பாசமிகு தமிழினத் தலைவா
உங்களுக்கு இம்மடலை வரையவேண்டுமென்ற எண்ணம் பற்பல நாட்களுக்கு முன்னரே எனக்குத்தோன்றினாலும் பலவேறு காரணங்களினால் தள்ளிப்போட்டுக்கொண்டே போய்விட்டது.
என்னுடைய சுகவீனம், நித்தியானந்தா பரபரப்பு,IPL என்று உங்களை நான் தொடர்புகொள்ளத்தான் எத்தனை விதமான தடைகள்.
பவளவிழாக் கண்டும் பதவியிலிருக்கும் இளைஞரே, சக்கர நாற்காலியிலிருந்தாலும் சளைக்காமல் உலாவரும் சாதனை மன்னரே.. அல்ல சக்கரவர்த்தியே... (இந்த வாலி, வைரமுத்து கலந்துகொள்ளும் உங்கள் விழாக்கள், கவியரங்குகள் பார்த்த தோஷம், பிடித்த தோஷம்)
உங்களால் மட்டும் எப்படி முடிகிறது?

அரசியலில் நீங்கள் ஒரு சாணக்கியர்... அதில் மாற்றுக்கருத்தில்லை. மூன்று பிள்ளைகளையும் பிரச்சினையில்லாமல் (குடும்ப 10 கட்சி) மூன்று முக்கிய இடங்களில் அமர்த்திவிட்டீர்கள்.
உங்களுக்குப் பின் மகன் வர இனித்தடையில்லை.
எதிர்க்கட்சிகள் எழ இனி உடனடி வாய்ப்பில்லை.
குரல் கொடுக்கக்கூடியவர்கள், முனைந்தவர்கள் என்று பலராலும் கருதப்பட்ட, உசுப்பேற்றப்பட்டு வந்த பல திரை ஸ்டார்களும் அடக்கப்பட்டு உள்ளார்கள் - இல்லை பல் பிடுங்கப்பட்டுவிட்டார்கள்.
விஜயகாந் அடங்கிவிட்டார்: சரத்குமார் நுரைதள்ள மீண்டும் உங்களிடமே சரண்: விஜய் ஒரு அடி வைக்க முதலே கட்டம் கட்டப்பட்டுவிட்டார்: அஜித்?
பாருங்க ஐயா என்று முறையிட்டதற்கே முறிச்சு எடுத்தீட்டீங்களே... என்ன ஒரு ராஜதந்திரம்!
ஈழத்தமிழர் பிரச்சினைகளில் நீங்கள் நடந்துகொண்டவிதம் எதிர்கால அரசியல்வாதிகளுக்கு ஒரு முழுமையான பாடத்திட்டம்.
மன்மோகன், சோனியா, மகிந்தர் - இவர்கள் மூவரையும் சமாளித்து, தமிழ் அனுதாபிகளையும் போராட்டம் நடத்தியவர்கள், விமர்சித்தவர்களையும் அடக்கிய விதம் இருக்கிறதே – யாருக்கு வரும்?
உங்கள் வழிமுறைகளை அப்படியே நம்ம நாட்டுகேற்ப மாற்றி இங்கேயும் நம் ஜனாதிபதி மன்னராக மாறி தொடர் வெற்றியீட்டி வருகிறார். (சில விஷயங்களை உங்களையும் விஞ்சி காய் நகர்த்துகிறார்)உங்கள் வழிமுறைகள்,அரசியல் ஞானத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியல்லாமல் வேறு என்ன?
அப்படியே அடிக்கடி உங்களை சந்தித்து ஆலோசனைகள்,ஆசிகள் பெறும் நம் தமிழ்த் தலைமைகளுக்கும் கொஞ்சம் கொஞ்சம் கற்றுத் தரக்கூடாதா?
ஆனால் இதுக்கெல்லாம் மனதுக்குள்ளே உங்களைப்பற்றி வியந்தேனே தவிர கடிதம் எழுதிப் பாராட்ட வேண்டும் எனத் தோன்றியதில்லை..
ஆனால் 'பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா' உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்ததில் இருந்து எப்படியாவது உங்களைப் பாராட்டியே ஆகவேண்டும் எனத் தோன்றியது.
மீண்டும் அதே கேள்வி.. எப்படி ஐயா தங்களால் மட்டும் முடிகிறது?
இதற்கு முதலும் நீங்கள் கலந்து கொண்ட திரையுலகம் உங்களுக்கு நடத்திய பாராட்டு விழாக்களைப் பார்த்துள்ளேன்..
நான்கைந்து மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக வாளி,வாளியாக ஒவ்வொருவரும் உங்களைப் புகழ்ந்து தள்ளும்போது எவ்வாறு பொறுமையாக,கூச்சத்தால் நெளியாமல் உங்களால் இருக்க முடிகிறது?
பழகிவிட்டீர்களா?பழக்கி விட்டார்களா?
அதுவம் சும்மாவா.. இந்திரனே,சந்திரனே என்று அவர்கள் புகழ்வதும், போற்றிப் பாடி ஆடுவதும் பார்க்கும்போது ஏதோ மன்னர் காலத்துக்கு நாம் வந்துவிட்டோமோ என்று ஒரு பிரமை..
திரையில் எம்மைப் போன்ற சாதாரண ரசிகர்கள் காண ஏங்கித் தவிக்கும் மிகப் பெரிய நட்சத்திரங்கள் எல்லோரும் உங்கள் முன்னாள் சர்வசாதாரணமாக வந்து குத்துப் பாட்டுக்கும், உங்களைப் போற்றிப் பாடும் பாட்டுக்கும் 'பய'பக்தியுடன் ஆடுவது எமக்கெல்லாம் பரவசம்.
நீங்கள் வேண்டாமென்றாலும் உங்கள் அன்புக்குரிய 'அடி'யவர்கள் அவர்களையெல்லாம் காட்டுவது காட்டி அழைக்கிறார்கலாமே ஐயா.. ;) (இது அஜித் சொன்னது மாதிரி எல்லாம் இல்லீங்கோ)
பாசத்தலைவன் உங்களுக்கான விழாவில்,இந்திய சினிமாவின் உயர நடிகர் அமிதாப் மேடையில் பேசப்படும் விஷயம் புரியாமல் முழி பிதுங்கிக் கொண்டு அருகில் உள்ள கமலின் மொழிபெயர்ப்பை கேட்டு நெளிவதும், தமிழின் இரு சிகரங்கள் ரஜினியும் கமழும் என்ன விழா நடந்தாலும் உங்களுடனேயே அருகில் பயபக்தியுடன் இருப்பதுமாக உங்களுக்கான மரியாதை என்பதைவிட நிர்பந்தமாகவே தெரிகிறது.
அதுக்காக அஜித் சொனது சரியென்று நான் சொல்வேனா? அமிதாப்,கமல்,ரஜினி,இசைஞானி இவர்கள் எல்லாம் கம்முனு இருக்கும்போது இவருக்கு என்ன வந்துது?
உங்க பாசக் குழந்தைகள் பொங்கியதில் தப்பே இல்லை ஐயா..
ஈழத்து நாட்டவன் உனக்கென்ன வந்துது என்று உங்கள் பராசக்தி பாணியில் என்னிடம் கேட்டால், இதோ காரணங்களை அடுக்குகிறேன்..
பல விஷயங்களில் உங்களைப் பின்பற்றும் எங்கள் நாட்டில் கடந்த தேர்தலில் அடிக்கடி விருந்துகள் நடந்தது உங்களுக்குத் தெரியுமோ எனவோ, இன்னும் இந்தப் பாராட்டு விழாக் கலாசாரங்கள் தொடங்கவில்லை.
இந்த விஷயங்களைஎல்லாம் நம்ம நாட்டுப் பக்கம் கற்றுத் தந்துவிட வேண்டாம் என்று அன்பாக வேண்டிக்கொள்ளவே இந்தப் பாசமான மடல்.

அதுசரி அதிகமான பாராட்டுவிழாக்கள் கண்ட தலைவர் நீங்கள் தான் என்று அதற்கு ஒரு பாராட்டு விழா நடத்த உங்கள் அன்புக்குரிய உடன் பிறப்புக்களும், உங்கள் பாசத்துக்குரிய கலைக் குடும்பத்தினரும் தயாராகின்றனராமே.. உண்மையா?
இப்போதே கண்ணைக் கட்டுதே.. அதுவும் கலைஞர் தொலைக்காட்சியில் வருமா?
இப்படியே போனால் செம்மொழி மாநாட்டைக் கூட உங்கள் புகழ் பாடும் மாநாடாக நடத்தி விடுவீர்கள்.. மன்னிக்க விடுவார்கள் என்று பயமாக இருக்கிறதைய்யா..
மீண்டும் ஒரு வெற்றி கிடைத்தால் உங்கள் பாணியை இங்கேயும் பின்பற்றி விடுவார்கள் என மன சொல்லுதைய்யா.. அது தான் கண்ணைக்கட்டுகிறது.
அண்ணன் தம்பிமாரோடு இப்போது அடுத்த தலைமுறையும் களமிறங்கி இருப்பதால் தமிழக வடிவம் இங்கே மேலும் ஸ்திரத்தோடு தொடங்கிவிடும் போலிருக்கு.
எதற்கும் இன்னும் ஒரு மாத காலத்துக்காவது மேலும் ஒரு பாராட்டு விழா வேண்டாமே..
(அஜித் பொங்கியதற்குப் பிறகு நீங்களே அந்த முடிவில் இருப்பீர்கள் என நினைக்கிறேன்.. எதுக்கும் ஒரு தடவை உங்கள் திருச் செவியில் போட்டு வைக்கலாமே என்று தான்)
ஐய்யா இன்னும் இரண்டு ஐயங்கள்..
ஒண்ணுமில்லாத வெத்து வேட்டுக்கள் நாங்களே வலைப்பதிவுகள் ஆரம்பித்து உங்களைப் போல பெரிய,மகா பெரியவர்களை கலாய்க்கும் போது எல்லாத் துறைகளிலும் கரைகண்ட நீங்களும் ஒன்றை ஆரம்பித்தால் என்ன?
பின்னூட்டங்களும்,கும்மிகளும் களை கட்டும்..
வாக்கு மழையாய்ப் பொழியும்.
உடன் பிறப்புக்கள் உங்கள் பதிவுகளுக்காகவும் உயிரையும் கொடுப்பார்கள்.
இன்னும் கொஞ்சம் தேர்தல் வாக்குகளை அள்ளலாம்.. 'அம்மா'வையும் ஒரு வழி பண்ணலாம்..
நித்தியானந்த பற்றி நண்டு,சுண்டு எல்லாம் பலப்பல சொன்ன பிறகும் பகுத்தறிவு சிங்கம் தாங்கள் இன்னும் அது பற்றி கவிதையோ ,கடிதமோ எழுதலையே ஏன்? (ஒரு அறிக்கையோடு முடிந்ததா?)
உங்கள் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவிலாவது நேரில் வந்து கலந்துகொண்டு உங்களுக்காக அஜித் மகள்,விஜய் மகன், சூர்யா மகள்,தனுஷ் மகன் ஆடும் நடனங்களை(அப்போதாவது சித்தப்பா நடிகர்மார் ஓய்வு பெறுவார்கள் என நம்புவோமாக), அப்போதும் கமல்,ரஜினி வழங்கும் வாழ்த்துக்களைப் பார்த்து ரசிக்கக் காத்திருக்கும்
எளிமையான ஈழத்து மைந்தன்.
42 comments:
கலக்கல் பதிவு எருமைமாட்டு தோலில் ஏறவா போகுது, என்னவோ சொல்லுறீக பார்ப்போம்.
தலைவரே(நீங்க தான் அண்ணா) எப்பவும் பின்னூட்டங்களில் கூட அடக்கி வாசிக்கும் நான் அஜித்தைப்போல பொங்கி எழுந்ததற்கு நிறைய காரணங்கள்... அதை கோபமா??? ஏக்கமா?? கவலையா??? எதை என்று சொல்ல... தலைவருக்கான(இது நீங்க இல்ல... பெரியவர்???) மடல் தாங்கிச்செல்லும் செய்தி அவருக்கு கிடைத்து அதில் கொஞ்சமேனும் உறைத்தால்... எவ்வளவு நல்லாயிருக்கும்...!!! எல்லாம் ஒரு நப்பாசை தான்..!!!
நல்ல ஐடியா தான் ...
ஈழத்தமிழர் பிரச்சினைகளில் நீங்கள் நடந்துகொண்டவிதம் எதிர்கால அரசியல்வாதிகளுக்கு ஒரு முழுமையான பாடத்திட்டம்?//
அண்ணா தாங்க முடியலை. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. நல்ல சுவாரசியமாகப் பதிவினை எழுதியுள்ளீர்கள்.
//ஒண்ணுமில்லாத வெத்து வேட்டுக்கள் நாங்களே வலைப்பதிவுகள் ஆரம்பித்து உங்களைப் போல பெரிய,மகா பெரியவர்களை கலாய்க்கும் போது எல்லாத் துறைகளிலும் கரைகண்ட நீங்களும் ஒன்றை ஆரம்பித்தால் என்ன?
பின்னூட்டங்களும்,கும்மிகளும் களை கட்டும்..//
வேணாம் ஐயா இந்த விபரீத விளையாட்டு. சும்மா இருக்கிற ஆளுக்குச் சுதி ஏத்தி விடாதீங்கோ. நாங்களெல்லாம் பாவம் ஐயா. இவர் எல்லாம் புளொக் எழுத வந்தா நூறாவது பதிவுக்கு ஒரு வாளி விழா, பிறகு சிறந்த பதிவருக்கு ஒரு வாளி விழா என்று எங்களையே நாறடிச்சிடுவார் சாமியோ!
// ஈழத்து மைந்தன்.//
If these mad fellows give up their Eelam dream — which will never happen as long as I am here — .............. They must give that up.
MR - Straits Times
:D :D
சொல்லி வேலையில்ல தலைவா.. என்னுடைய கருத்துக்களை அப்பிடியே உருக்கு ஊற்றியது போல இருக்கிறது.. உவர் , எங்கட கோத்தாமாமா, மகாஜனாதிபதி ஆகியொரிண்ட சாணக்கியங்களுக்கு நான் ஒரு மெகா பான்.. உண்மையிலேயே.. எப்பிடியெல்லாம் பிளான் பண்றாங்கள்?
அண்ணா கபட உள்ளம் கொண்டவன் கருணாநிதி. தன்னைத்தானே பகுத்தறிவாளி என சொல்லி கொள்பவன் அவனுக்கு பின்னால் ஒரு பக்கவாத்திய குழு ......
இந்த ஆளுக்கு வால் பிடிப்பதால் எனக்கு பிடித்த கமலும், வைரமுத்துவும் இப்போது திகட்டுகின்றனர் .....
அவனைப்பற்றியெல்லாம் பதிவெழுதி...........
கேவலமான கயமையின் காய்ச்சி வடித்த முழு உருவம் ...
அந்த ஆழ் மட்டும் பதிவுலகம் பக்கம் தலைவைச்சான் எண்டால் நான் இவனுக்க்காகவே DNS hijacking படிப்பேன்.........
செம்மொழி மாநாட்டிலே இந்த வாழ்த்துப்பத்திரத்தை வாசித்து வழங்குமாறு பரிந்துரை செய்வோமாக!!!
ஏன்யா பதிவுலகத் தமிழர்கள் மட்டுமாவது நிம்மதியாக இருப்பது உங்களுக்கு பிடிக்கலையா?
அப்புறம் பதிவர்களையும் பலவந்தமாக பாராட்டு விழா(க்களுக்கு)கொண்டு போய்விடுவார்கள். அப்புறம் எங்களுக்கு அடிக்கடி விடியல் கேட்க முடியாமல் போய்விடும்
யாரும் இந்த Remixஐ பாக்காட்டி ஒரு தரம் பாருங்கோ!
http://www.youtube.com/watch?v=QorFIBgq6yI
எங்கட கலைஞர் தாத்தாவும் இடைக்கிடை வாறார்!
என்ன கொடுமை இது...
தமிழ்மணத்தில் 2 மறை வாக்குகள்...
கருணாநிதி பதிவுலகத்திற்குள் புகுந்துவிட்டார்(ன்) என்கிறேன் நான்.. :P
கலக்கல் அண்ணா....
அதுவும் பதிவெழுதச் சொன்னீங்க பாருங்கோ? மனுசன் கேள்விப் பட்டுதெண்டா தொடங்கி பதிவுலகத்தயும் அழிச்சுப் போடும்...
கலக்கல் அண்ணா.....
நாய்பாபா சீ... எழுத்துப் பிழை சாய்பாபா ஓடு அளவளாவிற படத்தப் போட்டதும் அருமை..... :)
அந்த படத்தில் இருக்கிற கமலையும் ரஜினியையும் பார்க்கும்போது இரண்டு வேட்டை நாய்களை காவலுக்கு வைத்ததை போலவே தோணுது
அருமையான பதிவு தயவு செய்து இந்த பதிவை கருணாநிதிக்க அனுப்பிவயுங்கோ லோஷன் அண்ணா !!! அப்பவாவது திருந்துவான் ???
அட நம்ம வைரமுத்து, இளையராஜா கலந்துகொண்டது கொடும சார்!, வைரமுத்து சிலகாலமா கருனனதிக்கு வால் பிடிக்கிறார் அது தன தங்க முடியல!!!
நல்லாயிருககு 'தல'
அனைத்தும் உண்மையான விசயங்கள்.
அதிலும் ஐயா கலைஞரை சாய் பாபாவுடன் பார்த்ததில் இருந்து மிகவும் வெறுப்பு. கெட்டவர்களுடன் பழக்கம் ஏற்பட்டால், குடும்ப நன்மை மட்டும் சிந்தித்தல் , பணம் சேர்த்தல், அதிக அளவு புகழ் வேண்டி கிடத்தல், சொத்து சேர்த்தல் அனைத்தும் தானாக வந்து விடும்.
>>இப்படியே போனால் செம்மொழி மாநாட்டைக் கூட உங்கள் புகழ் பாடும் மாநாடாக நடத்தி விடுவீர்கள்..
இதில் லோஷனுக்கு சந்தேகம் கூட உண்டா, இருந்து பாருங்கள் அனைத்து பேச்சாளர்களும் (நாடு பேதமின்றி) வந்து இவரை கூடை கூடையாக புளுகி விட்டு போவார்கள். ஆயிரம் பஞ்ச் வசனம் பேசுற ரஜினி காந்தே அடியாள் போல் நிற்கும் போது மற்றவர்கள் எல்லாம் ?!!!
இவ்வளவு இவரைப்பற்றிய எதிர்மறையான உண்மைகளை தெரிந்த நாம் இன்னும் ஒரு உண்மையை ஈழ மக்களாக தெரிந்து கொள்ள வேண்டும்.
கலைஞருடைய ஆட்சி காலத்தில்(19992 கு முன்னர்), இலங்கை அகதிகளாக சென்ற அனைத்து மாணவர்களும் படிக்கச் வேண்டும் என்று சொல்லி பல வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது, அதிலும் அரசாங்க பல்கலைகழகங்களில் இலங்கை தமிழ் மாணவர்களுக்கு இத்தனை இடம் என்று சட்டமாகியது (அது எழுத்தில் இருந்ததோ தெரியாது, ஆனால் பல ஈழ மாணவர்கள் இதனால் நன்மை பெற்றார்கள்), இப்படி முகாமிலோ, வெளியிலோ இருந்த அகதிகள் தங்கள் நாட்டை விட்டுவந்த கவலை சற்று குறைவாகவே இருந்தார்கள்.
( MGR காலத்திலேயே பல வசதிகள் இருந்தாலும், இவர் தான் அதை ஒரு ஒழுங்கு முறைக்கு கொண்டு வந்தது)
1992 ஆண்டு மே மாதம் நடந்த சம்பவத்தின் பின், எல்லாமே தலை கீழ், அனைத்து தமிழ்நாடு தமிழர்களும் கட்சி பேதமின்றி ஈழ தமிழர்களை எதிரியாகவே பார்த்தார்கள், மிகவும் நேரிங்கிய நண்பர்கள் கூட சற்று விலகியே இருந்தார்கள். நெருப்பில் எண்ணை ஊத்துவது போல ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார், இன்னும் எங்கள மேல் வெறுப்பு கூடியது, அதோடு நில்லாமல் ஈழ மாணவர்களுக்கு எந்த தமிழ்நாடு பல்கலைகழகங்களும் இடம் கொடுக்க கூடாது என்று மிகவும் கடுமையாக நடந்து கொண்டார்.
பல மாணவர்கள் இதனால் வெளி மாநிலங்களுக்கு சென்று அதிக பணம் செலுத்தி படிக்கச் வேண்டி இருந்தது, வசதி இல்லாதவர்கள்
எதுவுமே செய்ய முடியாத நிலைமை. இப்பொது வாய் கிழிய பேசும் தமிழ் நாடு சிங்கங்கள் எல்லாம் அபொழுது வாய் மூடி இருந்தவர்கள் தான்.
மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்த போது முதலில் செய்த காரியங்களில் ஓன்று ஈழ மாணவர்களின் கல்வி திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்தியது. ஓன்று நாம் கவனிக்க வேண்டும் அப்பொழுது கூட பெருவாரியான தமிழ் நாட்டு மக்கள் எங்கள் மீது கோபமாகவும் காழ்புணர்ச்சி உடனும் இருந்தார்கள் !!
இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஈழ மாணவர்களை பொறுத்தவரையில் கலைஞரின் செயல் "உடுக்கை இழந்தவன் கை போலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என்றாகவே அமைந்தது.
இந்திய தமிழர்களை பொறுத்தவரையில் அம்மாவுடைய கேடி குடுமபத்தை விட ஐயாவுடைய Robin Hood குடும்பம் பரவாய் இல்லை என்ற நிலை தான்.
//>இப்படியே போனால் செம்மொழி மாநாட்டைக் கூட உங்கள் புகழ் பாடும் மாநாடாக நடத்தி விடுவீர்கள்..//
இதிலென்ன சந்தேகம்? கவனித்தீர்களோ தெரியாது, பாசத்தலைவனுக்கான பாராட்டு விழாவிலேயே அதற்கான அடித்தளம் போடப்பட்டது.
சுருட்டல் மன்னன் கருணாநிதி
http://singakuttys.blogspot.com/2010/03/blog-post.html
நல்ல பதிவு தோழர்! அருமையான, சிந்திக்கவேண்டிய விடயங்களை உங்களுக்கே உரிய நடையில் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்... தோழமையுடன் mullaimukaam.blogspot.com
தமிழ் மக்களுக்கு உண்ணாவிரதமிருந்து போரை நிறுத்தியதை மறந்து விட்டீர்களா (ஆனாலும் உங்களை நம்பமுடியாது பாராட்டுவிழாவிற்கு பொன்னாடை போட்டு கவிதை வாசிக்க அம்மா சொன்னால் தட்டாமல் செய்துவிடுவீர்கள்- )
"முதல்வர் பதவின்னா என்னான்னு தெரியுமா? என்னைக்காவது ஆபீஸ் பக்கம் போயிருக்கியா? எத்தனை குறை நிறைகள், எத்தனை கண்ணீர் ,எவ்வளவு நன்றி, எவ்வளவு நெருக்கடி, எவ்வளவு மாலைகள், எவ்வளவு மரியாதைகள்,எத்தனை சிக்கல், எத்தனை டென்ஷன் உட்கார்ந்து இருக்கவனுக்கு மட்டும் தான்யா தெரியும். எதையும் எடுத்தோமா கவுத்தோமான்னு முடிவெடுக்க முடியாது. ஒரு கலவரம் நடக்குதுன்னா தொலை நோக்கோட யாருக்கும் எந்த பாதிப்பும் வராத மாதிரி தான் முடிவெடுக்க முடியும். அதை தான் நானும் செஞ்சேன்."
" நான் உட்கார்ந்து இருக்க நாட்காலியோட நாலு கால் என்னோடது இல்ல. ஒரு கால் கூட்டணி கட்சிக்காரனோடது, ரெண்டாவது கால் ஜாதிக்காரனது, மூணாவது கால் நாம ஆட்சி நடத்த பணம் குடுக்கிறானே அந்த பணக்காரனோடது நாலாவது கால் தொண்டர்களோடது. இதுல ஒரு கால் போனாலும் நாம மண்ணை கவ்வ வேண்டியது தான். இந்த பிரச்சனை எல்லாம் தீர்க்கக்கூடாது. இதை வச்சு அரசியல் பண்ணனும்."
முதல்வன் படம் எடுக்கும்போது கலைஞர் தான் முதலமைச்சர். அவர பத்தி நல்ல தெரிஞ்சு தான் சுஜாதா இப்டி வசனம் எழுதினாரோ???
முடியல .. எப்படி உங்களால முடியுது என அவரை கேட்கிறிங்களே .
உங்களால மட்டும் இப்படி எப்படி முடியுது? அவரை பாராட்டுற மாதிரி எல்லாத்தையும் சொல்லிற்றிங்க..
எனக்கு என்னண்டே விளங்களே நடிகர்கள் இப்படி ஏன் புகழ் ( புளு) ராங்களோ தெரியல .
நல்ல பதிவு ...
வாழ்த்துக்க்ள்...
ஐய்யா இன்னும் இரண்டு ஐயங்கள்..
ஒண்ணுமில்லாத வெத்து வேட்டுக்கள் நாங்களே வலைப்பதிவுகள் ஆரம்பித்து உங்களைப் போல பெரிய,மகா பெரியவர்களை கலாய்க்கும் போது எல்லாத் துறைகளிலும் கரைகண்ட நீங்களும் ஒன்றை ஆரம்பித்தால் என்ன?
பின்னூட்டங்களும்,கும்மிகளும் களை கட்டும்..
வாக்கு மழையாய்ப் பொழியும்.
உடன் பிறப்புக்கள் உங்கள் பதிவுகளுக்காகவும் உயிரையும் கொடுப்பார்கள்.
இன்னும் கொஞ்சம் தேர்தல் வாக்குகளை அள்ளலாம்.. 'அம்மா'வையும் ஒரு வழி பண்ணலாம்.
SUPERB
பிருந்தன் said...
கலக்கல் பதிவு எருமைமாட்டு தோலில் ஏறவா போகுது, என்னவோ சொல்லுறீக பார்ப்போம்.//
ஏறினா என்ன இறங்கினா என்ன.. என் கடமை அவருக்குக் கடிதம் எழுதுவது.. அவர் கடமை நிறைய இருக்கே.. ;)
=========================
ஜெகதீபன் said...
தலைவரே(நீங்க தான் அண்ணா) எப்பவும் பின்னூட்டங்களில் கூட அடக்கி வாசிக்கும் நான் அஜித்தைப்போல பொங்கி எழுந்ததற்கு நிறைய காரணங்கள்... அதை கோபமா??? ஏக்கமா?? கவலையா??? எதை என்று சொல்ல... தலைவருக்கான(இது நீங்க இல்ல... பெரியவர்???) மடல் தாங்கிச்செல்லும் செய்தி அவருக்கு கிடைத்து அதில் கொஞ்சமேனும் உறைத்தால்... எவ்வளவு நல்லாயிருக்கும்...!!! எல்லாம் ஒரு நப்பாசை தான்..!!!//
ஆகா.. தலைவரா? வேணாம் ராசா. இது தான் உசுப்பேத்துற முதல் வார்த்தை.. ;)
நப்பாசை? நடக்கவே நடக்காது..
ஸ்ரீ.கிருஷ்ணா said...
நல்ல ஐடியா தான் ...//
ஹீ ஹீ.. நன்றி..
===================
கமல் said...
ஈழத்தமிழர் பிரச்சினைகளில் நீங்கள் நடந்துகொண்டவிதம் எதிர்கால அரசியல்வாதிகளுக்கு ஒரு முழுமையான பாடத்திட்டம்?//
அண்ணா தாங்க முடியலை. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. நல்ல சுவாரசியமாகப் பதிவினை எழுதியுள்ளீர்கள். //
நன்றி சகோ.. ;)
//ஒண்ணுமில்லாத வெத்து வேட்டுக்கள் நாங்களே வலைப்பதிவுகள் ஆரம்பித்து உங்களைப் போல பெரிய,மகா பெரியவர்களை கலாய்க்கும் போது எல்லாத் துறைகளிலும் கரைகண்ட நீங்களும் ஒன்றை ஆரம்பித்தால் என்ன?
பின்னூட்டங்களும்,கும்மிகளும் களை கட்டும்..//
வேணாம் ஐயா இந்த விபரீத விளையாட்டு. சும்மா இருக்கிற ஆளுக்குச் சுதி ஏத்தி விடாதீங்கோ. நாங்களெல்லாம் பாவம் ஐயா. இவர் எல்லாம் புளொக் எழுத வந்தா நூறாவது பதிவுக்கு ஒரு வாளி விழா, பிறகு சிறந்த பதிவருக்கு ஒரு வாளி விழா என்று எங்களையே நாறடிச்சிடுவார் சாமியோ!//
;) ஆனா இன்னும் நிறையப் பதில் பதிவுகள், தொடர் பதிவுகள் பார்க்கலாமே.. ;)
என்ன கொடும சார் said...
// ஈழத்து மைந்தன்.//
If these mad fellows give up their Eelam dream — which will never happen as long as I am here — .............. They must give that up.
MR - Straits Times
:D :D //
ஐயா பன்மொழிப் பண்டிதரே.. அவருக்குத் தமிழ் தெரியாது.. உங்களுக்குமா?
ஈழம் என்றால் இலங்கைத் தீவு என்றும் ஒரு அர்த்தம் உள்ளது தெரியுமோ?
=================
புல்லட் said...
சொல்லி வேலையில்ல தலைவா.. என்னுடைய கருத்துக்களை அப்பிடியே உருக்கு ஊற்றியது போல இருக்கிறது.. உவர் , எங்கட கோத்தாமாமா, மகாஜனாதிபதி ஆகியொரிண்ட சாணக்கியங்களுக்கு நான் ஒரு மெகா பான்.. உண்மையிலேயே.. எப்பிடியெல்லாம் பிளான் பண்றாங்கள்?//
நன்றி தம்பி..
உண்மை தான்.. முதல் ஒரு பதிவிலேயே இவர்களில் இருவரைப் பாராட்டி இருந்தீர்களே..
உதையெல்லாம் நல்ல வழியில் பயன்படுத்தினால்?
Anonymous said...
அண்ணா கபட உள்ளம் கொண்டவன் கருணாநிதி. தன்னைத்தானே பகுத்தறிவாளி என சொல்லி கொள்பவன் அவனுக்கு பின்னால் ஒரு பக்கவாத்திய குழு ......
இந்த ஆளுக்கு வால் பிடிப்பதால் எனக்கு பிடித்த கமலும், வைரமுத்துவும் இப்போது திகட்டுகின்றனர் .....//
ம்ம்.. ஆனால் இவர்கள் மட்டுமில்லையே.. அது தமிழ் சினிமாக் கலைஞர்களின் தலைவிதி..
அவனைப்பற்றியெல்லாம் பதிவெழுதி...........
கேவலமான கயமையின் காய்ச்சி வடித்த முழு உருவம் ...
அந்த ஆழ் மட்டும் பதிவுலகம் பக்கம் தலைவைச்சான் எண்டால் நான் இவனுக்க்காகவே DNS hijacking படிப்பேன்........//
பார்த்தீங்களா.. ஒரு விஷயத்தை நீங்கள் படிக்க உதவுறாரே.. ;)
==============================
ஆதிரை said...
செம்மொழி மாநாட்டிலே இந்த வாழ்த்துப்பத்திரத்தை வாசித்து வழங்குமாறு பரிந்துரை செய்வோமாக!!!//
அன்றைக்கு சட்டில் சாரத்தை உருவியதற்காக இப்படியொரு வன்மம் வேண்டாம்.. ;)
யோ வொய்ஸ் (யோகா) said...
ஏன்யா பதிவுலகத் தமிழர்கள் மட்டுமாவது நிம்மதியாக இருப்பது உங்களுக்கு பிடிக்கலையா?//
என்னைய்யா இது. தமிழினத் தலைவனை அழைக்கிறேன்.. அது பிடிக்கலையா? 'அம்மா'வின் ஆளா நீர்?
அப்புறம் பதிவர்களையும் பலவந்தமாக பாராட்டு விழா(க்களுக்கு)கொண்டு போய்விடுவார்கள். அப்புறம் எங்களுக்கு அடிக்கடி விடியல் கேட்க முடியாமல் போய்விடும்//
அதுக்கெல்லாம் பிரபல பதிவர்களைத் தான் அழைப்பாராம்.. ஆனா படியால் நான் தப்பிடுவேனே..
==================
கார்த்தி said...
யாரும் இந்த Remixஐ பாக்காட்டி ஒரு தரம் பாருங்கோ!
http://www.youtube.com/watch?v=QorFIBgq6yI
எங்கட கலைஞர் தாத்தாவும் இடைக்கிடை வாறார்!//
ஹா ஹா. கலக்கல். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கள்.. ;)
கன்கொன் || Kangon said...
என்ன கொடுமை இது...
தமிழ்மணத்தில் 2 மறை வாக்குகள்...
கருணாநிதி பதிவுலகத்திற்குள் புகுந்துவிட்டார்(ன்) என்கிறேன் நான்.. :ப//
ஹா ஹா.. அது எப்பவோ.. ;)
அவர் வந்தால் என்ன அவரது உடன் பிறப்புகள் இருந்தாலென்ன.. ஒன்று தானே.. ;)
கலக்கல் அண்ணா....//
நன்றி.
அதுவும் பதிவெழுதச் சொன்னீங்க பாருங்கோ? மனுசன் கேள்விப் பட்டுதெண்டா தொடங்கி பதிவுலகத்தயும் அழிச்சுப் போடும்...//
அப்படியெல்லாம் அபாண்டம் சொல்லப்படாது.. செம்மொழியைத் தமிழை மாற்றிய தலைவர் பதிவுகளையும் செம்மைப்படுத்துவார்.. ;)
கலக்கல் அண்ணா.....//
மீண்டும் நன்றி.
நாய்பாபா சீ... எழுத்துப் பிழை சாய்பாபா ஓடு அளவளாவிற படத்தப் போட்டதும் அருமை..... :)//
ஹீ ஹீ.. நித்தியோடு ஒரு படமும் இவர் எடுக்கலையே.. :(
Anonymous said...
அந்த படத்தில் இருக்கிற கமலையும் ரஜினியையும் பார்க்கும்போது இரண்டு வேட்டை நாய்களை காவலுக்கு வைத்ததை போலவே தோணுது//
ஹா ஹா..
==============
இணுவைஊறான் said...
அருமையான பதிவு தயவு செய்து இந்த பதிவை கருணாநிதிக்க அனுப்பிவயுங்கோ லோஷன் அண்ணா !!! அப்பவாவது திருந்துவான் ???//
அந்தக் கடமையை எனக்காக நீங்களே செய்யக் கூடாதா? ;)
அட நம்ம வைரமுத்து, இளையராஜா கலந்துகொண்டது கொடும சார்!, வைரமுத்து சிலகாலமா கருனனதிக்கு வால் பிடிக்கிறார் அது தன தங்க முடியல!!!//
வால் பிடித்து வாழ்வாரே வாழ்வார்.. ;)
இளையதம்பி தயானந்தா said...
நல்லாயிருககு 'தல'//
ஆகா.. நன்றி அண்ணா.. அதென்ன நீங்களும் 'தல' என்று? ;)
சூர்யகதிர் said...
அனைத்தும் உண்மையான விசயங்கள்.
அதிலும் ஐயா கலைஞரை சாய் பாபாவுடன் பார்த்ததில் இருந்து மிகவும் வெறுப்பு. கெட்டவர்களுடன் பழக்கம் ஏற்பட்டால், குடும்ப நன்மை மட்டும் சிந்தித்தல் , பணம் சேர்த்தல், அதிக அளவு புகழ் வேண்டி கிடத்தல், சொத்து சேர்த்தல் அனைத்தும் தானாக வந்து விடும்.//
உண்மை..
>>இப்படியே போனால் செம்மொழி மாநாட்டைக் கூட உங்கள் புகழ் பாடும் மாநாடாக நடத்தி விடுவீர்கள்..
இதில் லோஷனுக்கு சந்தேகம் கூட உண்டா, இருந்து பாருங்கள் அனைத்து பேச்சாளர்களும் (நாடு பேதமின்றி) வந்து இவரை கூடை கூடையாக புளுகி விட்டு போவார்கள். ஆயிரம் பஞ்ச் வசனம் பேசுற ரஜினி காந்தே அடியாள் போல் நிற்கும் போது மற்றவர்கள் எல்லாம் ?!!!//
அதில் கவலை தமிழ் அறிஞர்களும் இணைந்துகொள்ளப் போகிறார்களே..
இவ்வளவு இவரைப்பற்றிய எதிர்மறையான உண்மைகளை தெரிந்த நாம் இன்னும் ஒரு உண்மையை ஈழ மக்களாக தெரிந்து கொள்ள வேண்டும்.
கலைஞருடைய ஆட்சி காலத்தில்(19992 கு முன்னர்), இலங்கை அகதிகளாக சென்ற அனைத்து மாணவர்களும் படிக்கச் வேண்டும் என்று சொல்லி பல வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது, அதிலும் அரசாங்க பல்கலைகழகங்களில் இலங்கை தமிழ் மாணவர்களுக்கு இத்தனை இடம் என்று சட்டமாகியது (அது எழுத்தில் இருந்ததோ தெரியாது, ஆனால் பல ஈழ மாணவர்கள் இதனால் நன்மை பெற்றார்கள்), இப்படி முகாமிலோ, வெளியிலோ இருந்த அகதிகள் தங்கள் நாட்டை விட்டுவந்த கவலை சற்று குறைவாகவே இருந்தார்கள்.
( MGR காலத்திலேயே பல வசதிகள் இருந்தாலும், இவர் தான் அதை ஒரு ஒழுங்கு முறைக்கு கொண்டு வந்தது)
1992 ஆண்டு மே மாதம் நடந்த சம்பவத்தின் பின், எல்லாமே தலை கீழ், அனைத்து தமிழ்நாடு தமிழர்களும் கட்சி பேதமின்றி ஈழ தமிழர்களை எதிரியாகவே பார்த்தார்கள், மிகவும் நேரிங்கிய நண்பர்கள் கூட சற்று விலகியே இருந்தார்கள். நெருப்பில் எண்ணை ஊத்துவது போல ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார், இன்னும் எங்கள மேல் வெறுப்பு கூடியது, அதோடு நில்லாமல் ஈழ மாணவர்களுக்கு எந்த தமிழ்நாடு பல்கலைகழகங்களும் இடம் கொடுக்க கூடாது என்று மிகவும் கடுமையாக நடந்து கொண்டார்.
பல மாணவர்கள் இதனால் வெளி மாநிலங்களுக்கு சென்று அதிக பணம் செலுத்தி படிக்கச் வேண்டி இருந்தது, வசதி இல்லாதவர்கள்
எதுவுமே செய்ய முடியாத நிலைமை. இப்பொது வாய் கிழிய பேசும் தமிழ் நாடு சிங்கங்கள் எல்லாம் அபொழுது வாய் மூடி இருந்தவர்கள் தான்.
மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்த போது முதலில் செய்த காரியங்களில் ஓன்று ஈழ மாணவர்களின் கல்வி திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்தியது. ஓன்று நாம் கவனிக்க வேண்டும் அப்பொழுது கூட பெருவாரியான தமிழ் நாட்டு மக்கள் எங்கள் மீது கோபமாகவும் காழ்புணர்ச்சி உடனும் இருந்தார்கள் !!
இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஈழ மாணவர்களை பொறுத்தவரையில் கலைஞரின் செயல் "உடுக்கை இழந்தவன் கை போலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என்றாகவே அமைந்தது.
இந்திய தமிழர்களை பொறுத்தவரையில் அம்மாவுடைய கேடி குடுமபத்தை விட ஐயாவுடைய Robin Hood குடும்பம் பரவாய் இல்லை என்ற நிலை தான்.//
நல்ல விஷயம் சொன்னீர்கள். கலைஞர் ஜெ யை விட எவ்வளவோ மேல் என்பது எல்லோருக்கும் எப்பவும் தெரியுமே..
Subankan said...
//>இப்படியே போனால் செம்மொழி மாநாட்டைக் கூட உங்கள் புகழ் பாடும் மாநாடாக நடத்தி விடுவீர்கள்..//
இதிலென்ன சந்தேகம்? கவனித்தீர்களோ தெரியாது, பாசத்தலைவனுக்கான பாராட்டு விழாவிலேயே அதற்கான அடித்தளம் போடப்பட்டது.//
ம்ம் கவனித்தேன்.. அதனால் தான் குறிப்பிட்டேன்...
==================
Shanker said...
சுருட்டல் மன்னன் கருணாநிதி
http://singakuttys.blogspot.com/2010/03/blog-post.html //
நன்றி பகிர்வுக்கு..
JKR said...
நல்ல பதிவு தோழர்! அருமையான, சிந்திக்கவேண்டிய விடயங்களை உங்களுக்கே உரிய நடையில் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்... தோழமையுடன் mullaimukaam.blogspot.கம//
நன்றி நண்பா.. :)
===============
archchana said...
தமிழ் மக்களுக்கு உண்ணாவிரதமிருந்து போரை நிறுத்தியதை மறந்து விட்டீர்களா (ஆனாலும் உங்களை நம்பமுடியாது பாராட்டுவிழாவிற்கு பொன்னாடை போட்டு கவிதை வாசிக்க அம்மா சொன்னால் தட்டாமல் செய்துவிடுவீர்கள்- )//
அதை மறப்பேனா? அதையும் பொதுவில் தான் குறிப்பிட்டேன்.. ;)
ஓகோ. நீங்க 'அம்மா'வை சொல்லவில்லைத் தானே.. பகவானே.. இவர் போன்றோரைத் திருத்த மாட்டாயா? ;)
Vijayakanth said...
"முதல்வர் பதவின்னா என்னான்னு தெரியுமா? என்னைக்காவது ஆபீஸ் பக்கம் போயிருக்கியா? எத்தனை குறை நிறைகள், எத்தனை கண்ணீர் ,எவ்வளவு நன்றி, எவ்வளவு நெருக்கடி, எவ்வளவு மாலைகள், எவ்வளவு மரியாதைகள்,எத்தனை சிக்கல், எத்தனை டென்ஷன் உட்கார்ந்து இருக்கவனுக்கு மட்டும் தான்யா தெரியும். எதையும் எடுத்தோமா கவுத்தோமான்னு முடிவெடுக்க முடியாது. ஒரு கலவரம் நடக்குதுன்னா தொலை நோக்கோட யாருக்கும் எந்த பாதிப்பும் வராத மாதிரி தான் முடிவெடுக்க முடியும். அதை தான் நானும் செஞ்சேன்."
" நான் உட்கார்ந்து இருக்க நாட்காலியோட நாலு கால் என்னோடது இல்ல. ஒரு கால் கூட்டணி கட்சிக்காரனோடது, ரெண்டாவது கால் ஜாதிக்காரனது, மூணாவது கால் நாம ஆட்சி நடத்த பணம் குடுக்கிறானே அந்த பணக்காரனோடது நாலாவது கால் தொண்டர்களோடது. இதுல ஒரு கால் போனாலும் நாம மண்ணை கவ்வ வேண்டியது தான். இந்த பிரச்சனை எல்லாம் தீர்க்கக்கூடாது. இதை வச்சு அரசியல் பண்ணனும்."
முதல்வன் படம் எடுக்கும்போது கலைஞர் தான் முதலமைச்சர். அவர பத்தி நல்ல தெரிஞ்சு தான் சுஜாதா இப்டி வசனம் எழுதினாரோ???//
இதுல வேற சந்தேகமா? ;)
=================
saisayan said...
முடியல .. எப்படி உங்களால முடியுது என அவரை கேட்கிறிங்களே .
உங்களால மட்டும் இப்படி எப்படி முடியுது? அவரை பாராட்டுற மாதிரி எல்லாத்தையும் சொல்லிற்றிங்க..//
எதோ என்னால முடிஞ்சது.. ;)
எனக்கு என்னண்டே விளங்களே நடிகர்கள் இப்படி ஏன் புகழ் ( புளு) ராங்களோ தெரியல //
அவங்க நடிகர்கள் தானே.. ;).
நல்ல பதிவு ...
வாழ்த்துக்க்ள்... //
நன்றி
LOSHAN said,
ஹி ஹி... அது சும்மா... ஒரு மரியாதைக்கு !!!! But •leader is a person who guides or inspires others. so...அந்த விதத்தில நீங்க தலைவர் தானே....
சிவா
இது வரைக்கும் எழுதியதில் உருப்படியான ஒரு பதிவு இது .
நன்றி லோஷன் தொடரட்டும்.
//உங்கள் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவிலாவது நேரில் வந்து கலந்துகொண்டு உங்களுக்காக அஜித் மகள்,விஜய் மகன், சூர்யா மகள்,தனுஷ் மகன் ஆடும் நடனங்களை// ஏனுங்க, ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, மாறன் குடும்பம் இவங்களுக்கெல்லாம் பிள்ளைகுட்டி, பேரன் பேத்தி இல்லையா, இவங்களையெல்லாம் தாத்தாவுக்கு முன்னாடி குத்தாட்டம் ஆடச் சொல்லி அதையும் டி.வியில காட்டினா நல்லாயிருக்குமே. சினிமாக்காரங்களை மட்டுமே பாத்து போரடிச்சுப் போச்சுதுங்கோ :)
அடிக்கடி உங்களை சந்தித்து ஆலோசனைகள்,ஆசிகள் பெறும் நம் தமிழ்த் தலைமைகளுக்கும் கொஞ்சம் கொஞ்சம் கற்றுத் தரக்கூடாதா?
கத்து கொடுத்தால் இலங்கையின் நிலை ...................................?????
///////அடிக்கடி உங்களை சந்தித்து ஆலோசனைகள்,ஆசிகள் பெறும் நம் தமிழ்த் தலைமைகளுக்கும் கொஞ்சம் கொஞ்சம் கற்றுத் தரக்கூடாதா?//////
கத்து கொடுத்தால் இலங்கையின் நிலை ...................................?????
கலக்கல் அண்ணா...!
உண்மையிலேயே அவரது சாணக்கியம் பாராட்டத்தக்கது. ஆனால் என்ன, அதை அவர் தனது சுயநலத்துக்காகவே பயன்படுத்திவிட்டார். :(
இனியாவது திருந்தட்டும் இந்த கிழச்சனியன்.
பாசத்தலைவர் இதைப்படித்தால் இதுக்கும் ஒரு பதில் கடிதம் எழுதுவர். இந்தப் பாசத்தலைவருடைய கடிதம் எழுதும் ஸ்டையிலைத்தான் இன்னும் எங்கட தலைவர் புடிக்கல. அந்த சாதனையையும் விரைவில் முறியடிக்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுகின்றேன்.
நம்ம தலைவருக்கு பதிவு எழுத ரொம்ப விருப்பம் கி போட்ல எழுத புடிக்காது பேப்பரும் பேனையும் கொடுத்தால் கிறுக்கத் தொடங்கி விடுவார் {தலைவர் வந்தால் பதிவு நாறும் பரவாயில்லையோ }
Post a Comment