நண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..

ARV Loshan
8
கொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்.. 
தலைப்பாக இன்று விடியல் நிகழ்ச்சியில் கொடுத்து நேயர்களின் கருத்துக்களைக் கேட்டிருந்தேன்..




நேயர்களின் கருத்துக்கள்..


பலபேரிடம் இருந்து சரமாரியான திட்டுக்கள்..
வெள்ளிக்கிழமை நாள் பார்த்து இப்படியெல்லாம் அபசகுனமாப் பேசுறீங்களே..
உயிர்,சாவு பற்றி இப்படி வேடிக்கை பேசக்கூடாது.


இப்படி உரிமையுடன் கடிந்தவர்கள் பலர்.. 


இப்படித் தெரிஞ்சிருந்தால் நேற்றே இந்தத் தலைப்பை சொல்லிட்டு இன்று கருத்துக் கேட்டிருப்பேனே என்று வழமை போலக் கலாய்த்தேன்.
நெருப்பு என்று சொல்வதால் வாய் வெந்துவிடுமா?


அதிகமானோர் வீட்டை விட்டு ஓடி விடுவோம், மயங்கி விழுந்து விடுவோம், சிலவேளை மாரடைப்பு வந்து இறந்துவிடுவோம் என்று சொல்லி இருந்தார்கள்.


காலைப் பார்ப்பார்களாம்.. ஆவிகள்,பேய்கள் போன்றவையாக இருந்தால் கால் இருக்காதாம்.


தொலைபேசியில் வந்த செய்தி உண்மையாக இருந்தாலுமே முதல் உதவி செய்ய முயற்சிப்பார்களாம்.
பேயாக,ஆவியாக இருந்தாலும் நண்பன் தானே..


நண்பர் ஆவியாக வந்தாலும் எதுவும் செய்ய மாட்டார் என்றார்கள் சிலர்.


ஒருவர் இறந்து ஆவியானால் தனக்குப் பிரியமானவர்களைத் தேடித்தான் வருவார்களாம்.அதனால் ஒரு வித மகிழ்ச்சி என்றார்கள் சிலர்.


ஆவியை முதல் தரம் பார்த்த அதிர்ச்சியில் மயக்கம் வரும்..


இன்னொருவர் சொன்னது - பயத்தினால் சில சமயம் இறந்துவிடுவேன். கொஞ்சம் பயம் குறைவாக இருந்தால் சாமியறைக்குப் போய் சூலம் அல்லது சிலுவை எடுத்துக் கையில் வைத்துக் கொள்வேன்.


இன்னொரு நண்பர் சொன்னது - உயில் பற்றி ஏதாவது பேச வந்திருந்தால் கவனமாகக் கேட்டு உபசரிப்பேன்.என்னிடம் தந்த கடனைப் பற்றிப் பேச வந்தால் யாராவது மந்திரவாதிக்கு தொலைபேசுவேன்.


நம்ம இர்ஷாத் சொன்னது - யோவ் இந்தாள் உயிரோடிருக்கும் வரை தான் தொல்லை தருதுன்னு பார்த்தால் இறந்த பிறகுமா 


 தாங்க முடியாது அழுதுருவேன்..
எதை நம்புவது என்று குழம்புவேன்..
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து சிந்தித்து முடிவெடுப்பேன்.. 
இப்படியெல்லாம் கலவையான கருத்துக்களும் வந்திருந்தன..


பின்னூட்டம் வழியாக வந்த அனைத்துக் கருத்துக்களையும் ரசித்தேன்..


குறிப்பாக கோவியார்.. :)
அண்ணன் சினிமா அதிகமாகப் பார்த்துக் கெட்டுப் போயிட்டார்.
ஆதிரை -
இந்தப் பதில் யாரிடமாவது இருந்து வரும் என எதிர்பார்த்தேன்.


கார்த்திக் சிதம்பரம் - பயமுறுத்துறீங்க ஐய்யா..


கங்கோன்,சுபாங்கன்,வதீஸ், செந்தில் - இயல்பான,உங்களிடமிருந்து எதிர்பார்த்த பதில்கள்


நன்றி யோ..


ரோமியோவின் பக்கம் - உண்மையை சொல்லியுள்ளீர்கள் :)




எதுக்கும் இன்று அலுவலகம் முடிந்து வீடு போகும்போது கவனமாகப் போகவேண்டும் போல.. ;)


எதுக்கும் இதற்கு முந்தைய அந்த திகில் கதைப் பதிவை இரவில் தனியாக இருக்கும்போது மீள் வாசிப்பு செய்யுங்களேன்.. வித்தியாசமான விடைகள் வரலாம்.. :)

Post a Comment

8Comments

Please Select Embedded Mode To show the Comment System.*