April 20, 2009

'பிரபாகரன் எனது நண்பன்'

Loshan

நேற்று பிற்பகல் வீட்டில் ஓய்வாக இருந்த நேரம் IPL சிறப்புத் தொகுப்புப் பார்ப்பதற்காக NDTV பார்க்க காத்திருந்த நேரம் - 

Breaking News என்று வெளியான செய்தி தான்.

"Prabahakaran is my friend and I’m not a terrorist"  (பிரபாகரன் எனது நண்பர் அத்துடன் நான் தீவிரவாதியல்ல – கருணாநிதி)

என்னை நானே கிள்ளிப் பார்த்தேன். நடப்பது நிஜமே.

இன்றும் தமிழக முதல்வர் கருணாநிதி சொன்னதாக NDTV ஒளிபரப்பிய விஷயங்கள் மென்மேலும் ஆச்சரியமளித்தன.

"பிரபாகரன் கொல்லப்பட்டால் மிக வருத்தமடைவேன்"

"விடுதலைப் புலிகளில் இருக்கும் ஒரு சிலர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள்"

"விடுதலைப் புலிகளின் நோக்கங்கள் - இலட்சியங்கள் நியாயமானவை. எனினும் கைக்கொள்ளும் வழிமுறைகள் தவறானவை"

இதற்கு மேலும் போய் - 
"பிரபாகரன் ஒரு தீவிரவாதியல்ல" என்றும் கலைஞர் சொல்லியிருக்கிறார்! 

என்னாச்சு திடீரென்று தமிழக முதல்வருக்கு?

திடீர் ஞானோதயமா? தேர்தல் கால தந்திரோபாயமா?
ஒண்ணுமே புரியல இந்த உலகத்தில!

நேற்று முன்தினம் ஜெயலலிதா அறிவித்த தமிழீழக் கதைக்குப் போட்டியாகவா இந்தப் பேட்டி? இல்லை தமிழகத்தில் ஈழத்தமிழர் போராட்டத்தில் கூடுதல் அக்கறையுடையவர் தானே என நிலைநிறுத்தும் ஒரு முயற்சியா?

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி தமிழக முதல்வர் இப்படிப் 'புகழ்ந்து' தள்ளிய காரணம் எது?

'நண்பர்.. பயங்கரவாதியல்ல' போன்ற வார்த்தைகளையெல்லாம் - புலிகளைக் கடுமையாகச் சாடி வரும் காங்கிரசின் கூட்டணியில் இருந்து கொண்டே கலைஞர் சொன்ன காரணம் என்ன?

இதற்குப் பதிலாக காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியையும், கலைஞரின் தனிப்பட்ட கருத்துக்களாகவுமே இவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கின்றனர்.

காங்கிரஸின் தலைவர் கபில் சிபல் "இந்திய அரசின் பார்வையில் பிரபாகரன் ஒரு குற்றவாளி" என்று வெட்டொன்று துண்டிரண்டாய் பதில் சொல்லிவிட்டார்.

பாரதிய ஜனதாவோ ஒரு படி மேலே போய் இதனைக் கண்டித்துள்ளது.அப்பாவித் தமிழ் மக்களுக்காகப் பரிந்து பேசுவது வேறு – புலிகளுக்கு ஆதரவாய் பேசுவது வேறு என்று ஆணித்தரமாக BJP தலைவர் ஜவேட்கர் சொல்லிவிட்டார்.

கருணாநிதி வாக்கு சேர்க்கும் வங்குரோத்து அரசியலே மேற்கொள்வதாக BJP சொல்லியிருக்கிறது.

NDTVயும் சும்மா இருக்காமல் பரபரப்பு வியாபாரத்துக்காக இதை பி.ப 2 மணியிலிருந்து இரவு வரை கலைஞரின் இந்தப் பேட்டியையே பல்வேறு விதமாக அலசி, பல கட்சிகளையும் சேர்ந்த பல பேரையும் தொடர்பு கொண்டு, கிண்டிக்கிளறி இன்றைய பல பத்திரிகைகளுக்கும், எம்மைப்போன்ற பதிவர்களுக்கும் தீனி போட்டது.

எல்லாவற்றிலும் உச்சபட்ச கொடுமை இலங்கையின் அமைச்சரும் பாதுகாப்பு தொடர்பான பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்லவையே தொடர்புகொண்டு, கலைஞரின் இந்தப் பேட்டியையே பார்த்திராத, அது பற்றி எதுவுமே தெரிந்திராத அவரிடம் இது பற்றி போட்டுக் கொடுத்து 'சிண்டு' முடிந்தும் வைத்தது NDTV.

இதற்குள்ளும் திட்டமிட்டு கலைஞரை வலைக்குள் வீழ்த்துவது போல இலங்கை அமைச்சர் ரம்புக்வெல்லவிடம் 'கருணாநிதியின் பேட்டி பற்றி இந்திய மத்திய அரசிடம் இலங்கை அரசின் மூலம் உத்தியோகபூர்வமாக கண்டனம் தெரிவிப்பீர்களா' என்ற கேள்வியையும் அந்த தொகுப்பாளர் (அவரே தான் கலைஞரையும் பேட்டி கண்டிருந்தார்- NDTVயின் முகாமைத்துவ ஆசிரியராம்) கேள்வியெழுப்பியிருந்தார்.

காங்கிரஸ் எந்த ஒரு கருத்தையும் உத்தியோகபூர்வமாக சொல்லாமல் இருக்கும் நிலையிலும் மீண்டும் மீண்டும் "காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இதுவரை எந்த ஒரு காட்டமான அறிக்கையும் வரவில்லை" என்று NDTV தொகுப்பாளர்கள் சொல்லிக் கொண்டிருந்தமை அவர்களாகவே வலிந்து ஒரு பரபரப்பை அரசியல் அரங்கில் ஏற்படுத்தி, தி.மு.க காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயல்கிறார்களோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது..

ஒரு பேட்டியிலேயே பலர் பார்வையையும் தன் பக்கம் திருப்பிய சாணக்கியம் கலைஞருக்கே உரியது.. இதற்காக வருடக் கணக்கான காலப் பகுதிக்கு முன்னர் இடம் பெற்ற நிகழ்வை எல்லாம் (பிரபாகரனின் Frontline பேட்டி) கலைஞர் பட்டியலிட்டு சொன்னதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.. இவ்வளவு காலமும் அல்லல் படும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தாலும், உருப்படியான நடவடிக்கை எடுக்காமலிருந்தவர் என்ற அவப்பெயருக்கு ஆளாகியிருந்த கலைஞர் இந்த பரபரப்பு பெட்டி மூலம் தமிழ் மக்களின் மனதையும், ஈழ்த் தமிழ் ஆதரவு வாக்குகளையும் ஈர்த்து விட்டார் என்று நினைத்தால் அனைத்து தமிழரையும் கலைஞர் முட்டாள்களாக நினைக்கிறார் என்றே அர்த்தம்.

எனினும் தனது மனதைத் திறந்த பேட்டியாக இதை வழங்கி இருக்கிறார் என்று எடுத்தால் இந்திய தேர்தல்களின் மத்தியில் இதை இவ்வளவு காலமும் இன்றி இப்போது சொல்லக் காரணம் என்ன என்ற சந்தேகமும் வருகிறது..
(ஒரு வேளை பிரபாகரன் இனி பேட்டி ஒன்றும் கொடுக்க முடியாத நிலைக்கு உள்ளாவார் என்று கலைஞர் தீர்மானித்து விட்டாரா?) 

  பலரும் எதிர்பார்த்தது போல இலங்கை அரசு இது பற்றி இதுவரை இந்திய மத்திய அரசிடம் முறையிடாதது என்னைப்பொறுத்தவரை ஆச்சரியமே இல்லை.. எனென்றால் இலங்கை அரசு இந்திய மத்திய அரசையே பெரிதாக கணக்கில் எடுக்காத பொது கலைஞரின் கருத்து எம்மாத்திரம்? 

பி.கு - இதை வாசித்தவுடன் கலைஞரின் அன்பர்கள்/அபிமானிகள் (வாலுகள்,அடியாட்கள் என்ற பதங்களை நான் எதிர்க்கிறேன்) 'அதுசரி கலைஞரை எதிர்க்கும் உங்களுக்கு ஜெயலலிதா தங்கத் தட்டில் தருவார் பார்த்திருங்கள்' என்று முட்டாள் தனமாக பின்னூட்டம் இடவேண்டாம்.. 

காரணம் தமிழரை ஓரளவாவது யோசித்துப் பார்க்கிற கலைஞரே இப்படியென்றால் அந்த அம்மையார் ஒரு மண்ணாச்சு.. மட்டையாச்சு..  





20 comments:

B.Karthik said...

Great Review/Analysis.

//காரணம் தமிழரை ஓரளவாவது யோசித்துப் பார்க்கிற கலைஞரே இப்படியென்றால் அந்த அம்மையார் ஒரு மண்ணாச்சு.. மட்டையாச்சு.. //

Great Finish for a well structured post.

Thank you.

biya said...

onnume puriyala olagathile??!!!

Anonymous said...

தமிழர்கள் முட்டாள்கள் என்பதில் அவருக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.. வேறென்ன? உசுப்பேத்தினா மட்டும் போதும் தமிழனுக்கு.. வியாக்கியானம் கொடுக்க அவனை விட்டா ஆள் இல்லை..

இவ்வலவு தூரம் இந்தியாவை எதிர்பார்க்கும் வடபுல தமிழர்கள் ஏன் இந்திய ரானுவா தலையீட்டை எதிர்க்கிறது? ஏன் என்றால் இந்தியா எங்களுக்கு தேவைப்பட்ட நேரத்தில் மட்டும் தேவைப்பட்ட மாதிரி வேலை செய்யவேண்டும் என்று நினைக்கும் அதாவது இந்தியாவை ஒரு கூலிக்காரனாக பார்க்கும் மன நிலையின் பிரதிபலிப்பு தான் இது..

கொஞ்சமாவது சிந்தித்து தமிழர்க்கு உரிமைகளை உறுதி செய்யும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.. மாறாக புலி flavor உடன் எது பேசினாலும் அது புலி சார்பான பேச்சாக எத்தனமாக கருதப்பட்டு எம்மவரின் உழைப்பும் இதுவரை சிந்தப்பட்ட உதிரம்போல் வீணாகிவிடும்..

T.A.Maran said...

பிரபாகரனை நண்பர் என்று நான் சொன்னேனா என்டிடிவி செய்தி தவறு - மு.கருணாநிதி

"அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா......!!!!"

சி தயாளன் said...

அரசியல்..:-((

Anonymous said...

http://esocialbytes.blogspot.com/2009/04/prabhakaran-is-not-terrorist.html

நிகழ்காலத்தில்... said...

\\தேர்தல் கால தந்திரோபாயமா\\

வேறென்ன!!!!

Anonymous said...

தான் கூறிய செய்தி திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும் என்டி TV எப்போதுமே திமுகவுக்கு எதிரான என்றும் கருணாநிதி சொல்லிவிட்டார்.ஆனபடியால் நீங்கள் அவர்களை சந்தேசபடுத்த முடியாது.

ராவணன் said...

இது நேற்றய செய்தி...இன்று கருணாநிதி சொன்னதைப் பார்த்தால் இந்தப் பதிவை நீக்கிவிடுவீர்கள்.

கருணாநிதிக்கு எப்போதும் புலிகளைப் பிடிக்காது.இது கூடத் தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக ஒரு பதிவு வேறு..உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை கருணாநிதிக்குக் கொண்டாட்டம்தான்..

இப்படிக்கு
ராவணன்.

நான் தமிழன் said...

தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி சிறிலங்கா அரசாங்கத்தின் நண்பர்; அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தனது நண்பர் எனக் குறிப்பிட்டது கவலை தருகின்றது என்று சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
Will Karunanithi dare to reply him ?

Anonymous said...

செய்தி
பிரபாகரனை நண்பர் என்று நான் சொன்னேனா என்டிடிவி செய்தி தவறு - மு.கருணாநிதி
[ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2009, 06:40.44 AM GMT +05:30 ]
விடுதலைப்புலிகளின் தலைவரை நண்பர் என்று சொன்னதாக தொலைக்காட்சி நிறுவனம் தவறாக செய்தி வெளியிட்டுள்ளதாக திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல; என் நண்பர் என்று முதல்வர் சொன்னதாக என்.டி.டி.வி. ஆங்கில செய்திச்சேனல் நேற்று செய்தி வெளியிட்டது.

இது குறித்து காங்கிரசார் அது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இலங்கை அரசாங்கமோ, கருணாநிதி என் நண்பர். அவர் பிரபாகரனை தன் நண்பர் என்றுவிட்டாரே என்று கவலை தெரிவித்திருந்தனர்.

கலைஞர் பிரபாகரனை நண்பர் என்று சொன்னதில் ஈழ ஆதரவாளர்கள் மகிழ்ந்திருந்திருந்தனர். கலைஞர் இப்படி பேசியது தேர்தல் நேரம் என்பதால் இப்படி பேசியிருக்கிறார் என்றும் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் முதல்வர் கருணாநிதி இன்று, ‘’ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது’’என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோருவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு " இலங்கையில் போர் முடியும் வரை போரை நிறுத்தக்கூறிக் கொண்டே இருப்போம்" என்றார்.

EELAMAHAN said...

"அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா......!!!!"
THAT'S IT...NO MORE COMMENTS!!!!

ஆதிரை said...

அண்ணா... ஒரு பதிவின் மூலமாக சொல்ல எண்ணியதை இங்கு பின்னூட்டமாக இடலாம் என எண்ணுகின்றேன்.

NDTV கலைஞருக்கும் காங்கிரஸுக்கும் சிண்டு முடித்து விடுவதற்கு முயன்று கொண்டிருக்கலாம். ஆனால், அதற்காக பிரபாகரன் தனது நண்பர் என கலைஞர் சொன்னது பொய்யாகாது. ஏனெனில், இலங்கை யுத்தம் ஒரு உள்நாட்டு விவகாரம்(?), அதில் இந்தியா நேரடியாக தலையிட முடியாது (அப்படியா?) என பின்னர் காரணம் கற்பித்த இந்த வங்குரோத்து அரசியல்வாதிதான் முன்னர் பதவி ராஜினாமா எனும் நாடகம் ஆடியவர்.

கலைஞரின் இந்த வார்த்தை ஜாலம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். தனி ஈழ மாநிலம் என ஜெ அதிரடி அறிக்கை விட்டதும், அவர் மீதான ஆதரவு அலையை தன் பக்கம் திருப்புவதற்கு கேவலமான அறளை அறிக்கை இவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டது. அதுதான் இது.

இவருடைய கேவலமான அரசியலை அலசுபவருக்கு இவரினது மறுப்பறிக்கைக்கும் காரணம் புலப்படும். இவருடைய இந்தத் தோழமை பாராட்டல் தமிழக மக்களிடம் எடுபடவில்லை என்பது அவர்கள் சில இணையத்தளங்களில் இட்ட கருத்துக்களின் மூலம் தெரிகின்றது. அதில் உச்சக்கட்டமாக ஒரு பின்னூட்டம் "ஐயா... தயவு செய்து உங்களின் அறிக்கைகளின் மூலமாக இலங்கை இராணுவத்தளபதி சொன்ன கோமாளித்தனத்தை மெய்ப்படுத்தி விடாதீர்கள்" என்றிருந்தது. அதுமட்டுமன்றி, காங்கிரஸ் அனுதாபிகள் இவருடைய முகத்தில் காறி உமிழத் தொடங்கினார்கள். "எங்கள் தலைவனை கொன்றவன் உங்கள் நண்பரா" என்றவாறான கருத்துக்களினதும் நெருக்குதல்களினதும் விளைவே இவருடைய இந்த இலட்சமாவது குத்துக்கரணம். அதாவது, இருக்கிற துண்டையாவது காப்பாற்றிக் கொள்(ல்)வேன் என்பதன் வெளிப்பாடு.

முத்துக்குமாரின் இறுதிநிகழ்வில் பணப்பெட்டிகள் காவிச்சென்ற தி.மு.க வினருக்கு மக்கள் அளித்த அமோக வரவேற்புக்குப் பின்னர் தமிழக உறவுகள் சில விடயங்களில் உறுதியாகிவிட்டனர் என்பது வெளிப்படை.

நடக்கட்டும்... நாடகம் முடியும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா....

Unknown said...

நேற்றைய மின்னஞ்சல் இற்கு நல்ல பதில் தந்து இருக்குறீங்க லோஷன் .
வாழ்த்துக்கள். அதே நேரம் நான் சொன்னது இன்னும் பலிக்கும்
ஜெயா Aunty யோ , கருணாநிதி பாட்டாவோ எதுவும் செய்ய போறதில்லை
சொந்த முயற்சி திருவினையாக்கும் என்பதே பழமொழி
ப்ரியமுடன்
Theepa

சவுக்கடி said...

***" இலங்கையில் போர் முடியும் வரை போரை நிறுத்தக் கூறிக் கொண்டே இருப்போம்"***

ethai vida manam ketta thanam unda?
eemaatrukkaara ezhivana piravi!

thannalame uruvaana naadagamaadi!

enath "throhi" !

ttpian said...

அடிமை சுதந்திரமாக பேசமுடியாது!

கோவி.கண்ணன் said...

அங்கேயே இருந்து கொண்டு இது போல் சென்சிடிவ் போடுகிறீர்கள். ரொம்பவும் துணிச்சல் தான். பாராட்டுகிறேன் என்று சொல்லி உசுப்பேற்ற நான் தயாராக இல்லை.

ARV Loshan said...

B.Karthik said...
Great Review/Analysis.//
நன்றி சகோதரா..


Great Finish for a well structured post.//
நன்றி

===================
biya said...
onnume puriyala olagathile??!!!
எனக்கும் அப்படித் தான் இருந்தது நேற்று.. இன்னிக்கு எல்லாமே தெளிவாப் புரிஞ்சு போச்சு.. நடப்பதெல்லாம் நடக்கும்..

ARV Loshan said...

Anonymous said...
தமிழர்கள் முட்டாள்கள் என்பதில் அவருக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.. வேறென்ன? உசுப்பேத்தினா மட்டும் போதும் தமிழனுக்கு.. வியாக்கியானம் கொடுக்க அவனை விட்டா ஆள் இல்லை.. //

நூறு வீதம் உண்மை.. மிளகாய் நல்லா அரைக்க ட்ரை பண்ணுறார்.. இம்முறை பருப்பு வேகலை.


இவ்வலவு தூரம் இந்தியாவை எதிர்பார்க்கும் வடபுல தமிழர்கள் ஏன் இந்திய ரானுவா தலையீட்டை எதிர்க்கிறது? ஏன் என்றால் இந்தியா எங்களுக்கு தேவைப்பட்ட நேரத்தில் மட்டும் தேவைப்பட்ட மாதிரி வேலை செய்யவேண்டும் என்று நினைக்கும் அதாவது இந்தியாவை ஒரு கூலிக்காரனாக பார்க்கும் மன நிலையின் பிரதிபலிப்பு தான் இது.. //

இந்த பார்வை தவறு அனானி.. கூலிக்காரனாக பார்க்கவில்லை.. ஒரு மூத்த அண்ணனின் கடமையைத் தான் எதிர்பார்க்கிறார்கள் ஈழ்த் தமிழர்கள். அது முன்பு அண்ணன் தம்பி பாசமாக புரிந்துனரப் பட்டாலும் இப்போது அண்ணன் எதிர் வீட்டுக்காரனுக்கல்லவா ஒத்துழைக்கிறார்..

=====================

T.A.Maran said...
பிரபாகரனை நண்பர் என்று நான் சொன்னேனா என்டிடிவி செய்தி தவறு - மு.கருணாநிதி

"அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா......!!!!"//

எனக்கும் lateஆத் தான் தெரிஞ்சுது அண்ணே.. ;) (செய்தியும், கலைஞர் பற்றியும்)

ARV Loshan said...

’டொன்’ லீ said...
அரசியல்..:-((//
ம்ம்ம் என்ன செய்ய லீ. சொல்லியே ஆகவேண்டும் போல இருந்தது..

=====================
Anonymous said...
http://esocialbytes.blogspot.com/2009/04/prabhakaran-is-not-terrorist.html//

பார்த்தேன் நன்றி..

===================
அறிவே தெய்வம் said...
\\தேர்தல் கால தந்திரோபாயமா\\

வேறென்ன!!!!//
அப்படியே இன்று மிகத் தெளிவாகி விட்டது..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner