December 12, 2010

அபாசிபா - ஞாயிறு மசாலா

நேற்றைய எனது 500வது பதிவுக்கு வாழ்த்துத் தெரிவித்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்.

ரசியல் 

இலங்கை அரசியலில் பலரும் எதிர்பார்த்த, சிலராவது விரும்பிய, தமிழ் மக்களுக்கு ஓரளவாவது ஆறுதல் தரக்கூடிய நிகழ்வுகள் கடந்த இரு தினங்களில் நடந்துள்ளன.
ஒன்று தமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்ட சமர்ப்பில் நடுவு நிலைமை வகித்தது (இது பற்றி பலர் துரோகத்தனம், காட்டிக்கொடுப்பு என்று விமர்சிக்கப் புறப்பட்டாலும், இப்போதைய நிலையில் எதிர்ப்பரசியலால் ஆகப்போவது எதுவுமல்ல என்பதுவும் சேர்ந்து செயற்பட்டு சில காலம் நடப்பதைப் பார்க்கலாம் என்பதுவும் இங்கே புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது)

இரண்டு - பிரிந்து செயற்பட்டுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்(அதிக உறுப்பினர்கள் உள்ள தமிழ்ப் பிரதிநிதிகள்) தமிழ்க் கட்சிகளின் அரங்கமும்(அரசாங்க சார்பு நிலை எடுக்கும் தமிழ்க் கட்சிகளின் அமைப்பு) சந்தித்துப் பேசி இருப்பதும், இரு பிரிவும் ஒரே குரலில் அரசிடம் தீர்வுத் திட்டம் குறித்து ஒரே குரலில் கேட்கவுள்ளதும் வரவேற்க்கக் கூடிய ஒரு விடயம்.

கேட்பதை உரக்க,தெளிவாக,அதிகமாகக் கேளுங்கள். கூடக் கேட்டால் தான் வெட்டுக் கொத்துக்கள்,கழிவுகளுக்குப் பிறகு ஓரளவாவது கிடைக்கும்.
த.தே.கூ அரசாங்கத்துடன் இணங்கிப் போகின்ற நேரம் அரசு பரிசாக ஏதாவது கொடுக்கக் கூடும்.

பாரதி

நேற்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்தநாள்.
ஆனால் தமிழர்களில் அதுவும் கவிஞர்களில் எத்தனை பேருக்கு இது ஞாபகம் இருக்கிறது.வேதனையான விஷயம் நாம் தமிழர் முக்கியமானவர்களை மறந்துவிடுகிறோம்.
அனல் கவிதைகளை அழகு தமிழில் தந்த அந்தக் கவிஞன் தமிழின் மிக சிறந்த கவிஞர்களில் முக்கியமானவன்.
தமிழை எளிமைப்படுத்துவதிலும் தெளிவுபடுத்துவதிலும் பாரதியை யாரும் தவிர்த்துவிட முடிவதில்லை.

பாரதியார் பற்றி மாற்று விமர்சனங்கள் எதிர்க் கருத்துக்கள் வந்த போதிலும் சிறு வயது முதல் அந்த மீசைக் கவியின் கவிதைகள் என் மனதில் தந்த ஆழ்ந்த பாதிப்பு சினிமாப் பாடல்களை நாள் தோறும் உச்சரிக்கும் இந்தக் காலகட்டத்திலும் இருக்கிறது.இன்றும் நான் எனது நிகழ்ச்சிகளின் இடையே பாரதி பாடல்கள் ஒலிபரப்பத் தவறுவதில்லை.

அடிக்கடி நான் எனக்குள்ளே சொல்லிக் கொள்வதும், ஒலிபரப்புவதுமான வரிகள்...

பிறர் வாடப் பல செயல்கள் செய்து -
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -
கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -
பல வேடிக்கை மனிதரைப் போல -
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? 

மனதில் உறுதி வேண்டும் 
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைவரவேண்டும்

 சிக்கு புக்கு

அண்மையில் வந்த புதிய திரைப்படங்கள் எவற்றையும் உடனுக்குடன் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அலுவலக கூட்டங்கள்,அவசர புதிய ஒழுங்குகள் என்று தூங்குகின்ற நேரத்துக்கு வீடு வருகையில் எவ்வாறு இது சாத்தியமாகும்?

நேற்றும் நாள் முழுக்க ஓடிக்கொண்டே இருந்தாலும் இரவு நிகழ்ச்சிக்குப் பிறகு சிக்கு புக்குப் பார்க்கப் போவதாக முடிவெடுத்தோம்.
ரத்த சரித்திரம் கடும் வன்முறை என்று கேள்விப்பட்டதால் தனியே பின்னர் போவதாக முடிவு.
கேப்டனின் விருதகிரி -- பின்னர் யோசிக்கலாம்.
மைனா இங்கே ஓடி முடிந்துவிட்டதால் DVDக்காக வெயிட்டிங்.

சிக்குபுக்கு பார்க்கப் போனதில் பிடித்த சில விஷயங்கள்....

1.தூறல் நின்றாலும் பாடல்.. காட்சியும் உருக்கமாகவே இருந்தது.
2.படத்தில் பெரும்பாலான காட்சிகளில் வந்த அழகான இயற்கைக் காட்சிகள்
3.பிளாஷ் பாக்கில் வந்த ஆர்யாவின் அறிமுக ஜோடி நாயகி ப்ரீத்திகா. சில காட்சிகளில் ரசிக்கக் கூடிய ரசனையான அழகோடு இருந்தார்.

4.இடைவெளியின் போது கொறித்த மரவள்ளி சிப்ஸ்
5.படம் முடிந்து வீடு திரும்பும்போது வந்த வேகம். சனிக்கிழமை இரவு நேரம் வீதியில் ஆச்சரியகரமாக வாகனங்கள் மிகக் குறைவு.கேட்டுக்கொண்டு வந்த வெற்றி வானொலியின் இசை ராஜாங்கம் நிகழ்ச்சியின் இரு பாடல்கள் ஒலித்து முடிவதற்குள் வீட்டில் நாம்.

இதுவரை நான் பதிந்த மிகச் சிறிய திரைப்பட விமர்சனங்களில் ஒன்று இது.

பாசில்

இயக்குனர் பாசிலின் திரைப்படங்கள் எப்போதுமே நான் ரசித்தவை.
இவரது கண்ணுக்குள் நிலவு தவிர ஏனைய அத்தனை படங்களையும் ஒவ்வொரு காட்சிகளாக ரசித்திருக்கிறேன்.
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
பூவிழி வாசலிலே
வருஷம் 16
காதலுக்கு மரியாதை என்பன மிக ரசித்தவை.

அண்மையில் வீட்டில் ஓய்வாக இருந்த சில மணி நேரங்களில் ராஜ் டிவி இல் ஒளிபரப்பான பாசில் திரைப்படங்களைக் கொஞ்ச நேரமாவது பார்க்கக் கிடைத்தது.
எ.பொ.அம்மாவுக்கு
இதுவரை நான் பார்க்கத் தவறியிருந்த கிளிப் பேச்சுக் கேட்கவா
(மம்மூட்டி இயல்பாக கலக்கியிருப்பார்.பாசிலுக்கே உரித்தான எளிமையான,கதை விலகாத நடை.கதையோடு செல்லும் நகைச்சுவை,உருக்கமான முடிவு)

மம்முட்டியும் எனது மனதுக்குப் பிடித்த ஒரு நடிகர்.அண்மையில் தான் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட மம்மூட்டியின் படங்கள் ஐந்து அடங்கிய DVDகள் இரண்டு வாங்கியிருக்கிறேன்.பார்க்கத் தான் நேரமில்லை.

பல தடவை என் பதின்ம வயதுகளிலிருந்து பார்த்து ரசித்து இன்னும் அலுக்காமலிருக்கும் வருஷம் 16 நேற்று ஜெயா டிவியில் பகல் ஒளிபரப்பானது.கடமைக்கு செல்லுமுன் விளம்பரத் தொல்லைகளோடு ரகுவரன் வரும் காட்சிவரை பார்த்துவிட்டுத் தான் போனேன்.

பாசில் பாணித் தமிழ்ப் படங்கள் மனதுக்கு மிக நெருக்கமானவை.

இதைப் பதிவிடும் நேரம் கே டிவியில் தளபதி போய்க் கொண்டிருக்கிறது.
இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாள்.
அவரது மைல்கல் திரைப்படங்களில் ஒன்று.. பொருத்தமாகத் தெரிவு செய்துள்ளார்கள்.
ரஜினிக்கும் ரசிகருக்கும் வாழ்த்துக்கள்.

22 comments:

கன்கொன் || Kangon said...

ஹாவ் ஐ கொட் த சுடுசோறு திஸ் ரைம்?

Prapa said...

naan thaan opening bats man.........
comment varum.

Unknown said...

///இரண்டு - பிரிந்து செயற்பட்டுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்(அதிக உறுப்பினர்கள் உள்ள தமிழ்ப் பிரதிநிதிகள்) தமிழ்க் கட்சிகளின் அரங்கமும்(அரசாங்க சார்பு நிலை எடுக்கும் தமிழ்க் கட்சிகளின் அமைப்பு) சந்தித்துப் பேசி இருப்பதும், இரு பிரிவும் ஒரே குரலில் அரசிடம் தீர்வுத் திட்டம் குறித்து ஒரே குரலில் கேட்கவுள்ளதும் வரவேற்க்கக் கூடிய ஒரு விடயம்///

மிக முக்கியமான விடயம். நல்ல சமிக்ஞைகள் சந்தோசமளிக்கின்றன

ம.தி.சுதா said...

சகோதரர்களே தங்களது adsl line போல இருக்கிறது...

Subankan said...

///இரண்டு - பிரிந்து செயற்பட்டுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்(அதிக உறுப்பினர்கள் உள்ள தமிழ்ப் பிரதிநிதிகள்) தமிழ்க் கட்சிகளின் அரங்கமும்(அரசாங்க சார்பு நிலை எடுக்கும் தமிழ்க் கட்சிகளின் அமைப்பு) சந்தித்துப் பேசி இருப்பதும், இரு பிரிவும் ஒரே குரலில் அரசிடம் தீர்வுத் திட்டம் குறித்து ஒரே குரலில் கேட்கவுள்ளதும் வரவேற்க்கக் கூடிய ஒரு விடயம்///

நிச்சயமாக

///நேற்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்தநாள்.
ஆனால் தமிழர்களில் அதுவும் கவிஞர்களில் எத்தனை பேருக்கு இது ஞாபகம் இருக்கிறது.வேதனையான விஷயம் நாம் தமிழர் முக்கியமானவர்களை மறந்துவிடுகிறோம்.///

ம்...

ம.தி.சுதா said...

அண்ணா அரசியல்.. ஒரு மாறான வித்தியாசமான முடிவு.. மாற்றங்கள் நல்லது தானே..

கன்கொன் || Kangon said...

அரசியல் : ஆமாம்.
தமிழ்க்கூட்டமைப்பு இப்போது ஓரளவு யதார்த்தமாகச் செயற்படுகிறது என்று நம்புகிறேன்.
நடுநிலை வகித்தபோதும் இனிவரும் காலங்களில் தமிழ்மக்களின் பிரச்சினைகளை உயர்மட்டத்திற்கு கொண்டுசென்று அழுத்தம் கொடுக்கும் பாரிய வேலையையும் செய்வார்கள் என்று நம்புகிறேன்.

தமிழ்க்கட்சிகளின் அரங்கம் அரசு சார்பா? சிவாஜிலிங்கம்?
மாற்றுக்கருத்தாளர்கள் எனலாம் என்று நினைக்கிறேன்.

பாரதி: ஆமாம்.
மாபெரும் கவிஞன்.
அந்தப் வரிகள் எனக்கும் பிடித்தது.

சிக்கு புக்கு: //இடைவெளியின் போது கொறித்த மரவள்ளி சிப்ஸ் //
:D :D :D

பாசில்: ஒரு படமும் பார்த்ததில்லை. ;-)
கண்ணுக்குள் நிலவு கொஞ்சம்ப பார்த்திருக்கிறேன்.

ரஜினி: தமிழ்சினிமாவில் இன்னொரு சிகரம்.
வாழ்த்துக்கள். :-)))

மசாலா: :-))))

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃமனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைவரவேண்டும்ஃஃஃஃ

பதிவுக்கேற்ற வரிகள் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி அண்ணா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

ம.தி.சுதா said...

மம்முட்டியின் விஸ்வா துளசியும் அதில் இருக்கிறதா பாருங்கள் கதை ஓட்டம் மெதுவாக இருந்தாலும் சில ஆழமான இடங்கள் இருக்கிறது...

ம.தி.சுதா said...

கோபி எனக்கு சோற்றில் பங்கு தரமாட்டீர்களா.. பசிக்கிறது...

ம.தி.சுதா said...

கன்கொன் || Kangon said...

ஃஃஃஃஃதமிழ்க்கட்சிகளின் அரங்கம் அரசு சார்பா? சிவாஜிலிங்கம்?
மாற்றுக்கருத்தாளர்கள் எனலாம் என்று நினைக்கிறேன்.ஃஃஃஃஃ

கோபி.. சிவாஜிலிங்கத்திற்கும் சுவரொட்டி ஒட்டியவன் என்ற முறையில் சொல்கிறேன்.. அவர் கர்ணனின் பாத்திரமேற்று நடிக்க நினைத்து (சிறிகாந்தாவிற்காக) பாரத யுத்தத்தில் சகுனியான மாறப் போகிறார்... (அவர் அடுத்த முறை தேர்தல் வரை காத்திருந்திருக்கலாம் என்பது என் அபிப்பிராயம்)

வேந்தன் said...

//இது பற்றி பலர் துரோகத்தனம், காட்டிக்கொடுப்பு என்று விமர்சிக்கப் புறப்பட்டாலும், இப்போதைய நிலையில் எதிர்ப்பரசியலால் ஆகப்போவது எதுவுமல்ல என்பதுவும் சேர்ந்து செயற்பட்டு சில காலம் நடப்பதைப் பார்க்கலாம் என்பதுவும் இங்கே புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது//
ம்.. 100% உண்மை!

என்.கே.அஷோக்பரன் said...

இந்த அரசாங்கம் மிகவும் வித்தியாசமான அரசாங்கம். வரும் வரை வா, வா என்று வெத்திலை மட்டுமில்லை, வாழையிலை எல்லாம் வச்சுக் கூப்பிடுவாங்கள், போனாப் பிறகு கதை கந்தல்.... பிறகு நக்கினார் நாவிழந்தார் கணக்கா... இங்காலயும் வர ஏலாம, அங்கால இருந்தும் ஒண்டும் செய்யேலாம இருக்க வேண்டியதுதான்.

பல “தமிழ்” அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு அமைச்சரவையில் பேசுறதுக்கே பயம், எங்கே தலைவர் கோவிச்சுடுவாரோ எண்டு.

கன பேர் இப்பிடித்தான் எதிர்க்கட்சியிலிருந்து அரசுக்கு ஆதரவளிக்க போனவை - ஏதோ கிடைக்குற சலுகையை வச்சு மக்களுக்கு ஏதாவது செய்யலாம் எண்டு நினச்சினம் ஆனால் கிடைச்சது ஒண்டுமில்லை.... இப்ப அங்க இருக்கவும் முடியாம, இங்கால வரவும் முடியாம ஒரே திண்டாட்டம் தான். இது கட்சிமாறிய, தமிழ் எம்.பி.க்களுக்கு மற்ற எல்லாருக்கும் பொதுவாத்தான் நடக்குது.

டக்ளஸ்ஸை விட அகதி முகாம்களுக்கு ஏதாவது வழங்கும் போது போறது நாமல் தான் (பத்திரிகையில் படங்களைப் பாருங்கோ!).

கூட்டமைப்பைத் தம் வசப்படுத்தியதில அரசுக்கு ஒரு நன்மை அதாவது வெளிநாடுகளுக்கு extreme தமிழினக் கட்சி கூடத் தம்மை ஆதரிக்கிறது, இங்க ஒரு பிரச்சினையும் இல்லை, நீங்கள் மூடிக்கொண்டிருங்கோ எண்டு சொல்லிவிடலாம் மற்றது அப்பப்ப குடைச்சல் கொடுக்க (?!) ஒரு கட்சி குறைஞ்சிட்டுது எண்ட சந்தோசம்!

கூட்டமைப்புக்கு என்ன நன்மை? - முதல் மாசங்களில கொஞ்சம் அதிக ஒதிக்கீட்டு நிதிவசதிகள் (அமைச்சுக்கள் ஊடாக) கிடைக்கும் வாய்ப்பு உண்டு, அத வச்சு மக்களுக்கு ஏதாவது செஞ்சால் ஒழிய, அதுக்குப் பிறகு பெரிசா ஒண்டும் கிடைக்கப்போறேல்லை.

என் எதிரிகளை நண்பர்களாக்கும் போது நான் எதிரியை அழிக்கிறேன் தானே? என்கிற லிங்கனின் கொள்கையை (அவருக்கு இத நல்ல கொள்கைகளோட சேர்த்துச் செய்தார் என்பது வேற விஷயம்) மஹிந்தரும் ஃபொலோ பண்ணுறார்.

நான் 100 சதவீதம் உறுதியாகச் சொல்வேன் இந்த அரசாங்கம் இந்த இனப்பிரச்சினைக்கு எந்த ஒரு அரசியல் தீர்வையும் தரப்போவதில்லை. இதோ கூட்டமைப்புச் சேர்ந்த அடுத்தநாளே தமிழ்த் தேசிய கீதம் நீக்கப்பட்டுவிட்டது - இது உதாரணம்!

ஏன் தீர்வு தரமாட்டார்? - காரணமிருக்கு, விரிவா எழுதோனும் பிறகு எழுதிறன்.

Kiruthigan said...

பதிவு அருமை அண்ணா...
மதிசுதா பல ராஜதந்திரங்களை கரைத்துக்குடித்து விரல்நுணியில் வைத்திருக்கிறீர்கள்...!

sinmajan said...

நேற்றுத் தான் இதனை http://dbsjeyaraj.com/dbsj/archives/1866 வாசித்தேன்.. இப்படியும் முயன்று பார்க்கலாம் தானே.. பொறுத்திருந்து பார்ப்போம்.

Jana said...

அரசியல் - இது கூடு மற்றவர்களின் வழிகாட்டல் திட்டப்படி நடக்காமல் சுயமாக நடந்தால் சந்தோசமே.
பாரதியார் -அற்புதமானவர், அபூர்வமானவர். (அற்புதமான வரிகள் - நான் வீழ்வேன் என நினைத்தாயோ)
சிக்குபுக்கு - இன்னும் தண்டவாளம் போட்டு வந்து சேரலை.
பாசில், மம்முட்டி - அண்ணை ரைட்
நல்லா இருக்கு லோஷன். ஒவ்வொரு ஞாயிறும் மசாலா... கண்டிப்பாக ஒரு மார்ஷாவுடன் தாங்க.

Bavan said...

பாரதி - ம்ம்.. பலருக்கு ஞாபகமில்லைத்தான். எனக்கு நல்ல ஞாபகம் முதலாமாண்டுப் குழந்தைகளுக்கு பேச்சு எழுதிக் கொடுத்திருக்கிறேன்..ஹிஹி

சிக்கு புக்கு & ரத்த சரித்திரம் - பார்க்க வேண்டும்..:)

மைனா - பார்க்கவேண்டிய அருமையானபடம்..:)

விருத்தகிரி - சாவுற நாள் தெரிஞ்சிடிச்சின்னா வாழுற நாள் நரகமாயிரும்..:P 100ஆண்டுத் திட்டத்தில் போடப்பட்டுள்ளது..:P

ரஜனி - தலைவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..:)

Shafna said...

பதிவு நல்லாத்தான் இருக்கு,ஆனா சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் பற்றி ஒரு வரியில் அதுவும் கடைசியில் சொல்லியிருப்பது சுத்தமா பிடிக்கல்ல...கமல் என்டால் தனிப்பதிவு,ரஜினி என்டால் கடைசி வரியா? நா உங்களோட கா...

யோ வொய்ஸ் (யோகா) said...

மசாலா பதிவு நல்லாயிருக்கு லோஷன்

shabi said...

வருஷம் 16 நேற்று ஜெயா டிவியில் பகல் ஒளிபரப்பானது.கடமைக்கு செல்லுமுன் விளம்பரத் தொல்லைகளோடு ரகுவரன் வரும் காட்சிவரை பார்த்துவிட்டுத் தான் போனேன்.////INTHA PADATHIL RAGUVARAN NADICHURUKKARA

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..

View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner