April 09, 2009

A for அசின்.. B for பாவனா..

என்ற இந்த தொடர் பதிவுக்கு நண்பர் ரிஷான் ஷெரீப் (இந்த வாரத்தின் தமிழ்மண நட்சத்திரம்) அழைத்து நான்கு மாதங்களாகிறது..

இணையத்தளங்களை அறிமுகப்படுத்தும் இந்த தொடர்பதிவில் பயனுள்ள, பிற இதுவரை அறிமுகப்படுத்தாத இணையத் தளங்களை தரவேண்டும் என்ற தேடுதலில் ஈடுபட சோம்பலும், நேரம் இன்மையுமே தாமதத்துக்கு காரணம்...

இனியும் தாமதித்தால் நண்பர் ரிஷான் மத்திய கிழக்கிலிருந்து தேடி வந்திடுவார் என்பதனால்.. இதோ எப்படியாவது கொஞ்சம் கஷ்டப்பட்டு மேலதிகமாக உழைத்து சக அலுவலக ஊழியர்கள் அருந்ததி (அக்கா), வனிதா ஆகியோரையும் கொஞ்சம் கஷ்டப்படுத்தி இன்று போடுகிறேன் பதிவு..

அதுவும் இந்த வாரம் ரிஷான் தமிழ்மணத்தின் நட்சத்திரமாக ஜொலிப்பதால் என்னுடைய இந்தப்பதிவும் அவருக்கு சிறப்பு சேர்ப்பதாக அமையும் என நம்புகிறேன்..
தொடர்பதிவுக்கு என்னை அழைத்த ரிஷானுக்கு இவ்வேளையில் என் நன்றிகள்..

(இனி யாராவது என்னைத் தொடர் பதிவுக்கு கூப்பிடுவீங்களா????)


A for அசின்.. B for பாவனா..
(தலைப்பு சும்மா கவர்ச்சிக்கு.. ;))


ஆங்கில அகரவரிசைப்படி ஒவ்வொரு எழுத்திலும் சில இணையத்தளங்கள் தந்துள்ளேன்.. அநேகமானவை சுவாரஸ்யமானவை..

ஒவ்வொரு எழுத்திலும் நான் தந்துள்ள சில விஷயங்கள் எனக்கு வாழ்க்கையில் பிடித்தமானவை.. அல்லது பிடித்தவர்கள்  :) 

இந்தத் தொடர் பதிவில் என்னால் மாட்டி விடப்படும் புண்ணியம் கட்டிக் கொண்டவர்களை அறிந்துகொள்ள பதிவை முழுவதுமாகப் படித்து விட்டு பாருங்கள்.. 
  
>>>>>>>>>>>

A – Appa,Amma அதன் பின் தான் Asin

உங்கள் இணையத்தளங்கள் பற்றிய சகல விதமமான தரவுகள், புள்ளி விபரங்கள், தேடுதல் வழிகள் உள்ளடக்கிய ஒரு தகவல் திரட்டு தளம்.
உங்கள் வலைப்பதிவுகளின் வீச்சு (reach), range போன்றவற்றையும் அறிந்தகொள்ளலாம்

Request a no obligation free quote for web design, blog design, shopping carts,..DivClear wordpress theme. Read more
graphics மற்றும் இதர இணையத்தள சேவைக்கான பிரயோசனமான தளம்


B – Blog, Books, Black (colour), brothers

அமெரிக்க அதிபர் ஒபாமா பற்றிய நையாண்டிகள், நகைச்சுவைகள், ஊடகசுதந்திரத்துக்கு சிறப்பான உதாரணங்கள்.

World’s Largest Website for Best and Worst Lists
உலகிலே சிறந்த, மோசமானவற்றுக்கான மிகப்பெரிய தளம் - வேடிக்கையானதும் விபரமானதும் கூட பல வேடிக்கையான, சீரியஸான கருத்துக் கணிப்புக்களும் உண்டு. நாமும் உருவாக்கலாம்.

கூந்தல் பராமரிப்பு, சிகையலங்காரம், புனைமுடி, சிகையலங்கார நிபுணர்களுக்கான இணையத்தளம்


C-Cricket, Comics/cartoons, cheques (hee hee), chess, coke

இலங்கையின் பங்குச்சந்தையின் உத்தியோகபூர்வ இணையத்தளம். பங்கு விலைகள், சுட்டெண், ஏற்ற இறக்கம், சந்தை நிலவரம் அத்தனையும் துல்லியமாக

officeஇல் பொழுதுபோகா நேரங்களில் (சிலபேருக்கு முழுநேரமே அப்படித்தானே) நாங்களாகவே அணிகளை உருவாக்கி, பெயரிட்டு விளையாடக்கூடிய வேடிக்கையான கிரிக்கெட் விளையாட்டுத்தளம். எனக்கு சொந்தமான மூன்று அணிகள் இருக்கின்றன.. இவற்றுள் பிரபல நட்சத்திரங்கள்,விளையாட்டு வீரர்கள் (நாங்களும் franchise தானுங்கோ), என் என் நண்பர்களும் என்னுடன் விளையாடுகிறார்கள். வர்றீங்களா நீங்களும்? (என்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இன்னொரு விஷயம் இது)D - Driving, Denims, dart game, doves,DVD

Morethan 7,500 free fonts (for Mac and PC)
7500க்கு மேற்பட்ட இலவச எழுத்துருக்களை பெற்றுக்கொள்ளக் கூடிய தளம் 


The people’s approach to news and features. Digg brings together items from across the net. 
உலகின் மிகப் பிரபலமான இணைய/வலைப்பூ தொகுப்பு.. தேவையான அனைத்தையும் தேடிப்பெறலாம்..


E - earth, exercise, education

இசைக்கலைஞர்கள், ஒலிபரப்பாளர்கள், இசை பயிலுவோர் என்று அனைவருக்கும் முக்கியமான செவிப்புலப் பயிற்சி தரும் தளம்.
இசை,ஒலி என்றாலே செவிதானே – அன்றாட வாழ்க்கையிலும் எம் காது கேட்கும் திறனை சீர்மைப்படுத்தவும் இந்தத்தளத்தில் உபயோகமான பயிற்சிகள் உள்ளன.

பொது அறிவு, தகவல் தரும் தளம்.

Excellent all-round travel site. 
பயணிகளுக்கு மிகப்பயனுள்ள தளம். பயணம் செய்ய சிறந்த இடம்,விமானப்பயணக் கட்டணங்கள் என்று சகல தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.F - Friends, fun, fire, facebook,flowers,films

உடல் பராமரிப்பு, உடற்பயிற்சி, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது பற்றிய பல பிரயோசனமான தகவல் தரும் ஒரு தளம்.

உடற்பயிற்சி பற்றிய அறியாத விஷயங்களோடு, சுவாரசியமான கட்டுரைத்தொகுப்புகளும் உள்ளன.

உலகின் எந்த மூலையிலும் 24மணிநேர நடக்கும் சகல மட்ட கால்பந்தாட்டம் போட்டிகளின் விபரங்களையும் நிமிட வாரியாக அறிந்துகொள்ளலாம். பந்தயமும் (சட்டபூர்வமாக) கட்டி பணம் சம்பாதிக்கலாம் (அல்லது தொலைக்கலாம்)


G - Google, gifts (when receiving), gym,guitar

Gift does for when you can’t think what to buy someone. 
பரிசு வாங்கும் போது யாருக்கு, என்ன வாங்கலாம் என்று தடுமாருபவரா நீங்கள்? உங்களுக்கான தளம் இது..
வயது,பால்,விருப்பம்,உங்கள் பட்ஜெட் என்று விஷயங்களை நீங்கள் கொடுத்தல் பொருத்தமான பரிசைத் தெரிவு செய்கிறது. 

Geekologie is a geek blog dedicated to the scientific study of gadgets gizmos and awesome
geek என்றழைக்கப்படும் சோம்பேறித்தனமான சில புதினமான கண்டுபிடிப்புக்கள், ஆச்சரியமான விஷயங்களை உள்ளடக்கிய தளம்.


H - Harshahasann (என் மகன்), Hussey & Hayden (cricketers)
 
PREDICT THE NEWS
வாங்க செய்திகளை எதிர்வுகூறலாம்.. 


Engaging encyclopedia of the modern 
சில பொருட்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதைத் தெளிவாக விளக்கங்களோடு சொல்லும் ஒரு தளம்.


I - intenet, ice cream, Inuvil

Interactive practice for FCE.CAE.PET IELTS.TOEFL ®PBT and TOEIC®tests.
பிரபலமான பல பரீட்சைகளுக்கான பயிற்சிகளை செய்து பார்க்கக் கூடிய தளம்.


World’s most popular free message board for bloggers and message board users.
வலைப்பதிவுகள் மற்றும் message boardஇல் அங்கத்துவர்களாக இருப்பவர்கள் தங்களுக்கான படங்களை இலவசமாகப் பெற்று சேமித்துக் கொள்ளும் ஒரு இலவசத் தளம்.


J - Johnson (Mitchell), jokes, Jaffna

வேண்டிய நகைச்சுவைகளை விதவிதமாகத் தேடி எடுத்து சிரிக்க 

அனைவருக்கும் பயனுள்ள தகவல் தளமK - Kamalhassan, Kerala (Kochin too), kids, kiss

interesting english site
சுவாரஸ்யமான பல்சுவை ஆங்கிலத்தளம் - அனைத்து விஷயமும் உண்டு.

Addictive series of Flash games including the hypnotically soothing Boomshine
பல்வேறு சுவாரஸ்யமான flash games க்கான தளம்


L - Lovesuki (என் மனைவி), Loshan (hee hee), Lakes,lime juice, Literature

இலங்கையிலுள்ளோருக்கும், இலங்கை பற்றி அறிந்துகொள்ள விரும்புவோருக்குமான பயனுள்ள விபரக்கொத்து. எந்தவொரு விடயமும் கிடைக்கிறது இங்கே.

The Longman Dictonary of contemporary English Online is an online version of the CD-ROM of the Longman Dictionary of Contemporary English. updated edition.
இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய துல்லியமான ஆங்கில அகராதி. Longman Dictionary இன் onlineவடிவம். அறிவியல் ஆராய்ச்சிகள், புதிய விஞ்ஞான விஷயங்கள் பற்றிய ஒரு இணையத்தளம். எல்லாவற்றைப் பற்றியும் எல்லாம் சொல்லும் ஒரு சகலதறை இணையத்தளம்M - Music, Muralitharan, Mickey Mouse, mic

 A site about everything

ஆண்கள் model ஆக மாற ஆசைப்பட்டால் இங்கே சொடுக்குங்கள். 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும் பல வாய்ப்புக்கள்.

இலங்கையில் வாகனங்கள் வாங்க, விற்க ஒரு தளம்.


N - Nuwara eliya, Nokia, Newcastle United (football club)
   ஏமாந்தீங்களா நமீதாவை நான் சொல்லவே மாட்டேனே..
 
விஞஞானம், ஆராய்ச்சி, தொழிநுட்பவிஷயங்களுக்கும், ஆராய்ச்சி செய்கின்ற பல்கலைக்கழக மாணவர்கள், விஞ்ஞானிகளுக்கென்று உருவாக்கப்பட்ட இலங்கையின் தேசிய விஞ்ஞான அமையத்தின் உத்தியோகபூர்வத்தளம்.

odo.nona.net – simple and fast to-do list management
இலகுவான, எளிதான இணைய மூலமான database கட்டமைப்புத்தளம்.

O - Ootty, Originals

இணையப் பத்திரிகைகளுக்கான ஒரு தளம்.

Wall Street Journal
உலக வர்த்தகத்தையே தீர்மானிக்கின்ற அமெரிக்க Wall street பங்குச்சந்தைகள் பற்றி அறியத்தரும் தளம்.


P - ஒருவர் பெயர் சொன்னால் நாளை என் பெயர் இருக்காது.., pens, poems,photography 

English blogs collector
ஆங்கில வலைப்பதிவுகளின் தொடுப்பொன்று – பல சுவையான வலைப்பதிவுகளை வாசிக்கலாம்.

The superfast way to send large files over the web. 
அளவில் மிகப் பெரிய கோப்புக்களை இணையத்தினோடு அனுப்ப உதவுகிறது இந்தத்தளம்.

Reporting on the intersection of science, technology and every day….of phones designed for constant connection to the social network site..
பிரபல விஞ்ஞான தகவல் தொழில்நுட்ப விஷயங்களை நாள்தோறும் புதிது புதிதாய் அறியத் தரும் தளம். 


Q - Questioning, Quiz,Quotes

Take Free Fun Quizzes & Tests.Cool online Fun Quiz & Test Fun Quizzies and Fun Test by Quizwebsite .com
புதிர்கள்,வினா,விடைகள் வேடிக்கையான கேள்விகளுக்கான தளம்.


R - Radio, rose, reading,rain

Hindi,Tamil and Telugu songs.
தமிழ்,ஹிந்தி இன்னும் பலமொழிப் பாடல்களைக் கேட்கவும் தரவிறக்கவும் ஒரு பிரபலமான தளம்.

செய்திகளை உலகெங்கிலுமிருந்து உலகெங்கும் தருகின்ற பிலபல செய்திச் சேவையின் தளம்.

S - Sun (Sooriyan), SPB, Sun glasses

Spy pig is a simple email trecking system that sends you a notification email as soon as the recipient opens and reads your message.
நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்களை யாருக்கு அனுப்புகிறீர்களோ அவர் படிக்கிறாரா என்பதை உளவு பார்க்க உதவுகிறது இந்த சுவாரசியமான தளம்.


தகவல் திரட்டு தளம்.

T - THAMIZH,tea, tamilish n Thamizhmanam (சரி இல்லை தானே???)

Adope and Microsoft software online video training by industry experts.
பிரபல மென்பொருள்களுக்கான online பயிற்சிகளைப் பெற இந்தத் தளம் உதவுகிறது

வலைப்பதிவர்களுக்கான பல நுணுக்கங்கள் வழிமுறைகள் புதிய ideaக்கள் தருகின்ற உபயோகமான தளம்.

U - u,u n u:) நீங்கள் எல்லாருமே

உங்கள் டிஜிட்டல் படங்களைக் கொண்டு விதவிதமாக போட்டோ அல்பங்களை (web albums) உருவாக்க உதவும் இலவச மென்பொருள் 

அமெரிக்காவின் அ முதல் z வரை அத்தனை விஷயங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் அறியத்தரும் சகலதுறை இணையத்தளம்.


V - V (என் முழுப்பெயரே தொடங்குவதால் இந்த எழுத்தின் மீது அப்படியொரு காதல்)), Vairamuththu,               Vettri

இலங்கையின் பிரபலமான வானொலி (அடியேன் முகாமையாளராக இருக்கின்ற) வெற்றி எப்.எம் இன் உத்தியோகபூர்வ இணையத்தளம் கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்.


VOIP to Phone Worldwide
இலங்கையிலிருந்து உலகெங்கும் மிகக் குறைவான கட்டணங்களில் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த உதவும் ஒருதளம்.

W - Warne (Shane), waterfalls, wristwatches

Shows you the dates of Jewish, Christian, Buddhist, Muslim, Hindu and American holidays from now to 2010.
2010ஆம் ஆண்டுவரை எந்தெந்த நாளில் எந்தெந்த சமயத்தின் விடுமுறை நாட்கள் முக்கிய தினங்களைக் காட்டுகின்ற தளம்.


Events, attractions, openings and exhibitions from around the world. Enter a location and dates and the site will show listings.
உலகம் முழுவதும் இடம்பெறும் நிகழ்வுகள்,கண்காட்சிகள்,விசேடங்கள் பற்றித் துல்லியமாகத் தகவல் தருகிறது இந்தத்தளம்.


கிரிக்கெட்டின் பைபிள் என்று வர்ணிக்கப்படுகின்ற,கிரிக்கெட்டின் அத்தனை பதிவுகளையும் கொண்ட சஞ்சிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்.

X - ?????(XXX???) ;)

Currency converter convering every world currency. 
உலகத்தின் ஒவ்வொரு நாட்டினதும் நாணய அலகுகளின் பணப்பெறுமதிகளை இன்னொரு நாணய அலகில் அறிந்துகொள்ள உதவும் தளம்.

Y - yoghurt

நண்பர்களுக்கான,நட்புறவுக்கான மற்றொரு தளம் 

வர்த்தக நடவடிக்கை, தனிப்பட்ட தொழிலில் ஈடுபடுவோருக்கான பிரயோசனமான தளம் இது.. 

Z - zebra, Zinger burger (KFC)

A suite of free business programs. From word processing and presentation software to tools for taking notes in meetings.
Planning projects and creating databases.
வர்த்தக நடவடிக்கைகள் இதர அலுவலக நடவடிக்கைகளுக்கான இலவசத் தளம் இது. 

Possibly the most dangerous site on this list.Zoopla gives sale prices of recently sold homes and the tricky bit – estimates the value of the rest. 
இது கொஞ்சம் ஆபத்தான தளமும் கூட.அண்மையில் விற்கப்பட்ட வீடுகள் சொத்துக்களின் விபரங்களை சொல்வதோடு மேலும் பலவற்றின் சொத்து விபரங்களைக் கணித்தும் சொல்கிறது.

============ @@@@============


இந்த தொடர்பதிவுக்கு இப்போது நான் அழைக்கும் நண்பர்கள்

தமிழ்நெஞ்சம் (இவரது தொழிநுட்பப் பதிவுகள் மிகப்பயனுல்லவை.. ரசித்து வியந்திருக்கிறேன்)

புல்லட் பாண்டி (கலகலப்பான நகைச்சுவைப் பதிவுகளால் கவர்ந்த ஒருவர்.. அண்மைக்காலமாக டெக் பதிவுகளிலும் அசத்துகிறார்.. ) 

ஹிஷாம் (கடந்த முறை நான் அழைத்தும் இப்ப வரை எழுதாத ராமசாமி.. இம்முறையும் எழுதாவிட்டால் கண்டனப்பதிவு இடப்படும் என்று எச்சரிக்கிறேன்)


பி.கு - அழைத்தவர்கள் மாட்டி விட்டதற்காக திட்டாதீங்க..
  என்னால் அழைக்கப் படாதவர்கள் கூப்பிடலையே என்று குறை நினைக்காதேங்க.. நீங்களும் என்  நண்பர்கள் தான். நான் அழைக்காமலே ஜோதியில் கலக்கலாம்.15 comments:

Subi said...

Loshan, Lovesuki enra per vaichavangalai athan kaaranathai keddu solringala...

Unga wedding time intha perai keddappave arinchuka virumbinan.. ippa neengala sollida pirahu kedkalamla..

(sorry. e-kalappai not working)

Tech Shankar said...

அசத்தல்

SASee said...

A-Z வரையான அகராதியில்
இணைய முகவரிகள். அனேகமானோருக்கு பயன் தரும் என நினைக்கிறேன்.

தந்தமைக்கு நன்றி லோஷன் அண்ணா.

வழிப்போக்கன் said...

சூப்பர் லோஷன் அண்ணா..

M.Rishan Shareef said...

அன்பின் லோஷன்,

அருமையான இணையத்தளங்களைத் தேடியெடுத்துப் பட்டியலிட்டிருக்கிறீர்கள்.அதனால் காலதாமதத்தைக் கணக்கில் கொள்ளத்தேவையில்லை. :)

பாராட்டுக்கள் நண்பரே. நல்ல பதிவு !

வல்லை சிவா said...

சிறந்த தேடல். உங்கள் வானொலித்துறையின் வெற்றிக்குக் காரணத்தை மீண்டும் ஒருக்கா நிரூபிச்சிட்டீங்கள்.

நிறையத் தளங்களை அறிந்து கொண்டோம் நன்றிகள். அடிக்கடி இப்பிடித் தேடித் தாங்கோ..

Sinthu said...

எதிர்பார்த்த பல இருந்தன........... முக்கியமாக ஒன்று..........

சாந்தி நேசக்கரம் said...

//(இனி யாராவது என்னைத் தொடர் பதிவுக்கு கூப்பிடுவீங்களா????)//

இனியொருவருக்கும் அப்படியொரு எண்ணமு வராதெண்டு நம்புகிறேன். அப்படி வந்தால் அவர்கள் பெர்றுமைசாலிகள் தான். ரிஷான் 4மாதமாகக் காத்திருந்தது போல பொறுமையிருந்தால் அழைப்பார்கள்.

சாந்தி

Jegatheepan said...

Very useful one anna.......

ARV Loshan said...

Subi said...
Loshan, Lovesuki enra per vaichavangalai athan kaaranathai keddu solringala...

Unga wedding time intha perai keddappave arinchuka virumbinan.. ippa neengala sollida pirahu kedkalamla.. //
உண்மையைச் சொல்லப்போனால் Numerology , Nameology, நட்சத்திரம் எதுவுமே பார்க்காமத் தான் என்னுடைய காலமான மாமனார் வைத்திருக்கிறார்.

============

தமிழ்நெஞ்சம் said...
அசத்தல்//
நன்றி...
=======================

SASee said...
A-Z வரையான அகராதியில்
இணைய முகவரிகள். அனேகமானோருக்கு பயன் தரும் என நினைக்கிறேன்.//
நன்றி...


தந்தமைக்கு நன்றி லோஷன் அண்ணா.//
அது என் கடமை சகோதரா...

======================

வழிப்போக்கன் said...
சூப்பர் லோஷன் அண்ணா..//
நன்றி சகோதரா..

ARV Loshan said...

எம்.ரிஷான் ஷெரீப் said...
அன்பின் லோஷன்,
அருமையான இணையத்தளங்களைத் தேடியெடுத்துப் பட்டியலிட்டிருக்கிறீர்கள்.அதனால் காலதாமதத்தைக் கணக்கில் கொள்ளத்தேவையில்லை. :)//
அப்பாடா இப்போது தான் நிம்மதி... நீங்களும், முன்னதாக வந்தோரும் தராத தளங்களைத் தேடுவதில் தான் இத்தனை தாமதம்.


//பாராட்டுக்கள் நண்பரே. நல்ல பதிவு !//
நன்றி நண்பரே... உங்கள் நட்சத்திர வார busyயிலும் வந்து வாசித்து கருத்தளித்தமைக்கு நன்றிகள்

==================

வல்லை சிவா said...
சிறந்த தேடல். உங்கள் வானொலித்துறையின் வெற்றிக்குக் காரணத்தை மீண்டும் ஒருக்கா நிரூபிச்சிட்டீங்கள்.//
நன்றி நண்பரே...


//நிறையத் தளங்களை அறிந்து கொண்டோம் நன்றிகள். அடிக்கடி இப்பிடித் தேடித் தாங்கோ..//
சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போது தருகிறேன்.


=====================

Sinthu said...
எதிர்பார்த்த பல இருந்தன........... முக்கியமாக ஒன்று..........//
நன்றி. ஓகோ.

ARV Loshan said...

tamil24.blogspot.com said...
//(இனி யாராவது என்னைத் தொடர் பதிவுக்கு கூப்பிடுவீங்களா????)//

இனியொருவருக்கும் அப்படியொரு எண்ணமு வராதெண்டு நம்புகிறேன். அப்படி வந்தால் அவர்கள் பெர்றுமைசாலிகள் தான். ரிஷான் 4மாதமாகக் காத்திருந்தது போல பொறுமையிருந்தால் அழைப்பார்கள்.

சாந்தி//
உண்மை தான். ஆனாலும் இன்னுமொரு பொறுமைசாலி என்னை இன்னுமொரு தொடர்பதிவுக்கு அழைத்துவிட்டு காத்திருக்கிறார்.
;)

===============

Jegatheepan said...
Very useful one anna.......//
tx bro..

Anonymous said...

C for
http://www.cricketmanager.co.uk/

This kind of fantasy games are very popular in USA. Cricket caught up to this fantasy games very late I guess.
Besides if you haven't already you should put a blog on this. Very interesting subject.

Scivation Xtend said...
This comment has been removed by a blog administrator.
h4ckpatil said...
This comment has been removed by a blog administrator.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner