கந்தசாமியும் கிரிக்கெட்டும் பதிவும் - மசாலா

ARV Loshan
17


நாளை இலங்கைப் பதிவர் சந்திப்பு..

எல்லாம் சரியாக ஒழுங்கு செய்துள்ளதால் நாளை காலை எட்டு மணிக்கு மண்டபத்துக்கு செல்வதை விட வேறு வேலை இல்லை..

நேற்று பார்த்த 'கந்தசாமி'யைப் பற்றி விமர்சனப் பதிவு இடலாம் என்று பார்த்தால் வீட்டில் கொஞ்சம் வேலை (சமையல் எல்லாம் இல்லப்பா.. நான் சமைச்சு யார் சாப்பிடுறது?) அதுக்குப் பிறகு இன்று 'அவதாரம்' நிகழ்ச்சியும் நான் தனியே.. (தனியே தவிக்க விட்டு கேரளாவுக்கு ஓய்வெடுக்கவும் ஓசி ட்ரிப் அடிக்கவும் சென்ற விமல் ஒழிக..)

மற்ற எல்லாருடைய கந்தசாமி பதிவுகளையும் பார்த்தேன்.. கூட்டமா சேர்ந்து கொலைவெறியுடன் கும்முகிறார்கள்..

எனக்கென்றால் எல்லாரும் ஒரே இடத்தில் எடுத்து பண்ணுகிறார்களோ என்று ஒரு டவுட்.. ;) (இதுக்காக கொலை வெறியோடு என்னத் துரத்தாதீங்கப்பா)

இருக்கும் நல்ல விஷயங்கள் பற்றி,.. ம்ஹூம் ஒரு வார்த்தை இல்லை.. இப்போதெல்லாம் இது ஒரு fashion/trend.
ஒரு பதிவர் ஒரு படம் மோசம் என்று தொடங்கினால் போதும்.. படங்களில் வடிவேலு அடியாட்களிடம் மாட்டிக் கொண்ட மாதிரி.. சிக்கிட்டான்யா வா சாத்தலாம் என்று போட்டு கும்மி எடுப்பது..

பொதுவாகவே சோம்பலாக இருக்கும் போது விமர்சனம், விளையாட்டு போன்ற பதிவுகளை நான் போடுவது கிடையாது.. அதுவும் இன்று வேலைகளும் சேர்ந்ததால் என்னுடைய கந்தசாமி திங்கள் வருவார்..

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவார் என்றெல்லாம் நான் பன்ச் டயலாக் சொல்ல மாட்டேன்.. ஆனா கிரேட்டச்ட்டா வருவார் என்று நீங்கள் நினைத்தால் நான் மறுக்க மாட்டேன்.. (ஒரு தன்னடக்கம் தான்)

விக்ரமின் கந்தசாமிக்கே இப்படி என்றால் இனி வேட்டைக்காரனுக்கு?
நினைக்காவே தலை சுத்துதே..
விஜய், பேசாம இப்பவே அரசியலுக்கு ஓடி விடுங்கள்.. ;)

Ashesல் ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு அடிக்கும் அளவுக்கு இங்கிலாந்து ஓட்டங்களை குவி குவி என்று குவிக்கிறது..

இந்தப் போட்டிக்கு சுழல் பந்துவீச்சாளர் ஒருவரை எடுக்காமல் விட்ட தவறை இப்போது பொன்டிங் யோசிப்பார்..

இந்தப் பெரிய இலக்கை இரண்டு நாள் முழுவதும் முயற்சி செய்தாலும் ஆஸ்திரேலியாவினால் அடைய முடியும் என்று நான் நினைக்கவில்லை..

ஆஷஸ் கிண்ணம் ஆஸ்திரேலியாவிடம் இருந்து செல்லாமல் இருக்க இன்னும் இரண்டே இரண்டு வழிகளே உள்ளன..

1.மழை..
2.ஆஸ்திரேலிய வீரர்கள் மிகப் பொறுமையுடன் ஆடி சமநிலை முடிவைப பெறுவது..

நான் அவதானித்த இன்னொரு சுவாரஸ்ய விடயம்..

2005இல் ஆஸ்திரேலியா இங்கிலாந்தில் வைத்து ஆஷசைப் பறிகொடுத்த போது முதல் டெஸ்ட் போட்டியிலேயே பொன்டிங் இரத்தக் காயம் பட்டார்..(ஹார்மிசனின் பௌன்சரினால்)

இன்றும் பொன்டிங்கிற்கு காயம்.. களத்தடுப்பில் ஈடுபடும் போது உதட்டில் காயம்..

காயம் கட்டியம் சொல்லுதோ?

அறிமுக வீரர் ஜோனதன் ற்றொட் கன்னி சதத்தினை எடுத்து அசத்தியுள்ளார்.. சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல,புது வரவு..
Jonathan Trott
மறுபக்கம் இலங்கை எதிர்பார்த்ததைப் போலவே நியூ சீலாந்தை முதல் டெஸ்ட் போட்டியில் உருட்டி விட்டது..

பந்துவீச்சாளர்கள் ஜொலிப்பார்கள் என்று பார்த்தால் புதிய அவதாரம் எடுத்த டில்ஷான்?
என்ன மனிதரய்யா?


இந்த வருடம் இவர் மேல் அதிர்ஷ்ட தேவதையும், வெற்றி தேவதையும் நின்று தாண்டவம் ஆடுகிறார்கள்..

ஒரு நாள் போட்டிகளில் ஓட்டக் குவிப்பு.. T 20 உலகக் கிண்ணப்போட்டிகளில் தொடரின் சிறந்த வீரர்..

பின்னர் பாகிஸ்தான் அணிக்கெதிராக டெஸ்ட் தொடரில் விக்கெட் காப்பாளர்..

இப்போது ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக 92 & 123 Not out..
போட்டியின் சிறப்பாட்டக் காரர்.. இது டில்ஷான் காலம்..

வேறு என்ன .. இது ஒரு மசாலாப் பதிவு..
கிடைத்த நேரத்தில் நினைத்ததை பதிந்துள்ளேன்..

திங்கள் கந்தசாமியைக் கூடி வருகிறேன்..

இலங்கையிலுள்ள பதிவர்களே,நண்பர்களே நாளை சந்திப்போம்.. சந்தொஷிப்போம்..

இப்ப வர்ட்டா?

Post a Comment

17Comments

Please Select Embedded Mode To show the Comment System.*