பதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்

ARV Loshan
511
ஹாய் விக்கிலீக்ஸ் வாசகப் பெரும் கோடிகளே(பக்த கோடிகளே மாதிரி)..

இருக்கிறேனா? சுகமாக இருக்கிறேனா என்ற சந்தேகங்கள் இருந்தால்(இதற்கு முந்திய பதிவின் உபயத்தால்) நலமே உள்ளேன் எனக் கூறிக்கொண்டு,நீங்கள் அளித்துள்ள பாரிய ஆதரவால் 
புதிய லீக்சோடு உங்களை சந்திக்கிறேன்..


இனி பரபர பதிவுலக லீக்ஸ்..

பதவியுயர்வு கிடைத்தும் தன் சொந்தப் பாஸ்வோர்டைப் பாதுகாக்க முடியாது பழைய பரபர பதிவரை தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்ற அவரது அமெரிக்க முகாமை முடிவெடுத்திருக்காம்.
இதை அறிந்த பின் ஆவேசமடைந்த அந்த அமைதிப் பதிவர் சுதந்திரப் போரை முன்னெடுத்து கடவுச் சொல்லை எப்படியாவது பெற்றே ஆவேன் என்று இன்று சபதம் இட்டுள்ளார்.
நாளையிலிருந்து கடல் அலை வீசிப் பின் ஒரு பார்வையால் முடங்கிப்போன தன் தளத்திலிருந்து பதிவுகள் வருமென்று விக்கிலீக்சுக்கு அளித்த ரகசியப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 (பதிவுகள் அவரது மேலிடத்தால் சென்சார் செய்யப்படுமா என்பதை விக்கிலீக்ஸ் அவதானிக்கும்)

ராமராஜன் கலர் ஆடை அணிந்தும் தன்னை தெரியாமல் தன் இசம் பற்றி மட்டுமே அறிந்திருக்கும் பலரால் கடுப்பாகி இருக்கும் முன்னாள் முடி வளர்த்த பதிவர் இம்முறை பதிவர் சந்திப்பில் தன் இசம் பற்றி நேரடி டெமோ செய்து தன்னைப் பிரபலமாக்கும் விபரீத முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதனால் (பெண்)பதிவர்களின் வருகை பெருகிவிடும் என்றும் வேறெங்காவது பெரிய இடத்தில் சந்திப்பை வைக்கலாமோ என்றும் யோசிக்கிறார்கள் ஏற்பாட்டு உயர்மட்டக் குழுவினர்.

பெட்டி வைத்திருந்து அங்கமாக மாற்றி,அடிக்கடி கச்சேரி செய்து சிறுகதை,கவிதை எல்லாம் எழுதி இலக்கியவாதியாக அவதாரம் எடுத்தும் ஐந்துவருடக் காத்திருப்பின் கடைக்கண் பார்வை முழுமையாகப் படாமையினால் தான் 'கொலை'காற்றாக.. மன்னிக்க கொலைகாரனாக மாறும் முடிவில் அமைதியான கவிஞப் பதிவர் மாறினார் என்கிறார்கள் அவரின் நெருங்கிய சகாக்கள்.
எங்கே போய் முடியப்போகுதோ?

பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிநிரலில் இடைவேளை இசைவேளை என்று போட்டது தான் தாமதம் பாடப் போகிறோம் என்று பலர் தொடர் மெயில் அனுப்புவதால் தாங்க முடியவில்லை என்று புலம்புகிறார் லண்டன் ரிட்டர்ன் பெண் பெயர் முகமூடியில் உள்ள பதிவர் சந்திப்பு ஏற்பாட்டின் பொறுப்பாலப் பதிவர்.
அவரது பெயரைப் பார்த்துத் தான் அத்தனை மடல் என்று இன்னும் தெரியவில்லையா என்று கேட்கிறார்கள் நண்பர்கள்.

ஏற்பாட்டு உயர்மட்டக் குழுக் கூட்டம் என்று அடிக்கடி நடப்பதால் கொழும்பு Duplication வீதியில் உள்ள ஒரு Snooker Clubக்குத் தான் கொழுத்த வருமானமாம்.
இதனால் நிதி சேகரிக்கப்பட்டால் கணக்குக் காட்டவேண்டும் என்று கட் அண்ட் ரைட்டாக ஒரு பிரேரணையை முன்வைக்கலாம் என்கிறார் பிரபல நூடில்ஸ் விற்பனையாளரும் இலங்கையின் அனைத்து சங்கம்+கழகங்களிலும் பொருளாளர் பதவி கேட்கும் அரிவாள் பதிவர்.


 எம்மா வோட்சனைக் காதலித்து அது கூடாமல் போனதால் முளைக்காத தாடியை சொரிந்தாவது முளைக்கப் பண்ணுவோம் என்று அதுவும் சரிவராமல் பக்கத்து வீட்டு ஆட்டின் தாடியைப் பார்த்து ஏங்கிய குஞ்சுப் பதிவர்(சிறியவராக இருப்பதால் குழும சிறப்புப் பெயர்) இப்போது எம்மா வராவிட்டாலும் பரவாயில்லை சும்மா வோட்சனாவது வந்தாலும் பரவாயில்லை எனும் முடிவுக்கு வந்துள்ளாராம்.
எத்தனை சோகத்தைத் தான் தாங்குறது என்று தான் இந்தத் தீர்மானம்.
இறுதியாக வேகப் பந்துவீச்சாளர் என்று தன்னை அறிமுகப்படுத்த புதிய அணியின் தலைவர் மயக்கம் வரும்வரை விழுந்து விழுந்து சிரித்த அவமானமும்,முன் வீட்டு ஐந்து வயசுப் பையன் தன் 'வேகப்' பந்துவீச்சில் அடித்த ஆறு சிக்சர்களும் கிரிக்கெட்டைத் துறக்க செய்யும் அளவுக்குப் போய்விட்டனவாம்.
இனிமேலும் படப்பதிவும் பப்புமுத்து கவிதைகளுமாக இருக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம்.

இதைவிட அவர் பயப்படக் காரணம், இவர் பற்றிய படப்பதிவை எதீர் காளத் டமில் இணத் தளைவர் லண்டன் இளைய தளபதி ரசிகர் மன்றத் தலைவர் பேஸ்புக் புகழ் பதிவர் தன் அலகு தமிலில் இடப் போவது தானாம்.         

தானும் பதிவர் தானுங்கோ என்று மீண்டும் தலை காட்டிய அவரின் டமில் சிரந்து விலங்கக் காரணம் யார் எனத் தான் புதிரோடு பார்க்கிறோம் யாம்.

சுடு சோற்றுப் பதிவர் இந்தக் குளிரான காலநிலையிலும் சூடாகக் காணப் படுகிறார்.
அவர் அனல் பறக்க இரு காரணங்கள்..
காத்திருந்தவன் எதையோ நேற்று வந்தவன் கொத்திய மாதிரி இதற்கு முந்திய விக்கிலீக்ஸ் பதிவில் சுடுசோற்றை நிரூஜா கொத்திய காரணம் ஒன்று..
பரிசு கொடுக்கிறோம் என்று பல தளங்கள் ஏமாற்றுவது இரண்டு..
இதற்காக இனிமேலும் தானே பரிசு கொடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
பணப்பரிசு கொடுக்க முடியாவிட்டால் தானே பொங்கி உலைவைத்து சுடு சோறு தரப் போகிறாராம்.


பலமான பருமனான அரசியல்+சட்டப் பதிவர் அஞ்ஞான வாசம் முடிந்தது மீண்டிருக்கிறார்.கலகல 'ஜனா'ரஞ்சக யாழ் பதிவர் தனக்கும் சீயர்ஸ் சொன்ன பிறகும் அடக்கி வைப்பது நல்லமில்லை என்று அதிரடியாக அரசியல் விளக்கப் பதிவைக் கொடுத்த பிறகு அடுத்து தன் கொள்கை விளக்கத்தைக் கொடுக்கலாமோ என யோசிக்கிறாராம்.
அதற்கான தகுந்த இடமாக பதிவர் சந்திப்பைப் பயன்படுத்தலாம் என்று வாசகர்களின் மதியூக ஆலோசனைகளால் டிசெம்பர் 19ஐ எதிர்பார்த்துள்ளாராம்.
பெண் பதிவர்கள் பற்றிய தகவல்கள் காணோமே என்று கேட்கும் அன்பர்களுக்கு....
அவர்கள் பதிவு வேளைகளில் அல்லாமல் பதிவர் சந்திப்புக்காகத் தம்மை மேம்படுத்தும் பணிகளில் பிசி என்பதால் இலங்கையின் அழகு சாதன நிலையங்கள் அல்லோல கல்லோலப் படுகின்றன என்கிறார் எம் ரகசிய செய்தித் தொடர்பாளர்.


என்னடா இது பதிவர்கள் பற்றிப் பதிவு வந்தாலே ரத்தம் வரும் அளவுக்கு வதைக்கு உள்ளாக்கப்படுகிற இருவரையும் காணவில்லையே என்று தேடுவோருக்கு...
அந்த இருவரையும் எவ்வளவு என்று தான் மொக்கை போடுவது?
இங்கேயும் லீக் செய்தால் ஓவர் லீக் ஆயிடும் என்பதால் அவர்களுக்கு ஓய்வு..
விக்கிலீக்ஸ் உங்கள் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறது..(பதிவர் சந்திப்புக்கு முன் இன்னொரு பதிவுலீக்சுக்காக) எம் ரகசிய மின்னஞ்சலில் உங்கள் பதிவுலகத் தகவல்கள் வந்தால் ரகசியம் காக்கப்படும் என்ற விக்கிரமாதித்தன் உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

*முற்றுமுழுதான மொக்கைப் பதிவு என்பதால் யாராவது சூடாகி என்னைக் கொத்துக் கரி போடத் தேட வேண்டாம் எனப் பணிவோடு வேண்டிக் கொள்கிறேன்.
ஏதாவது பிரச்சினை என்றால் 19 ஆம் திகதிக்கு முன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.



Post a Comment

511Comments

Please Select Embedded Mode To show the Comment System.*