April 07, 2009

மயிரிழையில் உயிர் தப்பினேன்(னோம்) – நேற்றைய உண்மைச்சம்பவம்



நேற்று மாலை 4.30 அளவில் அலுவலகம் விட்டு எனது வாகனத்தில் நண்பர் பிரதீப்புடன் புறப்பட்டேன்.

தொடர்ந்து சில நாட்களாக மாலைவேளைகளில் பெய்துவரும் இடியுடன் கூடிய மழையில் மாட்டிக்கொள்ளாமல் தப்புவதற்கும், கொழும்பில் பரபர வாகன நெரிசல் நேரமான 5 – 5.30 ஐத் தவிர்ப்பதற்கும் இந்நேரமே உகந்தது என்பதால் எப்படியோ பாடுபட்டு என்னை அந்நேரம் அலுவலக இருக்கையிலிருந்து கிளப்பிய பெருமை பிரதீப்புக்கே!

கணினியினோடும்,இருக்கையோடும் ஒட்டிக்கொண்டால் என்னைப் பிரித்தெடுப்பது ரொம்ப சிரமமானது என்று என்னோடு அலுவலகத்திலிருந்து ஒன்றாக வீடுநோக்கி – வெள்ளவத்தை வரை பயணிக்கும் விமல், பிரதீப்புக்குத் தெரியும்.

நான் அலுவலகம் வரும் அதிகாலை நேரத்தில் வீட்டிலிருந்து எனக்கு எடுப்பது வெறும் பத்து நிமிடங்கள்தான். (7 கிலோ மீட்டர் தூரம்) எனினும் மாலை வேளைப் போக்குவரத்து நெரிசல் மேலதிகமாக அரை மணித்தியாலத்தையாவது விழுங்கிவிடும். அப்படியும் கிடைக்கும் நெரிசலில்லாத தருணங்களில் வாகனத்தை 60 – 80களில் சீறவிட்டு நேரத்தை மீதப்படுத்திப் பார்ப்பதுண்டு.

கையிலேயுள்ள ஊடகவியலாளர் அடடையின் மீதுள்ள நம்பிக்கையினாலும் (எவ்வளவு நடந்தும் Check pointsஇல் இன்னமும் இதற்கொரு மரியாதை இருக்கிறது.), காப்புறுதி,வாகன அனுமதிப்பத்திரம் எல்லாமே சரியாக இருப்பதனாலும் வேறு விடயம் பற்றி கவலைப்படுவதில்லை.

எனினும் என் அலுவலகம் - வீடு பாதை – பெரியவர்கள், முக்கியமானவர்கள், அதிக பாதுகாப்புக்குரியவர்கள் அடிக்கடி பயணிக்கும் பாதை என்பதால் முன்னறிவித்தலின்றி எப்போது வேண்டுமானாலும் திடீர் திடீர் என்று மூடப்படும். அந்த வீதிகளில் மட்டும், வீதி மூட முதல் முந்திக்கொள்ள விரைவு அதி விரைவு எடுப்பதுண்டு.

நேற்றும் இப்படித்தான் - எனது அலுவலகத்திலிருந்து வரும் பாதையிலுள்ள மூன்று வளைவுகளையும் தாண்டி – கொள்ளுப்பிட்டி சந்தியை இணைக்கும் வீதியில் விரைவு எடுத்து, அடிக்கடி தற்காலிகமாக மூடப்படுகின்ற நாற்சந்தியை அண்மிக்கும் நேரம், திடீரென குறுக்கே பாய்ந்தன இரு இராணுவ ஜீப் வண்டிகள்.

இன்னும் ஒரு செக்கன் தாமதித்திருந்தாலும் இராணுவ ஜீப்போடு என் வண்டி மோதியிருக்கும் - அதன் பின் சரமாரியான சூடு நடந்திருக்கும். இன்றைய பத்திரிகைளில் 'தலை நகரில் தாக்குதலில் ஈடுபட முயற்சித்தவர் சுட்டுக்கொலை' என்றெல்லாம் பரபரப்பு செய்திகள் வந்திருக்கும்.

சுதாகரித்துக்கொண்ட நான் உடனடியாக பிரேக்கை அழுத்த, என் வாகனம் கீறிச்சிட்டு நிற்க – 

தட தட வென்று முதலாவது ஜீப் வண்டியிலிருந்து குதித்த மூன்று இராணுவ வீரர்கள் எனது வாகனத்தை சுற்றி வளைத்துக் கொண்டனர். கொஞ்சம் பதற்றம் அடைந்தாலும் கண்ணாடியைக் கீழிறக்கி நான் கவனிக்கவில்லை என்றும் வீதி மூடப் படவில்லை என்பதையும் சுருக்கமாக விளக்கி எனது ஊடகவியலாளர் அடையாள அட்டையையும் காட்டினேன்.. 

முறைப்பு மாறாதபடியே "ஹரி ஹரி பரிஸ்ஸமென் யன்ன ..(சரி சரி கவனமாய் போங்க) தங் பொட்டக் இந்தல அபி கியாம யன்ன (இப்ப கொஞ்சம் நின்று நாங்கள் போன பிறகு போங்க)" என்றவாறே நகர்ந்தான் கையில் பெரிய தானியங்கி துவக்கோடு நின்ற இராணுவ வீரன்.   

அதன் பின் வந்த அதே புயல் வேகத்தில் குறுக்காக ஆறேழு வண்டிகள் சென்ற வாகன ஊர்தித் தொடரணி விரைந்து பறந்தது.

அந்த முதல் ஜீப்பில் பயணித்த துப்பாக்கி ஏந்திய இராணுவச்சிப்பாய் முறைத்த முறைப்பிருக்கே .. 'மவனே அடுத்த முறை வா கவனிக்கிறேன்!' என்பது போல இருந்தது.

சாதாரணமாக அவ்வாறு முக்கியஸ்தர் ஒருவர் பாதுகாப்புடன் இவ்வாறு தொடரணியில் செல்வதனால் பத்து நிமிடங்களுக்கு முன்னராவது வீதியை போக்குவரத்துக்கு மூடிவிடவேண்டும். இது விதியோ , தலைவிதியோ ஆனால் அது தான் இங்கே நியதி.

எனவே நேற்று என்னில் பிழையில்லை தான்! எனினும் ஒரு செக்கன் தாமதித்து நான் பிரேக் அடித்திருந்ததன் பின்னர் யாரில் பிழை , யார் சரி என்று பேசிப்பிரயோசனம் இருந்திருக்காதே!

இவ்வளவும் நடக்கும் போது என் பக்கத்திலிருந்த பிரதீப் ஒரு 'ஆ....' சத்தம் மட்டுமே எழுப்பியிருந்தார்.

மீண்டும் மனநிலை வழமைக்குத் திரும்ப எனக்கும் , பிரதீபபுக்கும் ஒரு சில நிமிடங்கள் பிடித்தன.

வாகனத்தை கிளப்பி சந்தி கடந்து – கொள்ளுபிட்டி சுற்று வட்டத்தில் திருப்பும் போது பிரதீப் 'அண்ணா, அந்த நடுவில போன கறுப்பு BMWல போனது யாராயிருக்கும்' என்று கூலாகக் கேட்டார்.

'தம்பி, அதை விடும்... இன்னும் கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா எங்களையும் அதே போல் கறுப்பு car இல் தான் கொண்டு போயிப்பாங்க' என்றேன்.

பிரதீப், 'அண்ணை, அப்படியிருந்தாலும் வெற்றி FMல மரண அறிவித்தல் free தானே!' என்றார் இன்னும் கூலாக.

என்னைப் பொறுத்த வரை இன்னுமொரு கண்டம் இன்னுமொரு மயிரிழை...மீண்டும் தப்பித்தேன்.. இனி எப்போ?






72 comments:

Vadielan R said...

கடவுளுக்கு நன்றி கூறுங்கள்

கடவுளை பிரார்த்திக்கிறேன். நீங்கள் நீண்டகாலம் வாழ

Suresh said...

paarthu ponga nanba ..

Subankan said...

அண்ணா,பாத்து. பரிஸ்ஸமென் யன்ன

//வாகனத்தை கிளப்பி சந்தி கடந்து – கொள்ளுபிட்டி சுற்று வட்டத்தில் திருப்பும் போது பிரதீப் 'அண்ணா, அந்த நடுவில போன கறுப்பு BMWல போனது யாராயிருக்கும்' என்று கூலாகக் கேட்டார்.//

அது தெரியக் கூடாது எண்டுதானே இவ்வ‍ளவும்.

இந்தக் கறும்ம் எல்லாம் வேண்டாம் எண்டுதானே நான் பஸ்சில போறது (ஹி ஹி..)

FunScribbler said...

அண்ணா, பாத்து அண்ணா!

//தம்பி, அதை விடும்... இன்னும் கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா எங்களையும் அதே போல் கறுப்பு car இல் தான் கொண்டு போயிப்பாங்க//

அந்த நேரத்திலும் உங்களுக்கு டயலாக் எல்லாம் பின்னிபெடல் எடுத்து வருதே... யூ ஆர் கிரேட் அண்ணா!:)

Media 1st said...

அண்ணா,பாத்து
தமிழன் விதி இதுதான் !

Unknown said...

அண்ணா ....எப்பொழுதும் கவனமாகவே இருங்கள்.பார்த்து போங்கள்.இந்த கொரூரர்களிடமிருந்து எம் மக்கள் விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை .

புல்லட் said...

போட்டுத்தள்ளியிருப்பாங்கள்...கண்ணாடிய நீங்க இறக்கி ஐடிய காட்டினதும் அட நம்ம ” லொக்கு மீசை லோசன் ” எண்டுபரிதாபப்பட்டு விட்டுட்டாங்கள்... ;)

நல்ல காலம் அவங்கள் உங்கட சிரிக்கட் படிவுகளை வாசிக்கேல்ல... 130 மில்லிமீட்டர் ஒண்ட கொண்டுவந்து வாய்க்க வச்சு அடிச்சிருப்பாங்கள்.. (ச்சும்மா!... எனக்கு அவை பிடிப்பதில்லை அதுதான்.. கிக்கி..)

கடசியா ஒண்டு... உங்கட பதிவுகள பாத்திட்டு அண்ணி கையில தான் உங்களுக்கு வெடி.. அதுவரைக்கும் எமன் கிட்டவரார்.. கிக்கி! ;)

Abiman said...

Thank GOD! Take care.

Tech Shankar said...

அடிக்கடி இப்படி நடப்பதைப் பார்த்துப் பார்த்து அவருக்கு மனமுதிர்ச்சி ஏற்பட்டிருக்குமோ. நானாக இருந்தால் ஒரு வாரத்துக்கு இஞ்சி தின்றதைப் போல் இருந்திருப்பேன்.

//பிரதீப் ஒரு 'ஆ....' சத்தம் மட்டுமே எழுப்பியிருந்தார்.

ARV Loshan said...

வடிவேலன் ஆர். said...
கடவுளுக்கு நன்றி கூறுங்கள்
கடவுளை பிரார்த்திக்கிறேன். நீங்கள் நீண்டகாலம் வாழ//

நன்றி சகோதரரே.. இன்னும் வாழ்ந்தாக வேண்டிய கணக்கு இருக்கு போல.. ;)

===========================

Suresh said...
paarthu ponga nanba ..//
நன்றி சுரேஷ் அக்கறைக்கு..:)

=============================
Subankan said...
அண்ணா,பாத்து. பரிஸ்ஸமென் யன்ன//
அபி பரிஸ்ஸமெந் தமாய் இன்னே..யன்னே.. ஹபாய் வென்னே.. (நாங்க எப்பவுமே கவனமாய்த் தான் இருக்கிறோம்..செல்கிறோம்.. ஆனால் நடப்பது????)

//வாகனத்தை கிளப்பி சந்தி கடந்து – கொள்ளுபிட்டி சுற்று வட்டத்தில் திருப்பும் போது பிரதீப் 'அண்ணா, அந்த நடுவில போன கறுப்பு BMWல போனது யாராயிருக்கும்' என்று கூலாகக் கேட்டார்.//
அது தெரியக் கூடாது எண்டுதானே இவ்வ‍ளவும்.//
ஹி ஹி..

//இந்தக் கறும்ம் எல்லாம் வேண்டாம் எண்டுதானே நான் பஸ்சில போறது (ஹி ஹி..)//
அதுவும் சரி தான்..

=========================

ARV Loshan said...

Thamizhmaangani said...
அண்ணா, பாத்து அண்ணா!//
பார்த்து பார்த்து போன படியா தான் தப்பினம்...

//தம்பி, அதை விடும்... இன்னும் கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா எங்களையும் அதே போல் கறுப்பு car இல் தான் கொண்டு போயிப்பாங்க//
அந்த நேரத்திலும் உங்களுக்கு டயலாக் எல்லாம் பின்னிபெடல் எடுத்து வருதே... யூ ஆர் கிரேட் அண்ணா!:)//

என்ன செய்ய தமிழ் பிறப்போட வந்தது.. வாய் மட்டும் இல்லாம இருந்தா.. ;)

============================
தர்ஷன் DSHAN2009 said...
அண்ணா,பாத்து
தமிழன் விதி இதுதான் !//
ம்ம்ம்ம்...தமிழனுக்கு மட்டுமில்ல.. இது common விதி

========================

Julie Rani said...
அண்ணா ....எப்பொழுதும் கவனமாகவே இருங்கள்.பார்த்து போங்கள்.இந்த கொரூரர்களிடமிருந்து எம் மக்கள் விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை .//
நன்றி சகோதரி..

நிகழ்காலத்தில்... said...

\\என்னைப் பொறுத்த வரை இன்னுமொரு கண்டம் இன்னுமொரு மயிரிழை...மீண்டும் தப்பித்தேன்.. இனி எப்போ?\\

இனி வராது..

வாழ்த்துக்கள்..

ARV Loshan said...

புல்லட் பாண்டி said...
போட்டுத்தள்ளியிருப்பாங்கள்...கண்ணாடிய நீங்க இறக்கி ஐடிய காட்டினதும் அட நம்ம ” லொக்கு மீசை லோசன் ” எண்டுபரிதாபப்பட்டு விட்டுட்டாங்கள்... ;) //

இல்லியே இல்லியே.. புல்லட் மாமாவுக்கு நோண்டி.. இப்ப லோஷன் மறுபடி மாதவன் மாதிரி ஆயிட்டார் என்று ஊர் முழுக்க பெண்கள் பெசிக்கொல்ராங்கலாம்.. (மீசை எடுத்திட்டமில்ல..)

//நல்ல காலம் அவங்கள் உங்கட சிரிக்கட் படிவுகளை வாசிக்கேல்ல... 130 மில்லிமீட்டர் ஒண்ட கொண்டுவந்து வாய்க்க வச்சு அடிச்சிருப்பாங்கள்.. (ச்சும்மா!... எனக்கு அவை பிடிப்பதில்லை அதுதான்.. கிக்கி..)//

அடப்பாவி அதுக்காக இப்படியா? நல்லா இருங்கப்பா..

//கடசியா ஒண்டு... உங்கட பதிவுகள பாத்திட்டு அண்ணி கையில தான் உங்களுக்கு வெடி.. அதுவரைக்கும் எமன் கிட்டவரார்.. கிக்கி! ;)//

அவ எல்லாம் நல்லா தான் பார்க்கிறா.. விட்டா உங்கள மாதிரி சில பேர் கூட்டணி உருவாக்கி என்னைப் போட்டுக் கொடுத்தே போட்டுத் தள்ளிடுவீங்க போல..

ARV Loshan said...

Abiman said...
Thank GOD! Take care.//

thanx Bro..

====================

தமிழ்நெஞ்சம் said...
அடிக்கடி இப்படி நடப்பதைப் பார்த்துப் பார்த்து அவருக்கு மனமுதிர்ச்சி ஏற்பட்டிருக்குமோ. நானாக இருந்தால் ஒரு வாரத்துக்கு இஞ்சி தின்றதைப் போல் இருந்திருப்பேன்.

//பிரதீப் ஒரு 'ஆ....' சத்தம் மட்டுமே எழுப்பியிருந்தார்.//

உண்மை தான்.. பழக்கமாகி விட்டது.. எத்தனையைப் பார்த்திட்டம்.. ;)

=================

ARV Loshan said...

அறிவே தெய்வம் said...
\\என்னைப் பொறுத்த வரை இன்னுமொரு கண்டம் இன்னுமொரு மயிரிழை...மீண்டும் தப்பித்தேன்.. இனி எப்போ?\\

இனி வராது..

வாழ்த்துக்கள்..//

நன்றி.. நம்புவோம்

Anonymous said...

கவனமாக இருங்க...இறைவனிடம் வேண்டி கொள்கின்றேன் உங்களுக்காக..

துளசி கோபால் said...

படிக்கவே மனசுக்கு 'திக்'ன்னு இருந்துச்சு.

கவனமா இருங்கப்பா.

சோகம் தாங்கும் மனசு எனக்கில்லை.

Thusha said...

"மயிரிழையில் உயிர் தப்பினேன்"
"பார்த்து பார்த்து போன படியா தான் தப்பினம்..."

அண்ணா ஒரு நிமிடம் திக் என்று இருந்தது பார்த்து போங்க வேறு என்ன சொல்ல அண்ணா எங்களில் குறைகள் இல்லை எனும் பொது

Thusha said...

"//Neenga Akka thangachiyoda pirakaatiyum naanga ellorume unkalukku sisters maathiri thane..
dont worry much ..
nanga anna iku help pannuwam..//
ஆ?? டமார்.. (ஏதோ உடையும் சத்தம்)"

"இப்ப லோஷன் மறுபடி மாதவன் மாதிரி ஆயிட்டார் என்று ஊர் முழுக்க பெண்கள் பெசிக்கொல்ராங்கலாம்.. (மீசை எடுத்திட்டமில்ல..)"

இரண்டிக்கு எதோ சம்மந்தம் இருக்கு போலா இருக்கே உண்மையா அண்ணா

Unknown said...

எனது காலைகளின் நாயகனே!
உனது குரல் எனக்கு வேண்டும் நான் இறக்கும் வரை!!
வேகம் விவேகம் அல்ல பாட்டி எனக்கு சொன்னது?!
நான் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் செல்கிறேன்,வெற்றி எப்ப வருகிறது?

Anonymous said...

நீர் இருப்பது எமனுலகம் அல்லவா

kuma36 said...

///என்னைப் பொறுத்த வரை இன்னுமொரு கண்டம் இன்னுமொரு மயிரிழை...மீண்டும் தப்பித்தேன்.. இனி எப்போ?///

இன்னொரு முறை வரவே வராது. வரகூடாது அன்ணா! நல்ல சாமியை கும்பிட்டுக் கொள்ளுங்கோ நானும் அவர் கிட்ட சொல்லி வைக்கிறேன்.

kuma36 said...

///தட தட வென்று முதலாவது ஜீப் வண்டியிலிருந்து குதித்த மூன்று இராணுவ வீரர்கள் எனது வாகனத்தை சுற்றி வளைத்துக் கொண்டனர்///

ம்ஹம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்

கொழுவி said...

இந்த பின்னூட்டை பகிடிக்குத்தான் போடுகிறேன். சீரியசாக எடுக்க வேணாம். நீங்க எடுக்காட்டியும் அவங்க எடுத்திடுவாங்களோ என்றதால போடாமலேயே போகிறேன் :(

ARV Loshan said...

♥ தூயா ♥ Thooya ♥ said...
கவனமாக இருங்க...இறைவனிடம் வேண்டி கொள்கின்றேன் உங்களுக்காக..//

நன்றி தூயா..

================================

துளசி கோபால் said...
படிக்கவே மனசுக்கு 'திக்'ன்னு இருந்துச்சு.
கவனமா இருங்கப்பா.//

ரொம்பவே.. நன்றி அன்புக்கு,..

//சோகம் தாங்கும் மனசு எனக்கில்லை.//
எங்களுக்கு கொஞ்சம் பழகிடுச்சு.. எல்லாமே.. ;)
=========================

ARV Loshan said...

Thusha said...
"மயிரிழையில் உயிர் தப்பினேன்"
"பார்த்து பார்த்து போன படியா தான் தப்பினம்..."
அண்ணா ஒரு நிமிடம் திக் என்று இருந்தது பார்த்து போங்க வேறு என்ன சொல்ல அண்ணா எங்களில் குறைகள் இல்லை எனும் பொது//
நன்றி சகோதரி ..

==================

Thusha said...
"//Neenga Akka thangachiyoda pirakaatiyum naanga ellorume unkalukku sisters maathiri thane..
dont worry much ..
nanga anna iku help pannuwam..//
ஆ?? டமார்.. (ஏதோ உடையும் சத்தம்)"

"இப்ப லோஷன் மறுபடி மாதவன் மாதிரி ஆயிட்டார் என்று ஊர் முழுக்க பெண்கள் பெசிக்கொல்ராங்கலாம்.. (மீசை எடுத்திட்டமில்ல..)"

இரண்டிக்கு எதோ சம்மந்தம் இருக்கு போலா இருக்கே உண்மையா அண்ணா//

எனக்கு ஒண்ணுமே புரியலையே.. ஏங்க யாருக்காவது புரிஞ்சுதா? ;)

ARV Loshan said...

raaman said...
எனது காலைகளின் நாயகனே!
உனது குரல் எனக்கு வேண்டும் நான் இறக்கும் வரை!!
வேகம் விவேகம் அல்ல பாட்டி எனக்கு சொன்னது?!//
நன்றி ராமன்.. உங்கள் அன்புக்கு.. அதுசரி குரல் மட்டும் தான் வேணுமா? ;)
வேகம் விவேகம் எங்கள் ஞாயிறு காலை நிகழ்ச்சியின் பெயரல்லவா? உங்கள் பாட்டியைக் கேட்டதாக சொல்லுங்கள்.. ;)

//நான் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் செல்கிறேன்,வெற்றி எப்ப வருகிறது?//
விரைவில் என்று மட்டுமே சொல்ல முடியும் நண்பா.. காலநிலைமை அப்படி..

================
Anonymous said...
நீர் இருப்பது எமனுலகம் அல்லவா//
நாட்டையும் நகரையும் பற்றியா? ;) சொல்லவா வேணும்?

சி தயாளன் said...

பார்த்து கவனமாக இருங்கோ...

ARV Loshan said...

கலை - இராகலை said...
///என்னைப் பொறுத்த வரை இன்னுமொரு கண்டம் இன்னுமொரு மயிரிழை...மீண்டும் தப்பித்தேன்.. இனி எப்போ?///

இன்னொரு முறை வரவே வராது. வரகூடாது அன்ணா! நல்ல சாமியை கும்பிட்டுக் கொள்ளுங்கோ நானும் அவர் கிட்ட சொல்லி வைக்கிறேன்.//

என்னாங்க கலை அவர் என்ன உங்க தோஸ்தா? நான் அவரைப் பார்த்ததே இல்லை.. கொஞ்சம் வர சொல்லுங்களேன் மீட் பண்ணலாம்.. நிறைய விஷயம் அவருக்கு சொல்ல இருக்கு.. இவ்வளவு உலகத்திலை நடக்குது அவர் என்ன பிடு... ஓ sorry.. செய்கிறாராம்..

=================
கலை - இராகலை said...
///தட தட வென்று முதலாவது ஜீப் வண்டியிலிருந்து குதித்த மூன்று இராணுவ வீரர்கள் எனது வாகனத்தை சுற்றி வளைத்துக் கொண்டனர்///

ம்ஹம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்//

ஆ இப்ப நீங்க சொல்லுவீங்க.. பயந்தது அவங்களோ தெரியாது.. நாங்கன்னா நிச்சயமா.. ;) (பயந்தே பயப்படுத்துறதுல அவங்கள யாராலையும் அடிக்க முடியாது.. )

ARV Loshan said...

கொழுவி said...
இந்த பின்னூட்டை பகிடிக்குத்தான் போடுகிறேன். சீரியசாக எடுக்க வேணாம். நீங்க எடுக்காட்டியும் அவங்க எடுத்திடுவாங்களோ என்றதால போடாமலேயே போகிறேன் :(//

என்ன ஒரு அருமையான பின்னூட்டம்.. நல்லா ரசித்தேன்.. ;) என்ன கொஞ்சம் நீளமாப் போயிட்டு..

(இதைத் தான் நழுவல் அரசியல் எண்டு சொல்லுவாங்களோ?)

==================
லீ.. நன்றி.. பார்த்து கவனமா இருந்தாலும் எனக்கென்று இப்படி தேடி வருதையா..

ஆதிரை said...

கவனமப்பா கவனம்...

பிரதீப்பை நலம் விசாரித்ததாக சொல்லுங்கோ...

ஆதிரை said...

//கையிலேயுள்ள ஊடகவியலாளர் அடடையின் மீதுள்ள நம்பிக்கையினாலும்....


சங்கதி தெரியுமா...? கையில இது இருந்தால் இனி காலில ஒன்றும் இருக்க கூடாதாம்....:D

பாசகி said...

கடவுளுக்கு நன்றி!!! பத்திரமா இருங்க...

Thusha said...

அண்ணா முதலாவாது உங்கள் நேற்றைய பதிவில் வந்த பின்னுட்டமும் அதுக்கு நீங்க போட்ட பதிலும், ok
இரண்டாவது நீங்கள் இன்று போட்டது வடிவகா வாசித்து பாருங்க புரியும்

கானா பிரபா said...

கவனமா இருங்கோ,

அதென்ன புரபைலிலும் வாகனம் ஓட்டிக் கொண்டே

sultangulam@blogspot.com said...

Better be Mr. Late instead of Late Mr.
சாக்கிரதை உணர்வோடு வண்டி ஓட்டுஙகள் நண்பரே

சந்தனமுல்லை said...

கடவுளுக்கு நன்றி கூறுங்கள்...கவனமாக வண்டியோட்டுங்கள்!

என்ன கொடும சார் said...

பயப்படாதீங்க.. பல்லி அடிச்சு பாவம் தேட மாட்டாங்க..

எவ்வளவு நடந்தும் Check pointsஇல் இன்னமும் இதற்கொரு மரியாதை இருக்கிறது

ஒத்துகிட்டீங்க

உண்மை விளம்பி said...

அண்ணா உங்களுக்கு இது ஒரு அனுபவம்தான் , ஆனாலும் இப்போதைய சூழ்நிலையில் மிகவும் கவனமாக இருக்கவேணும்.இங்க எங்களுக்கு இது நல்லா பழகிப்போச்சு, நேற்று மத்தியானம் கடையில சாப்பிட்டு அலுவலகத்துக்கு போய்க்கொண்டிக்க வழியில மறிச்சிடாங்கள், 45 நிமிடமா ரோட்டில நிண்டம், அலுவலகத்துக்கு தகவல் அனுப்ப குறும் செய்தி அனுப்பினேன் ,அதைப்பார்த்துவிட்டு வந்து அடிக்காத குறையாக கேட்டாங்கள் யாருக்கடா மெசேஜ் அனுப்புறாய், நான் விளக்கம் கொடுக்கவே வேணாம் எண்டு போச்சு,அப்போ போன கிழமை மனித உரிமைகள் இறுதி வகுப்பு ஞாபகம் வந்திச்சு.சேர் சொன்னார் தம்பி எங்கட நாட்டில மனித உரிமைகள் பற்றி படிக்கலாமே தவிர, அதை அனுபவிக்க வேணும் எண்டால் நீ எலும்புக்காய் வாலாட்டும் நாயாக இருக்கணும் எண்டு , 100 % உண்மை...

Unknown said...

God saved u Loshan..
may be i am the newly blogged you..
is that harmed u..
no more coments here after...
Greetings
Theepa

லோகு said...

நகைச்சுவை கலந்து எழுதியிருந்தாலும் அதன் உண்மை நடுநடுங்க வைக்கிறது..
ஆதங்கத்தை தவிர தெரிவிப்பதுக்கு ஒன்றுமில்லை.. பாவப்பட்டவர்கள் நீங்கள்..

கணினி தேசம் said...

படிக்கவே திகிலா இருக்கு :(((

தேவன் மாயம் said...

தட தட வென்று முதலாவது ஜீப் வண்டியிலிருந்து குதித்த மூன்று இராணுவ வீரர்கள் எனது வாகனத்தை சுற்றி வளைத்துக் கொண்டனர். கொஞ்சம் பதற்றம் அடைந்தாலும் கண்ணாடியைக் கீழிறக்கி நான் கவனிக்கவில்லை என்றும் வீதி மூடப் படவில்லை என்பதையும் சுருக்கமாக விளக்கி எனது ஊடகவியலாளர் அடையாள அட்டையையும் காட்டினேன்.. ///

லோஷன் வாழ்க பல்லாண்டு!!!அன்புடன் தேவா!

sinmajan said...

தேசியப் பாதுகாப்பு றொம்ப முக்கியம்..
இல்லைங்களா லோஷன் அண்ணா??
நாம எல்லாம் யாழ்ப்பணத்தில..இதுக்காகவே
சைக்கிளை கழுத்திலை போட்டுக் கொண்டெல்லாம்
நடந்திருக்கம் .,,உங்களை மட்டும்..ஹா..ஹா..(சைக்கிளை கழுத்திலை போட்டுக் கொண்டு
லோஷன் அண்னயைக் கற்பனை செய்து யாரும் பார்த்தா நாம பொறுப்பில்லை..)

Sinthu said...

அண்ணா இப்ப பாத்துப் போனாலும் எங்க தப்பு என்றாங்க பார்க்காமல் போனாலும் எங்க தப்பு என்றாங்க... அப்பா நாங்க என்ன்செயானும்...

"இனி எப்போ?"
அப்ப நீங்க எதிர் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறீங்க போல...

kuma36 said...

///
என்னாங்க கலை அவர் என்ன உங்க தோஸ்தா? நான் அவரைப் பார்த்ததே இல்லை.. கொஞ்சம் வர சொல்லுங்களேன் மீட் பண்ணலாம்.. நிறைய விஷயம் அவருக்கு சொல்ல இருக்கு.. இவ்வளவு உலகத்திலை நடக்குது அவர் என்ன பிடு... ஓ sorry.. செய்கிறாராம்..////

அண்ணா மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் அவர் தானே ஆரம்பித்து வைத்தார் பிறகு உலகத்தில் எது நடந்தா என்ன? அவரைவிட இபோ எல்லாமே நல்லா பேட் பன்னுராங்க! என்னா அன்று துப்பாக்கி இல்லை அதான், அதோட இன்னொரு விஷயம் இப்போ அழித்தல் தொழிலை அவர் நிறுத்திட்டார்! யமனுக்கு விடுமுறையாம் (பொறுப்புக்களை இங்கே கொடுத்துவிட்டாங்க) கோடம்பக்கத்தில் விசயம் அறிந்தவர்கள் சொல்லிக்கிறாங்க‌

அதெல்லாம் சரி அந்த கருப்பு கண்ணாடியை கலட்டி விட்டு வாகனத்தை ஓட்டுங்கோ அப்போதான் நல்லா பாதை தெரியும், இரவு நேரங்களிலும் கருப்பு கண்ணாடியோடு வாகனம் ஓட்டுவதாக இராமசாமி அண்ணே சொல்ல சொன்னாரு!!

ஜோசப் பால்ராஜ் said...

ஏன் அண்ணா,
இலங்கையில் பத்திரிக்கை தொழில் செய்பவர்களுக்குத் தான் பல வழிகளில் உயிர் ஆபத்து தொடர்ந்துகொண்டிருக்கிறதே, நீங்கள் வேறு ஏன் தானாக ஆபத்தை தேடிக்கொள்கிறீர்கள்?
மெதுவாக சென்றால் 10 நிமிடங்கள் தானே அதிகமெடுக்கும்? எதற்கு இப்படியெல்லாம் விசப்பரிட்ச்சை?
கவனமாயிருங்கள்

குடுகுடுப்பை said...

உயிர் முக்கியம், கவனமாக இருக்கவும்.

Sayanolipavan said...

thanks god...
vasitthukondirukkum pothu oru feel la vasithukondu ponan, kadsiyala soonna dialog vasithathum konjam sirippa irunthittu, unkalukku antha time laium inji gab la dialog vidditinka.. super....

god always with us...

பிரதீப் 'அண்ணா, அந்த நடுவில போன கறுப்பு BMWல போனது யாராயிருக்கும்' என்று கூலாகக் கேட்டார்.


'தம்பி, அதை விடும்... இன்னும் கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா எங்களையும் அதே போல் கறுப்பு car இல் தான் கொண்டு போயிப்பாங்க' என்றேன்.


பிரதீப், 'அண்ணை, அப்படியிருந்தாலும் வெற்றி FMல மரண அறிவித்தல் free தானே!' என்றார் இன்னும் கூலாக.


என்னைப் பொறுத்த வரை இன்னுமொரு கண்டம் இன்னுமொரு மயிரிழை...மீண்டும் தப்பித்தேன்.. இனி எப்போ

Anonymous said...

//ஏன் அண்ணா,
இலங்கையில் பத்திரிக்கை தொழில் செய்பவர்களுக்குத் தான் பல வழிகளில் உயிர் ஆபத்து தொடர்ந்துகொண்டிருக்கிறதே, நீங்கள் வேறு ஏன் தானாக ஆபத்தை தேடிக்கொள்கிறீர்கள்?
மெதுவாக சென்றால் 10 நிமிடங்கள் தானே அதிகமெடுக்கும்? எதற்கு இப்படியெல்லாம் விசப்பரிட்ச்சை?
கவனமாயிருங்கள்//

Yea Loscan anna kavanam.... You can do stunts if u r single.. but u r not and You have a kid... so better be careful.. enna.. ?

Nimalesh said...

Bro take care ur self bro cos v all need u.. tc

ARV Loshan said...

ஆதிரை said...
கவனமப்பா கவனம்...//
mmmm

//பிரதீப்பை நலம் விசாரித்ததாக சொல்லுங்கோ...//
விசாரிச்சேன்.. நல்லா இருக்கிறாராம்..

====================
ஆதிரை said...
//கையிலேயுள்ள ஊடகவியலாளர் அடடையின் மீதுள்ள நம்பிக்கையினாலும்....

சங்கதி தெரியுமா...? கையில இது இருந்தால் இனி காலில ஒன்றும் இருக்க கூடாதாம்....:D//


சிதம்பர சம்பவத்துக்குப் பிறகா? ஏற்கெனவே இங்க கெடுபிடி.. இதால நான் எந்தவொரு press meetingக்கும் போறதில்ல.. (விளையாட்டு தவிர) இதுக்குள்ள இது வேறயா? கிழிஞ்சு போச்சு..

ARV Loshan said...

பாசகி said...
கடவுளுக்கு நன்றி!!! பத்திரமா இருங்க...//

அவருக்கா? ம்ம்ம் சரி.. ;)
நன்றிங்க..

===================
Thusha said...
அண்ணா முதலாவாது உங்கள் நேற்றைய பதிவில் வந்த பின்னுட்டமும் அதுக்கு நீங்க போட்ட பதிலும், ok
இரண்டாவது நீங்கள் இன்று போட்டது வடிவகா வாசித்து பாருங்க புரியும்//

புரிஞ்சது புரியாம இருக்காது;புரியாதது புரியாது.. ஹா ஹா ஹா

=======================
கானா பிரபா said...
கவனமா இருங்கோ, //
நன்றி அண்ணா

//அதென்ன புரபைலிலும் வாகனம் ஓட்டிக் கொண்டே//

நான் ரொம்ப விரும்பும் விஷயங்களில ஒண்டு இந்த driving.. அதால கொஞ்சம் வித்தியாசமா இந்தப் படத்தைப் போட்டேன்.. பார்த்தா ராசி அப்படி இருக்கு..

ARV Loshan said...

சுல்தான் said...
Better be Mr. Late instead of Late Mr.
சாக்கிரதை உணர்வோடு வண்டி ஓட்டுஙகள் நண்பரே//
mm true.. நன்றி நண்பரே

===================
சந்தனமுல்லை said...
கடவுளுக்கு நன்றி கூறுங்கள்...கவனமாக வண்டியோட்டுங்கள்!//

நாட்டிலும் உலகிலும் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து அப்படியொருவர் இருக்கிறார் என்பதே மறந்து போய் விட்டது..

நன்றி நண்பரே.. நான் எப்பவும் ஜாக்கிரதை தான்..

=========================

என்ன கொடும சார் said...
பயப்படாதீங்க.. பல்லி அடிச்சு பாவம் தேட மாட்டாங்க.. //
அந்த நம்பிக்கையில் தான் துணிந்து திரிகிறேன்.. ஆனால் இலங்கையில் பல்லிகள் எல்லாமே புலிகளாகத் தானே தெரியுது? செய்திகள் வாசிப்பதில்லையா? இலங்கையில தானே இருக்கிறீங்க? ;)

//எவ்வளவு நடந்தும் Check pointsஇல் இன்னமும் இதற்கொரு மரியாதை இருக்கிறது//
ஒத்துகிட்டீங்க//

உங்களுக்கென்னையா? நமக்கு தானே பிரச்சினை.. நீங்க எப்பவுமே safe side தானே..

ARV Loshan said...

உண்மை விளம்பி said...
அண்ணா உங்களுக்கு இது ஒரு அனுபவம்தான் , ஆனாலும் இப்போதைய சூழ்நிலையில் மிகவும் கவனமாக இருக்கவேணும்.இங்க எங்களுக்கு இது நல்லா பழகிப்போச்சு, நேற்று மத்தியானம் கடையில சாப்பிட்டு அலுவலகத்துக்கு போய்க்கொண்டிக்க வழியில மறிச்சிடாங்கள், 45 நிமிடமா ரோட்டில நிண்டம், அலுவலகத்துக்கு தகவல் அனுப்ப குறும் செய்தி அனுப்பினேன் ,அதைப்பார்த்துவிட்டு வந்து அடிக்காத குறையாக கேட்டாங்கள் யாருக்கடா மெசேஜ் அனுப்புறாய், நான் விளக்கம் கொடுக்கவே வேணாம் எண்டு போச்சு,அப்போ போன கிழமை மனித உரிமைகள் இறுதி வகுப்பு ஞாபகம் வந்திச்சு.சேர் சொன்னார் தம்பி எங்கட நாட்டில மனித உரிமைகள் பற்றி படிக்கலாமே தவிர, அதை அனுபவிக்க வேணும் எண்டால் நீ எலும்புக்காய் வாலாட்டும் நாயாக இருக்கணும் எண்டு , 100 % உண்மை...//

உண்மை தான்.. உங்கள் பெயரிலேயே விளங்குதே.. பார்த்து நடவுங்கள்..
==========================
Priyatheepa said...
God saved u Loshan..
may be i am the newly blogged you..
is that harmed u..
no more coments here after...
Greetings
Theepa//

:)
Hey dont think like that.. pl do comment. :)
எது நடக்குமோ அது நடக்கும்.. நீங்க காக்காவாம்.. ஏதோ பனம்பழம் விழுந்ததாம்.. ;)

========================

ARV Loshan said...

லோகு said...
நகைச்சுவை கலந்து எழுதியிருந்தாலும் அதன் உண்மை நடுநடுங்க வைக்கிறது..
ஆதங்கத்தை தவிர தெரிவிப்பதுக்கு ஒன்றுமில்லை.. பாவப்பட்டவர்கள் நீங்கள்..//

வாழ்க்கையே சோகமாக இருப்பதால் அதிகமாக நகைச்சுவையை ரசிக்கிறோம் நாங்கள்.. துன்பம் வரும்போது சிரிக்கிறோம்.. ரொம்ப அதிகமாக.. (அதனால் பைத்தியங்களாகி விட்டோம்.. எல்லா இடங்களிலும்)
======================
கணினி தேசம் said...
படிக்கவே திகிலா இருக்கு :(((//

நீங்களோ கணினி தேசம்.இது திகில் தேசம்.. ;) வாங்களேன் பார்க்கலாம்.

ARV Loshan said...

thevanmayam said...
தட தட வென்று முதலாவது ஜீப் வண்டியிலிருந்து குதித்த மூன்று இராணுவ வீரர்கள் எனது வாகனத்தை சுற்றி வளைத்துக் கொண்டனர். கொஞ்சம் பதற்றம் அடைந்தாலும் கண்ணாடியைக் கீழிறக்கி நான் கவனிக்கவில்லை என்றும் வீதி மூடப் படவில்லை என்பதையும் சுருக்கமாக விளக்கி எனது ஊடகவியலாளர் அடையாள அட்டையையும் காட்டினேன்.. ///

லோஷன் வாழ்க பல்லாண்டு!!!அன்புடன் தேவா!//

நன்றி சகோதரரே

==========================
sinmajan said...
தேசியப் பாதுகாப்பு றொம்ப முக்கியம்..
இல்லைங்களா லோஷன் அண்ணா??//
ஆமாமா.. ஆமா ஆமா.. ரொம்ப ரொம்ப முக்கியம்


//நாம எல்லாம் யாழ்ப்பணத்தில..இதுக்காகவே
சைக்கிளை கழுத்திலை போட்டுக் கொண்டெல்லாம்
நடந்திருக்கம் .,,உங்களை மட்டும்..ஹா..ஹா..(சைக்கிளை கழுத்திலை போட்டுக் கொண்டு
லோஷன் அண்னயைக் கற்பனை செய்து யாரும் பார்த்தா நாம பொறுப்பில்லை..)//

நாங்க வாகனத்தைஎல்லா தூக்கணும்? ஏனையா? இருக்கிற சுமை எனக்கு போதாதேண்டா?

Ithayam said...

கடவுளுக்கு நன்றி கூறுங்கள்...கவனமாக வண்டியோட்டுங்கள்

ARV Loshan said...

Sinthu said...
அண்ணா இப்ப பாத்துப் போனாலும் எங்க தப்பு என்றாங்க பார்க்காமல் போனாலும் எங்க தப்பு என்றாங்க... அப்பா நாங்க என்ன்செயானும்...//

என்ன செய்யணும்? ஒண்ணுமே செய்யக் கூடாது.. :)

"இனி எப்போ?"
அப்ப நீங்க எதிர் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறீங்க போல...//

வரவேற்றுக் கொண்டு அல்ல.. எது வந்தாலும் தயார் என்று எந்தநேரமும் எதிர்கொள்ளத் தயாராக.. நான் மட்டுமல்ல இலங்கை வாழ் எல்லோருமே..

=================================
கலை - இராகலை said...
///
என்னாங்க கலை அவர் என்ன உங்க தோஸ்தா? நான் அவரைப் பார்த்ததே இல்லை.. கொஞ்சம் வர சொல்லுங்களேன் மீட் பண்ணலாம்.. நிறைய விஷயம் அவருக்கு சொல்ல இருக்கு.. இவ்வளவு உலகத்திலை நடக்குது அவர் என்ன பிடு... ஓ sorry.. செய்கிறாராம்..////

அண்ணா மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் அவர் தானே ஆரம்பித்து வைத்தார் பிறகு உலகத்தில் எது நடந்தா என்ன? அவரைவிட இபோ எல்லாமே நல்லா பேட் பன்னுராங்க! என்னா அன்று துப்பாக்கி இல்லை அதான், அதோட இன்னொரு விஷயம் இப்போ அழித்தல் தொழிலை அவர் நிறுத்திட்டார்! யமனுக்கு விடுமுறையாம் (பொறுப்புக்களை இங்கே கொடுத்துவிட்டாங்க) கோடம்பக்கத்தில் விசயம் அறிந்தவர்கள் சொல்லிக்கிறாங்க‌ //

அப்படித் தான் தெரியுது..
யமனின் ஏஜெண்டுகள் இப்ப நிறையப் பேர்.. கடவுளும் இல்லை.. அவரின் ஏஜெண்டாகவும் யாருமில்லை..
(அதென்னாங்க நம்ம ஹிஷாம் ஸ்டைல் எடுத்துட்டீங்கன்னு ராமசாமி கேக்க சொன்னாரு)

//அதெல்லாம் சரி அந்த கருப்பு கண்ணாடியை கலட்டி விட்டு வாகனத்தை ஓட்டுங்கோ அப்போதான் நல்லா பாதை தெரியும், இரவு நேரங்களிலும் கருப்பு கண்ணாடியோடு வாகனம் ஓட்டுவதாக இராமசாமி அண்ணே சொல்ல சொன்னாரு!!//

நான் கொஞ்சமாவது எம் ஜி ஆர், கலைஞர் மாதிரி வர விடமாட்டீங்கிரீங்களே.. அதெல்லாம் ஸ்டைலும்மா ஸ்டைலு..
(மெய்யாலுமே நல்லா இல்லியா??)

ARV Loshan said...

ஜோசப் பால்ராஜ் said...
ஏன் அண்ணா,
இலங்கையில் பத்திரிக்கை தொழில் செய்பவர்களுக்குத் தான் பல வழிகளில் உயிர் ஆபத்து தொடர்ந்துகொண்டிருக்கிறதே, நீங்கள் வேறு ஏன் தானாக ஆபத்தை தேடிக்கொள்கிறீர்கள்? //
நானா எங்கேய்யா போறேன்.. நான் போற வழியில அதுகளா வருது.. என்ன செய்ய??

//மெதுவாக சென்றால் 10 நிமிடங்கள் தானே அதிகமெடுக்கும்? எதற்கு இப்படியெல்லாம் விசப்பரிட்ச்சை?
கவனமாயிருங்கள்//
பரீட்சை என்றாலே எனக்கு அலர்ஜி.. இதுக்குள்ள விஷம் வேறையா? என்றாலும் நான் கவனமாயே இருக்கிறேன்..

=========================
குடுகுடுப்பை said...
உயிர் முக்கியம், கவனமாக இருக்கவும்.

நன்றி குடுகுடுப்பை அண்ணாச்சி... கவனமாயே இருக்கிறேன்

=======================

ARV Loshan said...

saisayan said...
thanks god...
vasitthukondirukkum pothu oru feel la vasithukondu ponan, kadsiyala soonna dialog vasithathum konjam sirippa irunthittu, unkalukku antha time laium inji gab la dialog vidditinka.. super....

god always with us... //

:)

========================

Triumph said...
//ஏன் அண்ணா,
இலங்கையில் பத்திரிக்கை தொழில் செய்பவர்களுக்குத் தான் பல வழிகளில் உயிர் ஆபத்து தொடர்ந்துகொண்டிருக்கிறதே, நீங்கள் வேறு ஏன் தானாக ஆபத்தை தேடிக்கொள்கிறீர்கள்?
மெதுவாக சென்றால் 10 நிமிடங்கள் தானே அதிகமெடுக்கும்? எதற்கு இப்படியெல்லாம் விசப்பரிட்ச்சை?
கவனமாயிருங்கள்//

Yea Loscan anna kavanam.... You can do stunts if u r single.. but u r not and You have a kid... so better be careful.. enna.. ?//

அதென்ன புல்லட் ஸ்டைல் நக்கல்? (Loscan)
tx for the serious advice thangachichi.. (or paatti)

============================

Nimalesh said...
Bro take care ur self bro cos v all need u.. tc//
tx bro.. I will

ARV Loshan said...

Ithayam said...
கடவுளுக்கு நன்றி கூறுங்கள்...கவனமாக வண்டியோட்டுங்கள்//

நன்றி :)

Anonymous said...

//அதென்ன புல்லட் ஸ்டைல் நக்கல்? (Loscan)
tx for the serious advice thangachichi.. (or paatti)//

He he.. Konjam serious illamal kathaippam endu thaan sonnathu...

paattiya..?. girls get matured vry early pa...

Unknown said...

//பிரதீப், 'அண்ணை, அப்படியிருந்தாலும் வெற்றி FMல மரண அறிவித்தல் free தானே!' என்றார் இன்னும் கூலாக.//
மனிதருக்கு ஒரே நகைச்சுவைப் புத்தி போங்கள்...

கடவுளுக்கு நன்றி சொல்வதை விட்டு விட்டு வாகன தடுப்பிற்கு (Break) நன்றி சொல்லுங்கள்...

கிருஷ்ணா said...

அண்ணோய்! வாகனம் ஓடும்போது கொஞ்சம் (றோட்ட மட்டும்) பாத்து ஓடுங்கோ :) அதோட காலையும் கொஞ்சம் கவனமாப் பாத்துக்கொள்ளுங்கோ! இங்க சிலர் கவலைப்படுகினம்.. :))))

Nirosh Canagalingasivam said...

Nithaanam!!!!! Ethilum nithaanam nallathu chetaa..... tc...
God bless :)

Nirosh Canagalingasivam said...

Nithaanam!!!!! Ethilum nithaanam nallathu chetaa..... tc...
God bless :)

SASee said...

பதிவை கொஞ்சம் லேட்டாக பார்த்தாலும்
அண்ணா தலைப்பை பார்த்தவுடன்
மனதை தொட்டு சொல்கிறேன்..
மனம் பதறிப்போனது.
ஏன் என்று எனக்கே தெரியவில்லை...

நான் நடக்காத ஒன்னறயும் கொஞ்சம் ஓவரா கற்பனை செய்து மயிர்சிளிர்ப்பவன், அதனாலோ தெரியவில்லை.

முழுவதும் படித்தும் (கருத்தை பதியும் போதும்)
இதய அடிகள் ஓயவில்லை..

இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.
இருப்பினும் அவருக்கும் மிஸ் ஆகிடலாம் சில வேளை.

கொஞ்சம் இல்ல நிறையவே கவனமாக அண்ணா....

அஜுவத் said...

palliya adikka maatanga; ippa ellam adikkirathillaye. sud.....

Anonymous said...

Loshan
Pesama Tamilnadukku Vadhurunga. Unga talentkku youwill get good opportunities in any of the top TV channels.
YOu can live a peaceful life in a growing giant like India

Sanjai Gandhi said...

வண்டியில் எப்போதும் வேகம் வேண்டாம் லோஷன். 5 நிமிடம் தாமதாக வீடு போனால் ஒன்றும் குறையில்லை. கவனமாக இருங்க. போக்குவரத்து நெரிசலில் 60 - 80 எல்லாம் ரொம்பவே அதிமய்யா. குறைத்துக் கொள்ளுங்கள்.

Anonymous said...

ஹரி ஹரி பரிஸ்ஸமென் யன்ன..அபி தெமல கட்டி நேமோன கரன்டாத ,
பரிஸ்ஸமென் ன்ன

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner