August 12, 2009

அர்ஜுன ரணதுங்கவின் மகன் சிங்களவரில்லையா?


இலங்கை கிரிக்கெட் அணியின் உலகக்கிண்ணம் வென்ற தலைவர் அர்ஜுன ரணதுங்கவை யாருக்கும் ஞாபகமிருக்கும்.

இப்போது பிரதி அமைச்சர்.. அண்மைக்கால இலங்கை கிரிக்கெட்டின் பல சர்ச்சைகளுக்கும் காரண கர்த்தா இவரே என்பதெல்லாம் பழைய செய்திகள்..

இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கக் கூடாத ஒரு தலைவர் அர்ஜுன. அவரது தலைமையிலேதான் இலங்கை அணி முதலில் வெற்றிகளை சுவை பார்க்க ஆரம்பித்தது. வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஊட்டியவரும் இதே அர்ஜுன ரணதுங்க தான்.

முன்னைய என் பதிவொன்றிலே விலாவாரியாக இதைப் பற்றியெல்லாம் சொல்லி இருந்தேன்..

அவர் மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தின் நான்கு சகோதரர்களுமே இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளார்கள். (தம்மிக்க,சன்ஜீவ,நிஷாந்த)

இவர்கள் நால்வருமே கழக மட்டத்திலான போட்டிகளில் விளையாடியது சிங்கள விளையாட்டுக் கழகம் என்ற SSCக்கு.
இவர்களில் சந்ஜீவவும்,நிஷாந்தவும் (இவர் இப்போது ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் செயலாளர்) சில காலம் வேறு கழகங்களுக்காகவும் விளையாடியவர்கள்..

ரணதுங்க குடும்பத்தின் ஆதிக்கம் இலங்கை கிரிக்கெட்டில் இருந்து ஓய்ந்துள்ளது என்று நினைத்திருக்கும் வேளையில் கடந்த வார இறுதியில் தியான் ரணதுங்க என்றொரு இருபது வயது இளைஞன் சதமொன்றுடன் தனது கழக மட்ட அறிமுகத்தை வெளிப்படுத்தியிருந்தான்.

அந்த இளைஞன் தியான் ரணதுங்க வேறுயாருமல்ல.. அர்ஜுனவின் மகனே தான்.!

தமிழ் யூனியன் அணிக்காக 23வயதுக்குட்பட்ட கழக மட்டத்திலான போட்டிகளிலேயே இந்த இளஞ்சிங்கம் தன்னை வெளிப்படுத்தியிருந்தது.


ரணதுங்க குடும்பமே SSCக்காக விளையாடியதும் அவர்கள் அனைவருமே SSCயின் ஆயட்கால உறுப்பினர்களாக இருக்க அர்ஜுனவின் மகனோ களமிறங்கி இருப்பது தமிழ் யூனியன் அணிக்காக.

முன்பெல்லாம் பல பிரபல தமிழ் வீரர்கள் இந்த தமிழ் யூனியன் அணி மூலமாக வெளிவந்த வரலாறு இருந்தது. ஆ.சதாசிவம், உலகசாதனையாளர் முத்தையா முரளிதரன் போன்றோரும் தமிழ்யூனியன் அணியின் பிரபல வீரர்களே...

தமிழ் என்ற அடையாளம் காரணமாக தேசிய அணியில் இடம் கிடைக்காதென்று பல வீரர்கள் அணிவிட்டு அணி மாறியும் இருந்தார்கள்.

தமிழரல்லாத சம்பக ராமநாயக்க, உபுல் சந்தன, சந்திக்க ஹந்துருசிங்க, நிரோஷன் பண்டாரதிலக்க போன்றோரும் தமிழ்யூனியன் அணிக்கு விளையாடியவர்களே...

எனினும் SSCயின் முத்திரையாக விளங்கிய அர்ஜுனவின் மகன் தமிழ் யூனியனுக்காக விளையாடுவார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

அர்ஜுனவின் காலத்தில் யாரொருவரும் SSCக்கு விளையாடினால் இலங்கை தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.

அர்ஜுனவின் வாரிசு SSCக்காக விளையாடாதது ஒரு பரபரப்பாக பேசப்படும் விடயமாகவும் சிங்கள ஊடக உலகில் மாறியுள்ளது.


இப்படியிருக்க, தியான் ரணதுங்க தமிழ் யூனியன் வீரராக இறங்கியதன் பின்னணி பற்றி விசாரித்த போது – அர்ஜுன அண்மைக்காலமாக SSC நிர்வாகத்துடன் முறுகியதும், அர்ஜுனவின் செல்வாக்கு இப்போது SSCயில் எடுபடாததுமே காரணங்கள் எனத் தகவல்கள் கிடைத்தன.

இரத்தத்திலேயே கிரிக்கெட் இருப்பதால் தியானும் எதிர்காலத்தில் மேலும் கலக்குவார் என்று எதிர்பார்த்திருக்கலாம். மேலதிக விஷயம் தியான் ரணதுங்க ஒரு விக்கெட் காப்பாளர்.


கொசுறுகிரிக்கெட் பதிவுகளை ஆர்வத்துடன் எழுதும் ஒரு பதிவரும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தில் கொஞ்சக்காலம் பயிற்சி எடுத்தவர். அவரை நானே சொல்வது நல்லாயிருக்காது. முடிந்தால் கண்டுபிடியுங்கள். ;)


15 comments:

Nimalesh said...

YELLAM OK BRO,,, BT KADAISILA ORU BIT POTUTINGA ORU WICKET Keeper yendru..... appaa avaloothaa J.K.Silva....... hmmmmmm

சப்ராஸ் அபூ பக்கர் said...

கொப்பு விட்டு கொப்பு பாயும் அரசியல் வாதிகளைப் போலில்லாமல், ஒரு விளையாட்டு வீரராக தொடர்ந்தும் அதே கழகத்தில் விளையாடினால் சரி, (குடும்பம் வேறு இப்போ அரசியலில்....)

சுபானு said...

//கிரிக்கெட் பதிவுகளை ஆர்வத்துடன் எழுதும் ஒரு பதிவரும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தில் கொஞ்சக்காலம் பயிற்சி எடுத்தவர். அவரை நானே சொல்வது நல்லாயிருக்காது!

ஓ... நீங்க தான அண்ணா??? சொல்லவேயில்லை.. !

Tech Shankar said...

thanks brother

யோ வொய்ஸ் (யோகா) said...

எது எப்படியோ, திறமை இருந்து இலங்கை அணிக்கு வந்தால் நல்லதுதான், அர்ஜுனாவின் மகன் என்ற செல்வாக்கில் வந்தால் சங்கக்காரவுக்கு கஷ்ட காலம் தான். ஏற்கனவே அரசியல் பின்னணி கொண்ட தில்ஹார எவ்வளவு தான் சொதப்பி தோல்விக்கு காரணமாக இருந்தாலும் அவரை அணியில் வைத்து கொண்டே இருக்காங்களே!

Unknown said...

thanks anna

சி தயாளன் said...

ஓ...நீங்கள் தமிழ் யூனியனுக்கு போய் ட்ரெயினிங் எல்லாம் எடுத்தனீங்களா..?

sanjeevan said...

srilanka cricket missed u anna...anybody wants to see loshan anna batting cme to peoples park ground dehiwella,in saturday mornings........

யோ வொய்ஸ் (யோகா) said...

சச்சின் - அரவிந்த டீ சில்வா.. யார் சிறந்த வீரர்?

http://yovoice.blogspot.com/2009/08/blog-post_12.html



க்கு வந்து உங்கள் கருத்தை சொல்லிவிட்டு போங்கள்...

Admin said...

சிங்களத்தில் ஊறியவர்களும். தமிழர் பக்கம் திரும்பும் காலம் வந்துடிச்சோ...

இல்ல தமிழ் யூனியனும் சிங்கள மயமாக்கப்படப்போகிறதோ... எதுக்கும் அதில பயிற்சி எல்லாம் எடுத்த நீங்கள் கழகத்தின் நிலைத்திருப்புக்கும் தமிழின் பலத்துக்கும் கரம் கோர்த்துவிடுங்கள்

என்.கே.அஷோக்பரன் said...

நல்ல மாற்றம். இனி இலங்கையில் தமிழ் - சிங்கள - முஸ்லிம் என்ற இனப்பாகுபாடுகள் இருக்கவே கூடாது மாறாக இந்தியாவிலிருக்கு “இந்தியன்” என்ற உணர்வு போல ”ஸ்ரீலங்கன்” என்ற உணர்வு மேலிட வேண்டும் - இதுவே சாந்தியும் சமாதானமும் மிக்க இலங்கையைக் கட்டியெழுப்ப உதவும்.

புல்லட் said...

ஓகோ அதுதான் நீங்கள் கிரிக்கட் பதிவுகளை போட்டுத் தாளிக்க காரணமோ? தமிழ் யூனியன் செய்த தப்பு இப்போது கிரிக்கட் வெறுப்பிகள் பாடு நூடில்சாகி விட்டுள்ளது..

விளையாட்டுகளில் ஓரவஞ்சனை செய்யாது இனிமெல் செஸ் கரம் ஸ்கிரபிள் வீடியோ கேம் போன்றவற்றுக்கும் சமசமான அளவில் பதிவுகளிடவேண்டும்.. ;)

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....



தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

குசும்பன் said...

//தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தில் கொஞ்சக்காலம் பயிற்சி எடுத்தவர்.//

அண்ணாச்சி அவரு பேரு லோசன், ஆனா அவரு தமிழ் யூனியன் கிரிக்கெட் கழக பயற்சி எடுத்த இடத்தில் அவர்கள் போன பிறகு தனியாக பயிற்சி எடுத்தவர் என்று செய்தி வந்தது:)

என்ன கொடும சார் said...

உலக கிண்ணம் வெல்லும் வரை அர்ஜுன நல்லவர்தான்.. அதன் பின் ஆள் மாற்றம். கிரிக்கட் சபை விடையத்தின் பின் எனக்கு பிடிக்காத நபர். இனி அவர் பழைய சாதனைகளை கூறி வாய்ப்பு வழங்காமல் முடக்க வேண்டும். இவர் பல வீரர்களை அணி மாறச்செய்து ஆப்பு வைத்தவர்.. துவேசி கூட..

\\கிரிக்கெட் பதிவுகளை ஆர்வத்துடன் எழுதும் ஒரு பதிவரும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தில் கொஞ்சக்காலம் பயிற்சி எடுத்தவர்.\\

எனக்கு விளம்பரம் பிடிக்காது. எதுக்கு அண்ணா என்ன பத்தி சொன்னீங்க..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner