கலைஞர் ஐயா தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள்...
கலைஞர் ஐயா நீங்கள் பெரியவர் – நான் அறியாமை நிறைந்த சிறுவன். உங்களைப் பற்றி மீண்டும் ஒரு தடவை தவறாக எழுதிவிட்டேன். பாமரர்களாகிய எம்மைப் போன்றோருக்கு உங்கள் சங்கத் தமிழின் மறைபொருள் அர்த்தம் புரியாமல் நேரடி அர்த்தம் மட்டுமே கொண்டுவிட்டேன்.
நேற்று என் பதிவு போட்ட பின் தான் உங்கள் மறுப்பறிக்கையை பார்த்தேன் ஐயா.
நீங்கள் மறுபடி ஏதாவது மறுப்பறிக்கை விட்டுவிடுவீர்களோ என்று நான் எனது பதிவில் எந்தத் திருத்தங்களையும் மேற்கொள்ளவில்லை.
பிரபாகரனை நண்பர் என்று நான் சொன்னேனா என்டிடிவி செய்தி தவறு - மு.கருணாநிதி[ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2009, 06:40.44 AM GMT +05:30 ]விடுதலைப்புலிகளின் தலைவரை நண்பர் என்று சொன்னதாக தொலைக்காட்சி நிறுவனம் தவறாக செய்தி வெளியிட்டுள்ளதாக திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல; என் நண்பர் என்று முதல்வர் சொன்னதாக என்.டி.டி.வி. ஆங்கில செய்திச்சேனல் நேற்று செய்தி வெளியிட்டது.இது குறித்து காங்கிரசார் அது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இலங்கை அரசாங்கமோ, கருணாநிதி என் நண்பர். அவர் பிரபாகரனை தன் நண்பர் என்றுவிட்டாரே என்று கவலை தெரிவித்திருந்தனர்.கலைஞர் பிரபாகரனை நண்பர் என்று சொன்னதில் ஈழ ஆதரவாளர்கள் மகிழ்ந்திருந்திருந்தனர். கலைஞர் இப்படி பேசியது தேர்தல் நேரம் என்பதால் இப்படி பேசியிருக்கிறார் என்றும் விமர்சனம் எழுந்தது.இந்நிலையில் முதல்வர் கருணாநிதி இன்று, ‘ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது'என்று விளக்கம் அளித்துள்ளார்.மேலும் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோருவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு " இலங்கையில் போர் முடியும் வரை போரை நிறுத்தக்கூறிக் கொண்டே இருப்போம்" என்றார்.
நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை- கருணாநிதிதிங்கள்கிழமை, ஏப்ரல் 20, 2009, 12:39 [IST]சென்னை: நான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. அவரது இயக்கத்தில் இருக்கும் சிலர் பயங்கரவாதிகளாக இருக்கலாம். அதற்கு பிரபாகரன் என்ன செய்வார். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டால் நான் வருத்தமடைவேன் என்று கூறியிருந்தார்.இது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.அதேசமயம், கருணாநிதி அடித்துள்ள தேர்தல் நேரத்து ஸ்டண்ட் இது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.இந்த நிலையில் இன்று கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார் கருணாநிதி.அப்போது அவர் கூறுகையில், தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. நான் சொன்ன செய்திகளை முழுமையாக வெளியிடவில்லை.தேவையில்லாமல் பிரச்சனைகளை கிளப்புகிறது அந்த சேனல்.என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது.விடுதலை இயக்கமாக உருவான விடுதலைப் புலிகள் இயக்கம், பின்னர் திசை மாறி இப்போது தீவிரவாத இயக்கமாகி விட்டது. ஆனால் இதை தேவையில்லாமல் மாற்றிக் காட்டி விட்டனர் என்று கூறினார் கருணாநிதி.
உங்கள் 'நண்பரை' நீங்கள் 'ராஜீவ் கொலை' விடயத்தில் மன்னிக்கவே கூடாது என்று சொல்லியிருக்கிறீர்கள்.
ஆதாரம் - NDTV
நேற்று முன் தினமோ அவர் பயங்கரவாதியே அல்ல என்று நீங்கள் உங்கள் அதே வெண்கலக்குரலில் சொல்லியதைக் காணொளியாக NDTVயில் கண்டேன்.
அப்படியானால் அதன் அர்த்தமே உங்கள் தமிழில் வேறா ஐயா? அதுசரி நான் கற்ற தமிழ் உங்கள் முத்தமிழுக்கு முன்னால் வருமா?
எனது நண்பர் கஞ்சிபாய் கலைஞரின் அண்மைக்கால அறிக்கைகள் 'தொட்டால் பூ மலரும்' திரைப்படத்தில் என்னத்தே கண்ணையா சொல்கின்ற 'வரும்.... ஆனா வராது' என்பது போலவே இருப்பதாக நேற்று எனக்கு சொல்லியிருந்தார்.
தமிழினத் தலைவரை அப்படியெல்லாம் விஷமமாக வேடிக்கை பண்ணக்கூடாது என்று ஏசிவிட்டேன் அவரை!
கலைஞர் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் அதில் ஒரு உள்ளார்ந்த அர்த்தமும், எதிர்காலத்துக்கான தொலைவு நோக்கும் இருக்கும் என்று நம்பும் கோடிக்கணக்கான தமிழர்கள் இருக்கின்றார்கள் என்று கஞ்சிபாய்க்கு புரியச்செய்தேன்.
ஆனால் ஒரு சில சந்தேகங்கள் ஐயா –
பேட்டி கொடுக்கக் காரணமும், பின் அதை மறுத்து உங்கள் கட்சியினதும் உங்களினதும் எதிரிகள் NDTV நிறுவனத்தினர் என்று கோரிக்கை விடுவதும் எந்த சாணக்கியம்?
உங்கள் பேட்டி மூலமாக நீங்கள் பெற்ற ஆதரவை விட, மறுப்பறிக்கை மூலம் நீங்கள் அதிகமான எதிர்ப்பை பெற்றதாக அரசியல் அவதானிகள் சொல்கிறார்களே உண்மையா ஐயா?
ஸ்டாலின் பதவிக்கு வரும் காலம் நெருங்கிவிட்டது என்பதற்கான அறிகுறிகளா?
சுப்ரமணியம் சுவாமியை ரொம்ப நாளாகக் காணலையே என்று பார்த்திருந்தால் நீங்கள் அவரையும் தூக்கி சாப்பிட்டு விடுவீர்கள் போல –
இலங்கை இராணுவத் தளபதி சொன்னதில் தப்பில்லையே? (கோமாளிகள்.....)
(நன்றி ஆதிரையின் பின்னூட்டம்)
..................................................
IPL போட்டிகளை ஒளிபரப்பும் SONY MAX தொலைக்காட்சி எங்கள் வீட்டிலுள்ள கேபிளில் வருவதில்லை!
இதனால் IPL தொடக்கியும் எனக்குத் தொடங்காத மாதிரி ஒரு ஃபீலிங்! IPL தொடங்கிய அன்று எங்கள் அலுவலகத்தில் பிரிவுகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி இடம்பெற்றது. ( Inter Division Cricket Tournament) மாலை வரை அந்தப் பரபரப்பினாலும், எமது வெற்றி (நிகழ்ச்சி மற்றும் செய்திப்பிரிவுகள் இணைந்த) அணி 2ம் இடத்தைப் பிடித்த ஓரளவு திருப்தியும் IPL பரபரப்பைக் கூடியளவு மறக்கடித்துவிட்டது.
பின்னர் இரவு 9.30 வரை அலுவலகத்தில் இருந்ததனாலும், ஞாயிறும் அலுவலகப்பணி இரவு நேரம் இருந்ததனாலும் அலுவலகத்தில் Sony Max இணைப்பு இருப்பதனால் ஓரளவு போட்டி பார்க்க முடிந்தது.
எனினும் இரவு 7 மணி போல தொடர்பு கொண்ட நண்பரொருவர் தான் அந்த சந்தோஷமான, ஆறுதலான செய்தியை சொன்னார்...
இலங்கையின் அரச தொலைக்காட்சி 'CHANNEL EYE' IPLஐ இனித் தொடர்ந்து ஒளிபரப்பும் என்று!
'ஐ'க்கு நன்றி! நன்றி! நன்றி!
'ஐ'யில் பார்த்த முதல் போட்டியே எனக்குப் பிடித்த சென்னை சூப்பர் கிங்சுக்கு அபார வெற்றி. அதுவும் நம்ம ஹீரோக்கள் ஹெய்டனும், முரளியும் பெற்றுக் கொடுத்த வெற்றியில்லையா?
வயதேறினாலும் சிங்கங்கள் சிங்கங்கள் தான்!
இந்த IPL தொடங்கியதிலிருந்து இளம் வீரர்களைவிட சிரேஷ்ட வீரர்களான சச்சின், சனத், டிராவிட். கும்ப்ளே, வோர்ன், ஹெய்டன், முரளி என்று இளவயது வீரர்களின் விளையாட்டு என்று வர்ணிக்கப்படும் T - 20ஐயெ மாற்றிப் போட்டு பின்னியெடுக்கிறார்கள்!
'ஐ' மூலமாக என் வீட்டிலும் இனி IPL திருவிழா தான்!
CSK இன் வெற்றிப்பயணம் தொடரட்டும்!