சின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும்

ARV Loshan
31
இலங்கையில் எதிர்வரும் ஞாயிறு இடம்பெறும் பதிவர் சந்திப்புப் பற்றிய பரபரப்பில் பதிவர்கள் அனைவரும் மும்முரமாகிக் கிடக்க, எம்மால் சின்ன மாமா என்று அழைக்கப்படும் இலக்கியவாதி பதிவர்/பொறியியலாளர் சுபாங்கன் மட்டும் மிகக் கவலையில் இருந்தார்.
அவர் பணிபுரியும் அலுவலகத்தின் முகாமையாளர் கடுமையானவர். சம்பளத்தில் தாராளம் போலக் காட்டிக்கொண்டே கறாராக வேலை வாங்கிவிடுவார்.
ஒரு வேலை கொடுத்தால் சனி,ஞாயிறு ஆனாலும் முடிக்காமல் விடுமுறையில் செல்ல விடமாட்டார்.


கும்மிகள்,பின்னூட்டங்களால் பிசியாகிப் போனதால் முகாமையாளர் கொடுத்த முக்கியவேலையை முடிக்க முடியாமல் போனதால் சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறையை அவரிடம் கேட்கமுடியாது என்று சின்ன மாமாவுக்குப் புரிஞ்சு போச்சு.
ஆனால் எப்படியாவது சந்திப்புக்கும், சனிக்கிழமை கிரிக்கெட் போட்டிக்கும் போகணுமே..
விடுமுறை கேட்டால் கத்துமே ஆள்..
தனது கவிதை,இலக்கிய மூளையைக் கசக்கிப் பிழிந்து ஐடியா எடுத்தார்..
முகாமையாளரும் தமிழ் பேசுபவர் தானே..

பேனாவை எடுத்தார் விறு விறு என்று கடிதம் எழுத ஆரம்பித்தார்.
கடிதம் எழுதும் கவிஞர் சி.மா 

From - 
நான் தான், 
உன் பிரிவு தான், 
உன் நிறுவனம் தான், 
உன் நகரம் தான். 
  
To -
உனக்கு தான், 
இந்த பிரிவு தான், 
இந்த நிறுவனம் தான், 
இந்த நகரம் தான். 
  
  
அன்புள்ள ஐய்யா , 
          
          என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ, நான் இந்த சனிக்கிழமையும்,ஞாயிற்றுக்கிழமையும் வேலைக்கு  வரமாட்டேன். 
  
                                       நன்றிகள். 
  
  
  
Date: இன்னைக்கு தான் 
Place: இந்த நகரம் தான் 


என்றும் உண்மையுள்ள
முடிஞ்சாக் கண்டுபிடிச்சுக்கோ


இதன் விளைவு --------

பதிவர் சந்திப்புக்குப் பிறகு திறமையுள்ள இளமையான,அறிவுடைய ஒரு பொறியியலாளருக்கு வேலை தேவைப்படுகிறது.
கொடுக்கிற சம்பளத்தை எடுத்துகொள்வார்.
ஆனால் என்ன மாதத்தில் இரு பதிவு போடக் கொஞ்ச நேரமும், நாள்தோறு இரு மணித்தியாலம் மெயிலில் கும்மக் கொஞ்ச மணித்தியாலங்களும்,மாதத்தில் இரு தடவை சாவகச்சேரி போய்வர விடுமுறையும் கொடுக்கவேண்டும். அவ்வளவு தான்.

சின்ன மாமாவும் நாளை பதிவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறார் என்றவுடன் நீங்கள் ஆச்சரியப்பட்டாள் அடுத்து நான் சொல்லப் போகும் செய்தியை வாசித்தால் மயக்கமே அடைவீர்கள்.

நாளைக் காலை ஒன்பது மணியிலிருந்து இடம்பெறப்போகும் பதிவர் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக பேர்த் டெஸ்ட் போட்டியை ஒரு நாள் ஒத்தி வைக்கிறார்களாம்.

பின்னே?
எத்தனை விதமான ஆற்றல்கள் கொண்ட வீரர்கள் நாளை விளையாடவுள்ளார்கள்..

நோட் பாடில் கேம் ஆடும் 'வேகப்' பந்துவீச்சாளர் பவன்
கால்பந்தையே கண்ணாடியில் கையால் சுழற்றக் கூடிய ஆதிரை(தானே சுழல் பந்துவீசி தானே அந்தப் பந்தை விக்கெட் காப்பாளராகப் பிடிக்கும் ஆற்றல் எங்கள் சித்தப்பூவுவால் மட்டுமே முடிந்த சாதனை.)
அரிவாள் கட்டினால் (Square Cut இருக்கலாம் அரிவாள் கட் இருக்கக்கூடாதா?) அசர வைக்கும் இலங்கையின் ரிக்கி பொன்டிங் யோ
ரிக்கியும் நானும் இதை விட நல்லாவே அடிப்போம் - நூடில்ஸ் யோ 

கூக்ளி போல கூல் போல் போடும் கூல் போய்
இடி தாங்கி போல எங்கள் பிடி தாங்கி கன்கோன்
ஆறு கொடுக்காமல் விடமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அனுத்தினன்
13 வருடங்களுக்குப் பிறகு ஓய்விலிருந்து மீண்டும் துடுப்புப் பிடிக்க யாழில் இருந்து வரும் ஜனா
ஒழுங்கமைப்புக் குழுவில் இருப்பதால் விளையாடாமல் ஒதுக்கிவிடுவான்களோ என்று அவசர அவசரமாக
கிரிக்கெட் தெரியும் என்று காட்டுகின்ற அஷ்வின்
சுடு சோறு போல சுறு சுறு விறு விறு வீரர் சுதா
திருமலைக் குஞ்சின் 'வேகப்' பந்துவீச்சுக்குப் பயத்தில் இரு டசின் Ball Guards வாங்கிக் கொண்டே நாளை வரும் சேது அய்யா
பூகோள மயமாக்கலில் சமுதாயத்தை அடிமையாக்கி, இளைஞரின் நேரத்தை சுரண்டும் கிரிக்கெட்டை இளைஞரைப் பாதிக்காமல் விளையாடுவது எப்படி என்று செயன்முறையில் காட்டும் சமவுடமை ஆட்டக்காரர் மு.மயூரன்
டென்னிஸ் பந்து என்றாலும் கால் காப்புக் கட்டியே களம் இறங்குவேன் என்று அடம்பிடிக்கும் வதீஸ்
கிரிக்கெட்டில் பிடித்ததே Fine leg தான் என்று சொல்லும் மது இச மது
லண்டனில் இங்கிலாந்து வீரர்களுடன் நெட் பயிற்சி எடுத்து இங்கே பூல் மேசையில் கிரிக்கெட் ஆடும் நிரூஜா
இது நிரூஜாவின் டீ ஷேர்ட்டா என்று கேட்கிறார் முனனால் பதிவர் புல்லட்  

(மற்ற வீரர்களின் 'விளையாட்டுத் திறமை' நமக்குத் தெரியாதுங்கன்னாவ்.. )
இன்னும் பல 'வீரர்கள்' விளையாடுவதால் இதுவும் ஒரு சர்வதேசக் கண்காட்சிப் போட்டி ஆகிவிடுகிறது.

ரசிகர்கள் திரண்டு வந்துவிடுவார்களோ என்ற பயத்தில் ஒழுங்கமைப்பாளர்கள் போக்குவரத்துப் போலீசாருடன் போக்குவரத்து ஒழுங்குகள் பற்றி இன்று பேச்சுவார்த்தைக்குப் போகிறார்களாம்.

இந்த வேளையில் இலங்கையில் பதிவர் சந்திப்பு சம்பந்தமாக லண்டன் அதிகார மையத்தின் தலைவரும் லண்டனில் உள்ள இலங்கை சிரேஷ்ட பதிவருமான பச்சிளம் பாலகர் சங்கத் தலைவர் வந்தியத் தேவன் அவர்கள் ஒரு கண்டன அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்..

ஆண் பதிவர்களுக்காக கிரிக்கெட் போட்டியை ஒழுங்கு செய்த நீங்கள் பெண் பதிவர்களுக்காக வலைப் பந்தாட்டப் போட்டியையும் ஏற்பாடு செய்திருக்கலாமே. இது ஆணாதிக்க செயல் அல்லவா?
லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் அடுத்த மாதம் இரண்டாம் திகதி இதை ஏற்பாடு செய்யும் முயற்சியில் நாம் (லண்டன் பதிவர்கள்) மும்முரமாக செயற்படுகிறோம்.

பார்த்து செய்யுங்கப்பா.. அடுத்து சந்திப்பு யாழ்ப்பாணத்தில் என்று ஆரூடம் சொல்லி வைத்திருப்போர் லண்டன் பதிவர்களால் கோபமடையக் கூடும்.
அடுத்த வீடியோ போடும் நேரம் சொல்லிட்டு செய்தீங்கன்னு சொன்னா கிரிக்கெட் விளையாடுற படம் அனுப்பி வைக்கிறோம்.

வாங்க நாளைக்கு விளையாடலாம். ஞாயிறு சந்திக்கலாம்..

Post a Comment

31Comments

Please Select Embedded Mode To show the Comment System.*