July 02, 2010

எட்டுக்குள்ளே யாரு? FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் பாரு



FIFA உலகக் கிண்ணத்தில் காலிறுதிப் போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெறுகின்றன.
நான் முன்னைய கால்பந்து உலகக் கிண்ணப் பதிவில் எதிர்வுகூறியதுபடியே அதே எட்டு அணிகள் தெரிவாகியுள்ளன.




FIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்








இந்தக் காலிறுதிப் போட்டிகள் நான்கில் ஒரு போட்டியைத் தவிர மற்ற மூன்று போட்டிகளிலுமே வெற்றியாளரை ஊகிப்பது சிரமமானதே..


டேவிட் வியா (David Villa) என்ற கோல் குவிப்பு எந்திரத்தைக் கொண்டுள்ள ஸ்பெய்ன் அணி ஒரு முழுமையான அணியாகத் தெரிகிறது.
முன்வரிசை முதல் மத்திய களம்,பின் வரிசை என்று சகல பகுதிகளும் மிகப் பலம் வாய்ந்ததாகவே இருப்பதோடு இகர் கசியாசின் கோல் காப்பு அபாரம்.
எனவே ஸ்பெய்ன் அணி பரகுவேயை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் என்று உறுதிபட இப்போதே சொல்லிவைத்துவிடலாம்.


மற்றைய போட்டிகளை ஒவ்வொன்றாகப் பார்த்தோமானால்..




நெதர்லாந்து - பிரேசில்


இந்த அணிகள் படிப்படியாக வளர்ச்சி கண்டு 1970 களில் உச்சம் தொட்டவை.
இரு அணிகளும் கடந்த 40 ஆண்டுகளில் உலகின் தலை சிறந்த கால்பந்து வீரர்களை உலகுக்கு தந்துள்ளன.
ஆனால் பிரேசில் அதற்குப் பின் இரு உலகக் கிண்ணங்களை சுவைத்தாலும் நெதர்லாந்து 80௦க்கு முன்னர் இரு இறுதிப் போட்டித் தோல்விகளை சந்தித்துள்ளது.


கடந்த 30 ஆண்டுகளாக உலகின் முக்கியமான கால்பந்து அணிகளுள் ஒன்றாகக் கருதப்பட்டாலும் இன்னமும் உலகக் கிண்ணத்தை வென்றதில்லை,குறைந்தபட்சம் இறுதிப் போட்டிக்கு கூட சென்றதில்லை என்ற அவப்பெயரைத் துடைக்கும் வாய்ப்புடன் நெதர்லாந்து.


ஆறாவது உலகக் கிண்ணத்தைப் பெரும் ஆர்வத்துடன் களமிறங்கியுள்ள பிரேசில் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு முன் இருக்கும் மிகப்பெரிய தடையை இன்று சந்திக்கிறது.
காரணம் இன்று வென்றால் அரையிறுதியில் ஒப்பீட்டளவில் பலவீனமான உருகுவே அல்லது கானா அணியே பிரேசிலிடம் அகப்படும். 


மூன்று தடவைகள் இவ்விரு அணிகளும் தமக்கிடையே உலகக் கிண்ணங்களின் மிக முக்கியமான போட்டிகளில் சந்தித்தபோதும் அவை மூன்றுமே மிக விறுவிறுப்பானதும் மறக்கமுடியாத்துமான போட்டிகளாக அமைந்தன..


1974 இல் நெதர்லாந்து முதல் சுற்றின் இறுதிப் போட்டியில் பிரேசிலைத் தோற்கடித்து அந்த வெறியுடன் இறுதி வரை நுழைந்தது.
1994 உலகக் கிண்ணத்தில் கால் இறுதியில் இவ்விரு அணிகளும் சந்தித்தபோது கடுமையான போட்டிக்குப் பின்னர் கடைசி நிமிட கோல் ஒன்றின் மூலமாக 3 -2 என்ற வெற்றியைப் பெற்ற பிரேசில் பின்னர் உலகக் கிண்ணத்தையும் தன வசப்படுத்தியது.
1998 உலகக் கிண்ணத்தில் அரையிறுதியில் மோதிய இவ்விரு அணிகளும் விட்டுக் கொடுக்காமல் விளையாடி பெனால்டி மூலமாகவே வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்டார்.பிரேசில் வென்றது.


இன்று மீண்டும் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நிகழ்த்துகின்றன.


இரு அணிகளிலும் வரிசையாகப் பிரபலமான, உலகின் தலைசிறந்த வீரர்கள்.


பிரேசிலின் ரோபின்ஹோ,ககா,எலானோ,பாபியானோ,மைகொன்,ஜில்பேர்டோ சில்வா (Robinho,Kaka,Elano,Fabiano,Maicon,Gilberto Silva)என்பவர்களோடு கோல் காப்பாளர் ஜூலியோ செசாரும்(Julio Cesar) நம்பிக்கை நட்சத்திரங்கள்.




இவர்களுக்கு ஈடு கொடுக்கும் ஒரு அணி நெதர்லாந்து..
டேர்க் குய்ட்,ஆர்ஜன் ரோப்பன்,ரொபின் வான் பேர்சி,வெஸ்லி ஸ்னய்டர்,வான் பொம்மல்,ப்ரோன்கொர்ஸ்ட்,வான் டேர் வார்ட்,பாபேல் (Dirk Kuyt,Arjen Robben,Robin Van Percie,Wesley Sneijder,Van Bommel,Bronkhorst,Van der Wart,Babel)என்று வரிசை நீளம்.
இமுறை தாம் விளையாடிய எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இரு அணிகளில் ஒன்று நெதர்லாந்து.
இதன் காரணம் இவர்களது சகல அம்சங்களும் பலத்துடன் சமநிலை பொருந்தியவை.




இரண்டு அணிகளினதும் முன் கள வீரர்களின் ஒற்றுமையும் புரிந்துணர்வும் எதிரணிகளின் கோல் காப்பாளர்களுக்கு நடுக்கம் கொடுப்பவை.


பிரேசிலின் பயிற்றுவிப்பாளரும் 94 உலகக்கிண்ணம் வென்ற அணியின் தலைவருமான டுங்கா சொல்வதன் படி இன்றைய முதலாவது போட்டி Will be a beautiful game.


நீங்கள் கால்பந்து போட்டிகளின் நுட்பங்களை அறியவும் அதுக்குள்ளே ஊறிக் கால்பந்தை ரசிக்கவும் விரும்பினால் இந்தப் போட்டியைத் தவறவிடாமல் பாருங்கள்.
யார் வென்றாலும் அவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது நிச்சயம்.


பலரும் ப்ரேசிலுக்கே கூடுதல் வாய்ப்புக்கள் இருப்பதாக சொன்னாலும் என்னைப் பொறுத்தவரை நெதர்லாந்தின் வேகம் அவர்களுக்கு வெற்றியைத் தரும் என நினைக்கிறேன்.
                                                 Kaka, Elano & Robinho


                                               Robben,Van Percie & Sneijder






உருகுவே - கானா


ஆரம்பத்தில் பெரிதாகக் கணக்கெடுக்கப்படாத இரு அணிகள் இவை.
இன்று இரண்டு அணிகளுக்குமே இப்போட்டி சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்தது.
1930 ,௧௯௫௦ ஆக்கிய ஆண்டுகளில் உலகக் கிண்ணம் வென்ற அப்போதைய பலம் பொருந்திய அணியான உருகுவே அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிப் போட்டியில் விளையாடுகிறது.
கானா முதல் தடவையாக..




ஆபிரிக்க அணியொன்று காலிறுதிக்குள் நுழைந்திருப்பது இது மூன்றாவது தடவை. (கமரூன்,செனெகல் அணிகளுக்குப் பிறகு)
இன்று வென்றால் உலகக் கிண்ண அரையிறுதியில் விளையாடும் பெருமை பெற்ற முதலாவது ஆபிரிக்க நாடாக கான பெயர் பெறும்.
(ஆசிய நாடுகள் ஜப்பான்,தென் கொரியா ஆகியன அருமையாக விளையாடி இருந்தாலும்,இறுதிவரை போராடினாலும் தத்தம் ஆட்டங்களில் தோற்றது கவலை தான்.உடல் தோற்றம்,உயரம் என்பவை இந்த இடங்களிலே தான் முக்கியமாகிறது என நினைக்கிறேன்)




உருகுவே அணியின் வேகம்+முரட்டுத் தனத்துக்கு கானாவின் ஆபிரிக்கப் பலம் ஈடுகொடுக்குமா என்பதே இன்றைய கேள்வி..
அத்தனை மில்லியன் ஆபிரிக்கர்களின் கனவு நனவாக வேண்டும் என்று மனசு நினைக்கிறது.


ஆனால் டீகோ போர்லன்,சுவாரெஸ் (Dieogo Forlan,Suarez)ஆகியோரின் கூட்டணி கானாவை அச்சுறுத்தும் போலத் தெரிகிறது.


                                                                                            Suarez & Forlan


கானாவின் நட்சத்திரங்களான அசமொவா கியான்,அன்றே அயேவ்,ஸ்டீவென் அப்பையா(நம்ம ஊர்ப் பெயர் போல இல்லை?),போடேங் (Asamoah Gyan,Andre Ayew,Steven Appiah,Boateng)ஆகியோர் நம்பிக்கை தருகிறார்கள்.




இந்த ஆட்டத்திலும் விறு விறுப்புக்குக் குறைவிருக்காது.


கானாவின் ஆட்டத்திறமையை மெச்சி நாளை அவர்களுக்கு நெல்சன் மண்டேலா விருந்து கொடுக்கவுள்ளார் என்பது உபரி செய்தி.
கறுப்பு காந்தியிடம் செல்லும் போது இந்தக் கறுப்பு நட்சத்திரங்கள் (Black Stars கானாவின் செல்லப் பெயர்) காலிறுதி வெற்றி செய்தியுடன் செல்லட்டும்.






அடுத்த இரு காலிறுதிகள் பற்றி நாளை பதிவிடுகிறேன்..


காரணங்கள் - 
ஆர்ஜென்டீனா, ஸ்பெய்ன்,ஜெர்மனி பற்றி நிறையவே அலச வேண்டியிருக்கும்.
இன்று இது மூன்றாவது பதிவு.
இந்தப் பதிவு இப்போதே நீண்டு விட்டது.
இனி கொஞ்சம் மேலதிக ஆணிகள் எனக்காக வெயிட்டிங்,




சில முக்கிய தரவுகள்/தகவல்கள்..


இந்த உலகக் கிண்ணத்தில் இதுவரை கூடுதலான கோல்களை அடித்துள்ளவர்கள் ஆர்ஜெண்டீனாவின் ஹிகுவேய்ன்,ஸ்பெய்னின் டேவிட் வியா, மற்றும் ஸ்லோவாக்கியாவின் ரொபேர்ட் விட்டேக்.
தலா நான்கு கோல்கள்.
முழு விபரங்கள்...




Top Goal scorers after the 2nd round




இதுவரை மொத்தமாக 123 கோல்கள் பெறப்பட்டுள்ளன.


ஸ்பெய்ன் அணியும் போர்த்துக்கலும் ஒவ்வொரு கோல்களை மட்டுமே எதிரணிக்குக் கொடுத்தன.


காலிறுதிக்கு வந்துள்ள எட்டு அணிகளில் நான்கு லத்தீன் அமெரிக்க நாடுகள்.
தென் அமெரிக்காவிலிருந்து வந்த ஐந்து அணிகளில் சிலி மட்டுமே வெளியேறியுள்ளது.


இந்த எட்டு அணிகளில் பிரேசில்,ஆர்ஜென்டீனா,ஜெர்மனி,உருகுவே ஆகிய நான்கு அணிகள் மட்டுமே உலகக் கிண்ணம் வென்றுள்ளன.
ஸ்பெய்னும்,நெதர்லாந்தும் அரையிறுதிகள் கண்டவை.


உலகக் கிண்ணம் வென்று தந்த இரு தலைவர்கள் ஆர்ஜெண்டீனாவுக்கும் பிரேசிலுக்கும் பயிற்சி அளிக்கிறார்கள்.


இன்றிரவு போட்டிகளைப் பார்த்த பின்னர் மீதி விஷயங்களை எல்லாம் நாளை பார்க்கலாமா?


12 comments:

anuthinan said...

நான்தான் முதலாவது

shan shafrin said...

சிறியதொரு திருத்தம்.... ஜப்பான் அணி தெரிவாகவில்லை அண்ணா.....

Subankan said...

ஆர்ஜென்டீனா, பிரேசில் இரண்டும் இறுதிப்போட்டிக்கு வரவேண்டும் என்று பலரையும்போல நானும் எதிர்பார்க்கிறேன்.

தர்ஷன் said...

கானா அரையிறுதி வரவேண்டுமென்பது என் அவா
பிரேசில் எதிரணிக்கு ஏற்ப தன் ஆட்ட வியூகத்தை மாற்றிக் கொள்கிறது கவனித்தீர்களா? இன்றையப் போட்டியில் வென்றாலே உலகக்கிண்ணத்தைப் பெற்றது போலத்தான். மறுபக்கம் ஆர்ஜெண்டினாத்தான் ஜெர்மனி,ஸ்பெயின் என மோத வேண்டியுள்ளது.

தர்ஷன் said...

//பலரும் ப்ரேசிலுக்கே கூடுதல் வாய்ப்புக்கள் இருப்பதாக சொன்னாலும் என்னைப் பொறுத்தவரை நெதர்லாந்தின் வேகம் அவர்களுக்கு வெற்றியைத் தரும் என நினைக்கிறேன்.//

உங்கள் விருப்பம் நிறைவேறி விட்டது லோஷன் அண்ணா
ச்சே இப்படி ஆகி விட்டதே

ILA (a) இளா said...

Brazil வீட்டுக்கு கிளம்பியாச்சு. ;9

கன்கொன் || Kangon said...

தகவலுக்கு நன்றி. ;)

யோ வொய்ஸ் (யோகா) said...

இன்று பிரேசிலை நெதர்லாந்து வீட்டுக்கு அனுப்பி விட்டது, அடுத்த போட்டியில் சுவாறெஸ் எப்படியும் கானாவை அனுப்பி விடுவார்.

நெதர்லாந்து உருகுவே முதல் அரையிருதியிலும் ஆர்ஜன்டினா ஸ்பெயின் அடுத்த அரையிறுதியிலும் விளையாடும் என நினைக்கிறேன்.

இப்பேதைக்கு ஆர்ஜன்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து அணிகளில் ஒன்றுக்கே கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு அதிகம். அதிலும் ஆர்ஜன்டினாவே வெல்லும் என எனக்கு படுகிறது,

காரணம்

மெஸ்ஸி, மெஸ்ஸி, மெஸ்ஸி, மெஸ்ஸி, மெஸ்ஸி, மெஸ்ஸி, மெஸ்ஸி

ப்ரியா பக்கங்கள் said...

உங்களின் ஊகம் சரியானது..
I LOVE HOLLAND.

K. Sethu | கா. சேது said...

//பலரும் ப்ரேசிலுக்கே கூடுதல் வாய்ப்புக்கள் இருப்பதாக சொன்னாலும் என்னைப் பொறுத்தவரை நெதர்லாந்தின் வேகம் அவர்களுக்கு வெற்றியைத் தரும் என நினைக்கிறேன்.//

ஓ - இதைத்தான் twitter இல சொன்னீர்கள் போல - நான் இப்பத்தான் பார்த்தேன். தங்கள் முன்னைய பதிவொன்றில் இவ்வளவு sure ஆக இல்லாமல் இருந்ததை வைத்துதான் அப்படி twit செய்திருந்தேன் - ஹி.ஹி...

சரியாக எதிர்வு கூறியுள்ளீர்கள். பாராட்டுகள்.


நெதர்லாந்தின் அதிர்ச்சி வைத்தியத்தில் twitter உம் அவுட் போல - இப்ப கிட்டத்தட்ட 30 நிபிடங்களாக over capacity.

Vathees Varunan said...

நீங்கள் அனுமானித்தது சரியாகிவிட்டது. கமான சளைக்காத நெதர்லாந்து அணியினரின் முயற்றியே இந்த வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன். ஆனாலும் இரு அணியினரும் கொஞ்சம் முரட்டுத்தனத்துடனே விளையாடினார்கள் என்று கூறலாம்

Vathees Varunan said...

நீங்கள் அனுமானித்தது சரியாகிவிட்டது. வேகமான சளைக்காத நெதர்லாந்து அணியினரின் முயற்றியே இந்த வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன். ஆனாலும் இரு அணியினரும் கொஞ்சம் முரட்டுத்தனத்துடனே விளையாடினார்கள் என்று கூறலாம்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner