May 22, 2010

இது யாழ்ப்பாணம் தானா?

ஏழு வருடங்களுக்குப் பிறகு யாழ்ப்பாணம் அண்மையில் சென்றிருந்தேன்..
எனக்கு முன் சென்றிருந்த நண்பர்கள் சொன்ன விஷயங்கள்,வெளிவரும் செய்திகள்,பதிவுகள் போன்றவற்றில் இருந்து யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட,ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்தாலும்,கொஞ்சம் ஆவலுடனும்,நிறைய பயத்துடனும் தான் எனது யாழ் பயணம் ஆரம்பித்தது.


என்னுடன் மூன்று சக சிங்கள அலுவலக நண்பர்களும்,கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் நண்பரொருவரும் வந்தனர்.
யாழ்ப்பாணம் மீது சிங்களவருக்கு இருக்கும் ஆர்வம் தனியானது.
நாம் பலர் நினைப்பது போல இடம் பிடிப்பது,ஆதிக்கம் காட்டுவதையும் தாண்டிய ஒரு அன்பும்,பிரமிப்பும்,ஆச்சரியமும் அவர்களுக்கு இருப்பதை உணர்கிறேன்.


"உங்களவர்களின் (பாருங்களேன் அவர்களின் வார்த்தைகளின் வலிமையையும் எம் வலியையும்) கட்டுப்பாட்டில் இருந்தநேரம் வர ஆசைப்பட்டேன்.. நிர்வாகமும் நீதியும் சீரா இருந்ததாமே" என்று ஆதங்கப்பட்டார் ஒரு சி.நண்பர்.


வவுனியா தாண்டும் வரை பற்பல விஷயங்கள்,அலுவலகப் புதினங்கள் பேசிக்கொண்டிருந்த நாம், அதற்குப் பின் A 9 வீதி வழியாக இரு பக்கமும் கண்ட காட்சிகளினால் கடந்த காலங்கள்,அழிவுகள்,அனர்த்தங்கள் பற்றிப் பேசினோம்..
சிங்களவர்களின் அடிப்படை எண்ணங்கள் பற்றி அறிந்துகொள்ளக் கூடியதாக (மீண்டும் ஒரு தடவை) இருந்தது.


தமிழர்களின் பிரச்சினை அவர்களுக்குப் புரிகிறது.. ஆனால் ஆரம்பம்,அடிப்படை, போராட்டம் ஆரம்பித்த நோக்கம்,தீர்வுக்கான வழிகள் பற்றி தெளிவாகப் புரியவில்லை.நான் கொஞ்சம் சில விஷயங்களைத் தெளிவாக்கினாலும் எவ்வளவு தூரம் அதனால் பயன் என்று ஆழமாகப் போகவில்லை.


கிளிநொச்சியின் அழிவுகள் தந்த மனத்துயரம் கொஞ்ச நஞ்சமல்ல..
இறுதியாக 2002 ,2003 களில் இந்தப் பக்கம் வந்தபோது பார்த்த அந்த அழகிய பிரதேசம் எங்கே...


வீதியின் இரு பக்கமும் சிதைந்து போய் நிற்கும் கட்டடங்கள் நடந்த கோர,அகோரத் தாக்குதல்களுக்கு சான்றுகள்..
எத்தனை உயிர்கள் என நினைக்கும்போது மனதை ஏதோ பிசைகிறது..
என்னுடன் வந்த சிங்கள நண்பர்களுக்கும் அதே உணர்வு தான் என்பதை அவர்களது ஆழ்ந்த மௌனங்களும்,நீண்ட பெரு மூச்சுக்களும் காட்டி நின்றன.
*(இதற்கும் எல்லா உயிர்கள் இறப்பதும் இறப்புத் தானே.. அங்கே இறக்கவில்லையா..இங்கே கொலைகள் நிகழவில்லையா என்ன என்ன கொடும தனமா பைத்திய்யக்காரக் கேள்விகளை எழுப்பவேண்டாம்.. அந்தந்த இடங்களில் அது பற்றிப் பேசுவோம்)


கொக்கிளாய்,ஆனையிறவு, கொடிகாமம் என்று தாண்டும் போதெல்லாம், சுய அடையாளங்கள்,பழைய சுவடுகள் தொலைவதை,திட்டமிட்டு மாறுவதை மனது உணர்கிற நேரம் வலித்தது.
இதற்கும் எம் யாருக்குமே வழியோன்றிருக்கப் போவதில்லை.


யாழ்ப்பாணம்..


பார்த்தவுடன் கலவை உணர்வுகள்.. ஒரு பரவசம். கொஞ்சம் கவலை.. கொஞ்சம் அதிர்ச்சி..


உத்தியோகப் பணி நிமித்தமே போன காரணத்தால் யாழ் நகரை விட்டு வேறு இடங்களுக்கு செல்ல முடியவில்லை.
பெரிதாக இந்த ஏழு,எட்டு ஆண்டுகளில் மாறியிராவிட்டாலும், பெற்றுள்ள மாற்றங்கள் பயம்+கவலை தருகின்றன.
பழைய அப்பாவித்தனமும்,அன்பும் நிறைந்த மக்கள் இன்னமும் மாறாமல் இருந்தாலும்,பட்ட துன்பங்களும்,இனியும் படுவோம் என்ற பயமும் அவர்களை துரித பணம் உழைக்கும் யுக்திகளைப் பின்பற்ற மாற்றுகிறது என உணர்ந்தேன்.


யாழ்ப்பாணம் இப்போதெல்லாம் தினமும் அதிகம் பேர் வந்துபோகும் சுற்றுலாத் தலமாக மாறியதும் இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.


எங்கு பார்த்தாலும் தமிழை விட சிங்கள மொழியையே அதிகம் கேட்டேன்.. இது யாழ்ப்பாணம் என்ற உணர்வு இம்முறை பல இடங்களில் மனதில் எழவில்லை.
தென் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் பார்க்கவேண்டும் என்று ஆர்வத்துடன் வந்திருந்த அப்பாவி,வசதி குறைந்த சிங்கள மக்களைப் பார்க்கையில் கொஞ்சம் பரிதாபமாகவும் இருந்தது.
இடிந்து,சிதிலமடைந்து கிடந்த மற்றும் பூட்டிக் கிடந்த,கை விடப்பட்ட வீடுகள்,கடைகள்,கட்டடங்களிலே இலவசமாகத் தங்கி, காணப்படும் அயல் கிணறுகளில் குளித்து,ஆடைகள் தோய்த்து அருகிலேயே சமைத்து யாழ் சுற்றிப் பார்க்கிறார்கள்.
சிலர் கைவிடப்பட்டு பாழடைந்து இருக்கும் முன்னாள் ரெயில் நிலையத்தில் தற்காலிக வசிப்பிடமாக்கி இருக்கிறார்கள்.


இப்போது நல்லூர் கோவிலடியில் கடை போட்டு,இடம் பிடிக்க இருந்தவர்கள் அங்குள்ள இப்போதைய பலம் வாய்ந்தவர்களால் துரத்தப்பட்டிருப்பது பிந்திய தகவல்.


இவர்கள் வருவதோ,ஜாலியாக இளைஞர்கள் ட்ரிப் வருவதோ பரவாயில்லை..ஆனால் எந்த விதத்திலும் அமைதியான யாழ் வாழ்க்கையையும்,கொஞ்சமாவது எஞ்சியுள்ள கலாசாரத்தையும் கெடுத்து விடக் கூடாது என்பதே அங்குள்ள பொதுவான ஆதங்கம் அங்குள்ள பலரிடமும் இருப்பதை பலருடன் (கல்விமான்கள்,மாணவர்கள்,சாமானியர்கள்,தொழில் செய்வோர்,நமது நேயர்கள்) பேசியபோது தெரிந்துகொண்டேன்.


முன்பு புல்லட் எழுதிய யாழ்ப்பாண இளைய தலைமுறையினர் கலாசார சீரழிவுக்கு உட்படுவதைப் பற்றிய பதிவை உங்களில் பலர் வாசித்திருக்கலாம்..அவ்வேளையில் அது பற்றிப் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்..
நான் அதற்கு முன்னரே (ஊடகத்தில் இருந்த காரணத்தினால்)அது பற்றி ஓரளவு தெரிந்திருந்தேன்.
ஆனால் நேரில் கண்டு,உணரக் கூடியதாக நான் இருந்த நான்கு நாட்களும் அமைந்தன.
கட்டுக்கள் அறுந்ததன் பின்னர் எல்லாம் திறந்துவிடப்பட்ட நிலை என்பது இது தானோ?
கவலையாகவே இருக்கிறது.


தாராள மது பாவனை,வீதிக்கு வீதி விடலைகளின் கூட்டங்கள்,அதீத செல்,கணினிப் பாவனை என்று தாறு மாறாக மாறியுள்ளது இளைஞரின் வாழ்க்கை முறை.
அதற்காக யாழ்ப்பாண இளைஞர் ஜாலியாக இருக்கக் கூடாதா என்று அபத்தமாக யாராவது கேட்டால் எதற்கும் ஒரு அளவு வேண்டும் தம்பி என்று தான் என்னால் சொல்ல முடியும்..


யாழ்ப்பாணம் இப்போது முழுக்க முழுக்க தன வாழ்க்கைக் கோலத்தைப் பணம் சம்பாதிக்கும் மையமாக மாற்றியுள்ளது.
நகர்ப்புற வீடுகள் இப்போது அநேகமாக தங்குமிடம்,விடுதிகளாக மாறி வருகின்றன.பழைய,உடைந்த கட்டடங்கள் எல்லாம் இப்போது ஹோடேல்களாக மாறுகின்றன.


முன்பெல்லாம் யாழ்ப்பாண மக்களின் முதலீடாக கல்வியே சொல்லப் பட்டது.இப்போது அப்படியில்லை என்றார் நான் சந்தித்த பிரபல யாழ் கல்லூரி ஒன்றின் அதிபர்.சிந்தனை,செயல்கள் எல்லாம் வேறு வேறாகி விட்டன.பழைய கட்டுப்பாடுகள்,கலாசார விழுமியங்கள் இல்லையாம்.
போரின் பின்னதான தாக்கங்கள் என்று இதை சொல்லலாமா?


யாழ்ப்பாணம் சிற்சில அபிவிருத்திகளைக் கண்டுள்ளது தான்.ஆனால் இன்னும் பல ஆண்டுகள் செல்லும் அந்தப் 'பழைய' யாழ்ப்பாணத்தை நாம் காண.
அதற்கிடையில் இன்னும் எத்தனை எத்தனை வேண்டத்தகா மாற்றங்கள் நாம் அனுபவிக்கப் போகிறோமோ?


நான் 1983 முதல் 1990 வரை யாழ்ப்பாணத்தில் இருந்த களத்தில் எனக்கு ஞாபகமிருந்த அமுத சுரபி இருந்த இடம்,அப்பா வேலை செய்த ஆஸ்பத்திரி வீதி-இலங்கை வங்கிக் கிளை, சீமாட்டி ஆடையகம்,விமாகி Vimaki இருந்த இடம், யாழ் கோட்டைக்குப் போகும் வழியில் இருந்த இடங்கள்,பஸ் நிலையம் என்ற பல ஞாபகமிருந்த அடையாளங்கள் பெரிதாக மாறவில்லை.
ஆனாலும் இது முன்னேற்றத்தின் தேக்கம் என்பதும் புரிகிறது.


ஆனாலும் ஏழு வருடங்களில் இடம்பெற்றுள்ள அந்த அப்பாவித் தனம் மாறி கொழும்பு போன்ற நகரங்களுக்கே உரிய ஒரு செயற்கைத்தனம் பலருக்கு தொற்றி இருப்பது ரசிக்க முடியவில்லை.
யாழ் நூலகம், கோட்டை (சரித்திரப் பொக்கிஷம் உள்ளே சிதிலமடைந்து கிடக்கிறது), பண்ணைப் பாலம், நல்லூர் ஆலய முன்றல், ஈராண்டு கல்வி கற்ற யாழ் இந்துக் கல்லூரி என்று சில முக்கிய இடங்களை அவசர அவசரமாகப் பார்த்தேன்.


கிடைத்த அவகாசத்தில் பண்ணைப் பலம் வழியாக ஊர்காவற்றுறை பார்க்கப் போனோம்.இரு பக்கமும் கடல் வழியாகப் பாதையில் பயணிக்கையிலும் மாற்றங்கள் தெரியவில்லை.வெறிச்சோடிப் போயிருக்கும் ஊராகேவ் கானப்பட்ட்டது. கடற்கரையில் சில நிமிடங்களும் இருக்கவில்லை. ஆளுக்கொரு ஒரு வாழைப்பழமும் குளிர்பானமும் அருந்தி விட்டுக் கிளம்பி விட்டோம்.


 யாழ்ப்பாணத்தின் புதிய அடையாளங்களாக ரியோ(Rio) ஐஸ்க்ரீமும் கைதடி மிக்சரும் மாறி இருக்கிறது.
பெயர்ப் பலகைகளில் 'புதிய' யாழ்ப்பாணம் தெரிகிறது.
வந்தேறு குடிகள் வருவார்கள் என்ற அறிகுறி தெளிவாகத் தெரிகிறது.
மக்களை சுற்றுப் பிரயாணம் அனுப்ப ஆவன செய்யும் அரசு,இங்கிருந்து வெளியேறி அகதி வாழ்வை இரு தசாப்தமாக வாழும் அப்பாவி முஸ்லிம்கள் பற்றியும் கொஞ்சம் அக்கறைப் படலாமே என மனம் அங்கலாய்க்கிறது.


உடலை எரித்த வெயிலையும் தாண்டியதாய் சுய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாய்த் தொலைத்து வரும் யாழ்ப்பாணமும்,அப்பாவித் தனத்தை இழந்து வரும் யாழ் நகர மக்களும் மாறி வருவது மீண்டும் பயணித்துக் கொழும்பு வருகையில் மனதை சுட்டது.


இது நான்கு நாட்களில் நான் சந்தித்த மக்கள்,இடங்கள் தந்த உணர்வுகளாக இருக்கலாம்.உண்மையும் இது தானா??? மீண்டும் ஒரு தடவை அடுத்த மாதம் அங்கே செல்லும்போதும்,என் ஊர் இணுவில் செல்லும்போதும் மேலும் அறியலாம் என்று நம்புகிறேன்.


யாழ் பயணம் பற்றிய ஒரு புகைப்படப் பதிவையும் அடுத்து இடுகிறேன்.. எழுத்துக்கள் சொல்லாததையும் படங்கள் சொல்லும்.

70 comments:

ஆ! இதழ்கள் said...

:_(

Abarnaa said...

அண்ணா உங்களின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தின் நிலமையை அறிய மிகவும் வேதனையாக உள்ளது. படங்களும் நீங்கள் எழுதிய விதமும் யாழ்ப்பாணத்தை அப்படியே கண்முன் நிறுத்துகின்றது. நன்றி அண்ணா....

Subankan said...

//தாராள மது பாவனை,வீதிக்கு வீதி விடலைகளின் கூட்டங்கள்,அதீத செல்,கணினிப் பாவனை என்று தாறு மாறாக மாறியுள்ளது இளைஞரின் வாழ்க்கை முறை.//

வெள்ளத்துக்கு அணை இல்லேண்ணே :(

கன்கொன் || Kangon said...

பல யதார்த்தமான வரிகளைக் கண்டேன் அண்ணா...

// பட்ட துன்பங்களும்,இனியும் படுவோம் என்ற பயமும் அவர்களை துரித பணம் உழைக்கும் யுக்திகளைப் பின்பற்ற மாற்றுகிறது என உணர்ந்தேன். //

செயற்கைத்தனம் குடியேறிவிட்டது என்ற வார்த்தைப் பதத்தைவிட வேறு பதமே கிடையாது.

உண்மையில் இம்முறை யாழ்ப்பாணத்தை என்னால் முன்பளவு இரசிக்க முடியவில்லை...
நிறைய வீடுகள் தங்குமிட வீடுகளாக மாறி தமிழை விட சிங்கள மொழிப் பெயர்ப்பலகைகள் பளிச்சிடுகின்றன...
சிங்கள மொழியில் எழுதக்கூடாதென்றில்லை, ஆனால் அது ஏதோ பயங்கர செயற்கைத்தனமாக எழுதப்பட்டிருப்பதாகப் பட்டது.

எல்லாவற்றுக்கும் பெருமூச்சு விடுவது மட்டுமே எங்கள் வாடிக்கையாகிப் போனது... :(

நல்ல பதிவு அண்ணா...

(தமிழிஷ் பட்டை எங்கே? )

சுரேஷ் said...

கட்டுப்பாட்டில் இருந்து வெளியில் வந்தவுடன் ஆடும் ஆட்டம் பிழை என மிக விரைவில் உண்ர்ந்து கொள்வர் நம்வர்.

K said...

பகிர்வுக்கு நன்றி...

B.Karthik said...

பகிர்வுக்கு நன்றி...

RJ Dyena said...

:((

அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா.... நானும் இந்த ஆகஸ்ட் மாதமளவில் ஏழாலை(அம்மாவின் ஊர்), மானிப்பாய்(அப்பாவின் ஊர்) செல்லும் ஆவலில் இருக்கிறேன்...

கானா பிரபா said...

லோஷன், முழுதையும் வாசித்தேன், கலவையான உணர்வுகள் தான் வந்திருக்கு

தமிழ்நதி said...

எல்லாவற்றுக்கும் மெளன சாட்சிகளாக இருக்கலாம். அதுதான் நமக்கு நல்லது:) கொஞ்சம் பட்டும் படாத தன்மையை அவதானித்தேன். அது நீங்கள் இருக்கும் இடத்தினால் ஏற்பட்டதாக இருக்கலாம். பாதுகாப்பு என்பது எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருக்கிறது லோஷன். உங்களுக்கு பழைய அனுபவங்கள் வேறு இருக்கிறது... நியாயமான பயந்தான்.

Anonymous said...

அண்ணா பீச் பக்கம் போயிருந்தீங்கன்னா வாந்தியே எடுத்திருப்பீங்க நம்மாளுக பண்ற அரியண்டங்களை பாத்து.

Anonymous said...

//நிர்வாகமும் நீதியும் சீரா இருந்ததாமே//
காமடி பண்ணாதீங்க..

// சுய அடையாளங்கள்,பழைய சுவடுகள் தொலைவதை,திட்டமிட்டு மாறுவதை மனது உணர்கிற நேரம் வலித்தது.//
//கொஞ்சமாவது எஞ்சியுள்ள கலாசாரத்தையும் கெடுத்து விடக் கூடாது//
//வீதிக்கு வீதி விடலைகளின் கூட்டங்கள்,அதீத செல்,கணினிப் பாவனை என்று தாறு மாறாக மாறியுள்ளது இளைஞரின் வாழ்க்கை முறை.//
அதாவது யாழ்ப்பாணம் மாறக்கூடாது. அது அப்படியே பின்தங்கியே இருக்கணுமா? ஆனா நீங்க கொழும்புல, பரிஸ்ல கூத்தாடுவீங்க.. என்ன நியாயம் சாரே?

//துரித பணம் உழைக்கும் யுக்திகளைப் பின்பற்ற மாற்றுகிறது //
யாழ்ப்பாணம் எப்போதும் அப்படித்தான் இருந்திருக்கிறது. அப்படித்தான் ஆங்கிலேயர்கள் காலத்தில் அதிக பயன்களை திருடிக்கொண்டது இல்லையா?

சுருக்கமாக சொல்வதானால்

யாழ்ப்பாணத்தவர்களையும் உங்களவர்களாக நினையுங்கள். உங்களைப்போல் அவர்களும் சந்தோஷமாக வாழட்டும். மீண்டும் பகடைக்காயாக ஆக்கவேண்டாம்.

பால்குடி said...

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலையை சொல்லியிருக்கிறீர்கள். தமிழர்களின் தனிச் சிறப்புகள், பண்பாடு கலாசாரம் என்பன திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டுக் கொண்டிருப்பது கண்கூடு. அதனை மட்டும் பதிவுகளில் சொல்லிக் கொண்டே இருப்பதை விடுத்து இதனைத் தடுப்பதற்கும் ஏதாவது வழி வகைகள் இருக்குமா என நாம் சிந்திக்க முடியாதா? அதனைச் செயற்படுத்த முடியாதா? அதாவது சிதைக்கப்படுபவர்களுக்கு வழி காட்ட முடியாதா?
(//தாராள மது பாவனை,வீதிக்கு வீதி விடலைகளின் கூட்டங்கள்,அதீத செல்,கணினிப் பாவனை என்று தாறு மாறாக மாறியுள்ளது இளைஞரின் வாழ்க்கை முறை.)

Anonymous said...

ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? யாழ்ப்பாணத்திற்கும் வெற்றி என்று கூவி விற்கவில்லையா நீங்கள்? இசை நிகழ்ச்சி நடத்தவில்லையா? மன்னாரிலும் கொழும்பிலும் நீர்கொழும்பிலும் தரம்கெட்ட தென்னிந்திய கலைஞர்களை கொண்டுவந்து காசு உழைக்கவில்லையா? உங்கள் வானொலியில்கூட Socializing என்று Clubbingக்கு (ICBT) ஆட்களை அழைக்கவில்லையா? இப்போது திடீரென எங்கிருந்து வந்தது இந்த கலாச்சார பாதுகாப்பு? Y want monopolistic rights? என்ன கொடும ?

கன்கொன் || Kangon said...

// உங்களைப்போல் அவர்களும் சந்தோஷமாக வாழட்டும். //

ha ha...

எது அதீத மதுப்பாவனை?
திரும்புமிடமெங்கும் மதுபானசாலைகள்?
சட்டரீதியற்ற தொழில்கள்?
வீதியில் அலையும் மாணவர் பருவம்?

இவையெல்லாம் தான் சந்தோசங்கள் என்றால் நாங்கள் இங்கே சந்தோசமாக இல்லை.

ஒரு கருத்தை எதிர்ப்பது தவறல்ல,
ஆனால் எதிர்க்க வேண்டுமென்பதற்காக எதிர்ப்பது தவறு.

ARV Loshan said...

ஆ! இதழ்கள் said...
:_(//

ம்ம் :(

====================

Abarnaa said...
அண்ணா உங்களின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தின் நிலமையை அறிய மிகவும் வேதனையாக உள்ளது. படங்களும் நீங்கள் எழுதிய விதமும் யாழ்ப்பாணத்தை அப்படியே கண்முன் நிறுத்துகின்றது. நன்றி அண்ணா....


//

வருகை +உணர்வுக்கு நன்றி அபர்ணா

===========================

Subankan said...
//தாராள மது பாவனை,வீதிக்கு வீதி விடலைகளின் கூட்டங்கள்,அதீத செல்,கணினிப் பாவனை என்று தாறு மாறாக மாறியுள்ளது இளைஞரின் வாழ்க்கை முறை.//

வெள்ளத்துக்கு அணை இல்லேண்ணே :(//

கட்டனும் இல்லாவிட்டால் காட்டாறாகிவிடும்..

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...


உண்மையில் இம்முறை யாழ்ப்பாணத்தை என்னால் முன்பளவு இரசிக்க முடியவில்லை...
நிறைய வீடுகள் தங்குமிட வீடுகளாக மாறி தமிழை விட சிங்கள மொழிப் பெயர்ப்பலகைகள் பளிச்சிடுகின்றன...
சிங்கள மொழியில் எழுதக்கூடாதென்றில்லை, ஆனால் அது ஏதோ பயங்கர செயற்கைத்தனமாக எழுதப்பட்டிருப்பதாகப் பட்டது.//

முற்றிலும் உண்மை..

எல்லாவற்றுக்கும் பெருமூச்சு விடுவது மட்டுமே எங்கள் வாடிக்கையாகிப் போனது... :(/

அதைத் தானே செய்கிறேன்..:(

(தமிழிஷ் பட்டை எங்கே? )//

இதுவரை இயங்கவில்லை..

ARV Loshan said...

சுரேஷ் said...
கட்டுப்பாட்டில் இருந்து வெளியில் வந்தவுடன் ஆடும் ஆட்டம் பிழை என மிக விரைவில் உண்ர்ந்து கொள்வர் நம்வர்.//

அது கட்டுப்பாடு.. அடக்குமுறை இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.. துரிதமாய்.

==================

K said...
பகிர்வுக்கு நன்றி...//

நன்றி வருகைக்கு

========================

B.Karthik said...
பகிர்வுக்கு நன்றி...//

நன்றி வருகைக்கு

KANA VARO said...

நானும் இந்த வருடம் இரண்டு தடவை போய் வந்திருக்கின்றேன். இரண்டு தடவையும் வீட்டை விட்டு (கோவிலை தவிர) எங்கும் செல்லவில்லை, நான்கு நாட்கள் அனாலும் நன்றாக தொகுத்து எழுதியிருக்கிறீர்கள்.

அது சரி இணுவிலுக்கு எப்ப?


//(தமிழிஷ் பட்டை எங்கே? )//

இதுவரை இயங்கவில்லை..//

எனக்கும் தமிழிஷில் சிலவேளைகளில் வாக்குப்பட்டை பிரச்சினை வருகின்றது

ARV Loshan said...

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...
:((

அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா.... நானும் இந்த ஆகஸ்ட் மாதமளவில் ஏழாலை(அம்மாவின் ஊர்), மானிப்பாய்(அப்பாவின் ஊர்) செல்லும் ஆவலில் இருக்கிறேன்...//

சொந்த ஊர்,பிறந்த மண் பார்க்கு ஆசை யாருக்கும் பெரும் மகிழ்ச்சி தரக்கூடியதே..நல்லபடியாகப் போய் வாருங்கள்.


===============

கானா பிரபா said...
லோஷன், முழுதையும் வாசித்தேன், கலவையான உணர்வுகள் தான் வந்திருக்கு//

ம்ம்ம்.. இதுவும் ஒரு உலாத்தல் தான் அண்ணா :)

ஆனால் உல்லாசம் இல்லை.உளைவு தான் அதிகம்

Anonymous said...

//எது அதீத மதுப்பாவனை?
திரும்புமிடமெங்கும் மதுபானசாலைகள்?
சட்டரீதியற்ற தொழில்கள்?
வீதியில் அலையும் மாணவர் பருவம்?//

இவையாவும் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல கொழும்பிலும் எதிர்க்கப்படவேண்டும். ஏன் யாழ்ப்பாணத்தை மட்டும் எதிர்பார்க்கிறீர்கள்? உங்களுக்கு மட்டும் விதிவிலக்கு?

UK visaமுதல் Bank statement எடுப்பதுவரை சட்டமீறல்கள் இல்லையா?

ARV Loshan said...

தமிழ்நதி said...
எல்லாவற்றுக்கும் மெளன சாட்சிகளாக இருக்கலாம். அதுதான் நமக்கு நல்லது:) கொஞ்சம் பட்டும் படாத தன்மையை அவதானித்தேன். அது நீங்கள் இருக்கும் இடத்தினால் ஏற்பட்டதாக இருக்கலாம். பாதுகாப்பு என்பது எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருக்கிறது லோஷன். உங்களுக்கு பழைய அனுபவங்கள் வேறு இருக்கிறது... நியாயமான பயந்தான்.//

ம்ம் உங்களைப் போல மனதில் இருக்கும் எல்லாவற்றையும் இங்கே கொட்ட முடியாது.

பயம்,சுய முற் பாதுகாப்பு,எச்சரிக்கை இப்படிப் பலவாறு சொல்லலாம்

EKSAAR said...

யாழ்ப்பாணத்து வெற்றி என்ற பின்னணியில் அபான்ஸ் டீசேர்ட் இல் நீங்கள்.. படம் நிறைய்ப்பேசுகிறது..

அஜுவத் said...

இந்த 2010 புதுவருடம் எனக்கு யாழ் நகரிலேயே பிறந்தது; நீங்கள் சொன்னது போல தலைநகரில் நிற்பது போல உணர்ந்தேன். ஆங்காங்கே சி எங்கெங்கும் கேட்கும் சிங்கள வார்த்தைகள், வீதிகளில் தெரியாத இடம் தேடி அலையும் புதியவர்கள் என்று பல. என்னப்பார்த்தும் வழி கேட்டாங்க ஏயா நானே இப்பதான் முதல்தடவ வந்திருக்கிறன்; போவயா க........................போ.................ல கலவரம் பண்ணிக்கிட்டு.........

movithan said...

அழகான ஆதங்கமான பதிவு.

Anonymous said...

Mr.Loshan, ஒரு சகோதரர் கூறியதையே நானும் உங்களுக்கு கூறுகிறேன்.
//உங்களைப் போல் உங்களைப் போல்அவர்களும் சந்தோஷமாக வாழட்டும். //

ARV Loshan said...

Anonymous said...
அண்ணா பீச் பக்கம் போயிருந்தீங்கன்னா வாந்தியே எடுத்திருப்பீங்க நம்மாளுக பண்ற அரியண்டங்களை பாத்து.//

போகவில்லை

===================

Anonymous said...
//நிர்வாகமும் நீதியும் சீரா இருந்ததாமே//
காமடி பண்ணாதீங்க..//

அந்த நேரம் நீங்கள் போயிருந்தீங்களா?//அதாவது யாழ்ப்பாணம் மாறக்கூடாது. அது அப்படியே பின்தங்கியே இருக்கணுமா? ஆனா நீங்க கொழும்புல, பரிஸ்ல கூத்தாடுவீங்க.. என்ன நியாயம் சாரே?//

பின்தங்கி? தயவு செய்து பதிவின் முக்கியமான இடங்களைப் பார்க்கவும்..
யாழ்ப்பாணத்துக்காக உருகும் தென் பகுதி வேடதாரிகள் போல நீங்களும் நடிக்காதீர்கள் தோழரே..
அதற்காக யாழ்ப்பாண இளைஞர் ஜாலியாக இருக்கக் கூடாதா என்று அபத்தமாக யாராவது கேட்டால் எதற்கும் ஒரு அளவு வேண்டும் தம்பி என்று தான் என்னால் சொல்ல முடியும்..


//துரித பணம் உழைக்கும் யுக்திகளைப் பின்பற்ற மாற்றுகிறது //
யாழ்ப்பாணம் எப்போதும் அப்படித்தான் இருந்திருக்கிறது. அப்படித்தான் ஆங்கிலேயர்கள் காலத்தில் அதிக பயன்களை திருடிக்கொண்டது இல்லையா?//

உங்களது 'உண்மை' அக்கறை இப்போது புரிகிறது..

சுருக்கமாக சொல்வதானால்

யாழ்ப்பாணத்தவர்களையும் உங்களவர்களாக நினையுங்கள். உங்களைப்போல் அவர்களும் சந்தோஷமாக வாழட்டும். மீண்டும் பகடைக்காயாக ஆக்கவேண்டாம்.//

ஆகா.. என்ன ஒரு அக்கறை.. போங்கைய்யா உங்க போக்கத்த பிழைப்பைப் பார்த்துக் கொண்டு..
முதலில் முதுகெலும்புள்ள ஆம்பளையாய் பெயருடன் வாருங்கள்..

ARV Loshan said...

பால்குடி said...
யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலையை சொல்லியிருக்கிறீர்கள். தமிழர்களின் தனிச் சிறப்புகள், பண்பாடு கலாசாரம் என்பன திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டுக் கொண்டிருப்பது கண்கூடு. அதனை மட்டும் பதிவுகளில் சொல்லிக் கொண்டே இருப்பதை விடுத்து இதனைத் தடுப்பதற்கும் ஏதாவது வழி வகைகள் இருக்குமா என நாம் சிந்திக்க முடியாதா? அதனைச் செயற்படுத்த முடியாதா? அதாவது சிதைக்கப்படுபவர்களுக்கு வழி காட்ட முடியாதா?//

அதுக்குத் தான் வழிவகை செய்ய இப்படியாக வெளிப்படுத்தவேண்டி இருக்கிறது..
இதற்கே எத்தனை போலி அக்கறையாளர்கள்,அந்த தீய பழக்கங்களின் பினாமிகள் எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்கள்.. சந்தோஷமாக வாழவிடட்டாம்.. என்ன கொடும இது..

EKSAAR said...

மக்களை சுற்றுப் பிரயாணம் அனுப்ப ஆவன செய்யும் அரசு என்பது எனக்கு புரியவில்லை. அரசு காசுகுடுத்து டூர் அனுப்புதா?

Unknown said...

நல்ல பகிர்வு லோஷன். எப்போதாவது வாய்ப்புக் கிடைத்தால் யாழ்ப்பாணத்தைச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. நல்லூர்க்கோவிலை விகாரமாக்குவதற்கு முன்பாகவாவது சென்று பார்த்துவிட வேண்டும்.

//துரித பணம் உழைக்கும் யுக்திகளைப் பின்பற்ற மாற்றுகிறது//

இதை விளக்கமாக எழுதாததனால் சட்டத்திற்குப் புறம்பான யுக்திகளா இல்ல சட்டத்திற்குட்பட்ட யுக்திகளா என்று புரியவில்லை.

ஆனால் கனடாவின் டொரோண்டோவில் பொருளாதார ரீதியாக விரைவில் முன்னேறும் சமூகமாக இலங்கைத் தமிழ் சமுதாயமே இருக்கிறது. ஏதிலியாகக் கனடாவில் குடி புகுவோருக்கு கனடிய அரசு ஒரு அப்பார்ட்மெண்ட் தரும். வேலை பார்ப்பதற்கு அனுமதியும் உண்டு. மற்ற இன மக்கள் குறைந்தது 5 வருடமாவது அந்த அப்பார்ட்மெண்டிட்ல் இருப்பார்கள். தமிழர்கள் அதிக பட்சம் ஒரு வருடம். அதற்குள் ஒரு வேலைக்கு இரண்டு வேலையாகப் பார்த்து பணம் சேர்த்து வெளியேறிவிடுகிறார்கள். இவை அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்ட வேலைகளே. இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத் தமிழர்கள். ஒரு வேளை யாழ்த்தமிழர்களின் ரத்தத்தில் ஊறிய திறமையோ என்னவோ?

Anonymous said...

//முதலில் முதுகெலும்புள்ள ஆம்பளையாய் பெயருடன் வாருங்கள்..//

யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்தில் மௌனமாக இருந்ததெல்லாம்? அப்போது இல்லாத முதுகெலும்பு இப்ப?
தனக்கு தன்க்கு என்டா சுளகு படக்கு படக்கு..

ARV Loshan said...

Anonymous said...
ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? யாழ்ப்பாணத்திற்கும் வெற்றி என்று கூவி விற்கவில்லையா நீங்கள்? இசை நிகழ்ச்சி நடத்தவில்லையா? மன்னாரிலும் கொழும்பிலும் நீர்கொழும்பிலும் தரம்கெட்ட தென்னிந்திய கலைஞர்களை கொண்டுவந்து காசு உழைக்கவில்லையா? உங்கள் வானொலியில்கூட Socializing என்று Clubbingக்கு (ICBT) ஆட்களை அழைக்கவில்லையா? இப்போது திடீரென எங்கிருந்து வந்தது இந்த கலாச்சார பாதுகாப்பு? Y want monopolistic rights? என்ன கொடும ?//முதலில் அனானியாக சரியாக செயற்படுவது என்பதை சில experts இடம் சரியாக அறிந்துகொள்ளுங்கள்..
உங்கள் வலைப்பதிவில் பேசப்பட்ட சில பொருள்களைப் பேசியும்,சில வார்த்தைகள் மூலமும் உங்களை காட்டிக் கொடுத்து விடுகிறீர்கள்.

// யாழ்ப்பாணத்திற்கும் வெற்றி என்று கூவி விற்கவில்லையா நீங்கள்? இசை நிகழ்ச்சி நடத்தவில்லையா? //

அது கலாசார சீரழிவா? இசை நிகழ்ச்சிக்கும் நான் சொன்ன அழிவுகளுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளன?//மன்னாரிலும் கொழும்பிலும் நீர்கொழும்பிலும் தரம்கெட்ட தென்னிந்திய கலைஞர்களை கொண்டுவந்து காசு உழைக்கவில்லையா? //

தரம் கேட்ட? வார்த்தைகளில் பண்பு தேவை தம்பி.

ஆடுபவர்களயோ,அரைகுறைகலையோ இங்கே அழைத்து வரவில்லை.அடுத்து எமது நிறுவனம் அழைக்கவில்லை. ஏற்பாடு செய்தவர்கள் நிதி திரட்டியது எதற்காக என்பதை விளம்பரம் போனபோது அறிந்திருப்பீர்கள்.வானொலியில்கூட Socializing என்று Clubbingக்கு (ICBT) ஆட்களை அழைக்கவில்லையா? //

ஆகா.. இப்போது புரிந்திருக்கும் எல்லோருக்கும் நீங்கள் யாரென்று.எமது சகோதர ஆங்கில வானொலியின் நிகழ்வின் தமிழ் விளம்பரமே அது.இப்போது திடீரென எங்கிருந்து வந்தது இந்த கலாச்சார பாதுகாப்பு? Y want monopolistic rights? என்ன கொடும ?//

இது திடீரென வந்ததல்ல.. கொழும்பையும் இந்தப் பிரதேசங்களையும் திருத்த முடியாது.அத்தோடு இங்கே இது புதிதும் இல்லை.ஆனால் யாழ்ப்பாணம் அப்படியல்ல.. இப்படியும் இருந்ததும் அல்ல.. அது தான்.. உங்களுக்கெங்கே இதெல்லாம் புரியும்?
உங்க பக்கம் அமோகமா உங்க மீது தாக்குதல் நடக்குது போல.. அதையும் கொஞ்சம் பாருங்க..

இன்னொரு சின்ன அட்வைஸ் எதையும் ஆராய முதல் விவரமா விளக்கமா அறிஞ்சு கொள்ளுங்க. பிறகு அனானியா வரலாம்

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...
// உங்களைப்போல் அவர்களும் சந்தோஷமாக வாழட்டும். //

ha ha...

எது அதீத மதுப்பாவனை?
திரும்புமிடமெங்கும் மதுபானசாலைகள்?
சட்டரீதியற்ற தொழில்கள்?
வீதியில் அலையும் மாணவர் பருவம்?

இவையெல்லாம் தான் சந்தோசங்கள் என்றால் நாங்கள் இங்கே சந்தோசமாக இல்லை.

ஒரு கருத்தை எதிர்ப்பது தவறல்ல,
ஆனால் எதிர்க்க வேண்டுமென்பதற்காக எதிர்ப்பது தவறு.//

சரியா சொன்னீங்க.. முதலில் இவர்களை யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒருவரை சந்திக்க செய்யவேண்டும்..

ARV Loshan said...

VARO said...


அது சரி இணுவிலுக்கு எப்ப?//

அநேகமாக அடுத்த மாதம்.


//(தமிழிஷ் பட்டை எங்கே? )//

இதுவரை இயங்கவில்லை..//

எனக்கும் தமிழிஷில் சிலவேளைகளில் வாக்குப்பட்டை பிரச்சினை வருகின்றது//

இது முன்பொரு தடவை போல தமிளிஷ் தலமே முடங்கிய பிரச்சினை போல..

ARV Loshan said...

Anonymous said...
//எது அதீத மதுப்பாவனை?
திரும்புமிடமெங்கும் மதுபானசாலைகள்?
சட்டரீதியற்ற தொழில்கள்?
வீதியில் அலையும் மாணவர் பருவம்?//

இவையாவும் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல கொழும்பிலும் எதிர்க்கப்படவேண்டும். ஏன் யாழ்ப்பாணத்தை மட்டும் எதிர்பார்க்கிறீர்கள்? உங்களுக்கு மட்டும் விதிவிலக்கு?//

யார் சொன்னார்கள் விதிவிலக்கு என்று?

அங்கே இப்போது தான் இவை முளைவிடுகின்றன என்பதனால் இப்போதே தடுத்து நிறுத்தவேண்டும் என்கிறோம்.. இங்கே ஒன்றும் செய்ய முடியாதென்பதால் நாமே விலகி நடக்கிறோம்..

ARV Loshan said...

EKSAAR said...
யாழ்ப்பாணத்து வெற்றி என்ற பின்னணியில் அபான்ஸ் டீசேர்ட் இல் நீங்கள்.. படம் நிறைய்ப்பேசுகிறது..//

யாழ்ப்பாணத்துக்கு..

ம்ம் படம் நிறையவே பேசவேண்டும்..

அங்கும் வெற்றி,அபான்ஸ் இன்னும் என்னவெல்லாம் நன்மை பயக்குமோ அவையெல்லாம் செல்ல வேண்டும்,..

சீரழிவுகள்,அழிவுகள் அல்ல..


அது சரி இப்ப தான் நம்ம பக்கம் வாரீங்களா? முதலேயே வந்தீங்கன்னு நினைச்சேன்..

ARV Loshan said...

அஜுவத் said...
இந்த 2010 புதுவருடம் எனக்கு யாழ் நகரிலேயே பிறந்தது; நீங்கள் சொன்னது போல தலைநகரில் நிற்பது போல உணர்ந்தேன். ஆங்காங்கே சி எங்கெங்கும் கேட்கும் சிங்கள வார்த்தைகள், வீதிகளில் தெரியாத இடம் தேடி அலையும் புதியவர்கள் என்று பல. என்னப்பார்த்தும் வழி கேட்டாங்க ஏயா நானே இப்பதான் முதல்தடவ வந்திருக்கிறன்; போவயா க........................போ.................ல கலவரம் பண்ணிக்கிட்டு.........//

ம்ம் எனக்கும் நடந்தது..

===============

malgudi said...
அழகான ஆதங்கமான பதிவு.//

நன்றி வருகைக்கு

ARV Loshan said...

Anonymous said...
Mr.Loshan, ஒரு சகோதரர் கூறியதையே நானும் உங்களுக்கு கூறுகிறேன்.
//உங்களைப் போல் உங்களைப் போல்அவர்களும் சந்தோஷமாக வாழட்டும். //

மிஸ்டர்.பெயரில்லாதவர், உங்கள் சகோதரருக்கு சொன்ன தே பதில்..

இந்த அழிவுகள்,அபத்தங்கள் எல்லாம் தான் சந்தோஷமா?

நல்லாத் தான் அக்கறைப்படுறீங்க

Anonymous said...

1990 முதல் 2009 வரை புலிகள் (அட்டைகளின்) ஆட்சியில்
இந்த தொடரைப்படித்ததில்லையா?
http://mullaimukaam.blogspot.com

ARV Loshan said...

EKSAAR said...
மக்களை சுற்றுப் பிரயாணம் அனுப்ப ஆவன செய்யும் அரசு என்பது எனக்கு புரியவில்லை. அரசு காசுகுடுத்து டூர் அனுப்புதா?//

தேர்தல் காலத்தில் நடந்தத சொன்னேன்.. காசு மட்டுமில்லை.. கொடுக்கப்பட்டவை இன்னும் பல..

ARV Loshan said...

முகிலன் said...
நல்ல பகிர்வு லோஷன். எப்போதாவது வாய்ப்புக் கிடைத்தால் யாழ்ப்பாணத்தைச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. நல்லூர்க்கோவிலை விகாரமாக்குவதற்கு முன்பாகவாவது சென்று பார்த்துவிட வேண்டும்.//

இப்போதே வாருங்கள் முகிலன்.. இந்த நிலையில் பார்ப்பது நல்லது..//துரித பணம் உழைக்கும் யுக்திகளைப் பின்பற்ற மாற்றுகிறது//

இதை விளக்கமாக எழுதாததனால் சட்டத்திற்குப் புறம்பான யுக்திகளா இல்ல சட்டத்திற்குட்பட்ட யுக்திகளா என்று புரியவில்லை.//

இரண்டுமே தான்..

ஆனால் கனடாவின் டொரோண்டோவில் பொருளாதார ரீதியாக விரைவில் முன்னேறும் சமூகமாக இலங்கைத் தமிழ் சமுதாயமே இருக்கிறது. ஏதிலியாகக் கனடாவில் குடி புகுவோருக்கு கனடிய அரசு ஒரு அப்பார்ட்மெண்ட் தரும். வேலை பார்ப்பதற்கு அனுமதியும் உண்டு. மற்ற இன மக்கள் குறைந்தது 5 வருடமாவது அந்த அப்பார்ட்மெண்டிட்ல் இருப்பார்கள். தமிழர்கள் அதிக பட்சம் ஒரு வருடம். அதற்குள் ஒரு வேலைக்கு இரண்டு வேலையாகப் பார்த்து பணம் சேர்த்து வெளியேறிவிடுகிறார்கள். இவை அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்ட வேலைகளே. இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத் தமிழர்கள். ஒரு வேளை யாழ்த்தமிழர்களின் ரத்தத்தில் ஊறிய திறமையோ என்னவோ?//

உண்மை தான்.. எம்மவர்கள் கடும் உழைப்பாளிகள்.. அத்தோடு கல்வியிலும் ஆர்வமுள்ளவர்கள்.அவர்கள் இப்படியாவதன் ஆதங்கமே இது

ARV Loshan said...

Anonymous said...
//முதலில் முதுகெலும்புள்ள ஆம்பளையாய் பெயருடன் வாருங்கள்..//

யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்தில் மௌனமாக இருந்ததெல்லாம்? அப்போது இல்லாத முதுகெலும்பு இப்ப?
தனக்கு தன்க்கு என்டா சுளகு படக்கு படக்கு..//

மெளனமாக? ஹா ஹா.. உங்களை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது..

=============Anonymous said...
1990 முதல் 2009 வரை புலிகள் (அட்டைகளின்) ஆட்சியில்
இந்த தொடரைப்படித்ததில்லையா?
http://mullaimukaam.blogspot.com //

உங்கள் தளம் பார்த்தாலே தெரிகிறதே.. நீங்கள் இப்படித் தான் சொல்வீர்கள் என..
வவுனியாவில் மட்டும் அவர்கள் இல்லாத இடங்களில் உங்களவர்களால் என்ன நடந்ததாம் எனக் கேட்கிறார் எனது வவுனியா நண்பர் ஒருவர்..
மாணிக்கதாசனை வவுனியா மக்கள் மறக்க மாட்டார்களாம்.

கன்கொன் || Kangon said...

Anonymous said...
//எது அதீத மதுப்பாவனை?

திரும்புமிடமெங்கும் மதுபானசாலைகள்?
சட்டரீதியற்ற தொழில்கள்?
வீதியில் அலையும் மாணவர் பருவம்?//

இவையாவும் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல கொழும்பிலும் எதிர்க்கப்படவேண்டும். ஏன் யாழ்ப்பாணத்தை மட்டும் எதிர்பார்க்கிறீர்கள்? உங்களுக்கு மட்டும் விதிவிலக்கு?//

எங்களுக்கு விதிவிலக்கு???
ஏதோ நாங்கள் தினமும் மதுபானசாலை சென்று வருவது போலவும், யாழ்ப்பாணத்தவர்களைக் குடிக்க வேண்டாம் என்று சொல்வது போலவுமல்லவா கதைக்கிறீர்கள்?

கொழும்பில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுவிட்ட மாற்றங்களை மாற்ற சிறுபான்மை சமூகத்தால் முடியவே முடியாது, ஆனால் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசத்தில் இப்போது தான் முளைவிட ஆரம்பித்திருக்கிற இதை தடுத்து நிறுத்த முடியும் என்ற நம்பிக்கை தான்.

ஆனால் உங்களைப் போன்ற போலி அக்கறையாளர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?

roshaniee said...

நான்றாக எழுதியிருக்கிறீர்கள்!
மூன்று வாருடங்கள் ஆகின்றது யாழ்பாணத்தில் இருந்து வந்து... போகவேண்டும் என்ற ஆவல் இருக்கின்றது

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...
Anonymous said...
//எது அதீத மதுப்பாவனை?......

எங்களுக்கு விதிவிலக்கு???
ஏதோ நாங்கள் தினமும் மதுபானசாலை சென்று வருவது போலவும், யாழ்ப்பாணத்தவர்களைக் குடிக்க வேண்டாம் என்று சொல்வது போலவுமல்லவா கதைக்கிறீர்கள்?

கொழும்பில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுவிட்ட மாற்றங்களை மாற்ற சிறுபான்மை சமூகத்தால் முடியவே முடியாது, ஆனால் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசத்தில் இப்போது தான் முளைவிட ஆரம்பித்திருக்கிற இதை தடுத்து நிறுத்த முடியும் என்ற நம்பிக்கை தான்.

ஆனால் உங்களைப் போன்ற போலி அக்கறையாளர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?//

இவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் கதைக்கும் 'அக்கறையை'ப் பார்த்தாலே தெரியவில்லையா?=========================
roshaniee said...
நான்றாக எழுதியிருக்கிறீர்கள்!
மூன்று வாருடங்கள் ஆகின்றது யாழ்பாணத்தில் இருந்து வந்து... போகவேண்டும் என்ற ஆவல் இருக்கின்றது//

நன்றி வருகைக்கு.. சென்று வாருங்கள்..பாருங்கள்

வான்நிலவன் said...

அனானியா வந்து வாந்தி எடுத்த நண்பனுக்கு!!!!!
மன்னார் இசை நிகழ்ச்சியியோடு நெருங்கிய தொடர்பு பட்டவன் என்றவகையில் உங்கள் விமர்சனத்திற்கு பதில் சொல்ல விரும்புறன் , மன்னார் இசை நிகழ்ச்சி Mannar st Xavier 's Boys college பழைய மாணவர் சங்கத்தால் பாடசாலைக்கு நிதி திரட்டும் நோக்கத்தோடு நடாத்தப்பட்டது.இதற்கு விளம்பர அனுசரணை வழங்கி உதவி புரிந்தது மட்டுமே vetti fm இன் பங்களிப்பு
பொது வெளியில் எதையாவது எழுதும் முதல் தெரிந்து கொண்டு பண்பாக எழுத பழகுங்கள்

sharmily said...

சுய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாய்த் தொலைத்து வரும் யாழ்ப்பாணமும்,அப்பாவித் தனத்தை இழந்து வரும் யாழ் நகர மக்களும் மாறி வருவது //

நானும் உணர்ந்தேன்..:(

sharmily said...

// சுய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாய்த் தொலைத்து வரும் யாழ்ப்பாணமும்,அப்பாவித் தனத்தை இழந்து வரும் யாழ் நகர மக்களும் மாறி வருவது//

நானும் உணர்ந்தேன்

SShathiesh-சதீஷ். said...

போட்டிட்டன் போட்டிட்டன். யாழ் பற்றி என்ன சொல்ல ஒரே வரி என் அனுபவத்தில் தமிழ் பிஞ்சுக்குழந்தைகள் ஓடி ஆடி விளையாடிய மாற நிழலில் இப்போது பிள்ளைகுட்டிகளுடன் படுத்துறன்குகின்றனர் யாழை சுற்றுலாத்தலமாக பார்க்க வந்த சகோதர மொழியை சேர்ந்தவர்கள்.

நிரூஜா said...

வேதனைக்குரிய விடயம் அண்ணா...! நான் யாழ்பாணத்தில் இருந்து வந்து ஏறக்குறைய 15 ஆண்டுகள் ஆகின்றது. நிச்சயமாக உங்களை விட எனக்கு அதிகமாகவே ஏமாற்றம் இருக்கும் என்று நினைக்கின்றேன். சமாதான காலத்திலும் சில அரசியற் சூழ்நிலைகளால் அங்கு செல்ல முடியவில்லை. பார்ப்போம்...! எப்போது என்னால் முடியுமோ...! அல்லது முடியாமலே முடிவேனோ..!
உந்த பினாமிகளை நினைக்க ஒரு பக்கம் வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது... காலம் பதில் சொல்லும் என்று இருந்த காலமும் முடிந்து விட்டது. இனி வெறும் பெருமூச்சு தான் :'(

Jerry Eshananda said...

இப்போது தான் லோஷன் "அடித்து ஆடுவதை "பார்க்கிறேன்.

Anonymous said...

மனம் வெதும்புகின்றது.....
அநீதிக்கு எதிராக அதிகவெறியுடன் போராடுவதும் தமிழன்தான், அதேவெறியுடன் மாற்றுக்கருத்துரைப்பத்தும் அதே தமிழன் தான்.


எனினும் உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

Vijayakanth said...

இந்த பதிவுக்கு யாழ் பக்கமே போயிராத நான் பின்னூட்டமிடுவது எவ்வகையில் பொருத்தம் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் யாழ் மாணவர்களோடு படித்தவன் என்ற வகையில் எனக்கு அவர்களது வித்தியாசமும் கொழும்பு மாணவர்களின் வித்தியாசமும் தெரியும். பொதுவாக எங்கள் வீடுகளில் கூட யாழ் மாணவர்களை உதாரணம் காட்டித்தான் திட்டு விழும். இது நான் தமிழர்களை பிரித்து பார்ப்பதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. அப்படி இருந்த யாழ் மாணவர்களோ யாழ் விளை நிலங்களோ முன்புபோல் இல்லை என்பது இந்தியாவில் இருக்கும் சீமானே அக்கறைப்படும்போது இங்கு இருந்துகொண்டே இப்படி ஏளனம் செய்வது முறையாகாது அனானிகளே....!

அந்தந்த மண்ணுக்கு இருக்கும் மரியாதை அப்படியே இருப்பது தான் சிறந்தது. சிங்களவர்களே போற்றும் தேசமாக யாழ் இருக்கும்போது அதன் தனித்துவம் புரிந்திருக்க வேண்டும். பொதுவாக அந்தந்த ஊரில் இருப்பவர்களுக்கு அதன் பெருமை தெரிவதில்லை. எதாவது பண்ணனும்னா சொல்லுங்கண்ணா நம்ம சப்போர்ட் உங்களுக்கு தான்.!

Anonymous said...

அப்படீன்னா, நல்ல நோக்கத்த காட்டி இசைநிகழ்ச்சி, உலகத்தர! சினிமாவுக்கு முதல் காட்சி என்று எதுவேணும் என்றாலும் செய்யலாமா? அது ஏமாத்து இல்லையா?

அந்த நல்ல நோக்கத்துக்கு என்று கேட்டா தமிழ் மக்கள் காசு தரமாட்டாங்களா?

சௌந்தர் said...

இந்த பதிவுக்கு நன்றி படிக்கும் போதே கஷ்டமாக இருக்கிறது. அங்கு இருந்தவர்களின் நிலைமை மிகவும் கஷ்டமாக இருக்கிறது

Kiruthigan said...

//கொழும்பு போன்ற நகரங்களுக்கே உரிய ஒரு செயற்கைத்தனம் பலருக்கு தொற்றி இருப்பது ரசிக்க முடியவில்லை.//
எங்க போய் முடியப்போகுதெண்டு பாப்பமண்ணா...

//நிர்வாகமும் நீதியும் சீரா இருந்ததாமே//
அது இருந்து பாத்தவங்களுக்கு தெரியும்...

//தமிழர்களின் பிரச்சினை அவர்களுக்குப் புரிகிறது.. ஆனால் ஆரம்பம்,அடிப்படை, போராட்டம் ஆரம்பித்த நோக்கம்,தீர்வுக்கான வழிகள் பற்றி தெளிவாகப் புரியவில்லை.நான் கொஞ்சம் சில விஷயங்களைத் தெளிவாக்கினாலும் எவ்வளவு தூரம் அதனால் பயன் என்று ஆழமாகப் போகவில்லை.//
நன்றியண்ணா..

நிரூஜா said...

//இப்போது தான் லோஷன் "அடித்து ஆடுவதை "பார்க்கிறேன்.
home ground இல் கண்டிப்பாக அடித்து ஆடத்தானே வேண்டும் இல்லையா அண்ணா...?

வந்தியத்தேவன் said...

பதிவு வாசித்தேன். சமாதான காலத்தில் போனபின்னர் போகவில்லை. போக மனம் ஏனோ விரும்பவில்லை. சிலருக்கு பதில் சொல்லமுடியும் ஆனால் பெயரில்லாத முதுகெலுப்பு இல்லாத பேடிகளுக்கு பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்கவிரும்பவில்லை.

கோமளன் (இணுவில்) said...

கட்டுக்கள் அறுந்ததன் பின்னர் எல்லாம் திறந்துவிடப்பட்ட நிலை என்பது இது தானோ?
கவலையாகவே இருக்கிறது

உங்கலுடய இந்த வார்த்தை சத்தியமான உன்மை.கடந்த மாதம் சக்தி ஃப்ம் எங்கள் இணுவில் கந்த சுவாமி கோவிலுகு வந்து சினிமா பாடல்கல் ஆறுமுக வாசலில் போட்டு டன்ஷ் ஆடினம் இதில் யாரை பிழை சொல்வது? அனுமதி கொடுத்த அய்யரையா? அல்லது நடத்திய சக்தி ஃப்ம் யா??? முருகன் தான் சொல்லனும்??இவர்கள் வருவதோ,ஜாலியாக இளைஞர்கள் ட்ரிப் வருவதோ பரவாயில்லை..ஆனால் எந்த விதத்திலும் அமைதியான யாழ் வாழ்க்கையையும்,கொஞ்சமாவது எஞ்சியுள்ள கலாசாரத்தையும் கெடுத்து விடக் கூடா

சிங்கள மக்கள்ளுடய வருகயாலும் யாழ் விளிமியங்கள் பாதிப்படைந்துள்ளது.சிங்கள வாகன ஒட்டுனர்கள் பல விபத்துக்கு காரனம்.ஆணால் காவல்துரை அவர்கலுகு பாரமுகமாக நடந்து கொல்வது மனம் வலிகுது,எங்கட்வீட்டில பகத்து வீட்டுக்காரன் நாட்டாமை......??

Jeya said...

:((((((((((

ராஜ நடராஜன் said...

பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

நான் பதிவுலகிற்கு புதியவள்; நீங்களோ பழம் தின்று கொட்டை போட்டவர். ஆனாலும் என் மனதில் பட்டதைச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் தானே மொடரேஷன் வைத்திருக்கிறீர்கள், பிறகேன் சர்ச்சைக்குரிய பின்னூட்டங்களை போட்டு அவர்களையும் ஒரு மனிசனாக மதிப்பது போல காட்டுகிறீர்கள்? பேசாமல் அவற்றை நீங்குங்களேன். அதை போட, அதுக்குப் பதில் சொல்ல சிலர், கடைசியில் வேதனையும் மன உளைச்சலும் தானே மிச்சம். எதற்காக இந்த வீணான விவாதம். என் பதிவில் ஒரு முறை சொன்னது போல‌ விளங்கிக்கொள்பவர்களுக்கு விளக்கம் தேவையில்லை. விளங்க விரும்பாத விதன்டாவாதிகளுக்கு விளக்கம் கொடுக்கத்தேவை இல்லை.சரி தானே? உண்மையில் வயது, எழுத்து, அனுபவம், எக்சட்ரா எக்சட்ராவில் முதிர்ந்த நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று விதண்டாவாதம் செய்பவர்களின் கருத்துக்களை டிலீட் செய்வது. தயவு செய்து அவற்றை போடாதீர்கள். ஒரு கணணியும், இன்ரநெட்டும் இருந்தால் என்ன வேணுமானாலும் எழுதும் நிலை ஏற்பட்டு விட்டது. ஆனால், இது உங்கள் தளம். நீங்கள் தான் இங்கு மற்றவர்கள் எப்படி நடக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். ஈழம் என்ற டக்கில் இருந்த இரண்டே இரண்டு கட்டுரைகளையும் பின்னூட்டங்களையும் படித்த மன உளைச்சல் இன்னும் போகவில்லை. இப்படி எத்தனை பேருக்கு இப்படி தோன்றியதோ தெரியாது. இந்த விவாதத்தால் அந்த லூனடிக்ஸ் மாறப்போவதில்லை . எதற்கு சக்தியையும் நேரத்தையும் வீணாக்குகிறீர்கள். சக பதிவர் என்ற உரிமையில் உரிமையோடு சொல்கிறேன். கேட்பீர்கள் என்று நினைக்கிறேன்.

அனாமிகா.

Anonymous said...

இங்கே பேசப்படும் நிகழ்ச்சியைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. இவர்கள் சொன்னது போல அரைகுறை ஆட்டம் நடந்தது என்றால் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நல்ல நோக்கத்துக்காக அரை குறை ஆட்டம் போட்டு சம்பாதிப்பதற்கு செய்யாமல் விடலாம். தரமான நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக சனம் வரும். ஒரு வகையில் எங்கள் எல்லோருக்கும் சில கடமைகள் இருக்கிறது. உங்கள் நிகழ்ச்சிகளை கேட்டதில்லை. நீங்கள் செய்யும் நிகழ்ச்சியில் ஆபாச பாடலை ஒலிபரப்பாமல் விடுவதும் ஒரு வகை கடமை தான். என்ன சொல்கிறீர்கள்? சரிதானே.

rooto said...

பல சகட்டுமேனி பதிவுகளுக்குபின் நல்ல ஒரு சிந்திக்கவைக்கும் பதிவு!! இதை யாழ் சென்று திரும்பியபோது மேலே கருத்து தெரிவித்த சில நண்பர்களுடன் மேற்படி விடையங்களை உரையாடினேன்!!! நன்றி பதிவுக்கு அண்ணா!! தவிர இந்த அனானிகளிற்கு நீங்கள் பதில் அளிக்கதேவையில்லை, அவர் மிக சிறுபிள்ளைதனமான கேள்விகளை கேட்பதில் இருந்தே அவரது அறிவு மட்டம் நன்றாக புரிகிறது!!!அவரைப்போன்ற ஒருசிலர் தூரநோக்குகொள்கை இல்லவிட்டலும் பரவாயில்லை எந்த ஒரு நிகழ்வுகள் பற்றிய அடிப்படை, சாதரண அறிவும் இல்லாமல் கதைப்பதாலும், தமிழர்களிடையே இருப்பதாலுமே தமிழனுக்கு இந்த சாபக்கேடு!! இவர்கள் அழியும்வரை இது தொடரும்!!!!

ஆதிரை said...

ம்ம்ம்...

இருள்... இருள்... எனப் புலம்புவதை விடுத்து ஒரு மெழுகுதிரிக்காவது எல்லோரும் உழைக்க வேண்டிய தருணம் இது.

பதிவு வலிகளையும் ஆதங்கங்களையும் பதிவு செய்கிறது.

அனானிகளின் போலி அக்கறைக்கும் நன்றிகள்.

Anonymous said...

கட்டுக்கள் அறுந்ததன் பின்னர் எல்லாம்
திறந்துவிடப்பட்ட நிலை என்பது இது தானோ?
anna ithu unmaithaan, jaffnavin thatpothaya nilai migavum kavalaiyaagavum,vethanaiyaagavum uzhzhathu.

Karthick Chidambaram said...

உங்கள் பதிவை படித்தேன். வருத்தமாக உள்ளது. தமிழன் தன் அடையாளங்களை, தன்னை இழப்பதில் மகிழ்ச்சி அடைகிறானோ ?

archchana said...

லோஷன் உங்களிற்கு வலித்தது என்ற விடயம் எனக்கு ஆறுதலாக இருந்தது .அது நீங்கள் மாறவில்லை என்பதை காட்டுகிறது. ஏனெனில் எங்கள் சனம் எப்படியிருந்த நாங்கள் இப்படி ஆகிவிட்டோமே என்பதை மறந்து ஆடம்பர வசதிகளும் பொழுதுபோக்கு சாதனங்களும் தான் தங்களிற்கு முக்கியம் முன்பைவிட இப்ப நல்ல இருக்கிறம் என்ற நினைப்பில் இருப்பது தான் மிகவும் வலிக்கிறது...........................விரைவில் உணர்வார்கள் எது மேலென...................

kirush said...

எப்பவோ முட்டிந்த காரியம்...!!!!

ஷஹன்ஷா said...

அண்ணா ஏன் எங்க வீட்டு பக்கம் வரவில்லை......

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner