
இது எனது முன்னூறாவது பதிவு.. முதலாவது பதிவு இட்டதே இன்னமும் நேற்றுப் போல ஞாபகம் இருக்கிறது..
இந்தப் பதிவின் மூலம் சில சுவாரஸ்யமான புள்ளி விபரங்களை பகிரலாம் என்று ஒரு ஆசை..
எனக்கு எப்போதுமே புள்ளிவிபரங்களில் ஒரு தனியான ஆசை.. அது கிரிக்கெட்டோ,அரசியலோ,பொது அறிவோ, இல்லை ஏன் வலைப்பதிவுகளோ அடிக்கடி புள்ளி விபரங்களைப் பதிந்து வைத்துக் கொள்வது எனக்கு எப்போதுமே பிடித்த விஷயம்.
அது என்னை நானே எடை பார்த்து மேம்படுத்திக் கொள்ள எப்போதுமே உதவுகிறது..
* குறி சொற்களின் அடிப்படையில் அதிக பதிவுகள் எழுதப்பட்ட விஷயம் - இலங்கை, கிரிக்கெட், இந்தியா..
* அதிகம் பேரால் ஒரே நாளில் வாசிக்கப்பட்ட பதிவுகள்..
ஹிட்சை வாரிக் கொட்டி வருகைகளை அதிகப் படுத்தியவை இந்தப் பதிவுகள்.. சில பின்னூட்டங்களையும் வாரித் தந்துள்ளன..
* பின்னூட்டங்களை எனக்கு அதிகம் வழங்கி முன்னணியில் இருப்போர்.. (இவங்களை முந்த அதிகதிகம் பின்னூட்டம் போடப் போகும் சிங்கங்களையும் சிங்காரிகளையும் என் வலைத்தளம் வலை விரித்து அழைக்கிறது)
ஆதிரை (105)
வந்தியத்தேவன் (99)
என்ன கொடும சார் (83)
’டொன்’ லீ (81)
சந்ரு (75)
Sinthu (73)
(அனானிகளாக மிக அதிகமான பின்னூட்டங்கள் வந்திருந்தாலும் பெயருள்ளவர்களின் அடிப்படையிலான வரிசை இது.. )
*அதிகமான பின்னூட்டங்களைக் குவித்த பதிவுகள்..

*இதுவரைகாலமும் எனது தளம் எட்டிய அலெக்சா தரப்படுத்தலின் உச்ச ஸ்தானம் 180 320.
பின்னர் கொஞ்சக் காலம் இடைவெளி விட்டதாலும், முன்பெல்லாம் போல ஒவ்வொரு நாளும் ஒரு பதிவு வீதமோ, ஒவ்வொரு வாரமும் ஐந்து பதிவாவது போட முடியாததால் அலெக்சா தரப்படுத்தலில் இப்போது 294,137ஆவது ஸ்தானத்தில் நிற்கிறேன்..
ஆனால் தேடித் பார்த்த வேளையில் இலங்கைப் பதிவர்களில் சர்வதேசத் தரப்படுத்தலில் எனது தளம் தான் முன்னிலையில் நிற்கிறது.
எனினும் இலங்கையில் உள்ள பிரபலமான வலைத்தளங்களில் எனக்குக் கிட்டியுள்ளது 1525ஆம் இடம் மட்டுமே.. (இலங்கையில் பிரபலமான வலைத்தளங்களில் நண்பர் வந்தியத்தேவனின் என் உளறல்கள் முன்னிலையில் உள்ளது.. 692.. முழுமையான விபரமான தகவல்கள் வெகுவிரைவில் என் பதிவாக வரும்.. நம்புங்கப்பா வெகு விரைவில் தருவேன்)
*இதுவரை எனது தளத்துக்கு ஒரே நாளில் கிடைத்த அதிக ஹிட்ஸ்..
3424
2653
2638
*அதிகமானோர் வருகை தந்த நாடுகள்..
இந்தியா
இலங்கை
அமெரிக்கா
சிங்கப்பூர்
பிரித்தானியா
கனடா
ஐக்கிய அமீரகம்
பிரான்ஸ்
சவூதி அரேபியா
ஆஸ்திரேலியா
வழமையாகவே நண்பர்கள் அதிகமுள்ள எனக்கு இந்த ஒருவருட பதிவுலக வாழ்க்கையில் மேலும் நண்பர்கள் பல்கிப் பெருகியுள்ளனர்..
முகம் தெரிந்த மற்றும் முகம் அறியாதவர்கள்..
அவர்களில் ஒரு சிலரை முக்கியமாக இங்கே சொல்ல வேண்டி இருக்கிறது..
லக்கி லுக் (தற்போது யுவக்ருஷ்னா), அகிலன், கார்க்கி, கோவி கண்ணன்,சாரு நிவேதா, சயந்தன், பரிசல்காரன்,ஜ்யோவ்ராம் சுந்தர் போன்றோரின் தளங்கள் தான் முன்பு அதிகம் நான் வாசித்து பதிவுலகம் வரத் தூண்டியவை.
பதிவுலகப் பயணத்தின் ஆரம்பத்திலும் தற்போதும் ஆலோசனை போன்றவற்றில் உதவும் நண்பர் என் கீழ் பணிபுரியும் புது மாப்பிள்ளை பிரதீப்..
ஆரம்பத்தில் நிறைய ஊக்குவித்து,நெளிவு சுளிவு, திரட்டிகள் பற்றிய நுட்பமும் சொல்லித் தந்த சயந்தன்..
முன்பே அறிந்த ஆனால் இவர் தான் என்று அறியாமல் பின் வலையுலக பதிவர்களாக அறிமுகமாகி,நண்பராகி இப்போது மிக நெருக்கமான நண்பராகியுள்ள வந்தியத்தேவன்,,
எங்கள் ரசனைகள் பல ஒத்திருப்பதால்(சில விஷயங்களில் அவர் கிங்.. ஹீ ஹீ) நிறைய விஷயங்களை பரிமாறிக் கொள்கிறோம்..
தொழிநுட்ப விஷயங்கள் அட்சென்ஸ் பற்றியெல்லாம் நிறிய சொல்லித் தந்த தமிழ்நெஞ்சம்.. இதுவரையும் மின்னஞ்சலில் மட்டுமே எம் தொடர்பு..
என் சக ஊழியரின் தம்பியாக தெரிந்து, பின்னர் நண்பராகி, என் வலைத்தள வாசகராக நிறைய ஆலோசனைகளையும் பல தொழிநுட்ப உதவிகளையும் செய்து தரும் நண்பர் ஹர்ஷேந்த்ரா.. என் வார்ப்புருவும் அவர் கைங்கரியமே..
அலுவலக சக பதிவர்கள் ஹிஷாம்,அருண், சதீஷ்..
ஹிஷாமும் நானும் போட்டிக்கு பதிவு போட்ட காலம் இருந்தது.. இப்போது அவர் அதிகம் போடுவதில்லை.. இதனால் ஒரு சுவாரஸ்யம் எனக்கும் இருப்பதில்லை.பல் தொழிநுட்ப விஷயங்கள் பதிவுலக சூட்சுமங்களை நாம் பகிர்ந்திருக்கிறோம்..
தம்பிமார் அருண்,சதீஷ் ஆகியோரும் என் நலன்விரும்பிகள்.. சதீஷ் முன்பெல்லாம் என் சில பதிவுகளை தட்டச்சியும் தந்திருக்கிறார்.. அருண் பல கட்ஜெட் உதவிகள் செய்துள்ளார்.
ஆரம்பப் பதிவுகளில் பின்னூட்டங்கள் மூலமாக ஊக்குவிப்பும் பாராட்டும் வழங்கிய மாயா, கோவி கண்ணன் ஆகியோரையும் மறக்க முடியாது..சிங்கையில் கோவி அண்ணனை சந்தித்தது மனது மறக்கா நிகழ்வு..
முதல் தடவை தொடர்பதிவுக்கு அழைத்த பரிசல்காரன்..
சகா என்று பழகும் கார்க்கி..சாட்டிங்கில் நண்பரான நெல்லை மோகன்,அதிஷா..
பின்நூட்டிகளாக அறிமுகமாகி பின்னர் பதிவர் சந்திப்பின் பின் நெருக்கமான நண்பர்களான ஆதிரை, புல்லட்..
பல விஷயமும் பகிரும் நண்பர்கள் இவர்கள்..
முன்பே கொஞ்சம் பழக்கமாக இருந்து எனது சிங்கப்பூர் விஜயத்தின் பின்னர் நட்பான டொன் லீ மற்றும் விசாகன்(கதியால்)..
சிங்கையில் நட்பாகி இனிய நண்பராக இருக்கும் ஞானசேகரன்..
நேயரகாத் தெரிந்து நண்பர்களாகி இருக்கும் யோ(கா) மற்றும் கலை..
கிழக்கிலிருந்து நட்பாகி இருக்கின்ற சந்த்ரு மற்றும் பிரபா..
பதிவர் சந்திப்புக்கு பிறகு நெருங்கி இருக்கும் கௌ பாய் மது,பால்குடி,சுபானு..
இது தவிர இனிய பழகும் நண்பர்கள் கானா பிரபா, ரிஷான், ஜோதி பாரதி,சுபாங்கன்,குசும்பன் இன்னும் பலர்..
பின்னூட்டங்களை அடிக்கடி இடும் பங்களாதேஷ் சகோதரியர் கூட்டம் சிந்து,துஷா, யாழில் இருந்து ஹம்ஷி.. இங்கிலாந்திலிருந்து அடிக்கடி வரும் நண்பி மது.. சிங்கையிலிருந்து ஒரே வானொலித் துறையினால் பழக்கமாகி நட்பான விமலா(ஒலி)- இரு முறை சிங்கை சென்றும் இரண்டு பேரும் பிஸியாக இருந்ததால் சந்திக்கவில்லை..
என் வானொலி நிகழ்ச்சி நேயராக அறிமுகமாகி பின் வலைத்தள வாசகராகி, வித்தியாசமான பின்னூட்டங்கள் விமர்சனங்கள் மூலமாக என்னுடன் நெருக்கமான என்ன கொடும சார்.. அவர் என்னை துரோணர் என்கிறார்.. ;)
இன்னுமொரு மறக்க முடியாத நண்பர் செந்தழல் ரவி.. எனது சிக்கலான நேரத்தில், சிறை சென்ற போது, ஒரு உருக்கமான பதிவின் மூலம் பலருக்கு அறியத் தந்தவர்..
யாரையாவது தவற விட்டிருந்தால் மன்னிக்க..
பின்னூட்டமிடாமல் தொடர்ந்து வாசித்துவருகின்ற பல நண்பர்களும் எனக்கு நட்பாகி இருக்கிறார்கள்..
எனது தளம் முழுவதும் நிரம்பிக் கிடக்கும் கட்ஜெட் எல்லாமே இப்படியான சுவாரஸ்யமான தரவுகள்,புள்ளி விபரங்களை நான் அறிந்துகொள்ள தான்.. இதில் ஒரு தனி சந்தோசம்..
எனவே தான் உங்களோடும் அதை இங்கே பகிர்ந்துகொண்டேன்..
*இன்று மாலைக்குள் நேரமிருந்தால் இன்னும் இரண்டு பதிவுகளைப் போடுவதாய் உத்தேசம்.. என் இந்தக் கொலை வெறி என்று கேட்காதீர்கள்..
உன்னைப் போல் ஒருவன்
சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர்..
இரண்டும் எனக்காக வெயிட்டிங்..
நேரமிருந்தால் வருகிறேன்..
