October 25, 2010

ஏமாளிகள் நாங்களா?

நேற்றைய நாளில் இரவு கொஞ்சம் தாமதமாகத் தான் இணையம் மேய நேரம் கிடைத்தது.
இரண்டு விளையாட்டு செய்திகள் மனத்தைக் கொஞ்சம் சலனப்படுத்தி இருந்தன.

அண்மைக்காலத்தில் மிக ரசித்த இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் கிரிக்கெட் சூதாட்டக்காரர் ஒருவருடன் நெருங்கிய தொடரோபுடைய பெண் ஒருத்திக்கும் இடையில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் உறவு பற்றிய செய்தி.

பொது நலவாயப் போட்டிகளில் இலங்கைக்குக் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கம் வென்று தந்த மஞ்சு வன்னியாராச்சி ஊக்க மருந்து உட்கொண்டதாக வெளியான தகவல்.

இவற்றுள் ரெய்னா பற்றிய செய்தி தந்த தாக்கம் அதிகம்.
ரெய்னா இந்திய அணியில் இணைந்துகொண்ட காலம் முதலே ஒரு திறமையான,தேவையற்ற சர்ச்சையில் சிக்காத,துடிப்பான வீரர் என்று எனக்கு மிகப்பிடித்திருந்தது.
எதிர்கால இந்தியாவின் தலைவர் என்று மனசுக்குள் நினைத்து வைத்திருந்தேன்.

ஆனால் வயசுக் கோளாறு போல இருக்கு.

அகப்பட்டுள்ள ஹோட்டல் உள்ளக வீடியோ கமெராவின் பதிவுகளில் சுரேஷ் ரெய்னாவோடு தொடர்ச்சியாக திரிகிற/காணப்படுகிற/பழகிற அழகிய இளம் பெண், ஒரு பிரபல கிரிக்கெட் சூதாடியின் நெருங்கிய சகபாடி எனக் கூறப்படுகிறது.

சரி தெரியாமல் தான் அந்தப் பெண்ணுடன் ரெய்னா பழகினார் என்று வைத்தாலும், வீரர்கள் தாங்கும் அறைக்கு அடிக்கடி அறியாத பெண்கள் வந்துபோவதை எவ்வளவு தூரம் அணி முகாமைத்துவம் அங்கீகரிக்கிறது?

அடுத்து இந்த விவகாரத்தில் சில கேள்விகள்..

ICCயின் ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு அறிவிக்காமல் ஸ்ரீலங்கா கிரிக்கெட் முதலில் இந்த வீடியோப் பதிவை இந்தியாவின் BCCIக்கு அனுப்பியுள்ளது ஏன்?
அடுத்து BCCIஇன் செயலாளர் ஸ்ரீனிவாசன் (இவர் தான் ரெய்னா விளையாடும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் உரிமையாளர் என்பதும் முக்கிய விடயம்) இந்த விடயத்தைத் தக்கபடி விசாரிக்காமல்/வெளிப்படுத்தாமல் SLC(ஸ்ரீலங்கா கிரிக்கெட்)இடம் இந்த விடயத்தைப் பெரிது படுத்தாமல் விடுமாறு கூறியது ஏன்?

அதற்குப் பிறகு இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது போல ஒரு அறிக்கை இடமிருந்து..
லண்டன் பத்திரிகையொன்று வெளியிட்ட இந்த செய்து முற்று முழுதாகத் தவறென்றும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அப்படியொரு தகவலைத் தமக்கு அளிக்கவே இல்லையென்றும் ஆனால் ரெய்னாவோடு இருந்த அந்தப் பெண் ரெய்னாவின் முகவர் என்றும் சொல்லியுள்ளது.
அத்துடன் இலங்கை வீரர்கள் சிலருக்கும் அவர் முகவராம்.
ரெய்னாவிடம் சில ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கவே சில இரவுகளில் ரெய்னாவை சந்தித்தாராம்.

இப்படியான வீரர்களின் தனிப்பட்ட முகவர்களால் தான் அண்மைக் காலத்தில் சூதாட்டங்கள் இடம்பெற்றதாக தெரிவித்திருந்ததும் பாகிஸ்தான் வீரர்கள் மூவருடன் சம்பந்தப்பட்ட மசார் என்ற சந்தேக நபரையும் 'முகவர்' என்றே பாகிஸ்தானிய வீரர்கள் கூறியது ஞாபகம் வருகிறது.

பாகிஸ்தான் வீரர்களின் விடயம் வெளிவந்தபோது பரபர செய்திகளை வெளியிட்ட Cricinfo தளம்,
 இது பற்றி ஒரு செய்தி கூட நேற்று தரவில்லை.

BCCIயின் அளவுகடந்த/வரம்பு மீறிய அதிகாரத்துக்கு இன்னொரு நல்ல உதாரணம் தென் ஆபிரிக்காவின் பலம் வாய்ந்த கிரிக்கெட் சபைத் தலைவர் மயோலாவின் சரணாகதி.

இந்தியாவுக்கெதிரான தென் ஆபிரிக்கத் தொடரின்போது UDRSஐப் பயன்படுத்த இந்தியா விரும்பாவிட்டால் தாங்கள் இந்தியாவுடன் ஒத்துப் போவதாகப் பரிதாபமாக சொல்கிறார் மயோலா.
தென் ஆபிரிக்க வீரர்களுக்கு UDRS பயன்படுத்தி தீர்ப்புக்களை செம்மையாகப் பெறும் ஆசை இருந்தாலும் இந்தியா இதை விரும்பாவிட்டால் என்ன செய்வது என்று கேட்கிறார் மயோலா.

ஆனால் ICCஇன் தகவலின் படி, போட்டிகளை நடத்தும் நாடு இது பற்றிய முடிவை எடுக்கலாம் என்று சொல்கிறது. ஆனால் சுற்றுலா வரும் நாட்டுடன் கலந்துபேசி முடிவெடுப்பதே கனவான் ஆட்டத்தின் கண்ணியம் என்பதால் இலங்கை போலவே தென் ஆபிரிக்காவும் கப் சிப்.

எதிர்பாராத ஒருவர் பற்றிய பரபர வந்து ஓய்வதற்கிடையில் பந்தயக்காரர்கள்,சூதாட்ட சர்ச்சைகளையும் அணி முரண்பாடுகளையும் தத்தெடுத்த நாட்டிலிருந்து மீண்டும் ஒரு புயல்.

பழைய குப்பைகளைக் கிளறி மீண்டும் புதிய நாற்றத்தை அனுப்புகிறார்கள்.

பாகிஸ்தானிய கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் டாக்கிர் சியா மீண்டும் சந்தேகத்துக்குரிய சிட்னி டெஸ்ட் போட்டி பற்றிய விவகாரத்தைக் கிளறி இருக்கிறார்.
அந்தப் போட்டி முடிவை மாற்ற/மாற்றியதில் ஆறு பாகிஸ்தானிய வீரர்களை சந்தேகிப்பதாக அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்குக் கடிதம் அனுப்பியதாக இப்போது சொல்கிறார் இவர்.

அத்துடன் 2002 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அப்போது குற்றம் சாட்டுக் களங்கப்பட்டிருந்த  ஒரு பிரபல வீரரை அணியில் எடுக்குமாறு தனக்குப் பலவிதமான அழுத்தங்கள் தரப்பட்டதாகவும் இப்போது மனம் திறந்திருக்கிறார் இவர்.

தாகிர் சியா சொல்லி இருக்கும் அந்த முன்னாள் பிரபல வீரர் பாகிஸ்தானின் முன்னாள் தலைவர் சலீம் மலிக்கைப் பற்றித் தான் என்று சின்னக் குழந்தைக்கும் கூடத் தெரியுமே.

பத்து ஆண்டுகளாகத் தடைக்கு உள்ளாகி இருக்கும் சலீம் மலிக்கும் இன்று தன பங்குக்கு பொங்கி வெடித்துள்ளார்.
தன்னைக் குற்றவாளியெனத் தீர்ப்பளித்து கிரிக்கெட்டிலிருந்து ஆயுட்காலத் தடை விதித்தபோது சந்தேகத்துக்குரியவர்களாகக் கருதப்பட்ட பலர் தப்பித்திருப்பதாகவும் தான் மட்டுமே பலிக்கடா ஆக்கப்பட்டதாகவும் குமுறியுள்ளார் மலிக்.

அவர் மூவரைப் பெயரிட்டுள்ளார்..
பாகிஸ்தானின் தற்போதைய பயிற்றுவிப்பாளர் வக்கார் யூனுஸ், இங்கிலாந்தின் சுழல் பந்து வீச்சுப் பயிற்றுவிப்பாளராக இருக்கும் முஷ்டாக் அஹமத், தற்போது உள்ளூர் நடுவராக இருக்கும் அகரம் ரேசா ஆகியோரைப் பார்க்கையில் தனக்குக் கோபம் வருவதாக சொல்கிறார் மலிக்.

உண்மையில் அந்தக் காலகட்டத்தில் சலீம் மாலிக்கின் தலைமையில் பாகிஸ்தானின் பல வீரர்கள் சந்தேகிக்கப்பட்டார்கள். அடா உர் ரஹ்மான் ஆயுட்காலத் தடைக்குள்ளானார்.
ஆனால் பெரிய தலைகள் தப்பிக் கொண்டன என்று பேசப்பட்டன.
இவர்கள் மட்டுமில்லாமல், வசீம் அக்ரம்,ரஷீத் லடிப்,மொயின் கான்,அகீப் ஜாவேத் இன்னும் பலரின் தலைகளும் உருண்டன.

ஆனால் அந்த விசாரணைகளும் பாகிஸ்தானில் இப்போது நடப்பது போல என்ன நடந்தது என்று தெரியாமலே மறக்கப்பட்டு விட்டன.

இந்திய அணி வீரர்களின் ஒற்றுமையோ என்னவோ அசாருதீன் விவகாரத்தில் வேறு யாரின் பெயர்களும் பெரிதாக வெளியே வரவில்லை..
(ஜடேஜா மட்டுமில்லாமல், நயன் மோங்கியா,மனோஜ் பிரபாகர் மீதும் சந்தேகம் இருந்தபோதும்)

அர்ஜுன ரணதுங்க காலத்தில் இலங்கை அணியும் சில போட்டிகளை வேண்டுமென்றே விட்டுக் கொடுத்தது என்று பேச்சு இருந்தது. அர்ஜுன=அரவிந்த இணைந்து அணியைக் கொண்டு சென்றதால் இருவர் மீதும் சந்தேகம் இருந்தாலும் இங்கும் இறுக்கமாக இருந்த அணி ஒற்றுமை தான் விஷயங்களை வெளிவிடாமல் செய்ததோ????

ஆனால் பாகிஸ்தானுக்குள்ளே இருக்கும் உள்ளகக் குளறுபடிகளும் ஒருவரை ஒருவர் காலை வாரிவிடும் குணமும் இன்னும் பல விஷயங்களை வெளியே கொண்டுவரும் என்று எண்ணத் தோன்றுகிறது.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாம் எல்லோரும் நல்லவர்களே என்று நம்பியிருக்க வேண்டியது தான்..

இந்தக் காலகட்டத்தில் கிரிக்கெட்டிலும் எல்லோரையும் சந்தேகத்துடனேயே நோக்க வேண்டி இருக்கிறதே..


இன்னும் எத்தனை இடிகளைத் தாங்கிக்கொள்ள கிரிக்கெட் தயாராக வேண்டுமோ?

43 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

எங்கே செல்லும் இந்த பாதை?

கிரிக்கட் செய்திகள் கேட்டு சேது வாக மாறிவிட்டேன்

நிரூஜா said...

காலை முகப்புத்தகத்தில் நிகழ்ந்த சம்பாசனையின் தொடர்ச்சியோ...!

Unknown said...

நம்ப முடிய வில்லை..

கன்கொன் || Kangon said...

சந்தேகத்தின் பலனை இருவருக்கும் வழங்கிவிட்டுப் போக நினைக்கிறேன்.

என்றாலும் வர்த்தக மயப்பட்டுவிட்ட விளையாட்டுக்களில் இனி இப்படியான செய்திகளை தாங்கிக் கொள்ளப் பழகவேண்டும் என்று நினைக்கிறேன்.

// அடுத்து இந்த விவகாரத்தில் சில கேள்விகள்.. //

இந்தக் கேள்விகளுக்குரிய விடைகள் உங்களுக்கே தெரியும் என்று நம்புகிறேன்.
இலங்கைக் கிறிக்கற் சபைக்கு முதுகெலும்புகள் சில தேவைப்படுகின்றன, ICC இற்குப் பல தேவைப்படுகின்றன.


// பாகிஸ்தான் வீரர்களின் விடயம் வெளிவந்தபோது பரபர செய்திகளை வெளியிட்ட Cricinfo தளம்,
இது பற்றி ஒரு செய்தி கூட நேற்று தரவில்லை. //

:D
இங்கும் ஒரே விடயம்.
நீங்கள் நடுநிலையை எதிர்பார்ப்பது தான் தவறு.
காலகாலமாக நடுநிலை என்பது செத்துக்கொண்டேதான் இருக்கிறது.


// ஆனால் ICCஇன் தகவலின் படி, போட்டிகளை நடத்தும் நாடு இது பற்றிய முடிவை எடுக்கலாம் என்று சொல்கிறது. //

இது பற்றிக் கொஞ்சம் பாருங்கள்.
நான் நினைக்கிறேன்,
இரு அணிகளின் சம்மதமும் முக்கியம், ஆனால் முடிவெடுத்தல் போட்டியை நடத்தும் நாட்டிற்குரியது என்று.
இரு அணிகளின் சம்மதம் இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது என்று நம்புகிறேன்.


பாகிஸ்தான்: என்னைப் பொறுத்தவரை உலகில் அதிகளவு திறமைவாய்ந்த வீரர்களை உருவாக்கும் அணி, ஆனால் மோசமான மனிதர்களையும் உருவாக்கி வருகிறது.
மனிதத்துக்கு முன்னால் திறமை எடுபடாது.


// சந்தேகத்துக்குரியவர்களாகக் கருதப்பட்ட பலர் தப்பித்திருப்பதாகவும் தான் மட்டுமே பலிக்கடா ஆக்கப்பட்டதாகவும் குமுறியுள்ளார் மலிக். //

வசீம் அக்ரமிற்கு அவரின் திறமை காரணமாக குறைந்த தண்டனை வழங்கியதாக அதை நடாத்திய நீதிபதியே ஒப்புக்கொண்டதும் குறிப்பிடத்தக்கதே.
பாகிஸ்தான் அப்படித்தான்.

ஷஹன்ஷா said...

என்ன செய்ய அண்ணா எங்களை வச்சு காமடி பண்றாங்க......

lalithsmash said...

பிரபுக்களின் விளையாட்டு என்பதை தாண்டி Cricket இப்போது முற்றாக Bookmakersகளின் விளையாட்டாக மாறி வருகிறது. பெரும்பாலான வீரர்களும் Cricket மீதுள்ள காதலன்றி இப்போது Currency மீதுள்ள காதலுக்காகவே விளையாட வருகின்றனர்.

இப்படியே போனால் 2018ல் World Cupஐ தனியே Bookieகள்தான் நடத்துவார்கள் போலிருக்கு.பாவம் ஏமாளி ரசிகர்கள்.

அஜுவத் said...

அண்ணா நாட்டுக்காக விளையாடும் போதே இவ்வளவு என்றால் IPL, Champions league இன் கெதி என்ன?
பாகிஸ்தான் விடயத்தில் ICC,BCCI,பிரபல கிரிக்கற் இணையதளங்கள் நடந்து கொண்ட விதமும் இதுவும் ரொம்ப வித்தியாசமாக உள்ளது; பாகிஸ்தானுக்கொரு நீதி இந்தியாவிற்கொன்றா?
"ஒங்கம்மா அம்மா எங்கம்மா சும்மாவா??????????" ஆமிரை award contest ல இருந்தே அடுத்த நாளே தூக்கிய ICC இப்ப?????????????????

Unknown said...

இந்தியா UDRS ஐ எதிர்ப்பதற்குச் சொல்லும் காரணங்கள் எல்லாம் சப்பைக்கட்டு. பிரச்சினை ஒரு அணிக்கு இரண்டு review@ என்பதே. 11 பேரும் review பண்ணலாம் என்று சொன்னால் உடனே ஒத்துக்கொண்டுவிடுவார்கள். அணிவீரர்களின் ego ஐ மறைக்க இந்தியக் கிரிக்கெட் வாரியம் நடத்தும் நாடகம் இது. UDRS பற்றி எனக்கு வேறு சில மனத்தடைகள் இருக்கின்றன என்பது வேறு கதை

வந்தியத்தேவன் said...

வரவர கிரிக்கெட் பிடிக்காமல் போகின்றது.

K. Sethu | கா. சேது said...

// யோ வொய்ஸ் (யோகா) said...

எங்கே செல்லும் இந்த பாதை?

கிரிக்கட் செய்திகள் கேட்டு சேது வாக மாறிவிட்டேன்//

புரியவில்லையே? எந்த சேது ? நானா ?

கன்கொன் || Kangon said...

// வந்தியத்தேவன் said...

வரவர கிரிக்கெட் பிடிக்காமல் போகின்றது. //

உங்களுக்கு எப்போது பிடித்திருந்தது?

__
போலிப் பின்னூட்டங்களை ஒழிப்போர் சங்கம். ;-)

fowzanalmee said...

அண்மைக்கால விழையாட்டு தகவல்களில் என்னையும் இரண்டு விடயங்கள் பாத்திருந்தன.

1)முரளிதரன் உலக அணியில் இடம் பெராமை.

2)72 வருடங்களின் பின்னர் கிடைத்த தங்க பதக்கம் பறிபோய்விடுமோ என்ற பயம்

anuthinan said...

//ஏமாளிகள் நாங்களா?//

இதனை கேள்விகுறியாக போட்டதை விட உறுதியாக ஏமாளிகள் நாங்கள் என்றே போட்டு இருக்கலாம் அண்ணா!!!

கன்கொன் || Kangon said...

// Anuthinan S said...

//ஏமாளிகள் நாங்களா?//

இதனை கேள்விகுறியாக போட்டதை விட உறுதியாக ஏமாளிகள் நாங்கள் என்றே போட்டு இருக்கலாம் அண்ணா!!! //

Full-toss போடுபவர்களையும் இனிச் சந்தேகிக்க வேண்டியதுதான். ;-)

anuthinan said...

// கன்கொன் || Kangon said...

Full-toss போடுபவர்களையும் இனிச் சந்தேகிக்க வேண்டியதுதான். ;-//

அப்படியானால் களத்தில் இறங்காது இருந்தவர்கள் தொடர்பில் என்ன நினைப்பது???

ARV Loshan said...

யோ வொய்ஸ் (யோகா) said...
எங்கே செல்லும் இந்த பாதை?//

ஏதாவது ஒரு இடத்தில் நிற்கும் வரை ;)



கிரிக்கட் செய்திகள் கேட்டு சேது வாக மாறிவிட்டேன்//

அரிவாளுடன் நம் சேது ஐயா கீழே வெயிட்டிங் ;)

=========================

நிரூஜா said...
காலை முகப்புத்தகத்தில் நிகழ்ந்த சம்பாசனையின் தொடர்ச்சியோ...!//

அப்படியும் சொல்லலாம் :)


===========================

மைந்தன் சிவா said...
நம்ப முடிய வில்லை..//

எனக்கும் தான் :(

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...
சந்தேகத்தின் பலனை இருவருக்கும் வழங்கிவிட்டுப் போக நினைக்கிறேன்.//

ம்ம்.. அதே.. ஆனால் மஞ்சுவுக்கு இன்னும் இரு வாரங்கள் அவகாசம் :(



என்றாலும் வர்த்தக மயப்பட்டுவிட்ட விளையாட்டுக்களில் இனி இப்படியான செய்திகளை தாங்கிக் கொள்ளப் பழகவேண்டும் என்று நினைக்கிறேன்.//

ஆம் என்று வருத்தத்துடன் சொல்ல வேண்டியுள்ளது.



// அடுத்து இந்த விவகாரத்தில் சில கேள்விகள்.. //

இந்தக் கேள்விகளுக்குரிய விடைகள் உங்களுக்கே தெரியும் என்று நம்புகிறேன்.//

ஆனால் கேள்விகளாக எழுப்பியது மற்றவர்களும் யோசிக்கட்டும் என்று :)


இலங்கைக் கிறிக்கற் சபைக்கு முதுகெலும்புகள் சில தேவைப்படுகின்றன, ICC இற்குப் பல தேவைப்படுகின்றன.//

முதுகெலும்புகள் மட்டுமா? மூளையும் கூட.




// ஆனால் ICCஇன் தகவலின் படி, போட்டிகளை நடத்தும் நாடு இது பற்றிய முடிவை எடுக்கலாம் என்று சொல்கிறது. //

இது பற்றிக் கொஞ்சம் பாருங்கள்.
நான் நினைக்கிறேன்,
இரு அணிகளின் சம்மதமும் முக்கியம், ஆனால் முடிவெடுத்தல் போட்டியை நடத்தும் நாட்டிற்குரியது என்று.
இரு அணிகளின் சம்மதம் இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது என்று நம்புகிறேன்.//

ம்ம்.. சரி தான்.ஆனால் இந்தியாவை யாராலும் சரிக்கட்ட முடியாமல் இருக்கே..




பாகிஸ்தான்: என்னைப் பொறுத்தவரை உலகில் அதிகளவு திறமைவாய்ந்த வீரர்களை உருவாக்கும் அணி, ஆனால் மோசமான மனிதர்களையும் உருவாக்கி வருகிறது.
மனிதத்துக்கு முன்னால் திறமை எடுபடாது.//

நூறு சதவீதம் சரி.. :(




// சந்தேகத்துக்குரியவர்களாகக் கருதப்பட்ட பலர் தப்பித்திருப்பதாகவும் தான் மட்டுமே பலிக்கடா ஆக்கப்பட்டதாகவும் குமுறியுள்ளார் மலிக். //

வசீம் அக்ரமிற்கு அவரின் திறமை காரணமாக குறைந்த தண்டனை வழங்கியதாக அதை நடாத்திய நீதிபதியே ஒப்புக்கொண்டதும் குறிப்பிடத்தக்கதே.
பாகிஸ்தான் அப்படித்தான்.//

ஆமாம் நானும் வாசித்தேன்.

அவர்களை சாதனையாளர்களாக மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறதே,.

ARV Loshan said...

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...
என்ன செய்ய அண்ணா எங்களை வச்சு காமடி பண்றாங்க......//

ம்ம்ம்ம்..


==============

lalithsmash said...
பிரபுக்களின் விளையாட்டு என்பதை தாண்டி Cricket இப்போது முற்றாக Bookmakersகளின் விளையாட்டாக மாறி வருகிறது. பெரும்பாலான வீரர்களும் Cricket மீதுள்ள காதலன்றி இப்போது Currency மீதுள்ள காதலுக்காகவே விளையாட வருகின்றனர்.//

வேதனையான விஷயம் தான்.



இப்படியே போனால் 2018ல் World Cupஐ தனியே Bookieகள்தான் நடத்துவார்கள் போலிருக்கு.பாவம் ஏமாளி ரசிகர்கள்.//

ஏன் அவ்வளவு பின்னுக்குப் போகிறீர்கள்?

அடுத்த உலகக் கிண்ணம் வருதே அடுத்த வருடம்..

அதுவும் நம் இந்திய உபகண்டத்தில்..

ARV Loshan said...

அஜுவத் said...
அண்ணா நாட்டுக்காக விளையாடும் போதே இவ்வளவு என்றால் IPL, Champions league இன் கெதி என்ன?//

அதானே.. பணம் தானே இங்கே இலக்கே..



பாகிஸ்தான் விடயத்தில் ICC,BCCI,பிரபல கிரிக்கற் இணையதளங்கள் நடந்து கொண்ட விதமும் இதுவும் ரொம்ப வித்தியாசமாக உள்ளது; பாகிஸ்தானுக்கொரு நீதி இந்தியாவிற்கொன்றா?
"ஒங்கம்மா அம்மா எங்கம்மா சும்மாவா??????????" ஆமிரை award contest ல இருந்தே அடுத்த நாளே தூக்கிய ICC இப்ப?????????????????//

ஆனால் ஒன்று சகோ.. பாகிஸ்தானிய வீரர்கள் கையும் காசும் களவுமாக அகப்பட்டுக் கொண்டார்கள்.

ஆதாரங்கள் பலமாக இருந்தன,
ரெய்னா விஷயத்தில் இன்னும் ஆதாரங்கள் பலமாக இல்லையே.. பார்ப்போம்.காலம் விடை சொல்லும்

ARV Loshan said...

கிருத்திகன் said...
இந்தியா UDRS ஐ எதிர்ப்பதற்குச் சொல்லும் காரணங்கள் எல்லாம் சப்பைக்கட்டு. பிரச்சினை ஒரு அணிக்கு இரண்டு review@ என்பதே. 11 பேரும் review பண்ணலாம் என்று சொன்னால் உடனே ஒத்துக்கொண்டுவிடுவார்கள். அணிவீரர்களின் ego ஐ மறைக்க இந்தியக் கிரிக்கெட் வாரியம் நடத்தும் நாடகம் இது. UDRS பற்றி எனக்கு வேறு சில மனத்தடைகள் இருக்கின்றன என்பது வேறு கதை//

கீத் அதை நீங்கள் நேரம் கிடைக்கும்போது எழுத வேண்டும்..

உங்கள் பார்வையில் இந்தியா மீதான விமர்சனம் பார்க்க ஆசை.



==========================

வந்தியத்தேவன் said...
வரவர கிரிக்கெட் பிடிக்காமல் போகின்றது.//

ம்ம்.. வயசு போனால் அப்பிடித் தான்.. ;)

ARV Loshan said...

K. Sethu | கா. சேது said...
// யோ வொய்ஸ் (யோகா) said...

எங்கே செல்லும் இந்த பாதை?

கிரிக்கட் செய்திகள் கேட்டு சேது வாக மாறிவிட்டேன்//

புரியவில்லையே? எந்த சேது ? நானா ?//

நீங்க கா. சேது.. யோ சொன்னது கி(கிறுக்கு) சேது :)


===========================

கன்கொன் || Kangon said...
// வந்தியத்தேவன் said...

வரவர கிரிக்கெட் பிடிக்காமல் போகின்றது. //

உங்களுக்கு எப்போது பிடித்திருந்தது?

__
போலிப் பின்னூட்டங்களை ஒழிப்போர் சங்கம். ;-)//

தலைவர் வாழ்க..

சங்கத்தின் பொருளாளர் :)

ARV Loshan said...

fowzanalmee said...
அண்மைக்கால விழையாட்டு தகவல்களில் என்னையும் இரண்டு விடயங்கள் பாத்திருந்தன.

1)முரளிதரன் உலக அணியில் இடம் பெராமை.//

ம்ம்.. ஆனால் வோர்ன் என்ற (வெள்ளை)மாயையும் முரளியை வேண்டுமென்றே எறிகிறார் என்று ஓரம்கட்ட நடந்த முயற்சியும் தான் இதற்கான காரணம் என நான் நினைக்கிறேன்.



2)72 வருடங்களின் பின்னர் கிடைத்த தங்க பதக்கம் பறிபோய்விடுமோ என்ற பயம்//

போகும் போலத் தான் இருக்கு.
மஞ்சுவோ தான் ஆச்துமாவுக்காகப் பயன்படுத்திய மருந்து தான் சோதனையில் கிடைத்த தவறான முடிவுக்குக் காரணம் என்கிறார்.
உண்மை இரு வாரங்களில் வெளிக்கும்.

ARV Loshan said...

Anuthinan S said...
//ஏமாளிகள் நாங்களா?//

இதனை கேள்விகுறியாக போட்டதை விட உறுதியாக ஏமாளிகள் நாங்கள் என்றே போட்டு இருக்கலாம் அண்ணா!!!//

என்ன இருந்தாலும் ஏமாளி என்று பகிரங்கமாக ஒத்துக் கொள்ள மனம் வெட்கப்படுகிறது அப்பனே :)

ARV Loshan said...

கங்கோன், அனுத்தினன் -

எனக்கென்றால் பரஸ்பரம் நீங்கள் எழுப்பும் சந்தேகங்களைப் பார்த்தால் உடனே நான் பொறுப்பான ஒருவன் என்ற அடிப்படையில் ICC anti Corruption Unitக்கு அறிவிக்க வேண்டி வரும்போல..
உங்கள் இருவரிலும் இப்போது சந்தேகப் பார்வை இருக்கிறது...

ஏற்கெனவே ஓலை சுவடியிலும் உங்களைப் பற்றி கிசு கிசு வந்திருக்கு.. பார்க்கிறேன் ;)

கன்கொன் || Kangon said...

// ம்ம்.. ஆனால் வோர்ன் என்ற (வெள்ளை)மாயையும் முரளியை வேண்டுமென்றே எறிகிறார் என்று ஓரம்கட்ட நடந்த முயற்சியும் தான் இதற்கான காரணம் என நான் நினைக்கிறேன். //

இதுபற்றி பதிவே எழுதலாம் என்று நினைக்கிறேன்.
ஆனால் இது வெறுமனே கிறிக்கின்போ என்ற ஒரு இணையத்தளத்தின் அந்த இணையத்தளம் உலகத்தின் சிறந்த பதினொருவர் என்று தங்கள் சார்பாகத் தெரிந்தது தான்.
கிறிக்கின்போவின் நேர்மைத்தன்மை குறித்து நாமறிவோம்.

ஆனால் இதில் மேலைத்தேய ஆதரவு என்பதைத்தாண்டி வோர்ண் இற்கு கிடைத்த ஆதரவு யோசிக்க வைக்கிறது.
கிறிக்கின்போவின் தகவலின்படி போட்டிகளின்றித் தெரிவு செய்யப்பட்ட மூவரில் வோர்ண் உம் ஒருவர்.
அதாவது வோர்ண் இற்கு போட்டி இருக்கவில்லை.
அதாவது முரளியை வோர்ண் ஓடு ஒப்பிடமுடியாது (ஒருவகையில் ஒப்பிடமுடியாதுதான். ஆனால் இது தலைகீழாக) என்கிறார்கள்.

தெரிவுக்குழுவில் இருந்தவர்கள்,
இன்திகாப் அலாம் -பாக்.
அலி பச்சர் - தெ.ஆ
இயன் சப்பல் - அவு
டேவிட் ப்ரித் - இங். (அவு. இல் வாழ்ந்தவர்)
ரொனி கிரேக் - இங்.
ராமச்சரந்திரா குகா - இந்.
க்ளைவ் லொயிட் - மே.இ
டுலீப் மென்டிஸ் - இல.
பீற்றர் ரெட்பக் - இங்.
அஜித் வடேகர் - இந்.
ஜோன் ரைட் - நியூ.

ஆக,
போட்டியற்ற தெரிவு என்பதிலிருந்து மேலிருக்கும் சிலரின் முகம் வெளிப்படுகிறதே?
unanimously picked என்று வோர்ண் வருமளவிற்கு இங்கே முரளி எதிர்ப்பு இருந்திருக்கிறதே?
கடும்போட்டியின் பின்னர் வோர்ண் தெரிவானார் என்பது வேறு விடயம், அவர்களின் தெரிவு முறை அப்படி என்று தேற்றிக்கொள்ளலாம், ஆனால் போட்டியற்ற தெரிவு?????

கிறிக்கின்போவிற்கு மாற்றுத்தளம் தேவைப்படுவதற்கான இன்னொரு காரணம். :-(

ம.தி.சுதா said...

:))

Unknown said...

அன்பிற்கினிய நண்பரே...,

/ /...அண்மைக்காலத்தில் மிக ரசித்த இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் கிரிக்கெட் சூதாட்டக்காரர் ஒருவருடன் நெருங்கிய தொடரோபுடைய பெண் ஒருத்திக்கும் இடையில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் உறவு பற்றிய செய்தி..../ /

ரெய்னா தவறு செய்திருந்தால்...

கண்டிப்பாக ஆயுட்கால தண்டனை கிடைக்க வேண்டும். 110 கோடி மக்களில் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்கள் பலர்.
ஆனால் மூடி மறக்கத்தான் முயலுவார்களே தவிர வேறொன்றும் நடக்காது.

/ /...ஏமாளிகள் நாங்களா?.../ /

இனி ஏன் இந்த சந்தேகம்? இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...,
அன்புடன்.ச.ரமேஷ்.

Rajasurian said...

//ரெய்னா தவறு செய்திருந்தால்...

கண்டிப்பாக ஆயுட்கால தண்டனை கிடைக்க வேண்டும். 110 கோடி மக்களில் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்கள் பலர்.
ஆனால் மூடி மறக்கத்தான் முயலுவார்களே தவிர வேறொன்றும் நடக்காது//

ஏன் கருத்தும் இதேதான் :(

Unknown said...

எழுதிட்டம்ல..
http://www.facebook.com/note.php?created&&note_id=447719159890

Unknown said...

///ஆனால் இதில் மேலைத்தேய ஆதரவு என்பதைத்தாண்டி வோர்ண் இற்கு கிடைத்த ஆதரவு யோசிக்க வைக்கிறது.///
சிம்பிள் கோபி... பிஷன் சிங் பேடி எவ்வளவோ நல்லவர், இவர்களோடு ஒப்பிடும்போது. முரளியை நேருக்கு நேர் சாடுகிறார், இவர்கள் முகத்துக்குப் பின் புகழ்ந்துவிட்டு முதுகின் பின் உமிழ்ந்திருக்கிறார்கள். நிச்சயமாக முரளியின் Action பற்றிய சர்ச்சையை வைத்து, இனவெறிக்கூத்தாடிகள் விளையாடியிருக்கிறார்கள் என்பதே உண்மை. Warne deserves to be in the team, ஆனால் முரளியை விட இரண்டுமடங்கு புள்ளிகளோடு???? cricinfo க்கு நடுவிரல்

கன்கொன் || Kangon said...

// ஆனால் முரளியை விட இரண்டுமடங்கு புள்ளிகளோடு???? //

இதுதான் என் பிரச்சினை.

// cricinfo க்கு நடுவிரல் //

உண்மையாக அதே தான். :-/

நிரூஜா said...

//உண்மையாக அதே தான். :-/

எது உண்மை...! நடுவிரலா?

கன்கொன் || Kangon said...

// எது உண்மை...! நடுவிரலா? //

ஓம்.
கிறிக்கின்போக்கு ஒரு நடுவிரல்.

Anonymous said...

Hey, I can't view your site properly within Opera, I actually hope you look into fixing this.

Anonymous said...

cicinfo - commentry களை மேற்கோள் காட்டி பல தீர்ப்புகளை நியாயப்படுத்தி காட்டியுள்ளார் இந்த கண்கொண். இன்று இலங்கை வீரர்கள் யாரும் தேர்வாகவில்லை என்றவுடன் அவர்களின் நேர்மையை சந்தேகப்படுகிறார். இந்திய கிரிகெட் போர்டை நினைத்து உங்களின் வயிறுகள் எறிவது , வரும் புகையிளிருந்தே தெரிகிறது.

கன்கொன் || Kangon said...

// cicinfo - commentry களை மேற்கோள் காட்டி பல தீர்ப்புகளை நியாயப்படுத்தி காட்டியுள்ளார் இந்த கண்கொண்.//

தலீவா....
http://loshan-loshan.blogspot.com/2010/10/blog-post_05.html#comment-4306901151045413690
இதற்குப் போய் வாசிக்கவும்.

{{ கன்கொன் || Kangon

// who is thi kankon, pointing cricinfo commentary. //

Yes, you know, when Cricinfo says the ball is hitting the leg stump to a Indian batsman, then it's got to be plumb. }}

bold ஆக்கப்பட்ட பகுதியைச் சொன்னது நான்.


// இன்று இலங்கை வீரர்கள் யாரும் தேர்வாகவில்லை என்றவுடன் அவர்களின் நேர்மையை சந்தேகப்படுகிறார். //

தலீவா,
நானென்ன அன்ஜலோ மத்தியூஸ் தெரிவாகவில்லை என்றா கவலைப்பட்டேன்?
அதிக ரெஸ்ற், ஒருநாள் விக்கற்றுகளை கைப்பற்றியிருக்கும், அதிக 10 விக்கற் பெறுதிகளை, அதிக 5 விக்கற் பெறுதிகளைக் கொண்டிருக்கும், தசாப்தங்களாக இலங்கையின் வெற்றிகளின் பெரும்பங்கை வகித்த ஒருவர் படுமோசமாகத் தோற்றார் என்பதற்காகத்தான் சொன்னேன்.


// இந்திய கிரிகெட் போர்டை நினைத்து உங்களின் வயிறுகள் எறிவது , வரும் புகையிளிருந்தே தெரிகிறது. //

என் வயிறு எப்போதும் வயிற்றுப் பகுதியில் தான் இருக்கிறது.
இந்திய கிறிக்கற் சபைக்கும் இதற்கும் என்னய்யா சம்பந்தம்?
கொஞ்சமாவது சொந்தப் புத்தி, யோசிக்கும் திறன் கிடையாதா?

உங்களைப் போன்றவர்களிற்காகத்தான் நான் கிறிக்கின்போ பேஸ்புக் தளத்தில் ஒரு கருத்து இட்டேன்.

{{ Oh dear... Where is VVS, Dravid, Harbhajan Singh, Srinath, G.Vishwanath, Ojha, Dhoni and Tiwary in this list? Bradman is better than Tiwary? Are you kidding? }}

நீங்க்ள இந்தவகை என்பது தெளிவாகவே தெரிகிறது.

உங்கள் கருத்துக்களில் நம்பிக்கை இருந்தால் உங்கள் முகத்தை மறைத்துக் கொண்டுவரவேண்டிய தேவை உங்களுக்குக் கிடையாது.

வளருங்கள்....!

Anonymous said...

மணிக்கட்டை அளவுக்கு அதிகமாக சுத்தி சுத்தி அதுவும் முரளிக்காகவே தயாரிக்கப்பட்ட இலங்கை ஆடுகளங்களில் அதிக விக்கட்டுகளை எடுத்த முரளிக்கு இரண்டாவது அணியிலாவது இடம் கிடைத்ததை நினைத்து சந்தோசப்படுங்கள்.

UTHAYAN said...

ஏய் பேய்மானிப் பெயரிலி..(உங்கள் பதிவில் இப்படியான பிரயோகங்களுக்கு லோஷன் அண்ணா மன்னியுங்கள்)
உன் நாட்டில் மட்டும் விருந்தினருக்காகவா ஆடுகளங்கள் தயாரிக்கிறார்கள்?
முரளி என்பவர் ஒரு legend. பேடியைப் போல உங்களைப்போல (CRICINFO /CRAPINFO உட்பட) நாய்கள் குறைப்பதால் முரளி என்னும் சூரியனுக்குக் களங்கம் இல்லை.

முடிந்தால் எவனாவது முரளியின் சாதனையை உடைக்கட்டும் பார்க்கலாம்.

கன்கொன் || Kangon said...

அன்பான பெயரிலி நண்பருக்கு...

பொதுவான இடத்தில் பெயரை மறைத்துக்கொண்டு என்ன வேண்டுமென்றாலும் சொல்லிவிட்டுப் போகலாம்.
உங்களுக்கு முரளி மீது எதிர்ப்பா இல்லை இலங்கை மீது எதிர்ப்பா தெரியாது.

முரளிதரன் அளவுக்கதிகமாக, விதிகளுக்குப் பறம்பாக எதையும் செய்யவில்லை என்பதை அறிவீர்கள் என்று நம்புகிறேன்.
முரளிதரனுக்கு இருந்த பிரச்சினை அவரது முழங்கைப் பகுதியில் இருந்த ஒரு வளைவும், அவரது தோள்பட்டையில் காணப்பட்ட ஒரு சிறப்பான சுழல்திறனுமே முரளியின் பந்துவீச்சு வித்தியாசமானதாகக் காணப்பட காரணம்.

முரளிக்கு சாதமாக இலங்கை ஆடுகளங்கள் தயாரிக்கப்படுவது என்பது உங்கள் பார்வையைத் தெளிவாக்குகிறது.
இலங்கை போன்ற நாடுகளில் bouncy ஆடுகளங்களைத் தயாரிக்க முடியாது.
அதற்கான முயற்சிகள் இடம்பெற்று அவை பெரிதாக வெற்றிபெறவில்லை.
இங்குள்ள காலநிலைக்கும், மண் அமைப்பிற்கும் துடுப்பாட்டத்திற்கு சாதமான ஆடுகளங்களையே தயாரிக்க முடியும்.
இலங்கையில் ஒருபோதும் ரெஸ்ற் போட்டியின் முதல்நாளிலிருந்தே பந்து அபாயகரமாகத் திரும்பும் ஆடுகளங்கள் தயாரிக்கப்பட்டதில்லை, அப்படித் தயாரிக்குமாறு முரளிதரன் அழுத்தம் கொடுத்ததும் இல்லை.

இலங்கையில் முரளிதரன் தவிர, ஷேன் வோண், டானியல் விற்றோரி ஆகிய சுழற்பந்துவீச்சாளர்கள் தங்களது வழமையான பெறுபேறுகளை விட சிறப்பான திறமை வெளிப்பாடுகளை இங்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

முரளிதரன் வெளிநாடுகளில் (Away matches) 60 போட்டிகளில் 307 விக்கற்றுகளைக் கைப்பற்றியிருக்கிறார்.
விக்கற் கைப்பற்றும் வீதம் 61.8.
இது பொதுவாக ஏனைய சுழற்பந்துவீச்சாளர்களை விட சிறப்பானதாகும்.

கருத்துப் பரிமாற்றங்களில் கவனமான வார்த்தைப் பிரயோகங்கள் அவசியமானது.

நண்பர் உதயனுக்கு,
பிழையான கருத்துக்கள் என்று நீங்கள் நம்புவதற்கு பிழையான வழியில் பதிலளிப்பது அவ்வளவு சரியாக இருக்காது.

அந்தப் பின்னூட்டத்திற்கு முதலில் பதிலளிக்க வேண்டாமென்று எண்ணியிருந்தேன், ஆனால் உங்களின் கடுஞ்சொற் பிரயோகப் பின்னூட்டத்தின் காரணமாக பதிலளிக்க வேண்டி ஏற்பட்டது.

We hate some persons because we do not know them; and will not know them because we hate them. ~Charles Caleb Colton

ம.தி.சுதா said...

முரளி ஒரு துருவ நட்சத்திரம்... யார் கல்லெறிந்தாலும் அவருக்குப் படப் போவதில்லை... எவர் எப்படிச் சொன்னாலும் பாலைவனத்தில் நிற்கும் ஒருவனுக்கு அந்த நட்சத்திரம் பாதை காட்டியாய் தான் இருக்கும்... ஆனால் தப்பி வந்தவன் தனக்கு உதவியதை சொல்வானோ தெரியாது...

கன்கொன் || Kangon said...

சன்ஜய் மஞ்ரேக்கர் -
{{ v.much in keepng with general indian media spirit i guess.1news channel had as breaking news- bipasha basu says" iam single" }}
இது அவரது ஒரு ருவீற்.
இந்திய ஊடகங்கள் பிழையானவை என்கிறார்.
ஆனால் இவரும் அதே இடத்தில் உள்ளவர் தான்.

இவரின் நடுநிலைதன்மை...
pretty good job done on the all time world xi...no real surprises...just feel bad for richard hadlee..does not figure anywhere.


இப்போது அவரின் அடுத்த ருவீற்:

hussey to skip last odi to play fr his state.if 50 ovrs crckt had emotions.wud hv felt humiliated & hurt.. way its been treated these days.

ஆனால்,
அதே ODI தொடரை ரெண்டுல்கர் புறக்கணித்துவிட்டு அதற்குப்பிறகான CLT20 இல் விளையாடிபோது இந்தக் கனவான் எங்கே போனார்?
ரெண்டுல்கருக்கு எதிராக எதுவும் இல்லை, ஆனால் ஊடகங்கள் என்று சொல்லிக்கொள்வர்களில் பெரும்பாலானோரின் இன்றைய நிலைமை இதுதான்.
(நீங்களும் ஊடகத்தைச் சேர்ந்தவர் என்றாலும் செய்திகளைப் பிரதானமாகக் கொண்ட ஊடகங்களையே நான் சொல்கிறேன்.)


ஹர்ஷா போக்லே....
the cricinfo all time eleven is out.wasn't in the jury but had picked my team too. only got one wrong.had gavaskar instead of hutton

நாங்கள் தான் முட்டாள்களோ? :-o

Anonymous said...

//பாகிஸ்தான்: என்னைப் பொறுத்தவரை உலகில் அதிகளவு திறமைவாய்ந்த வீரர்களை உருவாக்கும் அணி, ஆனால் மோசமான மனிதர்களையும் உருவாக்கி வருகிறது.
மனிதத்துக்கு முன்னால் திறமை எடுபடாது.//

நூறு சதவீதம் சரி.. :(//

அஆங்........ ஜிங்ச்சா

A Simple Man said...

This was All Time-XI
Gavaskar, Greenidge,Sachin,Bradman,Kallis,Imran Khan,Gilchrist,Murali,Wasim Akram,McGrath,Kumble.

Can everybofy post their team?
-ASM

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner