August 13, 2009

தொடர்ந்து மூன்று தோல்வி.. என்னாச்சு இலங்கைக்கு?நேற்று மீண்டும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஒரு தோல்வி!

ஒரே மைதானத்தில் (R.பிரேமதாஸ மைதானம்) ஒரே அணிக்கெதிராக மூன்றாவது தொடர்ச்சியான தோல்வி.

மூன்றுமே ஓட்டங்களின் அடிப்படையில் பிரமாண்டமான தோல்விகள் - முதல் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளை வென்று தொடரை வென்ற பிறகு – கடைசி இரு ஒருநாள் சர்வதேசப்போட்டிகளிலும் முறையே 146, 132 ஓட்டங்களால் தோல்வி. நேற்றைய T 20 போட்டியிலோ 52 ஓட்டங்களால் தோல்வி.

இம்மூன்று தோல்விகளிலிருந்தும் இலங்கை அணி கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்கள் பல இருக்கின்றன.

அவை பற்றிப் பார்க்கும் முன் நேற்றைய T 20 போட்டியின் சில முக்கிய அம்சங்கள்.

பாகிஸ்தான் புதிய வு20 அணியின் தலைவர் ஷஹீட் அஃப்ரிடி தலைமையில் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றதன் மூலம் 2010 மார்ச் மாதம் இடம்பெறவுள்ள அடுத்த T 20 உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான தயார்ப்படுத்தல்களில் தாம் செல்வது சரியான பாதையிலேயே என்பதைக் காட்டியுள்ளது.

போட்டியின் நாயகன் அஃப்ரிடியின் சகலதுறைத் திறமையுடன் அவர் T 20 போட்டிகளில் பெற்ற தொடர்ச்சியான 3வது அரைச்சதம்.

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் T 20 உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கையை வென்ற பிறகு பாகிஸ்தான் தொடர்ச்சியாகப் பெற்ற அடுத்த வெற்றி.

பதான் சகோதரர்களின் அதிரடியில் இந்தியாவிடம் இதே R.பிரேமதாச மைதானத்தில் தோற்ற பின்னர் மீண்டும் ஒரு T 20 தோல்வி இலங்கை மண்ணில்.

முழுமையான இலங்கை அணி நேற்று விளையாடியும் குறைந்த பட்சம் பாகிஸ்தானுக்கு சவால் விடக்கூடமுடியவில்லை.

அஃப்ரிடி இவ்வளவு சிறப்பாக நேற்று வெற்றியைப் பெற்றுக் கொடுத்தும் தனக்கும் அணிக்கும் களங்கத்தை தேடிக்கொண்டார்.

மகேல ஜெயவர்த்தனவும், அஃப்ரிடியும் மைதானத்தில் - அஃப்ரிடி துடுப்பெடுத்தாடியபோது வாக்குவாதப்பட்டதைப் பலரும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.

பொதுவாக ஓட்டமொன்றைப் பெறும்போது களத்தடுப்பாளர் எறியும் பந்து துடுப்பாட்ட வீரரின் உடம்பிலோ, துடுப்பிலோ பட்டு வேறெங்காவது போகும் நேரம் மேலதிக ஓட்டங்கள் பெறுவது (Over throw runs/ shy runs) சர்வதேச கிரிக்கெட்டில் தவிர்க்கப்பட்டே வருகிறது. (நாம் விளையாடும் சாதாரண போட்டிகள் - வீதிக்கிரிக்கெட்டிலும் கூட இவ்வகை ஓட்டங்களைப் பொதுவாக தவிர்த்தே வருகிறோம்.)

ஆனால் நேற்று அஃப்ரிடி ஓட்டமொன்றைப் பெற்றபோது மகேல எறிந்த பந்து அஃப்ரிடியில் பட்டுச்சென்றபோது அஃப்ரிடி மேலதிக ஓட்டத்தைப் பெற ஓடினார்.

உடனே மகேல அஃப்ரிடியிடம் இதுபற்றி சீற, இருவரும் வார்த்தைகளால் வசை பாட, சங்கக்காரவும் நடுவரும் பாய்ந்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இவ்வளவு காலமும் பரவாயில்லை... இனியும் அஃப்ரிடி குழப்படிகாரப் பையனாக இருக்க முடியாதே...

(இதற்கு முதலில் இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் சங்கக்காரவும் யூனிஸ்கானும் மோதிக்கொண்டது பற்றியும் அதில் ஒரு மோசடி, மோசமான நடுவரின் பங்குபற்றியும் பிறிதொரு பதிவில் சொல்கிறேன்)

இனி இந்த மூன்று அடுத்தடுத்த தோல்விகளும் இலங்கை அணிக்கு சொல்கின்ற பாடங்கள்...

இலங்கை அணி பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடரில் வென்றபோது இலங்கை அணி வென்றது என்பதை விட பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர்கள் சறுக்கியதே முக்கிய காரணம்.

இலங்கையின் பந்து வீச்சு மேலும் பட்டை தீட்டப்படவேண்டும்.

அதைவிடத் துடுப்பாட்டம் குறிப்பாக மகேல, சங்கா தவிர்ந்த மத்திய வரிசைத் துடுப்பாட்டம் சீர்மையாக்கப்பட வேண்டும்.

பந்துவீச்சாளர்களுக்கு அதிக சாதகத்தன்மையை வழங்கிய தம்புள்ளையில் மூன்று தொடர்ச்சியான வெற்றிகளை இலங்கை பெற்ற பிறகும், ஒப்பீட்டளவில் அதிக ஓட்டங்கள் பெறப்பட்ட சு.பிரேமதாச மைதானத்தில் இலங்கை தடுமாறியது இதையே காட்டுகிறது.

ஜெயசூரிய நீண்ட காலம் விளையாடப் போவதில்லை.. அவருக்கு பின்னர் பகுதி நேரமாகப் பந்து வீசக்கூடிய ஒரு நாள் சகலதுறை வீரர் ஒருவரை இலங்கை அணி இப்போதே தேடிக் கொள்ளவும் வேண்டும்.

சங்கா தன்னை இன்னமும் திடப்படுத்தி, மகேல,அர்ஜுன முன்பு கட்டிஎழுப்பிய அதே திடமான ஒரு நாள் அணியை உருவாக்க வேண்டும்.

இலங்கையின் விலகி செல்லும் உதவிப் பயிற்றுவிப்பாளர் போல் பப்றேஸ் (Paul Fabrace) சொல்வது போல இலங்கை தனது டெஸ்ட் போட்டிகளின் சிறப்பான பெறுபேறுகளை ஒருநாள் போட்டிகளிலும் பெற்றுக் கொள்ள கடும் முயற்சி எடுக்கவேண்டும்.

பாடம் கற்றுக் கொள்வார்களா? நியூ சீலாந்து அணிக்கெதிராக விளையாடும் போதும், இலங்கை - இந்தியா- நியூ சீலாந்து முக்கோணத் தொடரின் போதும் தெரிய வரும்.


18 comments:

cric analyst said...

v will see in the NZ series

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இப்போதைய ட்ரெண்ட்

ஒரு தொடர் ஒரு அணிக்கு..,

டெஸ்ட் ஒருத்தருக்கு

ஒருநாள் ஒருத்தருக்கு..,

ARV Loshan said...

cric analyst said...
v will see in the NZ series//

ya i m also waiting eagerly..

===============
SUREஷ் (பழனியிலிருந்து) said...
இப்போதைய ட்ரெண்ட்

ஒரு தொடர் ஒரு அணிக்கு..,

டெஸ்ட் ஒருத்தருக்கு

ஒருநாள் ஒருத்தருக்கு..,//

இல்லையே.. டெஸ்டும் ஒருநாளும் இலங்கைக்கு.. ட்வென்டி மட்டும் பாகிஸ்தானுக்கு..

வந்தியத்தேவன் said...

லோஷன் இவர்கள் செய்த தப்பு செய்துகொண்டிருக்கின்ற தப்பு. மூன்று போட்டிளை தம்புள்ளையில் வைத்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றை ஒரே இடத்தில் வைப்பது பொருத்தமில்லை. ஏனெனில் தம்புள்ளையில் இலங்கை அணியின் வெற்றி வீதம் அதிகம். ஆகவே அங்கே வைத்து தொடரை வென்றுவிட்டு மிச்சத்தை கொழும்பில் வைப்பது சரியாகப்படவில்லை.

முன்னர் கண்டியில் டெஸ்ட் வைப்பார்கள் இலங்கை அணி தோற்கும் அதன் பின்னர் கண்டியில் டெஸ்ட்போட்டிகளே நடப்பதில்லை.

Nimalesh said...

may be ODI series win panna piragu PAK tEAM LIGHT AHH YEDUTHUKONDANGA POLA........will see in NZ series.

யோ வொய்ஸ் (யோகா) said...

நேற்றைய போட்டி மட்டுமன்று, 5ம் ஒரு நாள் போட்டியிலும் மகேல விக்கட்டுக்கு த்ரோ செய்த பந்த அப்ரிடி துடுப்பில் பட்டு வேறுபக்கம் செல்ல ஓட்டங்களை பெற்றார்கள. அதன் தொடர்ச்சிதான் நேற்றைய சண்டை. ஆனாலும் அஜ்மல் சங்காவுக்கு வெளியோ போ என சைகை காட்டியது கொஞ்சம் ஓவர்தான். ராணா நவீடும் இதே போல்தான் இப்படியே போனால் ஸ்ரீ சாந்த் மாதிரி வாங்கிக் கட்டிக்க வேண்டியது தான்.

வந்தி, கண்டியில் போட்டி வைக்காமைக்கு காரணம் மைதானத்துக்கு சொந்தகாராகிய பாடசாலையுடன் கிரிக்கட் போட்டு முறுகல் நிலையில் இருப்பதே ஆகும் என்று நினைக்கிறேன்.

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
லோஷன் இவர்கள் செய்த தப்பு செய்துகொண்டிருக்கின்ற தப்பு. மூன்று போட்டிளை தம்புள்ளையில் வைத்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றை ஒரே இடத்தில் வைப்பது பொருத்தமில்லை. ஏனெனில் தம்புள்ளையில் இலங்கை அணியின் வெற்றி வீதம் அதிகம். ஆகவே அங்கே வைத்து தொடரை வென்றுவிட்டு மிச்சத்தை கொழும்பில் வைப்பது சரியாகப்படவில்லை.

முன்னர் கண்டியில் டெஸ்ட் வைப்பார்கள் இலங்கை அணி தோற்கும் அதன் பின்னர் கண்டியில் டெஸ்ட்போட்டிகளே நடப்பதில்லை.

//

வந்தி,

நீங்கள் சொன்ன ஒரு விஷயம் ஏற்றுக் கொள்கிறேன்.. எனினும் இதுவரைகாலமும் தம்புள்ளையிலும் பாகிஸ்தான் இலங்கையை உருட்டி எடுத்திருந்தது.. இப்போது தான் இலங்கை வென்றுள்ளது..

கண்டி swing செய்யும் ஆடுகளம்.. அதனால் இலங்கைக்கு கொஞ்சம் பயம் உண்டு தான். இப்போதைய நிலவரம் யோகா சொன்னது போல மைதான உரிமை சிக்கல்..

ட்ரினிடி கல்லூரிக்கே குறிப்பிட்ட பௌத்த அமைப்பால் மைதானம் மறுக்கப்பட்டு விட்டது.

ARV Loshan said...

Nimalesh said...
may be ODI series win panna piragu PAK tEAM LIGHT AHH YEDUTHUKONDANGA POLA........will see in NZ series.//

இலங்கை அணியின் உள்நாட்டுப் பலத்தோடு பார்க்கையில் நியூ சீலாந்து பச்சாக்கள் தான்.. எனினும் இறுதி வரை போராடக் கூடியதும் தன்னம்பிக்கை உள்ளதுமான அணி..

ARV Loshan said...

யோ (Yoga) said...
நேற்றைய போட்டி மட்டுமன்று, 5ம் ஒரு நாள் போட்டியிலும் மகேல விக்கட்டுக்கு த்ரோ செய்த பந்த அப்ரிடி துடுப்பில் பட்டு வேறுபக்கம் செல்ல ஓட்டங்களை பெற்றார்கள. அதன் தொடர்ச்சிதான் நேற்றைய சண்டை. ஆனாலும் அஜ்மல் சங்காவுக்கு வெளியோ போ என சைகை காட்டியது கொஞ்சம் ஓவர்தான். ராணா நவீடும் இதே போல்தான் இப்படியே போனால் ஸ்ரீ சாந்த் மாதிரி வாங்கிக் கட்டிக்க வேண்டியது தான். //

கொஞ்சமில்லை.. ரொம்பவே ஓவர் தான்.. நான் துடுப்பாட்ட வீரராக இருந்தால் சாத்தியிருப்பேன்..

வந்தி, கண்டியில் போட்டி வைக்காமைக்கு காரணம் மைதானத்துக்கு சொந்தகாராகிய பாடசாலையுடன் கிரிக்கட் போட்டு முறுகல் நிலையில் இருப்பதே ஆகும் என்று நினைக்கிறேன்//

ஆமான்னு நானும் நினைக்கிறேன்.

என்.கே.அஷோக்பரன் said...

இலங்கையணிக்கு நல்ல இளம் வீரர்கள் தேவை. 17-18 வயதுகளிலுள்ள வீரர்களை தெரிந்து சந்தர்ப்பம் வழங்கினால் உடனடியாகப் பலன் வராவிட்டாலும் வெகுவிரைவில் அவர்கள் அனுபவசாலிகளாகி இன்னும் 2 வருடங்களில் இலங்கையணி அசைக்க முடியாத இடத்திற்குச் செல்லும்.

இன்றைய பாடசாலை மற்றும் கழக மட்ட அணிகளிலிருந்து இளைய வீரர்களாகக் கூடிய பலர் இருக்கிறார்கள். றோயல் கல்லூரியின் துடுப்பாட்ட ஜோடிகளான பானுக ராஜபக்ஷ மற்றும் குசல் பெரேரா ஆகியோர் அடுத்த சனத், களுவித்தாரண ஜோடிகளாவார்கள். உண்மையிலேயே இருவரினதும் சிறப்பான துடுப்பாட்டமே றோயல் கலலூரி அணிக்கு இவ்வருடத்தின் சிறந்த அணி என்ற விருதினைப்பெற்றுத் தந்திருக்கிறது. இது போல இருக்கும் சிறந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஏ அணியில் அதிக காலம் இழுத்தடிக்காது கொஞ்சம் தேசிய அணி அனுபவத்தை கொடுத்துப்பார்த்தால் நல்ல திறமையான அணி இலங்கைக்குக் கிடைக்கும்.

வந்தியத்தேவன் said...

//கொஞ்சமில்லை.. ரொம்பவே ஓவர் தான்.. நான் துடுப்பாட்ட வீரராக இருந்தால் சாத்தியிருப்பேன்.. //


எங்கேயாவது அம்பயர் விளையாடிய வீரருக்கு அடித்தது பற்றிக்கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Unknown said...

PAAVAM THAANEY PAK...

யோ வொய்ஸ் (யோகா) said...

எங்கேயாவது அம்பயர் விளையாடிய வீரருக்கு அடித்தது பற்றிக்கேள்விப்பட்டிருக்கிறீர்களா?//

அப்ப இவர் அம்பயரா? நான் கூட இவரும் விளையாடுராரோனு தப்பா நெனைச்சிட்டேன்.

Unknown said...

இலங்கை அணி முரளி மற்றும் ஜயசூரிய தேடித் தந்த வெற்றிகளால் கொஞ்சம் Over Projected என்பது எனது கருத்து. முக்கியமாக சங்கா மற்றும் மகேலாவிடம் இருக்கும் Talent மற்றும் techniqueக்கு முன்னால் ஒரு நாட்டிலும் கிரிக்கெட் வீரர்கள் இல்லை. ஆனால் இவர்களின் இளமைக் காலங்களில் இருவரது temprementம் துண்டற உதவாது.. இருவரும் பெருமளவு 30களும் 40களும் பெற்றிருக்கிறார்கள்.

அடுத்த பிரச்சினை மெண்டிஸ் முரளி போல் நீண்ட கால சிம்ம சொப்பனமாக விளங்கமாட்டார் என்பது என் கருத்து. கொஞ்ச நாளில் அனைத்து அணிகளும் அவரை master பண்ணிவிடும் வாய்ப்பு உண்டு. அதே போல், மகேலா, சங்காவைத் தவிர நம்பிக்கையான துடுப்பாட்டக்காரர்கள் யாருமே இல்லை, தில்ஷான் சமீபத்தில் நன்றாக விளையாடினால் கூட. சமீபத்திய அறிமுகங்களில் மத்தியூஸ் ஓரளவுக்குப் பரவாயில்லை.. மற்றவர்கள் ஊஹும்.நல்ல ஸ்பின்னர்கள் இருந்தாலும் ஸ்பின் பிட்ச் போட்டாலும், ஷேன் வோர்ண் மாதிரி யாராவது கெட்டிக்கார ஸ்பின்னரிடம் (அப்படி யாரும் இப்போது இல்லை என்பது வேறு விஷயம்) இலங்கையைத் துவைத்துக் காயப் போட்டு விடுவார்கள்.

முன்பு எனக்கு இலங்கை அணியைப் பெரிதாகப் பிடிப்பதில்லை. காரணம் Edge of the law விளையாட்டு விளையாடுவார்கள். மகேல காலத்தில் தான் ரசிக்கத் தொடங்கினேன்.. என்னுடைய All Time Favorite எவ்வளவு கேவலமாக அடிவாங்கினாலும் இந்தியாதான்.. இலங்கையும் தென்னாபிரிக்காவும் romantic favorites

Ketha said...

வெற்றிகள் தரும் மயக்கம் தோல்வியின் இழப்புகளைவிட ஆபத்தானது. இலங்கையின் வெற்றிகளின் போதே அதன் பலவீனங்கள் தெளிவாக தெரிந்தன, உதாரணமாக பாகிஸ்தானின் சடுதியான சரிவுகள் இலங்கைக்கு வெற்றியை தாரைவார்த்திருந்ததால் இலங்கை விட்ட தவறுகள் கவனத்தில் எடுக்கப்படவில்லை. அடுத்தது முன்னாள் தலைவர் அர்ஜுன எப்போதும் சொல்லும் ஒருவிடயம் "வெற்றி பெறுவது என்பது ஒரு பழக்கம்". ஒரு தொடரை வென்றபின் வரும் தோல்விகள் சாதாரணமானவை போல் தெரியலாம், ஆனால் அவை அடுத்த பல தொடர்களின் தோல்விக்கு வழிகோலக்கூடும். இலங்கையின் இந்த தோல்விகள் அடுத்துவரும் மிக சவாலான தொடர்களை பற்றிய எதிர்பார்ப்புகளை கவலைக்குள்ளாக்கியுள்ளன! முரளிதரன், சனத் போன்ற சிரேஷ்ட வீரர்கள் மைதானத்தில் காட்டும் ஈடுபாட்டின் பத்திலொரு பங்கைக்கூட மேன்டிசிடம் காணமுடிவதில்லை. குறிப்பாக அவரின் களத்தடுப்பு நிச்சயமாக மேம்படுத்தப்பட வேண்டும்.
தனது முதன்மை அடிப்படை திறன்களிலிருந்து கட்டியெழுப்பப்படும் அணியே சிறந்த அணியாக முடியும். அந்தவகையில் இலங்கை தனது ஆரம்ப மற்றும் மத்திய துடுப்பாட்டத்தையும், களத்தடுப்பையும் விரைவாக சீர்செய்யவேண்டும்.
சங்கக்கார சாதிப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

வெற்றியில் துடுப்பாட்டத்திற்கு தரும் முக்கியத்துவம் எப்போதும் தொடரவேண்டும் லோஷன் அண்ணா!!

Unknown said...

லோஷன் மற்றும் சக பதிவர்களுக்கு ஒரு கேள்வி..
ஒரு துடுப்பாட்ட வீரர் ஒரு ரன்னை வேகமாக ஓடி எடுக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவரை ரன்-அவுட் செய்ய எதிரணி வீரர் ஒருவர் முயற்சிக்கிறார். கிரீசை நோக்கி அவர் நீட்டிய துடுப்பில் பந்து பட்டு, திசைமாறிச் செல்கிறது. அவரோ அவரது சக துடுப்பாட்ட வீரரோ ரன் எடுக்க முயலவில்லை. ஆனால் திசைமாறிய பந்து எல்லைக் கோட்டைக் கடக்கிறது. ஆக, அவர்கள் ஓடி முடித்த ஒரு ரன்னோடு அந்த நான்கு ரன்களும் அவர்களின் அணிக்குச் சேருமா சேராதா?

சேரும் என்பது நடுவராக நின்ற என் வாதம். இதனால் கிரவுண்டுக்கு வெளியில வா உனக்கு இருக்கு என்று களத்தடுப்பு அணி என்னை எச்சரிக்கப் போய் வெளியில் பார்வையாளர்களாக நின்ற எங்கள் கழக நண்பர்கள் உள்ளே வந்து விக்கெட்டைத் தூக்கி எறியும் அளவுக்கு அளவுக்கு ஊரில் ஒரு சண்டை நடந்தது.

அஜுவத் said...

அப்ரிடி சிறந்த ஒரு தலமைத்துவத்தைச் செய்திருந்தார். இலங்கை வெண்ரதெல்லாம் நீங்கள் சொன்னது போல பாகிஸ்தானின் உடைய பிழையினால்தான். வேறு எந்த விசேடமும் இல்லை(குலசேகரவைத்தவிர).

என்ன கொடும சார் said...

பழைய இதிகாசங்களை விட்டு விட்டு புதிய தற்போது form இல் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும். bowling department இல் செய்வது மாதிரி..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner