விக்கிலீக்சின் உரிமையாளர் விக்கிரமாதித்தன்?

ARV Loshan
30
அடக்க அடக்க எழுவதும், முடக்க முடக்க முறுகிக் கொண்டு கிளர்வதுமாக உலக நாடுகள் பலவற்றின் தலைகளைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது விக்கிலீக்ஸ்
கொஞ்ச நாளாக வாசித்தார்களோ இல்லையோ, என்ன இருக்கிறது என்று தெரியுமோ இல்லையோ எதை எடுத்தாலும் யாரைப் பார்த்தாலும் விக்கிலீக்ஸ் - Wikileaks தான்.




புதுசா விக்கிலீக்ஸ் பார்க்க விரும்புவோர், தமிழில் விக்கிலீக்சில் வந்துள்ள புதிய பரபரப்புக்களை அறிய விரும்புவோருக்கு உதவி செய்யும் நோக்கில் தான் இந்த இடுகை..




சர்வதேசமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தும் சில விஷயங்கள் இதோ...
(இரத்தக் கொதிப்பு ஆசாமிகள் இத்தோட நீங்கள் நிறுத்தலாம்.. இதுக்கு மேல் வாசித்து எனக்கு சபிக்க வேண்டாம்)


ஆனானப் பட்ட அரசரை அவமானப்படுத்திவிட்டோம் என்ற நினைப்பு தாமதமாகத் தான் இங்கிலாந்துக்கு வந்திருக்காம். மன்னரிடம் மன்னிப்புக் கேட்க மகாராணியே இலங்கை வரலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.
தப்பினோம் பிழைத்தோம் என்று துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று வந்தவருக்கு ராஜமரியாதை.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருக்குக் கூட இப்படி மரியாதை இங்கே வழங்கப்படவில்லையாம்.


ஆனால் மன்னருக்கு ஒரு விஷயம் தாமதமாகத் தான் உறைத்துள்ளது.மாமரப் புகழ் மே.மாமாவையும் கூட அழைத்துப் போயிருந்தால் ஒரு குருவி கிட்ட நெருங்கி இருக்குமா?
எப்படிப்பட்ட வீரர் அவர்? அடுத்த முறை எங்கே போனாலும் மேமா மாமா கூடப் போவாராம்.


லண்டன் ஆர்ப்பாட்டம் எல்லாம் இங்கே நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னால் பிச்சை வாங்க வேண்டும்.
மன்னரை அவமானப்படுத்தியதால் இலங்கையையும் தமிழரையும் கேவலப்படுத்திய புலம்பெயர் தமிழரை எதிர்த்து முல்லைத்தீவு,கிளிநொச்சியில் நடந்த ஆர்ப்பாட்டம் இருக்கே..
கொட்டும் மழையிலும்.. பெரும்பாலானவர்கள் பெண்கள்.. 
எப்பூடி?


பயமோ பக்தியோ? இதுதான் மகா ராஜதந்திரமாம்.


அதுசரி ராஜா ராணிக் கதையெல்லாம் விக்கிலீக்சில் வராதோ என்று கேட்பவர்களுக்கு.. மன்னர் கதை சொன்னோம்.
பெரியண்ணன் நாட்டில் இருக்கும் ராசா பற்றியும் கதை வரப்போகுதாம்.
ராசா கதை வந்தால் கடிதமெழுதும் கறுப்புக் கண்ணாடி தாத்தா பாடு தான் பாவம்.


ஈராக்,ஆப்கானிஸ்தான்,அமெரிக்கா இவற்றுக்கு அடுத்தபடியாக நம் இலங்கை பற்றிய செய்திகளே விக்கிலீக்சில் நிறைந்திருப்பதால் ஏனைய நாடுகள் கடுப்பில் இருப்பதாகக் கேள்வி.


என்ன செய்தால் தமக்கும் இடம் கிடைக்கும் என்று மண்டையைப் பிய்ப்பதில் பாதி உலகத் தலைவர்களுக்கு மண்டையோட்டுப் பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது.
இளங் குமரிகளோடு ஆட்டம்போட்டு சல்லாபம் செய்தும் தன்னைப் பற்றி லீக் பண்ணாத விக்கிலீக் மீது கடும் கோபத்தில் உள்ளார் இத்தாலியப் பிரதமர் பெர்லுஸ்கோனி.


விக்கிரமாதித்தன் குறுகிய காலத்தில் ஆரூடங்கள் மூலம் புகழ்பெற்று உலகெங்கும் குறிப்பாக விளையாட்டு உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதால் விக்கிலீக்சுக்கும் இவருக்கும் ஏதாவது தொடர்பிருக்கலாமோ என்று விக்கிலீக்சின் பிதாமகர் ஜூலியன் அசன்ஜெவுக்கே சந்தேகம் வந்துவிட்டது.


ஆஸ்திரேலியாவிலா சுவிஸ்சிலா அரசியல் தஞ்சம் கேட்பது என்று குழம்பிக் கொண்டிருக்கும் அசஞ்சே விக்கிரமாதித்தன் கொடுக்கும் மன தைரியத்தில் தெம்பாகி இருக்கிறார்.
எந்த இணைய சேவைகளை முடக்கினாலும் விக்கிரமாதித்தன் தன் தளத்தைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை வந்திருக்காம்.


தன் தலை தப்ப பேசாமல் விக்கிலீக்சின் உண்மையான உரிமையாளராக விக்கிரமாதித்தனையே அறிவிக்கலாம் என்று அசஞ்சே முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்.


ஆஷஸ் பிசியில் இருந்தாலும் ஆஸ்திரேலியா அடிவாங்குவதால் மழைக்கான பிரார்த்தனையில் கொஞ்சம் மும்முரமாகிப் போயுள்ள விக்கிரமாதித்தன் இலங்கையில் பெய்யும் மழையை எப்படி ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பலாம் என்று ஆலோசனைகளை எதிர்பார்க்கிறாராம்.


நித்தியானந்தாவின் பிரார்த்தனையில் ஆஸ்திரேலியாவில் மழை பெய்தாலும் சந்தோஷமாம் என்கிறார்கள் விக்கிரமாதித்தனின் அடிப்பொடிகள்.


இனி விளையாட்டுலீக்ஸ்.


ஆஷஸ் தொடரை இம்முறையோடு நிறுத்துவதென்று ஆஸ்திரேலியா முடிவெடுத்துள்ளது.
மூன்றாவது போட்டிக்குப் பிறகு இதைப் பகிரங்கப்படுத்த உள்ளார்களாம்.
                           கும்பிடும் கைகளுக்கிடையில் தான் என்ன ஒற்றுமை? ;)
                     ஆடிய ஆட்டம் என்ன.. (மேலே உள்ள ஒரு படத்தோடு யாராவது லிங்க் பண்ணிப் பார்த்தால் சங்கம் பொறுப்பேற்காது)


கொசு அடிப்பதைப் போல அடித்துவீழ்த்தி டெஸ்ட் தரப்படுத்தலில் மேலே எழலாம் என்று கனவோடிருந்து மழையினால் எல்லாம் கவிழ்ந்துபோன இலங்கை இப்போது புது ஐடியாவினால் மகிழ்ந்துள்ளது.


அடுத்த மழை சீசனுக்கு எப்படியாவது கால்,கையைப் பிடித்து இந்தியா,தென் ஆபிரிக்கா,இங்கிலாந்து போன்ற அணிகளை இங்கே கூட்டிவருவது. மழையினால் தொடர் சரி சமனாக முடிந்தாலும் தரப்படுத்தல் புள்ளிகளைக் கூடுதலாகப் பெறலாமே.


இந்தியாவின் புதிய கோரிக்கைக்கும் தென் ஆபிரிக்கா இணக்கம்.


வேண்டாம் என்றால் ஆமாம் சொன்ன தெ.ஆ இந்தக் கோரிக்கைக்கும் யெஸ் சொல்லும் என்று தெரிந்தே பக்குவமாக இந்த பிட்டை இந்தியா போட்டுள்ளது.
தென் ஆபிரிக்கா வேகப்பந்துவீச்சாளர்களை அணியில் சேர்க்கக் கூடாது.
சேர்த்தாலும் இடுப்புக்கு மேல் எழுவது போல பந்துவீசக் கூடாது.


பாகிஸ்தான் சூதாட்டத்தைத் தடுக்கக் கண்டுபிடித்திருக்கும் புதியவழி.


Official Uniform Supplier, Official Drinks இருப்பது போல பாகிஸ்தான் அணிக்கு Official Betting Agentஆக மசார் மஜீத்தை நியமிக்க உள்ளார்களாம்.


இன்னும் சில மணி நேரங்களில் பர பர பதிவுலக லீக்ஸ்.. 
(ஆட்டோ அனுப்புபவர்கள் பதிவு ரிலீஸ் ஆன பிறகு அனுப்பவும்.. ஆட்டோக் காசும் கொடுத்தே அனுப்பவும்)


டிஸ்கி - உண்மையான விக்கிலீக்ஸ் தளம் பார்க்க ஆசைப்படுவோருக்காக 






Post a Comment

30Comments

Please Select Embedded Mode To show the Comment System.*