில்..
இணையத்தினூடாக வெற்றி வானொலி கேட்க..
www.vettri.lk
முரளியின் மனைவி,மகன் & தாயார்
அடிக்கடி முரளியின் தாயார் திருமதி.முத்தையா சொல்கிற ஒரு விஷயம் நான் அவர்கள் வீட்டுப் பிள்ளை போலத் தானாம்.. காரணம் எனது குரல் இல்லாமல் அவர்கள் வீட்டின் காலைகள் விடிவதில்லையாம்.. :)
98 முதல்..இன்று வரை.. :)
இதுவும் ஒரு பெருமை தானே..
அந்த அன்பான தாய்க்கும் அவர் தந்த அருமையான உலக சாதனை மன்னனுக்கும் எனதும் எமதும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.