December 04, 2009

உங்கள் செல்பேசிகளிலும் இனி லோஷன்.. - ஒரு விளம்பரம்



இன்று முதல் எனது ஒலிபரப்பு/ஊடக வாழ்க்கையில் இன்னொரு புதிய பரிமாணமும் சேர்ந்துகொள்கிறது.இந்த மகிழ்ச்சியை எனது நண்பர்களான உங்களோடும் பகிர்ந்து கொள்வதில் மேலும் சந்தோசம்.

இலங்கையில் உள்ள மிகப் பிரபலமான செல்பேசி சேவையான டயலொக் (Dialog) மூலமாக ஒவ்வொருநாளும் நாளேடுகளின் தலைப்பு செய்திகளை தொகுத்து வழங்கும் ஒரு சுவாரஸ்யமான செய்திப் பணி இது.

டயலொக்(Dialog) இணைப்பு உள்ளவர்கள் யாரும் இந்த சேவையில் தம்மைப் பதிவு செய்து இந்த செய்தித் தலைப்புக்களை எனது குரலில் கேட்கலாம்.
ஒரு தடவை பதிவு செய்தால் மாதம் முழுவதும் இந்த சேவையைப் பெறலாம்.
மாத சந்தா ஐம்பது ரூபாய்.(+வரிகள்)

காலையில் நான் வாசித்துப் பதிவேற்றும் செய்தித் தலைப்புக்களை அந்த இருபத்துநான்கு மணிநேரத்தின் எந்தவேளையிலும் எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம்.

இது எனக்கு ஒரு சவாலான சுவாரஸ்ய பணி என்பதோடு புதிய தளம்,களம், மேலதிக வருமானம் என்பதால் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

என்ன ஒரே ஒரு பெரும் கஷ்டம் வாரத்தின் ஏழு நாட்களும் அதிகாலையிலேயே தூக்கத்தை தொலைக்க வேண்டியிருக்கும்; (இப்போதும் வாரத்தின் ஆறு நாட்களில் அதிகாலையிலேயே எழுந்துவிடுகிறேன்)
வெளியூர்ப் பிரயாணங்களைக் கொஞ்சம் மட்டுப் படுத்தவேண்டியிருக்கும்.

முதலில் எங்கள் நிறுவனம் கொஞ்சம் தயங்கினாலும் பின்னர் எனது இந்த சேவைக்கு டயலொக் கொடுக்கின்ற விளம்பரம் வெற்றிக்கும் விளம்பரமாக அமையும் என்பதனாலும் இது எனக்கு இன்னொரு வாய்ப்பு என்பதாலும் வாழ்த்துக்களோடு அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று சில பத்திரிகை விளம்பரங்களுக்காக புகைப்படங்கள் எடுத்தார்கள்..

ஆகா எத்தனை எத்தனை போஸ்.. நம்ம முகத்தையும் பார்த்து சகிக்கப் போகிறார்களா மக்கள்?
எனது இந்த புதிய பணிக்குப் பிறகு எத்தனை டயலொக் இணைப்புக்கள் வேறு சேவைகளுக்கு மாறுதோ?

எனினும் இனி ஜனாதிபதி தேர்தலும் வர இருப்பதால் சுவாரஸ்யமான,பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமிருக்காது. முடிந்தவரைக்கும் சந்தாதாரர்களை பெருக்கவும் திருப்திப் படுத்தவும் வித்தியாசமாகவும், நேர்த்தியாகவும், கேட்பதற்கு சுவாரஸ்யமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக மிக சிரத்தையோடு செய்ய ஆரம்பித்துள்ளேன்.

டயலொக் இணைப்புள்ள நீங்களும் இந்த சேவையை செவி மடுக்க 556க்கு அழைப்பு எடுத்து அதில் இலக்கம் 1ஐத் தெரிவு செய்யுங்கள்.

ஒரு தடவை கேட்டுப் பிடித்திருந்தால் (பிடிக்கும்) ஒவ்வொரு மாதமும் பதிவு செய்துகொள்ளலாம்.

ஒரு அரிய வாய்ப்பை வழங்கி புதிய களத்துக்கு என்னை அழைத்துள்ள டயலொக் நிறுவனத்துக்கு நன்றிகள்.



41 comments:

ilangan said...

வழமையாக நான் துயிலெழும் நேரம் 9 ஐ கடப்பதால் என் போன்றவர்களுக்கு இது ரொம்ப பயனளிக்கும் என நம்புகிறேன்.

Unknown said...

நல்லாத் தான் இருக்கும்....

சந்தாதாரர் ஆகுவம் ஆகுவம்...

//ஆகா எத்தனை எத்தனை போஸ்.. நம்ம முகத்தையும் பார்த்து சகிக்கப் போகிறார்களா மக்கள்?//
எடுத்தார்களா? நல்லது நல்லது,...
'டயலொக்' ஓடு உங்கள் லோஷன் என்றா விளம்பரம் வரும்? நீங்கள் நாடியில் கைவைத்தவாறு சிரித்துக் கொண்டு இருப்பீர்களோ? ஹி ஹி...


//எனது இந்த புதிய பணிக்குப் பிறகு எத்தனை டயலொக் இணைப்புக்கள் வேறு சேவைகளுக்கு மாறுதோ? //
உங்கட தன்னடக்கம் பிடிச்சிருக்கு... ஹி ஹி....
சிலவேளை டயலோக் பாவனையும் கூடலாம்.... நல்ல முயற்சி தானே....


உங்கள் புதிய துறையும் வழமையைப் போல உங்களுக்கு 'வெற்றி'யைத் தர வாழ்த்துக்கள் அண்ணா....

அஜுவத் said...

ரொம்ப சந்தோசம் அண்ணா;;; நிச்சயம் கேட்பேன்..... அது சரி வெற்றி TV யில எப்பொழுது உங்களைக் காணலாம்.........

Ananth said...

உங்களை விட பேப்பர் தம்பி நன்றாக பேப்பர் படிப்பார் என்பது அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்.
அல்லது பேப்பர் தம்பி நிகழ்சியை ஒவ்வொருநாளும் (அதே நக்கலுடன் கத்திரிக்காமல்) பதிவு செய்து அதை தரலாமே
அப்படியானால் 50 ரூபா கொடுப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. :P உங்க வெற்றிக்கும் ஒரு விளம்பரமாக ! அமையும்.

பின் குறிப்பு :

வருகிற தேர்தலை பற்றி பேச ஆசை தான். இருப்பினும்..... IP யை கண்டு பிடித்து ஆப்பு வைத்து விடுவார்களோ என்ற பயம் அடியேனுக்கு.. அதனால் மன்னிக்கவும்.

Subankan said...

//இலங்கையில் உள்ள மிகப் பிரபலமான செல்பேசி சேவையான டயலொக் (Dialog) மூலமாக ஒவ்வொருநாளும் நாளேடுகளின் தலைப்பு செய்திகளை தொகுத்து வழங்கும் ஒரு சுவாரஸ்யமான செய்திப் பணி இது.
//

அட!

//டயலொக்(Dialog) இணைப்பு உள்ளவர்கள் யாரும் இந்த சேவையில் தம்மைப் பதிவு செய்து இந்த செய்தித் தலைப்புக்களை எனது குரலில் கேட்கலாம்.
ஒரு தடவை பதிவு செய்தால் மாதம் முழுவதும் இந்த சேவையைப் பெறலாம்//

கலக்கல்!!

//மாத சந்தா ஐம்பது ரூபாய்.(+வரிகள்)
//

நான் எஸ்கேப்

ப்ரியா பக்கங்கள் said...

வாழ்த்துக்கள் லோஷன் .. !!1

Naan Periya Lokka said...

நேற்று சில பத்திரிகை விளம்பரங்களுக்காக புகைப்படங்கள் எடுத்தார்கள்..

ஆகா எத்தனை எத்தனை போஸ்..

Ada..Ithuveeraiyaa?? Thaankamudiyalada saamee!!!

கரன் said...

தங்கள் நட்சத்திர அந்தஸ்துக்கு கிடைத்த இன்னுமொரு வாய்ப்பு.

வாழ்த்துகள் லோஷன்...!

கைத்தொலைபேசியில் குறுந்தகவலைப் பார்த்ததும் 556 க்கு அழைப்பெடுத்து பதிவுசெய்துவிட்டேன்.(50/= சரி)
எல்லாம், லோஷனின் மேலுள்ள நம்பிக்கை.

Loshan said...
//எனது இந்த புதிய பணிக்குப் பிறகு எத்தனை டயலொக் இணைப்புக்கள் வேறு சேவைகளுக்கு மாறுதோ?//

நிச்சயம் Dialog க்கு லாபம் தான்.

ச்சும்மா பட்டயக் கெளப்புங்கள்...

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள் லோஷன், எனக்கு இந்த வாய்ப்பு கிட்டாது காரணம் உங்களை போலவே நானும் ஒரு மொபிடெல் பாவனையாளர்.....

மேலும் வாரநாட்களில் தினமும் காலை 6.30க்கு வெற்றி செய்திகளை உங்கள் குரலில் கேட்டுவிடுவேன்..

சனி ஞாயிறு எனக்கு விடியல் கொஞ்சம் லேட்டாக தான் வரும்..

root said...

Ipa india ila irukan vantha udan pakurean... sory kekuran

Automate aa oavaru nalum varuma ilati nanga than dial pani kekanum...

Valthukal

Unknown said...

அண்ணா உங்களை விட பேப்பர் பம்பி நன்றாக பேப்பர் படிப்பார். இந்த விடயம் டயலொக் நிறுவனததிங்கு தெரியுhது போல் நீங்கள் வழமையாக கேட்பதுதான் வழமை இது என்ன கொடுமை இந்த ரூபா 50 இல் அரைவாசியை பேப்பர் பம்பிற்கு கொடுக்கலாம் என்பது என்னுடைய அவா!


நான் பேப்பபர் பம்பியின் தீவிர ரசிகன்.
நடராசா - பிரேமகுமார்.

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

//ஆகா எத்தனை எத்தனை போஸ்.. நம்ம முகத்தையும் பார்த்து சகிக்கப் போகிறார்களா மக்கள்?//

அண்ணா என்ன ஒரு தன்னடக்கம் இருந்தாலும் கவலை வேண்டாம் எங்கள் பதிவர் வாழ்க என கோஷம் போட பதிவர்கள் குழு தயாராக ஆனாலும் இடையில் பச்சிளம் பாலகர்களுக்குத் தான் காலையில் வேளைக்கே எழுவது கொஞ்சம் கடினமாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமாக

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

நீங்கள் மெம்மேலும் வளர (உங்கள் உயரத்தை சொல்லவில்லை)பதிவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) said...

வாழ்த்துக்கள் அண்ணா ! எனக்கொரு ஆசை இலங்கையில் அதிக வருமானம் பெறும் பிரபல்யங்களின் டாப் டென் வரிசையில் உங்கள் பெயர் இடம்பெறவேனுமேன்பதுதான். அது விரைவில் நடந்துவிடும் போலிருக்கிறது. ``நேற்று சில பத்திரிகை விளம்பரங்களுக்காக புகைப்படங்கள் எடுத்தார்கள்..

ஆகா எத்தனை எத்தனை போஸ்.. என்ன நல்ல ஆசைதானே!!

Unknown said...

லோஷனுக்கு வாழ்த்துக்கள். அதே சமயம் வெற்றி எப்.எம்மின் அலைகள் தமிழகத்தில் இணையத்தில் அல்லாமல் செயற்கைகோள் அல்லது வேறு ஏதேனும் வகையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

வாய்ப்பாடி குமார்.
ஈரோடு மாவட்டம்,தமிழ் நாடு.

தர்ஷன் said...

வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா

சி தயாளன் said...

வாழ்த்துகள்.....!

வந்தியத்தேவன் said...

வாழ்த்துக்கள் நண்பா!!!

உங்கள் பிரத்தியேக படங்களை நினைக்கத் தான் பயமாக இருக்கின்றது :-)

Midas said...

வாழ்த்துக்கள், ஒரு சில பத்திரிகைகளை தவிர்க்கவும்

Unknown said...

i was very happy, when i got the message abt this frm dialog.another milestone anna,congratulations,will u come in Tv advertishments also :)

மயில்வாகனம் செந்தூரன். said...

ம்ம்ம்.... ரொம்ப நாளைக்கு பிறகு கருத்துச் சொல்லிறன் அண்ணா.. இன்றைக்கு இதைப் பார்க்க முன்னமே எனது தொலைபேசிக்கு தகவல் வந்திட்டு..... மிகுந்த சந்தோசம் அண்ணா. வாழ்த்துக்கள்,,,

பனையூரான் said...

நேற்று dialog இலிருந்து ஒரு massage வந்திருந்தது இது பற்றி. வாழ்த்துக்கள் .கலக்குங்கோ

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா,... கலக்குங்கோ!

Media 1st said...

வாழ்த்துக்கள் அண்ணா

: : விமல் : : said...

வாழ்த்துக்கள் அண்ணா. நல்லா பண்ணுங்க...
நன்றி.

குசும்பன் said...

வாழ்த்துக்கள் லோஷன் !

Jana said...

தங்கள் உயர்வுகள் அனைத்துக்கும், மன மொழி மெய்களால் வாழ்த்துகின்றேன். வாழ்த்துக்கள் லோசன்.
மேலும் மேலும் சிறப்புறுக.

Unknown said...

ஆகா லோஷன் அண்ணா... கலக்குங்க கலக்குங்க

பாலா said...

இப்படி... எங்க போனாலும் விடமாட்டேன்னு துரத்தினா.. நம்ம மக்கள் எங்க போவாங்க சொல்லுங்க! :) :)

---

வாழ்த்துகள்.. லோஷன்! :)

பாலா said...

இந்த போட்டோவில் இருக்கறதுதுதான் உங்க கம்பெனி CEO-வா லோஷன்?

Unknown said...

வாழ்த்துக்கள் அண்ணா!

கார்த்தி said...

வாழ்த்துக்கள் அண்ணா!!! :)

என்ன கொடும சார் said...

இப்ப பேப்பர் த்ம்பிக்கும் உங்களுக்கும் போட்டியாமே.. ஒரு டயலொக் சிம் வாங்கித்தந்து பில்லும் கட்டினீங்களெண்டால் கேக்க நான் ரெடி. (நீங்க எப்பவாவது 100/- தம்பிக்கு குடுத்திருக்கியளோ? நாங்க எப்படி 50/- கொடுப்பம்? )

தமிழில் ஒரு பந்துல பத்மகுமாரவாக வாழ்த்துக்கள்..

eMedicine-வலை வைத்தியம் said...

மீண்டுமொரு புதிய முயற்சி...
வாழ்த்துக்கள்!

பத்தோடு பதினொன்றாய்
வலை வைத்தியர் .

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

வாழ்த்துக்கள் அண்ணா!!!

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

வாழ்த்துக்கள் அண்ணா!!!

நாச்சியாதீவு பர்வீன். said...

வாழ்த்துக்கள் லோஷன், உங்கள் திறமைகேற்ற சந்தர்ப்பம்,

கருணையூரான் said...

ஆகா ஆரம்பிச்சிடாங்களே உழைக்க ....ம்....வாழ்த்துக்கள்.......அந்த பேப்பர் தம்பியும் கதைச்சா நல்லா தான் இருக்கும்.....

Unknown said...

kodukkura theywam kooraiya pichchikkittu kodukkum engurathu unmathaan...

Sayanolipavan said...

congrtz anna.. ya ya i got a sms but roaming sim here also i got that but cant register.. good luck....

சித்தன் said...

நக்குண்டார் நாவிழந்த கதைக் கேட்டிருக்கிறேன்... இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். அர்த்தம் உண்டு யோசித்துப் பாருங்கள் புரியும்.
இப்படிக்கு
நான் சித்தன்.

கற்பதை கற்பிப்போம் said...

அருமை லோஷன் அண்ணன் உங்களுடைய எல்லோருக்கும் சென்றடைய எனது வாழ்த்துக்கள்

பல்சுவை பதிவுகளுக்கு
www.suncnn.blogspot.com

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner