May 06, 2010

எனக்குப் பிடித்த சாப்பாடு மண் புழு

ஒரு ஏழு வயது சின்னப் பையன்.. அவனது தாய் தந்தையர் வசதியானவர்கள்.எது கேட்டாலும் வாங்கிக் கொடுக்கக் கூடியவர்கள்..


ஆனால் இந்த சிறுவன் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவதாக இல்லை.
பெற்றோருக்கு இவனது சாப்பாடு தான் பெரிய பிரச்சினை..


சாதாரண சோறு,கறியிலிருந்து,பிட்சா,பேர்கர்,சைனீஸ் உணவு வகை, ஐஸ் க்ரீம்,சொக்லேட் என்று எதைக் கொடுத்தாலும் அவன் உண்பதாக இல்லை.


மிக மனக்கவலைக்குள்ளான பெற்றோர் ஒரு பிரபலமான சிறுவர் மன நல மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள்.


அவர் சிறுவர்களுக்கேற்ற விதத்தில் நயமாகப் பேசி அவர்களை திருத்த/குணப்படுத்தக் கூடியவர்.


நம்ம சிறுவனைப் பார்த்து.. 
"என்ன தம்பி அப்பா,அம்மா தாற சாப்பாடு சாப்பிடுறீங்க இல்லன்னு அப்பா அம்மா சொல்றாங்க" என்று மருத்துவர் உரையாடலை ஆரம்பித்தார்.


"எனக்கு விருப்பமான சாப்பாடுகளை அப்பா,அம்மா தாராங்க இல்லையே" என்றான் சிறுவன்.
  
"அப்படியா.. என்ன சாப்பாடு வேணும் என்று சொன்னால் உடனே நான் வாங்கித் தருகிறேன்.." - மருத்துவர்.
மருத்துவரும் ஐஸ் க்ரீம்,சைனீஸ், அது இது என்று பட்டியலிட்டுக் கொண்டு போனார்.. 


இடை மறித்த சிறுவன்.. "இதெல்லாம் வேண்டாம்.. எனக்கு மண்புழு தான் சாப்பிட வேணும்" என்றான்..
அருகே நின்ற பெற்றோர் திகைத்துப் போனார்கள். என்ன இது விளையாட்டு என்று சிறுவனைத் திட்டப் போக, மருத்துவர் அவர்களை அமைதிப்படுத்தி விட்டு, தனது உதவியாளை அழைத்து தோட்டத்தில் எங்காவது தோண்டி மண் புழு ஒன்றை எடுத்து வருமாறு சொன்னார்.


அவனும் அவ்வாறே கொண்டுவந்தான்..
"பச்சையாக இந்த மண் புழுவை சாப்பிட முடியம்.. அவிச்சுக் கொண்டு வர சொல்லுங்க" என்றான் அந்தப் பொல்லாத பயல்.


அப்படியே நடந்தது,..


அவித்த மண்புழு தட்டில் போட்டுக் கொண்டு வரப்பட்டது..


எல்லோரும் அருவருப்பாகப் பார்த்தாலும்,மிக அமைதியாக
"இதை ரெண்டாக வெட்டி தாங்க" என்றான் சிறுவன்.


வெட்டியும் வந்தது..


"டொக்டர் அங்கிளும் ஒரே துண்டு சாப்பிட்டால் தான் நான் சாப்பிடுவேன்" என்றான் அந்தப் பிடிவாதக்காரன்.

எல்லோரும் அதிர்ந்து போய்,அருவருப்பாகப் பார்த்தாலும், சிறுவர் மனம் அறிந்த அந்த மருத்துவர் ஒரு பேச்சுப் பேசாமல் இரண்டு துண்டுகளில் ஒன்றை எடுத்து லபக்கென்று வாயில் போட்டு அருவருப்பைக் காட்டாமல் விழுங்கினார்.


அப்பாடா.. இனியாவது சிறுவன் தனக்குப் பிடித்ததை சாப்பிடப் போகிறான் என்று பெற்றோரும்,மருத்துவரும்,உதவியாலும் பார்த்துக் கொண்டிருந்தால்,


"ஐய்யயோ.. எனக்கு விருப்பமான பெரிய மண் புழுத் துண்டை டொக்டர் அங்கிள் சாப்பிட்டிட்டார்.. எனக்கு இந்த சின்னத் துண்டு வேண்டாம்" என்று பெருங் குரலில் அழத் தொடங்கினான் சிறுவன்.
*** இன்று காலை விடியலில் சொன்ன கதை..
இதற்கு முன்னும் ஒரு தடவை சொன்னது.


முன்பொரு நாள் ஜெர்மனியில் உள்ள எனது சித்தப்பா பூபதி தான் இந்தக் கதையை எனக்கு சொன்னவர்.

Coming up கஞ்சிபாய் எனக்கு சொன்ன கதை..

8 comments:

கன்கொன் || Kangon said...

அய்...
இத நான் விடியக் கேட்டனே....

உதில வாறது நானாத்தான் இருக்கும்....
ஹி ஹி...

Bavan said...

ஹாஹாஹா.....

// கன்கொன் || Kangon said...
உதில வாறது நானாத்தான் இருக்கும்....
ஹி ஹி..//

நீங்கள் எப்ப ஜேர்மனிக்குப் போனீங்க?? #சந்தேகம்

ஆதிரை said...

அண்ணருக்கு மத்தியானச் சாப்பாட்டிற்காய் மண்புழு வறுவல் காத்திருக்குதாம்.

கன்கொன் || Kangon said...

// Bavan said...

நீங்கள் எப்ப ஜேர்மனிக்குப் போனீங்க?? #சந்தேகம் //

தம்பி!
பின்னூட்டம் போட்டா வாசிக்கோணும், கேள்வி கேக்கப்படாது...

காவல்காரன் போட்டுக் காட்டிடுவன்...

Subankan said...

ஆகா...

Bavan said...

அடுத்த முறை பதிவர் சந்திப்பில் லோசன் அண்ணா அனைவருக்கும் மண்புழுப் பொரியல் வழங்கி கெளரவிப்பார்..குறிப்பாக பச்சிளம் பாலகர்களுக்கு வழங்கப்படுமாம்.#FLASH_NEWS

Anonymous said...

k;

Anonymous said...

லோ, நீங்கள் நல்ல நடிகர் என்று சொல்லுறாங்க. கவனம்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner