March 27, 2010

அகப்பட்டார் அக்கறையுள்ள அனானி

இதற்குமுன் நான் இட்ட சாமியார்கள் பற்றிய பதிவு பெரும் பின்னூட்ட யுத்தங்களை உருவாக்கி ஏதோ சில தீர்வுகளை (!?) நோக்கிப் பயணித்துக் கொண்டுள்ளது.
போலி சாமியார்கள்,மயக்கமான பக்திகள் பற்றி எழுதினால் ஒரு சிலரின் (அல்லது ஒருவரின்)அனானிப் பின்னூட்டங்கள் வேறொரு திசையில் கருத்தோட்டத்தை இழுத்து செல்லப் பார்க்கின்றன. பரவாயில்லை.. இதெல்லாம் வலையுலகில் சகஜம் தானே..


சமயங்கள் பற்றி எப்போது எழுதினாலும் சச்சரவு,சர்ச்சை தான்.. அதுக்காக உண்மையை எழுதாமல் இருப்பதா?


படு துவேஷமாக வந்த இரு பின்னூட்டங்கள் தவிர (ஒன்று இந்து சமயத்துக்கெதிராக,இன்னொன்று இஸ்லாம் மார்க்கத்துக்கெதிராக) ஏனைய எல்லாவற்றையும் பிரசுரித்தேன்.


எனினும் இன்று அனாமதேயமாக இரு தடவை ஒரே பின்னூட்டம் மிக அக்கறையாக வேறொரு பதிவுக்கு வந்திருந்தது.


Anonymous has left a new comment on your post "நாளை விடியலில்.. கடவுள்களும்,அவதாரங்களும்": 


லோஷனுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் வரோ,கோபி போன்றவர்களுடன் பதிவர் சந்திப்பு என்ற பெயரில் கடற்கரைக்கு செல்வது போன்ற செயற்பாடுகளை அவர்கள் புகைப்படங்களாக தமது பதிவுகளில் போடுவதன் மூலம் உங்களை போன்ற சமூகத்தால் நன்கு அறியப்பட்ட பொறுப்பு மிக்க ஒரு நபர் கடற்கரையில் பெண்களை பார்த்து கலாசார சீரழிவுகளில் ஈடுபடுவது போலவும் ,உங்களை ஒரு தவறான முன்மாதிரியாகவும் காட்ட முயல்கிறார்கள்.தயவு செய்து இதற்க்கு துணை போகாதீர்கள் உங்கள் பங்கு சமூகத்தில் என்ன என்று உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.அவர்களின் இப்படிப்பட்ட பதிவுகளை நீக்க முயற்சி எடுங்கள்


இது தான் அது.


வழமையாக இவ்வாறு மற்றவர்களது பெயர்களையும் குறிப்பிட்டு அனானிப் பின்னூட்டங்கள் வந்தால் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பதுண்டு.
யாராயிருக்கும்,என்ன காரணமாயிருக்கும் என்று..


மேலே சொன்னது போல என்னைத் தவறாகவோ,எனது சமூக அந்தஸ்தை(!?) கேலி செய்தோ எந்தவொரு பதிவும் வந்ததாகவும் தெரியவில்லை.
சில வேடிக்கைகள்,நகைச்சுவைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளவே வேண்டும் என நினைப்பவன் நான்.




படப்பதிவுகளில் கூட அப்படியொன்றும் பின்னூட்டத்தில் சொன்னது போல பெண்களைப் பார்ப்பது போலவோ,வேறெந்த ஆபாசமாகவோ எதுவும் இல்லை. எனது பதிவுலக நண்பர் வட்டத்தின் நாகரிக எல்லை,சமூகப் பொறுப்புணர்வு எனக்கும் தெரியும்.


எனவே, அட என்ன கொடும சார் இது என யோசித்துக் கொண்டே...


 இப்படி ஒரு அநாமதேயப் பின்னூட்டம் வந்தது பற்றி குறித்த பதிவர்களுக்கும்,சக குழுமப் பதிவர்களுக்கும் அறியத் தந்தேன்.. 


மின்னஞ்சல் அரட்டையில் ஒவ்வொருவரது ஆதங்கங்களும் இப்படி ....


கண்கோன் கோபி - ஆகா....
எல்லாத்திலயும் நான் வாறனே....
கதைக்காம பேசாம இருந்தாலும் வாறாங்கள்... அவ்வ்வ்வ்...




// நபர் கடற்கரையில் பெண்களை பார்த்து கலாசார சீரழிவுகளில் ஈடுபடுவது போலவும் //


எனக்குத் தெரிந்து அப்பிடியான பதிவுகளை யாரும் இடவில்லை...




அதுசரி, கடைசிச் சந்திப்புப் பற்றி யார் யார் பதிவிட்டீர்கள்?
வரோ, பவன்? சதீஷ் அண்ணா? வேறு யார்?




வந்தியத்தேவன் - 
அரசியலில் இதெல்லாம் சகஜம்.


ஆனாலும் என்னை விட்டுவிட்டு கோல் பேஸ் போனது சரியில்லை. 


இந்த வசனம் தான் இவரை சிக்க வைத்தது.. ஆகா அகப்பட்டார் என்று பிடித்துக் கொண்டோம்..  


சுபாங்கன் - நீங்களும் எங்களை விட்டுட்டு லண்டனுக்குப் போனது சரியில்லைத்தானே?


கண்கோன் கோபி - 
வந்தியண்ணா! என் மேல அப்பிடி என்ன கோவம்? :P


லோஷன் - ஒரு வேளை அன்று தானே நான் கங்கோனை புதிய வந்தி என்று அறிவித்தேன்.. அது தான் காரணமோ? ;)


(வந்தியரின் கல கல வெற்றிடத்தை அண்மைக்காலமாக பதிவுலக,ட்விட்டர் அரட்டைகளில் கொஞ்சமாவது போக்கி வருவது கலக்கல் பதிவர் கங்கோன் தான்)


 
சுபாங்கன் - க.க.க.போ. அன்று இதை நான் ஸ்கைப்பில் சொன்னபோது அவரது பதில் - சில நாட்களில் நான் திரும்பவும் பதிவெழுத வந்துவிடுவேன். இப்பதான் பிசி. இதிலேருந்து என்ன தெரியுது?


கண்கோன் கோபி - ஹா ஹா ஹா....
அதேதான்...
குத்துக் கல்லாட்டம் தானிருக்கேக்க தனக்கு போட்டியா ஒருத்தன களமிறக்கிற கோவம் போல?
வந்தியண்ணா! அந்தப் பதவிய நான் இன்னும் ஏற்கேல...




ஆகா அகப்பட்டார் அக்கறையுள்ள அனானி என்று ஒரு மொக்கைப் பதிவு போடலாம்னு முடிவெடுத்து உடனேயே நம்ம நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டிட்டுத் தான் ஆரம்பித்தேன்.
வந்தியும் கோபிக்க மாட்டார் என்ற நம்பிக்கயுடன். அவரின் பதில் தான் இன்னும் வரவில்லை.
கோபித்தாலும் என்ன லண்டனில் இருந்து இதுக்காக மினக்கட்டு இலங்கை வரவா போகுது மனுஷன்.. ;)


ஆனால் ஒன்று நான் தான் 'புதிய வந்தி' என்று சொன்னாலும் கூட அதை தம்பி கங்கோன் கோபி ஏற்றிருக்கக் கூடாது தான்.. என்ன சொல்றீங்க?(அப்பாடா சுபாங்கன் சொன்னதை செய்தாச்சு)


ஆனாலும் அரட்டையில் இதைப் பரபரப்பாகக் கிளப்பி பற்ற வைத்ததால் பெட்டி சுபாங்கன் இன்று முதல் பரட்டை (பத்த வைத்ததால்) சுபாங்கனாக தமிழ் கூறும் நல்லுலகத்தால் அழைக்கப்படுவார் என்று சொல்லிவிட சொன்னார் தம்பி பவன்.


பி.கு- இது வெறும் வேடிக்கைக்காக மட்டுமே.உண்மையில் என் மேல் உள்ள அன்பினாலும்,அக்கறையினாலும் அந்தப் பின்னூட்டத்தை யாரோ ஒரு நண்பர் அனுப்பி இருந்தால் அவரை நான் எவ்விதத்திலும் புண்படுத்தவில்லை. 
ஆனாலும் எந்தவொரு பதிவரும் என்னைப் பற்றி அப்படியொன்றும் தவறாக சித்தரிக்கவில்லை என்பதை அனானி நண்பருக்கு உணர்த்தவே இந்தப் பதிவு.


இல்லாவிட்டால் வேறு ஏதாவது காரணமாக அந்தப் பின்னூட்டம் அனுப்பப்பட்டிருந்தால், என்ன கொடுமை இது என்று சிரித்துக்கொண்டே விட்டு விட வேண்டியது தான்..




இனி வந்தியரின் என் உளறல்கள் அடிக்கடி கேட்கும் என நினைக்கிறேன்.. :)
(ஆனால் படிப்பையும்,பெண் - மனைவியை சொன்னேனப்பா பார்ப்பதையும் தொடருங்கோ மாமா)


18 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டேய்ய்ய் :))

ஆயில்யன் said...

படிக்க போயிருக்கிற புள்ளையை இப்புடியா கலாய்க்கிறது :))))

Anonymous said...

//என்ன கொடுமை //

என்ற சொற்றொடர் அதிகமாக திணிக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்..
:D ;D

யோ வொய்ஸ் (யோகா) said...

சின்ன வந்தியை இன்னும் காணும் எங்கு போய் விட்டார்

Think Why Not said...

பதிவர்கள் Galle Face போறாங்கப்பா...

கொமண்ட் போடுவோர் எல்லாம் கூடி "பின்னூட்டக்காரர் சந்திப்பு" ஒன்று போடப் போகினமாம்.... கூடவே "அனானி பின்னூட்டம் இடுவது எப்படி" என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர் கங்கோன் உரையாற்றுவார் என்ற தகவலும் கசிந்துள்ளது...

இடம், நேரம் என்பன அறிய கிடைத்தவுடன் அறிய தரப்படும்....

Subankan said...

எல்லோரும் கடிப்பதற்காக குத்துக்கல்லாட்டம் கோபி இருக்கும்போது இந்த அப்பாவியைப் போட்டுக் கடித்தது நல்லாவா இருக்கு? கடி வாங்கும் பதவியை கோபியிடமிருந்து இன்னும் நான் பெற்றுக்கொள்ளவில்லை என்பதை அறியத்தருகிறேன்.

// ஆயில்யன் said...
படிக்க போயிருக்கிற புள்ளையை இப்புடியா கலாய்க்கிறது :))))//

இதப்பார்றா

Subankan said...

//ஆனால் ஒன்று நான் தான் 'புதிய வந்தி' என்று சொன்னாலும் கூட அதை தம்பி கங்கோன் கோபி ஏற்றிருக்கக் கூடாது தான்.. என்ன சொல்றீங்க?(அப்பாடா சுபாங்கன் சொன்னதை செய்தாச்சு)//

தல இர்க்குப்போது வால் ஆடக்கூடாது. இதில நான எங்க வந்தேன்?

dilsbro said...

hello sir! wts up?

கன்கொன் || Kangon said...

//கூடவே "அனானி பின்னூட்டம் இடுவது எப்படி" என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர் கங்கோன் உரையாற்றுவார் என்ற தகவலும் கசிந்துள்ளது...//

இதென்ன புதுசா இருக்கு?
நான் எப்பயும் சொந்தப் பெயரில தான் பின்னூட்டுவன்...



அக்கறையில் சொல்லியிருந்தால் உண்மையை அறிந்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்.
இல்லை, விசமத்தனத்திற்காக இட்டிருந்தால் யாரும் அந்த பின்னூட்டத்தால் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளவில்லை என்று இன்னொருமுறை முயற்சி செய்வார்...


நடக்கட்டும்...

//எனவே, அட என்ன கொடும சார் இது என யோசித்துக் கொண்டே...//

இன்னொரு அனானிப் பின்னூட்டத்தில் கேள்வி எழுப்பியதுபோல அடிக்கடி கொடுமை என்ற சொல் வருவதற்காக பிரேம்ஜி உங்களை சூ (ஆங்கில சூ, sue) செய்யப் போவதாக அறிந்தேன்... :P


//எனது பதிவுலக நண்பர் வட்டத்தின் நாகரிக எல்லை,சமூகப் பொறுப்புணர்வு எனக்கும் தெரியும்.//

:)
நகைச்சுவைகள் எல்லை மீறாமல் இருக்க அனைவரும் கவனமாக இருக்கிறோம்.



//ஆனால் ஒன்று நான் தான் 'புதிய வந்தி' என்று சொன்னாலும் கூட அதை தம்பி கங்கோன் கோபி ஏற்றிருக்கக் கூடாது தான்.. என்ன சொல்றீங்க?//

நான் எப்ப ஏற்றன்?
எனக்கும் வந்தியண்ணாக்கும் நடுவில குழப்பத்த ஏற்படுத்தப்படாது...
வந்தியண்ணா! நான் இன்னும் பதவி ஏற்கேல....
நீங்க தான் தல....


தமிழிஷ் இல் 'பதிவுலகம்' என்ற தலைப்பில் சேர்த்திருப்பது இது வெறும் நகைச்சுவை என்பதை தாண்டிய ஒரு பதிவு என்பதைக் காட்டுகிறது...
அனானி புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

நன்றி அண்ணா...

KANA VARO said...

அக்காவின் பதிவுத்திருமணத்தால் இன்று முழுவதும் இணைய பக்கமே நான் வரவில்லை. கிப்பூ இப்ப இப்பிடி ஒரு பதிவு லோஷன் அண்ணா போட்டிருக்கிறார் எண்டு சொன்னது.
பதில்கள் லோஷன் அண்ணாவாலே வழங்கப்பட்டுள்ளது என தெரிகின்றது.

சம்பந்தமே இல்லாமல் என் பதிவுகளின் ஒரு அனானி பெயருடன் வம்பளந்தார். அதன் பின்னர் தாராளமாக திறந்திருந்த என் பின்னூட்ட பெட்டி மூடப்பட்டது... அதன் கடுப்பில் வந்த பின்னூட்டங்கள் இவை என்பது எனக்கு நன்றாகவே புரிகின்றது. அண்மைக்காலமாக எந்தவொரு பதிவையும் நான் யாருக்கு எதிராகவும் எழுதவில்லை. அந்த பின்னூட்டங்கள் எதற்காக வருகின்றன என எனக்கு புரியவில்லை. என் பதிவுகளை தொடர்ந்த நண்பர்கள் அதனை அவதானித்திருப்பார்கள், என்னுடன் இருந்த சண்டை கோபி பக்கமும் அங்கயே திரும்பி விட்டது. பதிவர்கள் சம்பந்தமாக கோபி அண்மையில் எதனையும் எழுதவில்லை. எனவே இது தனிப்பட்ட கோபம் என தெரிகின்றது.

என் ப்ளோக்கை ஹக் பண்ண இருப்பதாகவும் சொன்னார் அனானி. அவருக்கான பதில் இது ... நீ உன்னால என்ன புடுங்க முடியுமோ அதை புடுங்கு நான் பிறகு பார்கிறன். சீலைக்கு பின்னால ஒழியுரதுக்கு... உன்னை போல நான் ஒண்டும் பெட்டை இல்லை. மிஞ்சி மிஞ்சி போனா எனக்கெதிரா ஒரு ப்ளாக் தொடங்குவாய்.இப்பிடி எத்தினை நான் பார்த்திட்டன்.

வந்தியத்தேவன் said...

நான் கொழும்பில் நின்றவேளையில் சிந்து கபேயிலும் நளபாகத்திலும் குட்டிச் சந்திப்புகளை நடத்தியவர்கள் இன்றைக்கு காலிமுகத்திடலில் நடத்தும் அளவுக்கு முன்னேறிவிட்டார்கள்.(இதற்கான காரணத்தை அலசி கோபியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவிரும்பவில்லை) வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.

லோசனும் கோபியும் லண்டனில் இருந்து கேட்ட பொருள் இன்னும் அனுப்பததால் என்மேல் உள்ள கோபத்தில் என்னை பொது இடத்தில் போட்டுக்கொடுப்பது அழகில்லை. நீங்கள் கேட்ட பொருள் விரைவில் வரும்(ஆமாம் அதை வைத்து நீங்கள் இரண்டுபேரும் என்ன செய்வீர்கள்?).

அத்துட‌ன் என் த‌ம்பி க‌ங்கோனை என்னுடைய‌ ப‌ணிக‌ளைச் செய்யும் ப‌டி அன்புட‌ன் கேட்டுக்கொள்கின்றேன். இனிமேல் அவ‌ர் என‌க்குப் ப‌திலாக‌ ஹாட் அண்ட் ச‌வ‌ர் சூப் வைப்பார். அவ‌ர் போடும் ந‌டிகைக‌ளின் ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டும் வ‌ழ‌க்க‌ம் போல் என‌க்கு அனுப்பும் ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌ருக்கு அனுப்பிவைப்பார்க‌ள். (ந‌ண்ப‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளைச் சொல்லிக் காட்டிக்கொடுக்க‌விரும்ப‌வில்லை)
//கோபித்தாலும் என்ன லண்டனில் இருந்து இதுக்காக மினக்கட்டு இலங்கை வரவா போகுது மனுஷன்.. ;)//
இத‌ற்கெல்லாம் நான் மினைக்கெட்டு வ‌ர‌மாட்டேன் ஆனால் வ‌ரும் போது க‌வ‌னித்துக்கொள்வேன்.

ப‌ர‌ட்டை சுபாங்க‌ன் ந‌ல்ல‌ பெய‌ர் என்ப‌தை ஆமோதிக்கின்றேன்.
//இனி வந்தியரின் என் உளறல்கள் அடிக்கடி கேட்கும் என நினைக்கிறேன்.. :)
(ஆனால் படிப்பையும்,பெண் - மனைவியை சொன்னேனப்பா பார்ப்பதையும் தொடருங்கோ மாமா)//

அடிக்க‌டி கேட்க‌ நான் என்ன‌ கொழும்பிலா இருக்கின்றேன் இங்கே இருந்து மாத‌த்துக்கு ஒரு உள‌ற‌ல்தான் உள‌ற‌லாம் என‌ இமிக்கிரேச‌ன் ச‌ட்ட‌ம் போட்டுள்ள‌து. ப‌டிப்பைக் க‌வ‌னிப்ப‌தால் தான் உள‌ற‌முடிய‌வில்லை. ம‌னைவியா? இது எப்ப‌ நான் ப‌ச்சிள‌ம் பால‌க‌ன்.

முக்கிய‌ குறிப்பு : என் ப‌திவுல‌க‌ இட‌த்தை கோபீக்கு கொடுத்தாலும் ப‌ச்சிள‌ம் பாலக‌ன் ப‌ட்ட‌ம் விட்டுக்கொடுக்க‌மாட்டாது என‌ நித்தியானன்த‌ரின் மேல் ச‌த்திய‌ம் செய்கின்றேன்.

Anonymous said...

Hello sir,
I wish you all the best.

கன்கொன் || Kangon said...

//நான் கொழும்பில் நின்றவேளையில் சிந்து கபேயிலும் நளபாகத்திலும் குட்டிச் சந்திப்புகளை நடத்தியவர்கள் இன்றைக்கு காலிமுகத்திடலில் நடத்தும் அளவுக்கு முன்னேறிவிட்டார்கள். //

ஹி ஹி...
கொழும்பில் நிற்பவர்கள் லண்டனுக்கு செல்லும்போது சிந்துகபேயில் சந்திப்பவர்கள் காலிமுகத்திடலுக்குப் போகக்கூடாதோ? :P



//(இதற்கான காரணத்தை அலசி கோபியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவிரும்பவில்லை)//

பப்பாவில ஏத்துறீங்களே...
அவ்வ்வ்வ்....



//லோசனும் கோபியும் லண்டனில் இருந்து கேட்ட பொருள் இன்னும் அனுப்பததால் என்மேல் உள்ள கோபத்தில் என்னை பொது இடத்தில் போட்டுக்கொடுப்பது அழகில்லை. //

ஆமாம் ஆமாம்...
நான் கேட்ட Nestle cerelac ஐ நீங்கள் இன்னும் அனுப்பவில்லை.... :(



//நீங்கள் கேட்ட பொருள் விரைவில் வரும்(ஆமாம் அதை வைத்து நீங்கள் இரண்டுபேரும் என்ன செய்வீர்கள்?).//

நன்றி நன்றி...
செரலக்கை வைத்து என்ன செய்வார்கள்?
சாப்பிடுவது தான்....



//அத்துட‌ன் என் த‌ம்பி க‌ங்கோனை என்னுடைய‌ ப‌ணிக‌ளைச் செய்யும் ப‌டி அன்புட‌ன் கேட்டுக்கொள்கின்றேன். இனிமேல் அவ‌ர் என‌க்குப் ப‌திலாக‌ ஹாட் அண்ட் ச‌வ‌ர் சூப் வைப்பார். //

தலை இருக்கும்போது இங்கே வால் ஆடாது....
நான் பதவியை ஏற்க முன்னரே ராஜினாமா செய்கிறேன்....



//அவ‌ர் போடும் ந‌டிகைக‌ளின் ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டும் வ‌ழ‌க்க‌ம் போல் என‌க்கு அனுப்பும் ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌ருக்கு அனுப்பிவைப்பார்க‌ள். (ந‌ண்ப‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளைச் சொல்லிக் காட்டிக்கொடுக்க‌விரும்ப‌வில்லை)//

ஆகா ஆகா...
இதுவல்லவோ ராஜதந்திரம்....



//இத‌ற்கெல்லாம் நான் மினைக்கெட்டு வ‌ர‌மாட்டேன் ஆனால் வ‌ரும் போது க‌வ‌னித்துக்கொள்வேன். //

அப்ப இலங்கைக்கு வாற திட்டம் இருக்கோ? #அதிர்ச்சி #ஆச்சரியம் :P


//ப‌ர‌ட்டை சுபாங்க‌ன் ந‌ல்ல‌ பெய‌ர் என்ப‌தை ஆமோதிக்கின்றேன்.//

ஏற்கனவே தீர்மானம் போட்டாயிற்று....
ஏற்றுத்தான் ஆகவேண்டும்...



//முக்கிய‌ குறிப்பு : என் ப‌திவுல‌க‌ இட‌த்தை கோபீக்கு கொடுத்தாலும் ப‌ச்சிள‌ம் பாலக‌ன் ப‌ட்ட‌ம் விட்டுக்கொடுக்க‌மாட்டாது என‌ நித்தியானன்த‌ரின் மேல் ச‌த்திய‌ம் செய்கின்றேன்.//

அப்படித் தராவிட்டால் ஜக்கியைக் கொண்டு சூனியம் வைப்பேன் என்று சங்கராச்சாரியார் மேல் சத்தியம் செய்கிறேன்.... :D

Subankan said...

@வந்தி அண்ணா

வெளிநாட்டில் இருப்பவர்களெல்லாம் பதிவு எழுதுவதை விட்டுவிட்டு பின்னூட்டங்களில் பதிவு எழுதுகிறீர்களா?

//நான் கொழும்பில் நின்றவேளையில் சிந்து கபேயிலும் நளபாகத்திலும் குட்டிச் சந்திப்புகளை நடத்தியவர்கள் இன்றைக்கு காலிமுகத்திடலில் நடத்தும் அளவுக்கு முன்னேறிவிட்டார்கள்//

அப்போது காலி முகத்திடலில் சந்தித்தால் 'காலி'முகத்துடன் அல்லவா திரும்பமுடியும்?

//லோசனும் கோபியும் லண்டனில் இருந்து கேட்ட பொருள் இன்னும் அனுப்பததால் என்மேல் உள்ள கோபத்தில் என்னை பொது இடத்தில் போட்டுக்கொடுப்பது அழகில்லை.//

நான் கேட்டவையும் இன்னும் வந்துசேரவில்லை என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறேன்

//அத்துட‌ன் என் த‌ம்பி க‌ங்கோனை என்னுடைய‌ ப‌ணிக‌ளைச் செய்யும் ப‌டி அன்புட‌ன் கேட்டுக்கொள்கின்றேன்.//

இப்போதே அவர் அதனைச் செவ்வனே நிறைவேற்றிவருகிறார்

//இனிமேல் அவ‌ர் என‌க்குப் ப‌திலாக‌ ஹாட் அண்ட் ச‌வ‌ர் சூப் வைப்பார். அவ‌ர் போடும் ந‌டிகைக‌ளின் ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டும் வ‌ழ‌க்க‌ம் போல் என‌க்கு அனுப்பும் ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌ருக்கு அனுப்பிவைப்பார்க‌ள். //

ஆமாம், உங்களிடமிருந்து இனி நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் ஆங்கில நடிகைகளின் படங்களைத்தான்

//ப‌ர‌ட்டை சுபாங்க‌ன் ந‌ல்ல‌ பெய‌ர் என்ப‌தை ஆமோதிக்கின்றேன்.
//

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்

//முக்கிய‌ குறிப்பு : என் ப‌திவுல‌க‌ இட‌த்தை கோபீக்கு கொடுத்தாலும் ப‌ச்சிள‌ம் பாலக‌ன் ப‌ட்ட‌ம் விட்டுக்கொடுக்க‌மாட்டாது என‌ நித்தியானன்த‌ரின் மேல் ச‌த்திய‌ம் செய்கின்றேன்.
//

ஆமாம், அது இருந்தால்தானே கொடுப்பதற்கு?

KANA VARO said...

//கன்கொன் || Kangon said...
அக்கறையில் சொல்லியிருந்தால் உண்மையை அறிந்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்.
இல்லை, விசமத்தனத்திற்காக இட்டிருந்தால் யாரும் அந்த பின்னூட்டத்தால் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளவில்லை என்று இன்னொருமுறை முயற்சி செய்வார்... //

லோஷன் அண்ணா இட்டிருக்கும் அனானியின் பின்னூட்டம் சிறு மாறுதலுடன் எனக்கும் அனுப்பப்பட்டுள்ளது. நான் பிரசுரிக்கவில்லை.

ஆரம்பத்தில் என் பதிவில் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் வந்த போது “என்ன, ஏது?” என்ற காரணம் தெரியாமல் நான் குழம்பிவிட்டேன் (அந்த குழப்பம் இன்னும் இருக்கின்றது) என்பதிவுகளில் என்ன எழுதியிருக்கின்றேன் என வாசிப்பவர்களுக்கு தெரியும். யாரையும் எங்கும் தாக்கவில்லை.

பின்னூட்டமிட்டவரின் நோக்கம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. (பொறாமையைத் தவிர என்னவாக இருக்க முடியும்). என்னுடன் மட்டும் தான் கோபமாக்கும் என நினைத்த போது… சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள் மீது கோபம் இருப்பதை எனக்கிட்ட பின்னூட்டங்கள் மூலம் காட்டிவிட்டார். இந்த நிலையில் லோஷன் அண்ணா மீது மட்டும் இரக்கம் வருவதற்கு, அவரது தீவிர விசிறியாகவும் இருக்கலாம்.

லோஷன் அண்ணாவிற்காக கதைத்தவராக இருந்தால்.. லோஷன் அண்ணாவை பாதிக்க கூடிய வகையில் நான் இட்ட பதிவைக் காட்டவும்…

பதிவர்களைக் கலாய்த்து எந்தப்பதிவர்களும் பதிவுகள் எழுதாமல் இல்லை. யாரும் வரம்பு மீறவும் இல்லை. இந்தநிலையில் இது “முதலைக் கண்ணீரே!” பதிவர்களுக்குள் கும்மியடிப்பதற்கு பதிவரல்லாத ஒரு (தீய) சக்தி புகுந்துள்ளது. அதன் நோக்கம் நிறைவேறியதா? இன்னும் தொடருமா?...

பனித்துளி சங்கர் said...

இங்கயுமா ?>

அட கொடுமையே !!!!!!!!

SShathiesh-சதீஷ். said...

அந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஒருவன் என்ற ரீதியில் என் கருத்து. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் லோஷன் அண்ணா மட்டுமல்லா அங்கே வந்த யாருமே அநாகரிகமான செயற்பாட்டில் ஈடுபடவில்லை. அதேபோல எந்தப்படத்திலும் அப்படி தெரியவில்லை. அலுவலகஹ்த்திலும் அவருடன் வேலை செய்த ஒருவன் என்ற ரீதியில் சொல்கின்றேன். எந்த ஒரு சந்தர்ப்பாத்திலும் லோஷன் அண்ணா அப்படியான செயற்பாட்டுக்கு ஆதரவு வழங்காதவர். எனவே தேவையற்ற கருத்துக்கள் வேண்டாம்.

இருப்பினும் இந்த பதிவின் மூலாம் லோஷன் அண்ணாவுடன் சண்டை பிடிக்கப்போகின்றேன். எனக்கு மாமாவாக இருக்கும் வந்தி மாமாவை எப்போது நீங்கள் மாமாவாக்கிக்கொண்டீர்கள். இது என்ன கொடுமை சார்.....

தீபிகா சரவணன் said...

www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner