December 11, 2009

ஊடக மாயம்? உண்மை சொல்கிறேன்..நேற்று எனது பதிவுக்குப் பின் வந்த பல பின்னூட்டங்களுக்கு தெளிவாகப் பதில் கொடுக்கவேண்டும் என்று அமர்ந்தபோது பதில்கள் நீண்டு கொண்டே போயின..
குற்றச் சாட்டுக்கள்,கேள்விகள் உடனடியாகப் பதிலளித்து தெளிவுபடுத்தப் படாவிட்டால் அந்தப் பொய்களும் போலிகளுமே உண்மையாக மாறக்கூடிய அபாயம் இருப்பதாலே இந்த தெளிவாக்கப் பதிவு..

நான் அடிக்கடி சொல்லும் விஷயம் தான்.. பாராட்டுக்களைப் பொதுமைப் படுத்தலாம்.. குற்றச் சாட்டுக்களை யாரும் பொதுமைப் படுத்தாதீர்.. அப்பாவிகளும் பாவிகளாக்கப்படும் அபாயமும் அவலமும் உள்ளது.

ஜனூஸ் எழுதியதும் இருக்கிறம் பிரசுரித்ததும் பொதுமைப்படுத்தி அனைத்து இலத்திரனியல் ஊடகங்களையும் ஒலிபரப்பாளர்களையும் தாக்கியிருப்பது கண்டனத்துக்குரியதே. ஒருசிலர், சிலர் போன்ற சொற்களைப் பாவிப்பதன் மூலம் யாரும் தப்பிவிடமுடியாது.

ஜனூஸ் என்பவர் தனக்கு நடந்த பாதிப்புக்களோ, நிமலின் நண்பருக்கு நடந்த அனுபவங்களோ எல்லோருக்குமோ, பெரும்பாலானோருக்கோ நடந்திருக்கலாமென்பதில்லையே..

அப்படியே அவர்கள் அதை வெளிக்கொணர்ந்திருந்தாலும் - பொதுவான ஊடகமான இருக்கிறம் அப்படியே அதை வெளியிட முடியுமா?

குறைந்த பட்சம் இவாறான கட்டுரைகள் பிரசுரிக்க முன் குறித்த ஊடகங்கள் சிலவற்றுடன் தொடர்பு கொண்டாவது தகவல்களை உறுதிப் படுத்தியாவது இருக்கலாம்..
என்னுடன் நாளுக்கு ஒரு தடவையாவது கட்டுரை வேண்டும் என்று தொலைபேசியில் அழைக்கும் சஞ்சித் சும்மாவாவது கேட்டிருக்கலாமே..

புல்லட் தெளிவாக ஒரு விடயம் பற்றிப் புரிந்திருக்கிறார்..
எம் வானொலித்துறை ஒரு கனவு தொழிற்சாலை போன்றது. பிரபல்யம்,பணம்,புகழ் ஈட்டப்படுகின்ற இடம் இது. எனினும் கொடுக்கப்படும் விலை கொஞ்சம் கஷ்டமானது.

ஆரம்பத்தில் கடும் உழைப்பும் பொறுமையும் இல்லாவிட்டால் நின்று நிலைப்பது கடினம்.
அந்த ஆரம்பகால கட்டத்தில் சகித்து, தூக்கம் தொலைத்து, பசி,வேறு வேலை மறந்து தொழிலில் தம்மை ஆழ்மனதோடு ஈடுபடுத்திய சிலரே பின்னர் படிப்படியாக உயர்ந்து சொகுசு சம்பளம், புகழோடு இருக்கிறார்கள்.

இடை நடுவே விலகிக் கொண்டு சபிப்போர் பலர் இருக்கலாம். இது ஒன்றும் எட்டு மணிநேர சிம்பிள் வேலை இல்லை.ஒரு தவம் போல.
எல்லாரும் இங்கே வேலை செய்தாலும், ஈடுபாடு, கவனம் சிதறாமை, நேரக் கட்டுப்பாடு, தேடல்,முயற்சி,பயிற்சி, வாசிப்பு, நேர்மை போன்றவை இருந்தால் மட்டுமே முன்னேறலாம்;நிலைத்து நிற்கலாம்.

சில தரவுகளைத் தரவேண்டும்..

எந்த துறையில் உங்களுக்கு பயிற்சிகளோடு சம்பளமும் தரப்படுகிறது?

என் ஆரம்ப சம்பளம் (பத்தாண்டுகளுக்கு முன்னர் 7000 ரூபாய்)..
இன்று ஆரம்ப அடிப்படை சம்பளம் சுமார் 8000 ரூபாய் முதல் 12000 ரூபாய் வரை வழங்குவது உறுதி.(நீங்கள் வெற்றி,சக்தி,சூரியன் என்று எங்கும் கேட்கலாம்)

எல்லா நிறுவனங்களும் நிதி நிலைமை நொடிக்கும்போதும் சளைக்காமல் சலுகை வழங்குவது எம் துறையில் தானே?
ஆரம்ப பயிற்சி காலத்தில் மட்டுமே சம்பளம் கொடுக்கப்படுவதில்லை (ஒன்று முதல் நான்கு மாத காலம்) அதிலும் எங்கள் வெற்றியில் நாட்டின் சிக்கலான பொருளாதாரம் கருதி போக்குவரத்து கட்டணமாக மூவாயிரம் ரூபாய் கொடுக்கிறோம்..
பகுதி நேரமாக உழைப்போரே ஒரு மணி நேரத்துக்கு நூறு ரூபாய்க்கு மேல் உழைக்கிறார்கள்.
வெளி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்தால் மேலும் பணம் (சில நிறுவனங்கள் இதை அனுமதிப்பதில்லை)

இப்படி இருக்கையில் //இலங்கையிலே மிகவும் குறைவாக சம்பளம் பெறுவோரின் பட்டியலில் இவர்களின் பெயர்தான் முதன்மை வகிக்கும். அதிலும் எவ்.எம் வானொலிகளில் பணியாற்றும் இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையை மென்று விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஜீவிதத்தின் பிடிமானம் குறைந்து எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளோடு அலைகிறார்கள். 'கொழும்பு காசு இல்லாவிட்டால் எலும்பு' என்ற நிலை வரும் போது ஊடகத்தில் மகனுக்கோ, மகளுக்கோ ஊரிலிருந்து A.T.Mபணம் அனுப்பும் அப்பாவிப் பெற்றோர்கள் எத்தனையோ பேர். 'இதைவிட இவன் என்னோடையே இருந்து ஆடு, மாடாவது மேய்ச்சிருக்கலாம்'//

என்று அவர் எழுத நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கவேண்டுமா? செய்தொழில் தெய்வம் என்பது சும்மாவா?

அடுத்து லீலைகள் மாயாஜாலங்கள் பற்றி சொல்கிறார். எல்லாத் துறைகளிலும் இது போன்ற அபத்தங்கள் இருக்கின்றன.
சினிமா,ஊடகம்,அரசியல் போன்றவை வெளியே தெரிகிற கண்ணாடித் துறைகள் என்கின்ற காரணத்தால் இங்கே சிறு சம்பவங்கள் நடந்தால் கூட கண்,காது,மூக்கு முளைத்து வெளியே வந்துவிடுகின்றன.
அப்படி முறை,வழி தவறியவர்கள் வானொலி வரலாற்றில் இருந்து எவ்வாறு காணாமலே போயுள்ளார்கள் என்பது கண்கூடு தெரியும்..
வெளியே இருந்து பார்க்கின்ற இளைய தலைமுறையினருக்கு தவறான பக்கங்களைக் காட்டக்கூடாது என்பதேலேயே இந்தப் பதிவுகள்.

நம்மோடு பணிபுரியும் (செய்திப் பிரிவு) ரஜனிகாந்தும் இது பற்றி சொல்லி இருப்பது தான் ரொம்பவே ஆச்சரியம்..

// ரஜனிகாந்த் said...
“உண்மையை உண்மையாக சொல்வதுதான் மென்மை - அதுவே மனிதத் தன்மை” அதில் என்ன தப்பு இருக்கிறது. ஊடகங்களின் ஆரம்ப காலத்தினை பாருங்கள், அங்கு திறமைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டதாக அறிகிறேன் - ஆனால் இப்ப திறமையுடன் (திறமை இல்லாவிட்டாலும்) சதைக்கு முன்னுரிமை உண்டாம். ‘சதைகள் வதைகள் ஆவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை – ஆனால் திறமைசாலிகள் வீனடிக்கப்படுகிறார்கள் என்ற ஆதங்கம் மட்டுமே எனக்கு!

December 11, 2009 7:34 AM

//
அவரது பிரிவில் தான் பெண்களே இல்லையே.. ஒருவேளை அவர் முன்பு பணிபுரிந்த ஊடகத்தை(அது ஒரு பத்திரிகை) அல்லது வேறு ஏதாவது பற்றி சொல்கிறாரோ தெரியவில்லை.

இப்படி சொல்வோருக்கு ஒரு சின்னக் கேள்வி.. சதைக்கும் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பது உண்மையானால் அநேகமான ஊடகங்களில் பெண்கள் தானே பெரிய பதவிகளில் இருக்க வேண்டும்?

இப்படிப் பேசி பேசியே ஊடகங்களில் இருக்கும் பெண்களை கேவலப்படுத்துவது வழக்கமாகிப் போச்சு.. வெட்கமில்லையா உங்களுக்கு?
இதற்குள் இவர்களே தான் வெளியே நின்று பெண்கள் அடக்கப்படுகிறார்கள் என்று கோஷமிடுபவர்கள்..
பாரதியின் பிறந்தநாளான இன்று "நெஞ்சில் உரமும் இன்றி.. " ஞாபகம் வருகிறது.

உங்களில் சிலர் சொன்னது போல முட்டி பிடித்து, வாளி பிடித்து முதுகெலும்பு வளைத்து தற்காலிகமாக முன்னேறி பதவி பிடித்த சிலரும் என்னவானார்கள் என்பது காலம் தந்த பாடம். உண்மைத் திறமையும், தொழில் நேர்மையும் எப்போதும் முன்னேற்றங்களை தடுக்காது.

இதெல்லாம் ஊடகங்களுக்குள் வரமுயன்று தோற்றுப் போனவர்களும், நேரடியாக அறியாமல் நண்பர்கள் மூலமாக அறிந்தவர்களும் காலாகாலமாக சொல்கின்ற விஷயங்கள்.

நின்று பிடிக்கக்கூடிய திறமை, தன்னம்பிக்கை இல்லாமல் தோற்றோடிப் போய் சீசீ இந்தப் பழம் புளிக்கிறது என்று சொல்வோரை என்னவென்பது?

திருவாளர்கள் அப்துல் ஹமீது,கே.எஸ்.ராஜா, நடராஜசிவம்,எழில்வேந்தன்,தயானந்தா முதலானோர் காணாத வெட்டுக்களா? அவர்கள் நின்று பிடிக்கவில்லையா?

வெட்டுக்கள் வந்தாலும் தாண்டி நிற்க உறுதியான முதுகெலும்பும், திறமையும் இருந்தால் போதும் என நினைப்பவன் நான்.

பல பேர் எதிர்ப்பார்ப்போடு உள்ளே நுழைய முற்பட்டாலும் எத்தனை பேரால் எத்தனை ஊடகங்களில் உள்வாங்கப்பட முடியும்? இதனால் தான் பலருக்கு ஏமாற்றங்கள்.ஆனால் தகுதியும்,திறமையும் உள்ளவர்கள் என்றாவது உள்ளே வரத்தான் போகிறார்கள். (ஊடகப் பயிற்சி நெறிகள்,நிறுவனங்கள் பற்றி இன்னொருநாள் பார்க்கலாம்)

இன்றெல்லாம் ஊடகங்கள் பற்றி என்றவுடன் எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு குதிப்பது வழக்கமாகி விட்டது. சினிமா,அரசியல் போல.. விமர்சனங்கள் என்பது பிழையில்லை.ஆனால் உள்ளே நடப்பது எல்லாமே தெரியும் என்பது போல எழுதுவது தான் தவறு என்கிறேன்.

நானும் ஒரு நீண்ட பதிவு ஊடகங்கள் பற்றி எம்மைப் பற்றி எழும் சில விமர்சனங்களின் உண்மை,போய் பற்றி எழுதவேண்டும் என்று எண்ணிவந்தாலும் இன்னும் சந்தர்ப்பம் வாய்ப்பதாகவில்லை.
அதில் ஒரு சில விஷயங்களை எழுதக் காரணமான அந்தக் கட்டுரைக்கும், உங்கள் பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்.

இறுதியாக ஒன்று.. மடியிலே கனமும் மனதிலே பயமும் இல்லாததனால் தான் பொய்,புரட்டுகள்,போலிக் குற்றச்சாட்டுக்கள் கண்டால் கோபமும் வருகிறது..

ரௌத்திரம் பழகு..

இன்று பிறந்த பாரதி சொன்னது போல -
"பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்திக் கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?"


29 comments:

Unknown said...

அண்ணா...
நீங்கள் நேற்று எதிர்த்துப் பதிவிட்டமையால் தான் அந்த விடயம் வெளியே வந்தது.
எதிர்ப்புத் தெரிவித்திருக்காவிட்டால் அதை ஏற்றுக் கொண்டதாக அமைந்திருக்கும்.

எல்லாத்துறையும் கஷ்ரமானது.
எந்தத்துறையிலும் பொயிருந்தவுடன் பதவியுயர்வும், பணமோ பணமாக சம்பளமும் கொடுக்கப்படப்போவதில்லை.
அப்படியொரு இடமிருந்தால் அது போதைமருந்து கடத்தும் தொழிலாகவே இருக்கமுடியும்.

லீலைகள் பற்றியதற்கு நீங்கள் சொன்ன விளக்கம் சரியானது.
எங்கும் இது இருக்கிறது. ஏனென்றால் எல்லா இடங்களிலும் இப்படியான மனிதர்கள் இருக்கிறார்கள். அந்த மனிதர்களை குற்றஞ்சாட்டுவதை விடுத்து அந்தத் துறையை ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்டுவதும், அதை 'இலங்கையிலிருந்து வெற்றிகரமாக _ வருடங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே சஞ்சிகை' வெளியிட்டமையும் வருந்தத் தக்கன.

எனக்கு இங்கே வருத்தமான ஒரே விடயம், நீங்கள் ஒர சஞ்சிகையில் வெளிவந்த ஆக்கத்தைப் பற்றி பதிவிட்டிருக்கிறீர்கள்.
ஆனால் அவர்கள் இன்னும் வந்து பொதுப்படையான தன்னிலை விளக்கம் தரவில்லையே?

இதே பிரச்சினை தான் முன்பொருதடவையும் நடந்தது.
பிழைகள் செய்திருப்பிளன் அதை பகிரங்கமாக ஒத்துக் கொள்வது அந்தப் பிழைகளின் தாக்கத்தை குறைக்கும், அந்தப் பிழைகளின் கோபத்தைக் குறைக்கும் என்பது பலருக்கும் விளங்குவதில்லை.

Media 1st said...

அருமை அண்ணா !!!

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி

http://www.tamilnetwork.info

புல்லட் said...

உண்மையாக , ஒரு தெளிவான பதில அண்ணன்..

உங்கள் துறையில் நுழைவதற்காக திட்டமிடும் இளைஞர்களுக்கு இப்படியான பல பதிவுகள் வரவேண்டும்..எம்மைப்போல வேறு துறையிலுள்ளவர்களுக்கு அது ஒரு சுவாரசியமான தனவலாயிரக்கும் ..

உங்களை எரிச்சலடைய வைத்தால்த்தான் இப்படியான வானொலி சம்பந்தமான பிரயோசனமான பதிவுகளை நீங்கள் எழுதுவீர்களானால் இருக்கிறமுக்கு நானும் ஒரு கட்டுரை எழுத தயார்..;-)

Unknown said...

Well answered!!

Unknown said...

// புல்லட் said...
உங்களை எரிச்சலடைய வைத்தால்த்தான் இப்படியான வானொலி சம்பந்தமான பிரயோசனமான பதிவுகளை நீங்கள் எழுதுவீர்களானால் இருக்கிறமுக்கு நானும் ஒரு கட்டுரை எழுத தயார்..;-) //

புல்லட் அண்ணாவின் பொதுநலம் என்னைப் புல்லரிக்க வைக்கிறது...

லோஷன் அண்ணா!
இப்படியான உங்கள் துறைசார் பதிவுகளையும் இனிக் கவனித்துக் கொள்ளுங்கள்.
எந்தத்துறையுமே சுவாரசியமானது தான் என்றாலும் ஓடகத்துறை மக்களோடு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் அதன் சுவாரசியங்கள் இன்னும் சுவாரசியமாக இருக்கும்...

Anonymous said...

Mathu
"இப்படி சொல்வோருக்கு ஒரு சின்னக் கேள்வி.. சதைக்கும் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பது உண்மையானால் அநேகமான ஊடகங்களில் பெண்கள் தானே பெரிய பதவிகளில் இருக்க வேண்டும்?

இப்படிப் பேசி பேசியே ஊடகங்களில் இருக்கும் பெண்களை கேவலப்படுத்துவது வழக்கமாகிப் போச்சு.. வெட்கமில்லையா உங்களுக்கு?"

அண்ணா சரியாக சொன்னீர்கள் .

ரஜனிகாந்த் அவர்களுக்கு முதலில் உங்கள் துறையில் பணியாற்றுகின்ற பெண்களை பற்றி நீங்களே தவறான என்னத்தை எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்தாதீர்கள். உங்களை போன்றவர்களினால்தான் ஊடக துறையை சேர்ந்த பெண்களை பற்றி தவறான கருத்துகள் உண்டாகிறது.!

சித்தன் said...

என்னைப் பொருத்தவரை இந்தப் பதிவு அநாவசியம் என்றுதான் நினைக்கிறேன். முதல் பதிவுடனேயே நிறுத்தியிருக்கலாம். பொதுவாக குறிப்பிட்டு அந்த ஆக்கத்தில் எழுதியிருக்குமு் பட்சத்தில், பாரதியின் பாடலைப் எழுதி அந்தத் தொப்பியை தாங்களே கேட்டு போட்டுக்கொண்டீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. நண்பா இதை இத்தோடு விட்டுவிடுங்கள்.
பாவம் இருக்கிறம்.
பதிலடி கொடுக்க நாங்கள் இருக்கிறம்.
நான் சித்தன்

Anonymous said...

Well said... *Clap* *Clap*....

//உங்களை எரிச்சலடைய வைத்தால்த்தான் இப்படியான வானொலி சம்பந்தமான பிரயோசனமான பதிவுகளை நீங்கள் எழுதுவீர்களானால் இருக்கிறமுக்கு நானும் ஒரு கட்டுரை எழுத தயார்..;-)//
ஒழுங்கா இன்டைக்குத் தான் இந்த நாதாரி போண்டி, நல்ல கொமன்ற் போட்டிருக்கிறான்... ஹி ஹி..

நாளுக்கு நாள் உங்கள் மேல் மதிப்பு கூடுகிறது லோஷண்ணா... எழுந்து நின்று கை தட்டுகிறேன்... ஏற்றுக்கொள்ளுங்கள்....

P.S:- இந்த ஐந்தாம் நம்பர் ஆக்கள் கொஞ்சம் காவாலிகள் என்டாலும் சரியான நேர்மையான ஆக்கள்.. அவயின்ட (ஆக்சுவலி எங்களின்ட) நேர்மைக்கு நான் ரசிகை.. ஹி ஹி...

சித்தன் said...

சிகரம் தொட சிறகு தந்த ஊடகத்தை கொச்சைப் படுத்தியிருக்கிறீர்கள் ஜனூஸன். கவனத்தில் கொள்ளுங்கள். ஊடகத்தை சாட இன்னொரு ஊடகம் தேவைப்பட்டிருக்கிறது. அங்கும் உம்மால் நிலைத்து நிற்க முடியவில்லை என்றால் உமது லட்சனம் தெரிந்துவிடும்.

Sayanolipavan said...

இறுதியாக ஒன்று.. மடியிலே கனமும் மனதிலே பயமும் இல்லாததனால் தான் பொய்,புரட்டுகள்,போலிக் குற்றச்சாட்டுக்கள் கண்டால் கோபமும் வருகிறது..


..... ஈடுபாடு, கவனம் சிதறாமை, நேரக் கட்டுப்பாடு, தேடல்,முயற்சி,பயிற்சி, வாசிப்பு, நேர்மை போன்றவை இருந்தால் மட்டுமே முன்னேறலாம்;நிலைத்து நிற்கலாம்.


உண்மை ,

என்ன கொடும சார் said...

இலத்திரனியல் ஊடகத்துறைக்கு சரியான விளக்கம் அறிமுகம் கொடுத்துள்ளீர்கள்.

நிறையப்பேர் தான் ஒருதுறையை தெரிவுசெய்யும்போது
அதில் உச்ச நிலையில் உள்ள சிலரை பார்த்தே தெரிவுசெய்கிறார்கள். அவர்கள் கடந்துவந்த பாதை அவர்களுக்கு தெரிவதில்லை. இந்த துறையில் நுழைந்தால் இவ்வளவு வசதியாக இருக்கலாம் என்று நினைத்தே வருகிறார்கள். பின்னர் உள்நுழைந்தபின் திக்குமுக்காடுகிறார்கள்.

உண்மையில் இவ்வாறான பதிவுகள் வெளிவருவது மிக அவசியம். எமது எதிர்கால சந்ததி சரியான துறையை தெரிவுசெய்ய நிச்சயமாக உதவும் என்பது என் கருத்து.

இன்று எதற்கெல்லாமோ தொடர்பதிவு
எழுதும் பதிவர்கள் ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமாக தத்தமது துறை பற்றி ஒரு விளக்க தொடர்பதிவு எழுதலாமே. (இதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தாண்டி, குரோதங்களை தாண்டி பதிவர்கள் ஒன்றுபடுவார்களா?) பயனுற பதிவெழுதுவதாக இருக்குமல்லவா?

மற்றும் இருக்கிறம் இக்கட்டுரையை பிரசுரித்தது
எனக்கென்னவோ தவறாக தெரியவில்லை. ஒரு சிலர் என்ற துளி விஷம் மொத்த பாலையுமே விஷமாக்காமலிருக்க விடயங்கள் வெளிவருவதும் அவசியமே.

இருக்கிறம் கட்டுரைக்கு பதிலாக சென்ற பதிவை தவிர்த்து இப்பதிவை
எழுதியிருந்தால் எல்லாம் சுமூகமாக இருந்திருக்கும் இல்லையா?

என்ன கொடும சார் said...

ரஜனிகாந்தை இப்படி தக்கியிருக்கவும் வேண்டாமே.. நீங்கள் சொன்னபின்புதான் அவர் வெற்றி ரஜனிகாந்த் என்று ஒரு சாமானியனுக்கு தெரியும்..

Asfer said...

cool anna cool
nalla uraikkira maathiri sonneenga

யோ வொய்ஸ் (யோகா) said...

நல்ல பதிலடி லோஷன், எப்பவும் எல்லா துறையிலும் ஒரு சிலருக்கு ஏற்படும் பிரச்சினைகளை பொதுவாக அந்த துறையிலுள்ள அனைவருக்குமாக குற்றம் சாட்டப்படுவது வருத்தத்திற்குறியது, அடுத்து இருக்கிறம் பற்றி நான் கதைக்க விரும்பவில்லை, ஏன் என அனைவருக்கும் தெரியும்..

KANA VARO said...

//என்று அவர் எழுத நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கவேண்டுமா? செய்தொழில் தெய்வம் என்பது சும்மாவா?//

//அப்படி முறை,வழி தவறியவர்கள் வானொலி வரலாற்றில் இருந்து எவ்வாறு காணாமலே போயுள்ளார்கள் என்பது கண்கூடு தெரியும்.//

//உங்களில் சிலர் சொன்னது போல முட்டி பிடித்து, வாளி பிடித்து முதுகெலும்பு வளைத்து தற்காலிகமாக முன்னேறி பதவி பிடித்த சிலரும் என்னவானார்கள் என்பது காலம் தந்த பாடம். உண்மைத் திறமையும், தொழில் நேர்மையும் எப்போதும் முன்னேற்றங்களை தடுக்காது.//

//வெட்டுக்கள் வந்தாலும் தாண்டி நிற்க உறுதியான முதுகெலும்பும், திறமையும் இருந்தால் போதும் என நினைப்பவன் நான்//

//இறுதியாக ஒன்று.. மடியிலே கனமும் மனதிலே பயமும் இல்லாததனால் தான் பொய்,புரட்டுகள்,போலிக் குற்றச்சாட்டுக்கள் கண்டால் கோபமும் வருகிறது..//


அருமை…

// (ஊடகப் பயிற்சி நெறிகள்,நிறுவனங்கள் பற்றி இன்னொருநாள் பார்க்கலாம்)//

நிச்சயமாக எழுதுங்கள். முளையும் பயிரை கிள்ளி எறியும் கும்பல் இங்கு தான் உள்ளது. அடையாளம் காட்டுவேன்.

KANA VARO said...

//கனககோபி
பிரச்சினை தான் முன்பொருதடவையும் நடந்தது.
பிழைகள் செய்திருப்பிளன் அதை பகிரங்கமாக ஒத்துக் கொள்வது அந்தப் பிழைகளின் தாக்கத்தை குறைக்கும், அந்தப் பிழைகளின் கோபத்தைக் குறைக்கும் என்பது பலருக்கும் விளங்குவதில்லை//.

good....

KANA VARO said...

// புல்லட் said...
உண்மையாக , ஒரு தெளிவான பதில அண்ணன்..

உங்களை எரிச்சலடைய வைத்தால்த்தான் இப்படியான வானொலி சம்பந்தமான பிரயோசனமான பதிவுகளை நீங்கள் எழுதுவீர்களானால் இருக்கிறமுக்கு நானும் ஒரு கட்டுரை எழுத தயார்)

super..

Subankan said...

நல்ல காத்திரமான பதிவு அண்ணா

//எம் வானொலித்துறை ஒரு கனவு தொழிற்சாலை போன்றது. பிரபல்யம்,பணம்,புகழ் ஈட்டப்படுகின்ற இடம் இது. எனினும் கொடுக்கப்படும் விலை கொஞ்சம் கஷ்டமானது//

ஆனால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு பிரபல்யம்,பணம்,புகழ் மட்டுமே தெரியும். அதன் பின்னால் இருக்கும் உழைப்புகள் அல்ல.

//நானும் ஒரு நீண்ட பதிவு ஊடகங்கள் பற்றி எம்மைப் பற்றி எழும் சில விமர்சனங்களின் உண்மை,போய் பற்றி எழுதவேண்டும் என்று எண்ணிவந்தாலும் இன்னும் சந்தர்ப்பம் வாய்ப்பதாகவில்லை//

அவசியம் தேவையான ஒன்று. விரைவில் எழுதுங்கள்.

என்.கே.அஷோக்பரன் said...

நல்ல பதிவு! இன்னும் கொஞ்சம் விளக்கங்களை எதிர்பார்த்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் “கவர்ச்சித்” தொழில்கள் (சினிமா, ஊடகம், இலக்கியம்) போன்றவற்றிலிருப்போர் மீது சிலருக்கு பொறாமையிருப்பது யதார்த்தம். (அரசியலை நான் தொழில் என்று சொல்ல விரும்பவில்லை - அதை அப்படி நினைத்து நடத்தித் தான் இன்று மிகக் கேவலமான வியாபாரமாக அந்த புனிதக் கலையைக் கொண்டு வந்து விட்டிருக்கின்றார்கள் - உண்மையில் அது ஒரு சேவை) - மனித உளவியலின் படி இந்தப் பொறாமை அநேகமானவர்களக்கு எழும் - பலர் கட்டுப்படுத்தி விடுவார்கள் சிலர் கட்டுப்படுத்த முடியாமல் வெளிப்படுத்துவதுடன் மட்டுமல்ல அந்தத் துறையைக் கொச்சைப்படுத்தும் செயலிலும் ஈடுபடுவார்கள். அதனால் தான் சினிமாக் கலைஞர்கள் பற்றிய கிசுகிசுக்கள் எல்லாம் பிரபலமாயின.

விட்டுத்தள்ளுங்கள் - நாம் செய்வது எம் மனச்சாட்சிக்குச் சரியாகவும் நேர்மையாகவும் இருக்குமென்றால் யாருக்கு நாம் பயப்படவேண்டும். - போற்றுவார் போற்றற்றும், புழுதிவாரித் தூற்றுவார் தூற்றற்றும் எம் கடன் செய்த வண்ணமிருப்போம் - என்று இருந்தால் நன்று!

Admin said...

நல்ல விளக்கங்கள் நன்றி அண்ணா.

Admin said...

@. சித்தன்..

சித்தன் இந்தப் பதிவு அவசியமே ஒட்டுமொத்தத்தில் எல்லோரையும் குறை சொல்லும்போது அத்துறை சார்ந்த முக்கியமான பொறுப்பில் இருப்பவர் விளக்கமளிப்பது நல்ல விடயமே.

Midas said...

mmm?

மயில்வாகனம் செந்தூரன். said...

///நான் அடிக்கடி சொல்லும் விஷயம் தான்.. பாராட்டுக்களைப் பொதுமைப் படுத்தலாம்.. குற்றச் சாட்டுக்களை யாரும் பொதுமைப் படுத்தாதீர்.. அப்பாவிகளும் பாவிகளாக்கப்படும் அபாயமும் அவலமும் உள்ளது.///

அண்ணா இது நிச்சயமான உண்மை........


அண்ணா ஒரு துறையைப் பற்றி விமர்சிப்பதற்கு முதலில் அந்தத் துறையைப் பற்றி முழுமையாக அறிந்து வைத்திருக்கவேண்டும் என்பது எனது கருத்து....

ஜெகதீபன் said...

//புல்லட் said..."உங்களை எரிச்சலடைய வைத்தால்த்தான் இப்படியான வானொலி சம்பந்தமான பிரயோசனமான பதிவுகளை நீங்கள் எழுதுவீர்களானால் இருக்கிறமுக்கு நானும் ஒரு கட்டுரை எழுத தயார்..;-)//

he he.....!!!!! நானும் தயார் !!!!

//பாராட்டுக்களைப் பொதுமைப் படுத்தலாம்.. குற்றச் சாட்டுக்களை யாரும் பொதுமைப் படுத்தாதீர்.. அப்பாவிகளும் பாவிகளாக்கப்படும் அபாயமும் அவலமும் உள்ளது//

அருமையான வரிகள் அண்ணா !!! கருத்துச்சுதந்திரம் தனிநபர் சாடல்களாய் இருக்கும் போது அதை பிரசுரிக்காமல் தவிர்த்திருப்பதே சிறந்த தெரிவாய் இருந்திருக்கும்..... அவரின் வீட்டு ஒப்பாரியை ஊரெல்லாம் கேட்க்க வைத்திருக்கத்தேவையில்லை. அவரின் வீட்டு இழவுக்கு மற்றவர்கள் எந்தவிதத்தில் காரணம் ????? மற்றவர்கள் என்ன தான் செய்யமுடியும் !!!! தவறு 'அவரிடம்' இல்லை....... இருக்கிறம் புரிந்து கொண்டிருந்தால் இவ்வளவு கருத்தாடல்கள் தேவைப்பட்டிருக்காது.......
அன்புடன் jega !!

viththy said...

நான் அடிக்கடி சொல்லும் விஷயம் தான்.. பாராட்டுக்களைப் பொதுமைப் படுத்தலாம்.. குற்றச் சாட்டுக்களை யாரும் பொதுமைப் படுத்தாதீர்.. அப்பாவிகளும் பாவிகளாக்கப்படும் அபாயமும் அவலமும் உள்ளது.

அண்ணா இது 1000% உண்மை..

cherankrish said...

அடிப்படைச்சம்பளம் 8000 ரூபா என்றால் ஒரு நாள் சாப்பாட்டுக்கான செலவு 300 ரூபாயாக வைத்துக்கொண்டாலும் ஆயிரம் ரூபா துண்டுவிழுகிறதே.

அடிப்படைச்சம்பளத்தை குறைசொல்ல முடியாது.எல்லாத்துறைகளிலும் அப்படித்தான்.உண்மையில் நீங்கள் உங்கள் திறமையில் நம்பிக்கை இருந்தால் நிர்வாகத்தை அணுகி பதவிஉயர்வோ சம்பள உயர்வோ கேட்கலாம்.அதற்கு முன் அந்த அலுவலகத்தில் உங்களுக்கான தேவையை நூறுவீதம் மேலதிகாரிக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

'இந்த பொறுப்பு என்ற சொல்லுக்குள்- உங்ளை வளர்த்துக்கொள்ளும் திறமை,துறைசார்ந்த அறிவு , உங்கள் துறைதொடர்பான உலக மாற்றங்கள் , தொழில் நுட்பம் , மனிதத் தொடர்புகள் , ஆளுமை " எல்லாவற்றையும் போட்டுக்கொள்ளலாம்.இதில் தொடர்புகள் என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது.விகடன் காட்டூனிஸ்ட் மதன் இதற்கொரு நல்ல உதாரணம்.பயிற்சிக்காலம் என்று ஆட்களை உள்வாங்கி இரண்டுவருடம் மூன்று வருடம் கூட "பயிற்சிக்காலத்திலேயே" வைத்திருக்கும் பகற்கொள்ளை நடக்கத்தான் செய்கிறது.எந்தவிதச்சம்பள அதிகரிப்போ , மேலதிக கொடுப்பனவுகளோ வளங்கப்படுவதில்லை.ஊக்கமற்றவர்களுக்கானால் பரவாயில்லை.உண்மையில் திறமையுள்ளவர்களுக்கும் அப்படித்தான் நடக்கிறது.கடைசியில் அந்த ஊழியர் விலகப்போகும் நேரத்தில் அடித்துப்பிடித்து சம்பள உயர்வு வழங்குவதாக கூறுவதும் தொடர்கிறது. இவையெல்லாம் தவறான கத்துக்குட்டி முகாமைத்துவமேயன்றி வேறல்ல.
கடைசியல் இவர் இங்கிருந்து விலகி இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்து இவர்களுக்கு நடுவிரல் காட்டுவதுவரை இது போகும்.


தமிழ் ஊடகத்துறையில் குறிப்பாக ஒலி ஒளி பரப்புகளில் , எனக்குத்தெரிந்தவரை மிக ஆர்வமாக இருப்பவர்கள் கிழக்கு மற்றும் மத்திய மாகாண நடுத்தர வர்க்க இளைஞர்கள்.அதுவும் அப்பனிடம் காசுகேட்கும் வயதைக் கடந்த இளைஞர்கள்.கனவுகளுடன் வரும் இவர்கள் இந்த 'பயிற்சிக்காலத்தை" எப்படித்தாண்டுவார்கள்?.

வளம் தாராளமாக இருக்கிறது ஆனால் தேவை குறைவு அதன் விளைவுதான் இது.இந்தத்துறை ஒரு மூடப்பட்ட துறை.ஒரு அறிவிப்பாளன் எம் பி ஏ பட்டம் பெறுவதால் அவன் திறமையான அறிவிப்பாளன் என்ற அந்தஸ்தை பெறுவதில்லை.அதிகம் சம்பள உயர்வுக்காக இந்தத்தகுதிகள் பயன்படுவதில்லை.மாறாக முகாமைத்துவ பிரிவுக்குள் மாறி ஒலிபரப்பில் இருந்து ஒதுங்கவும் சந்தர்ப்பம் இருக்கிறது.ஒலிபரப்பாளன் ஒரு சிறந்த ஒலிபரப்பாளன் ஆவதில்தான் அதன் வெற்றியிருக்கிறது.அந்த ரகசியத்தை கண்டுபிடித்தவர்கள்தான் இன்றய வெற்றியடைந்த ஒலிபரப்பாளர்கள்

என்ன கொடும சார் said...

// குற்றச் சாட்டுக்களை யாரும் பொதுமைப் படுத்தாதீர்.. அப்பாவிகளும் பாவிகளாக்கப்படும் அபாயமும் அவலமும் உள்ளது.//

இதெல்லாம் உன்னைப்போல் ஒருவனுக்கு பிறகா? அல்லது உங்கள் அபிமான நடிகருக்கு விதிவிலக்கா?>

RJ Dyena said...

//இடை நடுவே விலகிக் கொண்டு சபிப்போர் பலர் இருக்கலாம். இது ஒன்றும் எட்டு மணிநேர சிம்பிள் வேலை இல்லை.ஒரு தவம் போல.
எல்லாரும் இங்கே வேலை செய்தாலும், ஈடுபாடு, கவனம் சிதறாமை, நேரக் கட்டுப்பாடு, தேடல்,முயற்சி,பயிற்சி, வாசிப்பு, நேர்மை போன்றவை இருந்தால் மட்டுமே முன்னேறலாம்;நிலைத்து நிற்கலாம்//

Thanks for highlighting this...Loshan Anna...

Unknown said...

நல்லதொரு விவாதத்திற்கு இட்டுச் செல்லும் பதிவு ஒன்று.

பலர் தங்கள் அறிவிப்பு மற்றும் ஒலிபரப்புத் திறனினால் முன்னிற்கு வந்திருந்தாலும் சிலர் எப்படியோ முன்னிற்கு வந்தவர்களும் இருக்கிறார்கள்.

இத்துறையில் வெளிநாடுகளில் பெறும் பட்டங்களை வைத்து அதனையே பெரியதொரு சாதனையாகவும் சிலர் பயன்படுத்துகின்றார்கள். அவர்கள் முதலில் தங்கள் தாய்மொழியில் செய்யும் அறிவித்தல்களை அம் மொழிநடையில் தெளிவான ஏற்ற இறக்ககங்களுடன் உச்சரிக்கப்பழகவேண்டும். இதில் லோசன் சிலர் எனக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டதிற்கிணங்க ஓர் மூத்த அறிவிப்பாளர்/ஒலிபரப்பாளரின் பெயரினையே உதாரணத்திற்கு என்னால் தரமுடியும். அவர் வி.மதியழகன். தற்சமயத் கடனாவில் வசித்துவரும் இவரது அறிவித்தல்களைக் கேட்கும் போது எவ்வாறு இவர் ஒலிபரப்பு மற்றும் அறிவிப்புத் துறைகளில் நின்று நிலைக்கின்றார் என்று எண்ணத் தோன்றுகின்றது.

அனைத்துத் துறைகளிலும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அத்துடன் அனைத்திலும் திறமைகள் மதிக்கப்படவேண்டும். சிபாரிசுகள் தொடருமெனின் ஒரு குறிப்பிட்ட பகுதியினரே குறித்த துறையில் தொடருவர்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner