நயன்தாராவின் சிங்கம் வாழைப்பழம் தின்னுமா?

ARV Loshan
45


நம் நாட்டிலுள்ள மிருகக்காட்சி சாலையில் ஒரு சிங்கம்!

(அண்மையில் யாராவது தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு போயிருந்தால் பரிதாபமான நிலையிலுள்ள சிங்கம் பார்த்திருப்பீர்கள்)

ஒழுங்கான சாப்பாடு அதற்குக் கிடைப்பதேயில்லை... காய்ந்து போன ஒரு சொற்ப இறைச்சி சாப்பிட்டு நாக்கு மரத்துப்போய் இதிலிருந்து ஒரு விடிவு கிடைக்காதா என்று ஒவ்வொரு நாளும் ஏங்கிக் கொண்டும், பிரார்த்தனை செய்துகொண்டுமிருந்தது.

அதன் நீண்டகால பிரார்த்தனை ஒரு நாள் பலித்தது.

அரபு நாடொன்றிலிருந்து வந்த ஷேக் ஒருவர் அந்த சிங்கத்தை தம் நாட்டிலுள்ள மிருகக்காட்சி சாலைக்கு எடுத்துச் செல்ல விரும்பினார்.

நம்ம நாட்டவர் கேட்டதை விட அதிகமாகவே கொடுத்து சிங்கத்தை அரபு நாட்டுக்கு கூட்டிச்சென்றுவிட்டார்.

அரபு நாட்டு மிருகக்காட்சிசாலைக்கு வந்ததிலிருந்து சிங்கத்து;க்கு பயங்கரமான குஷி! மூன்றுவேளையும் விதவிதமான இறைச்சி உணவுகள் கிடைப்பது போலக் கனவு வேறு!

வந்த முதல் நாள் காலை - சிங்கம் இருந்த கூட்டுக்கு வந்த பணியாள் பெரியதொரு பொதியைக் கொண்டுவந்து போட்டுவிட்டு போனார்.

உள்ளே ஒட்டக இறைச்சியாக இருக்குமோ அல்லது இதுவரை உண்ணாத வேறுவகை மாமிசமாக இருக்குமோ என்று ஆர்வத்தோடும், பசியோடும் கஷ்டப்பட்டு, அவசரஅவசரமாக அந்தப் பொதியை சிங்கம் திறந்தால், அதற்குள் இருந்தது-

ஒரு சீப்பு வாழைப்பழம்!

சரி, நாடுவிட்டு நாடு வந்த காரணத்தினால் வயிற்றுக்கோளாறு, சமிபாட்டுப் பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்று தான் வாழைப்பழம் தருகிறவர்கள் போல இருக்கு... என்ன ஒரு அக்கறை என்று நினைத்துக்கொண்டே வாழைப்பழத்தை சாப்பிட்டது சிங்கம்.

(புலி தான் பசித்தாலும் புல்லைத்தின்னாது... சிங்கம் எது வேண்டுமானாலும் தின்னுமாம்)

ஆனால் தொடர்ந்து பகல், இரவு, மறுநாள் காலை எனத் தொடர்ந்தும் வாழைப்பழமே கிடைத்துவர சிங்கம் சூடாகிவிட்டது.

பணியாளரிடம் கோபமாக கர்ச்சித்தது... 'நான் காட்டுக்கே ராஜா தெரியுமா? எனக்குப் போயும் போயும் வாழைப்பழம் போடுகிறாயே... அறிவில்லை?'

பணியாளர் ரொம்பப் பணிவாகப் பதிலளித்தார்.

'அதெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்... உனக்கு ஒன்று தெரியுமா? நீ வந்திருப்பது குரங்கின் தலைமாற்றப்பட்ட பாஸ்போர்ட்டிலும், குரங்கின் விசாவிலும்'

பி.கு :- சிங்கப்பூர் சென்று திரும்பிய சிங்கம் வேறு - இந்த சிங்கம் வேறு.

பி.கு :- இன்று காலை எனது 'விடியல்' நிகழ்ச்சியில் சொல்லிய நகைச்சுவை இது!

எங்கேடா நயன்தாராவின் சிங்கம்னு தேடுறீங்களா?
கீழே பாருங்க..

நயன்தாராவின் சிங்கம்.. நல்லா இருக்கா? இந்த சிங்கம் தான் வாழைப்பழம் சாப்பிடுமா என்று எனக்கு ஒரு சந்தேகம்.. யாராவது தீர்த்து வையுங்களேன்..

பட அனுசரணை நண்பர் வந்தியத்தேவன்.. (இவர் ஒரு 'அந்த'மாதிரி பட களஞ்சியம்.. ) அது சரி வந்தியை யானை மணாளன் என்று சொல்கிரார்கலாமே.. ட்விட்டர் குருவி சொன்னது.. என்ன விஷயம் தோழா? ;)


Post a Comment

45Comments

Please Select Embedded Mode To show the Comment System.*