December 31, 2009

2009இன் ஹீரோ A.R.ரஹ்மான்!நேற்று எனது காலை நேர நிகழ்ச்சி விடியலில் (www.vettri.lk)இந்த 2009ம் ஆண்டு விடைபெறுவதை முன்னிட்டு நேயர்களுக்கான தலைப்பாக

2009ம் ஆண்டின் பிரபலம் (ஹீரோ / ஹீரோயின்) யார்?

என்பதை வழங்கியிருந்தேன்.

உலகளாவிய ரீதியல் யாரை வேண்டுமானாலும் குறிப்பிடலாம்; சர்ச்சைகளாலென்றாலும் பரவாயில்லை, சாதனைகளாலென்றாலும் சரி – குறிப்பிடும் அந்த நபர் இந்த ஆண்டில் அதிகம் அறியப்பட்டவராகவும், ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டவராகவும் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

தொலைபேசி, sms, மின்னஞ்சல் வழியாக மட்டுமல்லாமல், இந்தத் தலைப்பை நான் ட்விட்டர், Facebook வழியாக நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டபோது ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

நாட்டின் சூழ்நிலை அறிந்தும் கூட ஏராளமானோர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரையும் குறிப்பிட்டிருந்தனர்.

ஆரம்பத்தில் ஒரு சிலரின் பெயர்களை இவர் பெயரைச் சொன்னார்கள் என்று சொன்னாலும் பின்னர் எல்லோர் நன்மை கருதியும் அவரைப் போட்டியிலிருந்து விலக்கிக்கொண்டேன்.

முதல் இரண்டு இடங்களுக்குள் கடுமையான போட்டி நிலவியது. நூற்றுக்கு மேற்பட்ட, பலதுறைகளையும் சேர்ந்தவர்கள் எமது நேயர்களால் குறிப்பிடப்பட்டார்கள்.

2009இன் பிரபலம் யார்?

இசைப்புயல் A.R.ரஹ்மான் : 148
இலங்கைக்கிரிக்கெட் வீரர் T.M.டில்ஷான் : 136
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா : 90

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 56
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 56

சச்சின் டெண்டுல்கர் : 52
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் M.S. தோனி : 48
மறைந்த பொப் இசை சக்கரவர்த்தி மைக்கேல் ஜக்சன் : 38
நடிகர்களான சூர்யா மற்றும் விஜய் : 22

ஒஸ்கார் விருது, நோபல் பரிசு, கிரிக்கெட் சாதனைகள், இலங்கையில் யுத்தம் முடிவு, இலங்கை ஜனாதிபதித் தேர்தல், மைக்கேல் ஜக்சன் மரணம், கமலின் பொன்விழா, டைகர் வூட்ஸ் காதல்கள், வேட்டைக்காரன், ஆதவன் என்று பல்வேறு காரணிகளும் இந்த வாக்களிப்பில் செல்வாக்கு செலுத்தியிருந்தன.தொடர்ந்து டைகர் வூட்ஸ், வீரேந்தர் சேவாக், ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், கமல்ஹாசன், அஜீத்குமார், முத்தையா முரளீதரன், ரிக்கி பொன்டிங், குமார் சங்கக்கார, இயக்குனர் சீமான், கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டன.

ஆனால் இவர்களைவிடவும் முதல் பத்து இடங்களிலுள்ளவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு எனது பெயரையும் வாக்களித்த அன்புள்ளங்களுக்கு நன்றிகள். (வெற்றி, விடியல், சாகித்திய விருது, டயலொக் என்று காரணங்கள்)

உங்களது அன்பே பெரிய விருதுகள் என்பதனாலும் தேர்தலின் ஆணையாளர் நானே என்பதாலும் போட்டியில் என்னை இணைக்கவில்லை.


இன்னும் ஒவ்வொரு, இவ்விரு வாக்குகள் பெற்றவர்கள்... இவர்களில் பலபேரை நேயர்கள் குறிப்பிட்டபோது எனக்கு ஆச்சரியமேற்பட்டது.

தீக்குளித்த நா.முத்துக்குமார்
இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல்
லாகூர் தாக்குதல் சம்பவத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்களைக் காப்பாற்றிய பாகிஸ்தான் பேருந்து சாரதி
கௌதம் கம்பீர்
மறைந்த கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பேர்ட்
சனத் ஜெயசூரிய
பாகிஸ்தான் இளம் பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர்
வெற்றி அறிவிப்பாளர் சந்துரு
டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்
ராகுல் காந்தி
பாடகர் பென்னி தயாள்
நடிகர் நகுல்
அன்ட்ரூ ஸ்ட்ரோஸ்
நடிகை நயன்தாரா
இசையமைப்பாளர் விஜய் அன்டனி
நம்ம ஹீரோ கஞ்சிபாய்
சோனியா காந்தி
ஏஞ்சலோ மத்தியூஸ்
யூனிஸ் கான்
டென்னிஸ் வீராங்கனை கிம் கிளைஸ்ஜர்ஸ்
நடிகர் ஜெயம் ரவி
பேப்பர் தம்பி
G.V.பிரகாஷ் குமார்
நமீதா
ஸ்ருதிஹாசன்
விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்)

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இருவருக்கும் சக அளவில் வாக்குகள் கிடைத்தது அதிசயம்! இது ஏதாவது விஷயம் சொல்கிறதா என 'விஷயம்' அறிந்தவர்கள் தான் சொல்ல வேண்டும்!

அழிவுகள், அனர்த்தங்கள், அமைதி, அகதிவாழ்வு, புதிய மாற்றங்கள், பொருளாதார சரிவு, புதிய பயணம் என்று பலரது பத்தும் தந்து 2009 விடைபெற நாளை 2010 பிறக்கிறது.

அன்பு நண்பர்கள், சக வலைப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் பிறக்கும் 2010க்கான இனிய வாழ்த்துக்கள்!

வரும் வருடம் நிம்மதியும் - நெஞ்சுக்கு ஆறுதலையும் நேர்மையான திடத்தையும் தரட்டும்!

28 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

ஆகவே 2009ல் ஹீரோ நம்ம ஆள் ரகுமான் தான். காரணம் தன்னடக்கத்துக்கு கிடைத்த வெற்றி

”எல்லா புகழும் ஒருவனே ஒருவனுக்கே”

balavasakan said...

2009ன் ஹீரோ... நம்ம ஏ..ஆர் ரகுமான் ரொம்ப சந்தோசம் அண்ணா..

உங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

S.M.S.ரமேஷ் said...

//2009ம் ஆண்டின் பிரபலம் (ஹீரோ / ஹீரோயின்) யார்?//
வடுக்களை மனதில் விதைத்து!
விடைபெறும் 2009 ஐ பார்த்தால் ரகுமான் தான் எனது முதல் தெரிவு,
hossanna BBC இல் செய்தியாமே?

//அன்பு நண்பர்கள், சக வலைப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் பிறக்கும் 2010க்கான இனிய வாழ்த்துக்கள்!//


உங்களிற்கும் உரித்தாகட்டும்,

தடைகளை தகர்த்து(தவிர்த்து) தமிழினம் தழைக்க வாழ்த்துவோம்.

தர்ஷன் said...

ஏ. ஆர். ரஹ்மான் நிஜ ஹீரோ தான்.
நம்ம தலைகளுக்கு கிடைத்திருக்கும் வாக்குகளை பார்க்கும் போது ஒன்று தெரிகிறது. போருக்கு ஆதரவான மன நிலை படைத்த நம்மவர்கள் கணிசமான அளவு இருக்கின்றனர் போலும்.
பெரும்பாலும் இது உங்கள் இறுதி பதிவாக இருக்கும் பட்சத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா

Bavan said...

ஏ.ஆர் ரஹ்மான் முதலாவது, இரண்டாவது நம்ம டில்சானா?,

அவரவர் துறைகளில் இருவரும் புயல்கள்தான்..:)

இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா..:)

Vijayakanth said...

AR RAHMAN ku 2009 year award year pola....Varusha kadaisila namma awardum ( 2009 il prabalamanavar ) ippo awarukku kidaichchirukku.....!

Subankan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா

Unknown said...

oh bro how you missed my selection,i voted him for the best ETP(related with kattabomman)

வந்தியத்தேவன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

sathyasaid,
wish you a happy new year.

a.r. rahmanukkum enrum utiththakaddum.

Anonymous said...

sathya sais

wish you a happy new year

siva said...

siva said

wish you a happy new year

siva said...

happynewyear

Admin said...

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...

ILLUMINATI said...

Happy new year friend........
I'm new to the blogging world.Do visit my blog and comment please .
http://illuminati8.blogspot.com/

குடிகாரன் said...

புதுவருட வாழ்த்துக்கள் லோஷன் ..!!!
நம்ம தன்னிகரில்லா தலைவனை வாக்கெடுப்பு நடத்தி தான் தெரிந்து கொள்ளணும் என்று இல்லை தானே

புல்லட் said...

சிலோன் விஜயகாந்தா மாறி வாறியள்.. வாழ்த்துக்கள் இனிய புத்தாண்டுக்கு.. ;-)

Unknown said...

A.R.ரஹ்மான் முதலிடம் பெற்றதில் வியப்பில்லை அண்ணா, ஆனால் டில்ஷானின் வாக்குகள் மலைக்க வைக்கின்றன....

ரஹ்மானை விட வெறும் 12 வாக்குகள் தான் வித்தியாசமா?
டில்ஷானுக்கு பெரிய இரசிகர் பட்டாளமே இருக்கிறது போலிருக்கிறதே....


பதுவருட வாழ்த்துக்கள் அண்ணா....

பனித்துளி சங்கர் said...

உங்களின் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள்

ARV Loshan said...

அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் 2010 வாழ்த்துக்கள்..

நன்றிகள்
யோகா, பாலவாசகன், ரமேஷ் - ஆமாம் ஹோசனா பாடல் பற்றி சிறப்புப் பேட்டி ஒன்று ஒளிபரப்பானது..
தர்ஷன் - போருக்கான ஆதரவான மனநிலை என்பதை விட, அதிகம் செய்திகளில் வந்த பிரபலங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்..

ARV Loshan said...

நன்றிகள் - பவன், விஜயகாந்த், சுபாங்கன்,

ஆமாம் மதன்.. தவற விட்டு விட்டேன்.. நீங்கள் வாக்களித்த கருணா அம்மான்/விநாயகமூர்த்தி முரளீதரனுக்கும் இரு வாக்குகள் கிடைத்தன..
சேர்த்து விட்டேன்..

ARV Loshan said...

நன்றிகள் & வாழ்த்துக்கள்

அத்திரி, வந்தியத்தேவன், சத்யா, சிவா, சந்துரு, ILLUMINATI, குடிகாரனின்(ஏன்னா பெயரையா.. ;))

ARV Loshan said...

புல்லட், புள்ளி விபரம் சொன்னா பில் கேட்ஸ் ஆகலாம் என்று யாரோ படுபாவி சொன்னானே.. பார்த்தா இங்கே எல்லாரும் புள்ளி ராஜா, சிலோன் விஜயகாந்த் ஆக்கிறாங்கள்.. ;)

ARV Loshan said...

கனககோபி,
உண்மை தான்.. இந்த ஒரு வருடத்தில் டில்ஷானுக்கு ஒரு மிகப்பெரிய ரசிக வட்டாரம் ஏற்பட்டுள்ளது.. நிறையவே எதிர்பார்க்கிறார்கள்.. இது ஒரு வகையில் ஆபத்தும் அழுத்தமும் மிக்கது..
நன்றி

ARV Loshan said...

நன்றி சங்கர் :)

Midas said...

”எல்லா புகழும் ஒருவனே ஒருவனுக்கே”

நாங்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், வாற 26 இல்

lojee said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

Sarawanaluxmy said...

Hi Anna, Happy new year..!
In the selection of '2009 in hero- Vettri FM" on 12/31, no body vote for "paper thamby". Im very sad. I tried to call but Unfortunately could not get the line...!

Well done. god blz u.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner