April 17, 2009

IPL அவல் - 2.. இன்னும் சில ஜிலு ஜிலு படங்களுடன்

நாளைக்கு ஆரம்பிக்கப்போகிற IPL போட்டிகள் பார்ப்பதற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருப்பீர்கள். (என்னைப் போல)

IPL அவல் பதிவு தந்து 24 மணித்தியாலங்களுக்குள் பகுதி – 2 போடக் கூடியளவுக்கு இன்னும் பல சுவாரஸ்ய நிகழ்வுகள்.

மே மாதம் 24ம் திகதி வரை தினம்தோறும் எங்கள் வீடுகளுக்கு வந்து மெகா சீரியல் பார்க்கும் பெண்களுக்கு தலைவலி தரப்போகும் IPLஇன் நாளை முதல் நாளில் இடம்பெறும் போட்டிகள்.
Chennai Super Kings v Mumbai Indians at Cape Town
Bangalore Royal Challengers v Rajasthan Royals


நேற்று IPL மூலம் வெளியிடப்பட்ட தகவலின் படி வழமையாக ஒரு Twenty - 20 போட்டிக்காக எடுக்கும் கால அளவை விட இம்முறை IPL T-20 போட்டியொன்றுக்கு 15 நிமிடங்கள் அதிகம் எடுக்குமாம்.
கிடைக்கிற வாய்ப்பையெல்லாம் பணமாக மாற்ற வழி பார்த்துக்கொண்டிருக்கும் லலித்மோடி குழுவினர் இந்த 15 நிமிடங்கள் மூலமாகவும் சம்பாதிக்கப்போவது பலமில்லியன்கள்.
மைதானங்களில் பார்ப்போருக்கு நேரடி நடன விருந்து.. ம்ம்ம் குடுத்து வச்சவங்க
தொலைக்காட்சியில் பார்க்கும் எங்களைப் போன்றவருக்கு (அப்பாவிகள்) 7 1/2 அந்த நிமிடங்களும் (2 தரம்) ஏதாவது சுவாரஸ்யமாத் தருவாங்களாம்.. அதுக்கும் அனுசரணை இருக்காமாம்.

IPL fever இப்போது தென்னாப்பிரிக்காவில்!

ஒரு கண்கவர் வீதியுலாவில் தென்னாபிரிக்காவே நேற்று களபரமாகி – கலவரப்பட்டுவிட்டது.
தென்னாபிரிக்க வீதிகளில் எப்போதும் இப்படி ஒரு நட்சத்திர ஊர்வலம் நடந்திருக்கப் போவதில்லை! இனியும் நடக்க வாய்ப்பில்லை! பொலிவூட்டின் உச்சபட்ச நட்சத்திரங்கள் - ஷாருக்கான், ப்ரீத்தி ஸிந்தா, ஷில்பா ஷெட்டி-
நூற்றுக் கணக்கான நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்
மில்லியன் கணக்கான ரூபாய்கள், டொலர்களைத் தம் வசம் வைத்துள்ள பெரும் பணக்காரர்கள்
இருந்து பாருங்கள் இம்முறையும் IPL களைகட்டும் - நடப்பது தென்னாபிரிக்காவிலாக இருந்தாலும்!


இந்தியாவின் இரு முக்கிய நட்சத்திரங்கள் மீது நேற்றைய கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் M.S.கில்

பத்மஸ்ரீ என்ற இந்தியாவின் உயர்விருதை வாங்க சமூகமளிக்காத தோனி மற்றும் ஹர்பஜன் மீதே இந்தக் கோபம்.

நாட்டின் உயரிய விருதுக்கே மதிப்பளிக்காத அளவு IPL பணம் படுத்தும் பாடு பெரும்பாடு.

காயங்களால் பலபேரை இழந்துள்ள பரிதாப அணி பஞ்சாப். கடந்த முறை பஞ்சாபுக்காக அதிக விக்கெட்டுக்களை எடுத்த ஸ்ரீசாந், அதிவேக பிரெட் லீ, அதிரடி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஷ்,
தற்போது மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து நட்சத்திரம் ஜெரோம் டெய்லரும் விபத்தில் சிக்கிவிட்டார். எஞ்சியிருப்பது இர்ஃபான் பதான், V.R.V.சிங் மற்றும் ரமேஷ் பவார்.
துடுப்பாட்டம் தான் பஞ்சாப் கிங்ஸ் XIஐக் கொண்டு செல்லும் என்று நம்பவேண்டி உள்ளது. யுவராஜ், மகேல ஜயவர்தன மற்றும் குமார் சங்ககார.
எல்லா IPL அணிகளுக்கும் பொலிவூட் நட்சத்திரங்கள் பொலிவு சேர்த்து ஜொலிப்பு காட்டிவரும் நிலையில் நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி ஒரு மூச்சையும் காணோம்.

டாக்டர் இளைய தளபதி பற்றி சைலன்ஸ்! (அதான் பேசாம இருக்காரில்ல...) –
தென்னாபிரிக்கா போவாரா?
நயன்தாராவைத்தான் தூதுவரா இருந்து தூக்கிப் போட்டாச்சு... தோனியின் சிபாரிசில் அவரது 'நண்பி'யான லக்ஷ்மிராய்க்காவது வாய்ப்பைக் கொடுத்தால் என்ன?

குறைந்தபட்சம் அதிக 'வெயிட்' கொடுக்க நமீதா?
இம்முறை IPLஇன் form இலுள்ள பலம் வாய்ந்த துடுப்பாட்ட அணி எது என்று கேட்டால் - எந்தவித யோசனையுமில்லாமல் நான் சொல்லும் பதில் டெல்லி டெயார் டெவில்ஸ்!!

உலகின் அத்தனை அதிரடி, அச்சுறுத்தும் துடுப்பாட்ட வீரர்களையும் நிரப்பி வைத்துள்ளார்கள்.

உலகின் எந்தவொரு சிறந்த பந்து வீச்சாளனையும் அடித்து நொருக்கும் அகோரப் பசியிலுள்ள இந்திய ஜோடி வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீருடன், அவுஸ்திரேலியாவின் புதிய அதிரடி இளம்புயல் டேவிட் வோர்னர், தென்னாபிரிக்காவின் அண்மைக்கால சூப்பர் ஸ்டார் A.B.டீவில்லியர்ஸ் (இவர் நம்ம ஜாதிங்கோ – பதிவர் – சொடுக்கி வாசியுங்கோ), இலங்கையின் அண்மைக்கால அதிரடி வீரர் T.M.டில்ஷான் என்று அணி களைகட்டுகிறது.

இவர்களோடு இந்தியாவின் உள்ளுர் போட்டிகளில் வெளுத்து வாங்கியுள்ள தினேஷ் கார்த்திக், மனோஜ் திவாரி....
பந்து வீச்சில் வேறு கிளென் மக்ரா, நியூ சீலந்தின் வெட்டோரி, ஃபர்வீஸ் மஹ்ரூப், தமிழகத்தின் யோமகேஷ், அமித் மிஷ்ரா என்று பளபளப்பதால் இறுதிப்போட்டிகள் வரை டெல்லி திக்விஜயப் போகலாம்!

(ஆனா ரொம்பவும் அமைதியா இருக்காங்களே....)

தென்னாபிரிக்க மண்ணின் வளத்தையும் வாய்ப்பையும் தனதாக்கும் எண்ணத்தில் உற்சாகமாய் இருக்கிறது விஜய் மல்லையாவின் பெங்களுர் ரோயல் சலன்ஜர்ஸ்.

கடந்த முறை அதிகம் செலவளித்தும் கவிழ்ந்து போக கடுப்பில் இருந்த மல்லையா – 'சுவர்' டிராவிட்டை தலைமைப் பதவியிலிருந்து தூக்கிவிட்டு – மிகஅதிக விலையில் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனன் (இவர் பிறப்பால் ஒரு தென்னாபிரிக்கர்) தலைவராக்கி – மேலும் தென்னாபிரிக்க பலத்தோடு வெற்றிகளை எதிர்பார்த்திருக்கிறார்.

ரோயல் சலன்ஜர்ஸின் ஜக்ஸ் கல்லிஸ், மார்க் பௌச்சர், டேல் ஸ்டெயின் என்று மூன்று பேருமே இப்போது form உடன் கலக்கிக்கொண்டிருப்பவர்கள்.
கடந்த முறை இந்த மூவருமே இந்தியாவில் சோபிக்கவில்லை. இம்முறை சொந்த மண்ணில் பிரகாசிப்பார்கள் என்று விஜய் மல்லையா நம்பியிருக்கிறார். (இந்த முறையும் கட்ரீனா கைப் வருவாங்களா? )
நம்ம நண்பர் கஞ்சிபாய் சொன்னார் ரோயல் சலன்ஜர்ஸின் எது சொதப்பலாக இருந்தாலும் Cheer leadersல அவங்க தான் best ஆம்!

எல்லாம் மல்லையாவின் ராசி & ஆசி

படங்கள் நன்றி -cricinfo மற்றும் பல தளங்கள்


20 comments:

Anonymous said...

I have a doubt... where is anni? is she with you or in her home town... Ungalana unmaya sollungo anna? Blue film endu oru article.. piraku rendu karum pidicha ipl articles... Enna accident aagapoothu endu payanthathila ethum mulai pisake.. summa sollungo..

வந்தியத்தேவன் said...

இம்முறை ஷில்பா ஷெட்டியின் வரவால் ராஜஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டை மறந்துவிடுவார்கள். அதிலும் ஷேர்ன் வார்ன் பெண்கள் விடயத்தில் அடிக்கடி சர்ச்சைப்படுபவர் ஷில்பாவுடன் என்ன நடக்கபோகின்றதோ.

விஜயின் ஆதரவு இரு வருடத்திற்க்குத் தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மனேஜர் ஸ்ரீநிவாசன் விகடன் பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆகையால் இம்முறை தளபதி இல்லை, நயந்தாரா இல்லை. டோணியைப் பார்ப்பதற்காக லஸ்மிராஜ் சிலவேளைகளில் தென் ஆபிரிக்கா செல்லலாம் சென்றமுறை அவருடன் ஊர் சுற்றித் தான் டோணி கோப்பையைக் கைவிட்டவர், ஆனால் தென் ஆபிரிக்காவில் தான் டோனி முதல் முதல் 20க்கு 20 கோப்பையைக் கைப்பற்றினவர் ஆகவே அந்த ராசி வேலை செய்யலாம்.

நல்ல காலம் இளையதளபதி தென் ஆபிரிக்கா செல்லவில்லை சென்றிருந்தால் தன் குருவி, வில்லுப் படங்களை தென் ஆபிரிக்காவில் வெளியிட்டு ரஜனிக்கு ஜப்பானில் ரசிகர் உள்ளதுபோல் எனக்கு தென் ஆபிரிக்காவில் ரசிகர்கள் என சைலன்ஸாக சொல்லியிருப்பார்.
பின்னூட்டம் ஒரு பதிவு சைஸ்சுக்கு வந்துவிட்டது

சி தயாளன் said...

enjoy anna :-))

Media 1st said...

சூப்பர் ஜிலு ஜிலு போடோஸ் & போஸ்

Anonymous said...

உலகின் அத்தனை அதிரடி, அச்சுறுத்தும் துடுப்பாட்ட வீரர்களையும் நிரப்பி வைத்துள்ளார்கள்....

"Akshay Kumar" irukkirraar illayaa...appidi thaan irukkum..:-)

Sanjay

Anonymous said...

உலகின் அத்தனை அதிரடி, அச்சுறுத்தும் துடுப்பாட்ட வீரர்களையும் நிரப்பி வைத்துள்ளார்கள்.


Akshay Kumar teamnaa appidi thaan irukkum.... :-)

Sanjay

Technologies Unlimited said...

to good dude

kanavugalkalam said...

SUPER APPU.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

அருமையான பதிவு,போட்டோ எல்லாம் அருமை :தொடற்க உங்கள் பதிவு......

ஆதவன் said...

colorfull photos.. indha murai IPL mogam irukkiradhu enru parppom..

Anonymous said...

உங்கள் தளம் மிகவும் அரமையாக உள்ளது....

http://www.ithayanila.com

Thank you

அஜுவத் said...

விரைவில் கஞ்சி பாய் ஆயிடுவீங்க வீட்ல இனி சோறு தண்ணி எல்லாம் கொஞ்சம் கஸ்டம் தான்

R:vRaj said...

ugkal thakavalkalukku rompa thanks

ARV Loshan said...

Triumph said...
I have a doubt... where is anni? is she with you or in her home town... Ungalana unmaya sollungo anna? Blue film endu oru article.. piraku rendu karum pidicha ipl articles... Enna accident aagapoothu endu payanthathila ethum mulai pisake.. summa sollungo..//


என்ன தங்கச்சி இது.... அண்ணனுக்கு இந்த பதிவுலக சுதந்திரத்தைக் கூட உங்க அண்ணி தரலன்னா எப்படி? என்ன இது சின்னப் புள்ளத்தனமா?

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
இம்முறை ஷில்பா ஷெட்டியின் வரவால் ராஜஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டை மறந்துவிடுவார்கள். அதிலும் ஷேர்ன் வார்ன் பெண்கள் விடயத்தில் அடிக்கடி சர்ச்சைப்படுபவர் ஷில்பாவுடன் என்ன நடக்கபோகின்றதோ.//

அந்தாள் மச்சமுள்ள ஆளய்யா... கொடுத்து வச்சவர். ஷில்பா மட்டும் லேசுப்பட்டவரா? வெகுவிரைவில் மணமுடிக்கப் போகிறாராம்... (வேறு யாரையோ) ஏதோ எல்லாம் smooth ஆ நடந்தா சரி!விஜயின் ஆதரவு இரு வருடத்திற்க்குத் தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மனேஜர் ஸ்ரீநிவாசன் விகடன் பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆகையால் இம்முறை தளபதி இல்லை, நயந்தாரா இல்லை. டோணியைப் பார்ப்பதற்காக லஸ்மிராஜ் சிலவேளைகளில் தென் ஆபிரிக்கா செல்லலாம் சென்றமுறை அவருடன் ஊர் சுற்றித் தான் டோணி கோப்பையைக் கைவிட்டவர், ஆனால் தென் ஆபிரிக்காவில் தான் டோனி முதல் முதல் 20க்கு 20 கோப்பையைக் கைப்பற்றினவர் ஆகவே அந்த ராசி வேலை செய்யலாம்.//

இதுவரை லக்ஷ்மிராய் தெ.ஆ போனதா தகவலில்லை... அதுதான் சென்னைக்கு ராசியில்லை போல?


நல்ல காலம் இளையதளபதி தென் ஆபிரிக்கா செல்லவில்லை சென்றிருந்தால் தன் குருவி, வில்லுப் படங்களை தென் ஆபிரிக்காவில் வெளியிட்டு ரஜனிக்கு ஜப்பானில் ரசிகர் உள்ளதுபோல் எனக்கு தென் ஆபிரிக்காவில் ரசிகர்கள் என சைலன்ஸாக சொல்லியிருப்பார்.
பின்னூட்டம் ஒரு பதிவு சைஸ்சுக்கு வந்துவிட்டது//

நல்ல வேளை ஷாருக்குப் போட்டியா விஜய் வரல...(பதிவு தான் பின்னூட்டம் அளவுக்கு இருக்கப்படாது)

ARV Loshan said...

’டொன்’ லீ said...
enjoy anna :-))

நன்றிங்கோ...(இந்தப் படங்கள் பார்த்தும் நீங்க IPLக்கான CABLE இணைப்பு எடுக்கலையா?)
=============

தர்ஷன் DSHAN2009 NETWORK said...
சூப்பர் ஜிலு ஜிலு போடோஸ் & போஸ்//

நன்றி... நன்றி... உங்க சந்தோசத்துக்குத் தனே எல்லாமே...

ARV Loshan said...

Anonymous said...
உலகின் அத்தனை அதிரடி, அச்சுறுத்தும் துடுப்பாட்ட வீரர்களையும் நிரப்பி வைத்துள்ளார்கள்....

"Akshay Kumar" irukkirraar illayaa...appidi thaan irukkum..:-)

Sanjay//

அதுசரி... ஒரு soft drinkக்காக எவ்வளவு செய்கிறார் அவர் (விளம்பரத்தில்)

=================

Amazing Photos said...
to good dude//

Tx mate

ARV Loshan said...

m bala said...
SUPER APPU.//
நன்றி ஐயா

==============
தமிழ் வெங்கட் said...
அருமையான பதிவு,போட்டோ எல்லாம் அருமை :தொடற்க உங்கள் பதிவு......//
நன்றி வெங்கட்.... உங்கள் அன்பு, ஆதரவும் தொடர்க

ARV Loshan said...

ஆதவன் said...
colorfull photos.. indha murai IPL mogam irukkiradhu enru parppom..//

இருக்கும் ஐயா.... பாருங்கள்!

======================
Anonymous said...
உங்கள் தளம் மிகவும் அரமையாக உள்ளது....

http://www.ithayanila.com

Thank you//

நன்றி

ARV Loshan said...

Ajuwath said...
விரைவில் கஞ்சி பாய் ஆயிடுவீங்க வீட்ல இனி சோறு தண்ணி எல்லாம் கொஞ்சம் கஸ்டம் தான்//
அப்பாடா...இதுவரை ஆகலை என்று ஏற்றுக்கொண்டவரை மகிழ்ச்சி தான்!

===================

R:vRaj said...
ugkal thakavalkalukku rompa thanks//
நன்றி

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner