
ட்விட்டர் திண்ணை வாழ் பெருமக்களுக்கு ஒரு நற்செய்தி..
ட்விட்டரில் அரட்டைக் கச்சேரிகள் நடத்துவதோடு அடுத்தவர் என்ன செய்கிறார் என்பதை ஆராய்ந்து அறிவதோடு, இப்போதும் டொலர்களை உழைக்கும் வாய்ப்பும் கிட்டுகிறது..
உங்களைத் தொடர்வோர் இருநூறு பேர் இருந்தால் உங்களை நாடி விளம்பரதாரர் வரலாம்..
அட்சென்ஸ் போலவே இங்கும் உங்கள் ட்விட்டர் தளத்தில் காணப்படும் விளம்பரங்களை உங்கள் நண்பர்கள்,ரசிகர்கள், பின் தொடரிகள் கிளிக்க கிளிக்க (சொடுக்க) உங்களுக்கு டொலர்கள் குவியும்..
என்னைப் பின் தொடர்வோர் இப்போ தான் 120. இன்னும் 80 பேரை நான் எங்கே இருந்து தேட???
இருநூறு பின் தொடர்வோர் கொண்ட வீரர்களுக்கெல்லாம் இந்த செய்தி இனிக்குமே..
கீழே உள்ள இந்த சுட்டி வழியாகப் போய் உங்களைப் பதிவு செய்து சந்தோஷமாக ட்விட்டர் திண்ணைக் கச்சேரியை அமோகமாக நடத்துங்கள்..

இது வரை ட்விட்டர் பக்கமே வராத இப்போது ஆசை வந்துள்ளவர்கள் இனி ட்விட்டர் திண்ணை ஆசைவந்தால் www.twitter.com இல் போய் பதிவு செய்துகொண்டு வாருங்கள்.. நிறைய சுவாரஸ்யம் இருக்கும்.. (மறக்காமல் என்னைப் பின் தொடர ஆரம்பியுங்கள்.. நானும் பதில் பிரதியுபகாரம் செய்வேன்.. இதெல்லாம் கொடுத்து வாங்குவது தானே..)
வாங்க டொலர் உழைக்கலாம்..
அத்துடன் ஜாலியாக அரட்டை,அரசியல் கலந்துரையாடல்கள்,வந்தியரை வாருதல்,புல்லட்டுக்கு புகையடித்தல் என்று பல பிரயோசனமான பலதும் பத்தும் + வந்தியின் யானைக் கதை,புதிய சைக்கிள் கதை.. வந்தியின் ஸ்பெஷல் மஜா படங்கள் என்று மேலதிக ச்பெஷல்களும், கூடவே கானா பிரபாவின் இனிமையான பாடல்கள் & பாஹ்ரைன் விபுலின் உலக செய்திகள் என்று சுவாரஸ்யமாய் பொழுதும் போகும்..
நிறையப் பேர் ட்விட்டர் சுவைகண்ட பிறகு பதிவுகளையே மறந்ததாகவும் கேள்வி..
என்னைப் பின் தொடர உதவியாக இதோ நம்ம ட்விட்டர் பக்க முகவரி..
வாங்க பழகலாம்.. (ஒரு விளம்பரம் தான்..)
தகவல் தந்து அலெர்ட் பண்ணிய ஹர்ஷேந்த்ராவுக்கு நன்றிகள்..
பி.கு = என்னுடைய ட்விட்டர் நட்பு வட்டங்களில் பல 'பிரபலங்களும்' இருக்காங்கோ.. வந்து பாருங்களேன்.. ;)
எனது முன்னைய ட்விட்டர் பற்றிய பதிவு..
27 comments:
என்னையும் பல இனம் தெரியாதவர்கள் பிந்தொடர்ந்தார்கள் அனைவரையும் நிறுத்திவிட்டேன் இனி சேர்க்கவேண்டியதுதான், மஜாப் படம் என்றால் என்ன? ஏன் ஐயா எல்லோரும் என்னை வாருகிறீர்கள்.
உங்களின்ட "அவர்களுக்கு" ருவீட்டர் வகுப்பு எடுத்து கணக்கும் தொடக்கிவிட்டால், இரு நூறென்ன இரண்டாயிரம் பிடித்திடலாம்
//உங்களின்ட "அவர்களுக்கு" ருவீட்டர் வகுப்பு எடுத்து கணக்கும் தொடக்கிவிட்டால், இரு நூறென்ன இரண்டாயிரம் பிடித்திடலாம்//
ஆதிரை கலக்கிட்டாய் மிகவும் அருமையான பஞ்ச்
என்னையும் பல இனம் தெரியாதவர்கள் பிந்தொடர்ந்தார்கள் //
கவனம் :(
வந்தியத்தேவன் said...
என்னையும் பல இனம் தெரியாதவர்கள் பிந்தொடர்ந்தார்கள் அனைவரையும் நிறுத்திவிட்டேன் இனி சேர்க்கவேண்டியதுதான், //
உங்களையா? நம்ப முடியவில்லை.. ;)
இனம் தெரியாதவர்கள் என்று நீங்கள் சொன்னதால் பரவாயில்லை நம்பிவிட்டுப் போகிறேன்..
மஜாப் படம் என்றால் என்ன? //
நீங்கள் அனுப்புவது, உங்கள் சூப் பதிவிலே போடுவது எல்லாமே அந்த வகை தான் என்று கழகத் தமிழ் அகராதி சொல்கிறது....
ஏன் ஐயா எல்லோரும் என்னை வாருகிறீர்கள்.//
என்ன செய்ய நண்பா உங்களை விட ரொம்ப நல்லவனா யாரும் கிடைக்குறான் இல்லையே,, ;)
ஆதிரை said...
உங்களின்ட "அவர்களுக்கு" ருவீட்டர் வகுப்பு எடுத்து கணக்கும் தொடக்கிவிட்டால், இரு நூறென்ன இரண்டாயிரம் பிடித்திடலாம்//
அவர்கள் - ரசிகர்கள்? இளம் பெண்கள்? பின் தொடரிகள்? அசின்,தமனா,நயன்?
====================
வந்தியத்தேவன் said...
//உங்களின்ட "அவர்களுக்கு" ருவீட்டர் வகுப்பு எடுத்து கணக்கும் தொடக்கிவிட்டால், இரு நூறென்ன இரண்டாயிரம் பிடித்திடலாம்//
ஆதிரை கலக்கிட்டாய் மிகவும் அருமையான பஞ்ச்//
வந்தி, ஆதிரை சொன்னதிலேயும் ஏதாவது பின் நவீனத்துவம் இருக்கா? ;)
எனக்குப் புரியல..
சயந்தன் said...
என்னையும் பல இனம் தெரியாதவர்கள் பிந்தொடர்ந்தார்கள் //
கவனம் :(//
வயசுபோன காலத்திலை அந்தாளைப் பயமுறுத்தவேண்டாம் சயந்தன்.. ;)
//உங்களின்ட "அவர்களுக்கு" ருவீட்டர் வகுப்பு எடுத்து கணக்கும் தொடக்கிவிட்டால், இரு நூறென்ன இரண்டாயிரம் பிடித்திடலாம்//
அவர்கள் - ரசிகர்கள்? இளம் பெண்கள்? பின் தொடரிகள்? அசின்,தமனா,நயன்?
என்ன கொடுமை சரவணா..
நமக்கு 200ஆவது பின்தொடர்பவர் வர இன்னும் பல இருக்கே..
ஒரு சின்ன இரகசியம்.. ”ட்விட்டில் பின்தொடர்க” என உங்களின் வலைப்பூவில் தொடுப்பு ஒன்றை தொடுத்து விட்டால் இன்றும் பலபேர்களுக்கு அதுபற்றி அறியத்தருவதுடன் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையையும் கூட்டலாம்...
நல்ல பயனுள்ள தகவல் அண்ணா...
சுபானு said...
//உங்களின்ட "அவர்களுக்கு" ருவீட்டர் வகுப்பு எடுத்து கணக்கும் தொடக்கிவிட்டால், இரு நூறென்ன இரண்டாயிரம் பிடித்திடலாம்//
அவர்கள் - ரசிகர்கள்? இளம் பெண்கள்? பின் தொடரிகள்? அசின்,தமனா,நயன்?
என்ன கொடுமை சரவணா.. //
ஹீ ஹீ.. ஏதோ நம்மளால முடிஞ்சது..
நமக்கு 200ஆவது பின்தொடர்பவர் வர இன்னும் பல இருக்கே..
//
முயன்றால் முடிக்கலாம்.. (சுபானு விளங்கிச்சோ நான் சொன்னது?)
சுபானு said...
ஒரு சின்ன இரகசியம்.. ”ட்விட்டில் பின்தொடர்க” என உங்களின் வலைப்பூவில் தொடுப்பு ஒன்றை தொடுத்து விட்டால் இன்றும் பலபேர்களுக்கு அதுபற்றி அறியத்தருவதுடன் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையையும் கூட்டலாம்...//
ஆமாம் சுபானு.. போடுவதாக உள்ளேன்..
சுபானு said...
நல்ல பயனுள்ள தகவல் அண்ணா...
நன்றி சகோ.. என்ட கடமையத் தானே செய்யுறன் ;)
//முயன்றால் முடிக்கலாம்.. (சுபானு விளங்கிச்சோ நான் சொன்னது?)
உதுல உள்க்குத்து ஏதும் இருக்குதோ..
(அந்தக் கதைய உத்தோட நிறுத்திடுவோமே)
ஆமா இந்த டிவீட்டருனா என்னங்க?
பி.கு = என்னுடைய ட்விட்டர் நட்பு வட்டங்களில் பல 'பிரபலங்களும்' இருக்காங்கோ.. வந்து பாருங்களேன்.. ;///
யாரு மல்லிகா அக்கா மாதிரி பிரபலங்களா?
ஆமா இப்படி பதிவு போட டிவிட்டரில் ஏதாவது சம்திங் கொடுக்கிறாங்களோ?
சுபானு said...
//முயன்றால் முடிக்கலாம்.. (சுபானு விளங்கிச்சோ நான் சொன்னது?)
உதுல உள்க்குத்து ஏதும் இருக்குதோ..
(அந்தக் கதைய உத்தோட நிறுத்திடுவோமே)
//
உள் குத்தா? அப்பிடின்னா? ;)
நிறுத்துவதா? முதல்லா அவங்களை (சாரி.. அவனை.. ஆதிரை) நிறுத்த சொல்லுங்க.. ;)
யோ வாய்ஸ் (யோகா) said...
ஆமா இந்த டிவீட்டருனா என்னங்க?
அட இங்க பாருப்பா.. முழுப் பானை சொத்தை முழுங்கிட்டு சோறுன்னா என்ன்னன்னு கேக்கிறான் யோகாப் பயல்.. ;)
//பி.கு = என்னுடைய ட்விட்டர் நட்பு வட்டங்களில் பல 'பிரபலங்களும்' இருக்காங்கோ.. வந்து பாருங்களேன்.. ;///
யாரு மல்லிகா அக்கா மாதிரி பிரபலங்களா?//
அவங்களை மட்டுமே பாருங்க.. மைக்கேல் கிளார்க்,சங்கக்கார,அசின், சுருதி ஹாசன் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? ;)
//ஆமா இப்படி பதிவு போட டிவிட்டரில் ஏதாவது சம்திங் கொடுக்கிறாங்களோ?
//
அதான் டொலரெ கொடுக்கப் போறாங்களே.. ;)
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
/////////////////////
follow me @ http://twitter.com/ulavu
லோஷன், சங்கு ஊதிடாங்கயா ஊதிடாங்க.சிங்கத்தை சாய்ச்சு பிடரி மயிரை சிரைச்ப்போட்டாங்களே உந்த சுண்டெலி பசங்கள். இனி இலங்கையில் 20 - 20 போட்டியே நடத்தக்கூடாது என்று சட்டம் கொண்டுவந்தால்தான் தப்பலாம். - --- அடுத்த பதிவிற்கு அட்வான்ஸ் கொமன்ட்ஸ்.---------
சிக்ஸ் பாக் விடயம் இப்போதைக்கு 80 பேருக்குதான் தெரியும்... உலகளாவிய ரீதியில தெரிஞ்சு ஹொலிவூட்ல கூப்டுரப்போறாங்கள்..
கும்மிய ஒரு குழுமத்துக்க பண்ணலாம்.. ஒரு கும்பலையே கூப்டு வச்சு பண்ணலாமா?
உலவுக்கு நன்றி.. :)
Anonymous said...
லோஷன், சங்கு ஊதிடாங்கயா ஊதிடாங்க.சிங்கத்தை சாய்ச்சு பிடரி மயிரை சிரைச்ப்போட்டாங்களே உந்த சுண்டெலி பசங்கள். இனி இலங்கையில் 20 - 20 போட்டியே நடத்தக்கூடாது என்று சட்டம் கொண்டுவந்தால்தான் தப்பலாம். - --- அடுத்த பதிவிற்கு அட்வான்ஸ் கொமன்ட்ஸ்.---------//
நன்றி அண்ணா.. :) உங்க பெயரிலேயே வந்து போட்டிருக்கலாமே.. ;) ஆனா பதிவெல்லாம் போட்டுப் புலம்ப மாட்டேன்.. பழகிட்டுது.. ;)
இனி இலங்கையில் நடக்கிற டுவென்டி 20 போட்டிகள் பார்ப்பதாயில்லை.. ;)
புல்லட் said...
சிக்ஸ் பாக் விடயம் இப்போதைக்கு 80 பேருக்குதான் தெரியும்... உலகளாவிய ரீதியில தெரிஞ்சு ஹொலிவூட்ல கூப்டுரப்போறாங்கள்..//
அதான் எனக்கும் பயமா இருக்கு.. யார்கிட்டயும் என் தொடர்பு விபரங்களைக் கொடுத்துராதீங்க.. ஸ்பீல்பெர்க் கூப்பிட்டா மட்டும் போறதா இருக்கேன்..
//கும்மிய ஒரு குழுமத்துக்க பண்ணலாம்.. ஒரு கும்பலையே கூப்டு வச்சு பண்ணலாமா?//
எங்களுக்கென்ன ற்றௌசர் களரப் போறது வேற யாருக்கோ தானே? ;)
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....நான் அண்ணை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை. நிஜமாக தம்பி தம்பி தம்பி தம்பி . முகவரியை தொலைத்து விட்டவா்களுக்கு ஏது அண்ணா பெயர். அதனால் தான் அனானியாக உலாவுகின்றேன்.
நான் உங்கள் முடிவை வழிமொழிகின்றேன் - இப்படிக்கு இலங்கையில் 20 க்கு 20 எதிர்ப்போர் சங்கம் - தலைமை செயலகம்
என்னவோப்பா இந்த twitter மட்டும் நமக்கு புரியவே மாட்டேன்குது சரி பையன் ஆச படுறானே ஒரு கிளிக் பணிருவம்னு போனா அப்பயும் புரிய மாட்டேன்குது பேசாம FB ல ஏதாவது வழி இருக்கானு பாக்க வேண்டியது தான்......
கேக்க நல்லாத்தான் இருக்கு. என்ன செய்றது, இப்பதானே ட்விட்டருக்கு புதுசு... இப்பத்தான் 47. வெயிட் பண்ணி பார்ப்பம்.
நானும் உங்களை பின்தொடர்ந்துக்கிட்டுத்தானே இருக்கிறன் அண்ணா.. எனக்கும் கொஞ்சம் பிரதியுபகாரம் செய்யலாமே... நான்கூட 200 ஐத் தொட வேணாமா?
இது என்னோட முகவரி. Please follow..
http://twitter.com/riphyms
Ӏ likе iit when people cοme together and share
views. Ԍreat blog, continue tһe gοod ѡork!
Post a Comment