May 17, 2010

மே 17


மே 17


இன்றும் நினைவுகளின் இடுக்குகளில்
கறுப்பான தினமாக 
நினைத்தாலே மனம் கனத்து
இதயத்துள் இரத்தம் 
கசியும் நாள்..

இப்படி என்ன எழுதி
இனி ஆவது என்ன

கடவுள்கள் இல்லை என்று 
கல்வெட்டுப் பொறிக்க நான் 
முடிவு செய்த நாள் இது..

இந்த நாள் இறந்து போன 
சகோதர,சகோதரிகளே, அன்பான உறவுகளே...
மன்னியுங்கள் எம்மை...

எம்மால் எதுவும் செய்துவிட முடியவில்லை..
மனதுக்குள் உடைந்து அழுது
மனதுக்குள்ளேயே வெடித்து வெம்புவதைத் தவிர..

எல்லாம் முடிந்து போன 
இரு தினங்களாக 
இன்றும் நாளையும்..

இன்னும் சொல்லத் தெரியவில்லை..
மேலும் பலவற்றை
எப்படி சொல்வது தெரியவில்லை...

சென்ற வருடத்தில்,
இன்றைய தினத்தில் எஞ்சியவை 
இவை தான்..

முதல் இரு படங்கள் - நன்றி - வீரகேசரி 

30 comments:

Unknown said...

கண்ணில் ரத்தம் வடிகிறது..

சுதர்ஷன் said...

என்ன செய்வது ? அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டிய நாள் அல்ல . மன்னிப்பு கேட்க்க வேண்டிய நாள் ...

A.V.Roy said...

வடுக்கள் இன்னும் மாறவில்லை, வலிகளும் தீரவில்லை புரியாத சோகம் புடை சூழ்ந்து நிற்கிறது. உடைந்த வீட்டை ஒரு நாள் கட்டுவேன், பிரிந்துபோன பிஞ்சுகளை யாரடா தருவார்....!!

Vijayakanth said...

Nam inam mouniththadum, nam uravugal pirinthadhum nammavargalaale andri weroruwaraalum alla.

Ungalai kaakka thawariya naangal indru ungalidam mannippu ketkawum anjugirom parigaaram seyya thiraani atravargalaai!

அஜுவத் said...

mmmmmmm.........

தமிழ் மதுரம் said...

இந்த நாள் இறந்து போன
சகோதர,சகோதரிகளே, அன்பான உறவுகளே...
மன்னியுங்கள் எம்மை...//

என்ன செய்வது? எங்களால் இதனை விட வேறு என்ன செய்ய முடியும்? காலங் கடந்த பின் தானே எமக்கு ஞானம் வரும். இது தானே தமிழனின் இயல்பு.

காலவோட்ட மாற்றத்தினால்
கனவுகள் கரைந்திடலாம்-ஆனாலும்
இந்த ஞாலம் உள்ள வரை
உடல் துடிக்கப் பலியான
எம் உறவுகளின் வரலாறு
நிலைத்திருக்கும்!


செந்நீரோடு கரைந்து விட்ட உறவுகளுக்காய்
கண்ணீரைத் தான் காணிக்கையாக்க
எம்மால் முடிகிறது!
இதனை விட வேறொன்றும் சொல்ல
முடியவில்லை..
கண்கள் மீண்டும் கனக்கிறது!
அவர்களின் கண்ணீர் இந்த
உலகெங்கும் ஒலிக்கிறது!

Nirosh said...

"கடவுள்கள் இல்லை என்று
கல்வெட்டுப் பொறிக்க நான்
முடிவு செய்த நாள் இது..."
நானும் தான்!!!!.....

Nirosh said...

"கடவுள்கள் இல்லை என்று
கல்வெட்டுப் பொறிக்க நான்
முடிவு செய்த நாள் இது..."
நானும் தான்!!!!.....

Unknown said...

இறப்போம்! இது வரும் வேளை தெரியாமல் போவது இயல்பானது!
இன்று இறப்போம் என்ற வேதனையும் தாங்கிச் சென்ற என் செந்தங்களஏ!
உம்மை காக்க எம்மால் முடிந்தது என்ன? பிரித்தானிய பாராளுமன்ற கதறல்களை தவிர!
ஒன்றாக முயற்சிப்போம் இனி உள்ளவர்களையாவது காக்க!
நல்லது! உறவுகளை இழந்த எம் தமிழை நாம் வாழவைக்க முடிந்தால்!

Unknown said...

இறப்போம்! இது வரும் வேளை தெரியாமல் போவது இயல்பானது!
இன்று இறப்போம் என்ற வேதனையும் தாங்கிச் சென்ற என் செந்தங்களே!
உம்மை காக்க எம்மால் முடிந்தது என்ன? பிரித்தானிய பாராளுமன்ற கதறல்களை தவிர!
ஒன்றாக முயற்சிப்போம் இனி உள்ளவர்களையாவது காக்க!
நல்லது! உறவுகளை இழந்த எம் தமிழை நாம் வாழவைக்க முடிந்தால்!

ராஜ நடராஜன் said...

நீங்கள் படங்களை ஆதாரமாக்குகிறீர்கள்.
ஆனாலும் உலகம் உங்களை நம்பவில்லை!

படுகொலைகளை பின் தள்ளி இயல்பு வாழ்க்கைக்கு நாங்கள் வந்துவிட்டோம் என்கிறது இலங்கை அரசு

நம்பகத்தன்மை ஐ.நா வரை கேட்கிறது.

M. Aravindan said...

//எம்மால் எதுவும் செய்துவிட முடியவில்லை..
மனதுக்குள் உடைந்து அழுது
மனதுக்குள்ளேயே வெடித்து வெம்புவதைத் தவிர//

sariyaaga sonirgal....ilankai thamil makkalin ethirgaalam inum epady elam iruka poogirado????????

M. Aravindan said...

//எம்மால் எதுவும் செய்துவிட முடியவில்லை..
மனதுக்குள் உடைந்து அழுது
மனதுக்குள்ளேயே வெடித்து வெம்புவதைத் தவிர//

sariyaaga sonirgal....ilankai thamil makkalin ethirgaalam inum epady elam iruka poogirado????????

Sri said...

எல்லாம் மாறும்..........உலகத்தை ஆளப்போவது நாம தான்.

எதுக்கு பயப்பட வேண்டும்.

rangarajan said...

Lot od photos have reminiscence of Jewish concentration camps of Adolf Hitler in second world war.. Tamizh eezham veku thoorathil illai.. Israel amainthathaipol oru naal malarum. Thevai oru David Ben Gurian ..(Annan Pirabhakaran pol..)

Elanthi said...

மனசு கனக்கிறது. அப்போது எதுவும் எம்மால் செய்து விட முடியவில்லை. இப்போதும் தான்.

//இந்த நாள் இறந்து போன
சகோதர,சகோதரிகளே, அன்பான உறவுகளே...
மன்னியுங்கள் எம்மை...//

நானும் கேட்டுக்கிறேன்.

Ravi kUMAr said...

மனசு வலிக்குது தோழரே...

முல்லை மயூரன் said...

thillana althaan,,what to do,,sokam thaan

முல்லை மயூரன் said...

"கடவுள்கள் இல்லை என்று
கல்வெட்டுப் பொறிக்க நான்
முடிவு செய்த நாள் இது..."
நானும் தான்!!!!.....

Unknown said...

நானும் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

Ashwin-WIN said...

இன்றைய நாள் பல உயிர்களை காப்பார்ரமுடியாதுபோன எம் அவமானத்தின் சின்னம்...
IF U CAN SEE THIS TOO
http://ashwin-win.blogspot.com/2010/05/blog-post_17.html

வான்நிலவன் said...

வானம் உருகிக்கொட்டியபடியிருக்க
மிருகம் ஒன்று
சூரியனைத் தின்று கொண்டிருக்கிறது
யாருமற்ற நிலத்தில்
தப்பிய ஒற்றை ஆட்காட்டிப் பறவை கத்துகிறது.
நன்றி
தீபச்செல்வன்

அண்ணா நேரம் இருந்தால் மே மாத உயிர்மையை பார்க்கவும்

Kiruthigan said...

யாரொடு நோவேம்..?
யார்க்கெடுத்துரைப்போம்..
படங்கள் அருமை அண்ணா..

Midas said...

எம் வாழ்வின் மிகத் துக்க நாள். அனைத்து தமிழ் சார்ந்த நிறுவனங்களும் இயலுமானவரை களியாட்ட நிகழ்வுகளை ஒத்திப் போட்டுக் கொள்ளலாம்

கன்கொன் || Kangon said...

:'(

Oruvan said...

நன்றிகள் அண்ணா.

இன்றோடு ஒன்றாகிவிட்டது ஆண்டும் ..
தெரிந்துகொண்டும் ஏற்க்க மறுக்கிறது என் இதயம் ..
மனித்துகொள்ளுங்கள்- புகலிடம் தேடி ஓடியவர்களில் நானும் ஒருவன் ...
இன்று உங்களுக்காய் ஒன்றும் செய்யதவர்களிலும் நானும் ஒருவன் ..
சொல்ல தெரியவில்லை .....
கனத்த இதயத்தின் வலிகளோடும் ஏக்கத்தோடும் ....
ரணங்களோடும் நகர்ந்து கொண்டிருக்கு - என் நாட்கள் நடைபிணமாய்.

Anonymous said...

loshan said /எம்மால் எதுவும் செய்துவிட முடியவில்லை/

தமிழ் தியாகி முத்துக்குமார் தீக்குளித்ததை போல் தீக்குளியுங்கள்
உலகம் உங்களை கவனித்து உங்களுக்கு தனி நாடு உருவாக்கி
உங்களுக்கு பெரும் பொறுப்புகளை தருவார்கள்
வாழ்த்துக்கள்

Anonymous said...

அன்று எதுவும் செய்ய முடியவில்லை என கைகட்டி வாய் பொத்தி கண்ணீர் சிந்தி நின்றோம். ஆனால் நடத்தப்பட்ட இனஅழிப்பு அநியாயங்களுக்கு இனியாவது நீதி கேட்க முயலலாம் அல்லவா. இனியும் கைகட்டி நின்றால் அந்த அப்பாவிகளின் உயிர்கள் எம்மை மன்னிக்காது.

யாழ்

sellamma said...

யார் இவர்கள்???
ஆறுதல் சொல்லவும் யாருமில்லை,,,
அரவணைக்கவும் யாரும் இல்லை,,,
நம் இனம்,,
நம் தமிழ் இனம்,,,,

பசியில் வாடினோம்,,
பஞ்சத்தில் புரண்டோம்,, - ஆயினும்
தன்மானம் இழக்காத
தமிழினம் எம்மினம்,,,

உரிமைகள் பறிக்கப்பட்டு
உணர்வுகள் முடக்கப்பட்டோம்,,
தட்டிக்கேட்டபோது,,
உயிர்களையும் பலிகொடுத்தோம்,,,

சிதறுண்ட உடல்களுக்கும்
சிதைந்த கட்டடங்களுக்கும்
சின்னமாய் இருக்கிறது
எம் தாய் மண்,,

எத்தனை பிணங்கள்
அவள் மடியில்,,
எம் மண்
செம்மண் ஆகியது
எம்மவர்களின் உதிரத்தால்,,

நீதி எங்கே???
தர்மம் எங்கே????
உயிர் தொலைத்த
எம்மக்களுக்கு
உலகம் சொல்லும் பதில் என்ன??
ஆயிரமாண்டு அரசாண்ட எம்மினம்
அடிமையாய் வாழ்வதா??
எல்லாத்துக்கும் காலம் வரும்,,
எங்களுக்கும் விடியல் வரும்,,,,

-எதிர்பார்ப்புடன் ஓர் தமிழன்

அன்புடன் நான் said...

மனம் கசக்கிறது.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner