August 10, 2009

இலங்கைப் பதிவர்களே...

பலரும் பல காலம் யோசித்து, பேசி, எழுதி, விவாதித்து வந்த விஷயம் நடைபெறக் காலம் கனிந்து வந்துள்ளது...

இலங்கைப் பதிவர் சந்திப்பு பற்றித் தான் சொல்கிறேன்...

பேசிக் கொண்டிருந்தால் போதாது.. கூடுவோம் என்று புல்லட் முதலில் இட்ட கிண்டல் பதிவு தான் பலரையும் தூண்டி விட்டது..

பலரோடும் பேசி நீண்ட காலம் இழுத்தடிக்காமல் காலம்,இடம் என்பவற்றைத் தெரிவு செய்து விட்டோம்..

காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
கொழும்பு 06.

நோக்கங்கள் :

இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.

பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்

இன்னும் பல‌..

வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.

லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.

பிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின் மின்னஞ்சல் முகவரிகள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபணைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவாளர்கள், ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கவும்; உங்கள் வருகை பற்றி உறுதிப் படுத்தவும்.

யாரையும் தவறவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாயுள்ளோம்.. யாராவது ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.. எம்முடன் இணைந்து முன்னெடுக்க ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள்.

இருவாரங்கள் தாராளமாக இருப்பதால் இலங்கை முழுவதும் இருந்து பங்கேற்பை எதிர்பார்க்கிறோம்.

உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்..

58 comments:

வந்தியத்தேவன் said...

//பேசிக் கொண்டிருந்தால் போதாது.. கூடுவோம் என்று புல்லட் முதலில் இட்ட கிண்டல் பதிவு தான் பலரையும் தூண்டி விட்டது..//

இதுதான் எங்களுக்குள் உறங்கிகொண்டிருந்த சந்திப்பை எழுப்பிய பதிவு,

புதியவர்களின் வருகையையும் எதிர்பார்க்கின்றோம்.

King... said...

இப்பவாவது வெளிக்கிட்டியளே அதுவே போதும்,

வாழ்த்துக்கள்.

சி தயாளன் said...

சந்திப்பு இனிதே நடக்கட்டும்...

சம்மந்தமில்லாமல் ஒரு கேள்வி...சங்கத்தில் இன்னும் ரியூசன் வகுப்புகள் நடக்குதோ..?

Admin said...

பதிவர்களின் நீண்டநாள் கனவு கைகூடி இருக்கின்றது. நல்ல பல விடயங்கள் பற்றி ஆராயப்பட இருக்கின்றன. அனைத்து பதிவர்களும் வந்து கலந்து கொள்வதோடு இச் சந்திப்பு இலங்கைப் பதிவர்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமைய வேண்டும் என்பதே எல்லோரதும் அவா.

Anonymous said...

ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது நல்ல விடயமே..

இருந்தாலும் இவை என் சந்தேகங்கள

மாற்றுக்கருத்துள்ளவர்கள் இனங்காணப்படுவர்.. இது அவர்களின் தனிப்பட்ட மற்றும் கருத்து சுதந்திரங்களுக்கு பங்கமாகலாம். மறைமுக கருத்து திணிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.
(பதிவர்கள் சொந்த பெயர் கொண்டு மட்டும் அடையாளம் காணப்பட்டால் இதை ஓரளவு தவிர்க்கமுடியும். அதுபற்றிய முழுமையான திட்டம் வரையப்பட வேண்டும்)

மற்றும் ஒருவரின் பெயர் மற்றும் அவர் பற்றிய வெளிரங்கமான மதிப்பீடுகள் அவர் கருத்தை விளங்கும் விதத்தை மாற்றியமைக்கிறது. இவ்வாறான குற்றச்சாட்டை ஒருமுறை பதிவர் ஹிசாம் முன்வைத்திருந்தமையை ஞாபகத்தில் கொள்க..

பதிவுலக கருத்து வேறுபாடுகள் தனிப்பட்ட சண்டைகளாகவும் உருமாறக்கூடும்.. ்

இவ்வாறான பதிவுலகத்தின் ஆரோக்கியத்துக்கு பெரிதும் பங்கம் விளைவிக்க கூடிய அம்சங்களை கவனத்தில் கொள்க..

Anonymous said...

பதிவுலக கருத்து வேறுபாடுகள் தனிப்பட்ட சண்டைகளாகவும் உருமாறக்கூடும்.. உதாரணம்..triumph வருவதாக இருந்தால் சிலர் வரமாட்டார்கள்

கார்த்தி said...

பிறகென்ன ஒன்றுசேர்ந்து கலக்கவேண்டியதுதானே!
All the Very best!!!!

SShathiesh-சதீஷ். said...

வெற்றியோடு ஒன்றாய் சேருவோம். கலக்குவோம். அண்ணே இதற்கான ஏற்ப்பாட்டில் நிறைய விடயங்கள் செய்ய வேண்டி இருக்கும். எனவே உங்கள் இந்த மிகப்பெரிய வேலைகளில் நானும் உதவியாக இருக்க விரும்புகின்றேன்.

Mathu said...

Thats a very nice get together. Have a good time to you all :)

வந்தியத்தேவன் said...

// ’டொன்’ லீ said...

சம்மந்தமில்லாமல் ஒரு கேள்வி...சங்கத்தில் இன்னும் ரியூசன் வகுப்புகள் நடக்குதோ..?//

ஆஹா பழைய ஞாபகங்களோ அப்படியே ஒரு சைக்கிள் எடுத்துக்கொண்டு ருத்ரா மாவத்தை விகார் லேன் இராமகிருஷ்ணா ரோட் என ஒரு சுற்றுச் சுற்றுங்கள். வகுப்புகள் நடக்கின்றது.

தங்க முகுந்தன் said...

பதிவர்கள் அனைவரும் சந்தித்து - ஒன்றுபட்டு ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்! என்னால் பங்குகொள்ள முடியாவிடினும் செய்திகளை நோக்கியபடி இருப்பேன்!
டொன் லீ!
சம்பந்தம் இருக்கிறது தான் - தமிழ்ச்சங்கம் எல்லா வகைகளிலும் தமிழர்களுக்கு உதவுகிறது! சங்கத்தில் முன்னைய நாட்களிலிருந்து இன்றுவரை தொடர்ந்தும் அந்த டியூசன் வகுப்புக்கள் நடந்து கொண்டே இருக்கிறது!

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பரே!

சந்திப்பு இனிதாக நடக்கட்டும்

தெருவிளக்கு said...

உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடை பெறும் பதிவர் சந்திப்புகள் பற்றி வாசிக்கும் போதெல்லாம் எம் பிரதேசத்திலும் எப்போது எப்படி இதை ஆரம்பிப்பது என்று எண்ணியிருக்கிறேன்.
ஆனாலும் அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைக்கவில்லை.
எனது உளமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக.....
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு இளைய பதிவாளன்/பதிவிட முயற்சித்துக் கொண்டிருப்பவன் என்ற வகையில் நானும் இதில் கலந்து கொள்ள விழைகிறேன்.
உங்களுடைய மேலான அனுமதி தேவை.

சுபானு said...

வாழ்த்துக்ளுடனும் நிறைய எதிர்பார்ப்புடனும் காத்திருக்கோம்..

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள் லோஷன் நானும் வர முயற்சிக்கிறேன். நான் வந்தாலும் வராவிடினும் உங்கள் சந்திப்புக்கு என் ஆதரவு உண்டு.

ஆனாலும் இந்த சந்திப்பில் கொழும்பு பதிவாளர்கள் தான் அதிகமாக பங்குபெற வாய்ப்புகள் அதிகமுள்ளன. மற்றைய பகுதிகளிலிருந்தும் அனைவரும் வந்து பங்குபெற்றால் ரொம்பவே சிறப்பாக இருக்கும், இது தொடக்கம் மட்டுமே இங்கிருந்து ஆரம்பிக்கும் இனிங்ஸ் பெரிய வெற்றியை (உங்க வானொலியை சொல்ல வில்லை) பெற வாழ்த்துக்கள்.

ஆதிரை said...

இலங்கையில் முதன்முதலாக இச்சந்திப்பு நடைபெற உள்ளது மகிழ்வளிக்கின்றது. அதிகரிக்கும் வரவேற்பும் ஆதரவும் இந்நிகழ்வு சிறப்பாக அமையும் என்பதை கட்டியம் கூறுகின்றன.

புல்லட் said...

நண்பர்களே சந்திப்போம்... சந்தோஷிப்போம்..

Admin said...

அதிகரித்துவரும் ஆதரவினைப் பார்க்கும்போது சந்தோசமாக இருக்கின்றது. எல்லோர் மனதிலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கின்றது. இச் சந்திப்பானது எதிர்காலத்தில் இலங்கையின் பதிவுலகில் பாரியதொரு புரட்சியினை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இப்பவே பல புதிய பதிவர்களின் அறிமுகம் கிடைப்பதில் சந்தோசமே.

நாட்களை எண்ணிக்கொண்டிருப்போம்....

சப்ராஸ் அபூ பக்கர் said...

கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை, ஆர்வம் இருக்கிறது. ஆனால் கடல் கடந்து இருக்கிறேன்.

சந்திப்பு வெற்றி கரமாய் அமைய வாழ்த்துக்கள் அண்ணா....

சந்திப்பு நிறைவு பெற்றதும் அது பற்றிய பதிவொன்றையும் எழுதி விடுக்கள்....

ARV Loshan said...

நன்றி அன்பு நண்பர்களே.. உங்கள் ஆர்வமும் ஒத்துழைப்பும்,ஊக்கமும் மேலும் உற்சாகத்தை எங்களுக்கு வழங்கியுள்ளது..

தாமாக முன்வந்து ஏற்பாடுகளில் இணைந்து கொள்ளும் தோழர்களுக்கும் நன்றிகள்..

ARV Loshan said...

’டொன்’ லீ said...
சந்திப்பு இனிதே நடக்கட்டும்...

சம்மந்தமில்லாமல் ஒரு கேள்வி...சங்கத்தில் இன்னும் ரியூசன் வகுப்புகள் நடக்குதோ..?//

அது இன்னமும் களைகட்டி நடக்குது..
இதைக் கேட்டதும் உடனே வரவேண்டும் என்று தோன்றியிருக்குமே? ;)

ARV Loshan said...

Anonymous said...
ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது நல்ல விடயமே..

இருந்தாலும் இவை என் சந்தேகங்கள

மாற்றுக்கருத்துள்ளவர்கள் இனங்காணப்படுவர்.. இது அவர்களின் தனிப்பட்ட மற்றும் கருத்து சுதந்திரங்களுக்கு பங்கமாகலாம். மறைமுக கருத்து திணிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.
(பதிவர்கள் சொந்த பெயர் கொண்டு மட்டும் அடையாளம் காணப்பட்டால் இதை ஓரளவு தவிர்க்கமுடியும். அதுபற்றிய முழுமையான திட்டம் வரையப்பட வேண்டும்)//

தனித்துவம், திநிப்புகளுக்கு உட்படாமை என்பவை அவரவர் கையிலுள்ள விடயங்கள்.. இங்கே சாதரணமாக கலந்துரையாடப் போகிறோம்..
கட்சிக் கூட்டம் அல்ல.. :)

மற்றும் ஒருவரின் பெயர் மற்றும் அவர் பற்றிய வெளிரங்கமான மதிப்பீடுகள் அவர் கருத்தை விளங்கும் விதத்தை மாற்றியமைக்கிறது. இவ்வாறான குற்றச்சாட்டை ஒருமுறை பதிவர் ஹிசாம் முன்வைத்திருந்தமையை ஞாபகத்தில் கொள்க..//

அது ஹிஷாமுக்கு வந்த மட்ட ரகமான புண்படுத்தும் பின்னூட்டங்கள் பற்றி அவர் வெளியிட்ட கவலை.. இந்த அனானிப் பிரச்சினை எல்லோருக்கும் இருப்பதால், இது பற்றிக் கூட ஆரோக்கியமான கலந்துரையாடலும் நடத்தலாமே..

எதையும் ஆக்கபூர்வமாக பார்த்தால் எல்லாம் ஜெயமே..

பதிவுலக கருத்து வேறுபாடுகள் தனிப்பட்ட சண்டைகளாகவும் உருமாறக்கூடும்.. ்

இவ்வாறான பதிவுலகத்தின் ஆரோக்கியத்துக்கு பெரிதும் பங்கம் விளைவிக்க கூடிய அம்சங்களை கவனத்தில் கொள்க..//

நீங்கள் குறிப்பிட்ட சிக்கலான சின்ன விடயங்கள் பற்றியும் பார்க்கிறோம்.. எனினும் எடுத்துக் கொள்ளும் பெரிய நோக்கங்களின் மத்தியில் இதெல்லாம் மிக அற்பமான விஷயங்களே..

நீங்களும் வருவீர்கள் என நம்புகிறேன்..

கட்டாயமாக உங்கள் அடையாளம்,உண்மைப் பெயரை மறைப்பதாக இருந்தால் பதிவராக அல்லாமல் ஆர்வமுள்ளவராக,வலை வாசகராக வரலாமே..

Unknown said...

nallaa sonneenga Loshan na... kattaayam don lee samuham taruwaar.. silawelai mukkadu pottum waralaam.. eanenil wisayam therinju sangam ponnunga elaarum kuumura kaathirukkaahal Don Leekku.. ithu pala wiwakaaram pola..

meendum sandippom;
kalandu sindippom...

anbahalaap priyamudan MU.UsaMa.

ARV Loshan said...

Anonymous said...
பதிவுலக கருத்து வேறுபாடுகள் தனிப்பட்ட சண்டைகளாகவும் உருமாறக்கூடும்.. உதாரணம்..triumph வருவதாக இருந்தால் சிலர் வரமாட்டார்கள்//

இதெல்லாம் சின்னப் பிரச்சினைகள் நண்பரே..
பயப்படாதீங்க. Triumph வரமாட்டார்.. அவர் இருப்பது மலேசியா அல்லது சிங்கப்பூரில்..

அதுசரி இப்படியா உங்களை நீங்கள் அனானியாக வந்தும் அப்பாவியாக அடையாளம் காட்டிக் கொள்வது?

பேசாமல் உங்கள் உண்மைப் பெயரோடே வந்து உங்கள் ஐயத்தைக் கேட்டிருக்கலாம்..

ஆனால் தயவு செய்து வாருங்கள்.. சண்டை வந்தால் சமாதானம் ஏற்படுத்த மூன்றாம் தரப்போன்றையும் நாம் ஏற்பாடு செய்வோம்.. ;)

ARV Loshan said...

தங்க முகுந்தன் said...
பதிவர்கள் அனைவரும் சந்தித்து - ஒன்றுபட்டு ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்! என்னால் பங்குகொள்ள முடியாவிடினும் செய்திகளை நோக்கியபடி இருப்பேன்!
டொன் லீ!
சம்பந்தம் இருக்கிறது தான் - தமிழ்ச்சங்கம் எல்லா வகைகளிலும் தமிழர்களுக்கு உதவுகிறது! சங்கத்தில் முன்னைய நாட்களிலிருந்து இன்றுவரை தொடர்ந்தும் அந்த டியூசன் வகுப்புக்கள் நடந்து கொண்டே இருக்கிறது!//

ஆமாம் நன்றி தங்கமுகுந்தன்.. இப்போதெல்லாம் தமிழ் சங்கத்தில் கிரமமாக நிகழ்ச்சிகள் (பல பிரயோசனமானவை) நடைபெற்று வருகின்றன..
வகுப்புக்களும் அவ்வாறே

ARV Loshan said...

தெருவிளக்கு said...
உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடை பெறும் பதிவர் சந்திப்புகள் பற்றி வாசிக்கும் போதெல்லாம் எம் பிரதேசத்திலும் எப்போது எப்படி இதை ஆரம்பிப்பது என்று எண்ணியிருக்கிறேன்.
ஆனாலும் அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைக்கவில்லை.
எனது உளமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக.....
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு இளைய பதிவாளன்/பதிவிட முயற்சித்துக் கொண்டிருப்பவன் என்ற வகையில் நானும் இதில் கலந்து கொள்ள விழைகிறேன்.
உங்களுடைய மேலான அனுமதி தேவை.//

வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரா.. ஆர்வத்திற்கு மகிழ்ச்சி..

அனுமதி எல்லாம் தேவையில்லை.. வருவது உறுதி தானே?
வருக வருக என்று அழைக்கிறோம்.. :)

Anonymous said...

triumph சின்ன பிரச்சினையா? பட்டவனுக்கு தானே தெரியும்.. என் வரவு உறுதிப்படுத்தப்படுகிறது..

ARV Loshan said...

Anonymous said...
triumph சின்ன பிரச்சினையா? பட்டவனுக்கு தானே தெரியும்.. என் வரவு உறுதிப்படுத்தப்படுகிறது..//

ஹா ஹா ஹா.. நினைத்துப் பார்த்தேன்.. சிரிப்பு வந்தது.. சகோதரி எங்கே இருக்கிறாய்? ஓடி வா மகளே.. இங்கே உன் எதிரி அனானியாக வந்துள்ளான்.. (எப்பூடி?)

நன்றி சகோதரா.. மகிழ்ச்சி.

சந்தோஷ் said...

நல்ல முயற்சி......
புதிய பதிவர்களையும் ஊக்குவியுங்கள்....

தெருவிளக்கு said...

101% பங்கு கொள்ள முயற்சிக்கிறேன்.....அழைத்தமைக்கு நன்றிகள்

Anonymous said...

//சண்டை வந்தால் சமாதானம் ஏற்படுத்த மூன்றாம் தரப்போன்றையும் நாம் ஏற்பாடு செய்வோம்.. ;) //

முன்றாம் தரப்பா.. அத விட சரணடைதல் பெட்டர்..

//நினைத்துப் பார்த்தேன்.. சிரிப்பு வந்தது..//

வரும் வரும்..

//உன் எதிரி அனானியாக//

எதிரி என்றே முடிவு கட்டியாச்சா? எங்களுக்குள் சின்ன ஊடல்.. அவ்வளவுதான்.. சிங்கம் சிங்கிளாக வரும்..

பூச்சரம் said...

பூச்சரம் இந்நிகழ்வுக்கு வேண்டிய தன்னாலான உதவிகளை வழங்க விரும்புகிறது

சயந்தன் said...

தமிழ்ச்சங்கத்தில மீற்றிங் என்றவுடன பழைய நினைவெல்லாம் சுத்திச் சுத்தி வருது. :):)

அதிகரித்த இலங்கைப் பதிவர்கள் மகிழ்ச்சிதான். (ஒரு பக்கம் மட்டுமே வீங்காமல் இருக்க இப்படியான ஒரு நிலையை நான் நிறைய நாளாக எதிர்பார்த்தேன்:)

வாழ்த்துக்கள். விரிவாக எழுதுங்கள்.. போண்டா டீ சாப்பிடுவதோடு :) புதியவர்களுக்கு புளொக் அறிமுகப்படுத்துங்கள். எழுத வையுங்கள்.

வேந்தன் said...

வலைப்பதிவர்கள் சந்திப்புக்கு வழ்த்துக்கள்.

வர்மா said...

எங்களூக்கான அங்கீகாரத்தை நாங்களே உருவாக்கவேண்டும்.நாங்களேவரவேற்பாளர்கள்.நாங்களே விருந்தாளீகள்.ஒன்றாகக்கூடுவோம்.சாதித்துக்காட்டுவோம்.
அன்புடன்
வர்மா.

hamshi said...

cograts blogger writers.

Asfar said...

சந்திப்பு இனிதே நடக்கட்டும்...

wish you all the best for the sucess of the event, we too try to attend

அஜுவத் said...

வாழ்த்துக்கள் அண்ணா ஏற்பாட்டிற்கு. நிச்சயம் சந்திப்போம்.

Ramanan said...

நன்றி லோசன்,

நிச்சயமாக நானும் இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்கு ஆர்வமுடன் உள்ளேன்.

எந்த ஒரு பெரியவிடயத்தினதும் தொடக்கப்புள்ளி சிறியதாக தான் இருக்கும்.

மாறி வரும் உலகில் எழுத்திற்கும் வாசிப்பிற்கும் சந்தர்பங்கள் குறை;து வரும் நிலையில் ஏதோ ஒரு வகையில் தமிழ் வாசிப்பு மற்றும் எழுத்திற்கான வாய்ப்பினை வழங்கி நிற்கும் இந்த பதிவுலகம் எதிர்காலத்திற்கான எங்களின் அனுபவங்களையும் உணர்வுகளையும் கடத்தும் ஒரு கருவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இருவர் சந்தித்து நலம் விசாரிப்பது கூட சந்தேகத்தற்குரியதாக நோக்கப்படும் ஒரு நாட்டில் மனதில் பட்டதை வெளிப்படையாக பதிவு செய்யும் வலைப்பதிவர்கள் சந்தித்து கொள்வது மிகவும் முக்கியமானது.

பலர் சேரும் ஒரு இடத்தில் எண்ணங்களும் அலைவரியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் தவறானது.

வேறுபட்ட கருத்துக்களுக்கு மரியாதை தர மறுத்தமை தான் தமிழ் மக்களின் இன்றை நிலைக்கு காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

எனவே பதிவுலக கருத்து வேறுபாடுகளை முன்னிறுத்தி இதற்கு முட்டுக்கட்டை போடுவதும் இதில் கலந்து கொள்ளாமைக்கு அதனை காரணமாக்க முற்படுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வோம் மாற்றங்களை எங்களுக்குள் ஏற்படுத்த இதனை ஒரு முன்மாதரியாக கொள்வோம்.

தர்ஷன் said...

பதிவர் சந்திப்பு சிறப்புற நடக்க வாழ்த்துக்கள் என் போன்ற பதிவர்களுக்கு ஏனைய பதிவர்களுடன் பரஸ்பரம் அறிமுகத்தை ஏற்படுத்த இது உதவியாய் இருக்குமெனினும் வேலைப்பளுவின் காரணமாக வர முடியாதென்றே கருதுகிறேன்.
இருக்கட்டும் இது ஆரம்பம் தானே
லோஷன் அண்ணா உள்ளிட்ட ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

தர்ஷன் said...

அண்ணா பங்குபற்ற முடியாத என் போன்ற வெளிமாவட்ட நண்பர்களுக்கு அப்படியே படம் எடுத்தது போல பதிவிட்டு காட்டவேண்டும்.

என்ன கொடும சார் said...

நிகழ்ச்சி நிரலில் பதிவிடுதலில் ஏற்படக்கூடிய சட்ட சிக்கல்கள் பற்றிய நிகழ்வு மிக அவசியம். இல்லாவிட்டால் எல்லாத்தையும் எழுதி மிகப்பெரிய சிக்கல்களுக்குள் பதிவர்கள் மாட்டக்கூடும். ஒரு சட்டதரணி அல்லது ஊடகவியாளர் அவ்வாறான தலைப்பில் பேசுவது முக்கியம் என நான் கருதுகிறேன்..

Subankan said...

அடடா, மிஸ் பண்ணப் போறேனே, இப்போது விடுமுறையில் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் கலந்துகொள்ள முடியாதே!. So sad... :-(

Anonymous said...

எப்பிடியாவது வந்து அண்ணன் புல்லட்டையும் லோசன் அண்ணனையும் பாத்து 4 வார்த்தை கதைக்கணும்.....

பண்டிதர் said...

எல்லாப் பின்னூட்டங்களையும் படித்தபின்பு வருவதற்குக் கொஞ்சம் பயமாக இருக்கிறது... நான் என்னவோ இது பதிவர் சந்திப்பு என்று நினைச்சா இதுக்குள்ள மினி பொலிடிக்ஸே இருக்கும் போல இருக்குதே???

ஹம்ம்... லோஷன் அண்ணா இது கட்சிக்கூட்டம் அல்ல...என்ற கூறிவிட்டு பிரச்சினை வந்தால் 3ம் தரப்பை வைத்துத் தீர்ப்போம் என்று சொல்கிற போதே பெரிய அடி தடி எல்லாம் காத்திருக்கிறது போலத் தெரிகிறது??

ஹம்... நம்பி வரலாமா?? இல்ல வநடநத பிறகு எங்களை வச்சு காமடி, கீமடி ஒண்ணும் பண்ண மாட்டீங்களே??

ARV Loshan said...

நண்பர்களே, உங்கள் எல்லோரது ஆசிகள்,வாழ்த்துக்கள்,ஆர்வம், கருத்துக்கள் திட்டமிடப்பட்ட எங்கள் பதிவர் சந்திப்பை ஒவ்வொரு நாளும் மெருகேற்றுகின்றன..

வருவதாக உறுதி செய்வோரின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகரிப்பது மகிழ்ச்சி..

Anonymous said...

me the 50??

Romesh

ARV Loshan said...

சயந்தன் said...
தமிழ்ச்சங்கத்தில மீற்றிங் என்றவுடன பழைய நினைவெல்லாம் சுத்திச் சுத்தி வருது. :):)//

வரும்.. வரும். ஒன்றா இரண்டா..
தமிழாலயம், உயிர்ப்பு.. இன்னும் பல இருக்குமே..

//அதிகரித்த இலங்கைப் பதிவர்கள் மகிழ்ச்சிதான். (ஒரு பக்கம் மட்டுமே வீங்காமல் இருக்க இப்படியான ஒரு நிலையை நான் நிறைய நாளாக எதிர்பார்த்தேன்:)//

விளங்குது.. எங்களுக்கும் மகிழ்ச்சி தான். உங்களைப் போல (வயது) மூத்த பதிவர்கள் தான் தொடக்கமே. :)

வாழ்த்துக்கள். விரிவாக எழுதுங்கள்.. போண்டா டீ சாப்பிடுவதோடு :) புதியவர்களுக்கு புளொக் அறிமுகப்படுத்துங்கள். எழுத வையுங்கள்.
//

நிச்சயமாக புதியவர்களை ஊக்கப்படுத்துவோம்..அதனால் தான் ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கிறோம்.. :)

ஒரு சின்ன விஷயம் மெனுவில் இம்முறை மாற்றம்.. ;)

ARV Loshan said...

Anonymous said...
me the 50??

Romesh//

ஆமாம் ரொமேஷ் நீங்கள் தான்.. :)

இப்படியே பதிவர் சந்திப்பும் நிறைந்தால்?? :)

ARV Loshan said...

ரமணன் said..

இருவர் சந்தித்து நலம் விசாரிப்பது கூட சந்தேகத்தற்குரியதாக நோக்கப்படும் ஒரு நாட்டில் மனதில் பட்டதை வெளிப்படையாக பதிவு செய்யும் வலைப்பதிவர்கள் சந்தித்து கொள்வது மிகவும் முக்கியமானது.

பலர் சேரும் ஒரு இடத்தில் எண்ணங்களும் அலைவரியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் தவறானது.

வேறுபட்ட கருத்துக்களுக்கு மரியாதை தர மறுத்தமை தான் தமிழ் மக்களின் இன்றை நிலைக்கு காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

எனவே பதிவுலக கருத்து வேறுபாடுகளை முன்னிறுத்தி இதற்கு முட்டுக்கட்டை போடுவதும் இதில் கலந்து கொள்ளாமைக்கு அதனை காரணமாக்க முற்படுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வோம் மாற்றங்களை எங்களுக்குள் ஏற்படுத்த இதனை ஒரு முன்மாதரியாக கொள்வோம்.
//

ரமணன் மிக்க மகிழ்ச்சி.. நீங்கள் சொன்ன இந்தக் கருத்துக்கள் நிச்சயமாக அனைவராலும் ஏகமனதாக ஏற்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இராது.. வரவேற்கிறோம் உங்களையும் உங்கள் கருத்துக்களையும்..

கருத்துக்கள் சங்கமிக்கும் இடத்தில் எல்லாவித கருத்துக்களும் வரவேண்டும் என்பதே எங்களின் எண்ணமும்,

ARV Loshan said...

தர்ஷன் said...
பதிவர் சந்திப்பு சிறப்புற நடக்க வாழ்த்துக்கள் என் போன்ற பதிவர்களுக்கு ஏனைய பதிவர்களுடன் பரஸ்பரம் அறிமுகத்தை ஏற்படுத்த இது உதவியாய் இருக்குமெனினும் வேலைப்பளுவின் காரணமாக வர முடியாதென்றே கருதுகிறேன்.
இருக்கட்டும் இது ஆரம்பம் தானே
லோஷன் அண்ணா உள்ளிட்ட ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

August 12, 2009 5:13 PM

தர்ஷன் said...
அண்ணா பங்குபற்ற முடியாத என் போன்ற வெளிமாவட்ட நண்பர்களுக்கு அப்படியே படம் எடுத்தது போல பதிவிட்டு காட்டவேண்டும்.

August 12, 2009 5:15 PM//எப்படியாவது வர முயற்சி செய்யவும்.. ஞாயிறு கூட வேலையா?
ஆமாம்.. பல பேர் பதிவு போடுவார்கள்.. நீங்கள் வந்தால் நீங்கள் கூடப் போடலாமே.. ;)

ARV Loshan said...

மாயா said...
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - 2009 - சில எதிர்பார்ப்புக்கள்......
//

எல்லோரும் வாசித்தோம் மாயா. அது பற்றி உங்களுக்குப் பின்னூட்டியும் இருந்தோம்..

எட்டுப் பேர் கூடி ஒரு கொஞ்ச நேரத்தில் இவ்வளவு பேசினீர்கள் என்பது மிக வியப்பை எங்களுக்கு ஏற்படுத்தியது..

யாரும் இது பற்றி முன்பு பதிவெழுதும் ஆச்சரியமே..

நாங்கள் இது போல் பாதியாவது செய்ய முயற்சிக்கிறோம்..

ARV Loshan said...

என்ன கொடும சார் said...
நிகழ்ச்சி நிரலில் பதிவிடுதலில் ஏற்படக்கூடிய சட்ட சிக்கல்கள் பற்றிய நிகழ்வு மிக அவசியம். இல்லாவிட்டால் எல்லாத்தையும் எழுதி மிகப்பெரிய சிக்கல்களுக்குள் பதிவர்கள் மாட்டக்கூடும். ஒரு சட்டதரணி அல்லது ஊடகவியாளர் அவ்வாறான தலைப்பில் பேசுவது முக்கியம் என நான் கருதுகிறேன்..
//

நல்ல, முக்கியமான விஷயம் ஒன்றை ஞாபகப் படுத்தினீர்கள்.. அதற்கான ஏற்பாடுகளும் செய்து வருகிறோம்..

உங்களுக்கு தான் இப்படிப்பட்ட சிக்கல்கள் வருகுதாம்.. உண்மையா?

ARV Loshan said...

Subankan said...
அடடா, மிஸ் பண்ணப் போறேனே, இப்போது விடுமுறையில் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் கலந்துகொள்ள முடியாதே!. So sad... :-(
//

சும்மா வாங்கய்யா.. இது முக்கியமா உங்கள் விடுமுறை முக்கியமா?? சந்திப்பை முடிச்சிட்டு மறுபடி விடுமுறைக்கு போங்க.. ;)

ARV Loshan said...

Anonymous said...
எப்பிடியாவது வந்து அண்ணன் புல்லட்டையும் லோசன் அண்ணனையும் பாத்து 4 வார்த்தை கதைக்கணும்.....
//

நாலு வார்த்தை எல்லாம் எண்ணிக் கதைக்காம ஒரு நாற்பது வார்த்தையாவது கதையுங்க..

ஆனால் என்னையும் புல்லட்டையும் பார்த்து ஒண்ணுமே பேசாம ஓடிப் போறீங்களோ தெரியாது.. ;)

ARV Loshan said...

பண்டிதர் said...
எல்லாப் பின்னூட்டங்களையும் படித்தபின்பு வருவதற்குக் கொஞ்சம் பயமாக இருக்கிறது... நான் என்னவோ இது பதிவர் சந்திப்பு என்று நினைச்சா இதுக்குள்ள மினி பொலிடிக்ஸே இருக்கும் போல இருக்குதே???

ஹம்ம்... லோஷன் அண்ணா இது கட்சிக்கூட்டம் அல்ல...என்ற கூறிவிட்டு பிரச்சினை வந்தால் 3ம் தரப்பை வைத்துத் தீர்ப்போம் என்று சொல்கிற போதே பெரிய அடி தடி எல்லாம் காத்திருக்கிறது போலத் தெரிகிறது??

ஹம்... நம்பி வரலாமா?? இல்ல வநடநத பிறகு எங்களை வச்சு காமடி, கீமடி ஒண்ணும் பண்ண மாட்டீங்களே??
//

ஐயோ பண்டிதர்,, நாங்க எல்லாம் பேசுறபோது டெர்ரர் மாதிரி தெரிஞ்சாலும் உள்ள ரொம்பவே அப்பாவி அம்மாஞ்சி ராகம்.. பயப்படாம வாங்க..

எங்களுக்கு என்ன பயம் என்றால் எங்களை வச்சு யாராவது காமெடி கீமெடி பண்ணுவாங்களோ எண்டு தான்..

Subankan said...

// LOSHAN said...

சும்மா வாங்கய்யா.. இது முக்கியமா உங்கள் விடுமுறை முக்கியமா?? சந்திப்பை முடிச்சிட்டு மறுபடி விடுமுறைக்கு போங்க.. ;)//

ஆகா, இனியும் சும்மா இருப்பதா? சுபாங்கன், எடுடா கிளியரன்சை.. ஏறுடா பஸ்ஸில...

இனிமே எல்லாம் எங்க ஊரு ஆமிக்காரன் விட்ட வழி

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..

View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner