November 04, 2008

மலேசியாவிலும் பொங்குகிறது தமிழுணர்வு..

ஈழத் தமிழர்களுக்கு நடக்கின்ற அநீதிகளுக்கு எதிராகவும், அங்கு மக்கள் படுகின்ற துயரங்களை உலகுக்கு எடுத்துக் காட்டும் விதமாகவும் நாளை மலேசியாவில் ஆர்ப்பாட்ட போராட்டம் ஒன்று இடம்பெறவிருக்கிறது.கோலாலாம்பூரில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெறவுள்ளதாக நண்பர் ஒருவர் எனக்கு சொல்லி இருந்தார்.

அப்பாவி தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சினால் கொல்லப்படுவதை நிறுத்துமாறும்,யுத்தத்தை நிறுத்துமாறும் இலங்கை அரசைக் கோரும் மனு ஒன்றும் இலங்கைத் தூதுவரிடம் கையளிக்கப்பட இருக்கிறது.
  
இது பற்றி ம.இ.கா(மலேசிய இந்திய காங்கிரஸ்) விடுத்துள்ள செய்திக் குறிப்பில் ஈழத் தமிழ் மக்கள் அடிப்படை உரிமைகளற்று வாழும் இலங்கையில் அவர்களுக்கான சுயாட்சி வழங்கப்பட வேண்டுமெனக் கோரியுள்ள ம.இ.கா,தமிழ் ஈழத் தமிழருக்கான ஜனநாயக,தம்மைத் தாமே ஆளுகின்ற உரிமை உடனடியாக வழங்கப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளது.

தற்போது மலேசியத் தமிழரின் அரசியலில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வரும் குமார் அம்மான் தான் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்துவதாகவும் அறிந்தேன்.

மலேசியாவில் இருப்போர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் ஆத்மார்த்தமான ஆதரவை ஈழத் தமிழருக்கு தெரிவிக்க விரும்பின், 
தொடர்புகளுக்கு.. குமார் அம்மான் +60123290334

              
எவ்வளவு தான் நம் ஈழத் தமிழர் மீது அக்கறை கொண்டு பல்வேறு நாடுகளில் குரல் கொடுத்துப் பார்த்தாலும் கொழும்பு வரை எட்டுமா என்பது கேள்விக் குறி தான்.. தீர்வுக்கான கதவுகளும் தீர்வைத் தர வேண்டியவர்களின் காதுகளும் இங்கு அடைத்தே கிடக்கின்றன.

1 comment:

இறக்குவானை நிர்ஷன் said...

//தீர்வுக்கான கதவுகளும் தீர்வைத் தர வேண்டியவர்களின் காதுகளும் இங்கு அடைத்தே கிடக்கின்றன.
//

இதுதான் உண்மை.
கரைகாணும் ஆவலோடு களத்தில் இறங்கியிருக்கிறது அரசு. இதில் எந்தப்போராட்டக் குரல்களுக்கும் செவிசாய்க்கும் என நான் நினைக்கவில்லை.
பட்டால் தான் புத்தி தெளியும்போல.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner