குறும்பு கொப்பளிக்கும் கண்கள்
குட்டியான சின்னத் தொப்பை
குழிவிழும் அப்பிள் கன்னம்
கொஞ்சமாய் வரும் கோபம்
அப்பாவா அம்மாவா என அடையாளம்
காணமுடியா
அதிசயக் கலவை
அவசரமான தவழல் நடை
அரைகுறையான எழும்பி நிற்றல்
எதையும் ஆராயத் துடிக்கும் கைகள்
கத்தாழைக் கண்ணாலே,கண்கள் இரண்டால்
தசாவதாரம் பாட்டு,குருவிக் குத்துப்பாட்டு
தாம் தூம் , ராமன் தேடிய சீதை பாடல்
இவை எல்லாமே பிடிக்கும் வித்தியாசமான ரசனை
குளிப்பதில் மோகம்
விளையாட்டுச் சாமான் வேண்டாம்
சமையல் பாத்திரம்,மேசை,டிவி,கொம்யூட்டர் remote தான்
வேண்டுமெனும் வித்தியாசமான விருப்பங்கள்
எப்போது பேசுவான் என எங்களை
எதிர்பார்த்து வைத்திருக்கும் காத்திருப்பு
எந்த நோவும் தாங்கும் அதிசயம்
கமராவுக்குப் போஸ் கொடுக்கும் எதிர்கால ஹீரோ
வெளியிடம் போனால் சிரமம் தரா பெரிய மனுஷத்தன்மை
டிவியில் விளம்பரம் மட்டும் பார்க்கும் ரசனை
வேலைமுடிந்து நான் வந்தால் வரவேற்கும் மகிழ்ச்சி
வாகனம் தனில் பயணம்
செய்யும் பரவசம்
பேப்பர் புத்தகம் கிழிக்கும் அவசரம்
கையில் கிடைக்கும் சிறு பொருள் எடுத்து
வாயில் போட்டு நாம் பார்க்கிறோமா என்று
அவதானிக்கும் கள்ளத்தனம்
fridge திறந்து குளிர் வாங்கும் குஷி