April 01, 2009

முட்டாள்களே நில்லுங்கள்!

Loshan
இன்று முட்டாள்கள் தினமாம்.அதை இந்த உலகின் எல்லா முட்டாள்களும் கொண்டாடுகிறார்கள். 

யாரோ ஓரு முட்டாளோ ஒரு சில முட்டாள்களோ முன்னமொரு காலத்தில் ஏப்ரல் முதலாம் திகதியை முட்டாள்கள் தினம் -April Fools Day என்று அறிவித்து விட அதையே காலாகாலமாக முட்டாள்தினமாக நாம் பிறரை முட்டாளாக்கி மகிழ்ந்து இன்னமும் முட்டாள்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

தேவையா? 

எம்மிலேயே எத்தனை முட்டாள்கள்?

வாழ்க்கையிலேயே பெரும்பான்மை நாட்களை முட்டாளாக வாழ்ந்து கொண்டே இருக்கும் எங்களுக்கு பிறிதாக ஒரு தினம் முட்டாளாக்கவும் முட்டாளாகவும் வேண்டுமா? 

கண்ணை மூடிக் கருவறையில் பத்து மாதத் தவம் அதன்பின் -பிறக்கும் போதே முட்டாளாக ஆரம்பிக்கிறது எங்கள் வாழ்க்கைப் பயணம் 

உடம்பு புரட்டி தவழ்ந்து பலமுறை விழுந்து எழுந்து யார் யாரோ சொல்வதெல்லாம் செய்து பின் முட்டாளாகவே முழு வாழ்க்கையும்.

இடைநடுவே பரீட்சைகளில் முட்டாளாகித் தோல்வி –

காதலில் முட்டாள் தனம் - திருமண வாழ்க்கை – வேலை தொழில் - முட்டாள்தனமான தெரிவு அல்லது முட்டாள்தனத்தால் தோல்வி!

கணக்கில்லா முட்டாள் தனங்கள் - முட்டாள்களின் பிரதிநிதியாக நான் இங்கே முடியுமானவரை சிலவற்றைக் கொட்டப் போகிறேன்!

April fools day's Exclusive post-

 முட்டாள் தினத்தின் சிறப்புப் பதிவு –
 
எங்களுக்குள்ளே எத்தனை எத்தனை முட்டாள்கள் -

சில பொதுப்படையான முட்டாள் தனங்கள்

முட்டாள்களால் ஆளப்பட்டு இனி..இனி... இனிமேலாவது ஏதாவது நல்லது நடக்கும் என எதிர்பார்த்திருக்கும் முட்டாள்தனம்.

முட்டாள்களால் உருவாக்கப்பட்ட முழு மூடத்தனமான தேர்தல் என்றதொரு விடயமூலமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையோ மீண்டும் மீண்டும் முட்டாளாகிறோம்.

ஒரு முட்டாளை மாற்றி இன்னொரு முட்டாளைக் கொண்டுவந்தால் எம்மை மீண்டும் முட்டாளாக்கி சிரிப்பார்கள்.

புள்ளடியிடுவதற்கு நகத்தில் புள்ளியிட்டு முட்டாள் பட்டம் கொடுக்கும் நாள் தான் அடிக்கடி வருதே! (இலங்கையில் மேல் மாகாணத்தில் அடுத்த மாதம் - இந்தியாவிலும் விரைவிலே) பிறகேன் தனியாக

சாதி சமயம் இனம் மொழி என்று இன்னும் முட்டாள்தன மோதல்களுக்குப் பல வழி!

போர்,பொருளாதாரம்,உடன்படிக்கை,ஒத்துழைப்பு,கூட்டணி,விலைக்குறைப்பு,வரிகள்,வாக்குறுதிகள் என்று எங்கள் முட்டாள்தனத்தின் மூலதன அலகுகள் பலப்பல –

இலங்கையில் நாம் 1958முதல் முட்டாள்தனமாகவே பலமுறை ஏமாந்தும் பலவாறு போராடி எதிர்பார்ப்புக் குறைந்தும் முட்டாள்தனத்தின் பொன்விழாவையும் கொண்டாடி முடித்துவிட்டோம்.

இன்னமும் சர்வதேசத்தையும் இந்தியாவின் சந்தர்ப்பவாத அரசியல் முதலைகளையும் நம்பிக்கொண்டே நாட்களையெண்ணும் முட்டாள்தனத்தை எங்கு சென்று சொல்வது?

அங்கிருக்கும் உண்மையான சோகம்,அனுதாபம்,அன்பு கொண்ட முட்டாள் அப்பாவிகள் பாவம்.. 

இந்தியாவிலே ஐயா orஅம்மா இல்லாவிட்டால் யாரோ (என்னபொருத்தம் இது மத்தியிலும் இதே.. தமிழ் மாநிலத்திலும் இதே ) முட்டாளாவதைவிட வேறு வழி தான் ஏது? 

வெள்ளித்திரை நாயகர்களை வா.. வா என்றழைத்து மீண்டும் முட்டாளாகவும் பலபேர் தயார் போல!

உலகமெங்கும் தமிழர் வாழுமிடமெங்கும் டிவியிலும் திரையிலும் கிரிக்கெட்டிலும் Internetஇலும் அதிலும் இப்போ வலைப்பதிவுகளிலும் எம் நேரத்தையெல்லாம் முதலிட்டு முற்றுப்பெறா முட்டாள் பயணம் செல்கிறோம்!

பதிவுலகிலும் எத்தனை எத்தனை முட்டாள்கள் முட்டாள்தனங்கள். 

முட்டாள்தனங்களை இல்லாமல் செய்ய சிலர் - முட்டாள் தனங்களைப் பகிர்ந்து கொள்ள சிலர் - மேலும் முட்டாளாவதற்கு சிலர் - முட்டாளாக்குவதற்கு சிலர் - (இதில் நான் எந்த ரகம்னு சொல்கிற அளவுக்கு தெளிவு பெறாத முட்டாளுங்க தான்!)

நாங்களெல்லாம் ஏதோ ஓரு விதத்துல எங்களை ஹீரோக்களாகக் காட்டிக்கொள்ள முயல முட்டாள் பையன் என்ற பெயரோடு ஒருவர் அண்மைக்காலமாகக் கலக்குகிறார்.

முற்றிய முட்டாள்களாக நாம் ஒவ்வொருநாளும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது தனியாக ஒரு முட்டாள்தினமா?

இன்று எனது வானொலியின் காலைநேர நிகழ்ச்சியிலும் முட்டாள்கள்; தினத்தை முன்னிட்டு நான் ஏதாவது ஏமாற்று வேலை/pranks செய்வேன் என்று எண்ணியே நான்கு மணித்தியாலத்தில் ஒவ்வொரு வினாடியையும் எண்ணி எண்ணி உற்று அவதானித்து முட்டாளானோர் பலப்பல பலர்.

நிகழ்ச்சி நிறைவுறும்போது நான் சொன்னதும் இதுவே.

முட்டாள்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எம்மையே மறுபடி முட்டாளாக்க அதுவும் ஒரு தினத்தையே கொண்டாட வேண்டுமா? 
ஒவ்வொரு நாளுமில்லையா கொண்டாடுகிறோம்!

விடைபெறும்போது போட்ட பாடல் 'நானொரு முட்டாளுங்க - சந்திரபாபு பாடியது


டிஸ்கி - என்னுடைய இந்த முட்டாள் தின சிறப்புப் பதிவில் எத்தனை தரம் முட்டாள் என்ற வார்த்தை வந்துள்ளது என்று சரியாகச் சொல்வோருக்கு லோஷன் என்ற முட்டாள் பரிசு வழங்குவார் என்று எந்த முட்டாளாவது சொல்லி அதை நீங்கள் முட்டாள்தினமாக நம்பி முட்டாளை எண்ணிக் கொண்டிருந்தால் - I am really sorry !

ஒரு சிறப்பு நன்றி நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்களுக்கு.. Adsense விஷயத்தில் அரைகுறை முட்டாளாக இருந்த எனக்கு ஞானோபதேசம் செய்து நேற்றிலிருந்து வரவு வைத்த வள்ளல் அவர் - நன்றிகள் தமிழ்நெஞ்சம்.

சொடுக்குங்கள் அன்பர்களே – நண்பர்களே மில்லியனயர் வலைப்பதிவராக என்னை மாற்றுங்கள்!

இப்போ முதலில் முட்டாள்தனமா இருக்காம கமெண்டும் வோட்டும் போடுங்க முதலில!    

 

21 comments:

ஆதிரை said...

முட்டாள்களே நில்லுங்கள்!

கூப்பிட்டீர்களா....
சொறி.., நாங்கள் இன்றைக்கு ரொம்பவும் பிஸி.
நாளைக்கு வாறோம்....:)

புல்லட் said...

ஓட்ட குத்தியாச்சு ஆனா சொல்லத்தான் ஏதுமில்ல! வருசக்கணக்கா யோசிச்சு எழுதியிருக்கீங்க பொல கிடக்கு ;)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//வாழ்க்கையிலேயே பெரும்பான்மை நாட்களை முட்டாளாக வாழ்ந்து கொண்டே இருக்கும் எங்களுக்கு பிறிதாக ஒரு தினம் முட்டாளாக்கவும் முட்டாளாகவும் வேண்டுமா? //

இப்படிப் பல தடவை எண்ணியதுண்டு. நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

Ithayam said...

நாரயண
ஒரே குழப்பம இருக்கு

பூச்சரம் said...

பூச்சரம் - இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS : BETA VERSION NOW ONLINE

இலங்கை பதிவர்கள் தங்கள் வலைப்பூக்களை சமர்ப்பியுங்கள்..

kuma36 said...

முட்டாள் என்ற சொல் 64 தடவை உள்ளது, கிகிகிகிகி

Gajen said...

கூப்பிட்டீங்களா அண்ண?? அட..என்ன மட்டும் தான் கூப்பிட்டார் எண்டெல்லே நினைச்சன்...நம்மல மாரி இன்னும் நிறைய பேர் இருக்காங்களோ?..கிகிகி...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

Tech Shankar said...

என்ன நண்பரே, என்னை ஒரு பக்கமா இழுத்து விட்டுட்டீங்க.

விரைவில் மில்லியனயர் ஆக வாழ்த்துகள்.

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

எப்படி எல்லாம் முட்டாள இருக்கிறம் என்று இப்பதான் புரிந்தது அண்ணா ................

Nimalesh said...

pavan namba juni.. jayasan.. chadru anna....

ARV Loshan said...

ஆதிரை said...
முட்டாள்களே நில்லுங்கள்!

கூப்பிட்டீர்களா....
சொறி.., நாங்கள் இன்றைக்கு ரொம்பவும் பிஸி.
நாளைக்கு வாறோம்....:)//

அட நீங்களுமா? வாங்க வாங்க.. இன்னைக்கும் வந்திருக்கீங்களா? தலைக்கு மேல் இருந்த வேலை எல்லாம் இறக்கிட்டீங்களா?


===============


புல்லட் பாண்டி said...
ஓட்ட குத்தியாச்சு ஆனா சொல்லத்தான் ஏதுமில்ல!//
ஏன்? ஏன்? ஏன்?
புல்லட் இப்படி சொல்லலாமா?


//வருசக்கணக்கா யோசிச்சு எழுதியிருக்கீங்க பொல கிடக்கு ;)//

இல்லை அப்பன்.. ;)வருசக்கணக்கா யோசிச்சு ஒரே நாளில எழுதினது.. ;)

======================

ARV Loshan said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//வாழ்க்கையிலேயே பெரும்பான்மை நாட்களை முட்டாளாக வாழ்ந்து கொண்டே இருக்கும் எங்களுக்கு பிறிதாக ஒரு தினம் முட்டாளாக்கவும் முட்டாளாகவும் வேண்டுமா? //

இப்படிப் பல தடவை எண்ணியதுண்டு. நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.//

நன்றி யோகன் வருகைக்கும் கருத்துக்கும்

====================
Ithayam said...
நாரயண
ஒரே குழப்பம இருக்கு//

யாருங்க அவரு?

குழம்பினால் தான் பின்னர் தெளிவு பெறலாம்..
====================



கலை - இராகலை said...
முட்டாள் என்ற சொல் 64 தடவை உள்ளது, கிகிகிகிகி//

:) அடப்பாவி அவனா நீயி.. ;)

சரியான விடை (என்று நினைக்கிறேன்) பரிசை சகோதரன் புல்லட் பாண்டி வழங்கி வைப்பார்..

=============================

SASee said...

ஆடங்கப்பா
திட்டம் போட்டு முட்டாளாக்கிராங்கப்பா...?
எப்புடி இப்புடியெல்லாம்........

SASee said...

முட்டாள் தனத்தை
சொல்லிக்காட்டும்
ஒரு முட்டாள் பதிவு....

அண்ணா சும்மா சொல்லிப் பாத்தேன்
கோவிச்சுகாதீகோ அண்ணா

ARV Loshan said...

தியாகி said...
கூப்பிட்டீங்களா அண்ண?? அட..என்ன மட்டும் தான் கூப்பிட்டார் எண்டெல்லே நினைச்சன்...நம்மல மாரி இன்னும் நிறைய பேர் இருக்காங்களோ?..கிகிகி...//

நம்ம ஆட்கள் இதுல பெரும்பான்மையில்ல..;)

=======================

தமிழ்நெஞ்சம் said...
என்ன நண்பரே, என்னை ஒரு பக்கமா இழுத்து விட்டுட்டீங்க.//

அது ஏன் கடமையல்லவா? எங்கள் தொழிநுட்ப தல.. ;-)


//விரைவில் மில்லியனயர் ஆக வாழ்த்துகள்.//

நன்றி . உங்கள் ஆசி படியே நடக்கட்டும். ;)
==================
சந்ரு said...
எப்படி எல்லாம் முட்டாள இருக்கிறம் என்று இப்பதான் புரிந்தது அண்ணா //

இப்பவாவது புரிஞ்சுதே.. ;)
==========================

Nimalesh said...
pavan namba juni.. jayasan.. chadru anna....//
நான் ஒண்ணுமே செய்யலப்பா.. நான் ரொம்ப நல்லவன்.

ARV Loshan said...

SASee said...
ஆடங்கப்பா
திட்டம் போட்டு முட்டாளாக்கிராங்கப்பா...?
எப்புடி இப்புடியெல்லாம்........//

அதுக்கு தாம்ப்பா தப்பிக்க சொல்லி சொல்லி இருக்கிறேன்.. (நீங்க என்னை சொல்லலையே?)


SASee said...
முட்டாள் தனத்தை
சொல்லிக்காட்டும்
ஒரு முட்டாள் பதிவு....

அண்ணா சும்மா சொல்லிப் பாத்தேன்
கோவிச்சுகாதீகோ அண்ணா//

எல்லாம் சொல்லீட்டு இதையும் சொல்லுங்க.. ;)

சரி சரி போகட்டும்

Nimalesh said...

yellam unga plan tha anna,,,,,,

கிருஷ்ணா said...

மற்றவன் முந்தமுதல் நமக்குநாமே அடிச்சுக்கிட்டா, பாக்கிறவன் “இவன் ரொம்ப நல்லவன்டா”ன்னு சொல்லிட்டு விட்டுட்டுப் போயிடுவானாம். நல்ல ஐடியாங்கண்ணா :)

benza said...

முட்டாள் இல்லாது போனால் எமக்குள் எப்படி வித்தியாசம் காண்க முடியும் ---

உங்கள் பதிவுகளில் இது தான் மோசமானது --- ஏனையவை திறமானவை, எனது கொமென்ற்ஸ் இல்லாத போதும் !

ARV Loshan said...

Nimalesh said...
yellam unga plan tha anna,,,,,,//

இல்லப்பா.. நான் ரொம்ப நல்லவன்,, நம்புங்க..

===============

கிருஷ்ணா said...
மற்றவன் முந்தமுதல் நமக்குநாமே அடிச்சுக்கிட்டா, பாக்கிறவன் “இவன் ரொம்ப நல்லவன்டா”ன்னு சொல்லிட்டு விட்டுட்டுப் போயிடுவானாம். நல்ல ஐடியாங்கண்ணா :)//

ஹீ ஹீ. கண்டு பிடிச்சிட்டீங்களே.. கூட இருந்த பழக்க தோஷம் தான்.. ;)

==============

benzaloy said...
முட்டாள் இல்லாது போனால் எமக்குள் எப்படி வித்தியாசம் காண்க முடியும் ---//
நான் எல்லாரயும் சேர்த்து தான் சொன்னேனப்பா.. எல்லோரும் முத்டால்கலேன்றாள் எங்கே வித்தியாசம்? ;)

//உங்கள் பதிவுகளில் இது தான் மோசமானது --- ஏனையவை திறமானவை, எனது கொமென்ற்ஸ் இல்லாத போதும் !//
ஆகா.. மிச்ச எல்லாமே திறம் என்றதே சந்தோசம்.. ;) இனி மேலும் எல்லாத்துக்குமே போட்டு என்னை மகிழ்ச்சிப் படுத்துங்க..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner